01-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

மனிதர்கள் தம் புத்தியை எந்த விஷயத்தில் ஈடுபடுத்துகின்றனர் மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியை எங்கே ஈடுபடுத்த வேண்டும்?

பதில்:

மனிதர்கள் தம் புத்தியை ஆகாயம் மற்றும் சிருஷ்டியின் எல்லையை கண்டுபிடிக்க ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இதனால் எந்த இலாபமும் இல்லை. இதன் எல்லையைக் காண முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பூஜைக்குரியவர் ஆவதில் தம் புத்தியை ஈடுபடுத்துகிறீர்கள். அவர்களை உலகம் பூஜிக்காது. குழந்தைகளாகிய நீங்கள் பூஜைக்குரிய தேவதை ஆகிறீர்கள்.

பாடல்:

உங்களை அடைந்து நாங்கள். . .

ஓம் சாந்தி. குழந்தைகள் புரிந்துக் கொண்டுவிட்டனர். இது ஞான மார்க்கமாகும். பக்தி மார்க்கம் நல்லதா அல்லது ஞான மார்க்கம் நல்லதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு பொருட்கள் இருக்கின்றன அல்லவா. ஞானத்தால் சத்கதி கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. பக்தி மற்றும் ஞானம் இரண்டும் வேறு வேறு என கண்டிப்பாக சொல்வோம். பக்தி செய்வதன் மூலம் ஞானம் கிடைக்கும் அப்போது சத்கதி உண்டாகும் என மனிதர்கள் புரிந்துக் கொள்கின்றனர். பக்திக்கு இடையில் ஞானம் வர முடியாது. பக்தி அனைவருக்குமானது, ஞானமும் அனைவருக்குமானது. இந்த சமயமே கலியுகமாக உள்ளது எனும்போது கண்டிப்பாக துர்கதி ஏற்படும், ஆகையால் அழைக்கவும் செய்கின்றனர், பிற தொடர்பை விட்டு இப்போது உங்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வேன் எனப் பாடவும் செய்கின்றனர். இப்போது அவர் யார்? யாருடன் தொடர்பு வைப்பார்கள்? இதைப் புரிந்து கொள்வதில்லை. அடிக்கடி புத்தி கிருஷ்ணரின் பக்கம் செல்கிறது. நாங்கள் உண்மையான அன்பு கொண்ட உங்களுடைய தொடர்பை இணைத்துக் கொள்வோம். கிருஷ்ணருடனே அன்பை ஈடுபடுத்து கின்றனர் எனும்போது பிறகு குரு, சன்னியாசி, மற்ற யாருடைய அவசியமும் கிடையாது. கிருஷ்ணரைத்தானே நினைவு செய்ய வேண்டும். கிருஷ்ணரின் படம் அனைவரிடமும் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், பிறகு வேறு யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை - மீரா ஒருவரின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது போல. வேலை, காரியங்களை செய்தபடி கிருஷ்ணரையே நினைவு செய்து கொண்டிருந்தார். வீட்டில் இருப்பது-செய்வது, உண்பது, குடிப்பது இவையெல்லாம் நடக்கவே செய்கிறது. உண்மையான அன்பை கிருஷ்ணரிடம் செலுத்தினார். அவர் பிரியதர்ஷனாகவும், இவர் பிரியதர்ஷினியாகவும் ஆகிவிட்டனர். கிருஷ்ணரை நினைவு செய்வதன் மூலம் பலனும் கிடைக்கிறது. கிருஷ்ணரை அனைவரும் அறிவார்கள். உண்மையான அன்பு நாங்கள் உங்களிடம் வைத்தோம், பிற தொடர்புகளை நீக்கினோம் எனப் பாடவும் செய்கின்றனர். இப்போது உயர்ந்தவரிலும் உயர்ந்த உண்மையானவர் பரமபிதாவே ஆவார். அனைவருக்கும் ஆஸ்தியை கொடுப்பவர் ஒரு