01.05.22    காலை முரளி            ஓம் சாந்தி   13.12.90      பாப்தாதா,   மதுபன்


தபஸ்யாவின் அஸ்திவாரம் எல்லையற்ற வைராக்கியம்

இன்று பாப்தாதா சிநேகி குழந்தைகள் அனைவருக்கும் சிநேகத்தின் மலர்களை அர்ப்பித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரே பாடல் - மேரா பாபா. நாலாபுறமும் சந்திப்பைக் கொண்டாடுவதற்கான சுப ஆசைகளின் தீபங்கள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த தெய்வீகக் காட்சியை முழுக் கல்பத்திலும் பாப்தாதா மற்றும் குழந்தைகளைத் தவிர வேறு யாரும் பார்க்க இயலாது. இந்த விசித்திரமான அன்பின் மலர்கள் இந்தப் பழைய உலகத்தின் கோஹினூர் வைரத்தை விட விலை மதிக்க முடியாததாகும். இந்த மனதின் பாடலை, குழந்தைகளைத் தவிர வேறு யாராலும் பாட முடியாது. இது போன்ற தீபாவளியை யாராலும் கொண்டாட முடியாது. பாப்தாதாவுக்கு முன்னால் குழந்தைகள் அனைவரும் இமர்ஜ் ஆகியிருக் கிறார்கள். இந்த ஸ்தூல இடத்தில் அனைவரும் அமர முடியாது. ஆனால் பாப்தாதா வின் மன சிம்மாசனம் மிக விசாலமானது. அதனால் அனைவரையும் இமர்ஜ் ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவருடைய அன்பு நினைவு மற்றும் அன்பு நிறைந்த உரிமையுடன் கூடிய புகார்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு கூடவே ஒவ்வொரு குழந்தைக்கும் பதிலுக்கு பல மடங்கு அதிக அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் உரிமையுடன் சொல்கின்றனர் - நாங்கள் அனைவரும் சாகார சொரூபத்தில் சந்திப்பைக் கொண்டாட வேண்டும். பாபாவும் விரும்புகிறார், குழந்தைகளும் விரும்புகின்றனர். பிறகும் சமயத்தின் பிரமாணம் பிரம்மா பாபா அவ்யக்த ஃபரிஸ்தா ரூபத்தில் சாகார சொரூபத்தின் மூலம் அநேக மடங்கு தீவிர வேகத்தில் சேவை செய்து கொண்டு குழந்தைகளைத் தமக்கு சமமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமல்ல, ஆனால் அநேக ஆண்டுகள் அவ்யக்த சந்திப்பு, அவ்யக்த ரூபத்தில் சேவையின் அனுபவம் செய்வித்திருக்கிறார் மற்றும் செய்வித்துக் கொண்டும் இருக்கிறார். ஆக, பிரம்மா பாபா அவ்யக்தமாக இருந்தாலும் வ்யக்தத்தில் ஏன் பார்ட் நடித்தார்? சமமாக ஆக்குவதற்காக. பிரம்மா பாபா அவ்யக்தத்திலிருந்து வ்யக்தத்திற்கு வந்தார் என்றால் குழந்தைகள் பதிலுக்கு என்ன செய்ய வேண்டும்? வ்யக்தத் திலிருந்து அவ்யக்தமாக வேண்டும். சமயத்தின் பிரமாணம் அவ்யக்த சந்திப்பு, அவ்யக்த ரூபத்தில் சேவை இப்போது மிகவும் அவசியம். அதனால் அவ்வப்போது பாப்தாதா அவ்யக்த சந்திப்பின் அனுபவத் திற்கான சமிக்ஞை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதற்காகத் தபஸ்யா ஆண்டையும் கொண்டாடிக் கொண்டிருக் கிறீர்கள் இல்லையா? பெரும்பாலான குழந்தைகளுக்கு நல்ல ஊக்கம்-உற்சாகம் இருப்பதால் பாப்தாதாவுக்கு மகிழ்ச்சி. சிறுபான்மை யோர் அது போல் யோசிக்கின்றனர் - நிகழ்ச்சி நிரல் படி செய்தே ஆக வேண்டும். ஒன்று, நிகழ்ச்சி நிரல் படி செய்வது, இன்னொன்று மனதின் ஊக்கம்-உற்சாகத்தால் செய்வது. ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளுங்கள் .... நான் எதில் இருக்கிறேன்?

