01.04.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே ! இந்த கண்களின் மூலம் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ -அவையனைத்தும் அழிந்து போகக் கூடியது, ஆகையினால் இவற்றின் மீது எல்லையற்ற வைராக்கியம் வேண்டும், பாபா உங்களுக்காக புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்"

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுடைய அமைதியில் என்ன இரகசியம் அடங்கியுள்ளது?

 

பதில்:

நீங்கள் அமைதியாக அமரும்போது சாந்திதாமத்தை நினைவு செய்கின்றீர்கள். அமைதி என்றால் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இறப்பது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இங்கே பாபா உங்களுக்கு சத்குருவின் ரூபத்தில் அமைதியில் இருப்பதற்குக் கற்றுக் கொடுக்கின்றார். நீங்கள் அமைதியில் இருந்து தங்களுடைய பாவகர்மங்களை எரிக்கின்றீர்கள். இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஞானம் உங்களுக்கு இருக்கிறது; மற்ற சத்சங்கங்களில் அமைதியில் அமருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு சாந்தி தாமத்தின் ஞானம் இல்லை.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான, செல்லமான ஆன்மீகக் குழந்தைகளுக்காக சிவபாபா பேசிக் கொண்டிருக்கின்றார். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் பேசினார் என்றிருக்கிறது, ஆனால் சிவபாபா பேசினார், கிருஷ்ணரை பாபா என்று சொல்ல முடியாது. இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்று பாரதவாசிகளுக்குத் தெரியும் ஒன்று லௌகீக தந்தை மற்றொருவர் பரலௌகீக தந்தையாவார். பரலௌகீக தந்தையை பரமபிதா என்று அழைக்கிறோம். லௌகீக தந்தையை பரமபிதா என்று சொல்ல முடியாது. உங்களுக்கு லௌகீக தந்தை ஒன்றும் புரிய வைப்பதில்லை. பரலௌகீக தந்தை பரலௌகீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். முதன்-முதலில் நீங்கள் சாந்திதாமம் செல்கின்றீர்கள், அதைத் தான் நீங்கள் முக்திதாமம், சப்தமற்ற உலகம் அல்லது வானப்பிரஸ்தம் என்றும் கூறுகின்றீர்கள். இப்போது பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, இப்போது சாந்தி தாமம் செல்ல வேண்டும். அதை மட்டும் தான் அமைதியின் தூண் என்று சொல்ல முடியும். இங்கே அமர்ந்து கொண்டே முதலில் அமைதியில் அமர வேண்டும். எந்தவொரு சத்சங்கத்திலும் முதன்-முதலில் அமைதியில் அமருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சாந்திதாமத்தின் ஞானம் இல்லை. ஆத்மாக்களாகிய நாம் இந்த பழைய சரீரத்தை விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும், என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் சரீரம் போய்விடும். ஆகையினால் பாபா