01.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! பல தேகதாரிகள் மீதிருக்கும் அன்பை நீக்கி தேகமற்ற ஒரு தந்தையை நினைவு செய்தால் உங்களது அனைத்து அங்கங்களும் (கர்மேந்திரியங்களும்) குளிர்ச்சியாக ஆகிவிடும்.

 

கேள்வி:

யார் தெய்வீக குலத்தைச் சார்ந்த ஆத்மாக்களோ அவர்களது அடையாளங்கள் என்ன?

 

பதில்:

தெய்வீக குலத்தைச் சார்ந்த ஆத்மாக்களுக்கு இந்த பழைய உலகின் மீது எளிதாகவே வைராக்கியம் ஏற்பட்டு விடும். 2) அவர்களது புத்தி எல்லையற்று இருக்கும். சிவாலயம் செல்வதற்காக அவர்கள் தூய்மையான மலர் ஆவதற்கான முயற்சி செய்வார்கள். 3) எந்த அசுர நடத்தைகளும் இருக்காது. 4) எவ்வித அசுர காரியங்களையும் செய்யவில்லை தானே? என்ற தனது கணக்கை வைப்பார்கள். தந்தையிடம் உண்மையைக் கூறுவார்கள். எதையும் மறைக்க மாட்டார்கள்.

 

பாட்டு:

என்னை அவரிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது ......

 

ஓம்சாந்தி.

