01-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

முதன் முதலில் நீங்கள் அனைவருக்கும் எந்த ஒரு ஆழமான ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும்?

பதில்:

பாப்தாதாவைப் பற்றி. இங்கே நாம் பாப்தாதாவிடம் வந்திருக்கிறோம் என நீங்கள் தெரிந்திரிக் கின்றீர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள். சிவனுடைய ஆத்மாவும் இவருக்குள் இருக்கிறார். பிரம்மாவின் ஆத்மாவும் இருக்கிறது. ஒன்று ஆத்மா, இன்னொன்று பரமாத்மா. ஆகவே முதன் முதலில் பாப்தாதா சேர்ந்திருக்கிறார்கள் என்ற ஆழமான ரகசியத்தை அனைவருக்கும் புரிய வையுங்கள். இவர் (தாதா) பகவான் கிடையாது. மனிதர்கள் பகவான் ஆக முடியாது நிராகாரமான வரைத்தான் பகவான் என்று கூறப்படுகிறது. அந்த தந்தை சாந்திதாமத்தில் இருக்கக் கூடியவர் ஆவார்.

பாடல்:

கடைசியில் அந்த நாள் வந்தது இன்று.....

ஓம் சாந்தி. தந்தை, தாதா மூலமாக அதாவது சிவ தந்தை, பிரம்மா தாதா மூலமாக புரிய வைக்கிறார் என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். லௌகீக உறவுகளில் தந்தை தனியாகவும் தாதா தனியாகவும் இருப்பார். தந்தையிடமிருந்து தாத்தாவின் சொத்து கிடைக்கிறது. தந்தையின் சொத்தை அடைகிறார்கள் என கூறுகிறார்கள். அவர் ஏழை பங்காளன் ஆவார். யார் வந்து ஏழையை கிரீடம் உடையவராக மாற்றுகிறாரோ அவருக்கு ஏழைப் பங்காளன் என்று பெயர். அவர் யார் என்று முதன் முதலில் உறுதியான நிச்சயம் வேண்டும். பார்ப்பதற்கு சாகார மனிதனாக இருக்கிறார். அவரை அனைவரும் பிரம்மா என்கிறார்கள். நீங்கள் அனைவரும் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள். நமக்கு சிவபாபாவிடமிருந்து சொத்து கிடைக்கிறது என அறிகிறீர்கள். அனைவருக்கும் தந்தையாகிய அவர் சொத்தை வழங்குவதற்காக வந்திருக்கிறார். அப்பா சுகத்தின் சொத்தைக் கொடுக்கிறார். பின் அரை கல்பத்திற்கு பிறகு இராவணன் துக்கத்தின் சாபம் கொடுக்கிறான். பக்தி மார்கத்தில் பகவானை தேடுவதற்காக அலைந்து ஏமாறுகிறார்கள். யாருக்கும் கிடைக்கவில்லை. தாயும் நீயே தந்தையும் நீயே...... என பாரதவாசிகள் பாடுகிறார்கள். தாங்கள் வரும் போது தாங்கள் ஒருவர் மட்டுமே. எங்களுக்கு வேறு யாரும் கிடையாது என்று கூறுகிறார்கள். வேறு யார் மீதும் நாங்கள் பற்று வைக்க மாட்டோம். எங்களுக்கு சிவபாபா ஒருவரே என்கின்றனர். இந்த தந்தை ஏழைப் பங்காளன் என நீங்கள் அறிகிறீர்கள். ஏழையை செல்வந்தராக மாற்றக் கூடியவர் கூழாங்கல்லை வைரம் போன்று மாற்றக் கூடியவர். அதாவது கலியுக தூய்மை யிழந்த ஏழைகளை சத்யுகத்தின் கிரீடம் அணிந்தவர்களாக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கிறார். இங்கே நாம் பாப்தாதாவிடம் வந்திருக்கிறோம் என குழந்தை கள் அறிகிறீர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். சிவனுடைய ஆத்மாவும் இவருக்குள் இருக்கிறது. பிரம்மாவின் ஆத்மாவும் இருக்கிறது. இருவரும் இருக்கிறார்கள். அல்லவா? ஒன்று ஆத்மா. இன்னொன்று பரமாத்மா ஆகும். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவை விட்டு பிரிந்து நீண்ட காலம்...... என பாடப்படுகிறது. முதல் நம்பரில் சந்திக்கக் கூடியவர்கள் ஆத்மாக்களாகிய நீங்களே. அதாவது பரமாத்மா தந்தையை சந்திக்கக் கூடிய ஆத்மாக் களே. அவரை ஓ, கடவுளே தந்தையே என அழைக்கிறார்கள். நீங்கள் அவருடைய குழந்தைகளாகி விட்டீர்கள். தந்தையிடமிருந்து நிச்சயம் சொத்து கிடைக்கிறது. பாரதம் கிரீடம் அணிந்ததாக இருந்தது. இப்போது அது எவ்வளவு ஏழையாகி விட்டது என்று பாபா கூறுகின்றார். இப்போது நான் மீண்டும் குழந்தைகளாகிய உங்களை கிரீடம் உடையவராக மாற்ற வந்திருக்கிறேன். நீங்கள் டபுள் கிரீடம் உடையவராக மாறுகிறீர்கள். ஒன்று தூய்மையின் கிரீடம் ஆகும். அதில் ஒளியைக் காண்பிக்கிறீர்கள். இன்னொன்று ரத்தினங்கள் பதித்த கிரீடம் ஆகும். எனவே முதன் முதலில் பாப்தாதா இணைந்திருக் கிறார்கள் என்ற ஆழமான ரகசியத்தை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். இவர் பகவான் கிடையாது. மனிதனை பகவான் என்று கூற முடியாது. நிராகாரமானவரை பகவான் என்று அழைக் கிறோம். அவர் தந்தை சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர். அங்கே நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் வசிக்கிறீர்கள். அதற்கு நிர்வாணதாமம் மற்றும் சப்தத்திலிருந்து அப்பாற்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. பிறகு ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கே சரீரத்தை அணிந்து நடிப்பை நடிக்கிறீர்கள். அரை கல்பம் சுகத்தின் நடிப்பும் அரை கல்பம் துக்கத்தின் நடிப்பும் நடிக்கிறீர்கள். துக்கம் முடியும் போது நான் வருகிறேன் என்று பாபா கூறுகின்றார். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தைப் பற்றி பாபா முரளியில் மிகவும் நன்றாக புரிய வைத்திருக்கிறார். அந்த முரளியை குழந்தைகள் படிக்க வேண்டும். இங்கே நீங்கள் பட்டிக்காக வருகிறீர்கள். இங்கே வெளி நினைவுகள் எதுவும் வரக் கூடாது. இங்கே தாய் தந்தை மற்றும் குழந்தைகள். மேலும் இங்கே சூத்திர சம்பிரதாயம் கிடையாது. யார் பிராமணர்கள் கிடையாதோ அவர்களுக்கு சூத்திரன் என்று கூறப்படுகிறது. அவர்களுடைய சங்கம் இங்கே கிடையாது. இங்கே பிராமணர்களின் சங்கம் தான் இருக்கிறது. சிவபாபா பிரம்மா மூலமாக நம்மை நரகத்திலிருந்து சொர்க்க இராஜ்யத்தின் அதிபதியாக மாற்ற வந்திருக்கிறார் என பிராமண குழந்தைகள் அறிகிறார்கள். இப்போது நாம் அதிபதி கிடையாது. ஏனென்றால் நாம் அழுக்காக இருக்கிறோம். நாம் தூய்மையாக இருந்தோம். பிறகு 84ன் சக்கரத்தை சுழற்றி சதோ, ரஜோ தமோவில் வந்துள்ளோம். ஏணிப்படியில் 84 பிறவிகளின் கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. தந்தை உட்கார்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். எந்த குழந்தைகளை முதன் முதலில் சந்திக்கிறாரோ அவர்கள் தான் முதன் முதலில் சத்யுகத்தில் வர வேண்டும். நீங்கள் 84 பிறவி எடுத்திருக்கிறீர்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் அனைத்து ஞானமும் ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. அவரே மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறார். நிச்சயம் விதையில் தான் இந்த மரம் எப்படி உற்பத்தியாகி வளர்ந்து அழிகிறது என்ற ஞானம் இருக்கும். இதை பாபா தான் புரிய வைக்கிறார். பாரதவாசிகளாகிய நாம் ஏழைகளாகி இருக்கிறோம் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். தேவி