01.08.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! படிப்பின் மூலம் நீங்கள் கர்மாதீத் (கர்மங்களை வென்ற) நிலையை உருவாக்க வேண்டும். அத்துடன், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக்கக் கூடிய வழியைக் கூற வேண்டும், ஆன்மீக சேவை செய்ய வேண்டும்.

 

கேள்வி:

எந்த மந்திரத்தை நினைவில் வைப்பதன் மூலம் பாவ கர்மங்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்?

 

பதில்:

தந்தை மந்திரத்தைக் கொடுத்திருக்கிறார் - கெட்டதைப் பார்க்காதே, கேட்காதே,. இந்த மந்திரத்தையே நினைவில் வையுங்கள். நீங்கள் உங்கள் கர்மேந்திரியங்களால் எந்த பாவமும் செய்யக் கூடாது. கலியுகத்தில் அனைவர் மூலமும் பாவ கர்மங்கள்தான் ஏற்படுகின்றன. ஆகையால் தூய்மை என்ற குணத்தை தாரணை செய்யுங்கள் என்ற யுக்தியை பாபா கூறுகிறார். அதுவே முதன்மையான குணமாகும்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் யார் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள்? தூய்மையற்றவரை தூய்மையானவராக்கக் கூடிய அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் நம்முடைய எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்பது நம் புத்தியில் கண்டிப்பாக இருக்கும். பிரம்மாவின் உடலில் இருக்கலாம், ஆயினும் நினைவு அவரை (சிவபாபாவை) செய்ய வேண்டும். மனிதர்கள் யாரும் அனைவருக்கும் சத்கதி வழங்க முடியாது. மனிதர்கள் யாரையும் பதீத பாவனர் என சொல்லப்படுவதில்லை. குழந்தைகள் தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை அவர். அந்த தந்தை நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக்கிக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும், மேலும் குஷியும் இருக்க வேண்டும். நாம் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் குழந்தைகள் அறிவார்கள். மிகவும் சகஜமான வழி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நினைவு செய்ய வேண்டும் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். தன்னைத் தானே சோதித்துக் கொள்ள வேண்டும். நாரதரின் உதாரணமும் உள்ளது. இந்த உதாரணங்களை ஞானக்கடலான தந்தைதான் கொடுத்துள்ளார். சன்னியாசிகள் கொடுக்கும் உதாரணங்கள் அனைத்தும் தந்தையால் கொடுக்கப்பட்டவை ஆகும். பக்தியில் பாடியபடி மட்டும் இருக்கின்றனர். ஆமை, பாம்பு, குளவிப்பூச்சி இவற்றின் உதாரணங்களைக் கொடுப் பார்கள். ஆனால் தாம் எதுவும் செய்ய முடிவதில்லை. தந்தையால் கொடுக்கப்பட்ட உதாரணங்களை மீண்டும் பக்திமார்க்கத்தில் உபயோகிப்பார்கள். பக்தி மார்க்கமே கடந்த காலத்தினுடையதாகும். இந்த சமயத்தில் நடை முறையில் நடப்பது பிறகு பாடப்படுகிறது. தேவதைகளின் பிறந்த நாள் அல்லது பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர், ஆனால் எதுவும் தெரிவதில்லை. இப்போது நீங்கள் புரிந்து கொண்டபடி இருக்கிறீர்கள். தந்தையிடம் வழி கேட்டு தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையானவராக ஆகிறீர்கள், மேலும் பதீதர்கள் பாவனராவதற்காக வழியும் காட்டுகிறீர்கள். இது உங்களுடைய முக்கியமான ஆன்மீக சேவை. முதன் முதலில் யாராயினும் ஆத்மாவின் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. ஆத்மா அழிவற்றது. நேரம் வரும்போது ஆத்மா