01.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும், ஆகையால் காமம் என்ற மிகப்
பெரிய எதிரியை வெல்ல வேண்டும், காமத்தை வென்று உலகை
வென்றவர்களாக ஆக வேண்டும்.
கேள்வி:
ஒவ்வொருவரும் தனது நடத்தையின்
மூலம் எந்த சாட்சாத்காரத்தை அனைவருக்கும் ஏற்படுத்த முடியும்?
பதில்:
நான் அன்னப்பறவை போன்று
இருக்கிறேனா? அல்லது கொக்கு போன்று இருக்கிறேனா? என்பதை
ஒவ்வொருவரும் அவரவர்களது நடத்தையின் மூலம் அனைவருக்கும்
சாட்சாத்காரம் (எடுத்துக் காட்டாகச்) செய்விக்க முடியும்.
ஏனெனில் அன்னப்பறவை போன்று இருப்பவர்கள் ஒருபொழுதும் யாருக்கும்
துக்கம் கொடுக்கமாட்டார்கள். கொக்கு போன்றவர்கள் துக்கம்
கொடுப்பார்கள், அவர்கள் விகாரிகளாக இருப்பார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொக்கிலிருந்து அன்னப்
பறவையாக ஆகியிருக்கிறீர்கள். தங்கப் புத்தியாக ஆகக் கூடிய
குழந்தைகளாகிய உங்களது கடமை அனைவரையும் தங்கப்
புத்தியுடையவர்களாக ஆக்குவதாகும்.
ஓம்சாந்தி.
எப்பொழுது ஓம்சாந்தி எனக்
கூறப்படுகிறதோ அப்போது தனது சுய தர்மத்தின் நினைவு வருகிறது.
வீட்டின் நினைவு வருகிறது. ஆனால் வீட்டிலேயே அமர்ந்து
விடக்கூடாது. தந்தையின் குழந்தைகள் என்பதால் அவசியம் தனது
சொர்க்கத்தையும் நினைவு செய்ய வேண்டும். ஆக ஓம்சாந்தி என்று
கூறுவதன் மூலம் இந்த முழு ஞானமும் புத்தியில் வந்து விடுகிறது.
நான் ஆத்மா, சாந்த சொரூபமாக இருக்கிறேன், அமைதிக் கடலான
தந்தையின் குழந்தையாக இருக்கிறேன். எந்த தந்தை சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்கிறாரோ அந்த தந்தை தான் நம்மை தூய்மையானவர்களாக,
சாந்த சொரூபமானவர்களாக ஆக்குகின்றார். முக்கிய விசயம் தூய்மை
ஆகும். உலகம் தான் தூய்மையாகவும், அசுத்தமாகவும் ஆகிறது. தூய
உலகில் ஒருவர் கூட அசுத்தமானவர் இருக்கமாட்டார். அசுத்த உலகில்
5 விகாரங்கள் இருக்கின்றன, அதனால் தான் விகார உலகம் என்று
கூறப்படுகிறது. அது விகாரமற்ற உலகமாகும். விகாரமற்ற
உலகிலிருந்து ஏணியில் இறங்கி இறங்கி பிறகு கீழான விகார உலகிற்கு
வருகிறோம். அது தூய்மையான உலகம், இது தூய்மையற்ற உலகமாகும். அது
பகல், சுகமாகும். இது அலைந்து திரியக் கூடிய இரவாகும்.
உண்மையில் யாரும் இரவில் அலையமாட்டார்கள். ஆனால் பக்தி தான்
அலையக் கூடியது என்று கூறப்படுகிறது.