இப்பொழுது இது எல்லையற்ற விசயமாகும். எல்லைக்குட்பப்ட விசயங்கள் அனைத்தும் நீங்கி விடுகின்றன. உலகில் பலரை நினைவு செய்கின்றனர், பல தேகதாரிகளின் மீது அன்பு வைக்கின்றனர். தேகமற்றவர் ஒரே ஒருவர் ஆவார், அவர் தான் பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது அந்த ஒருவரிடத்தில் மட்டுமே புத்தியின் தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும். எந்த தேகதாரிகளையும் நினைவு செய்யக் கூடாது. பிராமணர்களுக்கு உணவு கொடுப்பது போன்றவைகள் அனைத்தும் கலியுகத்தின் வழக்கங்களாகும். அங்கிருக்கும் வழக்கங்கள் மற்றும் இங்கிருக்கும் வழக்கங்களும் முற்றிலும் தனிப்பட்டதாகும். இங்கு எந்த தேகதாரிகளையும் நினைவு செய்யக் கூடாது. அப்படிப்பட்ட நிலை ஏற்படும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு இந்த பழைய உலகில் இருந்து விட்டு சென்றவர்கள் அல்லது இருக்கின்றவர்களை மறந்து கொண்டே செல்லுங்கள் என்று தந்தை கூறுகின்றார். யாருக்கு என்ன புரிய வைக்க வேண்டும்? என்பது புத்தியில் முழு நாளும் ஓட வேண்டும். யாருமே அறிந்திராத, உலகின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் கூற வேண்டும். கடந்த காலம் என்றால் எப்பொழுது ஆரம்பமானது? நிகழ்காலம் இப்பொழுது எப்படி இருக்கிறது? சத்யுகத்திலிருந்து ஆரம்பமானது, ஆக சத்யுகத்திலிருந்து இப்பொழுது வரை மற்றும் எதிர்காலத்தில் என்ன ஆகும்? என்பதை உலகத்தினர் முற்றிலும் அறியாமல் இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், அதனால் சித்திரம் போன்றவைகளை உருவாக்குகிறீர்கள். இது மிகப்பெரிய எல்லையற்ற நாடகமாகும். பொய்யான, எல்லைக்குட்பட்ட அந்த நாடகத்தை அதிகம் உருவாக்குகின்றனர். கதை எழுதுபவர் ஒருவர், நாடகத்தின் காட்சிகளை உருவாக்குபவர் வேறொருவராக இருப்பார். இந்த ரகசியங்கள் அனைத்தும் இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறது. இப்பொழுது எதுவெல்லாம் பார்க்கிறீர்களோ அவைகள் இருக்காது. விநாசம் ஆகிவிடும். ஆக நீங்கள் சத்யுகத்தின் காட்சிகளை மிகவும் நன்றாக காண்பிக்க வேண்டியிருக்கும். எவ்வாறு அஜ்மீரில் தங்க துவாரகை இருக்கிறதோ, அதிலிருந்தும் காட்சிகளை எடுத்துக் கொண்டு புது உலகை உருவாக்கி பிறகு தனியாகக் காட்டுங்கள். இந்த பழைய உலகம் எரிந்து சாம்பலாகி விடும், இதற்கான சித்திரமும் இருக்கிறது அல்லவா! மேலும் இந்த புது உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சிந்தனை செய்து நல்ல முறை யில் உருவாக்க வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த நேரத்தில் மனிதர்களின் புத்தி