01-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! எப்போதும் ஈஸ்வரிய சேவையில் பிஸியாக இருந்தால், பாபாவிடம் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும், குஷியின் அளவு ஏறிக் கொண்டே இருக்கும்.

கேள்வி:
பார்வையிலேயே திருப்தி அடையும் குழந்தைகளின் மனதில் என்ன குஷி இருக்கிறது?

பதில்:
அவர்களின் மனதில் சொர்க்கத்தின் இராஜ்ய பதவியின் குஷி இருக்கிறது. ஏனென்றால் பாபாவின் பார்வை பட்டிருக்கிறது என்றால் சொத்துக்கு அதிகாரி ஆகிவிடலாம். பாபாவில் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

கேள்வி:
பாபா குழந்தைகளுக்குத் தினந்தோறும் விதவிதமான முறையில் புதுப்புது கருத்துக்களை ஏன் கூறுகின்றார்?

பதில்:
ஏனென்றால் குழந்தைகளின் பல பிறவிகளின் மனோ விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். குழந்தைகள் பாபா மூலமாகப் புதுப்புது கருத்துக்களைக் கேட்கும் போது தான் பாபாவின் மீது அன்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

பாடல்:
நீங்கள் இரவெல்லாம் தூங்கியே கழித்தீர்கள்....

