01.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த சரீரம் என்ற உடையை இங்கேயே விட வேண்டும். ஆகவே இதன் மீது பற்றுதலை விலக்குங்கள். நண்பர் உறவினர் யாருடைய நினைவும் வரக்கூடாது.

 

கேள்வி:

யோக பலமுடைய குழந்தைகளின் அடையாளம் என்ன?

 

பதில்:

அவர்கள் எந்த விஷயத்திலும் சிறிதும் விழ மாட்டார்கள் எங்கேயும் பற்றும் இருக்காது. இன்று யாராவது சரீரத்தை விட்டாலும் துக்கம் ஏற்படாது. ஏனென்றால் இவர்களுக்கு டிராமாவில் இவ்வளவு தான் நடிப்பு என அறிகிறார்கள். ஆத்மா ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கும்.

 

ஓம் சாந்தி.

இந்த ஞானம் மிகவும் குப்தமானது. இதில் நமஸ்காரம் கூட கூற வேண்டியதில்லை. உலகத்தில் நமஸ்காரம் மற்றும் இராம் இராம் எனக் கூறுகிறார்கள். இங்கே இந்த விஷயங்கள் எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இது ஒரு குடும்பம் ஆகும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் நமஸ்காரம் அல்லது காலை வணக்கம் கூறுவது அவ்வளவு அழகல்ல. வீட்டில் உணவு சாப்பிடுவார்கள், அருந்துவார்கள், அலுவலகத்திற்கு செல்வர். பிறகு வருவர். இது நடந்து கொண்டு இருக்கிறது. வணக்கம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. குட்மார்னிங் சொல்லக்கூடிய ஃபேஷன் கூட ஐரோப்பியர்களிடம் இருந்து வந்திருக்கின்றது. இல்லை யென்றால் முன்பு இவ்வாறு சொல்லவில்லை. சிலர் சத்சங்கங்களில் சந்திக்கிறார்கள், வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள். இந்த காலில் விழுதல் போன்றவை பணிவிற்காக கற்பிக்கின்றார்கள். இங்கேயோ குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். ஆத்மா ஆத்மாவிற்கு என்ன செய்யும். இருப்பினும் சொல்ல வேண்டி இருக்கிறது. பாபா நமஸ்காரம் என்று பாபாவிற்கு கூறுவார்கள். இப்போது நான் சாதாரண பிரம்மா உடல் மூலமாக உங்களைப் படிக்க வைக்கின்றேன். இவர் மூலமாக ஸ்தாபனை செய்கிறேன் என பாபா கூறுகின்றார். எப்படி? பாபா நேரில் வரும்போது தான் புரிய வைக்க முடியும். இல்லையென்றால் யார் எப்படி புரிந்து கொள்வார்கள்? இந்த தந்தை நேர் எதிரில் அமர்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். பாப்தாதா நமஸ்காரம் என இருவருக்கும் நமஸ்காரம் செய்ய வேண்டியிருக்கிறது. வெளியில் இருப்பவர்கள் பாப்தாதா என்று கூறுவதைக் கேட்டால் இது என்ன எனக் குழம்பி போவார்கள். பல மனிதர்களுக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றதல்லவா. இலட்சுமி நாராயணன் மற்றும் ராதா கிருஷ்ணன்...... என்று கூட பெயர்கள் இருக்கிறது. இது கணவனும் மனைவியும் இணைந்தது போல் ஆகிவிட்டது. இப்போது இவரோ பாப்தாதா ஆவார். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். நிச்சயம் பாபா பெரியவர். இந்த பெயர்கள் இரண்டாக இருக்கலாம். ஆனால் ஒருவர் தான் அல்லவா? பிறகு ஏன் இரண்டு பெயரை வைத்திருக் கிறார்கள்? இப்பொழுது இந்த பெயர் தவறு என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாபாவை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் பாப்தாதா நமஸ்காரம் என்கிறீர்கள். பாபா உடலை உடைய ஆன்மீக குழந்தைகளே! நமஸ்காரம் என்கிறார். ஆனால் இவ்வளவு நீளமாகக் கூறுவது அழகாக இல்லை. வார்த்தைகள் சரியாகும். இப்போது நீங்கள் உடலை உடைய குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். ஆன்மீகக் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். சிவபாபா அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார். மேலும் பிரஜாபிதாவும் இருக்கிறார். பிரஜாபிதா பிரம்மாவின் வாரிசுகள் சகோதரன் சகோதரிகள். இல்லற மார்க்கம் ஆகி விடுகிறது. நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார் பிரம்மா குமாரிகள். பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் ஆவதால் பிரஜாபிதாவும் நிரூபணம் ஆகிறது. இதில் மூடநம்பிக்கை எதுவும் இல்லை. பிரம்மா குமார் பிரம்மா குமாரிகளுக்கு தந்தையிடமிருந்து சொத்து கிடைக்கிறது எனக்கூறுங்கள். பிரம்மாவிடமிருந்து கிடைக்காது. பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தை. சூட்சும வதனவாசி பிரம்மா, விஷ்ணு, சங்கர் போன்றோர் படைப்புகள். இவர்களை படைப்பவர் சிவன். சிவனை படைப்பவர் யார் என்று கூற முடியாது. சிவனை படைப்பவர் யாருமில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கர் படைப்பு ஆவர். இவர்களுக்கும் மேலானவர் சிவன். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். இப்போது படைக்கக்கூடியவர் இருக்கிறார் என்றால் எப்போது படைத்தார் என்ற கேள்வி எழுகிறது. இது அனாதியாகும். இத்தனை ஆத்மாக்களை எப்பொழுது படைத்தார்? இந்தக் கேள்வி எழ முடியாது. இந்த முதலும் முடிவுமற்ற நாடகம் நடந்து கொண்டேயிருக்கிறது. இது முடிவற்றதாகும். இதற்கு ஒருபோதும் முடிவு ஏற்படாது. இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமத்தில் புரிந்து கொள்கிறீர்கள். இது மிகவும் எளிதாகும். யார் இறந்தாலும் உயிரோடு இருந்தாலும் ஒரு பாபாவை தவிர வேறு யார் மீதும் பற்றுதல் இருக்கக்கூடாது. அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள்...... என்று பாடப்பட்டிருக்கிறது. யார் இறந்து போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. நாடகத்தின் படி அவர் இச்சமயம் போய்த்தான் ஆக வேண்டும். இதில் என்ன செய்ய முடியும்? சிறிதும் துக்கப்படக்கூடாது. இது தான் யோக பலத்தின் நிலையாகும். சிறிதும் விழக்கூடாது (வக்க) என சட்டம் கூறுகிறது. அனைவரும் நடிகர்கள் அல்லவா? குழந்தைகளுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது.