சத்கதி அடைவதற்காகத் தான் குழந்தைகளாகிய நீங்கள் இங்கு
வந்திருக்கிறீர்கள். உங்களது ஆத்மாவில் அனைத்து பாவங்களும்
இருந்தன, 5 விகாரங்களும் இருந்தன. அவைகளிலும் முக்கியமானது காம
விகாரமாகும். இதன் மூலம் தான் மனிதர்கள் பாவ ஆத்மாக்களாக
ஆகின்றனர். நாம் தூய்மையற்றவர்கள் மற்றும் பாவ ஆத்மாக்கள்
என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர். ஒரே ஒரு காம
விகாரத்தின் காரணத்தினால் அனைத்து தகுதிகளையும் இழந்து
விடுகிறீர்கள். அதனால் தான் தந்தை கூறுகின்றார் - நீங்கள்
காமத்தை வென்றால் உலகை வென்றவர்களாக அதாவது புது உலகிற்கு
எஜமானர்களாக ஆவீர்கள். ஆக உள்ளுக்குள் அந்த அளவிற்கு குஷி
இருக்க வேண்டும். மனிதர்கள் தூய்மை இல்லாதவர்களாக ஆன
காரணத்தினால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. எந்த
விகாரமும் இருக்கக் கூடாது என்று தந்தை புரிய வைக்கின்றார்.
முக்கியமானது காம விகாரமாகும். இதற்காகத் தான் எவ்வளவு
பிரச்சனை ஏற்படுகிறது வீட்டிற்கு வீடு எவ்வளவு அசாந்தி,
குழப்பங்கள் ஏற்படுகிறது! இந்த கால கட்டத்தில் உலகில் ஏன்
இவ்வளவு குழப்பங்கள் ஏற்படுகிறது? ஏனெனில் பாவ ஆத்மாக்கள்
இருக்கின்றனர். விகாரங்களின் காரணத்தினால் தான் அசுரர்கள்
என்று கூறப்படுகின்றனர். இந்த நேரத்தில் உலகில் எதுவும்
காரியத்திற்குப் பயன்படாததாக இருக்கிறது, முள் நிறைந்தகாடு
எரிந்து போய் விடும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள்.
இந்த கண்களால் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ, அனைத்தும் எரிந்து
போய் விடும். ஆத்மாவானது நெருப்பில் எரிந்து விடாது. ஆத்மா
எப்போதும் காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்யப்பட்டது போன்று
அழிவற்று இருக்கும். ஆத்மாவை யாராவது இன்சூர் செய்கிறார்களா
என்ன? தேகம் தான் இன்சூர் செய்யப்படுகிறது. ஆத்மா அழிவற்றது.
இது விளையாட்டு என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்படுகிறது. ஆத்மா மேலே வசிக்கக் கூடியது 5
தத்துவங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டதாகும். அனைத்து
பொருட்களும் 5 தத்துவங்களினால் உருவாக்கப்படுகிறது. ஆத்மா
உருவாக்கப்படுவது கிடையாது. ஆத்மா எப்பொழுதும் இருந்து கொண்டே
இருக்கிறது. புண்ணிய ஆத்மாவாகவும், பாவ ஆத்மாவாகவும்
மாறுகிறது. அவ்வளவு தான். ஆத்மாவிற்குத் தான் புண்ணிய ஆத்மா,
பாவ ஆத்மா என்று பெயர் ஏற்படுகிறது. 5 விகாரங்களினால் எவ்வளவு
அசுத்தமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். பாவங்களிலிருந்து
விடுவிப்பதற்காக இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார்.
விகாரங்கள் தான் முழு நடத்தைகளையும் கெடுத்து விடுகிறது.
நடத்தை என்று எது கூறப்படுகிறது? என்பதையும் புரிந்து கொள்வது
கிடையாது. இது உயர்ந்ததிலும் உயர்ந்த ஆன்மீக அரசாங்கமாகும்.