சரீரத்தில் வந்து பிரவேசம் ஆகிறது. தன்னை ஆத்மா என அடிக்கடி புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நம் தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார். பரம ஆசிரியரும் ஆவார். இதுவும் கூட ஒவ்வொரு மூச்சிலும் குழந்தைகளுக்கு நினைவு இருக்க வேண்டும். இதை மறக்கக் கூடாது. இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். விநாசம் முன்னால் (தயாராக) நின்றுள்ளது. சத்யுகத்தில் தெய்வீக பரிவாரம் மிகவும் சிறியதாக இருக்கும். கலியுகத்திலோ எவ்வளவு அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர். பல தர்மங்கள், பல வழிகள் உள்ளன. சத்யுகத்தில் இவை எதுவும் இருக்காது. குழந்தைகள் முழு நாளும் இந்த விஷயங்களை புத்தியில் கொண்டு வர வேண்டும். இது படிப்பல்லவா. அந்த படிப்பில் எவ்வளவு புத்தகங்கள் முதலானவை இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் புதிது புதிதாக புத்தகங்கள் வாங்க வேண்டியுள்ளது. இங்கே புத்தகம் அல்லது சாஸ்திரங்கள் முதலான எந்த விஷயமும் கிடையாது. இங்கே ஒரே விஷயம், ஒரே படிப்புதான் உள்ளது. இங்கே பிரிட்டிஷ் இராஜ்யம் இருந்தபோது, இராஜாக்களின் இராஜ்யம் இருந்தபோது தபால் தலைகளில் கூட இராஜா இராணியின் படங்களைத் தவிர வேறு எதுவும் போடுவதில்லை. இன்றைய நாட்களில் பாருங்கள், இங்கே இருந்து சென்ற பக்தர்கள் முதலானவர்களின் தபால் தலைகளைக் கூட உருவாக்கியபடி இருக்கின்றனர். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் ஏற்படும் போது படமும் கூட ஒரு மகாராஜா-மகாராணியினுடையது மட்டும்தான் இருக்கும். கடந்த காலத்தில் இருந்து சென்ற தேவதைகளின் படங்கள் மறைந்து விட்டன என்பது கிடையாது. பழமையிலும் பழமையான தேவதைகளின் படங்களை இதய பூர்வமாக வைத்துக் கொள்கின்றனர். ஏனென்றால் சிவபாபாவுக்குப் பிறகு அடுத்ததாக இருப்பவர்கள் தேவதைகள். இந்த அனைத்து விசயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் பிறகுக்கு வழி காட்டுவதற்காக தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். இது முற்றிலும் புதிய படிப்பாகும். நீங்கள்தான் இதைக் கேட்டீர்கள் மற்றும் பதவியை அடைந்திருந்தீர்கள், வேறு யாருக்கும் தெரியாது. உங்களுக்கு பரமபிதா பரமாத்மா இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மகாபாரதச் சண்டையும் கூட புகழ் வாய்ந்ததாகும். என்ன நடக்கும் என்பதை போகப் போக பார்க்கப் போகிறீர்கள். சிலர் ஒன்றைச் சொல்கின்றனர், வேறு சிலர் வேறொன்றைச் சொல்கின்றனர். நாளுக்கு நாள் மனிதர்களுக்கு புரியத் தொடங்கும். உலகப் போர் மூளப் போகிறது என சொல்லவும் செய்கின்றனர். அதற்கு முன்பாக குழந்தைகளாகிய நீங்கள் தம் படிப்பின் மூலம் கர்மாதீத் (முழுமை) நிலையை பிராப்தி செய்து கொள்ள வேண்டும். மற்றபடி அசுரர்களுக்கும் தேவதை களுக்கும் சண்டை எதுவும் நடப்பதில்லை. இந்த சமயத்தில் நீங்கள் பிராமண சம்பிரதாயத்தவராக இருக்கிறீர்கள், பிறகு சென்று தெய்வீக சம்பிரதாயமாக ஆகிறீர்கள், ஆகையால் இந்த பிறவியில் தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதன்மையான தெய்வீக குணம் தூய்மை ஆகும். நீங்கள் இந்த சரீரத்தின் மூலம் எவ்வளவு பாவங்கள் செய்தபடி வந்தீர்கள். பாவ ஆத்மா என ஆத்மாவைப் பற்றிதான் சொல்லப்படுகிறது. ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் எவ்வளவு பாவங்கள் செய்தபடி இருக்கிறது. இப்போது கெட்டதைக் கேட்காதே. . . யாருக்கு சொல்லப்படுகிறது? ஆத்மாவுக்கு. ஆத்மாதான் காதுகளால் கேட்கிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டியுள்ளார் - நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள், இப்போது மீண்டும் நீங்கள் அதுவாகத்தான் ஆக வேண்டும். இந்த இனிமையான நினைவு வருவதால் தூய்மை அடைவதற்கான தைரியம் வருகிறது. நாம் எப்படி 84 பிறவிகளின் நடிப்பை நடித்தோம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. முதன் முதலில் நாம் இப்படி இருந்தோம். இது கதை அல்லவா. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாம்தான் தேவதையாக இருந்தோம் என்பது புத்தியில் வர வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் மூலவதனத்தில் வசிப்பவர்கள். முன்னர் இந்த சிந்தனை ஒருபோதும் இருந்ததில்லை - அது ஆத்மாக்களாகிய நம் வீடு. அங்கிருந்து நாம் நடிப்பதற்காக வருகிறோம். சூரிய வம்சத்தவர், சந்திர வம்சத்தவர். . . ஆக ஆகினோம். இப்போது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் பிராமண வம்சத்தவர். ஈஸ்வரிய வாரிசாக ஆகியுள்ளீர்கள். ஈஸ்வரன் அமர்ந்து உங்களுக்கு அறிவுரைகள் கொடுக்கிறார். இவர் பரம தந்தை, பரம ஆசிரியர், பரம குருவாகவும் உள்ளார். நாம் அவரின் வழிப்படி அனைத்து மனிதர்களையும் உயர்ந்தவர்களாக ஆக்குகிறோம். முக்தி, ஜீவன் முக்தி இரண்டும் உயர்ந்தவை ஆகும். நாம் நம்முடைய வீட்டுக்குச் செல்வோம், பிறகு தூய்மையான ஆத்மாக்களாக வந்து இராஜ்யம் செய்வோம். இது சக்கரம் அல்லவா. இது சுயதரிசன சக்கரம் என சொல்லப்படுகிறது. இது ஞானத்தின் விஷயமாகும். இந்த உங்களுடைய சுயதரிசன சக்கரம் நிற்கக் கூடாது என தந்தை சொல்கிறார். சுற்றியபடி இருந்ததென்றால் பாவ கர்மங்கள் அழிந்து போய் விடும். நீங்கள் இந்த இராவணன் மீது வெற்றி பெறுவீர்கள். பாவங்கள் நீங்கி விடும். இப்போது நினைவு வந்துள்ளது சிந்திப்பதற்காக. அமர்ந்து மாலையை உருட்ட வேண்டும் என்பதல்ல. ஆத்மாவிற்குள் ஞானம் உள்ளது, அதனை குழந்தைகளாகிய நீங்கள் மற்ற சகோதர சகோதரிகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளும் கூட உதவியாளர் ஆவார்கள் அல்லவா. குழந்தை களாகிய உங்களை சுயதரிசன சக்கரதாரிகளாக ஆக்குகிறேன். இந்த ஞானம் எனக்குள் உள்ளது, ஆகையால் என்னை ஞானக் கடல், மனித சிருஷ்டியின் விதை ரூபம் என சொல்கின்றனர். அவர் தோட்டக்காரர் எனப்படுகிறார். தேவி தேவதா தர்மத்தின் விதையை சிவபாபா விதைத்துள்ளார். இப்போது நீங்கள் தேவி-தேவதைகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதை முழு நாளும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் கூட உங்களுக்கு மிகவும் நன்மை நடக்கும். தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். தூய்மையாகவும் ஆக வேண்டும். கணவன் மனைவி ஒன்றாக இருந்தாலும் தூய்மையானவராக ஆகிறீர்கள். இப்படிப்பட்ட வேறு தர்மம் இருப்பதில்லை. ஆண்கள் மட்டும்தான் துறவற மார்க்கத்தவர்களாக ஆகின்றனர். சொல்கின்றனர் அல்லவா - கணவர், மனைவி இருவரும் ஒன்றாக தூய்மையாக இருக்க முடியாது, கஷ்டம். சத்யுகத்தில் இருந்தார்கள் அல்லவா. லட்சுமி நாராயணரின் மகிமையைக் கூட பாடுகின்றனர்.

