01.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபா மற்றும் குழந்தைகளுடைய செயலில் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதை அறிந்து கொள்ளுங்கள், பாபா குழந்தைகளாகிய உங்களோடு விளையாட முடியும், சாப்பிட முடியாது.

 

கேள்வி:

சத்தியமான சேர்க்கை உயர்த்தும், தீய நட்பு (தொடர்பு) மூழ்கடித்துவிடும் இதனுடைய அர்த்தம் என்ன?

 

பதில்:

நீங்கள் இப்போது சத்தியமானவரோடு சகவாசம் (தொடர்பு) வைக்கின்றீர்கள் அதாவது பாபாவோடு புத்தியோகத்தை ஈடுபடுத்துகிறீர்கள் எனும்போது கரை சேர்ந்துவிடுகிறீர்கள். பிறகு மெது-மெதுவாக தீய நட்பில் அதாவது தேகத்தின் தொடர்பில் வருகின்றீர்கள் எனும்போது இறங்கிக் கொண்டே செல்கின்றீர்கள். ஏனென்றால் சேர்க்கையின் நிறம் (தோஷம்) ஏற்பட்டுவிடுகிறது ஆகையினால் தான் சத்தியமான நட்பு உயர்த்தும், தீய நட்பு தாழ்த்தும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து பாபாவினுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் அதாவது பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் பாபாவிற்கு சமமாக தூய்மையாக ஆகிவிடுவீர்கள்.

 

ஓம் சாந்தி.

இப்போது குழந்தைகளுக்கு இரண்டு வகுப்புகளாகி விட்டது. இது நல்லதாகும், ஒன்று நினைவின் யாத்திரை, அதன் மூலம் பாவம் அழிகிறது, ஆத்மா தூய்மையாக ஆகிவிடுகிறது மற்றும் இன்னுமொரு வகுப்பு ஞானத்தினுடையதாகும். ஞானமும் சகஜமானதாகும். எந்த கஷ்டமும் இல்லை. உங்களுடைய சென்டரில் இருப்பதற்கும் மற்றும் இங்கே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கே பாபா அமர்ந்திருக்கின்றார் மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இது பாபா மற்றும் குழந்தைகளுடைய சந்திப்பாகும் மற்றும் உங்களுடைய சென்டர்களில் குழந்தைகள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்கிறார்கள், ஆகையினால் குழந்தைகள் நேரடியாக வருகிறார்கள். அவர்கள் நினைவு செய்கிறார்கள் ஆனால் இங்கே (மதுபன்னில்) நீங்கள் நேரடியாக பார்க்கின்றீர்கள் - உங்களுடன் தான் அமருவேன், உங்களுடன் தான் பேசுவேன்....... என்று கூறுகின்றார்கள். பாபா மற்றும் குழந்தைகளுடைய செயல்களில் வித்தியாசம் இருக்கிறது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இதில் பாபாவினுடைய நடிப்பு என்ன மற்றும் இரதத்தினுடைய நடிப்பு என்ன? என்று சிந்தனை செய்யுங்கள். பாபா ரதத்தின் மூலம் விளையாட முடியுமா? ஆமாம் விளையாட முடியும். உங்களுடன் தான் அமருவேன் என்று சொல்வது போல் உங்களுடன் தான் சாப்பிடுவேன்........ ஏனென்றால் அவர் சாப்பிடுவதில்லை. குழந்தைகளோடு விளையாடுவது என்பதை பாபா அவரே புரிந்து கொள்கிறார், இருவரும் விளையாடுகிறார்கள். இங்கேயே தான் அனைத்தையும் உங்களோடு செய்கின்றார் ஏனென்றால் அவர் சுப்ரீம் டீச்சராகவும் இருக்கின்றார். குழந்தைகளை மகிழ்விப்பது டீச்சருடைய வேலையாகும் உள்ளரங்க விளையாட்டுகள் இருக்கிறது அல்லவா. இன்றைக்கு நிறைய விளையாட்டுகள் வித-விதமாக வந்துவிட்டன. அனைத்திலும் புகழ்பெற்றது சொக்கட்டான் விளையாட்டாகும், இதைப்பற்றி மகாபாரதத்தில் வர்ணனை இருக்கிறது. ஆனால் அது சூது ரூபத்தில் இருக்கிறது. சூது விளையாடுபவர்களை பிடிக்கிறார்கள். இவையனைத்தும் பக்தி மார்கத்தின் புத்தகங்களிலிருந்து வெளிவந்த விஷயங்களாகும்.