இப்போது என்ன படிப்பிக்கின்றாரோ, அதை நல்ல விதத்தில் படிக்க வேண்டும். அவர் பரம ஆசிரியராகவும் இருக்கின்றார். சத்கதியை வழங்கும் வள்ளல் குருவாகவும் இருக்கின்றார்,அவருடன் யோகம் செய்ய வேண்டும். இவர் ஒருவரே மூன்று சேவைகளை செய்கின்றார். வேறு எவரும் இந்த மூன்று சேவைகளையும் செய்ய முடியாது. இந்த ஒரு தந்தை அமைதியையும் கற்றுத் தருகின்றார். வாழ்ந்து கொண்டே இறப்பதை அமைதி என்று சொல்லப்படுகிறது. நாம் இப்போது சாந்திதாமம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எதுவரை தூய்மையான ஆத்மாக்களாக ஆகவில்லையோ, அதுவரை யாரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. அனைவரும் செல்லத் தான் வேண்டும், ஆகையினால் பாவ கர்மங்களுக்கு கடைசியில் தண்டனை கிடைக்கிறது, பிறகு பதவியும் கீழானதாக ஆகி விடுகிறது. அடி மற்றும் உதை கூட வாங்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் மாயையிடம் தோல்வி அடைகிறார்கள். பாபா வருவதே மாயையிடம் வெற்றி அடையச் செய்வதற்காக ஆகும். ஆனால் கவனக்குறைவாக பாபாவை நினைவு செய்வதில்லை. இங்கே ஒரு பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட நிறைய அலைகிறார் கள், யாருக்கு தலை வணங்குகிறார்களோ, அவர்களைப் பற்றித் தெரிவதில்லை. பாபா வந்து இவ்வாறு அலைவதிலிருந்து விடுவித்து விடுகின்றார். ஞானம் பகல் என்றும், பக்தி இரவு என்றும் புரிய வைக்கப்படுகிறது. இரவில் தான் ஏமாற்றம் அடைய வேண்டியிருக்கிறது. ஞானத்தின் மூலம் பகல் அதாவது சத்யுகம்-திரேதாவாகும். பக்தி என்றால் இரவு, துவாபர-கலியுகமாகும். இது தான் முழு நாடகத்தின் கால அளவாகும். பாதி நேரம் பகல், பாதி நேரம் இரவாகும். பிரஜாபிதா பிரம்மாகுமார-குமாரிகளின் பகல் மற்றும் இரவாகும். இது எல்லையற்ற விஷயமாகும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சங்கமத்தில் வருகின்றார், ஆகையினால் சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. சிவராத்திரி என்று எதைச் சொல்லப்படுகிறது, என்று மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்களைத் தவிர ஒருவர் கூட சிவராத்திரியின் மகத்துவத்தைத் தெரிந்திருக்கவில்லை ஏனென்றால் இது இடைப்பட்டதாகும். எப்போது இரவு முடிந்து, பகல் ஆரம்பமாகிறதோ, அதைத் தான் புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது. பழைய உலகம் மற்றும் புதிய உலகத்திற்கு இடைப்பட்டதாகும். பாபா வருவதே புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். யுகம்-யுகமாக வருவதில்லை. சத்யுகம்-திரேதாவிற்கு இடையே வருவதையும் சங்கமயுகம் என்று சொல்லிவிட்டார்கள். இது தவறு என்று பாபா கூறுகின்றார்.