தந்தையே ஆவார். அவரை யாருக்கும் தெரியாது. பரமபிதா பரமாத்மா சிவன் எனவும் சொல்கின்றனர், ஆனால் எப்போது வருகிறார் என தெரியாது. சிவஜெயந்தி நடக்கிறது என்றால் கண்டிப்பாக வருவார். எப்போது, எப்படி மற்றும் வந்து என்ன செய்கிறார்? யாருக்கும் தெரியாது. அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறார் என்பது எந்த மனிதருக்கும் தெரியாது. ஆனால் எப்படி செய்கிறார்? சத்கதியின் அர்த்தம் என்ன? எதுவும் புரிவதில்லை. சிவபாபா கண்டிப்பாக சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுத்திருப்பார் அல்லவா. குழந்தைகளாகிய நீங்கள் அந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை, மறந்துவிட்டீர்கள் எனும்போது பிறகு எப்படி தெரிந்துக் கொள்ள முடியும்? இப்போது சிவபாபாவின் மூலம் நீங்கள் தெரிந்துக் கொண்டீர்கள், மேலும் பிறருக்கும் சொல்கிறீர்கள். நீங்கள் ஈஸ்வரிய மீட்புப் படையினராக உள்ளீர்கள். மீட்புப்படை என்றாலும் சரி, அல்லது சத்கதியின் படை என்றாலும் சரி. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நீங்கள் படங்களை வைத்துப் புரிய வைக்க முடியும். பல மொழிகள் உள்ளன. முக்கியமான மொழிகளில் படங்களை உருவாக்க வேண்டியிருக்கும். மொழிகள் குறித்த குழப்பமும் பெரியதாக உள்ளது, ஆகையால் கண்காட்சிகளும் அமைக்க வேண்டியுள்ளது. படங்களை வைத்துப் புரிய வைப்பது மிகவும் சகஜமானதாகும். சிருஷ்டி சக்கரத்திலும் முழு ஞானமும் உள்ளது, ஏணி பாரதவாசிகளுக்கு மட்டுமாகும். இதில் வேறு தர்மம் எதுவும் இல்லை. பாரதம் தமோபிரதானமாகும்போது மற்றவர்கள் ஆவதில்லை என்பதல்ல. அனைவருமே தமோபிரதானமாகின்றனர். ஆக அவர்களுக்காகவும் இருக்க வேண்டும். சேவைக்கான இந்த அனைத்து சிந்தனைகளும் புத்தியில் வர வேண்டும். இரண்டு தந்தையரின் இரகசியத்தையும் கூட புரிய வைக்க வேண்டும். ஆஸ்தி படைப்பவரிடமிருந்து கிடைக்கிறது. இலட்சுமி நாராயணர் பாரதத்தின் முதல் மகாராஜா-மகாராணி அல்லது பகவான் - பகவதியாக இருந்தனர் என்பதை கூட அனைத்து தர்மத்தவர்களும் அறிவார்கள். நல்லது, அவர்களுக்கு இந்த சொர்க்கத்தின் இராஜ்யம் எவ்வாறு கிடைத்தது? கண்டிப்பாக பகவான் மூலம் கிடைத்தது. எப்படி, எப்போது கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாது. கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு பின் பிரளயத்தைக் காட்டிவிட்டனர். முடிவு ஒன்றும் இல்லை. இதனை குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். படங்களோ அனைத்து தரப்பிலும் உள்ளன. இலட்சுமி நாரயணரின் படங்களும் இருக்கும். உடை, இலட்சணங்கள் வேறு மாதிரி இருக்கக்கூடும். யாருக்கு என்ன தோன்றியதோ அதனை அமர்ந்து உருவாக்கிவிட்டனர். இராதா கிருஷ்ணர் என்பவர்கள் தான் ஸ்ரீநாத் - ஸ்ரீநாதினி அல்லவா. ஸ்ரீ இராதை, ஸ்ரீ கிருஷ்ணர் கிரீடதாரிகள் அல்ல. கருப்பானவர்களும் அல்ல. இராஜ்யம் இலட்சுமி நாராயணருடையதாகும், இராதா கிருஷ்ணருடையதல்ல. கோவில்களை பல விதமாக