 

இந்த விரதங்கள் நியமங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள், உணவும் சாப்பிடுவதில்லை தண்ணீரும் குடிப்பதில்லை. பக்தி மார்கத்தில் பலன் கிடைத்தாலும் அது அல்ப காலத்திற்கானதாகும். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் புரிய வைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் நிறைய ஏமாற்றம் அடைகிறார்கள். ஞான மார்க்கம் சுகத்திற்கான மார்க்கமாகும். நாம் சுகத்திற்கான ஆஸ்தியை பாபாவிடமிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்கத்தில் கூட ஒருவரை நினைவு செய்யப்படுகிறது. ஒருவருடைய பூஜை கூட அவிபச்சாரி பூஜையாகும், அது கூட நல்லதாகும். பக்தியும் கூட சதோ-ரஜோ-தமோ என்று இருக்கிறது. அனைவரையும்விட உயர்ந்ததிலும் உயர்ந்த சதோகுணம் சிவபாபாவின் பக்தியாகும். சிவபாபா தான் வந்து குழந்தைகள் அனைவரையும் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். யார் அனைத்திலும் அதிகமாக குழந்தைகளுக்கு சேவை செய்கிறாரோ, தூய்மையாக்குகிறாரோ அவரை அழைக்கவும் செய்கிறார்கள். பிறகு கல் முள்ளிலெல்லாம் இருக்கிறார் என்று சொல்வது நிந்தனை ஆகிறது அல்லவா! எல்லையற்ற தந்தையின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைத்தது, மீண்டும் கண்டிப்பாக, கிடைக்க வேண்டும். நீங்கள் ஞானத்தைத் தனியாகவும், பக்தியை தனியாகவும் புரிந்து கொள்கிறீர்கள். இராம ராஜ்யம் மற்றும் இராவண ராஜ்யம் எப்படி நடக்கிறது என்பதையும் நீங்கள் வரிசைகிரமமான முயற்சியின்படி தெரிந்துள்ளீர்கள் ஆகையினால் நோட்டீஸ் போன்றவற்றையும் அச்சடித்துக் கொண்டே இருக்கின்றீர்கள். ஏனென்றால் மனிதர்களுக்கு உண்மையான ஞானமும் வேண்டும் அல்லவா. உங்களுடையது அனைத்தும் உண்மையாகும்.

 