 

சிவபாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் வினாசம் ஆகிவிடும், இதை யோக அக்னி என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அனைவரும் பிராமணர்கள் ஆவீர்கள். தூய்மையாவதற்காக யோகம் கற்றுக் கொடுக்கின்றீர்கள். அந்த பிராமணர்கள் காம சிதையில் ஏற்றுகிறார்கள். அந்த பிராமணர் களுக்கும், பிராமணர்களாகிய உங்களுக்கும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் உடல் வழி பிறந்தவர்கள், நீங்கள் வாய்வழியாகப் (பிரம்மாவின் வாய் மூலம் கூறப்பட்ட ஞானம் மூலமாக) பிறந்தவர்கள். ஒவ்வொரு விஷயமும் நல்ல விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் யார் வந்தாலும் அவர்களுக்கு, எல்லையற்ற தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், விகர்மங்கள் வினாசம் ஆகும், மேலும் எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி கிடைக்கும், என்று புரிய வைக்கப்படுகிறது. பிறகு எந்தளவிற்கு தெய்வீக குணங்களை தாரணை செய்வீர்களோ மேலும் செய்ய வைப்பீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். பாபா வருவதே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்கு ஆகும். எனவே நீங்களும் கூட இந்த சேவை செய்ய வேண்டும். அனைவருமே தூய்மையற்றவர்கள் தான். குருமார்கள் யாரையுமே தூய்மையாக மாற்ற முடியாது. பதீத-பாவனன் என்று பெயர் சிவபாபாவினுடையது ஆகும். அவர் வருவது கூட இங்கே ஆகும். எப்போது அனைவரும் முழுமையாக தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்களோ, அப்போது நாடகத்தின் திட்டப்படி, பாபா வருகின்றார். முதன்-முதலில் குழந்தைகளுக்கு அல்லா (தந்தை) புரிய வைக்கின்றார். என்னை நினைவு செய்யுங்கள். அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர், என்று நீங்கள் சொல்கின்றீர்கள் அல்லவா? ஆன்மீகத் தந்தையை தூய்மை ஆக்கக்கூடியவர் என்று சொல்லப்படுகிறது. , பகவான்! அல்லது , தந்தையே! என்று சொல்கிறார்கள். ஆனால் யாருக்கும் அறிமுகம் கிடையாது. இப்போது சங்கமயுகத்தில் இருக்கின்ற உங்களுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர்கள் நரகவாசிகளாவர். நீங்கள் நரகவாசிகள் இல்லை. ஒருவேளை யாராவது தோல்வி அடைகிறார்கள் என்றால் ஒரேயடியாக விழுந்து விடுகிறார்கள். சம்பாதித்த வருமானம் உடனே போய் விடுகிறது. முக்கியமான விஷயம் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆக வேண்டும். இந்த உலகமே விகார உலகமாகும். அது விகாரமற்ற உலகம், புதிய உலகம், அங்கே தேவதைகள் இராஜ்யம் செய்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. முதல்-முதலில் தேவதைகள் தான் அனைவரையும் விட அதிக பிறவிகள் எடுக்கிறார்கள். அதில் கூட முதல்-முதலில் சூரிய வம்சத்தவர்கள், அவர்கள் முதலில் வருகிறார்கள், 21 தலைமுறைக்கு ஆஸ்தி அடைகிறார்கள். எவ்வளவு எல்லையற்ற ஆஸ்தி - தூய்மை-சுகம்- சாந்தி. சத்யுகத்தை முழுமையான சுகதாமம் என்று சொல்லப்படுகிறது. திரேதாவை பாதி எனப்படுகிறது, ஏனென்றால் இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது. கலை குறைவதின் மூலம் ஒளி குறைந்துவிடுகிறது. சந்திரனின் கலை குறைவதின் மூலம் ஒளி குறைந்து விடுகிறது. கடைசியாக மீதி கோடு நிற்கிறது. முற்றிலும் இல்லாமல் போவதில்லை. உங்களுடைய நிலையும் அப்படித் தான் - முற்றிலும் இல்லாமல் போவதில்லை. இதைத் தான் மாவில் உப்பு, (கொஞ்சம்) என்று சொல்லப்படுகிறது.

 