தேவதையாக இருந்த போது எவ்வளவு பணக்காரர்களாக இருந்தீர்கள். வைரங்களோடு விளையாடினீர்கள். வைரங்களின் மாளிகையில் இருந்தீர்கள். இப்போது நீங்கள் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதை பாபா நினைவு படுத்துகிறார். ஓ, பதீத பாவனா, ஏழை பங்காளன், பாபா வாருங்கள் என அழைக்கிறார்கள். ஏழைகளாகிய எங்களை மீண்டும் சொர்க்கத்திற்கு அதிபதியாக்குங்கள். சொர்க்கத்தில் ஆழ்ந்த சுகம் இருந்தது. இப்போது அளவற்ற துக்கம் இருக்கிறது. இச்சமயம் அனைவரும் முழுமையாக தூய்மையை இழந்து விட்டனர் என குழந்தைகள் அறிகிறீர்கள். இப்போது கலியுகத்தின் முடிவாகும். பிறகு சத்யுகம் வர வேண்டும். முதலில் பாரதத்தில் ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்போது அது மறைந்து போய்விட்டது. மற்ற அனைவரும் தங்களை ஹிந்து என கூறிக் கொள்கிறார்கள். இச்சமயம் கிறிஸ்தவர்கள் பெருகி விட்டார்கள். ஏனென்றால் இந்து தர்மத்தினர் பலர் மாறிவிட்டனர். தேவி தேவதைகளாகிய உங்களின் உண்மையான செயல் உயர்ந்ததாக இருந்தது. நீங்கள் தூய்மையான இல்லற மார்கத்தினராக இருந்தீர்கள். இப்போது இராவணனின் இராஜ்யத்தில் தூய்மையற்ற இல்லற வாசிகளாக மாறி விட்டீர்கள். ஆகவே துக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறீர் கள். சத்யுகத்திற்கு சிவாலயம் என்று பெயர். சிவபாபா ஸ்தாபனை செய்த சொர்க்கம். நான் வந்து குழந்தைகளாகிய உங்களை சூத்திரனிலிருந்து பிராமணனாக மாற்றி சூரிய வம்ச, சந்திர வம்ச இராஜ்யத்தின் சொத்தை அளிக்கிறேன் என பாபா கூறுகின்றார். இவர் பாப்தாதா ஆவார். இவர்களை மறக்காதீர்கள். சிவபாபா பிரம்மா மூலமாக நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக்குகின்றார். ஏனென்றால் பதீத ஆத்மா தூய்மையாகாத வரை முக்தி தாமத்திற்குப் போக முடியாது. இப்போது நான் வந்து உங்களுக்கு தூய்மையாவதற்கான வழியைக் காண்பிக்கிறேன் என பாபா கூறுகின்றார். நான் உங்களை பாக்யசா-யாக சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றி விட்டு சென்றேன். உண்மையில் உங்களுக்கு நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தோம் என்ற நினைவு வந்திருக்கிறது. அச்சமயம் நாம் மிகச் சிலரே இருந்தோம். இப்போது எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் 9 லட்சம் இருக்கிறார்கள். எனவே நான் வந்து பிரம்மா மூலமாக சொர்க்கத்தை ஸ்தாபனையும் சங்கர் மூலமாக அழிக்கவும் செய்கிறேன் என பாபா கூறுகிறார். போன கல்பத்தைப் போன்று அனைவரும் ஏற்பாடு களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை அணுகுண்டுகளை உருவாக்கி இருக்கிறார்கள். 5000 வருடங்களுக்கு முன்பு கூட இந்த மகாபாரத போர் நடந்தது. பகவான் வந்து இராஜ யோகத்தைக் கற்பித்து மனிதனை நரனிலிருந்து நாராயணனாக மாற்றினார். எனவே நிச்சயம் கலியுக பழைய உலகத்தின் வினாசம் நடக்க வேண்டும். மூங்கில் காடு முழுவதும் தீப்பற்றி எரியும். இல்லை யென்றால் வினாசம் எப்படி நடக்கும்? தற்காலத்தில் அணுகுண்டுகளில் நெருப்பும் நிரப்புகிறார்கள். ஏவுகணை மழை, பூகம்பம் போன்ற அனைத்தும் ஏற்படும். அப்போது தான் வினாசம் நடக்கும். பழைய உலகின் அழிவு, புதிய உலகின் ஸ்தாபனை நடக்கிறது. இது