பாண்டவ அரசாங்கம் என்று கூறாமல் ஈஸ்வரிய அரசாங்கம் என்று
நீங்கள் கூறுகிறீர்கள். நாம் ஈஸ்வரிய அரசாங்கத்தைச்
சார்ந்தவர்கள் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஈஸ்வரிய
அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆத்மாக்களை
தூய்மையாக்கி தேவதைகளாக ஆக்குகிறது. இல்லையெனில் தேவதைகள்
எங்கிருந்து வருவார்கள்? என்பதை யாரும் அறியவில்லை. அவர்களும்
மனிதர்கள் தான், ஆனால் தேவதைகளாக எப்படி இருந்தனர்? அவ்வாறு
உருவாக்கியது யார்? தேவதைகள் சொர்க்கத்தில் தான் இருப்பர். ஆக
அவர்களை சொர்க்கவாசிகளாக ஆக்கியது யார்? சொர்க்கவாசிகள்
நரகவாசிகளாக அவசியம் ஆகின்றனர், பிறகு மீண்டும்
சொர்க்கவாசிகளாக ஆகின்றனர். இதை நீங்களே அறியவில்லை எனும்
பொழுது மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்! இந்த நாடகம்
ஏற்கெனவே உருவாக்கப்பட்டது, அனைவரும் நடிகர்கள் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த அனைத்து
விசயங்களும் புத்தியில் இருக்க வேண்டும். படிப்பை புத்தியில்
வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா! மேலும் அவசியம் தூய்மையாகவும்
ஆக வேண்டும். அசுத்தம் ஆவது மிகவும் கெட்ட விசயமாகும். ஆத்மா
தான் தூய்மையை இழக்கிறது. ஒருவருக்கொருவர் அசுத்தமாக ஆகிக்
கொண்டிருக்கின்றனர். தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவது உங்களது
கடமையாகும். தூய்மை ஆகும் பொழுது தூய்மையான உலகிற்குச் சென்று
விடுவீர்கள். இதை ஆத்மா புரிந்து கொள்கிறது. ஆத்மா இல்லையெனில்
சரீரமும் நிலைத்திருக்காது, பதிலும் (உணர்வும்) அடைய முடியாது.
உண்மையில் நாம் தூய்மையான உலகில் வசிக்கக் கூடியவர்கள் என்பதை
ஆத்மா அறிந்திருக்கிறது. நீங்கள் இப்போது முற்றிலும்
புத்தியற்றவர்களாக இருந்த காரணத்தால் தான் தூய்மையற்ற உலகிற்கு
தகுதியானவர்களாக ஆகிவிட்டீர்கள் என்பதை தந்தை புரிய
வைத்திருக்கின்றார். எதுவரை தூய்மை ஆகவில்லையோ அதுவரை
சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக ஆக முடியாது. சொர்க்கத்தை
சங்கமயுகத்தில் தான் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. அங்கு
ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த சங்கமயுகத்தில் தான்
உங்களுக்கு முழு ஞானமும் கிடைக்கிறது. தூய்மை ஆவதற்கான ஆயுதம்
(ஞானம்) கிடைக்கிறது. ஒரே ஒருவர் தான் தூய்மையாக்குபவர் என்று
கூறப்படுகின்றார். பாபா, எம்மை இவ்வாறு தூய்மையாக்குங்கள்.
இவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்கள் அல்லவா! நாம் தான்
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள்
எடுத்து தூய்மை இழந்துவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சியாம் மற்றும் சுந்தர் என்று இவரது பெயரும் அவ்வாறு
வைக்கப்படுகிறது. கிருஷ்ணரின் சித்திரம் கருப்பாக (அல்லது) நீல
நிறமாக உருவாக்குகின்றனர், ஆனால் அதன் அர்ததம் புரிந்து
கொள்வது கிடையாது. கிருஷ்ணரைப் பற்றியும் உங்களுக்கு எவ்வளவு
தெளிவாகப் புரிய வைக்கப்படுகிறது. இதை இரண்டு உலகமாக ஆக்கி
விட்டனர். உண்மையில் இரண்டு உலகம் கிடையவே கிடையாது. உலகம்
ஒன்று தான். அதுவே தான் புதியதாகவும் மற்றும் பழையதாகவும்
ஆகிறது. முதலில் சிறிய குழந்தை புதியதாக இருக்கிறது, பிறகு
பெரியவராகி வயோதிகராக ஆகிவிடுகிறது. ஆக புரிய வைப்பதற்கு
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? தனது இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! லெட்சுமி நாராயணன்
புரிந்திருக்கின்றனர் அல்லவா! புரிந்து கொண்டதால் எவ்வளவு
இனிமையானவர்களாக ஆகியிருக்கின்றனர்! புரிய வைத்தது யார்?
