01-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை கூறக் கூடிய இனிமையிலும் இனிய ஞான விசயங்களை தாரணை செய்ய வேண்டும், மிகவும் இனிமையானவர்களாக, பாற்கடல் போன்று இருக்க வேண்டும், ஓருபோதும் உப்புத் தண்ணீராக இருக்கக் கூடாது.

கேள்வி:
எந்த மகா மந்திரத்தின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு புதிய இராஜ்யத்திற்கான திலகம் கிடைத்து விடும்?

பதில்:
தந்தை இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு மகா மந்திரம் கொடுக்கின்றார் - இனிய, செல்லக் குழந்தைகளே - தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருந்தால் இராஜ்யத்திற்கான திலகம் கிடைத்து விடும்.

கேள்வி:
திருஷ்டி (பார்வை) எப்படியோ அப்படித் தான் சிருஷ்டி (உலகம்) என்று கூறப்படுகிறது, இந்த கதை ஏன் கூறப்படுகிறது?

பதில்:
இந்த நேரத்தில் மனிதர்கள் எவ்வாறு தூய்மையற்றும், அசுத்தமாகவும் (கருப்பாக) இருக்கிறார்களோ அவ்வாறு தனது தேவதைகளையும் லெட்சுமி-நாராயணன், இராமர்-சீதை, சிவபாபா வையும் கருப்பாக உருவாக்கி பூஜை செய்கின்றனர். இதன் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வது கிடையாது, அதனால் தான் இந்த கதை கூறப்பட்டிருக்கிறது.

பாடல்:
தனது முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் .......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகள் பாட்டின் வரி கேட்டீர்கள் - தனது உள்ளம் என்ற கண்ணாடியில் எவ்வளவு பாவம் மற்றும் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் என்று பாருங்கள். பாவம் மற்றும் புண்ணியத்தை உள்ளம் என்ற கண்ணாடியில் சிந்திக்க வேண்டும் அல்லவா! இதுவோ பாவ ஆத்மாக்களின் உலகமாகும். புண்ணிய ஆத்மாக்களின் உலகம் சத்யுகம் என்று கூறப்படுகிறது. இங்கு புண்ணிய ஆத்மா எங்கிருந்து வர முடியும்? அனைவரும் பாவம் தான் செய்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இராவண இராஜ்யமாகும். பதீத பாவனனே வாருங்கள் என்று சுயம் கூறுகின்றனர். பாரதம் தான் புண்ணிய ஆத்மாக்களின் கண்டமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். யாரும் பாவம் செய்யவில்லை. சிங்கம் பசு ஒன்றாக தண்ணீர் பருகியது, பாற்கடல் போன்று இருந்தது. குழந்தைகளே! பாற்கடல் போன்று (இனிமையாக) இருங்கள் என்று தந்தையும் கூறுகின்றார். புண்ணிய ஆத்மாக்களின் உலகில் தமோ பிரதான ஆத்மா எங்கிருந்து வர முடியும்? இப்போது தந்தை வெளிச்சம் கொடுத்திருக்கின்றார். நாம் தான் சதோ பிரதான தேவி தேவதைகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களது மகிமையே சர்வ குணங்கள் நிறைந்தவர்கள், 16 கலைகளில் முழுமையானவர்கள்....... நாம் சுயம் அவர்களது மகிமை செய்கிறோம். என்னிடத்தில் எந்த குணங்களும் இல்லை என்று சுயம் மனிதர்கள் கூறுகின்றனர். பிரபுவே! எப்போது நீங்கள் வந்து எங்கள் மீது கருணை காட்டுவீர்களோ அப்போது நாமும் அவ்வாறு ஆக முடியும். இதை ஆத்மா கூறுகிறது. இந்த நேரத்தில் நான் பாவ ஆத்மாவாக இருக்கிறேன் என்று ஆத்மா புரிந்திருக்கிறது. புண்ணிய ஆத்மாக்கள் தேவி தேவதைகள் ஆவர், அவர்கள் பூஜிக்கப்படுகின்றனர். அனைவரும் சென்று தேவதைகளின் சரணங்களில் தலை வணங்கு கின்றனர். சாது, சந்நியாசிகளும் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்கின்றனர். அமர்நாத், ஸ்ரீநாத் கோயில்களுக்கு செல்கின்றனர். ஆக இது பாவ ஆத்மாக்களின் உலகமாகும். பாரதம் தான் புண்ணிய ஆத்மாக்களின் உலகமாக இருந்தது. அப்போது லெட்சுமி, நாராயணனின் இராஜ்யம் நடைபெற்றது. அது தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்றதாக கூறுகின்றனர். ஆனால் சொர்க்கம் எங்கு இருக்கிறது? சொர்க்கம் இருந்த போது சத்யுகம் இருந்தது. மனிதர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை கூறி விடுகின்றனர். எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் எனில் அவசியம் நரகத்தில் இருந்திருக்கிறார். சந்நியாசிகள் இறந்து விட்டால் ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டது என்று கூறுகின்றனர். ஆக வித்தியாசம் ஏற்பட்டு விட்டது அல்லவா! ஜோதியில் கலந்து விட்டது என்றால் பிறகு இங்கு வரக் கூடாது. எங்கு ஆத்மாக்களாகிய நாம் இருந்தோமோ அது நிர்வாணதாமம் என்று கூறப்படுகிறது. வைகுண்டத்தை நிர்வாணதாமம் என்று கூறமாட்டோம். குழந்தைகளுக்கு மிகவும் இனிமையிலும் இனிய விசயங்களைக் கூறுகின்றார், அதை மிகவும் நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும்.