சமயத்தின் பரிஸ்திதிகளின் படி, சுயத்தின் முன்னேற்றத்தின் படி, தீவிர வேகத்தின் சேவையின் படி, பாப்தாதாவின் அன்புக்குப் பிரதிபலன் அளிப்பதன் படி தபஸ்யா மிகவும் அவசியம். அன்பு செலுத்துவது மிக சுலபம் மற்றும் அனைவரும் செய்கின்றனர் - இதையும் பாபா அறிவார், ஆனால் பிரதிபலன் சொரூபத்தில் பாப்தாதாவுக்கு சமமாக ஆக வேண்டும். இச்சமயம் பாப்தாதா இதைப் பார்க்க விரும்புகிறார். இதில் சிலரிலும் சிலர் தாம் வெளிப்படுகின்றனர். அனைவருக்குமே விருப்பம் உள்ளது. ஆனால் விரும்புகிறவர்கள் மற்றும் செய்கிறவர்கள் - இதில் எண்ணிக்கையின் வேறுபாடு உள்ளது. ஏனென்றால் தபஸ்யாவின் சதா மற்றும் சகஜ அஸ்திவாரம் - எல்லையற்ற வைராக்கியமாகும். அதாவது நாலாபுறம் உள்ள பற்றுக்கோடு களை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் பற்றுக்கோடுகளை ஆதாரமாக ஆக்கிக் கொண்டிருக் கிறீர்கள். சமயத்திற்கேற்றவாறு அன்பானவர் ஆக வேண்டும் மற்றும் சமயத்திற்கேற்றவாறு நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களின் சமிக்ஞையின் படி ஒரு விநாடியில் புத்தி அன்பான நிலையில் இருந்து பற்றற்றதாக ஆகிவிட வேண்டும். அது நடப்பதில்லை. எவ்வளவு விரைவாக அன்பானவர் ஆகிறீர்களோ, அவ்வளவு விலகியவராக ஆவதில்லை. அன்பானவராக ஆவதில் சாமர்த்தியசாலியாக இருக்கிறீர்கள். விலகியவராக ஆவதில் யோசிக்கிறீர்கள். தைரியம் வேண்டும். விலகியவராக ஆவது தான் பற்றுக்கோடுகளை விடுவதாகும். மற்றும் பற்றுக்கோடுகளை விட்டுவிடுவது தான் எல்லையற்ற வைராக்கிய விருத்தி ஆகும். பற்றுக்கோடுகளை ஆதாரமாக்கிக் கொண்டு பிடித்துக் கொள்வதற்கு வருகிறது. ஆனால் விட்டு விடுவதில் என்ன செய்கிறீர்கள்? பெரிய கேள்விக்குறி இட்டு விடுகிறீர்கள். சேவைக்குப் பொறுப்புதாரி (இன்சார்ஜ்) ஆவதற்கு மிக நன்றாக வருகிறது. ஆனால் பொறுப்புதாரி ஆவதோடு கூடவே தன்னுடைய மற்றும் மற்றவர்களின் பேட்டரியைச் சார்ஜ் செய்வதில் கஷ்டமாகத் தோன்றுகிறது. அதனால் இப்போது தபஸ்யா மூலம் வைராக்கிய விருத்தி உள்ளவராக ஆக வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தபஸ்யாவின் வெற்றிக்கு விசேஷ ஆதாரம் அல்லது சகஜ சாதனம் -- ஒரு சொல்லின் பாடத்தைப் பக்கா ஆக்குங்கள். இரண்டு-மூன்று எழுதுவது என்பது கஷ்டமாகி விடுகிறது. ஒன்றை எழுதுவது மிகவும் சுலபம். தபஸ்யா என்றால் ஒருவருடையவர் ஆவது. இதைத் தான் பாப்தாதா ஏக்நாமி எனச் சொல்கிறார். தபஸ்யா என்றால் மனம்-புத்தியை ஒருமுகப் படுத்துவது. தபஸ்யா என்றால் ஸ்திதியை ஏக்ரஸ் நிலையில் வைத்திருப்பது. தபஸ்யா என்றால் கிடைத்துள்ள அனைத்துக் கஜானாக்களையும் வீணாகாமல் சேமிப்பது. அதாவது சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது. ஆக, ஒருவர் என்ற பாடம் பக்கா ஆகி விட்டது இல்லையா? ஒருவர் என்ற பாடம் கஷ்டமானதா, சுலபமானதா? சுலபம் தான், ஆனால் -- அந்த மாதிரி பாஷையைப் பேச மாட்டீர்கள் இல்லையா?