குழந்தைகள் சேவை செய்ய வேண்டும். சேவைகள் நிறைய இருக்கின்றன. இந்த பேட்ஜ் சேவைக்கு மிகவும் நல்லதாகும். அனைத்திலும் மிகவும் நல்ல சாஸ்திரம் (கல்வி) இந்த பேட்ஜ் ஆகும். இது ஞானத்தின் விஷயங்களாகும், இதில் புரிய வைக்க வேண்டியுள்ளது, இந்த நினைவு யாத்திரை தனிப் பட்டதாகும். இதனை தொடர்ச்சியாக ஜபிப்பது என்று சொல்லப்படுகிறது. ஜபிக்க வேண்டியது எதுவுமில்லை. உள்ளுக்குள் கூட சிவ சிவ என்று சொல்ல வேண்டியதில்லை. பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும் அவ்வளவு தான். சிவபாபா தந்தை, நாம் அவருடைய குழந்தைகளாக இருக்கின்றோம் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். அவர் தான் நேரில் வந்து, நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவனாக இருக்கின்றேன், நான் கல்பம்-கல்பமாக தூய்மையாக்க வருகின்றேன் என்று கூறுகின்றார். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டுவிட்டு தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மையாக ஆகிவிடுவீர்கள். என்னுடைய நடிப்பே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதாகும். இது தான் புத்தியோகம் அல்லது பாபாவோடு சகவாசம் வைப்பதாகும். சேர்க்கையின் நிறம் நம்மீது ஏற்படுகிறது. சத்தியமான சேர்க்கை உயர்த்தும், கெட்ட சகவாசம் தாழ்த்தும்.......... என்று சொல்லப்படுகிறது. பாபாவோடு புத்தியோகத்தை ஈடுபடுத்துவதின் மூலம் நீங்கள் கரை சேர்ந்து விடுகிறீர்கள். பிறகு இறங்குவதை ஆரம்பித்து விடுகிறீர்கள். அவருடைய மகிமை சத்தியமானவரோடு சேர்க்கை வைக்கும்போது உயருவோம்........... இதனுடைய அர்த்தத்தைக் கூட பக்தி மார்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிந்திருக்கவில்லை. நம்முடைய ஆத்மா தூய்மையற்றதாக இருக்கிறது, அந்த தூய்மையானவரோடு புத்தியின் தொடர்பை ஈடுபடுத்துவதின் மூலம் தூய்மையாக ஆகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா பரமாத்மா தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா தூய்மையாக ஆகும்போது தான் சரீரமும் தூய்மை ஆகும், உண்மையான தங்கமாக ஆகும். இது நினைவு யாத்திரையாகும். யோக அக்னியின் மூலம் விகர்மங்கள் பஸ்மம் ஆகிறது, அழுக்கு நீங்கிவிடுகிறது. சத்யுக புதிய உலகத்தில் நாம் தூய்மையாக சம்பூரண நிர்விகாரிகளாக இருந்தோம், 16 கலைகள் சம்பூரணமாகவும் இருந்தோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது எந்த கலையும் இல்லை, இதற்குத் தான் இராகுவின் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. முழு உலகமும், குறிப்பாக பாரதத்தின் மீது இராகுவின் கிரகணம் பிடித்திருக்கிறது. உடலும் கருப்பாக இருக்கிறது, இந்த கண்களின் மூலம் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ அனைத்தும் கருப்பாக இருக்கிறது. இராஜா ராணி எப்படி இருக்கிறார்களோ அப்படி பிரஜைகளும் ஆவர். ஷியாம் சுந்தரின் அர்த்தத்தைக் கூட யாரும் தெரிந்திருக்கவில்லை. மனிதர்களுக்கு எத்தனை பெயர்கள் வைத்து விட்டார்கள். இப்போது பாபா வந்து அர்த்தத்தைப் புரிய வைத்திருக்கின்றார். நீங்கள் தான் முதலில் சுந்தராகவும் பிறகு ஷியாமாகவும் ஆகின்றீர்கள். ஞான சிதையில் அமருவதின் மூலம் நீங்கள் சுந்தராக(தூய்மையாக) ஆகிவிடுகிறீர்கள் இருந்தாலும் இப்படி ஆகத் தான் வேண்டும் ஷியாமிருந்து சுந்தராகவும், சுந்தரிலிருந்து ஷியாமாகவும் ஆக வேண்டும். அதனுடைய அர்த்தத்தை பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார். ஆத்மாக்களாகிய நாம் ஒரு பாபாவைத் தான் நினைவு செய்கிறோம். நாம் புள்ளியாக இருக்கிறோம் என்பது புத்தியில் வந்துவிட்டது. இதைத் தான் ஆத்மாவை உணர்தல் என்று சொல்லப்படுகிறது. பிறகு உள் நோக்கு முகமாக பார்க்க வேண்டும். இவை புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். ஆத்மாவைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா, இது என்னுடைய சரீரமாகும். நாம் இங்கே சரீரத்தில் வந்து நடிப்பை நடிக்கிறோம். நாடகத்தின் திட்டப்படி நாம் முதல்-முதலில் வருகின்றோம். அனைவரும் ஆத்மாக்கள் தான் - சிலருக்குள் எவ்வளவு