சங்கமயுகம் ஆகும். இராவண இராஜ்யம் அழியட்டும். இராம இராஜ்யம் வாழ்க ! புது உலகில் கிருஷ்ணரின் இராஜ்யம் இருந்தது. லஷ்மி நாராயணனுக்கு பதிலாக கிருஷ்ணரின் பெயரை எடுக்கிறார்கள். ஏனென்றால் கிருஷ்ணர் அழகான, அனைவருக்கும் அன்பான பிள்ளையாவார். மனிதர்களுக்குத் தெரியவில்லை அல்லவா ! கிருஷ்ணர் தனி இராஜ்யத்தை சார்ந்தவர், ராதை தனி இராஜ்யத்தைச் சார்ந்தவர். பாரதம் கிரீடம் உடையதாக இருந்தது. இப்போது ஏழையாகி விட்டது. மீண்டும் தந்தை வந்து கிரீடம் உடையதாக மாற்றுகிறார். தூய்மையாகுங்கள். மேலும் என்னை நினைத்தால் தான் சதோபிரதானம் ஆவீர்கள் என்று இப்போது பாபா கூறுகிறார். யார் சேவை செய்து தனக்குச் சமமாக மாற்றுவார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். டபுள் கிரீடம் உடையவர் ஆவார்கள். சத்யுகத்தில் ராஜா ராணி மற்றும் பிரஜை அனைவரும் தூய்மையாக இருக்கிறார்கள். இப்போது மக்கள் ஆட்சியாகத்தான் இருக்கிறது. இரண்டு கிரீடமும் இல்லை. இது போன்ற நிலை ஏற்படும் போது தான் நான் வருகிறேன் என்று பாபா கூறுகின்றார். இப்போது நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். நான் தான் பதீத பாவனன். இப்போது நீங்கள் என்னை நினைவு செய்தால் உங்களுடைய ஆத்மாவில் இருக்கும் துரு நீங்கிவிடும். பிறகு சதோபிரதானமாக மாறிவிடுவார்கள். இப்போது கருப்பிலிருந்து அழகாக மாற வேண்டும். தங்கம் துரு பிடிப்பதால் கருப்பாகி விடுகிறது. இப்போது துருவை நீக்க வேண்டும். நீங்கள் காமசிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டீர்கள். இப்போது ஞான சிதையில் அமர்ந்து அனைத்திலிருந்தும் பற்றுதலை நீக்குங்கள் என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். நீங்கள் மணவாளனாகிய என் ஒருவனின் மணப்பெண்கள். பக்தர்கள் அனைவரும் பகவானை நினைக்கிறார்கள். சத்யுகம் திரேதாவில் பக்தி கிடையாது. அங்கே ஞானத்தின் பலன் கிடைக்கிறது. தந்தை வந்து ஞானத்தினால் இரவை பகலாக மாற்றுகிறார். சாஸ்திரங்கள் படிப்பதால் பகல் வராது. அது பக்தியின் பாடமாகும். ஞானக் கடல் பதீத பாவனர் ஒரு தந்தை தான். அவர் வந்து சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மேலும் யோகத்தைக் கற்பிக்கின்றார். ஈஸ்வரனுடன் யோகம் வைக்கக் கூடியவர்கள் யோக யோகேஷ்வரராகவும் பிறகு ராஜ ராஜேஸ்வரராகவும், ராஜ ராஜேஸ்வரியாகவும் மாறுகிறார்கள். நீங்கள் ஈஸ்வரன் மூலமாக ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக மாறுகிறீர்கள். யார் தூய்மையான ராஜக்களாக இருந்தார்களோ அவர்களே பதீதமாகிறார்கள். தாங்களே பூஜைக்குரியவராகவும் பிறகு தாங்களே பூஜாரியகாவும் மாறுகிறீர்கள். இப்போது எவ்வளவு முடியுமோ நினைவு யாத்திரையில் இருங்கள். எப்படி பிரியதர்ஷினி பிரியதர்ஷனை நினைக்கிறார்களோ அவ்வாறு நினையுங்கள். குமாரிக்கு நிச்சயதார்த்த மான ஒருவருக்கொருவரை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது இந்த பிரியதர்ஷனுக்கு நிறைய பிரிய தர்ஷினிகள் பக்திமார்கத்தில் இருக்கிறார்கள். ஓ, பகவானே ! துக்கத்தை நீக்கி சுகம் அளியுங்கள் என அனைவரும் துக்கத்தில் தந்தையை நினைக்கிறார்கள். இங்கேயோ அமைதியும் இல்லை, சுகமும் இல்லை. சத்யுகத்தில் இரண்டும் இருக்கின்றது.