கட்டியுள்ளனர். பெயர் இலட்சுமி நாராயணர் என ஒன்றுதான் வைப்பார்கள். இராஜவம்சம் இலட்சுமி நாராயணருடையது என சொல்வார்கள். இராமன்-சீதையின் குலம், இலட்சுமி-நாராயணரின் குலம், ஆனால் இராதா கிருஷ்ணரின் குலம் இருக்காது. இந்த விஷயங்கள் மனிதர்களின் சிந்தனையில் கூட இல்லை. குழந்தைகளாகிய நீங்களும் கூட வரிசைக்கிரமமான முயற்சியின்படி அறிவீர்கள், சேவையின் ஆர்வமிருப்பவர்கள் அதிலேயே ஈடுபட்டு அலைந்துக் கொண்டிருப்பார்கள். எங்களுக்குப் புரிகிறது, ஆனால் மெல்ல மெல்ல வாயைத் திறப்பதற்கு யுக்திகளை உருவாக்க வேண்டியுள்ளது என சிலர் சொல்கின்றனர். வேத சாஸ்திரங்களை மனனம் செய்வதன் மூலமும், யக்ஞம், தவம் முதலானதைச் செய்வதன் மூலமும், தீர்த்த யாத்திரைகள் செல்வதன் மூலமும் பரமாத்மாவை அடைய முடியும் என சிலர் புரிந்துக் கொள்கின்றனர். ஆனால் இவையனைத்தும் என்னிடமிருந்து தூரமாக ஆக்கக்கூடிய வழிகளாகும் என பகவான் கூறுகிறார். நாடகத்தில் அனைவருமே துர்கதியை அடைய வேண்டியிருப் பதால் இப்படிப்பட்ட விஷயங்களை சொல்கின்றனர். முன்னர் நாமும் கூட பகவான் உச்சிக் குடுமியைப் போன்றவர் எனச் சொல்லிக் கொண்டிருந்தோம், மனிதர்கள் பலவிதமான வழிகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். பக்தி மார்க்கத்தின் வழிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், களைத்துப் போகும்போது பகவானைத்தான் அழைக்கின்றனர் - ஓ பதீத பாவனா வாருங்கள், நீங்கள் வந்து தூய்மையடைவதற்கான வழியைக் காட்டுங்கள், நீங்களன்றி நாங்கள் தூய்மையடைய முடியாது, களைத்துவிட்டோம். நாளுக்கு நாள் பக்தி களைப்படையச் செய்யும். இப்போது விழா முதலான இடங்களில் எவ்வளவு இலட்சக்கணக்கானவர்கள் ஒன்றுகூடுகின்றனர், எவ்வளவு அழுக்கு ஏற்படுகிறது. இப்போது இறுதிக் காலமாக உள்ளது. உலகம் மாற வேண்டியுள்ளது. உண்மையில் உலகம் ஒன்றுதான். இரண்டு பாகங்களாக ஆக்கியுள்ளனர். ஆக, மனிதர்கள் சொர்க்கம், நரகம் என வேறு வேறு உலகங்கள் உள்ளன எனப் புரிந்து கொள்வார்கள். ஆனால் அது பாதி பாதி ஆகும். மேலே சத்யுகம், பிறகு திரேதா, துவாபர, கலியுகம். கலியுகத்தில் தமோபிரதானம் ஆகத்தான் வேண்டும். சிருஷ்டி பழையதாக ஆகிறது, இந்த விஷயங்களை யாரும் புரிந்துக் கொள்வதில்லை. குழப்ப மடைந்துள்ளனர். சிலர் கிருஷ்ணரை பகவான் என்றும் சிலர் இராமனை பகவான் என்றும் சொல்லி விடுகின்றனர். இன்றைய நாட்களில் மனிதர்கள் தம்மையே பகவான் எனச் சொல்லிவிடுகின்றனர். நான் ஈஸ்வரனின் அவதாரமாவேன். தேவதைகளை விடவும் மனிதர்கள் கூர்மையடைந்து (ஆர்வமுடையவர்களாகி) விட்டனர். பிறகும் கூட தேவதைகளை தேவதைகள் எனவே சொல்வார்கள். இவர்களோ மனிதர்களை பகவான் எனச் சொல்லிவிடுகின்றனர். இது பக்தி மார்க்கமாகும். தேவதை கள் சொர்க்கத்தில் வசிப்பவர்களாக இருந்தனர். இப்போது கலியுகமான இரும்பு யுகத்தில், பிறகு மனிதர்கள் பகவானாக எப்படி ஆக முடியும்? நான் சங்கமயுகத்தில்தான் வருகிறேன். இப்போது நான் வந்து உலகை மாற்ற