முற்றிலும் கல்புத்தியுடைவர்கள் போல் இருக்கின்றனர். நீங்கள் எவ்வளவு புரிய வைக்கிறீர்கள், இருப்பினும் புத்தியில் அமர்வது கிடையாது. எவ்வாறு நாடகம் தயாரிப்பவர்கள் நல்ல அழகான காட்சிகளை உருவாக்கு கிறார்களோ, அவ்வாறு யாருடைய உதவியை அடைந்தாவது சொர்க்கத்தின் காட்சிகளை மிகவும் நன்றாக உருவாக்க வேண்டும். அவர்கள் நல்ல கருத்துக்களைக் கொடுப்பர். யுக்திகளைக் கூறுவர். அவர்களுக்கு புரிய வைத்து, மனிதர்கள் வந்து புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக உருவாக்க வேண்டும். உண்மையில் சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள், தாரணையும் செய்கிறீர்கள். தேக அபிமான புத்தியுடையவர்கள் சீ சீ ஆனவர்கள் என்று கூறப்படுகின்றனர். ஆத்ம அபிமானியாக இருப்பவர்கள் நறுமணமுடைய மலர்கள் என்று கூறப்படுகின்றனர். இப்பொழுது நீங்கள் மலர்களாக ஆகிறீர்கள். தேக அபிமானம் இருப்பதால் முள்ளாகவே இருந்து விடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பழைய உலகின் மீது வைராக்கியம் இருக்கிறது. உங்களுடையது எல்லையற்ற புத்தி, எல்லையற்ற வைராக்கியமாகும். நமக்கு இந்த விகார உலகின் மீது மிகுந்த கோபம் இருக்கிறது. இப்பொழுது நாம் சிவாலயம் செல்வதற்காக மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கும் பொழுது தவறாக நடந்து கொண்டால் இவரிடத்தில் இப்பொழுது பூதம் பிரவேசமாகி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரே வீட்டில் கணவன் அன்னப்பறவையாக ஆகிக் கொண்டிருக்கிறார், மனைவி புரிந்து கொள்ளவில்லையெனில் கடினமாகி விடுகிறது. பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவரது அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் தெய்வீக குலத்தைச் சார்ந்தவர்கள் கிடையாது. யார் தெய்வீக குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் தான் ஆவார்கள். பலரது கெட்ட நடத்தைக்கான புகார்கள் வருகின்றன. இந்த அசுர குணங்கள் உள்ளன, அதனால் தான் தந்தை தினமும் புரிய வைக்கின்றார், தனது கணக்கை இரவில் பாருங்கள் - இன்று நான் எந்த அசுர காரியமும் செய்யவில்லை தானே? முழு ஆயுளிலும் என்ன தவறு செய்திருந்தீர்களோ அதை கூறுங்கள் என்று தந்தை கூறுகின்றார். யாராவது பெரிய தவறு செய்திருந்தால் பிறகு டாக்டரிடம் கூறுவதற்கு வெட்கம் ஏற்படுகிறது. ஏனெனில் மரியாதை போய் விடும் அல்லவா! சொல்லாமல் இருப்பதன் மூலம் மேலும் நஷ்டமாகிவிடும். மாயை அந்த மாதிரி தாக்கி விடுகிறது, அதாவது முற்றிலும் அழித்து விடுகிறது. மாயை மிகவும் திறமை வாய்ந்தது. 5 விகாரங்கள் மீது வெற்றி அடைய முடியவில்லையெனில் தந்தை என்ன செய்வார்?