பாபா வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பாகும். இது புத்தியின் மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது. பரமாத்மா எப்போது வருகின்றார்? எப்போது நிறைய ஆத்மாக்கள் அல்லது நிறைய மனிதர்கள் ஆகி விடுகிறார்களோ, அப்போது பரமாத்மா விழாவில் (கூட்டத்தில்) வருகின்றார். ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு ஏன் நடக்கிறது? அந்த சந்திப்பு அழுக்காக ஆவதற்கு. இந்த சமயத்தில் நீங்கள் தோட்டக்காரனின் மூலம் முள்ளிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி ஆகின்றீர்கள்? நினைவு பலத்தின் மூலம். பாபாவை சர்வசக்திவான், என்று சொல்லப்படுகிறது. எப்படி பாபா சர்வசக்திவானாக இருக்கிறாரோ, அதேபோல் இராவணனும் குறைந்த சக்தியுடையவன் இல்லை. பாபா அவரே கூறுகின்றார், மாயை பலம் வாய்ந்தது, கடுமையானதாகும். பாபா நாங்கள் உங்களை நினைவு செய்கின்றோம், மாயை எங்களுடைய நினைவை மறக்கச் செய்கிறது, என்று சொல்கிறார்கள். ஒருவர்-மற்றவருக்கு எதிரியாக ஆகிவிட்டான் அல்லவா. பாபா வந்து மாயையின் மீது வெற்றியடைய வைக்கின்றார், பிறகு மாயை தோல்வியடையச் செய்கிறது. தேவதைகள் மற்றும் அசுரர்களின் யுத்தம் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இது தான் யுத்தமாகும். நீங்கள் பாபாவை நினைவு செய்வதின் மூலம் தேவதையாகின்றீர்கள். மாயை நினைவில் தடையை ஏற்படுத்துகிறது, படிப்பில் தடையை ஏற்படுத்துவதில்லை. நினைவில் தான் தடைகள் ஏற்படுகிறது. அடிக்கடி மாயை மறக்கச் செய்து விடுகிறது. தேக-அபிமானமுடையவர்களாக ஆவதின் மூலம் மாயையின் அறை விழுந்து விடுகிறது. காம வசப்பட்டவர்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளில் சொல்லப்படுகிறார்கள். இந்த இராஜ்யமே இராவண இராஜ்யமாகும். இங்கே கூட தூய்மையாகுங்கள் என்று புரிய வைக்கப்படுகிறது ஆனாலும் தூய்மையாவதே இல்லை. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, விகாரத்தில் செல்லாதீர்கள், முகத்தைக் கருப்பாக்கிக் கொள்ளாதீர்கள். இருந்தாலும் பாபா மாயை தோல்வியடையச் செய்து விட்டது, என்று எழுதுகிறார்கள், அதாவது முகத்தை கருப்பாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். வெண்மை மற்றும் கருப்பு அல்லவா! விகாரிகள் கருப்பாகவும், நிர்விகாரிகள் வெண்மையாகவும் (தூய்மையாக) இருக்கிறார்கள். ஷியாம்-சுந்தரின் அர்த்தம் கூட உங்களைத் தவிர உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. கிருஷ்ணரை ஷியாம்-சுந்தர், என்று சொல்கிறார்கள். பாபா அவர்களுடைய பெயரின் அர்த்தத்தைத் தான் புரிய வைக்கின்றார். சொர்க்கத்தின் முதல் இளவரசராக இருந்தார். அழகில் முதல் நம்பரில் இவர் தேர்ச்சி பெறுகின்றார். பிறகு மறுபிறவி எடுத்து-எடுத்து கீழே இறங்கி-இறங்கி கருப்பாகி விடுகின்றார். எனவே ஷியாம்-சுந்தர், என்று பெயர் வைத்தார்கள். இந்த அர்த்தத்தைக் கூட பாபா தான் புரிய வைக்கின்றார். சிவபாபா எப்போதும் அழகானவராக இருக்கின்றார். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களை அழகாக்குகின்றார். தூய்மையற்றவர்கள் கருப்பாகவும், தூய்மையானவர்கள் அழகாகவும் இருக்கிறார்கள். இயற்கையான அழகு இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள், நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் என்று வந்துள்ளீர்கள். ஆகையினால் புகழ் பாடப்படுகிறது சிவபகவானுடைய மகாவாக்கியம், தாய்மார்கள் சொர்க்கத்தின் வாயிலைத் திறக்கின்றார்கள். ஆகையினால் தான் வந்தே மாதரம், என்று பாடப்படுகிறது. வந்தே மாதரம் என்றால் பிதாவும் இருக்கின்றார், என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. பாபா தாய்மார்களின் புகழை அதிகரிக்கின்றார். முதலில் இலஷ்மி, பின்னால் நாராயணன். இங்கே முதலில் திருவாளர், பின்னால் திருமதி. நாடகத்தின் இரகசியம் அப்படி உருவக்கப்பட்டுள்ளது. பாபா படைப்பவர் முதலில் தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார். ஒன்று எல்லைக்குட்பட்ட, மற்றொருவர் எல்லையற்ற பரலௌகீக தந்தையாவார். எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறார்கள், ஏனென்றால் அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது. எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைத்தாலும் கூட எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறார்கள். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் மற்ற சேர்க்கையை விட்டுவிட்டு தங்கள் ஒருவரிடம் மட்டுமே சேர்க்கை வைப்போம். இதை யார் சொன்னது? ஆத்மா. ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் முலம் நடிப்பை நடிக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவும் எப்படி-எப்படி கர்மம் செய்கிறதோ, அப்படி-அப்படி பிறவி எடுக்கிறது. செல்வந்தர்கள் ஏழையாகிறார்கள். கர்மம் அல்லவா1? இந்த லஷ்மி-நாராயணன் உலகத்தின் எஜமானர்களாவர். இவர்கள் என்ன செய்தார்கள், என்பதை நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள், மேலும் நீங்கள் தான் புரிய வைக்க முடியும்.