பகவான். யுத்தம் போன்ற விசயங்கள் கிடையாது. பகவான் எவ்வளவு
புத்திசாலியாக, ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார்! எவ்வளவு
தூய்மையாக இருக்கின்றார்! சிவனின் சிலைக்கு முன் சென்று
அனைவரும் நமஸ்காரம் செய்கின்றனர். ஆனால் அவர் யார்? என்ன
செய்கிறார்? என்பதை யாரும் அறியவில்லை. சிவ காசி விஷ்வநாத்
கங்கா... என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். சிறிதும் அதன்
பொருளை புரிந்து கொள்வது கிடையாது. புரிய வைத்தால், நீங்கள்
எங்களுக்கு என்ன புரிய வைப்பீர்கள்? நாங்கள் அனைத்து வேத
சாஸ்திரங்களையும் படித்திருக்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால்
இராம இராஜ்யம் என்று எது கூறப்படுகிறது? என்பதையும் யாரும்
அறியவில்லை. இராம இராஜ்யம் என்று சத்யுகம், புது உலகம்
கூறப்படுகிறது. உங்களிலும் வரிசைக் கிரமமாகத் தான் தாரணை
ஏற்படுகிறது. சிலர் மறந்து விடுகின்றனர், ஏனெனில் முற்றிலும்
கல் புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர். ஆக யார் தங்கப் புத்தியாக
ஆகியிருக்கிறார்களோ அவர்களது கடமை மற்றவர்களையும் தங்கப்
புத்தியுடையவர்களாக ஆக்குவதாகும். கல் புத்தியுடையவர்கள்
முன்பு போலவே நடந்து கொண்டிருப்பார்கள், ஏனெனில் அன்னம்
போன்றவர்கள் கொக்கு போல ஆகிவிடுகின்றனர் அல்லவா! அன்னம் போன்று
இருப்பவர்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கம்
கொடுக்கமாட்டார்கள். கொக்கு போன்றவர்கள் துக்கம் கொடுப்பர்.
சிலரது நடத்தைகள் கொக்கு போன்றே இருக்கிறது, அவர்களிடத்தில்
அனைத்து விகாரங்களும் இருக்கின்றன. இங்கும் அதிக
விகாரமுடையவர்களும் வந்து விடுகின்றனர். அவர்கள் தான்
அசுரர்கள் என்று கூறப்படுகின்றனர். அறிந்து கொள்ள முடியாது. பல
சென்டர்களிலும் விகாரிகள் வருகின்றனர், சாக்கு போக்கு
கூறுகின்றனர், நாங்களும் பிராமணர்கள் என்று கூறுகின்றனர்,
ஆனால் முற்றிலும் பொய். அதனால் தான் இது பொய்யான உலகம் என்று
கூறப்படுகிறது. அந்த புது உலகம் உண்மையான உலகமாகும். இது
சங்கமம் ஆகும். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! யார் பொய்
பேசுபவர்களோ, பொய்யான காரியம் செய்யக் கூடியவர்களோ அவர்கள்
மூன்றாம் தரமுடையவர்களாக ஆகின்றனர். முதல் தரம், இரண்டாம் தரம்
என்று கூட இருக்கிறது அல்லவா!
தூய்மைக்கான முழு நிரூபணம் கொடுக்க வேண்டும் என்று தந்தை
கூறுகின்றார். இருவரும் (தம்பதியர்) சேர்ந்திருந்து தூய்மையாக
இருப்பது என்பது நடக்காத காரியம் என்று சிலர் கூறுகின்றனர். ஆக
குழந்தைகள் நீங்கள் புரிய வைக்க வேண்டும். யோக பலம் இல்லாத
காரணத்தினால் தான் இவ்வளவு எளிய விசயத்தையும் முழுமையான
முறையில் புரிய வைக்க முடிவது கிடையாது. இங்கு நமக்கு பகவான்
கற்பிக்கின்றார் என்ற விசயத்தை யாரும் புரிய வைப்பது கிடையாது.
