01-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உயிரை பாதுகாக்கக்கூடிய பிராணேஷ்வர் பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் இனிமையான முரளி கூறி உயிரைக் காப்பாற்றுவதற்காக வந்திருக்கிறார்.

கேள்வி:

எந்த ஒரு நிச்சயம் அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கிறது?

பதில்:

நம்முடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக சுயம் பாபா வந்திருக்கின்றார். பாபாவிடமிருந்து நமக்கு பக்தியின் பலன் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. மாயை துண்டித்துள்ள சிறகுகளைக் கொடுப்பதற்காகவும், தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வும் பாபா வந்துள்ளார். இந்த நிச்சயம் அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கின்றது.

பாடல்:
இன்று யார் வந்தது அதிகாலையில்......

ஓம் சாந்தி.
அதிகாலையில் யார் வந்து முரளியை வாசிக்கிறார்கள். உலகம் முற்றிலும் காரிருளில் மூழ்கியிருக்கின்றது. இப்பொழுது நீங்கள் ஞானக்கடல் பதீத பாவனர் பிராணேஷ்வர் பாபாவிட மிருந்து முரளியை கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். அவரே உயிரை பாதுகாக்கக்கூடிய ஈஸ்வர் ஆவார். ஈஸ்வரா இந்த துக்கத் திலிருந்து காப்பாற்றுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லைக்கு உட்பட்ட உதவியைக் கேட்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத உதவி கிடைக்கின்றது. ஏனென்றால் எல்லையற்ற தந்தையல்லவா? ஆத்மா குப்தமாக (மறைவாக) இருக்கின்றது. பாபாவும் குப்தமாக இருக்கின்றார். என நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளின் உடல் பிரத்யக்மாக (காணக்கூடியதாக) இருக்கும் பொழுது பாபாவும் பிரத்யக்ஷமாக (புலனங்களால் உணரக் கூடியதாக) இருக்கின்றார். ஆத்மா குப்தமாக இருக்கும் பொழுது பாபாவும் குப்தமாக இருக்கின்றார். நமக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக பாபா வந்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அவருடைய ஸ்ரீமத் ஆகும். அனைத்து சாஸ்திரங் களுக்கும் தாயான கீதை பிரசித்தமானது. ஆனால் அதில் பெயரை மட்டும் மாற்றி விட்டனர். ஸ்ரீமத் பகவான் வாக்கு என நீங்கள் இப்பொழுது அறிகிறீர்கள் அல்லவா? கீழானவர்களை உயர்ந்த வராக மாற்றக்கூடியவர் ஒரே ஒரு தந்தை என புரிந்து கொண்டீர்கள். அவரே நரனிலிருந்து நாராயணராக மாற்றுகின்றார். கதை கூட சத்திய நாராயணன் கதையாகும். அமரக்கதை என்று பாடப்படுகின்றது. அமரபுரிக்கு அதிபதியாவதற்கு மற்றும் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கு மாகும். வியம் ஒன்று தான். இது மரண உலகமாக இருக்கின்றது. பாரதம் தான் அமர புரியாக இருந்தது. இது யாருக்கும் தெரியவில்லை. இங்கே கூட அமரர் பாபா பாரதவாசி களுக்குக் கூறினார். ஒரு பார்வதி அல்லது ஒரு திரௌபதி கிடையாது. இதை நிறைய குழந்தைகள் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சிவபாபா பிரம்மா மூலமாகக் கூறுகின்றார். நான் பிரம்மா மூலமாக இனிமையிலும் இனிமையான ஆன்மீக குழந்தைகளுக்கு கூறுகிறேன் என பாபா கூறுகின்றார். குழந்தைகள் நிச்சயமாக ஆத்ம அபிமானியாக மாற வேண்டும் என பாபா கூறுகின்றார். பாபா தான் மாற்ற முடியும். உலகில் ஆத்ம ஞானம் உடைய மனிதர் ஒருவர் கூட கிடையாது. ஆத்மாவின் ஞானமே இல்லை என்றால், பரம்பிதா பரமாத்மாவின் ஞானம் எப்படியிருக்கும்? ஆத்மாவிலிருந்து பரமாத்மா என கூறுகிறார்கள். எவ்வளவு பெரிய தவறில் முழு உலகமும் மாட்டிக் கொண்டி ருக்கின்றது. இச்சமயம் மனிதர்களின் புத்தி எதற்கும் பயன்படக் கூடியதாக இல்லை, தன்னுடைய அழிவிற்காக ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது ஒன்றும் புது வியம் இல்லை. நாடகத்தின் படி அவர்களின் நடிப்பு இருக்கின்றது. நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டு இருக்கின்றனர். இன்று உலகில் நிறைய சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வினாசகாலத்தில் பாபாவிடம் அன்பான புத்தியுள்ளது. பாபாவிடம் விபரீத புத்தி உடையவர் களுக்கு அழிவு