 

, பரம்பிதா பரமாத்மா வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள் என பாபாவிடம் கூறுகிறார்கள். இத்தனை உடல்களை அழித்து அனைத்து ஆத்மாக்களையும் உடன் அழைத்துச் செல்லுதல் மிகப் பெரிய வேலையாகும். இங்கே ஒருவர் இறந்துவிட்டாலும் 12 மாதங்கள் அழுது கொண்டேயிருக்கிறார்கள். பாபா இவ்வளவு ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வார். அனைவரும் உடலையும் இங்கேயே விட்டு விடுவார்கள். மகாபாரத போர் ஏற்பட்டுவிட்டால் கொசுக் கூட்டங்களைப் போல் இறப்பார்கள் என குழந்தைகளுக்குத் தெரியும். இயற்கை சீற்றங்களும் ஏற்படும். இந்த உலகம் முழுவதும் மாறுகிறது. இங்கிலாந்து, இரஷ்யா பாருங்கள், எவ்வளவு பெரியதாக இருக்கிறது! சத்யுகத்தில் இவைகள் இருந்ததா? நம்முடைய இராஜ்யத்தில் இவர்கள் யாரும் இல்லை என்பதும் இந்த உலகில் யாருடைய புத்தியிலும் இல்லை. ஒரே தர்மம், ஒரே இராஜ்ஜியம் இருந்தது. உங்களில் ஒரு சிலர் புத்தியில்தான் நன்கு பதிவாகிறது. ஒரு வேளை பதிவாகியது என்றால் எப்பொழுதும் போதை ஏறிக் கொண்டேயிருக்கும். ஒரு சிலருக்குத் தான் அந்த அளவிற்கு போதை மிகவும் அரிதாக ஏறுகிறது. நண்பர்கள் உறவினர் போன்றோர்களின் நினைவில் விலகி ஒரு எல்லையற்ற மகிழ்ச்சியில் நிலைத்திருப்பது மிகவும் அதிசயமாகும். கடைசியில் தான் கர்மாதீத நிலையைப் பெறுகிறார்கள். சரீரத்தில் இருந்தும் பற்று விலகிப் போகிறது. அவ்வளவு தான், இப்பொழுது நாம் போகிறோம், இது பொதுவான விஷயம் ஆகும். நாடகத்தில் நடிப்பவர்கள் வீட்டிற்குத் திரும்பிப் போகிறார்கள் அல்லவா? இந்த தேகம் என்ற உடையை நீங்கள் இங்கேயே விட வேண்டும். இந்த உடையை இங்கே தான் எடுத்தீர்கள். இங்கேயே தான் விட வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. அப்பா மற்றும் ஆஸ்தி. அனைவருக்கும் மேல் அப்பா இருக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கர் மூலமாக அழிவு, விஷ்ணு மூலமாக பாலனை என்கிறார்கள். சரி. பிறகு சிவனின் வேலை என்ன? உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அவர் சர்வவியாபி என்கிறார்கள். அனைத்தும் அவருடைய ரூபம் என்கிறார்கள். முழு உலகினரின் புத்தியிலும் இது உறுதியாகி விட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் தமோபிரதானமாகி விட்டனர். முழு உலகமும் துர்கதி அடைந்துவிட்டது என பாபா கூறுகின்றார். பிறகு நான் தான் வந்து அனைவருக்கும் சத்கதியை அளிக்கிறேன். ஒருவேளை சர்வவியாபி என்றால் அனைவரும் பகவானா? ஒரு புறம் அனைவரும் சகோதரர்கள் என்கிறார்கள். பிறகு அனைவரும் தந்தை என்கிறார்கள், எதையும் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளே என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். நீங்கள் இந்த தாதாவை அல்லது மம்மாவைக் கூட நினைக்கக் கூடாது. மம்மாவும் இல்லை பாபாவும் இல்லை. யாருக்கும் எந்த மகிமையும் இல்லை என பாபா கூறுகின்றார். சிவபாபா இல்லை என்றால் இந்த பிரம்மா என்ன செய்வார்? இவரை நினைப்பதால் என்ன நடக்கும்? ஆம், இவர் மூலமாக நாம் தந்தையிடமிருந்து சொத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம். இவரிட மிருந்து இல்லை என அறிகிறீர்கள். இவரும் அவரிடமிருந்து சொத்தை அடைகிறார். எனவே அவரை நினைக்க வேண்டும். இவர் இடையில் தரகர் ஆவார். பிள்ளை மற்றும் பெண்ணிற்கு நிச்சயம் நடக்கிறது என்றால் ஒருவரை ஒருவர் நினைப்பார்கள் அல்லவா? திருமணம் செய்விப்பவர் இடையில் தரகர் ஆவார். இவர் மூலமாக தந்தை ஆத்மாக்களாகிய உங்களின் நிச்சயதார்த்தத்தை தன்னுடன் செய்விக்கிறார். ஆகவே சத்குரு தரகர் ரூபத்தில் கிடைத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. சத்குரு தரகர் கிடையாது. சத்குரு நிராகாரர் ஆவார். குரு பிரம்மா, குரு விஷ்ணு என்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் குரு