தூய்மையாக ஆவதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள் என்று அவர்
கூறுகின்றார். அது தூய்மையான உலகமாகும். தூய உலகில்
அசுத்தமானவர்கள் யாரும் இருக்க முடியாது. 5 விகாரங்களே
கிடையாது. அது விகாரமற்ற உலகமாகும். இது விகார உலகமாகும்.
நமக்கு சத்யுக இராஜ்யம் கிடைக்கிறது எனில் நாம் ஏன் ஒரு
பிறவிக்கு தூய்மையாக இருக்கக் கூடாது? நமக்கு உயர்ந்த லாட்டரி
கிடைக்கிறது. ஆக குஷி ஏற்படுகிறது அல்லவா! தேவி தேவதைகள்
தூய்மையாக இருக்கின்றனர் அல்லவா! அசுத்தத்திலிருந்து
தூய்மையானவர்களாக தந்தை தான் ஆக்குவார். ஆக நம்மிடத்தில் இந்த
ஊக்கம் இருக்கிறது என்று கூற வேண்டும். தந்தை தான் இவ்வாறு
ஆக்குகின்றார். தந்தையைத் தவிர புது உலகை யாரும் உருவாக்க
முடியாது. மனிதனை தேவதையாக ஆக்குவதற்கு பகவானே வருகின்றார்,
அதற்குத் தான் (சிவ) ராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. ஞானம்,
பக்தி, வைராக்கியம் என்றும் புரிய வைக்கப்படுகிறது.
பக்திக்குப் பிறகு வைராக்கியம். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல
வேண்டும். இந்த சரீரம் என்ற ஆடையை நீக்க வேண்டும். இந்த சீ சீ
உலகில் இருக்கக் கூடாது. 84 பிறவிச் சக்கரம் இப்பொழுது
முடிவடைந்து விட்டது. இப்பொழுது சாந்திதாமம் வழியாகச் செல்ல
வேண்டும். முதலில் அல்லாவின் விசயத்தை மறந்து விடக்கூடாது.
பழைய உலகம் அழிந்து விடும் என்பதையும் குழந்தைகள்
புரிந்திருக்கிறீர்கள். தந்தை புது உலகை ஸ்தாபனை செய்கின்றார்.
சொர்க்கம் ஸ்தாபனை செய்வதற்கு தந்தை பல முறை
வந்திருக்கின்றார். நரகம் விநாசம் ஆகிவிடும். நரகம் எவ்வளவு
பெரிதாக இருக்கிறது! சொர்க்கம் மிகவும் சிறியதாக இருக்கும்.
புது உலகில் ஒரே ஒரு தர்மம் தான் இருக்கும். இங்கு பல
தர்மங்கள் உள்ளன. ஒரே ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார்?
பிரம்மா செய்யவில்லை. பிரம்மாவே அசுத்தத்திலிருந்து தூய்மையாக
ஆகின்றார். அசுத்தத்திலிருந்து தூய்மையாவது என்று என்னை
(சிவபாபா) கூறமாட்டீர்கள். தூய்மையாக இருக்கின்றனர் எனில்
அவர்களது பெயர் லெட்சுமி நாராயணன் ஆகும். பிரம்மாவின் பகல்,
பிரம்மாவின் இரவாகும். இவர் பிரஜாபிதா அல்லவா! சிவபாபாவை அநாதி
(ஆதி, அந்தம், இல்லாதவர்) படைப்பவர் என்று கூறுகின்றோம். அநாதி
என்ற வார்த்தை தந்தைக்கு மட்டுமே. தந்தை அநாதியாக
இருக்கின்றார் எனில் ஆத்மாவும் அநாதி ஆகும். விளையாட்டும்
அநாதி ஆகும். ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மாவிற்கு
சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடை, கால அளவின் ஞானம்
கிடைக்கிறது. இதை கொடுத்தது யார்? தந்தை. நீங்கள் 21
பிறவிகளுக்கு செல்வந்தர்களாக ஆகிவிடுகிறீர்கள். பிறகு இராவண
இராஜ்யத்தில் (ஞான) செல்வமற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.
