01.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பெரிய பெரிய இடங்களில் பெரிய பெரிய கடைகள் (சென்டர்) திறவுங்கள். சேவையை அதிகரிப்பதற்காக (பிளான்) திட்டம் தீட்டுங்கள். மீட்டிங் போடுங்கள், சிந்தனை செய்யுங்கள்.

 

கேள்வி:

ஸ்தூல அதிசயங்களையோ எல்லோரும் அறிந்துள்ளார்கள், ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ள எல்லாவற்றையும் விட பெரிய அதிசயம் என்ன?

 

பதில்:

அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான தந்தை சுயம் வந்து கற்பிக்கிறார் என்பது எல்லா வற்றையும் விட பெரிய அதிசயம் ஆகும். இந்த அதிசயமான விஷயத்தைக் கூறுவதற்காக நீங்கள் அவரவர் கடைகளை ஆடம்பரப்படுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் மனிதர்கள் (ஷோ) ஆடம்பரத்தைப் பார்த்து தான் வருகிறார்கள். எனவே எல்லாவற்றையும் விட நல்லதான மற்றும் பெரிய கடை தலை நகரத்தில் இருக்க வேண்டும். அப்பொழுது எல்லோரும் வந்து புரிந்து கொள்வார்கள்.

 

பாடல் :

இறந்தாலும் நீ இருக்கும் இடத்திலேயே....

 