என்று பாடப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இந்த உலகத்தை மாற்ற வேண்டும். உண்மையில் மகாபாரதப் போர் நடந்தது, பாபா இராஜயோகத்தைக் கற்பித்தார் என அறிகிறீர்கள். சாஸ்திரங்களில் மொத்தமாக அழிந்ததாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் மொத்தமாக அழிவு நடக்காது. அப்படி என்றால் பிரளயம் ஆகிவிடும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 5 தத்துவங்கள் மட்டும் இருக்கும். இது போன்று நடக்காது. பிரளயம் நடந்து விட்டால் பிறகு மனிதர்கள் எங்கிருந்து வருவர்? கிருஷ்ணர் கட்டை விரலை சப்பிக் கொண்டு ஆல இலையில் வந்ததாகக் காண்பிக்கின்றனர். குழந்தை இப்படி எவ்வாறு (நீரில்) வரமுடியும். சாஸ்திரங்களில் இது போன்ற வியங்களை எழுதி விட்டனர். கேட்கவே வேண்டாம் ! இப்போது குமாரிகளாகிய உங்கள் மூலமாக இந்த வித்வான்கள், பிஷ்ம பிதா போன்றோர்களுக்கு ஞான அம்பு போட வேண்டும். அவர்களும் இன்னும் போகப்போக வருவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் சேவையில் வேகம் கொடுக்கிறீர்களோ, பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே யிருக்கிறீர்களோ அவ்வளவு உங்களின் பிரபாவம் (தாக்கம்) ஏற்படும். ஆம் தடைகளும் ஏற்படும், அசுர சம்பிரதாயத்தின் இந்த ஞான யக்ஞத்தில் நிறைய தடைகள் வருகின்றன என்றும் பாடப்பட்டுள்ளது. நீங்கள் கற்றுத் தர முடியாது. ஞானம் மற்றும் யோகத்தை பாபா தான் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு பாபா ஆவார். அவரே அழுக்கானவர் களை தூய்மையாக மாற்று கின்றார். எனவே நிச்சயம் அழுக்கானவர்களுக்குத் தான் ஞானம் கொடுப்பார் இல்லையா! பாபாவை சர்வவியாபி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் தங்கபுத்தி உள்ளவராகி தங்க உலகத்திற்கு அதிபதியாக மாறுகின்றோம் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனை கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார்? என்ன செய்துவிட்டு போனார்கள்? பொருளை புரிந்துக் கொள்ளவில்லை. பாரஸ்நாத் கோவில் கூட இருக்கின்றது. பாரதமே பாரஸ் புரியாக இருந்தது. தங்கம், வைரம், வைடூரியங்களின் மாளிகை இருந்தது. நேற்றைய விஷயமாகும். அவர்கள் ஒரு சத்யுகத்திற்கு மட்டும் லட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறிவிட்டனர். முழு நாடகமே 5000 வருடங்கள் தான் என்று பாபா கூறுகின்றார். ஆகவே தான் இன்று பாரதம் இப்படி ஆகி யிருக்கின்றது. நேற்றைய பாரதம் எப்படி இருந்தது என கூறப்படுகிறது. லட்சக்கணக்கான வருடங்கள் என்றால் யாருக்கும் நினைவு இருக்காது. குழந்தை களாகிய உங்களுக்கு இப்பொழுது நினைவு வந்திருக்கிறது. 5000 வருடத்தின் விஷயங்களை அறிகிறீர்கள். யோகத்தில் (நினைவு யாத்திரையில்) அமருங்கள் என பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள். இதுவே ஞானம் அல்லவா ! அவர்களோ ஹடயோகிகள் ஆவர். கால் மீது கால் போட்டு (பத்மாசனத்தில்) அமர்கின்றனர். என்னென்ன செய்கின்றனர். தாய்மார்களாகிய நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. உட்காரவும் முடியாது. எவ்வளவு நிறைய படங்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளன. இனிமையான குழந்தை களே! நீங்கள் இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பாபா கூறுகின்றார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முறைப்படி உட்காருகிறார்கள். பாபா அதையும் கூறவில்லை எப்படி வேண்டுமோ அப்படி அமருங்கள். உட்கார்ந்து களைத்து போய் விட்டால், சரி படுத்துக் கொள்ளுங்கள். பாபா எந்த விஷயத்தையும் தடுக்கவில்லை. இது முற்றிலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில் கஷ்டப்படக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. எவ்வளவு தான் நோயாக இருந்தாலும், கேட்டுக் கொண்டே சிவபாபாவின் நினைவில் இருந்து கொண்டே உயிர் உடலை விட்டுப் போக நேரிடலாம். கங்கை நீர் வாயில்..... அப்போது உயிர் உடலிலிருந்து போகட்டும் என பாடப் படுகிற தல்லவா? அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயமாகும். இது