நமக்கு வைகுண்டத்தின் வழி கூறுவதற்காக பாபா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இராஜயோகம் கற்பிக்க தந்தை வந்திருக்கின்றார். தூய்மையான உலகிற்கான வழி கூறி வழிகாட்டியாகி அழைத்துச் செல்கிறார். விநாசமும் எதிரில் இருக்கிறது. பழைய உலகம் விநாசம் ஆகிவிடும். பழைய உலகில் தான் தொல்லை, துன்பம் போன்றவைகள் ஏற்படுகின்றன. ஆக பாபா எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றார்! கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாக ஆகின்றார். மனிதர்கள் காரிருளில் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என்று பாடப்பட்டிருக்கிறது. பிரம்மா இங்கு இருக்கின்றார் அல்லவா! இரவை பகல் ஆக்குவதற்காகவே தந்தை வருகின்றார். அரைக் கல்பம் இரவு, அரைக் கல்பம் பகல். இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், க-யுகம் இன்னும் சிறு குழந்தையாக இருக்கிறது என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்த உலகம் விநாசம் ஆக வேண்டும் என்று சில நேரங்களில் கூறுகின்றனர். ஆனால் எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. இன்றைய நாட்களில் வீட்டை விட்டு செல்வது கிடையாது. ஏதாவது காரணம் ஏற்பட்டு விட்டால் வீட்டை விட்டு சென்று சந்நியாசி ஆகிவிடுகின்றனர். சந்நியாசிகளுக்கும் லைசென்ஸ் இருக்க வேண்டும் என்று இடையில் அரசாங்கம் சட்டம் பிறப்பித்தது. வீட்டில் கோபித்துக் கொண்டு சென்று சந்நியாசி ஆவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. இலவசமாக அதிக செல்வங்கள் கிடைத்து விடுகின்றன. அது எல்லைக்குட்பட்ட சந்நியாசம், உங்களுடையது எல்லையற்ற சந்நியாசமாகும். இந்த நேரத்தில் முழு உலகமும் தூய்மை இல்லாமல் இருக்கிறது, இதை மீண்டும் தூய்மை ஆக்குவது ஒரு பதீத பாவனாகிய (தூய்மைபடுத்தக் கூடிய) தந்தையின் காரியமாகும். சத்யுகத்தில் தூய்மையான இல்லற தர்மம் இருந்தது. லெட்சுமி, நாராயணனின் சிலைகளும் உள்ளன. தேவி தேவதைகளின் மகிமை பாடுகின்றனர் அல்லவா - சர்வ குணங்கள் நிறைந்தவர்கள்...... அவர்களுடையது ஹடயோக கர்ம சந்நியாசமாகும். ஆனால் கர்ம சந்நியாசம் ஒருபோதும் செய்ய முடியாது. காரியங்களின்றி ஒருபோதும் மனிதர்களால் ஒரு விநாடியும் இருக்க முடியாது. கர்ம சந்நியாசம் என்ற வார்த்தையே தவறாகும். இது கர்மயோகம், இராஜயோகமாகும். நீங்கள் சூரியவம்சி தேவி தேவதைகளாக இருந்தீர்கள். நாம் 84 பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். வர்ணமும் பாடப்படுகிறது. பிராமண வர்ணம் பற்றி யாருக்கும் தெரியாது.

தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மகா மந்திரம் கொடுக்கின்றார். ஆக உங்களுக்கு இராஜ்யத்திற்கான திலகம் கிடைத்து விடும். இனிமையிலும் இனிய, செல்லமான குழந்தைகளே! இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருங்கள். எந்த அளவிற்கு அன்பாக இருந்து காரியங்களை செய்விக்க முடியுமோ அந்த அளவு கோபப்பட்டு செய்விக்க முடியாது. மிக இனிமையானவர்களாக ஆகுங்கள். தந்தையின் நினைவில் சதா புன்முறுவலுடன் இருங்கள். தேவதைகளின் சித்திரத்தில் அவர்கள் எவ்வளவு புன்முறுவலுடன் இருக்கின்றனர்! நாம் தான் அவ்வாறு இருந்தோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம் தான் தேவதைகளாக இருந்தோம், பிறகு சத்ரியர், வைஸ்யர், சூத்ரர்களாக ஆனோம். இப்போது நாம் சங்கமத்தில் பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்களாக ஆகியிருக்கிறோம். பிரம்மாவின் வாய்வழி என்றால் ஈஸ்வரிய வம்சத்தினர்கள். தந்தையின் ஆஸ்தியாக முக்தி மற்றும் ஜீவன்முக்தி கிடைக்கிறது. எப்போது தேவி, தேவதைகளின் இராஜ்யம் இருந்ததோ அப்போது வேறு எந்த தர்மமும் இல்லை, சந்திரவம்சத்தினர்களும் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! நாம் தான் (ஹம் ஸோ) என்பதன் பொருளை அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா என்று ஆக்கி விட்டனர். நாம் தான் தேவதைகளாக, பிறகு சத்ரியர்களாக ...... ஆனோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு ஆத்மா கூறுகிறது. ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாக இருந்த பொழுது சரீரமும் தூய்மையாக இருந்தது. அதுவோ விகாரமற்ற உலகம். இது விகாரமானது. துக்கதாமம், சுகதாமம் மற்றும் சாந்திதாமம், அங்கு ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் இருக்கிறோம். சீனர்கள், இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் பொருளும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா! இன்று சகோதரர்கள் என்று கூறுகின்றனர், நாளை சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுவதனால் அனைவரும் தந்தையாக ஆகிவிடுவர். தந்தை என்றால் ஆஸ்தி கொடுக்க வேண்டும். சகோதரர்கள் ஆஸ்தி பெற வேண்டும். இரவு பகல் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. அவர் பதீத பாவன் அல்லவா! அவர் மூலம் தான் தூய்மை ஆக வேண்டும். நாம் மனிதனி-ருந்து தேவதை களாக ஆக விரும்புகின்றோம். மனிதனி-ருந்து தேவதை ...... என்று கிரந்தத்திலும் இருக்கிறது. விநாடியில் ஜீவன்முக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. தேவதைகளாகிய நாம் ஜீவன் முக்தியுடன் இருந்தோம், இப்போது ஜீவன் பந்தனமுடையவர்களாக ஆகியிருக்கிறோம். இராவண இராஜ்யம் துவாபர யுகத்தி-ருந்து ஆரம்பம் ஆகிறது, பிறகு தேவதைகள் விகார மார்க்கத்தில் செல்கின்றனர். இதன் நினைவுச் சின்னங்களையும் வைத்திருக்கின்றனர். ஜெகந்நாத் புரியில் தேவதைகளுக்கும் மிக அசுத்தமான சித்திரங்களை வைத்திருக்கின்றனர். முன்பு இது எதுவும் புரியவில்லை. இப்போது எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது! தேவதைகளுக்கு இங்கு எப்படி இவ்வாறு அசுத்த சித்திரத்தை வைத்திருக்கின்றனர்? என்று நினைத்து ஆச்சரியமாக இருந்தது. உள்ளுக்குள் கருப்பான ஜெகந்நாத் அமர்ந்திருக்கின்றார். ஸ்ரீநாத் கோயி-லும் கருப்பான சித்திரத்தை காண்பிக்கின்றனர். ஜெகந்நாதின் முகம் ஏன் கருப்பாக காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்ணரை பாம்பு தீண்டியது என்று கூறுகின்றனர். இராமருக்கு என்ன ஆனது? நாராயணனின் முகமும் கருப்பாக காண்பித்து விடுகின்றனர். சிவ-ங்கத்தையும் கருப்பாக காண்பிக்கின்றனர். அனைத்தும் கருப்பு மயமாகவே காண்பிக்கின்றனர். பார்வை எப்படியோ அப்படி தான் படைப்பும். இந்த நேரத்தில் அனைவரும் தூய்மையின்றி, கருப்பாக இருக்கின்றனர் என்பதால் பகவானையும் கருப்பாக காண்பித்து விட்டனர். முதன் முத-ல் சிவ பூஜை செய்தனர், வைரத்தினால் -ங்கம் உருவாக்கினர். இப்போது அந்த அனைத்து பொருட்களும் மறைந்து விட்டன. இவை மிகவும் விலை மதிக்க முடியாத பொருட்களாகும். பழைய பொருட்களுக்கு எவ்வளவு மரியாதைகள் இருக்கின்றன! பூஜை செய்ய ஆரம்பித்து 2500 ஆண்டு காலம் ஆகிவிட்டது எனில் அவ்வளவு காலம் பழையதாக இருக்கும் அல்லவா! தேவி தேவதைகளின் சிலைகள் மிகவும் பழமையானதாகும். இதை அவர்கள் லட்சம் ஆண்டுகள் என்ற கூறி விட்டனர்.