வேண்டும். கலியுகத்திலிருந்து சத்யுகமானால் மற்ற அனைவரும் சாந்தி தாமத்திற்குச் சென்றுவிடுவார்கள். அது நிராகார உலகமாகும். இது சாகார உலகம். நிராகார மரத்தையும் கூட புரிய வைப்பதற்காக பெரியதாக உருவாக்க வேண்டும். பிரம்ம மகா தத்துவமும் கூட ஆகாயத்தைப் போல் பெரியதாக உள்ளது. இரண்டின் எல்லையையும் காண முடியாது. ஆகாய விமானம் முதலானவற்றில் செல்வோம் என முயற்சி செய்கிறார்கள், ஆனால் எல்லையைக் காண முடியாது. கடலே கடலாக. . . ஆகாயமே ஆகாயமாக. . . அங்கே எதுவும் கிடையாது. முயற்சி நிறைய செய்கின்றனர், ஆனால் இந்த விஷயங்களில் எல்லாம் என்ன இலாபம் இருக்கிறது? தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிக் கொள்வதாகப் புரிந்து கொள்கின்றனர். இது மனிதரின் அறிவு, அறிவியலின் செருக்கும் கூட மனிதருக்குள் உள்ளது. எவ்வளவுதான் யாரேனும் எல்லையைக் கண்டாலும் கூட அவர்களுக்கு முழு உலகமும் பூஜை எதுவும் செய்வதில்லை. தேவதைகளுக்கோ பூஜை நடக்கிறது. குழந்தைகளாகிய உங்களை தந்தை எவ்வளவு உயர்வானவர்களாக ஆக்குகிறார். அனைவரையும் சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். நாம் மூலவதனத்திலிருந்து வருகிறோம் என தெரியும், ஆனால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போல உலகினர் தெரிந்து கொண்டிருப்பது கிடையாது. அது என்ன, எப்படி ஆத்மாக்கள் அங்கே வசிப்பார்கள், பிறகு எப்படி வரிசைக்கிரமமாக வருகின்றனர். இது யாருக்கும் தெரியாது. பிரம்ம மகா தத்துவத்தில் நிராகார மரம் உள்ளது. சத்யுகத்தில் சிலரே இருப்பார்கள், மற்ற அனைத்து ஆத்மாக்களும் மூலவதனத்தில் இருப்பார்கள் என்று புரிந்து கொள்வதில்லை. இந்த சாகார வதனத்தைப் போலவே மூலவதனமும் உள்ளது. வதனம் இதுவானாலும், அதுவானாலும் ஒருபோதும் காலியாவதில்லை. கடைசி நேரம் வரும்போது இடமாற்றல் ஆகிவிடுகின்றனர். இந்த வதனத்தில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். முழு வதனமும் காலியாகும் என்றால் பிறகு பிரளயம் ஏற்பட்டுவிடும். அழிவற்ற கண்டம் அல்லவா. இந்த அனைத்து விஷயங்களையும் புத்தியில் வைக்க வேண்டும். யாருக்கு நன்மை செய்யலாம் என்ற சிந்தனை முழுநாளும் செய்தபடி இருக்க வேண்டும். அன்பானவரின் தொடர்பு கிடைத்தது என்றால் அவருடைய அறிமுகத்தைக் கொடுக்கலாம் அல்லவா. அவர் தந்தையாக இருக்கிறார், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது என்பதை நாங்கள் சொல்ல முடியும். சொல்பவர்களிலும் வரிசைக் கிரமமாக உள்ளனர். சிலர் மிகவும் நல்ல விதமாக சொற்பொழிவு ஆற்ற முடிகிறது, சிலருக்கு முடிவதில்லை எனும்போது கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து குழந்தைகளும் தமக்கு நன்மையை செய்து கொள்ள வேண்டும். வழி கிடைத்தது என்றால், ஒருவர் மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் தந்தையின் மூலம் ஆஸ்தியை கொடுக்க வைக்கலாம், ஆன்மீக சேவை செய்வோம் என மனம் நாடுகிறது. அனைவரும் ஒருவர் மற்றவருக்கு சேவை செய்கின்றனர்.