 

தந்தை கூறுகின்றார் - நான் கருணைக் கடலாகவும் இருக்கிறேன், காலனுக்கெல்லாம் காலனாகவும் இருக்கிறேன். பதீத பாவனனே வாருங்கள்! வந்து பாவனம் ஆக்குங்கள் என்று என்னை அழைக்கிறீர்கள். இரண்டுமே எனது பெயர்கள் அல்லவா! எவ்வாறு கருணையுள்ளமுடையவனாக இருக்கிறேன்! பிறகு காலனுக்கெல்லாம் காலனாக இருக்கிறேன்! அந்த பாகத்தை இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறேன். முள்ளை மலராக ஆக்குகின்றார் எனில் உங்களது புத்தியில் அந்த குஷி இருக்கிறது. நீங்கள் அனைவரும் பார்வதிகள் என்று அமர்நாத் தந்தை கூறுகின்றார். இப்பொழுது நீங்கள் என் ஒருவனை நினைவு செய்தால் அமரபுரிக்கு சென்று விடுவீர்கள். மேலும் உங்களது பாவங்கள் அழிந்து விடும். அந்த யாத்திரை செய்வதனால் உங்களது பாவங்கள் அழிந்து விடாது. இவை பக்தி மார்க்கத்தின் யாத்திரைகளாகும். செலவிற்கு என்ன செய்கிறீர்கள்? என்று குழந்தைகளிடத்தில் கேட்கின்றனர். ஆனால் நாம் இவ்வாறு பதிலுரைத்தோம் என்று யாரும் எந்த செய்தியும் கூறுவது கிடையாது. இவ்வளவு பேர் பிரம்மாவின் குழந்தைகளாக, பிராமணர்களாக இருக்கின்றனர் எனில், நமக்காக நாமே செலவு செய்து கொள்வோம் அல்லவா! நமக்காகவே இராஜ்யத்தையும் ஸ்ரீமத்படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இராஜ்யமும் நாம் செய்வோம். இராஜயோகம் நாம் கற்கின்றோம் எனில் நாம் தான் செலவும் செய்வோம். சிவபாபா அழிவற்ற ஞான ரத்தினங்களை தானமாகக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆகின்றோம். எந்த குழந்தைகள் படிக்கின்றார்களோ அவர்கள் தான் செலவு செய்வார்கள் அல்லவா! நாம் நமக்காகவே செலவு செய்கின்றோம், நாம் யாரிடத்திலும் யாசிப்பதோ, நன்கொடை கேட்பதோ கிடையாது என்று புரிய வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு கேட்கின்றனர் என்று மட்டும் குழந்தைகள் எழுதுகின்றனர். அதனால் தான் யாரெல்லாம் முழு நாளும் சேவை செய்கிறார்களோ அவர்கள் இரவில் கணக்கு வைக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். இதற்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மற்றபடி பலர் வருகின்றனர், அவர்கள் அனைவரும் பிரஜைகளாக ஆகின்றனர். உயர்ந்த பதவி பிராப்தியாக அடைபவர்கள் மிகக் குறைந்தவர்கள் ஆவர். இராஜாக்கள் மிகச் சிலர் இருப்பர், செல்வந்தர்களாகவும் மிகச் சிலர் தான் ஆகின்றனர். மற்றபடி ஏழைகளாக பலர் ஆகின்றனர். இங்கும் அவ்வாறு இருக்கிறது, தெய்வீக உலகிலும் அவ்வாறு இருப்பர். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதில் வரிசைக்கிரமமாக அனைவரும் தேவைப்படுகின்றனர். தந்தை வந்து இராஜயோகம் கற்பித்து ஆதி சநாதன தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்விக்கின்றார். தெய்வீக தர்மத்தின் இராஜ்யம் இருந்தது, இப்பொழுது கிடையாது. நான் மீண்டும் ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். ஆக மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக சித்திரமும் அவ்வாறு இருக்க வேண்டும். பாபாவின் முரளி கேட்பீர்கள், செய்வீர்கள். நாளுக்கு நாள் திருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நீங்களும் தனது மனநிலையை பார்த்துக் கொண்டே இருங்கள் எவ்வளவு மாற்றங்கள் ஆகிக்கொண்டே செல்கிறதென்று. தந்தை வந்து அசுத்தத்திலிருந்து நீக்குகின்றார், யார் எந்த அளவு பலரை அசுத்தத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சேவை செய்கிறார்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவர். குழந்தைகளாகிய நீங்கள் பால் பாயசம் போன்று இனிமையாக இருக்க வேண்டும். சத்யுகத்தை விட தந்தை உங்களை இங்கு உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார். ஈஸ்வரனாகிய தந்தை கற்பிக்கின்றார் எனில் அவருக்கு தனது படிப்பில் புத்திசாலித்தனத்தை காண்பிக்கும் பொழுது தந்தையும் பலியாகி விடுவார். இப்பொழுது நான் பாரதத்தை சொர்க்கமாக்கும் தொழில் மட்டுமே செய்வேன் என்று உள்ளத்தில் நினைக்க வேண்டும். அந்த உலகிய தொழில் போன்றவைகள் செய்ய வேண்டும், செய்து கொண்டு தான் இருப்பீர்கள். முதலில் சுய முன்னேற்றம் என்பதை செய்யுங்கள். மிகவும் எளிதானது தான். மனிதர்களால் அனைத்தையும் செய்ய முடியும். இல்லறத்தில் இருந்தபடியே இராஜ்ய பதவியடைய வேண்டும், ஆகையால் தினமும் தனது கணக்கு வழக்கைப் பாருங்கள். முழு நாளின் லாபம் மற்றும் நஷ்டத்தின் கணக்கை எடுங்கள். கணக்கு பார்க்கவில்லையெனில் சீர்திருந்துவது கஷ்டமாகி விடும். தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்வது கிடையாது. யாருக்கும் நான் துக்கம் கொடுக்கவில்லை தானே? என்று தினமும் பார்க்க வேண்டும். உயர்ந்த பதவியாகும், அளவற்ற வருமானமாகும். இல்லையெனில் கடைசியில் அழ வேண்டியிருக்கும். போட்டி இருக்கிறது அல்லவா! சிலர் லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர், சிலர் ஏழைகளாகவே இருந்து விடுகின்றனர்.