ஓம் சாந்தி. சிவபகவான் கூறுகிறார். ருத்ர பகவானுவாக்கு என்றும் கூட கூறப்படுகிறது. ஏனெனில், சிவ மாலை என்று பாடப்படுவதில்லை. எந்த மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் நிறைய உருட்டுகிறார்களோ அதற்கு ருத்ர மாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷயம் ஒன்றே ஒன்று தான். ஆனால் மிகச்சரியான விதத்தில் சிவபாபா கற்பிக்கிறார். அந்த பெயர் தான் இருக்க வேண்டும். ஆனால் ருத்ர மாலை என்ற பெயர் இருந்து வரு கிறது. எனவே அதையும் புரிய வைக்க வேண்டி உள்ளது. சிவன் மற்றும் ருத்ரருக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. நாம் நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்து மாலையில் நெருக்கத்தில் வர வேண்டும் என்பது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. இந்த உதாரணம் கூட கூறப்படுகிறது. எப்படி குழந்தைகள் குறிக்கோள் வரைக்கும் ஓடிப் போய் பிறகு வந்து ஆசிரியருக்கு அருகில் நின்று விடுகிறார்கள். நாம் 84-பிறவியின் சக்கரம் சுற்றி வந்தோம் என்பதை குழந்தைகளாகிய நீங்களும் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது முதன் முதலில் அந்த மாலையில் கோர்க்கப்பட வேண்டும். அது மாணவர்களின் ஓட்ட பந்தயம். இது ஆன்மீக ஓட்ட பந்தயம். அந்த ஓட்ட பந்தயத்தை நீங்கள் மேற்கொள்ள முடியாது. இதுவோ இருப்பதே ஆத்மாக்களின் விஷயம். ஆத்மாவோ முதுமையானதாக, இளமையானதாக, சிறியதாக, பெரியதாக ஆவது இல்லை. ஆத்மா ஒன்றே ஒன்று தான். ஆத்மா தான் தனது தந்தையை நினைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் எந்த ஒரு கடினமான விஷயமும் இல்லை. படிப்பிலே தளர்ச்சி உடையவர்களாக இருந்தாலும் பரவா யில்லை. ஆனால் இதில் என்ன கஷ்டம் உள்ளது. எதுவுமே இல்லை. அனைத்து ஆத்மாக் களும் சகோதர சகோதரர்கள் ஆவார்கள். அந்த ஓட்டத்தில் வாலிபர்கள் வேகமாக ஓடுவார் கள். இங்கோ அந்த விஷயம் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுடைய ஓட்டமானது ருத்ர மாலையில் கோர்க்கப்படுவதானது ஆகும். ஆத்மாக்களாகிய நம்முடையதும் விருட்சம் உள்ளது என்பது புத்தியில் உள்ளது. அது சிவபாபாவினுடைய அனைத்து மனிதர்களின் மாலை ஆகும். அப்படியின்றி 108-ன் அல்லது 16108-ன் மாலைகள் மட்டுமே உள்ளது என்பதல்ல. யாரெல்லாம் மனிதர்கள் உள்ளார்களோ அவர்கள் அனைவரின் மாலை ஆகும். வரிசைக்கிரமமாக ஒவ்வொருவரும் அவரவர் தர்மத்தில் (மதம்) போய் வீற்றிருப்பார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். பின்னர் கல்ப கல்பமாக அதே இடத்தில் தான் வந்து கொண்டே இருப்பார்கள். இது கூட அதிசயம் ஆகும் அல்லவா? உலகம் இந்த விஷயங்களை அறியாமல் உள்ளது. உங்களிலும் கூட விசால புத்தி உடையவர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தவர்களாக இருப்பார்கள். நாம் அனைவருக்கும் எப்படி வழி கூறலாம் என்ற இதே சிந்தனை குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இது விஷ்ணுவின் மாலை ஆகும். ஆரம்ப முதற்கொண்டு பரம்பரை ஆரம்பமாகிறது. கிளைகள் கொடிகள் எல்லாமே உள்ளன அல்லவா? அங்கு கூட சிறு சிறு ஆத்மாக்கள் இருப்பார்கள். இங்கு இருப்பது மனிதர்கள். பிறகு அனைத்து ஆத்மாக்களும் (ஏக்யூரேட்) மிகச் சரியாக அங்கு நிற்பார்கள். இது அதிசயமான விஷயங்கள் ஆகும். மனிதர்கள் இந்த ஸ்தூல அதிசயங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். ஆனால் அதுவோ ஒன்றுமே இல்லை. இது எவ்வளவு அதிசயமானது - அனைவரின் சத்கதி தாதா பரமபிதா பரமாத்மா வந்து கற்பிக்கிறார். கிருஷ்ணரை அனைவரின் சத்கதி தாதா என்று கூறுவார்களா என்ன? நீங்கள் இந்த அனைத்து பாயிண்ட்ஸ்களையும் (ஞான