ஓம் சாந்தி.
குழந்தைகள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவும் ஆத்மாவையும் சரீரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருகிறீர்கள். பார்ப் பதில் ஆனந்தம் வருகின்றதா? அல்லது கேட்பதில் ஆனந்தம் இருக்கின்றதா? ஏனென்றால், நிறையக் கேட்டாகி விட்டது. நிறைய ஞானம் கேட்டுள்ளோம். நீங்கள் நம்பர் ஒன் பக்தர்கள். நீங்கள் தான் நிறையப் பக்தி செய்திருக்கிறீர்கள். வேதம், சாஸ்திரம், கிரந்தம், கீதை, காயத்ரி ஜபம், தவம் போன்ற அனைத்தையும் படித்திருக்கிறீர்கள். நிறையக் கேட்கிறார்கள். எப்போதிலி ருந்து இதைக் கேட்கிறீர்கள் எனப் பாபா புரிய வைக்கிறார். எப்போதிலிருந்து இது வந்ததோ நிறையக் கேட்டிருக்கிறீர்கள். மற்றபடிப் பாபாவை பார்ப்பது என்பது இப்போது தான். பார்வை யிலேயே முழுத் திருப்தி கிடைத்து விடுகிறது. பார்வையிலேயே திருப்தி அளிக்கக் கூடியவர் சுவாமி கீந்தா சத்குரு..... என்ற சுலோகன் கூட இருக்கிறது. குருவாகவும் இருக்கிறார் மணப் பெண்களுக்கு சுவாமியாகவும் இருக்கிறார். கண் பார்வையில் அமர்ந்திருக்கிறார். பார்வை யினால் தான் பாபாவை அறிகிறார்கள். அவரிடமிருந்து நமக்கு உலகத்தின் அதிபதி பதவி கிடைக்கிறது. பாபாவைப் பார்ப்பதால் மனம் குஷி அடைகிறது. ஏனென்றால் பாபாவிடமிருந்து தான் அனைத்தும் கிடைக்கிறது. பாபாவிற்குத் தான் அனைத்தும் அடங்கி இருக்கின்றது. பாபா கிடைத்து விட்ட பிறகு அவர் முன்பாக அமர்ந்தால் நிச்சயமாகக் குழந்தைகளுக்குச் சொர்க்கத் தின் சக்கரவர்த்திப் பதவியின் போதை ஏறும். முதலில் அப்பாவின் போதை, பிறகு ஆஸ்தி சக்கரவர்த்தியின் போதை நாம் இப்போது பாபாவிற்கு முன்பு இருக்கிறோம் என அறிகிறோம். தேக உணர்வு இப்போது போய்க் கொண்டிருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இந்தச் சரீரத்துடன் சுழல்கின்றோம். நடிப்பை நடித்து நடித்து இப்போது நம்முடைய பாபாவின் முன்பு அமாந்திருக் கிறோம். பாபாவுடன் சொத்தின் மகிழ்ச்சியும் இருக்கிறது. குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது நாங்கள் வக்கீல், இன்ஜீனியர், சக்கரவர்த்தி இராஜாவின் குழந்தை, நான் இராஜ்யத்திற்கு அதிபதி என்பது புத்தியில் வருகிறது. இங்கே பாபாவிடமிருந்து நமக்குச் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவைப் பார்ப்பதால் குழந்தைகளுக்கு நிலையான மகிழ்ச்சி இருக்க வேண்டும். இதற்குத் தான் ஆன்மீக உரையாடல் எனக் கூறப்படுகிறது. அனைவருக்கும் சுப்ரீம் தந்தையாக இருக்கக் கூடியவர் வந்து ஆத்மாக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆத்மா இந்த உடல் மூலமாகக் கேட்கிறது. இந்த ஒரு முறை தான் இவ்வாறு நடக்கிறது. பாபாவை நினைவு செய்து செய்து அவர்கள் வரும் போது பாபாவைப் பார்க்கும் போது 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அளித்து விடுகிறார். இது குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். குழந்தைகள் அதையும் மறந்து விடுகிறார்கள் மறக்கக் கூடாது. பாபாவின் பார்வையில் இருக்கும் போது தான் நாம் பாபாவுடன் இருக்கின்றோம் என நினைக்கிறார்கள். பாபாவைப் பார்க்கும் போது குஷியின் அளவு அதிகமாகிறது. மேலும் தந்தை வந்து புதுப்புது கருத்துக்களைப் புரிய வைக்கின்றார். தந்தையிடம் குழந்தைகளுக்கு முழு அன்பு இருக்க வேண்டும். ஆத்மா, தன்னுடைய மனோ விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். ஏனென்றால், பிரிந்திருந்தது. பல விதமான துக்கங்களைப் பார்த்திருக்கிறார்கள். இப்போது எதிரில் இருக்கிறார் என்றால் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். பாபாவிற்கு முன்பு இருக்கும் போது மகிழ்ச்சி அடைகிறீர்களா? அல்லது பாபா விடமிருந்து தொலைவில் இருந்தாலும் இந்த மகிழ்ச்சி இருக்கிறதா? வெளியே நிறைய விஷயங்கள் கேட்பதால் புத்தி அந்தப் பக்கம் செல்கிறது என விவேகம் கூறுகிறது. மதுபனில் இருக்கக் கூடிய குழந்தைகள் எதிரில் கேட்கிறார்கள். பாபா அன்புடன் ஈர்க்கிறார். பாருங்கள். உங்களுடைய பாபா எவ்வளவு இனிமையானவர்! எவ்வளவு அன்பானவர்! உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்குத் தகுதி அடைய வைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளே! சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். இப்போது நாடகத்தின் படி அனைத்தையும் இழந்து விட்டீர்கள். இராஜ்யத்தை இழத்தல் மற்றும் பெறுதல் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. நீங்கள் இந்த விஷயத்தை அறிகிறீர்கள். உலகத்தில் கோடிக்கணக்கான ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் கோடியில் ஒரு சிலர் தான் என்னை அறிந்திருக்கிறார்கள். நான் யார்? எப்படி இருக்கிறேன், நான் யாராக இருக்கிறேனோ, எப்படி இருக்கிறேனோ, என் மூலமாக என்ன கிடைத்தது? இதைப் புரிந்து கொண்டிருந்தாலும் மாயை மறக்க வைத்து விடுவது அதிசயமாக இருக்கிறது!