 

பாபா கூறுகின்றார், இந்த கண்களின் மூலம் நீங்கள் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அதன் மீது வைராக்கியம் வேண்டும். இவையனைத்தும் அழியக்கூடியதாகும். புதிய வீடு கட்டுகிறார்கள் என்றால், பிறகு பழையதின் மீது வைராக்கியம் வந்து விடுகிறது. தந்தை புதிய வீடு கட்டியிருக்கிறார். நாங்கள் அங்கு செல்வோம், என்று குழந்தைகள் கூறுவார்கள். இந்த பழைய வீடு இடிந்து விடும். இது எல்லையற்ற விஷயமாகும். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கின்றார், என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். இது மோசமான பழைய உலகமாகும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது திருமூர்த்தி சிவனுக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வெற்றி அடைகின்றீர்கள். உண்மையில் இந்த திருமூர்த்தி உங்களுடைய இராஜ முத்திரையாகும். உங்களுடைய இந்த பிராமண குலம் மிகவும் உயர்ந்ததாகும். குடுமியாகும். இராஜ்ஜியம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த இராஜ முத்திரையை குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். சிவபாபா, தேவி-தேவதைகளாக மாற்றுவதற்காக, நமக்கு பிரம்மாவின் மூலம் படிப்பிக்கின்றார். வினாசம் ஆகத் தான் வேண்டும். உலகம் தமோபிரதானம் ஆகிறது எனும்போது இயற்கைச் சீற்றங்களும் உதவுகிறது. புத்தியிலிருந்து எவ்வளவு அறிவியல் வந்து கொண்டே இருக்கிறது. வயிற்றிலிருந்து ஏவுகணைகள் வருவதில்லை. இது அறிவியல் கொண்டுவந்துள்ளது, இதன் மூலம் முழு குலத்தையும் அழித்து விடுகிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா, என்று குழந்தை களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. பூஜை கூட ஒரு சிவபாபா மற்றும் தேவதை களையும் தான் செய்ய வேண்டும். பிராமணர்களின் பூஜை நடக்க முடியாது, ஏனென்றால் உங்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கலாம், ஆனால் சரீரம் தூய்மையானது கிடையாது, ஆகையினால் பூஜிக்கத் தகுந்தவர்களாக ஆக முடியாது. மகிமைக்கு தகுதியானவர்கள். பிறகு எப்போது தேவதையாக ஆகின்றீர்களோ, அப்போது ஆத்மாவும் தூய்மையாக இருக்கிறது, சரீரமும் புதியதாக தூய்மையாக கிடைக்கிறது. இந்த சமயத்தில் நீங்கள் மகிமைக்குத் தகுதியானவர் களாக இருக்கின்றீர்கள். வந்தே மாதரம், என்று பாடப்படுகிறது. தாய்மார்களின் சேனை என்ன செய்தது? தாய்மார்கள் தான் ஸ்ரீமத்படி ஞானத்தைக் கொடுத்தார்கள். தாய்மார்கள் ஸ்ரீமத்படி அனைவருக்கும் ஞானம் கொடுக்கிறார்கள். தாய்மார்கள் அனைவருக்கும் ஞான அமிர்தம் கொடுக்கிறார்கள். யதார்த்தமான விதத்தில் நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். சாஸ்திரங்களில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருக்கிறது, அதை அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சத்தியம்-சத்தியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். கல்புத்தி மற்றும் தங்கபுத்தி, என்றும் பாடப்பட்டுள்ளது. தங்கபுத்தி என்றால் பாரஸ்நாத் ஆவார். நேப்பாளில் பாரஸ்நாத்தின் சித்திரம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். பாரஸ்புரியின் தலைவன் இந்த இலஷ்மி-நாராயணன் ஆவர். அவர்களுடைய இராஜ்யம் இருந்தது. இப்போது முக்கியமான விஷயம் படைப்பவர் மற்றும் படைப்பின் இரகசியத்தைத் தெரிந்து கொள்வது, எதனை ரிஷிகளும்-முனிவர்களும் கூட தெரியாது-தெரியாது என்று சொல்லிக் கொண்டு வந்தார்களோ அதுவாகும். இப்போது நீங்கள் பாபாவின் மூலம் அனைத்தையும் தெரிந்திருக்கிறீர்கள். அதாவது ஆஸ்திகர்களாக ஆகின்றீர்கள். மாயை இராவணன் நாஸ்திகர்களாக மாற்றுகின்றான். நல்லது!