கருத்துக்கள்) தாரணை செய்ய வேண்டும். முக்கியமான விஷயமே கீதையின் பகவானினுடையது. இதன் மீது வெற்றி அடைந்து விட்டீர்கள் என்றால் போதும்!. கீதை தான் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக சிரோமணியாக உள்ளது. அது பகவானால் கூறப்பட்டது. முதன் முதலில் இந்த முயற்சி செய்ய வேண்டும். தற்காலத்திலோ மிகவும் ஆடம்பரம் தேவை. எந்த கடையில் மிகவுமே பகட்டு (ஷோ) ஆகிறதோ அங்கு மனிதர்கள் நிறைய பேர் நுழைவார்கள். இங்கு நல்ல பொருள் கிடைக்கும் என்று உணர்ந்திருப்பார்கள். இவ்வளவு பெரிய பெரிய சென்டர்கள் திறக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் இரண்டு லட்சம் பணம் கொடுக்க வேண்டி வரும். அப்பொழுது தான் மனதிற்குப் பிடித்த வீடு கிடைக்கும் என்று குழந்தைகள் பயப் படுகிறார்கள். ஒரே ஒரு ராயலான பெரிய கடை இருக்க வேண்டும். பெரிய கடைகள் பெரிய பெரிய நகரங்களில் தான் கட்டப்படுகின்றன. உங்களுடைய எல்லாவற்றையும் விட பெரிய கடை தலை நகரத்தில் உருவாக வேண்டும். எப்படி சேவை அதிகரிக்க முடியும் என்று குழந்தைகள் (சிந்தனைக் கடலை கடைதல்) சிந்தனை செய்ய வேண்டும். பெரிய கடைகளாகத் திறந்தீர்கள் வந்தீர்கள் என்றால் பெரிய பெரிய மனிதர்கள் வருவார்கள். பெரிய மனிதர்கள் கூறும் செய்தி விரைவாகப் பரவுகிறது. முதன் முதலில் இந்த முயற்சி செய்ய வேண்டும். சேவைக்காக பெரியதிலும் பெரிய இடமாக, எப்பேர்ப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என்றால் பெரிய பெரிய மனிதர்கள் வந்து பார்த்து ஆச்சரியப்பட வேண்டும். மேலும் அங்கு பிறகு புரிய வைப்பவர்கள் கூட ஃபர்ஸ்ட் கிளாஸ் முதல்தர மானவர்கள் வேண்டும். ஒரு வேளை ஒரு பி.கே. கூட தவறாகப் புரிய வைத்தார் என்றால், எல்லா பி.கேக்களும் ஒரு வேளை இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைத்து விடு வார்கள். எனவே கடையில் சேல்ஸ்மேன், விற்பனையாளர் கூட நல்லவராக (ஃபர்ஸ்ட் கிளாஸ்) முதல்தரமானவராக இருக்க வேண்டும். இதுவும் தொழில் ஆகும் அல்லவா? குழந்தைகள் தைரியம் கொண்டால் பாப்தாதா உதவுவார் என்று தந்தை கூறுகிறார். அந்த அழியக் கூடிய செல்வமோ எதற்கும் பயன்படாது. நாமோ நமது அழியாத சம்பாத்தியம் செய்ய வேண்டும். இதில் நிறைய பேருக்கு நன்மை உண்டாகும். எப்படி இந்த பிரம்மா கூட செய்தார். பிறகு யாராவது பசியால் இறக்கிறார்களா என்ன? நீங்கள் கூட சாப்பிடு கிறீர்கள். இவரும் சாப்பிடுகிறார். இங்கு கிடைப்பது போல உணவு பொருட்கள் வேறு எங்கும் கிடைக்காது. இவை எல்லாமே குழந்தைகளினுடையதே ஆகும் அல்லவா? குழந்தைகள் தங்களுடைய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டி உள்ளது. இதில் மிகுந்த விசால புத்தி வேண்டும். தலை நகரத்தின் பெயர் வெளிப்பட்டது என்றால் எல்லாமே புரிந்து கொண்டு விடுவார்கள். மிகச் சரியாக இவர்களோ உண்மையைக் கூறுகிறார்கள் என்பார்கள். உலகத்திற்கு அதிபதியாக பகவான் தான் ஆக்குவார். மனிதர்கள் மனிதர்களை உலகத்திற்கு அதிபதியாக ஆக்குவாரா என்ன? பாபா சேவையில் விருத்திக்காக ஆலோசனை அளித்து கொண்டே இருக்கிறார். குழந்தைகளுக்கு பரந்த உள்ளம் இருந்தால் தான் சேவையில் விருத்தி ஆகும். எந்த காரியம் செய்தாலும் பரந்த உள்ளத்துடன் செய்யுங்கள். எந்த ஒரு சுபமான காரியத்தையும் தானாகவே முன் வந்து செய்வது மிகவும் நல்லது ஆகும். சொல்லாமல் செய்பவர்கள் தேவர்கள். சொல்லி செய்பவர்கள் மனிதர்கள் என்றும் கூறப்படுகிறது. சொல்லியும் செய்யவில்லை என்றால். பாபாவோ வள்ளல் ஆவார். பாபா இதை செய் என்று யாருக்காவது கூறுவாரா என்ன? இந்த காரியத்திற்கு இவ்வளவு போடுங்கள் என்று, இல்லை. பெரிய பெரிய ராஜாக்களின் கை ஒரு