தந்தை வந்து ஆன்மீக சேவையை கற்றுத் தருகிறார், ஆன்மீக சேவையைப் பற்றி தெரிந்தவர் வேறு யாரும் இல்லை. ஆன்மீகத் தந்தைதான் ஆத்மாக்களுக்கு சேவை செய்கிறார். ஸ்தூலமான சேவையை பிறவி பிறவிகளாக செய்திருக்கிறீர்கள், இப்போது இந்த கடைசி பிறவியில் தந்தை கற்றுத் தந்திருக்கும் ஆன்மீக சேவை செய்ய வேண்டும். நன்மை இதில்தான் உள்ளது, மற்ற எதிலும் எந்த பயனும் இல்லை. இல்லற விஷயங்களிலும் இருக்க வேண்டும், நல்லுறவை பராமரிக்கவும் வேண்டும். அவர்களுக்கும் கூட இதனையே புரிய வைத்து நன்மை செய்ய வேண்டும். அன்பானவராக இருந்தால் கொஞ்சம் கேட்பார்கள். பலரும் எங்கே நாமும் கூட சன்னியாசம் செய்ய வேண்டி யிருக்குமோ என பயப்படுகின்றனர். இன்றைய நாட்களில் சன்னியாசிகள் நிறைய பேர் இருக்கின்றனர் அல்லவா. காவி அணிந்து இரண்டு வார்த்தைகள் சொன்னால் உணவு எங்கிருந்தாவது கிடைத்து விடுகிறது. சிலர் கடைக்குச் சென்றால் இரண்டு பூரிகள் கொடுப்பார்கள். பிறகு மற்றொருவரிடம் சென்றால் வயிற்றுக்கு பூஜை நடந்துவிடுகிறது. பிச்சை எடுப்பவர்களும் பல விதமானவர்களாக உள்ளனர். இந்த தந்தையிடமிருந்தோ ஒரே விதமான ஆஸ்தி கிடைக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட இராஜ்யம் கிடைக்கிறது, எப்போதும் நோயற்றவர்களாக ஆகிறோம். செல்வந்தர்கள் விழித்தெழுவது மிகவும் சிரமமே. ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். பாபா கண்காட்சிகள் நிறைய ஏற்பாடு செய்கிறார் ஏனென்றால் நிறைய கிராமங்கள் உள்ளன அல்லவா. அமைச்சர்கள் முதலானவர்கள் இது நல்ல ஞானம் எனப் புரிந்து கொண்டார்கள் என்றால் பலரும் கேட்கத் தொடங்குவார்கள். ஆம், மேலும் நாட்கள் செல்லச் செல்ல உங்களின் பெயர் பரவும், பிறகு நிறைய பேர் வருவார்கள். அழுக்கை நீக்குவதில் நேரம் பிடிக்கிறது. இரவும் பகலும் யாராவது ஈடுபட்டால் ஒருவேளை நீங்கிவிடக்கூடும். ஆத்மா தூய்மை அடைந்துவிட்டால் இந்த சரீரத்தையும் விட்டு விடும். இவையனைத்தும் புரிந்துக் கொள்ளக் கூடிய விஷயங்களாகும். கண்காட்சியிலும் கூட புரிய வைக்க வேண்டும். முழு பாரதத்தின் விஷயம் முக்கியமானதாகும். பாரதத்தின் உயர்வு ஏற்பட்டது என்றால் அனைவருக்கும் உயர்வு ஏற்பட்டுவிடும். புரொஜெக்டர் மூலம் கூட கண்காட்சிகளில் அதிக சேவை நடக்கும். மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தபடி செல்லும். நாளுக்கு நாள் உங்களின் பெயர் பிரபலமாகிக் கொண்டே செல்லும். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கூட இப்படி ஆகி இருந்தது என்பதையும் எழுத வேண்டும். இவை மிகவும் அதிசயமான விஷயங்களாகும். தந்தை சைகை காட்டுகிறார். குழந்தைகள் பல விஷயங்களை மறந்துவிடுகின்றனர். ஏதாவது நடந்தது என்றால் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட இப்படி ஆகியது என சொல்வார்கள். மிகவும் தெளிவான விஷயமாகும். ஆனால் புத்தியில் பதிய வேண்டும். செய்தித்தாள்களில் போட முடிந்தால் கொஞ்சமாவது புரிந்துக் கொண்டார்கள் என்றால் சரி. ஞான மார்க்கத்தில் மிகவும் முதல் தரமான நிலை இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விஷயங் களை நினைவு செய்து மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். பயிற்சி ஏற்பட்டுவிட்டால் பிறகு மிகவும் குஷி நிறைந்த நிலை ஏற்பட்டுவிடும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மற்ற அனைவரிடமிருந்தும் புத்தியின் ஈடுபாட்டை நீக்கி ஒரு தந்தையிடம் இணைக்க வேண்டும் மற்றும் அனைவரின் அன்பை ஒரு தந்தையிடம் ஈடுபடுத்தக் (இணைய வைக்கக்) கூடிய சேவை செய்ய வேண்டும்.