 

"இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்"

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாம் பிரம்மாவின் வாய் வம்சாவழி பிராமணர்கள், நம்முடையது அனைத்திலும் உயர்ந்த குலம் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும். நாம் தூய்மையாக ஆக வேண்டும், தூய்மையாக்க வேண்டும். பதீத-பாவனன் பாபாவிற்கு உதவியாளர்களாக ஆக வேண்டும்.

 

2. நினைவில் ஒருபோதும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. தேக-அபிமானத்தின் காரணமாகத்தான் மாயை நினைவில் தடையை ஏற்படுத்துகிறது, ஆகையினால் முதலில் தேக-அபிமானத்தை விட வேண்டும். யோக அக்னியின் மூலம் பாவத்தை அழிக்க வேண்டும்.

 

வரதானம்:

மாயாவின் கோரமான சொரூபத்தின் விளையாட்டை சாட்சியாக இருந்து பார்க்கக் கூடிய மாயாவை வென்றவர் ஆகுக.

 

மாயாவை வரவேற்கக் கூடியவர்கள் அதனுடைய சொரூபத்தைப் பார்த்து பதற்றம் அடைய மாட்டார்கள். சாட்சியாக இருந்து விளையாட்டைப் பார்த்தால் குஷி ஏற்படுகிறது, ஏனெனில் மாயாவின் வீரமான வெளித் தோற்றம் சிங்கத்தைப் போன்று இருக்கும், ஆனால் அதனிடத்தில் பூனைக்கு இருக்கும் சக்தி கூட இருப்பதில்லை. உங்களை பயமுறுத்தி தன்னை பெரிதாக்கிக் கொள்கிறது, என்ன செய்வது.. எப்படி செய்வது ஆனால் என்ன நடந்துக் கொண்டிருக்கிறதோ, அதுவும் நன்மைகே, மேலும் என்ன நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்மைக்கே என்ற இந்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சாட்சியாக இருந்து விளையாட்டை பார்த்தால் மாயாவை வென்றவர் ஆகிவிடலாம்.

 

சுலோகன்:

யார் பொறுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் எவருடைய சுபாவம்- சம்ஸ்காரத்தினால் எரிந்து போவதில்லை. வீணான விஷயங்களை ஒரு காதில் கேட்டு மற்றொரு காதினால் வெளியேற்றி விடுகிறார்கள்.

 

ஓம்சாந்தி