ஆத்மாக்களாகிய நாம் எப்படி 84 பிறவிகளை நடிக்கிறோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பிராமணன், தேவதை, சத்திரியர், வைசியர், சூத்திரன் ஆகிறார்கள். 84ன் ஏணிப்படி புத்தியில் இருக்கிறது அல்லவா. இப்போது எவ்வளவு முடியுமோ தந்தையை நினைத்தால் பாவங்கள் விலகிப் போகும். கர்மங்களை செய்துக் கொண்டிருந்தாலும் புத்தியில் பாபாவின் நினைவு இருக்க வேண்டும். பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைக்க வேண்டும். நினைவினால் தான் பாவங்கள் விலகிக் கொண்டே போகும். நினைவு செய்ய செய்ய தூய்மையின் ஒளி வந்துக் கொண்டே இருக்கும். துரு நீங்கிக் கொண்டே இருக்கும். குழந்தைகளால் எவ்வளவு முடியுமோ நேரம் ஒதுக்கி நினைப்பதற்கு வழி செய்ய வேண்டும். அதிகாலையில் நேரம் நன்கு கிடைக்கிறது. இந்த முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் இருங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இது கடைசி பிறவி. தூய்மையாகுங்கள். காமச்சிதையில் விழாதீர்கள். இப்போது நீங்கள் ஞான சிதையில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த படிப்பு மிகவும் உயர்ந்தது. இதில் தங்க பாத்திரம் வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதால் தங்க பாத்திரம் ஆகிறீர்கள். நினைவு மறப்பதால் இரும்பு பாத்திரம் ஆகிவிடுகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதால் சொர்க்கத்திற்கு அதிபதியாவீர்கள். இது மிகவும் எளிதாகும். இதில் தூய்மை தான் முக்கியம். நினைவினால் தான் தூய்மையாக மாறுவீர்கள். மேலும் சிருஷ்டி சக்கரத்தை நினைவு செய்வதால் சொர்க்கத்திற்கு அதிபதியாகலாம். நீங்கள் வீடு வாசலை துறக்க வேண்டியதில்லை. இல்லற வாசத்தில் இருக்க வேண்டும். நீங்கள் 63 பிறவிகளாக பதீத உலகத்தில் இருக்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போது சிவாலயம் ! அமர உலகத்திற்குச் செலவதற்காக நீங்கள் இந்த ஒரு பிறவி தூய்மையாக இருந்தால் என்ன ஆகி விடப்போகிறது? என்று பாபா கூறுகின்றார். நிறைய வருமானம் கிடைக்கும். 5 விகாரங்களை வெற்றி அடைய வேண்டும். அப்போது தான் உலகத்தை வென்றவர் ஆகலாம். இல்லை என்றால் பதவியை அடைய முடியாது. அனைவரும் தான் இறக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். இது கடைசி பிறவி. பிறகு நீங்கள் சென்று புது உலகில் ராஜ்ஜியம் செய்வீர்கள். வைர வைடூரியங்களின் சுரங்கங்கள் நிரம்பிப் போகும். அங்கே நீங்கள் வைர வைடூரியங் களோடு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட தந்தையினுடையவராக ஆகிய பிறகு அவருடைய வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா?. ஸ்ரீமத்தினால் தான் நீங்கள் சிரேஷ்ட மானவர்களாக மாறுவீர்கள். இராவணனின் வழிப்படி நடப்பதால் நீங்கள் தாழ்ந்தவர்களாகி விடுவீர்கள். இப்போது பாபாவின் வழிப்படி நடந்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக வேண்டும். தந்தையை நினைக்க வேண்டும். வேறு எந்த துன்பமும் பாபா கொடுப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் நிறைய ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். இப்போது தந்தையை மட்டும் நினையுங்கள். மேலும் சிருஷ்டி சக்கரத்தை நினையுங்கள். சுயதரிசன சக்கரதாரி ஆகினால் 21 பிறவிகளுக்கு சக்கரவர்த்தி ராஜா ஆகலாம். பல முறை நீங்கள் ராஜ்ஜியத்தை அடைந்திருக்கிறீர்கள். இழந்தும் இருக்கிறீர்கள். அரை கல்பம் சுகம், அரை கல்பம் துக்கம். நான் கல்பம் கல்பமாக சங்கமத்தில் வருகிறேன் என்று பாபா கூறுகின்றார். உங்களை சுக உலகிற்கு அதிபதியாக மாற்றுகிறேன். இப்போது உங்களுக்கு நாம் எப்படி சக்கரத்தில் சுழல்கிறோம் என்ற நினைவு வந்திருக்கிறது. இந்த சக்கரத்தை புத்தியில் வைக்க வேண்டும். பாபா ஞானக் கடல் ஆவார். இங்கே நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு முன்பு இருக்கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் பிரஜா பிதா பிரம்மா மூலமாக உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். எனவே இப்போது வினாசம் நடப்பதற்கு முன்பாக தந்தையை நினையுங்கள். தூய்மையாகுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நிரந்தரமாக தந்தையின் நினைவில் இருப்பதற்கு புத்தியை தங்கப் பாத்திரமாக மாற்ற வேண்டும். காரியங்களை செய்து கொண்டிருந்தாலும் பாபாவின் நினைவு இருக்க வேண்டும். நினைவின் மூலம் தான் தூய்மையின் ஒளி வரும்.