2. உண்மையிலும் உண்மையான ஆன்மீக சேவாதாரி ஆக வேண்டும். தனக்கு நன்மையையும் செய்து கொள்ள வேண்டும், மற்றும் பிறருக்கும் வழி காட்ட வேண்டும். மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:

ஒரு பாபாவின் நினைவு மூலம் உண்மையான சுமங்கலியின் அனுபவத்தை செய்யக் கூடிய பாக்கியசாலி ஆத்மா ஆகுக

யார் எந்தவொரு ஆத்மாவின் வார்த்தைகளை கேட்டாலும் கேட்காமல் (பாதிப்படையாமல்) இருக்கிறார்களோ, எந்தவொரு ஆத்மாவின் நினைவு எண்ணம் மற்றும் கனவில் கூட வராமல் இருக்கிறதோ, அதாவது எந்தவொரு தேகதாரியின் தலைகுனிவதில்லையோ, ஒரு பாபாவை தவிர வேறு யாருமல்ல என்ற நினைவில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு அழிவற்ற சுமங்கலியின் அடையாளமாக திலகம் ஈடப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட உண்மையான சுமங்கலியாக இருக்கக் கூடியவர்கள் தான் பாக்கியசாலிகள் ஆவர்.

சுலோகன்:

தனது சிரேஷ்ட மனநிலையை உருவாக வேண்டுமென்றால் அந்தர்முகி (உள்நோக்குமுகமுடைவர்) இருந்து வெளிநோக்கு முகமுடைவர் ஆகுங்கள்.