 

இப்பொழுது உங்களுடையது ஈஸ்வரிய போட்டியாகும். இதில் எந்த ஓட்டப்பந்தயமும் கிடையாது. புத்தியினால் அன்பான தந்தையை நினைவு செய்தால் போதும். ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால் உடனேயே கூறி விட வேண்டும். பாபா, என் மூலம் இந்த தவறு ஏற்பட்டு விட்டது. கர்மேந்திரியங்களின் மூலம் இந்த தவறு ஏற்பட்டிருக்கிறது. சரியானது எது? தவறானது எது? என்று சிந்திக்கும் புத்தி கிடைத்திருப்பதால் இப்பொழுது தவறான காரியம் செய்யக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். தவறான காரியம் செய்து விட்டால் பாபாவை அவமானப்படுத்திருக்கிறீர்கள், பிறகு மன்னிப்பு கேட்கிறீர்கள், ஏனெனில் இப்பொழுது தந்தை இங்கு அமர்ந்திருப்பதே (உங்களைப் பற்றிய செய்திகளை) கேட்பதற்காகத் தான். ஏதாவது தவறான காரியம் செய்து விட்டால் உடனேயே கூறிவிடுங்கள் அல்லது எழுதி விடுங்கள் - பாபா, இந்த தவறான காரியம் செய்து விட்டேன், பாதி மன்னிப்பு கிடைத்து விடும். நான் கருணை காண்பிப்பேன் என்பது கிடையாது. மன்னிப்பு அல்லது கருணை யாருக்கும் கிடையாது. அனைவரும் தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் விகர்மங்கள் விநாசம் ஆகும். கடந்தவைகளும் யோக பலத்தின் மூலம் அழிந்து கொண்டே செல்லும். தந்தையினுடையவராகி பிறகு தந்தையை நிந்தனை செய்யாதீர்கள். சத்குருவை நிந்திப்பவர்கள் நிலைத்திருக்க முடியாது. மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தான் நிலைத்திருக்க முடியும். மற்ற குருக்களிடத்தில் இராஜ்யத்திற்கான சந்தர்ப்பம் (வாய்ப்பு) கிடையாது. இங்கு உங்களுக்கு இலட்சியம், குறிக்கோள் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் எந்த இலட்சியமும், குறிக்கோளும் கிடையாது. ஒருவேளை இருந்தாலும் கூட அல்பகாலத்திற்காகத் தான். 21 பிறவிகளுக்ககான சுகம் எங்கு இருக்கிறது, சிறிதளவிற்கான சுகம் எங்கு இருக்கிறது! செல்வத்தின் மூலம் சுகம் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். எவ்வளவு துக்கம் ஏற்படுகிறது! யாராவது மருத்துவமனை கட்டுகின்றனர் எனில், அடுத்த பிறவியில் நோய் குறைவாக இருக்கும். அதிகம் படித்தவர்களாக இருப்பர் என்பது கிடையாது. செல்வமும் அதிகமாக கிடைக்கும். அதற்காக அனைத்தையும் செய்கின்றனர். சிலர் தர்மசாலை உருவாக்குகின்றனர் எனில் அடுத்த பிறவியில் மாளிகை கிடைக்கும். ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது கிடையாது. ஆக தந்தை எவ்வளவு விசயங்களைப் புரிய வைக்கின்றார். சிலர் நன்றாகப் புரிந்து கொண்டு, பிறகு புரிய வைக்கின்றனர். சிலர் புரிந்து கொள்வதே கிடையாது. ஆக தினமும் கணக்கு வழக்கைப் பாருங்கள். இன்று என்ன பாவம் செய்தேன்? இந்த விசயத்தில் தோல்வி அடைந்து விட்டேன் போன்றவற்றைப் பார்க்கவும். தந்தை கட்டளை இடுகின்றார் எனில் அப்படிப்பட்ட காரியங்கள் செய்யக் கூடாது. நாம் இப்பொழுது சொர்க்கத்திற்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பது கிடையாது. பாபாவிற்கு எவ்வளவு குஷியிருக்கிறது! நான் வயோதிகனாக இருக்கிறேன், இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு இளவரசனாக ஆவேன். நீங்களும் படிக்கிறீர்கள் எனில் மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்க வேண்டும். ஆனால் தந்தையை நினைவு செய்வதே கிடையாது. தந்தை எவ்வளவு எளிய முறையில் புரிய வைக்கின்றார்! ஆங்கிலம் போன்றவைகள் படிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது! இது மிகவும் எளிதாகும். இந்த ஆன்மீக படிப்பின் மூலம் நீங்கள் மிகவும் குளிர்ச்சியாக ஆகிவிடுகிறீர்கள். இங்கு நீங்கள் தந்தையை மட்டும் நினைவு செய்து கொண்டிருந்தால் போதும், கர்மேந்திரியங்கள் குளிர்ச்சியான தாக ஆகிவிடும். உங்களுக்கு சரீரம் இருக்கிறது அல்லவா! சிவபாபாவிற்கு சரீரம் கிடையாது. கிருஷ்ணருக்குத் தான் சரீரம் இருக்கிறது. அவரது கர்மேந்திரியங்கள் குளிர்ச்சியாக இருக்கிறது, அதனால் தான் அதற்கு பெயர் வைத்து விட்டனர். இப்போது அவர் தொடர்பு எப்படி இருக்கும். அவர் இருப்பதோ சத்யுகத்தில். அவரது அங்கத்தையும் இவ்வாறு குளிர்ச்சியாக ஆக்கியது யார்? இதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஆக இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அந்த அளவிற்கு தாரணை செய்ய வேண்டும். சண்டை, சச்சரவுகள் முற்றிலும் இருக்கக் கூடாது. உண்மையே பேச வேண்டும். பொய் பேசினால் அழிந்து விடுவீர்கள்.