பொழுதும் மூடியதாக இருக்காது என்பதை பாபா புரிய வைத்துள்ளார். ராஜாக்கள் எப்பொழுதுமே வள்ளலாக இருப்பார்கள். என்னவெல்லாம் போய் செய்ய வேண்டும் என்று பாபா ஆலோசனை தருகிறார். மிகுந்த எச்சரிக்கையும் வேண்டும். மாயை மீது வெற்றி அடைய வேண்டும். மிகவும் உயர்ந்த பதவி ஆகும். கடைசியில் ரிஸல்ட் வெளிப்படும் பொழுது யார் நிறைய மதிப்பென்களுடன் தேர்ச்சி அடைகிறார்களோ அவர்களுக்கு குஷியும் இருக்கும். கடைசியில் சாட்சாத்காரமோ (காட்சிகள் தெரிதல்) அனைவருக்கும் ஏற்படும் அல்லவா? ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும்? அதிர்ஷ்டத்தில் என்ன இருக்கிறதோ அதுவே கிடைக் கிறது. புருஷார்த்தத்தின் (முயற்சி) விஷயம் தனி. பரந்த புத்தி உடையவராக ஆகுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது நீங்கள் தர்ம ஆத்மாக்களாக ஆகிறீர்கள். உலகத்தில் தர்மாத்மாக்களோ நிறைய பேர் வந்து சென்றுள்ளார்கள் அல்லவா? நிறைய அவர்களுக்கு பெயர் புகழ் ஏற்படுகிறது. குறிப்பிட்ட இவர் மிகவுமே தர்மாத்மா மனிதராக இருந்தார். ஒரு சிலரோ பணம் நிறைய சேர்த்து வைத்து வைத்து திடீரென்று இறந்து விடுகிறார்கள். பிறகு டிரஸ்டியை நியமிக்கிறார்கள். ஒருவருடைய மகன் யாராவது லாயக்கில்லாமல் இருந்து விட்டால் கூட பின் டிரஸ்டியை நியமிக்கிறார்கள். இச்சமயத்திலோ இது இருப்பதே பாவ ஆத்மாக்களின் உலகமாக! பெரிய பெரிய குருக்கள் ஆகியோருக்கு தானம் செய்கிறார்கள். எப்படி காஷ்மீரின் மகாராஜா இருந்தார். ஆரிய சமாஜத்தினருக்கு கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி விட்டுச் சென்றார், அவர்களுடைய தர்மம் விருத்தி அடைய வேண்டும் என்பதற்காக. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும். எந்த தர்மத்தை விருத்தியில் எடுத்து வர வேண்டும்? ஆதிசனாதன தேவி தேவதா தர்மமே ஆகும். இது கூட யாருக்குமே தெரியாது. இப்பொழுது நீங்கள் மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். பிரம்மா மூலமாக ஸ்தாபனை. இப்பொழுது குழந்தைகள் ஒருவரின் நினைவில் இருக்க வேண்டும். நீங்கள் நினைவின் பலத்தாலேயே முழு (சிருஷ்டி) படைப்பினை தூய்மையாக ஆக்குகிறீர்கள். ஏனெனில் உங்களுக்கோ தூய்மையான படைப்பு வேண்டும். இதற்கு நெருப்பு பிடிக்கும் பொழுது தூய்மையாக ஆகிறது. கெட்டு விட்ட பொருளை நெருப்பில் போட்டு தூய்மைப்படுத்துகிறார்கள். இதில் அனைத்து தூய்மை யில்லாத பொருட்களும் போடப்பட்டு பிறகு நல்லதாக ஆகி வெளிப்படும். இது மிகவுமே சீ சீ தமோபிரதானமான உலகமாகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். தமோ பிரதான உலகமாகும். பிறகு சதோபிரதான் ஆகும். இது ஞான வேள்வி ஆகும் அல்லவா? நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். சாஸ்திரத்திலோ நிறைய விஷயங்கள் எழுதி விட்டுள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். யக்ஞத்திற்குப் பிறகு தக்ஷ் பிரஜாபிதா என்ற பெயரைக் காண்பித்துள்ளார்கள். பிறகு ருத்ர ஞான யக்ஞம் எங்கே சென்றது. இதற்காக கூட என்னென்ன கதைகளையெல்லாம் எழுதியுள்ளார்கள். யக்ஞத்தின் வர்ணனை முறைப்படி இல்லை. தந்தை தான் வந்து அனைத்தையும் புரிய வைக்கிறார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்படி ஞான வேள்வியைப் படைத்துள்ளீர்கள். இது ஞான வேள்வி ஆகும். மேலும் இது பின்னர் வித்தியாலயம் கூட ஆகி விடுகிறது. ஞானம் மற்றும் வேள்வி - இரண்டு வார்த்தைகளுமே தனித்தனி ஆகும். யக்ஞத்தில் ஆஹுதி போட வேண்டும். ஞானக் கடலான தந்தை தான் வந்து யக்ஞத்தை உண்டாக்குகிறார். இது பெரிய உயர்ந்த யக்ஞம் ஆகும். இதில் முழு பழைய உலகமே ஸ்வாஹா ஆக வேண்டி உள்ளது.