2. முரளியை ஒரு போதும் தவற விடக் கூடாது. நாடகத்தின் ரகசியத்தை சரியான விதத்தில் புரிந்துக் கொள்ள வேண்டும். பட்டியில் சிறிதும் வெளி உலக நினைவுகள் வரக் கூடாது.

வரதானம்:

தன் மீது பாப்தாதாவை அர்பணம் செய்ய வைக்கக் கூடிய

தியாக மூர்த்தி, நிச்சயபுத்தியுடையவர் ஆகுக.
பாபாவை அடைந்த நான் அனைத்தும் அடைந்து விட்டேன், இந்த ஆத்மீக குஷி மற்றும் நˆôவில் அனைத்தையும் தியாகம் செய்யக் கூடிய ஞான சொரூபம், நிச்சயபுத்தியுடைய குழந்தைகள் பாபாவின் மூலம் குஷி, அமைதி மற்றும் சுகத்தை அனுபவம் செய்கின்றார்களோ, உலக மரியா தையை பொருட்படுத்தாமல், சதா ஒவ்வொரு அடியும் முன்னேறிக்கொண்டே செல்கிறார்கள். அவர்களுக்கு உலகத்திலுள்ள அனைத்துமே ஒன்றுமே இல்லாததாக, சாரமற்றதாக அனுபவமாகிறது. அதுபோல தியாக மூர்த்தி, நிச்சயபுத்தியுடைய குழந்தைகள் மீது பாப்தாதா தனது அனைத்து செல்வங்கள் உட்பட அர்ப்பணம் செய்கிறார். எவ்வாறு குழந்தைகள் நான் உன்னுடையவன் என்ற எண்ணத்தை கொண்டு வருகிறார்களோ, அதுபோல எது பாபாவினுடையதோ, அவை அனைத்தும் உங்களுடையது என்று பாபாவும் கூட சொல்கிறார்.

சுலோகன்:

யார் தனது ஒவ்வொரு எண்ணம் மற்றும் கர்மத்தின் மூலம் பாபாவின் அன்பினுடைய வைப்ரேஷனை பரப்புகிறார்களோ, அவர்கள் தான் சகஜயோகிகள் ஆவார்.