இங்கிருந்து தான் விகாரங்களின் மூலம் நடத்தைகள் கெட்டுப் போக
ஆரம்பிக்கிறது. மற்றபடி இரண்டு உலகங்கள் கிடையாது. சொர்க்கம்,
நரகம் இரண்டும் ஒன்றாகவே சேர்ந்து இருப்பதாக மனிதர்கள்
நினைக்கின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு
தெளிவாக புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் குப்தமாக
இருக்கிறீர்கள். சாஸ்திரங்களில் என்ன என்னவோ எழுதி வைத்து
விட்டனர்! நூல் மிகவும் சிக்கலுடையதாக இருக்கிறது. தந்தையைத்
தவிர வேறு யாரும் சிக்கலை எடுக்க முடியாது. நாம் எந்த
காரியத்திற்கும் உதவாதவர்களாக இருக்கிறோம், வந்து தூய்மை ஆக்கி
நமது நடத்தைகளை மாற்றுங்கள் என்று அவரைத் தான் அழைக்கிறோம்.
உங்களது நடத்தைகள் எவ்வளவு மாறி விட்டது! சிலர் மாறுவதற்குப்
பதிலாக மேலும் கெட்டவர்களாக ஆவிடுகின்றனர். நடத்தைகளின் மூலம்
தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று மகாரதி, அன்னப்பறவை என்று
அழைக்கப்படுகின்றனர், நாளை கொக்கு ஆகிவிடுகின்றனர். தாமதம்
ஏற்படுவது கிடையாது. மாயையும் குப்தமானது அல்லவா! கோபத்தை
பார்க்க முடியாது. உரத்த குரலில் பேசி வெளிப்படுத்தும் பொழுது
தான் அது தென்படுகிறது. ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்,
கூறுகின்றனர் ... பிறகு சென்று விடுகின்றனர். எத்தனையோ பேர்
வீழ்ந்து விடுகின்றனர்! ஒரேயடியாக கற்களாக ஆகிவிடுகின்றனர்.
இந்திரபிரஸ்தத்திற்கான விசயம் அல்லவா! தெரிந்து விடுகிறது.
இப்படிப்பட்டவர்கள் சபைக்கு வரக் கூடாது. சிறிது ஞானம்
கேட்டாலே சொர்க்கத்திற்கு வந்து விடுவர். ஞானம் விநாசம் ஆகவே
முடியாது.
இப்பொழுது நீங்கள் முயற்சி
செய்து உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்.
ஒருவேளை விகாரத்தில் சென்றால் பதவி குறைந்து விடும். சூரியவம்சி,
சந்திரவம்சி பிறகு வைஷ்யவம்சி, சூத்ரவம்சியாக ஆவீர்கள். இந்த
சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். கலியுகத்தின் ஆயுள் 40 ஆயிரம் ஆண்டுகள்
என்று அவர்கள் கூறி விட்டனர். ஏணியில் இறங்க வேண்டும் அல்லவா!
40 ஆயிரம் ஆண்டுகள் எனும் பொழுது மக்கள் அதிகம் ஆகிவிடுவர். 5
ஆயிரம் ஆண்டிலேயே இவ்வளவு மக்கள் இருக்கின்றனர்,
சாப்பிடுவதற்கும் கிடைப்பது கிடையாது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளில்
எவ்வளவு அதிகரித்து விடும்! ஆக தந்தை வந்து பொறுமை
ஏற்படுத்துகின்றார். அசுத்தமான மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டே
இருப்பார்கள். அவர்களது புத்தியானது இந்தப் பக்கம் வரவே
முடியாது. இப்பொழுது உங்களது புத்தி எவ்வளவு மாறியிருக்கிறது
பாருங்கள்! இருப்பினும் மாயை அவசியம் ஏமாற்றி விடுகிறது.
இச்சையற்றவர் களாக ஆகுங்கள். ஏதாவது ஆசைபட்டீர்கள் எனில்
அவ்வளவு தான்! ஒரு பைசாவிற்கும் உதவாதவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.