5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இப்போது க-யுக விநாசம் எதிரில் இருக்கிறது. அனைவரும் செல்ல வேண்டும். தந்தை தான் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். பிரம்மாவின் மூலம் நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள், பிறகு நீங்கள் தேவதை களாகி பாலனை செய்வீர்கள். இந்த விசயங்கள் எந்த பாகவதம், கீதையில் கிடையாது. இந்த ஞானம் மறைந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். லெட்சுமி, நாராயணன் திரிகாலதர்சிகளாக கிடையாது. பிறகு இந்த ஞானம் பரம்பரையாக எப்படி இருக்க முடியும்? நீங்கள் தான் இந்த நேரத்தில் திரிகாலதர்சிகளாக இருக்கிறீர்கள். அனைவரையும் விட மிக நல்ல சேவை இந்த நேரத்தில் நீங்கள் செய்கிறீர்கள். ஆக நீங்கள் உண்மையிலும் உண்மையான ஆன்மீக சமூக சேவகர்கள். நீங்கள் இப்போது ஆத்ம அபிமானிகளாக ஆகிறீர்கள். ஆத்மாவில் என்ன கறை படிந்திருக்கிறதோ, அது எப்படி நீங்கும்? தந்தை வைர வியாபாரியாகவும் இருக்கிறார் அல்லவா! தங்கத்தில் இரும்புக் கறை படிந்து படிந்து ஆத்மா தூய்மை இழந்துவிட்டது. எப்படி தூய்மையாகும்? ஆத்மாக்களே! என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பதீத பாவனாகிய தந்தை ஸ்ரீமத் கொடுக்கின்றார். பகவானின் மகாவாக்கியம் - ஹே ஆத்மாக்களே! உங்களிடத்தில் கறை படிந்திருக்கிறது, இப்போது நீங்கள் தூய்மை இல்லாமல் இருக்கிறீர்கள். பிறகு தூய்மை இல்லாதவர்கள் மகாத்மாக்களாக ஆக முடியாது. ஒரே ஒரு உபாயம் தான் இருக்கிறது - என் ஒருவனை நினைவு செய்யுங்கள். இந்த யோக அக்னியின் மூலம் உங்களது பாவ கர்மங்கள் எரிந்து விடும். எவ்வளவு ஆசிரமங்கள் இருக்கின்றன! பல வகையான ஹடயோகத்தின் சித்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிறன. இது யோகா அதாவது நினைவிற்கான பட்டியாகும். இல்லறத்தில் இருங்கள், உணவு போன்றவைகளை சமையுங்கள். குழந்தைகளையும் கவனியுங்கள். நல்லது, காலையில் நேரம் இருக்கிறது அல்லவா! காலையில் இராமரிடம் மனதை செலுத்துங்கள் என்றும் கூறப் படுகிறது. ஆத்மாவில் புத்தி இருக்கிறது. பக்தியும் அதிகாலையில் செய்கின்றனர் அல்லவா! நீங்களும் அதிகாலை யில் எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள், விகர்மங்களை விநாசம் செய்யுங்கள். அனைத்து குப்பைகளும் நீங்கி ஆத்மா தூய்மையானதாக ஆகிவிடும். பிறகு சரீரமும் தூய்மையானதாக கிடைக்கும். இப்போது உங்களது ஆத்மா இரண்டு காரட் அளவிற்கும் கூட கிடையாது. பாரதத்தின் தேவி தேவதைகள் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. உலகின் சரித்திர பூகோளம் திரும்பவும் நடைபெறுகிறது. ஆனால் ஆயுள் எவ்வளவு? என்பதை அறியவில்லை. கல்பத்தின் ஆயுளையே அறியவில்லை. ஸ்ரீமத் கொடுத்து சிரேஷ்டம் ஆக்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நினைவு என்ற அக்னியின் மூலம் தான் கறைகள் நீங்கும். வேறு எந்த உபாயமும் கிடையாது. குழந்தைகள் தைரியசா-களாக ஆக வேண்டும், பயப்படக் கூடாது. யாரை ரட்சிப்பதற்கு (பாதுகாப்பதற்கு) சுயம் பகவான் அமர்ந்திருக்கிறாரோ பிறகு அவர்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? உங்களுக்கு ஏதாவது சாபம் கொடுக்க முடியுமா? எதுவும் கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்த ஒரு காரியத்தையும் அன்பாக செய்விக்க வேண்டும், கோபப்பட்டு அல்ல. தந்தையின் நினைவின் மூலம் சதா புன்னகையுடன் இருக்க வேண்டும். சதா தேவதைகளைப் போன்று புன்முறுவலுடன் இருக்க வேண்டும்.