மிகமிக பாக்கியவான்கள் நீங்கள். அநேக விதமான முயற்சிகளில் இருந்து விடுபட்டு விட்டீர்கள். உலகத்தினரை சமயம் செய்விக்கும் மற்றும் சமயத்தில் நிர்பந்தத்தால் செய்வார் கள். குழந்தைகளை பாபா சமயத்திற்கு முன்பாகவே தயார் செய்கிறார் மற்றும் பாபா மீதுள்ள அன்பினால் செய்கிறீர்கள். அன்பினால் செய்யவில்லை அல்லது கொஞ்சம் செய்தால் என்ன வாகும்? நிர்பந்தத்தால் செய்யத் தான் வேண்டியதிருக்கும். எல்லையற்ற வைராக்கியத்தை தாரணை செய்யத் தான் வேண்டியதிருக்கும். ஆனால் நிர்பந்தத்தால் செய்வதற்கான பலன் கிடைப்பதில்லை. அன்பிற்கான பிரத்தியட்ச பலன் வருங்கால பலன் ஆகிறது. மற்றும் நிர்பந்தத்தால் செய்பவர்கள் எங்கிருந்து கிராஸ் செய்ய வேண்டியதிருக்கும்? கிராஸ் செய்வதும் கூட கிராஸில் (சிலுவை) ஏறுவதற்கு சமமாகும். ஆக, எது பிடித்திருக்கிறது? அன்பினால் செய்வீர்களா? பாப்தாதா ஒரு சமயம் பற்றுக்கோடுகளின் பட்டியலைச் சொல்வார். அது போல் அறிந்து கொள்வதில் நீங்கள் சாமர்த்தியசாலிகள். ரிவைஸ் செய்ய வைப்பார். ஏனென்றால் பாப்தாதாவோ குழந்தைகளின் ஒவ்வொரு நாளுக்கான கால அட்டவணையை விரும்புகிற போது பார்க்க முடியும். நாள் முழுவதும் ஒவ்வொருவராகப் பார்க்கிற வேலையைச் செய்வதில்லை. சாகார பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள், அவரது பார்வை தானாகவே எங்கே விழுந்தது? உங்களது கடிதமாக இருந்தாலும் சரி, அன்றாடக் கணக்காக இருந்தாலும் சரி, ஏதாவது நடத்தை-நடவடிக்கைளாக இருந்தாலும் சரி, ஏதாவது எட்டுப் பக்கக் கடிதமாக இருந்தாலும் சரி, ஆனால் பாபாவின் பார்வை எங்கே படும்? எங்கே வழிகாட்டுதல் தர வேண்டியது இருக்குமோ, எங்கே அவசியம் இருக்குமோ, அங்கே. பாப்தாதா பார்ப்பது அனைவரையுமே தான், ஆனால் பார்ப்பதும் இல்லை. அறிந்து இருக்கிறார், அறியாமலும் இருக்கிறார். எது அவசியம் இல்லையோ, அதைப் பார்ப்பது இல்லை, அறிந்து கொள்வதும் இல்லை. மிக நல்ல விளையாட்டைப் பார்க்கிறார். அதைப் பற்றிப் பிறகு சொல்வோம். நல்லது. தபஸ்யா செய்வது, எல்லையற்ற வைராக்கிய விருத்தியில் இருப்பது சுலபம் தான் இல்லையா? பற்றுக்கோடுகளை விட்டுவிடுவது கஷ்டமாக உள்ளதா? ஆனால் ஆக வேண்டியதும் நீங்கள் தாம். கல்ப-கல்பத்தின் பிராப்திக்கு அதிகாரி ஆகியிருக்கிறீர்கள், இன்னும் அவசியம் ஆவீர்கள். நல்லது. இந்த வருடம் கல்பத்திற்கு முன்பு இருந்தவர்கள், அநேகக் கல்பங்களின் பழமை யானவர்கள் மற்றும் இந்தக் கல்பத்தின் புதிய குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆக, வாய்ப்புக் கிடைத்ததால் குஷி தான் இல்லையா? பெரும்பாலானோர் புதியவர்கள், டீச்சர்கள் பழையவர்கள். ஆக, டீச்சர்கள் என்ன