நடிப்பு, சிலருக்குள் எவ்வளவு நடிப்பு என்று இருக்கிறது. இது மிகப்பெரிய எல்லையற்ற நாடகமாகும். இதில் எப்படி வரிசைகிரமமாக வருகிறார்கள், எப்படி நடிப்பை நடிக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முதல்-முதலில் தேவி-தேவதா வம்சமாகும். இந்த ஞானம் கூட உங்களுக்கு இப்போது இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் இருக்கிறது. பிறகு இது எதுவும் நினைவிருக்காது. பாபா அவரே கூறுகின்றார் இந்த ஞானம் மறைந்து விடுகிறது. தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை எப்படி ஆனது என்பது யாருக்குமே தெரியவில்லை. சித்திரங்கள் இருக்கின்றன ஆனால் அது எப்படி ஸ்தாபனை ஆனது, என்பது யாருக்குமே தெரியவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும் நீங்கள் பிறகு மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக மாற்றுகிறீர்கள். நிறைய பேர் வந்துவிட்டால் பிறகு ஒலிப்பெருக்கியும் வைக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக ஏதாவது யுக்தி உருவாகும். மிகப்பெரிய ஹால் கூட தேவைப்படும். கல்பத்திற்கு முன் என்ன நடந்ததோ அது மீண்டும் நடக்கும். இது புரிய வருகிறது. குழந்தைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். திருமணங்களுக்கு மண்டபங்கள் போன்றவற்றை கட்டுபவர்களுக்கும் கூட புரிய வையுங்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். இங்கேயும் கூட திருமணங்களுக்கு தர்ம சாலை போன்றவைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா! யாராவது தங்களுடைய குலத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்றால் உடனே புரிந்து கொள்வார்கள், யார் இந்தக் குலத்தை சேர்ந்தவர்கள் இல்லையோ அவர்கள் தடையை ஏற்படுத்துவார்கள். யார் இந்தக் குலத்தை சேர்ந்தவர்களோ அவர்கள், இவர்கள் சத்தியத்தை தான் சொல்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள், யார் இந்த குலத்தை சேர்ந்தவர்கள் இல்லையோ அவர்கள் சண்டையிடுவார்கள், இந்த வழக்கம் தான் இருந்து வருகிறது என்று சொல்வார்கள். இப்போது தூய்மையற்ற குடும்ப மார்க்கமாகும், பிறகு பாபா தூய்மையாக்க வருகின்றார். நீங்கள் தூய்மைக்காக அழுத்தம் கொடுக்கின்றீர்கள் ஆகையினால் எவ்வளவு தடை ஏற்படுகிறது! ஆஹாகான் இருக்கிறார், அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! போப்பிற்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! போப் வந்து என்ன செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். லட்சக்கணக்கில்-கோடிக்கணக்கில் திருமணங்களை செய்விக்கின்றார், நிறைய திருமணங்கள் நடக்கின்றன. போப் வந்து கங்கணம் கட்டுகின்றார். இதை அவர்கள் மரியாதை என்று புரிந்து கொள்கிறார்கள். திருமணங்களுக்கு மகாத்மாக்களைக் கூட அழைக்கிறார்கள். இன்றைக்கு நிச்சயம் கூட செய்விக்கிறார்கள். காமம் மிகப்பெரிய எதிரி என்று பாபா கூறுகின்றார். இந்த சட்டத்தைக் கொண்டு வருவது சித்தி வீடு போல் கிடையாது, இதில் புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி வேண்டும். போகப்போக மெது-மெதுவாக புரிந்து கொள்வார்கள். ஆதி சனாதன ஹிந்து தர்மத்தை சேர்ந்தவர்களுக்குப் புரிய வையுங்கள். உண்மையில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் இல்லை என்பதை அவர்கள் உடனே புரிந்து கொள்ளலாம். எப்படி நீங்கள் பாபாவின் மூலம் தெரிந்து கொண்டீர்களோ அதுபோல் மற்றவர்களும் புரிந்து கொண்டு வளர்ந்து கொண்டே இருப்பார்கள். இந்த நாற்று நடப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதும் உறுதியான நம்பிக்கையாகும். நீங்கள் பாபாவின் ஸ்ரீமத்படி இந்த தேவதைகளாக ஆகின்றீர்கள். இவர்கள் புதிய உலத்தில் இருக்கக் கூடியவர்களாவர். பாபா சங்கமயுகத்தில் வந்து நம்மை மாற்றுவார் என்பதை முன்னால் தெரிந்திருந்தீர்களா என்ன? கொஞ்சம் கூட தெரியாது. இதைத் தான் உண்மையிலும் உண்மையான புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்போது எந்தளவிற்கு முயற்சி செய்வீர்களோ அந்தளவிற்கு ஆவீர்கள்.