நல்ல நல்ல மகாரதிகளையும் மாயை ஏதாவது ரூபத்தில் எப்பொழுதாவது
ஏமாற்றி விடுகிறது. பிறகு அவர்கள் இறைதந்தை மனதில் அமர முடியாது.
எவ்வாறு லௌகீக தாய், தந்தையின் மனதில் அமர முடியாதோ அதுபோன்று!
தந்தையை கொன்று விடும் குழந்தைகளும் இருக்கின்றனர்.
குடும்பத்தையே அழித்து விடுகின்றனர். மகா பாவ ஆத்மாக்கள் ஆவர்.
இராவணன் எப்படி ஆக்கி விட்டது, அசுத்தமான உலகமாகும். இதில்
ஒருபொழுதும் உள்ளத்தை ஈடுபடுத்தக் கூடாது. தூய்மை ஆவதற்கு
மிகுந்த தைரியம் தேவை. உலக இராஜ்யத்தின் பரிசு அடைவதற்கு தூய்மை
முக்கியமானது, அதனால் தான் வந்து தூய்மை ஆக்குங்கள் என்று
தந்தையிடம் கூறுகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும்
நமஸ்தே. தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயையின் ஏமாற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆசையற்றவர்களாக
ஆக வேண்டும். இந்த அசுத்தமான உலகில் மனதை ஈடுபடுத்தக் கூடாது.
2) தூய்மைக்கான முழுமையான நிரூபணம் கொடுக்க வேண்டும்.
அனைத்தையும் விட உயர்ந்த நடத்தை தூய்மையாகும். தன்னைத் தான்
மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியம் தூய்மையாக ஆக வேண்டும்.
வரதானம்:
தனது ஒருநிலைப்படுத்தும் (ஏகாக்ரதா)
சொரூபத்தின் மூலம் சூட்மசக்தியின் லீலைகளை (விளையாட்டு)அனுபவம்
செய்யக் கூடிய உள்நோக்கு முகமுடையவர் ஆகுக.
ஒருநிலைப்படுத்துவதற்கு ஆதாரம்
உள்நோக்கு முகத்துடன் இருப்பதாகும். யார் உள்நோக்கு முகத்துடன்
இருக்கிறார்களோ அவர்கள் உள்ளுக்குள் சூட்சும சக்திகளின் லீலைகளை
அனுபவம் செய்வார்கள். ஆத்மாக்களை ஆவாஹனம் (அழைப்பது) செய்வது,
ஆத்மாக்களுடன் ஆன்மீக உரையாடல் செய்வது, ஆத்மாக்களின் சுபாவ,
சன்ஸ்காரங்களை மாற்றுவது, தந்தையிடம் தொடர்பை ஏற்படுத்துவது -
இவ்வாறு ஆன்மீக உலகில் ஆன்மீக சேவை செய்வதற்காக ஒரு
நிலைப்படுத்தக்கூடிய (ஏகாக்ரதா) சக்தியை அதிகப்படுத்துங்கள்.
இதன் மூலம் அனைத்து விதமான தடைகளும் தானாகவே அழிந்து விடும்.
சுலோகன்:
அனைத்து பிராப்திகளையும்
தனக்குள் தாரணை செய்து உலக நாடக மேடையில் வெளிப்படுவது தான்
வெளிப்படையாவதற்கு (பிரத்யட்சதாவிற்கு) ஆதாரமாகும்.
விசேச கவனத்திற்கு: இது ஜனவரி
மாதமாகும். இனிய சாகார பாபாவின் நினைவிற்கான மாதமாகும். தன்னை
சக்திசாலியாக ஆக்குவதற்கு விசேசமாக உள்நோக்கு முகமுடையவர்களாக
ஆகி சூட்சும சக்திகளின் லீலைகளை அனுபவம் செய்ய வேண்டும். முழு
மாதமும் தனது அவ்யக்த ஸ்திதியில் இருக்க வேண்டும். மனம் மற்றும்
வாய் - இரண்டிலும் மௌனம் கடைபிடிக்க வேண்டும்.
ஓம்சாந்தி