 

பாபா நம்மை சூத்திரரிலிருந்து பிராமணராக்கி, பின் தேவதைகளாக ஆக்குகின்றார் என இப்போது நீங்கள் (கீழ்தரமான வழியிலிருந்து) அறிவீர்கள். நாம்தான் பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரிகளாகின்றோம். பிறகு வாம மார்க்கத்தில் செல்வோம் அப்போது சிவனுடைய கோவிலைக் கட்டி பூஜை செய்வோம். குழந்தைகளாகிய உங்களுக்கு தம்முடைய 84 பிறவிகளின் ஞானம் உள்ளது. உங்களுக்கு உங்களுடைய பிறவிகளைப்பற்றி தெரியாது, நான் தெரியப் படுத்துகிறேன் என தந்தைதான் சொல்கிறார். இப்படி வேறு எந்த மனிதரும் சொல்ல முடியாது. உங்களை இப்போது தந்தை சுயதரிசன சக்கரதாரிகளாக ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையடைந்து கொண்டிருக்கிறீர்கள். சரீரம் இங்கே தூய்மையடைய முடியாது. ஆத்மா தூய்மையடைந்து விடும்போது, பிறகு தூய்மையற்ற சரீரத்தை விட வேண்டும். அனைத்து ஆத்மாக்களும் தூய்மையடைந்து செல்ல வேண்டும். தூய்மையான உலகம் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்ற அனைவரும் இனிமையான வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இதை நினைவில் வைக்க வேண்டும். தந்தையின் நினைவுடன் கூடவே வீட்டின் நினைவும் இருக்க வேண்டும், ஏனென்றால் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் (பரந்தாமத்தின்) தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா இந்த உடலில் வந்து நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் புத்தி பரமதாமமாகிய இனிமையான வீட்டிலிருந்து துண்டிக்கப்படக் கூடாது. ஆசிரியர் வீட்டை விட்டு வந்துள்ளார் உங்களைப் படிப்பிப்பதற்காக. படிப்பித்து விட்டு பின் வெகுதூரம் சென்று விடுகிறார். ஒரு வினாடியில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆத்மா எவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறது. அதிசயப்பட வேண்டும். தந்தை ஆத்மாவைக் குறித்த ஞானமும் கொடுத்திருக்கிறார். சொர்க்கத்தில் கை-கால்களை அல்லது ஆடைகள் முதலானவைகளை அழுக்காக்கக் கூடிய எந்த அழுக்கான பொருளும் இருக்காது, தேவதைகளுடைய அணி கலன்கள் எவ்வளவு அழகாக இருக்கும். எவ்வளவு முதல் தரமான உடைகள் இருக்கும். துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களைப் பார்த்து எவ்வளவு குஷியடைய வேண்டும். எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு நாம் இப்படி ஆவோம் என ஆத்மாவுக்குத் தெரியும். (படங்களை) பார்த்துக் கொண்டே இருந்தாலே போதும். இந்தப் படங்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும். இதில் மிகவும் குஷி இருக்க வேண்டும் - பாபா நம்மை இப்படி ஆக்குகிறார். இப்படிப்பட்ட பாபாவுக்கு நாம் குழந்தைகளாக இருக்கிறோம், பின் ஏன் அழுகின்றீர்கள்? நமக்கு எந்த கவலையும் இருக்கக் கூடாது. தேவதைகளின் கோவில்களில் சென்று மகிமை பாடுகின்றனர் - அனைத்து குணங்களும் நிரம்பியவர். . . அச்சுதம் கேசவம். . . எவ்வளவு பெயர்களை சொல்லியபடி செல்கின்றனர். இவையனைத்தும் சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளன, அதை நினைவு செய்கின்றனர். சாஸ்திரங்களை எழுதியவர் யார்? வியாசர். அல்லது யாராவது புதிது புதிதானவர்களும் உருவாக்கியபடி இருக்கின்றனர். கிரந்தம் முன்னர் கையால் எழுதப்பட்டு மிகவும் சிறியதாக இருந்தது. இப்போது எவ்வளவு பெரிதாக ஆக்கி விட்டனர். கண்டிப்பாக மேலும் விஷயக்களை சேர்த்திருப்பார்கள். இப்போது குரு நானக் வருவதே தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக. ஞானத்தைக் கொடுப்பவர் ஒருவரே ஆவார். கிறிஸ்துவும் கூட தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக மட்டும்தான் வருகிறார். அனைவரும் வந்துவிடும் போது பிறகு திரும்பிச் செல்வோம். வீட்டிற்கு அனுப்புவர் யார்? கிறிஸ்துவா? அல்ல. அவரோ வேறு ஏதோ பெயர் உருவத்தில் தமோபிரதான நிலையில் இருக்கிறார். சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர் அல்லவா. இந்த சமயத்தில் அனைவருமே தமோபிரதானமாக இருக்கின்றனர். அனைவருடையதும் மிகவும் சேதமடைந்த (கறைபடிந்த) நிலையாகும். மறுபிறவிகள் எடுத்து