 

எனவே குழந்தைகள் சேவையின் திட்டத்தை அமைக்க வேண்டும். கிராமங்கள் ஆகியவற்றிற்கும் கூட சென்று தாராளமாக சேவை செய்யுங்கள். உங்களிடம் நிறைய பேர் இந்த ஞானத்தை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆலோசனை மட்டும் தருகிறார்கள். சுயம் அவர்கள் எந்த வேலையும் செய்வ தில்லை. சேவை செய்வ தில்லை. இவ்வாறு செய்யுங்கள் மிகவும் நல்லது என்று ஆலோசனை மட்டும் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு நேரம் இல்லை. நாலேஜ் (ஞானம்) மிகவும் நன்றாக உள்ளது. எல்லோருக்கும் இந்த ஞானம் கிடைக்க வேண்டும். தங்களை பெரிய மனிதர்கள் என்றும் உங்களை சிறியவர்கள் என்றும் நினைக் கிறார்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த படிப்புடன் கூடவே பிறகு இந்த படிப்பும் கூட கிடைக்கிறது. படிப்பதால் உரையாடுவதற்கான அறிவு வந்து விடுகிறது. மேனர்ஸ் நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். படிக்காதவர்களோ முட்டாள்கள் போல இருப்பார்கள். எப்படிப் பேச வேண்டும் என்ற அறிவு இல்லை. பெரிய மனிதர்களை எப்பொழுதும் நீங்கள் என்று கூறி அழைக்க வேண்டும். இங்கோ ஒரு சிலர் கணவனைக் கூட நீ நீ என்று கூறுபவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் என்ற வார்த்தை ராயலானது. பெரிய மனிதர்களை நீங்கள் என்று தான் கூறுவார்கள். எனவே பாபா முதன் முதலில் அளிக்கும் ஆலோசனை யாவது - டில்லி பரிஸ்தான் சொர்க்கமாக இருந்தது. எனவே டில்லியை மீண்டும் அதே பரிஸ்தான் ஆக ஆக்க வேண்டும். எனவே டில்லியில் அனைவரும் செய்தி அளிக்க வேண்டும். விளம்பரம் மிகவும் நன்கு செய்ய வேண்டும். தலைப்புக்கள் கூட பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். தலைப்புக்களின் லிஸ்ட் (பட்டியல்) தயாரியுங்கள். பின்னர் எழுதிக் கொண்டே செல்லுங்கள். உலகத்தில் எப்படி அமைதி நிலவ முடியும் என்பதை வந்து புரிந்து கொள்ளுங் கள். 21 பிறவிகளுக்கு நோயற்றவராக எப்படி ஆக முடியும்? என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். இது போல குஷியின் விஷயங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக சத்யுகத்தில் இரட்டை கிரீடம் அணிந்தவர்களாக ஆகுங்கள். சத்யுகம் என்ற வார்த்தையை எல்லாவற்றிலும் போடுங்கள். அழகழகான வார்த்தைகள் இருக்க வேண்டும். அப்பொழுது மனிதர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். வீட்டில் கூட இது போல போர்டு, படங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். கூடவே சேவை கூட செய்து கொண்டே இருங்கள். தொழிலில் நாள் முழுவதும் இருக்க வேண்டி இருக்குமா என்ன? மேலாக மேற்பார்வை மட்டுமே செய்தால் போதுமானதாக இருக்கும். மீதி வேலையை உதவி மேலாளர் (அஸிஸ்டண்ட் மேனேஜர்) நடத்துவார். ஒரு சில சேட் பரந்த உள்ளம் உடையவர்களாக இருந்தார்கள் என்றால் (அஸிஸ்டெண்ட்) உதவியாளருக்கு நல்ல ஊதியம் கொடுத்து கூட அவருடைய பீடத்தில் அமர்த்தி விடுவார்கள். இதுவோ எல்லையில்லாத சேவை ஆகும். மற்ற எல்லாமே எல்லைக்குட்பட்ட சேவை ஆகும். இந்த எல்லையில்லாத சேவையில் எவ்வளவு பரந்த புத்தி இருக்க வேண்டும். நாம் உலகத்தின் மீது வெற்றி அடைகிறோம். காலன் மீது கூட நாம் வெற்றி அடைந்து அமரராக ஆகி விடுகிறோம். இது போல வார்த்தைகளைப் பார்த்தார்கள் என்றால் வருவார்கள் மற்றும் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். அமரலோகத்திற்கு அதிபதியாக நீங்கள் எப்படி ஆக முடியும் என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். நிறைய தலைப்புக்கள் எடுத்து வர முடியும். நீங்கள் எவரையும் உலகத்திற்கு அதிபதியாக ஆக்க முடியும். அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இருப்பதில்லை. குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். பாபா நம்மை மீண்டும் என்னவாக ஆக்க வந்துள்ளார். பழைய சிருஷ்டி யிலிருந்து புதியதாக ஆக வேண்டி உள்ளது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். மரணம் கூட முன்னால் நிற்கின்றது. யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதைப் பார்க்கிறீர்கள். பெரிய யுத்தம் நிகழ்ந்தது என்றால் நாடகமே முடிந்து போய் விடும். நீங்களோ நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். இனிமையான குழந்தைகளே, உலக அரசாட்சி உங்களுக்காக உள்ளது என்று தந்தை மிகவும் அன்புடன் கூறுகிறார். நீங்கள் உலகிற்கு அதிபதியாக இருந்தீர்கள். பாரதத்தில் நீங்கள் ஏராளமான சுகத்தைப் பார்த்தீர்கள். அங்கு இராவண இராஜ்யமே இருக்காது. எனவே அந்த அளவு குஷி இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஆலோசனை எடுத்து வர வேண்டும். பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு செய்ய வேண்டும். டில்லியில் கூட ஆகாய விமானத் திலிருந்து துண்டு பிரசுரங்களை விழுமாறு செய்யுங்கள். அழைப்பிதழ் அளிக்கிறீர்கள். செலவு அதிகமாக பிடிக்குமா என்ன? பெரிய ஆபீசர் புரிந்து கொண்டு விட்டார் என்றால், இலவசமாகக் கூட செய்து தருவார். பாபா ஆலோசனை தருகிறார். எப்படி கல்கத்தா இருக்கிறது அங்கு நாற்சந்தியில் முதல்தரமான ஒரே ஒரு பெரிய கடை இருக்க வேண்டும். அப்பொழுது வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவார்கள். மதராஸ் (சென்னை), பாம்பே போன்ற பெரிய பெரிய நகரங்களில் பெரிய கடை இருக்க வேண்டும். பாபா (பிஸினஸ்மேன்) வியாபாரி கூட ஆவார் அல்லவா? உங்களிடம் அற்பமான பைசா பெற்று கொண்டு (எக்ஸ்சேஞ்ஜ்) பதிலாக என்ன கொடுக்கிறேன்?. எனவேதான் கருணையுள்ளம் என்று பாடப்படுகிறது. சோழியிலிருந்து வைரம் போல ஆக்குபவர். மனிதனை தேவதையாக ஆக்குபவர். ஒரு தந்தைக்குத் தான் நன்றி கூற வேண்டி உள்ளது. தந்தை இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு என்ன மகிமை இருந்திருக்கும்.!