எதிரில் இருப்பவர்களை மாயை மறக்க வைக்காது என்பது இல்லை. எதிரில் இருப்பவர் களையும் மாயை மறக்க வைக்கிறது. சிவபாபாவின் மீது முழு அன்பு வைக்க வேண்டும். பாபாவிடமிருந்து நாம் உயர்ந்த ஆஸ்தியை அடைய அன்பை எப்படி அதிகரிப்பது?. பாபா சேவை செய்யுங்கள் என்கிறார். பாபா குழந்தைகளின் சேவையைச் செய்கிறார். தூர தேசத்திலிருந்து பாபா வந்திருக்கிறார் எனக் குழந்தைகள் அறிகிறீர்கள். நிச்சய புத்தி குழந்தைகளுக்கு ஒரு போதும் ஏற்ற இறக்கம் வராது. குழப்பம் அடையக் கூடாது. ஆனால் மாயை மிகவும் வலிமையானது. பாபாவோ அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். மனிதர்களைத் தேவதையாக மாற்றுகிறார். இந்தப் பள்ளிக் கூடமே தேவதைகளாக மாறக் கூடிய தாகும். தூய்மையான உலகத்திற்கு அதிபதியாவதற்குக் கடினமான உழைப்பு வேண்டும். என்னை மட்டும் நினையுங்கள் எனப் பாபா கூறுகிறார். மனிதர்கள் இறக்கும் போது இராம், இராம் எனக் கூறுங்கள், அவரை நினையுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால் இராமரை அறியாததால் நினைவினால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்குப் பாபாவின் முழு அறிமுகம் இருக்கிறது. நீங்கள் வருவதே சிவபாபாவிடம். அவர் நிராகாரர், படைக்கக் கூடியவர். எப்படிப் படைப்பார்? பிரஜாபிதா பிரம்மாவிற்குக் கூடப் படைப்பவர் என்கிறார்கள். பிரம்மா மூலமாக மனித சிருஷ்டி படைக்கப்படுகிறது. ஆகவே, பிரஜாபிதா பிரம்மா என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் பிராமணன் ஆகிவிட்டீர்கள். நாம் சிவபாபாவின் பேரக் குழந்தைகள், பிரம்மாவின் குழந்தை களாக இருக்கின்றோம் என்று உங்களுடைய ஆத்மா நன்கு அறிகிறது. நம்முடைய விகர்மம் அழிந்து போகட்டும், நாம் வெற்றி மாலையில் சுழல வேண்டும் என்றால், பாபாவை நன்கு நினைக்க வேண்டும் எனக் குழந்தைகள் அறிகிறீர்கள். பிறகு நீங்கள் கர்ம யோகியாகவும் இருக்கிறீர்கள். வீடு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் தாமரை மலருக்குச் சமமாகத் தூய்மையாக வேண்டும். இந்த எடுத்துக் காட்டு எந்த ஒரு சந்நியாசிக்கும் பொருந்தாது. அவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரைச் மலருக்குச் சமமாகத் தூய்மை யாகவில்லை. யாருக்கும் கூற முடியாது. யார் எப்படி இருக்கிறார்களோ அவர்கள் அப்படியே ஆக்குவார்கள். தாமரை மலருக்குச் சமமாகத் தூய்மையாகுங்கள் என்று சந்நியாசிகள் கூற முடியாது. ஒரு வேளை பிரம்மத்தை நினையுங்கள் என்று கூறினால் அதுவும் முடியாது. நீங்கள் வீடு வாசலை விட்டு விட்டீர்கள். நாங்கள் எப்படி விடுவோம் என்பார்கள். நீங்கள் இல்லறத்தில் இருக்க முடியாது என்றால், மற்றவர் களுக்கு எப்படிக் கூறலாம்? அவர்கள் இராஜயோகத்தின் பாடத்தைக் கற்பிக்க முடியாது. இப்போது நீங்கள் அனைத்து தர்மத்தினரின் (மதத்தினர்) இரகசியத்தைப் புரிந்து கொண்டீர்கள். ஒவ்வொரு தர்மத்தினரும் அவரவர் சமயத்தில் வர வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். சத்யுகத்திற்கு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் வேண்டும். மற்ற தர்மத்தைச் சார்ந்த மனிதர்கள் தேவதைகளாக மாற முடியாது. அவர்கள் முக்திக்குப் போக வேண்டும். சொர்க்கத்தில் தான் சுகம் இருக்கிறது. நாம் தேவிதேவதையாக மாறும் போது மற்ற தர்மத்தினர் முக்திக்குச் செல்வார்கள். எது வரை நாம் ஜீவன் முக்தி தாமம் சொர்க்கத்திற்குச் செல்ல வில்லையோ, அது வரை யாரும் முக்திக்குப் போக முடியாது சொர்க்கம் மற்றும் நரகம் ஒன்றாக இருக்க முடியாது. நாம் ஜீவன் முக்தியின் ஆஸ்தியைப் பெறுகிறோம் என்றால், வாழ்க்கை பந்தனத்தில் இருப்பவர்கள் இருக்க முடியாது. இச்சமயம் சங்கமம் என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் தான் கல்பத்தின் சங்கமத்தில் பாபாவை சந்திக்கிறீர்கள். வேறு யாரும் சந்திக்க முடியாது. இது கலியுகம் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். இப்போது நாம் கலியுகத் தில் இல்லை. பாபாவிடமிருந்து சொர்க்கத்திற்காக மீண்டும் ஆஸ்தியை அடைந்துக் கொண்டி ருக்கிறோம். நாம் உயிருடன் இறந்து பாபாவுடையவர் ஆகியிருக்கிறோம். யார் தத்தெடுக்கப் பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு உலகைப் பற்றியும் தெரிந்திருக்கிறது. இன்னாருடையவராக இருந்தோம். இப்போது இன்னாருடையவராக மாறி இருக்கிறோம். அவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் போன்ற அனைவரையும் அறிவார்கள். இரண்டு தரப் பினரையும் தெரிந்திருப்பார்கள். இவைகளிலிருந்து நாம் நங்கூரத்தை எடுத்து விட்டோம் எனக் குழந்தைகள் நீங்கள் அறிகிறீர்கள். இப்போது நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தினரோடு நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பகவான் தன்னுடைய குழந்தைகளிடம் அதாவது பரம்பிதா பரமாத்மா சாலிகிராம் குழந்தைகளிடம் பேசிக் கொண்டி ருக்கின்றார். பகவான் வர வேண்டும். ஆனால் அறியவில்லை. பாபாவை அறியாத காரணத்தால் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இவ்வளவு எளிதான விஷயத்தை யாரும் அறியவில்லை. நினைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நாம் சரீரத்தை எடுத்து நடிப்பை நடிக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் பரந்தாமத் திலிருந்து வருகின்றோம். அங்கே பரமபிதா பரமாத்மாவும் வசிக்கின்றார். மனிதர்கள் ஆத்மா வையும் பரமாத்மாவையும் அறியவில்லை. எப்படிப் பகவான் வந்து சந்திப்பார், என்ன செய்வார், யாரும் அறியவில்லை. கீதையில் அனைத்தையும் தப்பாக எழுதி விட்டனர். பெயரே மாறி விட்டது. நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்களா எனப் பாபா கேட்கிறார். நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்களா என்று கிருஷ்ணர் கேட்க முடியாது. அவரை முழு உலகத்தினரும் அறிந்திருக்கிறார்கள். அவர் ஞானத்தை அளிக்க முடியாது. பகவான் ரூபத்தை மாற்றுகிறார், ஆனால் கிருஷ்ணராக இல்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும். அவர் மனித உடலில் வருகிறார். கிருஷ்ணரின் உடலில் கிடையாது. இவர் பிரம்மா. அவர் கிருஷ்ணரின் ஆத்மா தான் . சில விஷயங்களை மட்டும் மறந்து போய் இருக்கிறார்கள். இது கிருஷ்ணரின் 84-வது பிறவியின் ஆத்மா. பிறகு அவரே ஆதியில் கிருஷ்ணர் ஆகிறார். கடைசிப் பிறவியில் கிருஷ்ணர் பதவி அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இது எவ்வளவு ஆழமான விஷயமாகும். சிறிதளவு விஷயம் மறந்து போய்விட்டது. இதில் பெரிய செப்படி வித்தை இருக்கிறது.