2) ஆத்மாவில் படிந்திருக்கும் கறையை நினைவு என்ற அக்னியின் மூலம் நீக்க வேண்டும். விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும். தைரியசா-யாகி சேவை செய்ய வேண்டும். பயப்படக் கூடாது.

வரதானம்:
அனைத்து கர்மேந்திரியங்களையும் ஒழுக்க நெறிப்படி (சட்ட திட்டப்படி) நடத்தக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

யார் இராஜாவாக இருந்து தனது கர்மேந்திரியங்கள் என்ற பிரஜைகளை சட்டத்திட்டப்படி நடத்துகிறார்களோ, அவர்கள் தான் மாஸ்டர் சர்வசக்திவான் இராஜயோகி ஆவார்கள். இராஜா எப்படி இராஜ்ய தர்பாரை நடத்துகிறாரோ, அதுபோல நீங்கள் தனது இராஜ்யத்தின் பணியாட்களாக இருக்கும் கர்மேந்திரியங்களுக்கு தினந்தோறும் தர்பாரை (நீதிமன்றம்) கூட்டுங்கள். மேலும் யாராவது காரியம் செய்யக்கூடியவர்கள் தவறுதலாக எதாவது செய்கிறார்களா, அனைத்தும் கட்டுபாட்டில் இருக்கிறதா என்ற நிலவரத்தை கேளுங்கள், யார் மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு கர்மேந்திரியமும் ஒருபொழுதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தாது. நில் என்று சொன்னால் நின்றுவிடும்.

சுலோகன்:
நேரத்திற்கு ஏற்றவாறு அனைத்து சக்திகளையும் காரியத்தில் ஈடுபடுத்துவது தான் மாஸ்டர் சர்வசக்திவானாக ஆவதாகும்.