செய்வீர்கள்? வைராக்கிய விருத்தியை தாரணை செய்வீர்கள் இல்லையா? பற்றுக்கோடுகளை விட்டு விடுவீர்கள் இல்லையா? அல்லது செய்யவோ விரும்புகிறோம், ஆனால் எப்படிச் செய்வது என்று அப்போது சொல்வீர்களா? நீங்கள் செய்து காட்டுபவர்களா அல்லது வெறுமனே சொல்பவர்களா? நாலாபுறங்களிலிருந்து வந்துள்ள குழந்தைகள் அனைவரையும் பாப்தாதா சாகார் ரூபத்தில் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். தைரியம் வைத்திருக்கிறீர்கள் மற்றும் பாபாவின் உதவி எப்போதுமே இருக்கிறது. அதனால் எப்போதும் தைரியமாக உதவிக்கான அதிகாரத்தை அனுபவம் செய்து கொண்டே சகஜமாகப் பறந்து செல்லுங்கள். பாபா உதவி செய்கிறார், ஆனால் பெற்றுக் கொள்பவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். வள்ளல் கொடுக்கிறார், ஆனால் எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு ஆகி விடுகிறார்கள். அது போல் சக்திக்கேற்றவாறு ஆகக் கூடாது. சதா சர்வசக்திவான் ஆக வேண்டும். அப்போது பின்னால் வருபவர்களும் முன்னால் நம்பர் பெற்றுக் கொள்வார்கள். புரிந்ததா? சர்வசக்திகளுக்கான அதிகாரத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள அனைத்து சிநேகி ஆத்மாக்கள், சதா பாபாவின் அன்புக்குப் பிரதிபலன் கொடுப்பவர்கள், ஒப்பற்ற ஆத்மாக்கள், சதா தபஸ்வி மூர்த்தி ஸ்திதியில் நிலைத்திருப்பவர்கள், பாபாவுக்கு சமீப ஆத்மாக்கள், சதா பாபாவுக்கு சமமாக ஆவதற்கான லட்சியத்தை லட்சண ரூபத்தில் கொண்டு வருபவர்கள், அப்படிப்பட்ட தேச-விதேச அனைத்து ஆத்மாக்களுக்கும் திலாராம் பாபாவின் உளப்பூர்வமான அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

தாதிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு: அஷ்ட சக்திதாரி, இஷ்ட மற்றும் அஷ்டமாக இருக்கிறீர்கள் இல்லையா? அஷ்டம் என்பதன் அடையாளம் என்ன என்று அறிவீர்களா? ஒவ்வொரு கர்மத்திலும் சமயத்தின் படி, பரிஸ்திதியின் படி, ஒவ்வொரு சக்தியையும் கர்மத்தில் கொண்டு வருபவர்கள். அஷ்ட சக்திகள் இஷ்ட தேவிகளாகவும் ஆக்கி விடுகிறது. மற்றும் அஷ்டமாகவும் ஆக்கி விடுகிறது. அஷ்ட சக்திதாரிகள் நீங்கள். அதனால் அஷ்ட புஜங்களைக் காட்டுகின்றனர். விசேஷமாக எட்டு சக்திகள் உள்ளனர். அவ்வாறோ அநேகர் உள்ளனர், ஆனால் எட்டில் பெரும்பான்மையோர் வந்து விடுகின்றனர். விசேஷ சக்திகளை சமயத்தில் காரியத்தில் கொண்டுவர வேண்டும். எப்படி சமயமோ, எப்படி பரிஸ்திதியோ, அப்படி ஸ்திதி இருக்க வேண்டும். இதைத் தான் அஷ்ட மற்றும் இஷ்ட எனச் சொல்வது. ஆக, அத்தகைய குரூப் தயார் தானே? வெளிநாடுகளில் எவ்வளவு பேர் தயாராயிருக்கிறீர்கள்? எட்டில் வரக்கூடியவர்கள் தாம் இல்லையா? நல்லது.

(அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் சந்த்ரி தாதி சரீரம் விட்டுவிட்டார்கள் - 13.12.1990)

நல்லது. அனைவரும் போய்த்தான் ஆக வேண்டும். எவர்ரெடியாக இருக்கிறீர்களா, அல்லது எனது சென்டர், இப்போது மாணவர்களுக்கு என்னவாகும்? எனது-எனது என்பதோ நினைவு வராது இல்லையா? அனைவரும் சென்று தான் ஆக வேண்டும், ஆனால் ஒவ்வொருவரின் கணக்கு-வழக்கும் அவரவருடையது. கணக்கு-வழக்கை முடிக்காமல் யாரும் செல்ல முடியாது. அதனால் அனைவரும் குஷியோடு விடை கொடுங்கள். அனைவருக்குமே பிடித்திருந்தது இல்லையா? இது போல் செல்வது நல்லது இல்லையா? ஆக, நீங்களும் கூட எவர்ரெடி ஆகிச் செல்ல வேண்டும். நல்லது.

பார்ட்டிகளோடு அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1- டில்லி மற்றும் பஞ்சாப் இரண்டுமே சேவையின் ஆரம்ப ஸ்தானங்கள். ஸ்தாபனையின் இடம் சதா மகத்துவ பூர்வமாகப் பார்க்கப் படுகின்றது. மகிமை பாடப்படுகின்றது. எப்படி சேவையில் ஆரம்ப ஸ்தானம் உள்ளதோ, அது போல் ஸ்திதியில் ஆரம்ப ரத்தினமாக இருக்கிறீர்களா? இடத்தோடு கூடவே ஸ்திதிக்கும் மகிமை உள்ளது இல்லையா? ஆதி ரத்தினம் என்றால் ஒவ்வொரு ஸ்ரீமத்தையும் வாழ்க்கையில் கொண்டு வருவதற்கான ஆரம்பம் செய்பவர்கள். வெறுமனே கேட்பவர்கள், சொல்பவர்கள் இல்லை. செய்பவர்கள். ஏனென்றால் கேட்பவர்கள், சொல்பவர்களோ அநேகர் உள்ளனர். ஆனால் செய்பவர்கள் கோடியில் ஒருவர் தாம். ஆக, நாம் கோடியில் ஒருவர் என்ற நஷா உள்ளதா? இந்த ஆன்மிக நஷா, மாயாவின் போதைகளில் இருந்து விடுவித்து விடும். இந்த ஆன்மிக நஷா பாதுகாப்பிற்கான சாதனமாகும். எந்த ஒரு மாயாவின் நஷாவாயினும் - அணிவதற்கு, உண்பதற்கு, பார்ப்பதற்கு - தன் பக்கம் கவர்ந்திழுக்க முடியாது. அந்த மாதிரி நஷாவில் இருக்கிறீர்களா அல்லது மாயா கொஞ்சம்- கொஞ்சம் கவர்ந்திழுக்கிறதா? இப்போது புத்திசாலி ஆகி விட்டீர்கள் இல்லையா? மாயாவுக்கும் புத்தி உள்ளது. புத்திசாலிகள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். புத்திசாலி எப்போதாவது ஏமாற்ற மடைந்தால் அவரை என்னவென்று சொல்வார்கள்? புத்திசாலி, ஆனால் ஏமாந்து போனார்! ஏமாறுவது என்றால் துக்கத்தை வரவழைப்பது. ஏமாறுகிறீர்கள் என்றால் அதனால் துக்கம் ஏற்டுகிறது இல்லையா? துக்கத்தை யாராவது பெற்றுக் கொள்ள விரும்புவார்களா என்ன? அதனால் சதா ஆதி ரத்தினம், அதாவது