நாம் கிருஷ்ணரின் குலத்தினராக இருந்தோம் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது சிவபாபா விடமிருந்து மீண்டும் இராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய புத்தியில் கிருஷ்ணர் பதியவில்லை. மனிதர்களோ கிருஷ்ண பகவான் வாக்கு எனக் கூறிவிடுகிறார்கள், எதுவும் தெளிவாக இல்லை. கீதையில் பஞ்ச பாண்டவர்கள் தப்பித்தனர் எனக் காட்டப்பட்டுள்ளது. கல்பத்தின் ஆயுளும் இலட்சக்கணக்கான வருடங்கள் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு எளிதான விஷயங்களைக் கூட மனிதர்கள் அறியவில்லை. நாம் தான் சூரிய வம்சத்தின் குலத்தினராக இருந்தோம். இப்போது சூரிய வம்சத்திலிருந்து சந்திர வம்சத்தில் வந்திருக் கின்றோம் என்பதை நீங்கள் எவ்வளவு சைகையால் புரிந்து கொள்ள முடிகிறது. மீண்டும் பிராமணனிலிருந்து தேவதை யாகிறீர்கள். வர்ணங்களைக் கூடப் புத்தியில் வைக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் வர்ணங்களைக் கூடப் பாதியாக்கி விட்டனர். உச்சி குடுமியாகிய பிராமணனையும், சிவபாபாவையும் மறந்து விட்டனர். மற்றபடி தேவதை, சத்திரியர், வைசியர், சூத்திரனைக் காண்பித்து விட்டனர். பிராமணர்கள் நிச்சயம் வேண்டும் அல்லவா.? பிரம்மாவின் வாரிசுகள் எங்கே சென்றனர்?. இது யாருடைய புத்தியிலும் இல்லை. உங்களுக்குப் பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கிறார். நீங்கள் நன்கு புத்தியில் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஞானம் பாபாவின் புத்தயில் இருக்கிறதோ அது உங்களுடைய புத்தயிலும் இருக்க வேண்டும். நான் ஆத்மாக்களாகிய உங்களை எனக்குச் சமமாக மாற்றுகிறேன். சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் எனக்குள் என்ன இருக்கிறதோ அது உங்களுடைய புத்தியிலும் இருக்கிறது. புத்திசாலி வேண்டும். பாபாவுடன் யோகமும் இருக்கட்டும். மேலும் அடிக்கடி விசாரச் சாகர மந்தனமும் (ஞானச் சிந்தனை) நடந்து கொண்டே இருக்கட்டும். இப்போது நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். பாபா முற்றிலும் எளிதாகப் புரிய வைக்கிறார் என்பதைப் புரிந்துக் கொள்கிறீர்கள். ஆத்மா பரமாத்மா...... என்கிறார்கள். சத்குரு தரகர் ரூபத்தில் படிக்க வைக் கின்றார். தரகர் மற்றும் வியாபாரம் செய்விக்கக் கூடியவர். பாபா இவர் மூலமாக வந்து தன்னுடன் வியாபாரம் செய்விக்கிறார். தரகரை நினைக்க வேண்டியதில்லை என உங்களுக்குத் தெரியும். தரகர் மூலமாகச் சிவபாபாவுடன் நம்முடைய நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீங்கள் அனைவரும் இடையில் இருக்கக் கூடிய தரகர்கள். பரம்பிதா பரமாத்மாவிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள். நீங்கள் நிச்சயதார்த்தம் செய்விப்பதற்காக யுக்தியைப் படைக் கிறீர்கள். பிறகு பிரஜாபிதாவின் பெயரையும் கொடுக் கிறீர்கள். ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து தான் கிடைக்கிறது. சொர்க்கத்தைப் படைக்கக்கூடியவர் அவரே. பரமாத்மா வுடன் ஜீவ ஆத்மாக்களின் நிச்சயதார்த்தம் நடக்கிறது. நிச்சயம் நடந்தது, ஆஸ்தி பெற்றனர், மீண்டும் பெறு கிறார்கள்.