 

பகவான் நமக்குக் கற்பிக்கிறார் என்ற பெருமிதம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். நரனிலிருந்து நாராயணர் ஆக வேண்டும் என்ற (எய்ம் ஆப்ஜெக்ட்) லட்சியம் நோக்கம் முன்னாலேயே உள்ளது. முதன் முதலில் யாரெல்லாம் அவ்யபிசாரி பக்தி ஆரம்பித்திருந்தார்களோ அவர்களே வந்து உயர்ந்த பதவியை அடைவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்வார்கள். பாபா எவ்வளவு நல்ல நல்ல கருத்துக்களைப் புரிய வைக்கிறார். குழந்தைகளுக்கு மறந்து போய் விடுகிறது. அதனால் தான் பாபா கூறுகிறார், குறிப்புகள் எடுத்து எழுதுங்கள். டாபிக்ஸ் (தலைப்புக்கள்) பற்றி எழுதி கொண்டே இருங்கள். டாக்டர்கள் கூட புத்தகங்களைப் படிக்கிறார்கள். நீங்கள் மாஸ்டர் ஆன்மீக சர்ஜன் ஆவீர்கள். ஆத்மாவிற்கு எப்படி இஞ்ஜெக்ஷன் போட வேண்டும் என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறார். இது ஞான இன்ஜெக்ஷ்ன் ஆகும். இதில் ஊசி எதுவுமே இல்லை. பாபா அவினாஷி சர்ஜன் ஆவார். ஆத்மாக்களுக்கு வந்து கற்பிக்கிறார். அதே ஆத்மாக்கள் (அபவித்திர மாக) தூய்மையற்றவராக ஆகி உள்ளார்கள். இதுவோ மிகவும் சுலபம் ஆகும். தந்தை நம்மை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார். அவரை நம்மால் நினைவு செய்ய முடியாதா? மாயையின் எதிர்ப்பு நிறைய உள்ளது. எனவே பாபா கூறுகிறார், சார்ட் வையுங்கள் மற்றும் சேவையின் சிந்தனை செய்யுங்கள். அப்பொழுது மிகுந்த குஷி இருக்கும். எவ்வளவு தான் நன்றாக முரளி வகுப்பு எடுக்கிறார்கள் என்றாலும் கூட யோகம் இல்லை. தந்தையிடம் உண்மையாக இருப்பது கூட மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் மிகவும் கூர்மையாக இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள் என்றால், பாபாவை நினைவு செய்து சார்ட் அனுப்ப வேண்டும். அப்பொழுது பாபா புரிந்து கொள்வார், எந்த அளவிற்கு உண்மை உள்ளது அல்லது பொய்யா? நல்லது. குழந்தைகள் அழியாத ஞானரத்தினங்களின் சேல்ஸ்மேன் விற்பனையாளர் ஆக வேண்டும் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைத்தார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எய்ம் ஆப்ஜெக்ட் (லட்சியம் - நோக்கத்தை) முன்னால் வைத்து பெருமிதத்துடன் இருக்க வேண்டும். மாஸ்டர் ஆன்மீக சர்ஜன் ஆகி, அனைவருக்கும் ஞான இஞ்ஜெக்ஷன் போட வேண்டும். சேவையுடன் கூடவே நினைவினுடைய சார்ட்டும் வைக்க வேண்டும். அப்பொழுது குஷி இருக்கும்.