 

ஒவ்வொருவரும் தங்களுடைய மனதிடம் கேட்க வேண்டும். பள்ளியில் எந்த பாடத்தில் அரைகுறையாக இருக்கிறார்களோ அதில் நாம் தோற்றுவிடுவோம் என்று புரிந்து கொள்கிறார்கள். இது கூட பாடசாலை, பள்ளியாகும். கீதை பாடசாலை புகழ் பெற்றதாகும். பிறகு அதனுடைய பெயரை கொஞ்சம்-கொஞ்சம் மாற்றி விட்டார்கள். நீங்கள் உண்மையான கீதை, பொய்யான கீதை என்று நீங்கள் எழுதுகிறீர்கள் அப்போது கோபித்துக் கொள்கிறார்கள். கண்டிப்பாக பிரச்சனை வரும், இதில் பயப்படுவதற்கான விசயம் எதுவும் இல்லை. இன்றைக்கு இது பேஷன் ஆகி விட்டது, பேருந்து போன்றவற்றை எரிக்கிறார்கள், தீ வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். யார் என்ன கற்றுக் கொடுத்தார்களோ, அதைத் தான் கற்கிறார்கள். முன்பை விட அதிகமாக அனைவரும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் மறியல் போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும் கூட ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் ஏற்படுகிறது என்றால் பிறகு வரியைக் கூட அதிகரிக்கிறார்கள். ஒரு நாளைக்கு வங்கி போன்றவை கூட அனைவருடைய பொக்கிஷத்தையும் திறந்துவிடும். எங்கேயாவது அதிகமாக வைத்திருக்கிறார்களா என்று தானியங்கள் போன்றவற்றையும் கூட சோதனை போடுகிறார்கள். இந்த விஷயங்களில் இருந்தெல்லாம் நீங்கள் விடுபட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முக்கியமானது நினைவு யாத்திரையாகும். எனக்கு இந்த விஷயங்களில் எல்லாம் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாபா கூறுகின்றார். என்னுடைய வேலை வழி சொல்வது மட்டுமே ஆகும். அப்போது உங்களுடைய துக்கம் அனைத்தும் விலகிவிடும். இந்த சமயத்தில் உங்களுடைய கர்மங்களின் கணக்கு-வழக்குகள் முடிகிறது. மீதம் இருக்கின்ற வியாதிகள் போன்ற அனைத்தும் வெளியில் வரும். கடைசியில் இருக்கக் கூடிய கர்மங்களின் கணக்கு-வழக்குகள் முடிய வேண்டும். பயப்படக்கூடாது. வியாதியில் கூட மனிதர்களுக்கு பகவானின் நினைவு ஏற்படுத்தப்படுகிறது. நீங்கள் மருத்துவமனைகளுக்கும் கூட சென்று பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகி விடும் என்று ஞானத்தை கொடுங்கள். இந்த பிறவியின் விஷயம் மட்டும் கிடையாது, எதிர்கால 21 பிறவிகளுக்கு ஒருபோதும் நோயுற மாட்டீர்கள் என்று நாங்கள் உத்திரவாதம் கொடுக்கிறோம். ஒரு பாபாவை நினைவு செய்வதின் மூலம் உங்களுடைய ஆயுள் நீண்டதாக இருக்கும். பாரதவாசிகளின் ஆயுள் நீண்டதாக இருந்தது, நோயற்றவர்களாக இருந்தார்கள். உயர்ந்தவர்களாக ஆவதற்காக பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கின்றார். புருஷோத்தமன் என்ற வார்த்தையை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் தான் கல்பம் கல்பமாக அவ்வாறு ஆகின்றீர்கள். இப்படி வேறு யாரும் சொல்ல முடியாது. எனவே இப்படி-இப்படியெல்லாம் நிறைய சேவை செய்யலாம். டாக்டர்களிடம் ஏதாவதொரு சமயத்தை பெற்றுக் கொள்ளலாம். வேலைக்குச் செல்பவர்கள் கூட நிறைய சேவை செய்யலாம். நோயாளிகளிடம் சொல்லுங்கள் எங்களுடைய டாக்டரும் பெரியவர், அழிவற்ற எல்லையற்ற டாக்டராவார். நாம் அவருடையவர்களாக ஆகியுள்ளோம் அதன் மூலம் நாம் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆகின்றோம். ஹெல்த் மினிஸ்டருக்கும் கூட புரிய வையுங்கள், ஆரோக்கியத்திற்காக இவ்வளவு மண்டை உடைத்துக் கொள்கிறீர்கள். சத்யுகத்தில் மனிதர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். அமைதி, சுகம், தூய்மை அனைத்தும் இருந்தது. முழு உலகத்திலும் நீங்கள் தான் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள் ஆவீர்கள். நீங்கள் வழிகாட்டிகளாவீர்கள். பாண்டவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாவீர்கள். இது யாருடைய புத்தியிலும் இருக்காது. முதல்-முதலில் அனைத்திலும் பெரிய உணவு அமைச்சர் சிவபாபா என்று உணவு மந்திரிக்கு புரிய வையுங்கள். சொர்க்கத்தில் ஒருபோதும் தானியங்கள் குறையாத அளவிற்கு தானியங்களைக் கொடுக்கின்றார். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். முழு சக்கரமும் உங்களுடைய புத்தியில் இருக்கிறது ஆகையினால் உங்களை சுயதரிசன சக்கரதாரிகள் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி பாரதம் தன்னிறைவு பெறாததாகஆகிவிட்டது. புத்தியுடையவர் வந்து ஞானத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், இதையும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஒரு பாபாவை துணைவராக்கி உங்களுடன் தான் அமருவேன், நீங்கள் சொல்வதைத் தான் கேட்பேன், உங்களுடன் தான் சாப்பிடுவேன்....... என்ற அனுபவத்தை செய்ய வேண்டும். கெட்ட சகவாசத்தை விட்டு விட்டு சத்தியமானவருடைய சேர்க்கையில் இருக்க வேண்டும்.