நமக்குக் கல்ப கல்பமாகக் கல்பத்தின் சங்கமயுகத்தில் இதே தொழில் தான் என நீங்கள் அறிகிறீர்கள். வேறு யாரும் ஆத்மாக்களைப் பரமாத்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்விப்ப தில்லை. நிச்சயதார்த்தம் கூட யார் உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றாரோ அவருடன் செய்விக் கிறார்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த ஆன்மீக நிச்சயதார்த்தம் ஆகும். ஆன்மீக நிச்சயதார்த்தம் செய்வதைக் கல்பகல்பமாகப் பாபாவிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறோம். கல்ப கல்பமாக இவ்வாறே நடக்கிறது. கல்ப கல்பமாக மனிதனிலிருந்து தேவதையாக நிச்சயம் மாறுகிறார்கள். தேவதைகள் மீண்டும் மனிதர்கள் ஆகிறார்கள். மனிதர்கள் மனிதர்கள் தான். ஆனால் மனிதனிலிருந்து தேவதை ஆகினர்..... என ஏன் எழுதி இருக்கிறார்கள்? ஏனென்றால் தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். இந்த நிச்சயதார்த்தத்தின் மூலம் நாம் மனிதனிலிருந்து தேவதையாகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். கிறிஸ்துவுக்கு 3000 வருடத் திற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. ஆனால் புத்தியில் வரவில்லை என அனைவரும் கூறுகிறார்கள். பாரதம் முதலில் சொர்கமாக இருந்தது. இப்போது கூட எவ்வளவு கோவில்களைக் கட்டுகிறார்கள்! ஆனால் அனைவருடையதும் இறங்கும் கலையாகும். நம்முடையது ஏறும் கலையாகும். ஏறும் கலைக்கு ஒரு நொடி தான் ஆகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு போதும் எந்த விஷயத்திலும் குழப்பம் அடைந்து நிச்சயத்தில் மேலே கீழே வரக் கூடாது. வீடு வாசலைப் பார்த்துக் கொண்டே கர்மயோகியாக இருக்க வேண்டும். வெற்றி மாலையில் நெருக்கத்தில் வருவதற்குத் தூய்மையாக நிச்சயம் இருக்க வேண்டும்.