ஒவ்வொரு ஸ்ரீமத்தின் ஆரம்பத்தையும் தனது வாழ்க்கை யில் செய்பவர்கள். அது போல் இருக்கிறீர்களா? அல்லது முதலில் மற்றவர்கள் செய்யட்டும், பிறகு நாம் செய்யலாம் என்று அந்த மாதிரி பார்க்கிறீர்களா? இவர் செய்யவில்லை என்றால் நாம் எப்படிச் செய்வது? செய்வதில் முதலில் நான் என்று இருக்க வேண்டும். மற்றவர் மாறட்டும், பிறகு நான் மாறுகிறேன் அந்த மாதிரி இல்லை. யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். மற்றும் எவ்வளவு அடைவார்கள்? ஒன்றுக்குப் பல கோடி மடங்கு. ஆக, செய்வதில் மஜா உள்ளது இல்லையா? ஒன்றைச் செய்யுங்கள் மற்றும் பல கோடி மடங்கு பெறுங்கள். இதிலோ பிராப்தி மேல் பிராப்தி. அதனால் ஸ்ரீமத்தை நடைமுறையில் கொண்டு வருவதில் முதலில் நான். மாயாவின் வசமாவதில் முதலில் நான் என்று அப்படி இல்லை. ஆனால் இந்தப் புருஷார்த்தத்தில் முதலில் நான் - அப்போது தான் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அனுபவம் செய்வீர்கள். வெற்றி நிச்சயம் கிடைத்தே விட்டது. கொஞ்சம் வழியை மட்டும் மாற்றி அமைத்து விடுகிறீர்கள். மாற்றி விடுவதால் இலக்கு தூரமாகி விடுகிறது. நேரம் பிடிக்கிறது. ஒருவர் தவறான பாதையில் செல்கிறார் என்றால் இலக்கு தூரமாகி விடும் இல்லையா? ஆகவே அந்த மாதிரி செய்யக்கூடாது. இலக்கு முன்னாலேயே உள்ளது. வெற்றி நிச்சயம். எப்போதாவது கடின முயற்சி செய்ய வேண்டி உள்ளதென்றால் (தராசில்) அன்பின் தட்டு லேசாகி விடுகிறது. அன்பு இருந்தால் கடின முயற்சி செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் பாபா அநேக புஜங்களுடன் உங்களுக்கு உதவி செய்வார். அவர் தம்முடைய புஜங்களால் ஒரு விநாடியில் காரியத்தை வெற்றியாக்கி விடுவார். புருஷார்த்தத்தில் சதா பறந்து கொண்டே இருப்பீர்கள். பஞ்சாப் காரர்கள் பறக்கிறீர்களா? அல்லது நீங்கள் பயப்படுகிறவர்களா? பக்கா அனுபவி ஆகி விட்டிருக்கிறீர்களா? யாராவது பயப்படுகிறவர்கள் இருக்கிறீர்களா? என்னவாகும், எப்படியாகும்? அப்படி இல்லை. அவர்களுக்கும் கூட சாந்தியின் தானம் கொடுப்பவர்கள் நீங்கள். யார் வந்தாலும் சாந்தி பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும். வெறும் கையோடு செல்லக் கூடாது. ஞானம் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை, ஆனால் சாந்தியின் வைப்ரேஷன் கூட அமைதிப படுத்தி விடும். நல்லது.