கிடையாது. ஒரு தந்தை தான் சத்குரு ஆவார். அவரே அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். பாபா உங்களுக்குக் கற்பித்திருக்கிறார். ஆகவே தான் நீங்கள் மற்றவர்களுக்கு வழி காண்பிக்கிறீர்கள். பார்த்தாலும் பார்க்காதீர்கள் என அனைவருக்கும் வழிகாட்டுகிறீர்கள். புத்தி சிவபாபாவிடம் இணைந்திருக்கிறது. இந்தக் கண்களால் பார்ப்பவைகள் அனைத்தும் சுடுகாடு ஆகப்போகிறது. ஒரு தந்தையை நினைக்க வேண்டும். இவரையும் நினைக்கக் கூடாது. இவரிடமிருந்து சொத்து கிடைக்காது என புத்தி கூறுகிறது. தந்தையிடமிருந்து தான் சொத்து கிடைக்க வேண்டும். தந்தையிடம் தான் செல்ல வேண்டும். மாணவர்கள் மாணவர்களை நினைப்பார்களா என்ன? மாணவர்கள் ஆசிரியரைத்தான் நினைப்பார்கள். பள்ளிக்கூடத்தில் புத்திசாலியான குழந்தைகள் மற்றவர்களையும் தூக்கி நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். அவ்வாறு ஒருவரை ஒருவர் உயர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என பாபாவும் கூறுகிறார். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சி செய்வதில்லை. சிறிதிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். கண்காட்சியில் நிறைய பேர் வருகிறார்கள். நிறைய பேருக்கு புரிய வைத்தால் முன்னேற்றம் நிறைய ஏற்படும் என புரியவைக்க வேண்டும். அழைப்பிதழ்கள் கொடுத்து வரவைக்கிறார்கள். மிகவும் பெரிய புத்திசாலியான மனிதர்கள் வருகிறார்கள். அழைப்பிதழ் இல்லாமல் பலவிதமான மக்கள் வருகிறார்கள். ஏதாவது இல்லாதது பொல்லாதது உளறுகிறார்கள். இராயல் மனிதர்களின் நடவடிக்கை கூட இராயலாக இருக்கிறது. ராயல் மனிதர்கள் இராயல்டியோடு உள்ளே நுழைவார்கள். நடத்தையிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்குள்ளோ நடத்தை பேச்சு எதிலும் மேன்மை இருக்காது. மேளாவில் அனைத்து விதமானவர்களும் வருகிறார்கள். யாரையும் தடுக்க முடியாது. ஆகவே கண்காட்சிகளில் அழைப்பிதழ்களைக் கொடுத்து அழைக்கும் பொழுது நல்ல நல்ல மனிதர்கள் வருவார்கள். பிறகு அவர்கள் சென்று மற்றவர்களுக்கு சொல்வார்கள். சில நேரங்களில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்தும் போது பெண்கள் மட்டும் வந்து பார்ப்பார்கள். ஏனென்றால் பெண்கள் சில இடங்களில் திரைக்குப் பின்னாலேயே இருக்கிறார்கள். எனவே பெண்களுக்காக மட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். ஆண்கள் வரக்கூடாது. முதன்முதலில் சிவபாபா நிராகாரர் என்பதை புரியவைக்க வேண்டும் என உங்களுக்கு பாபா புரிய வைத்துள்ளார். சிவபாபா மற்றும் பிரஜா பிதா பிரம்மா இருவரும் தந்தையாகி விட்டனர். இரண்டு தந்தையிடமிருந்தும் சொத்தை அடையும் அளவிற்கு இருவரும் ஒரே நிலையில் இருக்க முடியாது. சொத்து தந்தையுடையது அல்லது தாத்தாவினுடையது கிடைக்கும். தாத்தாவின் சொத்தில் உரிமை இருக்கிறது. எவ்வளவுதான் கெட்ட குழந்தையாக இருந்தாலும் தாத்தாவிடமிருந்து சொத்து கிடைக்கும். இது இவ்விடத்தின் சட்டம் ஆகும். இவர்களுக்கு பணம் கிடைத்தால் ஒரு வருடத்திற்குள் காலிசெய்து விடுவர் என அறிகிறார்கள். ஆனால் அரசாங்க சட்டம் இவ்வாறு இருப்பதால் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது. பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது. ஒரு இராஜாவின் குழந்தை இருந்தார், ஒரு கோடி ரூபாயை 12 மாதத்தில் அழித்து விட்டான். இவ்வாறும் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன் என்று சிவபாபா கூறமாட்டார். நான் நிறைய பார்த்திருக்கிறேன் என்று இந்த தாதா தான் கூறுவார். இந்த உலகம் மிகவும் அழுக்காக இருக்கிறது. இது பழைய உலகம், பழைய வீடு ஆகும். பழைய வீட்டை இடிக்க வேண்டி இருக்கிறது. இந்த இலட்சுமி நாராயணனின் இராஜ்யத்தில் அவர்களின் வீடு எவ்வளவு நன்றாக இருக்கிறது பாருங்கள்!