எடுத்து அனைத்து தர்மத்தவர்களுமே வந்து தமோபிரதானமாக ஆகிவிட்டனர். இப்போது அனைவரும் கண்டிப்பாக திரும்பிச் செல்ல வேண்டும். மீண்டும் சக்கரம் சுற்ற வேண்டும். முதலில் சத்யுகத்தில் இருந்த புதிய தர்மம் தேவை. தந்தைதான் வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். பிறகு வினாசமும் ஆக வேண்டும். ஸ்தாபனை, வினாசம், பிறகு பாலனை (வளர்ப்பு). சத்யுகத்தில் ஒரே தர்மம்தான் இருக்கும். இந்த நினைவு வருகிறதல்லவா. முழு சக்கரத்தையும் நினைவில் கொண்டு வர வேண்டும். இப்போது நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி முடித்து வீட்டிற்கு திரும்பிச் செல்லப் போகிறோம். நீங்கள் பேசக் கூடிய, நடக்கக் கூடிய சுயதரிசன சக்கரதாரிகள் ஆவீர்கள். அவர்கள் பிறகு கிருஷ்ணருக்கு சுயதரிசன சக்கரம் இருந்தது, அதன் மூலம் அனைவரையும் அழித்தார் என்று சொல்கின்றனர். அகாசுரன், பகாசுரனின் படங்களைக் காட்டியுள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட விஷயம் எதுவும் கிடையாது.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சுயதர்சன சக்கரதாரி ஆகி இருக்க வேண்டும். ஏனெனில் சுயதரிசன சக்கரத்தின் மூலம் உங்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. அசுரத்தன்மை முடிந்து விடுகிறது. தேவதைகள் மற்றும் அசுரர்களின் சண்டை ஏற்பட முடியாது. அசுரர்கள் கலியுகத்திலும் தேவதைகள் சத்யுகத்திலும் இருப்பவர்கள். இடையில் சங்கமயுகம் இருக்கின்றது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். ஞானத்தின் பெயர் அடையாளம் இல்லை. ஞானக்கடல் அனைவருக்காகவும் ஒரே தந்தைதான் ஆவார். தந்தை இன்றி எந்த ஆத்மாவும் தூய்மையடைந்து திரும்பிச் செல்ல முடியாது. நடிப்பை கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனும்போது இப்போது தன்னுடைய 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். நாம் இப்போது சத்யுகத்தின் புதிய பிறவியில் செல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி பிறகு எப்போதும் கிடைப்பதில்லை. சிவபாபா, பிறகு பிரம்மா பாபா. லௌகிக, பரலௌகிக மற்றும் இவர் அலௌகிக தந்தை பிரம்மா. இந்த சமயத்தின் விஷயம்தான் ஆகும், இவர் அலௌகிகமானவர் என சொல்லப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அந்த சிவபாபாவை நினைவு செய்கிறீர்கள், பிரம்மாவை அல்ல. பிரம்மாவின் கோவிலில் சென்று பூஜைகள் செய்யலாம், அதுவும் சூட்சும வதனத்தில் சம்பூர்ண அவ்யக்த மூர்த்தியாகஇருக்கும்போது பூஜிக்கின்றனர். இந்த சரீரதாரி பூஜைக்குகந்தவர் அல்ல. இவர் மனிதர் அல்லவா. மனிதர்களுக்கு பூஜை நடப்பதில்லை. பிரம்மாவுக்கு தாடியைக் காட்டுகின்றனர் எனும்போது அவர் இந்த இடத்தைச் சேர்ந்தவர் என தெரிகிறது. தேவதைகளுக்கு தாடி இருப்பதில்லை. இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பெயர், புகழ் வாய்ந்தது, ஆகையால் உங்களுடைய கோவில் கூட கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் கோவில் எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்ததாக உள்ளது. சோம ரசம் குடிக்க வைத்தார், பிறகு என்ன ஆயிற்று? பிறகு இங்கும் (அபு மலையில்) கூட தில்வாடா கோவிலைப் பாருங்கள். கோவில் மிகச்சரியான நினைவுச் சின்னமாக உருவாகியுள்ளது. கீழே நீங்கள் தவம் செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலே சொர்க்கம் உள்ளது. சொர்க்கம் எங்கோ மேலே இருப்பதாக மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். கோவிலிலும் கூட சொர்க்கத்தை கீழே எப்படி உருவாக்க முடியும்! எனவே மேலே கூரையில் உருவாக்கி விட்டனர். உருவாக்குபவர்கள் எதுவும் புரிந்து கொள்வதில்லை. பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும். உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்துள்ளது, எனவே நீங்கள் பலருக்கும் கொடுக்க முடியும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. உள்ளுக்குள் இருக்கும் அசுரத்தன்மையை அகற்றுவதற்காக சுயதரிசன சக்கரதாரி ஆகி இருக்க வேண்டும். முழு சக்கரத்தையும் நினைவில் கொண்டு வர வேண்டும்.