2- நாலாபுறத்திலிருந்தும் வந்துள்ள சிரேஷ்ட ஆத்மாக்கள் அனைவரும் பிராமணர்கள். ராஜஸ்தானியும் இல்லை, மகாராஷ்ட்ராவும் இல்லை, மத்தியப் பிரதேசத்தவரும் இல்லை நீங்கள் அனைவரும் ஒருவரே! இச்சமயம் அனைவரும் மதுபன் நிவாசிகள். பிராமணர்களின் ஒரிஜினல் இருப்பிடம் மதுபன். சேவைக்காக வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறீர்கள். ஒரே இடத்தில் அமர்ந்து விடுவீர்களானால் நாலாபுறங்களின் சேவை எப்படி நடைபெறும்? ஆகவே சேவைக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறீர்கள். லௌகிகத்தில் வியாபாரி யாக இருக்கலாம், அல்லது அரசாங்க ஊழியராக இருக்கலாம். அல்லது தொழிற்சாலை யில் வேலை செய்பவராக இருக்கலாம், ஆனால் ஒரிஜினல் தொழில் ஈஸ்வரிய சேவை செய்பவர் தான். மாதாக்களும் கூட வீட்டில் இருந்தவாறே ஈஸ்வரிய சேவையில் இருக்கிறார் கள். ஞானத்தை யாராவது கேட்டாலும் சரி, கேட்கவில்லை என்றாலும் சரி, சுப பாவனை மற்றும் சுப விருப்பத்தின் வைப்ரேஷன் மூலமாகவும் மாறுகின்றனர். வாய்மொழி மூலம் செய்யும் சேவை மட்டுமே சேவை என்பது கிடையாது. சுப பாவனை வைப்பதும் சேவை தான். ஆக, இரண்டு வித சேவைகளையுமே செய்வதற்கு வருகிறது இல்லையா? யாராவது உங்களை நிந்தனை செய்தாலும் நீங்கள் சுப பாவனை, சுப விருப்பத்தை விட வேண்டாம். பிராமணர்களின் வேலை எதையாவது கொடுப்பது. ஆக, இந்த சுப பாவனை, சுப விருப்பம் வைப்பதும் கூட கற்றுத் தருவது தான். அனைவரும் வாய்மொழியால் மாறிவிட மாட்டார்கள். எப்படிப் பட்டவர் களாக இருந்தாலும் சரி, ஏதேனும் கொஞ்சம் துளியை அவர்களுக்குக் கொடுங்கள். பக்கா (உறுதியான) இராவணனாக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும் சரி. அநேக மாதாக்கள் சொல்கிறார்கள் இல்லையா - எங்கள் உறவினர் பக்கா இராவணனாக இருக்கிறார், மாறக் கூடியவராக இல்லை. அத்தகைய ஆத்மாக்களுக்கும் கூட தங்களின் கஜானாவில் இருந்து சுப பாவனை, சுப விருப்பத்தின் துளியை அவசியம் கொடுங்கள். யாராவது நிந்தனை செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாயிலிருந்து என்ன வெளிப் படுகிறது? இவர்கள் பிரம்மா குமாரிகள், அதனால் பிரம்மாவை நினைவு செய்கின்றனர். நிந்தனையும் செய்கிறார்கள். ஆனாலும் பிரம்மா என்றோ சொல்லவே செய்கிறார்கள். பிறகும் தந்தையின் பெயரையோ சொல்கிறார்கள் இல்லையா? தெரிந்தாலும் சரி, தெரியவில்லை என்றாலும் சரி, பிறகும் நீங்கள் அவர்களுக்குத் துளியைக் கொடுங்கள். அது போல் துளியைக் கொடுக்கிறீர்களா அல்லது அவர்கள் கேட்பதில்லை என்றால் அவர்களை விட்டுவிடுகிறீர்களா? விட்டுவிட வேண்டாம். இல்லையென்றால் பின்னால் உங்கள் காதைப் பிடித்துக் கொள்வார்கள். புகார் சொல்வார்கள் - நாங்களோ புத்தி இல்லாமல் இருந்தோம், நீங்கள் ஏன் கொடுக்கவில்லை? ஆக, காதைப் பிடிப்பார்கள் இல்லையா? நீங்கள் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள், யார் பெற்றுக் கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி. பாப்தாதா தினந் தோறும் குழந்தைகளுக்கு அவ்வளவு கஜானா தருகிறார். சிலர் முழுமையாக அடைகிறார்கள், சிலர் அவர்களின் சக்திக் கேற்றவாறு பெறுகிறார்கள். பிறகு பாப்தாதா சில நேரம் கேட்பார் - நான் கொடுக்க மாட்டேனா? ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை? ஆக, பிராமணர்களின் கடமை கொடுப்பதாகும். வள்ளலின் குழந்தைகள் இல்லையா? அவர்கள் நன்றாக உள்ளது என்று சொன்ன பிறகு நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால் பிறகு பெறுகிறவர் ஆகிறீர்கள். பெறுகிறவர் ஒரு போதும் வள்ளலின் குழந்தைகள் ஆக முடியாது. தேவதை ஆக முடியாது. நீங்கள் தேவதை ஆகப்போகிறவர்கள் இல்லையா? தேவதையின் உடை தயாராக உள்ளது இல்லையா? அல்லது இன்னும் தைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா? வெளுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது பிரஸ் (அயர்னிங்) மட்டும் மிச்சம் உள்ளதா? தேவதையின் உடை முன்னால் தென்பட வேண்டும். இன்று ஃபரிஸ்தா, நாளை தேவதை. எவ்வளவு முறை தேவதை ஆகியிருக்கிறீர்கள்? ஆக, சதா தன்னை வள்ளலின் குழந்தை மற்றும் தேவதை ஆகப்போகிறோம் - இதையே நினைவு வையுங்கள். வள்ளலின் குழந்தைகள் ஒரு போதும் பெற்றுக் கொண்டு கொடுக்க மாட்டார்கள். மரியாதை கிடைக்கட்டும், மதிப்புக் கொடுத்தால் நானும் கொடுப்பேன் - அப்படி இல்லை. சதா வள்ளலின் குழந்தைகள், கொடுப்பவர்கள். அத்தகைய நஷா சதா இருக்கிறது இல்லையா? அல்லது சில நேரம் குறைகிறது, சில நேரம் கூடுகிறது - அப்படியா? இன்னும் மாயாவுக்கு விடை கொடுக்க வில்லையா? மெது-மெதுவாகக் கொடுக்கக் கூடாது - அந்த அளவுக்கு நேரம் இல்லை. ஒன்று, தாமதமாக வந்திருக்கிறீர்கள். பிறகு மெது-மெதுவாகப் புருஷார்த்தம் செய்வீர்களானால் போய்ச் சேர முடியாது. நிச்சயம் ஏற்பட்டது, நஷா ஏறியது மற்றும் பறந்து விடுங்கள். இப்போது பறக்கும் கலையின் சமயம். பறப்பது வேகமாக உள்ளது இல்லையா? நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் - பறக்கும் நேரத்தில் வந்திருக்கிறீர்கள். ஆக, சதா தன்னை அந்த மாதிரி அனுபவம் செய்யுங்கள் - நாம் மிகப்பெரிய பாக்கியவான். இப்படிப்பட்ட பாக்கியம் பிறகு கல்பம் முழுவதிலும் கிடைக்காது. ஆகவே வள்ளலின் குழந்தைகள் ஆகுங்கள். பெறுவதற்கான சங்கல்பம் கூட இருக்கக் கூடாது. பைசா கொடுக்க வேண்டும், துணிமணி கொடுக்க வேண்டும், உணவு கொடுக்க வேண்டும் - வள்ளலின் குழந்தைக்கு அனைத்தும் தானாகவே பிராப்தியாகும். கேட்பர்களுக்கு (யாசிப்பவர்)க் கிடைக்காது. வள்ளல் ஆவீர்களானால் தானாகவே கிடைத்துக் கொண்டிருக்கும். நல்லது.

வரதானம்:
யதார்த்த நினைவு மூலம் சர்வசக்திகள் நிறைந்தவராக ஆகக்கூடிய சதா சஸ்திரதாரி (ஆயுதம் தரித்தவர்) கர்மயோகி ஆகுக.

மிக சரியான நினைவின் அர்த்தம் சர்வ சக்திகளால் சதா நிறைந்திருப்பது. சூழ்நிலை என்ற விரோதி வருகிறது, ஆனால் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் சஸ்திரதாரி எனச் சொல்லப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு கர்மத்திலும் நினைவு இருக்க வேண்டும். அப்போது வெற்றி கிடைக்கும். எப்படி கர்மம் இல்லாமல் ஒரு விநாடி கூட இருக்க முடியாது, அது போல் எந்த ஒரு கர்மத்தையும் யோகம் இல்லாமல் செய்ய முடியாது. அதனால் கர்மயோகி, சஸ்திரதாரி ஆகுங்கள். மேலும் சமயத்தில் சர்வசக்திகளையும் கட்டளைப்படி பயன்படுத் துங்கள் - அப்போது உங்களை மிக சரியான யோகி எனச் சொல்வார்கள்.

சுலோகன்:
யாருடைய சங்கல்பம் மற்றும் கர்மம் உயர்ந்ததாக உள்ளதோ, அவர்கள் தாம் மாஸ்டர் சர்வசக்திவான்.