 

நீங்கள் நரனிலிருந்து நாராயணன் ஆகிறீர்கள் என்று இப்போது பாபா மூலம் புரிந்து கொள்கிறீர்கள். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். உங்களிலும் முழுமையாக மலர் ஆகவில்லை. இதற்கு இராயல்டி மிகவும் தேவை. நீங்கள் ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள். மலர்களாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் அன்போடு பாப்தாதா எனக் கூறுகிறீர்கள். இது உங்களுடைய புதிய மொழியாகும். இது மனிதர்களுக்குப் புரியாது. பாபா எங்கே சென்றாலும், குழந்தைகள் பாப்தாதா நமஸ்காரம் என கூறுவார்கள். ஆன்மீக உலகியல் குழந்தைகளுக்கு நமஸ்காரம் என பாபா தெரிவிப்பார். இவ்வாறு சொல்ல வேண்டும் அல்லவா. யாராவது கேட்டால் இது புதியதாக இருக்கிறது எனக் கூறுவார்கள். பாப்தாதா ஒன்றாக எப்படி கூறமுடியும். பாபா மற்றும தாதா இருவரும் ஒன்றாக இருக்க முடியுமா? இருவரின் பெயரும் தனித்தனி. சிவபாபா, பிரம்மா தாதா, நீங்கள் இவர்கள் இருவரின் குழந்தைகள். சிவபாபா இவருக்குள் இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் பாப்தாதாவின் குழந்தைகள். இதுவும் புத்தியில் நினைவிருந்தால் குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் டிராமாவில் உறுதியாக இருக்க வேண்டும். யாராவது உடலை விட்டு விட்டால் இன்னொரு நடிப்பை நடிப்பார்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அழிவற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது. இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர்கள் இன்னொரு பார்ட்டை நடிக்க வேண்டும். மீண்டும் அழைக்க முடியாது. டிராமா அல்லவா? இதில் அழுவதற்கு எதுவும் இல்லை. இது போன்ற நிலை உடையவர்கள் பற்றற்ற இராஜா ஆகிறார்கள். சத்யுகத்தில் அனைவரும் பற்றற்றவர் களாக இருக்கிறார்கள். இங்கே யாராவது இறந்துவிட்டால் எவ்வளவு அழுகிறார்கள்! பாபாவை அடைந்து விட்டால் பிறகு அழ வேண்டியதில்லை. பாபா எவ்வளவு நல்ல வழி காட்டுகிறார். கன்யாக்களுக்கு மிகவும் நல்லது. தந்தை வீணாக பணத்தை செலவு செய்கிறார். மேலும் நீங்கள் சென்று நரகத்தில் விழுகிறீர்கள். இதை விட நாங்கள் இந்த பணத்தினால் ஆன்மீக யுனிவர்சிட்டி மற்றும் ஆஸ்பிட்டல் திறப்போம், நிறைய பேருக்கு நன்மை செய்தால் உங்களுக்கும் புண்ணியம், எங்களுக்கும் புண்ணியம் ஆகிவிடும் எனக் கூறுங்கள். நாம் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுவதற்காக உடல், மனம், பொருள் அனைத்தையும் செலவு செய்வோம் என குழந்தைகள் தாங்களே உற்சாகத்தில் இருப்பீர்கள். இவ்வளவு போதை இருக்க வேண்டும். கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள், வேண்டாம் என்றால் கொடுக்க வேண்டாம். நீங்கள் உங்களுக்கும் நன்மை மற்றும் பலருக்கும் நன்மை செய்ய விரும்பவில்லையா? இவ்வளவு போதை இருக்க வேண்டும். முக்கியமாக குமாரிகள் எழுந்து நிற்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. தன்னுடைய நடத்தை, நடிவடிக்கைகள் மிகவும் இராயலாக இருக்க வேண்டும். மிகவும் மேன்மையாக பேச வேண்டும். பணிவு என்ற குணத்தை தாரணை செய்ய வேண்டும்.

 

2. இந்த கண்களுக்கு என்னென்ன தெரிகிறதோ அது அனைத்தும் சுடுகாடு ஆகப்போகிறது. ஆகவே இதை பார்த்தாலும் பார்க்காமல் இருங்கள். ஒரு சிவபாபாவைத்தான் நினைக்க வேண்டும். எந்த தேகதாரியையும் நினைக்க கூடாது.

 

வரதானம்:

விசேஷத்தன்மை என்ற சஞ்சீவினி மூலிகை மூலம் மூர்ச்சை அடைந்தவர்களை விழிப்படையச் செய்யக்கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

 

ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சிரேஷ்டமான நினைவு, விசேஷத் தன்மைகளின் நினைவு என்ற சஞ்சீவினி மூலிகையைக் கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மூர்ச்சையிலிருந்து விழிப்படைந்துவிடுவார்கள். விசேஷத் தன்மைகளின் சொரூபத்தினுடைய கண்ணாடியை அவர்கள் முன் வைத்திடுங்கள். பிறருக்கு நினைவு ஏற்படுத்து வதன் மூலம் நீங்கள் விசேஷ ஆத்மா ஆகிவிடுவீர்கள். ஒருவேளை, நீங்கள் ஒருவரது பலவீனத்தைக் கூறினீர்கள் என்றால் அவர்கள் மறைப்பார்கள், மறுப்பார்கள். நீங்கள் விசேஷத் தன்மையைக் கூறினீர்கள் என்றால் அவர்கள் சுயம் தன்னுடைய பலவீனத்தைத் தெளிவாக அனுபவம் செய்வார்கள். இந்த சஞ்சீவினி மூலிகை மூலம் மூர்ச்சை அடைந்தவர்களை விழிப்படையச் செய்து பறந்து செல்லுங்கள் மற்றும் பறக்க வைத்திடுங்கள்.

 

சுலோகன்:

பெயர், புகழ், மரியாதை மற்றும் சாதனங்களை எண்ணத்தளவிலும் தியாகம் செய்வது தான் மகான் தியாகம் ஆகும்

 

ஓம்சாந்தி