 

2. தந்தையின் நினைவுடன் கூட புத்தி பரம்தாம வீட்டிலும் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். தந்தை கொடுத்துள்ள நினைவுகளை சிந்தித்து தனக்கு நன்மை செய்து கொள்ள

வேண்டும்.

 

வரதானம் :

சம்பூரண ஆஹூதி (முழுமையான அர்ப்பணம்) மூலம் மாற்றத்தின் விழாவைக் கொண்டாடக் கூடிய உறுதியான என்ணம் கொண்டவர் ஆகுக.

 

பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடாதீர்கள் என்று பழமொழி உள்ளது. என்ன சூழ்நிலை வந்தாலும், மாயை மகாவீர் ரூபத்தில் எதிரில் வந்தாலும், தாரணைகளை விட்டு விடக் கூடாது. சங்கல்பத்தின் மூலம் தியாகம் செய்யப்பட்ட பயனற்ற பொருட்கள் தன்னுடையது என்ணத்தில் கூட வரக்கூடாது. சதா தன்னுடைய சிரேஷ்ட சுயமரியாதை, சிரேஷ்ட நினைவு மற்றும் சிரேஷ்ட வாழ்க்கையின் சக்தி சொரூபத்தின் மூலம் சிரேஷ்ட நடிகர் ஆகி சிரேஷ்ட தன்மையின் விளையாட்டை விளையாடிக் கொண்டே இருங்கள். பலவீனங்களின் அனைத்து விளையாட்டுக்களும் முடிவடைந்து விடவேண்டும். எப்பொழுது அப்படிப்பட்ட சம்பூரண தியாகத் தினுடைய சங்கல்பம் திடமாக இருக்குமோ அப்பொழுது பரிவர்த்தனை விழா நடைபெறும். இந்த விழாவிற்கான தேதியை இப்பொழுது குழுவாக சேர்ந்து தீர்மானம் செய்யுங்கள்.

 

சுலோகன் :

உண்மையான வைரம் ஆகி தன்னுடைய அதிர்வலைகளின் (வைபிரேசன்ஸ்) பிரகாசத்தை உலகத்தில் பரப்புங்கள்.

 

ஓம்சாந்தி