 

2) கர்மங்களின் கணக்கு-வழக்கை நினைவு யாத்திரை மற்றும் கர்மத்தை அனுபவிப்பதின் மூலம் முடித்து சம்பூரண தூய்மையாக ஆக வேண்டும். சங்கமயுகத்தில் தங்களை முழுமையாக மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

 

வரதான்:

பிந்து சொரூபத்தில் நிலைத்திருந்து மனம் புத்தியை எதிர்மறையான பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக வைக்கக் கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.

 

எப்படி ஏதாவது பருவகாலம் வருகிறதென்றால் அந்த பருவகாலத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக அதற்கு தகுந்த படி கவனம் வைக்க படுகிறது. மழைகாலங்களில் குடை, ரைன்கோர்ட் போன்றவைகளில் கவனம் வைக்கிறார்கள். குளிர்காலம் வருகிறது என்றால் வெப்பமான ஆடைகளை வைக்கிறார்கள். . அப்படி தற்சமயத்தில் மனம் புத்தியில் எதிர்மறையான உணர்வு மற்றும் உணர்ச்சிகளை ஏற்படுத்துவதற்கான விசேஷ காரியத்தை மாயா செய்து கொண்டிருக்கிறது, ஆகையால் விசேஷமாக பாதுகாப்பு கவசத்தை தனதாக்கிக் கொள்ளுங்கள். இதற்கான எளிய சாதனமாக இருப்பது - ஒரு பிந்து சொரூபத்தில் நிலைத்திருப்பது. ஆச்சர்யம் மற்றும் கேள்விக்குறிக்குப் பதிலாக புள்ளி வைப்பது அதாவது விசேஷ ஆத்மா ஆவது.

 

சுலோகன்:

யார் ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் காரியத்தில் சரி, செய்கிறேன் என்று செய்கிறார்களோ அவர்கள் தான் கட்டளைக்குக் கீழ்படிந்தவர்.

 

ஓம்சாந்தி