2. பேசக்கூடிய முறை (மேனர்ஸ்) நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் என்று அழைத்து உரையாட வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் பரந்த உள்ளம் உடையவராக ஆகிச் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

சுத்த சங்கல்பத்தின் விரதத்தின் மூலம் உள்ளுணர்வை மாற்றக்கூடிய மனசிம்மாசனதாரி ஆகுக.

 

பாப்தாதாவின் மனசிம்மாசனம் அவ்வளவு தூய்மையானது -- இந்த ஆசனத்தின் மீது எப்போதுமே தூய்மையான ஆத்மாக்கள் தாம் அமர முடியும். யாருடைய சங்கல்பத்தில் கூட அபவித்திரதா அல்லது அவமரியாதை (ஸ்ரீமத்திற்கு விரோதமாக நடப்பது) வந்து விடுகிறதோ, அவர்கள் சிம்மாசனத்தில் அமர்பவர் ஆவதற்கு பதிலாக இறங்கும் கலையில் கீழே வந்து விடுகின்றனர். எனவே முதலில் சுத்த சங்கல்பம் என்ற விரதத்தின் மூலம் தனது உள்ளுணர்வை மாற்றுங்கள். உள்ளுணர்வின் மாற்றத்தின் மூலம் வருங்கால வாழ்க்கை என்ற சிருஷ்டி மாறி விடும். சுத்த சங்கல்பம் மற்றும் திட சங்கல்பத்தின் விரதத்தின் பிரத்தியட்ச பலனே சதா காலத்திற்கும் பாப்தாதாவின் மனசிம்மாசனம் ஆகும்.

 

சுலோகன்:

எங்கே சர்வ சக்திகள் உடன் இருக்கின்றனவோ, அங்கே நிர்விக்ன (தடைகளற்ற) வெற்றி இருக்கவே செய்கிறது.

 

ஓம்சாந்தி