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்புடைய மகாவாக்கியங்கள்

1. உண்மையில் ஞானத்தை அடைவது என்பது ஒரு நொடியின் வேலையாக இருக்கிறது. ஆனால் ஒருவேளை ஒரு நொடியில் புரிந்து விட்டது என்றால் நான் உண்மையில் அமைதியான ஆத்மா மற்றும் பரமாத்மாவின் வாரிசாக இருக்கிறேன் என்ற தனது சுய தர்மத்தை தெரிந்துக் கொண்டுவிட்டால் அவர்களுக்கு ஒரே ஒரு நொடி போதுமானதாக இருக்கும். இப்பொழுது இதை புரிந்து கொள்வது ஒரு நொடியின் வியமாகும். ஆனால் இதில் நம்பிக்கை கொண்டு வருவதில் ஒரு சில ஹடயோகிகள் செய்யும் விதத்தில் ஜபம், தபம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தனது உண்மையான சொரூபத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். மற்றபடி நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் எதற்காக? இப்பொழுது இதைப்பற்றி புரிய வைக்கப்படுகிறது. நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் இந்த விஷயங்களுக்காகத் தான் செய்துக் கொண்டிருக்கிறோம். அதுபோன்று தனது நடைமுறை வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்றால் தனது இந்த உடல் உணர்வை முழுமையாக நீக்க வேண்டும். உண்மையில் ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதற்கு மற்றும் இந்த தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் முயற்சி அவசியம் தேவைப்படுகிறது. இதில் நாம் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இப்பொழுது எந்தளவு மாயாவிடம் எச்சரிக்கையாக இருப்போமோ அநதளவிறகு பெரிய பிரச்சனைகள் முன்னால் வந்தாலும் நம்மை எதிர்க்க முடியாது. நம்மை நாம் மறந்து விடும்பொழுது தான் மாயா நம்மை எதிர்க்கிறது. அவ்வளவு மட்டும் தான். இதை நாம் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். மற்றபடி ஞானம் என்பது ஒரு நொடியின் விஷயமாகும்.

2. நமது இந்த ஈஸ்வரிய ஞானம் நமது புத்தியிலிருந்து வெளிவரவில்லை. நம்முடைய புரிதலோ அதாவது கற்பனையோ அல்லது எண்ணங்களோ கிடையாது. ஆனால் இந்த ஞானம் முழு உலகத்தின் படைப்பவரிடமிருந்து கேட்கப்பட்ட ஞானமாகும். மேலும் கேட்பதன் கூடவே அனுபவத்தோடு, விவேகத்தோடு என்ன கொண்டு வருகிறதோ. அதை நடைமுறையில் உங்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது. ஒருவேளை தனது விவேகத் தின் (புத்தியின்) விஷயமாக இருந்தால் தன்னிடம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இது பரமாத்மாவின் மூலம் கேட்டு தனது புத்தியினால் அனுபவத்தோடு தாரணை செய்கிறோம். எந்த விஷயத்தை தாரணை செய்கிறோமோ அது அவசியம் புத்தியின் மூலம் அனுபவத்தில் வருகின்ற பொழுது தான் நாம் ஏற்றுகொள்கிறோம். இந்த விஷயமும் கூட இதன் (உடல்) மூலம் தெரிந்துக் கொண்டோம். எனவே பரமாத்மாவின் படைப்பு என்னவாக இருக்கிறது? பரமாத்மா என்பவர் யார்? மற்றபடி இது வேறு யாருடைய எண்ணங்களும் கிடையாது. ஒருவேளை அப்படி இருந்தால் தனது மனதின் மூலம் உருவாகும். ஆகையால் யார் தன்னை பரமாத்மாவின் மூலம் முக்கிய நடைமுறையில் கொண்டு வரக்கூடிய கருத்துகள் கிடைத்திருக்கிறது. அது தான் முக்கியமாக யோகத்திற்கு பயன்படுத்துவதாகும். ஆனால் யோகத்திற்கு முன்னதாக ஞானம் தேவைப்படுகிறது. யோகா செய்வதற்காக அவசியமாக ஞானம் தேவைப்படுகிறது. யோகத்திற்கு முன்பு ஏன் ஞானம் சொல்லப்படுகிறது? முதலில் யோசிப்பது, புரிந்துகொள்வது அதன் பிறகு யோகத்தில் கொண்டு வருவது எப்பொழுதுமே சொல்லப்படுகிறது முதலில் புரிதல் என்பது வேண்டும். இல்லையென்றால் தலைகீழான காரியம் ஆகிவிடும். ஆகையால் முதலில் ஞானம் அவசியமாக இருக்கிறது. ஞானம் என்பது உயர்ந்த நிலையாகும். இதை புரிந்து கொள்வதற்காக புத்தி வேண்டும். ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்த பரமாத்மா நமக்கு படிப்பிக்கிறார். நல்லது - ஒம்சாந்தி.