2. புத்திசாலி ஆவதற்கு ஞானத்தின் விசாரச் சாகர மந்தனம் செய்ய வேண்டும்.சதா சேவையில் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். தனக்குச் சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
பாபா என்ற சொல்லின் நினைவு மூலம் எல்லைக்குட்பட்ட எனது என்பதை அர்ப்பணம் செய்யக்கூடிய எல்லையற்ற வைராகி ஆகுக.

அநேகக் குழந்தைகள் எனக்குச் சொல்கிறார்கள் - இந்தக் குணம் உள்ளது என்று. எனக்குச் சக்தி உள்ளது - இதுவும் கூடத் தவறாகும். பரமாத்ம கொடையை எனது என நினைப்பதும் கூடப் பாவமாகும். எனது இந்தக் குணத்தை, எனது புத்தியைப் பயன்படுத்துவதில்லை என்று. அநேகக் குழந்தைகள் சாதாரணப் பாஷையில் பேசி விடுகிறார்கள். ஆனால் எனது எனச் சொல்வது என்றால் அழுக்காவதாகும் - இதுவும் ஏமாற்று வேலை தான். எனவே இந்த எல்லைக்குட்பட்ட எனது என்பதை அர்ப்பணம் செய்து விட்டு, சதா பாபா என்ற சொல்லை மட்டும் நினைவில் வையுங்கள். அப்போது எல்லையற்ற வைராகி ஆத்மா எனச் சொல்வார்கள்.

சுலோகன்:
தனது சேவையைப் பாபாவுக்கு முன்பாக அர்ப்பணம் செய்து விடுவீர்களானால் சேவையின் பலன் மற்றும் பலம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.