 

தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். நல்ல நல்ல சித்திரங்களையும் உருவாக்குங்கள், அது அனைவரிடத்திலும் செல்ல வேண்டும். நல்ல பொருட்களைப் பார்க்கின்ற பொழுது சென்று பார்க்க வேண்டும் என்று கூறுவர். புரிய வைப்பவர்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். சேவை செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கு சமம் ஆக்குவதற்கு நல்ல பிராமணிகளும் (ஆசிரியர்) தேவை. யார் தனக்குச் சமம் மேனேஜராக ஆக்குகின்றார்களோ அவர்களைத் தான் நல்ல பிராமணி என்று கூறலாம். அவர்கள் பதவியும் உயர்வாக அடைவார்கள். குழந்தை புத்தியுடையவர்களாகவும் (சிறுபிள்ளைத் தனம்) இருக்கக் கூடாது, இல்லையெனில் வெளியேற்றி விடுவார்கள். இராவண சம்பிரதாயம் அல்லவா! பின் நாட்களில் சென்டர் பாதுகாக்கும் அளவிற்கு பிராமணிகளை தயார் செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்காண முக்கிய சாரம்:

1) தந்தையிடம் தனது படிப்பின் புத்திசாலித்தனத்தை (திறமையை) நிரூபித்துக் காட்ட வேண்டும். பாரதத்தை சொர்க்கமாக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும். முதலில் தனது முன்னேற்றத்திற்கான சிந்தனை செய்ய வேண்டும். இனிமையாக (பால் பாயாசம் போன்று) இருக்க வேண்டும்.

 

2) ஏதாவது தவறு செய்து விட்டால் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தந்தை கருணை காண்பிப்பது கிடையாது, தந்தையின் நினைவின் மூலம் விகர்மங்களை அழிக்க வேணடும். நிந்தனை ஏற்படுத்தும் எந்த காரியமும் செய்யக் கூடாது.

 

வரதானம்:

தனது சக்திசாலியான நிலையின் மூலம் அனைவரின் சுப விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய மகாதானி ஆகுக.

 

பின் நாட்களில் வரக் கூடிய ஆத்மாக்கள் சிறிது அடைந்ததும் திருப்தியடைந்து விடுவார்கள். ஏனெனில் அவர்களது பாகமே துளியளவு அடைவதாகும். எனவே அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு அவர்களது பாவனைக்கான பலன் கிடைக்க வேண்டும், யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக் கூடாது, ஆகையால் இப்போதிலிருந்தே தனக்குள் சர்வசக்திகளை சேமியுங்கள். நீங்கள் தங்களது முழு சக்திசாலியான நிலை, மகாதானி நிலையில் நிலைத்திருக்கும் போது தான் எந்த ஒரு ஆத்மாவிற்கும் தனது சகயோகத்தின் மூலம், மகாதானி ஆகி கொடுக்கும் தனது கடமையின் ஆதாரத்தில், சுப பாவனை என்ற சுவிட்ச் ஆன் செய்ததும் பார்வையின் மூலம் அனைத்தையும் கொடுத்து விடுவீர்கள்.

 

சுலோகன்:

சதா ஈஸ்வரிய மரியாதைகள் படி நடந்து கொண்டே இருந்தால் மரியாதா புருஷோத்தம் ஆகிவிடுவீர்கள்.

 

 

ஓம்சாந்தி