உண்மையில் ஞான அமிர்தத்தின் விஷயம் ஆகும். உண்மையில் உயிர் இப்படித்தான் உடலில் இருந்து போக வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள் என்றால், என்னை விட்டு விட்டுப் போகிறீர்கள். நானோ குழந்தைகளாகிய உங்களை உடன் அழைத்துச் செல்கிறேன் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கின்றேன். உங்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றியும் தெரியவில்லை, ஆத்மா பற்றியும் தெரியவில்லை. மாயா முற்றிலும் சிறகுகளை துண்டித்து விட்டிருக்கிறது. இதனால் ஆத்மா பறக்க முடியவில்லை. ஏனென்றால், தமோபிரதானமாக இருக்கின்றது. எது வரை சதோபிர தானமாக ஆகவில்லையோ அது வரை சாந்தி தாமத்திற்கு எப்படிப் போக முடியும். நாடகத்தின் படி அனைவரும் தமோபிரதானமாகத்தான் வேண்டும் என்றும் அறிகிறீர்கள். இச்சமயம் முழு மரமும் இற்றுப் போய்விட்டது. இங்கே யாருக்கும் சதோபிரதான நிலை என்று கூற முடியாது. இங்கே ஆத்மா தூய்மையாகிவிட்டால் இங்கேயே இருக்க முடியாது. ஒரேயடியாக ஓடிப் போய்விடும். அனைவரும் முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால் யாரும் திரும்பப் போக முடியாது. சட்டம் இல்லை. பாபா இந்த ரகசியங்கள் அனைத்தையும் தாரணை செய்வதற்காக புரிய வைக்கின்றார். இருப்பினும் முக்கியமான விஷயம் பாபாவை நினைத்தல், சுயதர்ஷன சக்கரதாரி ஆகுதல் ஆகும். விதையை நினைவு செய்வதால் முழு மரமும் புத்தியில் நினைவிற்கு வந்துவிடும். நீங்கள் ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்துகொள்கிறீர்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஒரு தந்தையே என்பது யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணர் பகவான் கிடையாது. கிருஷ்ணரை சியாம் சுந்தர் என்கிறார்கள். ஏதோ நாகப்பாம்பு தீண்டியது, அதனால் கருப்பாகி விட்டார் என்பது கிடையாது. காமச்சிதையில் அமருவதால் மனிதர்கள் கருப்பாகின்றனர். இராமரையும் கருப்பாக காட்டுகின்றனர். சரி அவரை எது தீண்டியது, கருப்பாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ, நிச்சயம் இருக்கின்றதோ அவர்கள் பாபாவிடமிருந்து நிச்சயம் ஆஸ்தியை அடைவார்கள் ! நிச்சயம் இல்லை என்றால் ஒரு போதும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன முயற்சி செய்வார்கள்? அதிஷ்டத்தில் இல்லை என்றால் அவர்கள் அமர்ந்து இருந்தாலும் எதுவும் புரியாதது போன்றே இருக்கும். எல்லையற்ற ஆஸ்தியை வழங்குவதற்காக பாபா வந்திருக்கிறார் என்ற நிச்சயம் கூட இருக்கும். ஒரு புது மாணவன் மருத்துவ கல்லூரியில் சென்று அமர்ந்தால் என்ன புரியும், எதுவும் புரியாது. இங்கும் அவ்வாறு வந்து அமருகின்றார்கள். இந்த அழிவற்ற ஞானம் ஒரு போதும் அழிவதில்லை. பிறகு அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? இராஜதானி உருவாகின்றது என்றால் வேலைக் காரர்கள், பிரஜைகள், பிரஜைகளுக்கும் வேலைக் காரர்கள் அனைவரும் வேண்டும் அல்லவா? இன்னும் போகப்போக சிறிது படிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் கஷ்டமாக இருக்கும் அச்சமயம் நிறைய சண்டைகள் நடக்கும். ஒவ்வொரு நாளும் புயல் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தனை சென்டர்கள் இருக்கின்றது. பலர் வந்து நன்கு புரிந்தும் கொள்கிறார்கள். பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அழிவும் ஏற்படத்தான் வேண்டும். பிறப்பு விகிதம் குறையட்டும் என்கிறார்கள். ஆனால் மரத்தின் வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். எதுவரை பாபா இருக்கிறாரோ அது வரை அனைத்து தர்மத்தின் ஆத்மாக்களும் இங்கே வந்து தான் ஆகவேண்டும். எப்பொழுது போகக்கூடிய நேரம் வந்துவிடுமோ அப்போது ஆத்மாக்கள் வருவது நின்றுவிடும். இப்போதோ அனை வரும் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. பக்தர்களின் ரட்ஷகன் பகவான் என்று கூறுகிறார்கள். நிச்சயம் பக்தர்களுக்கு ஆபத்து வருகிறது. இராவண இராஜ்யத்தில் முற்றிலும் அனைவரும் பாவாத்மா ஆகியிருக்கின்றார்கள். கலியுக கடைசியில் இராவண இராஜ்யமாக இருக்கின்றது. சத்யுக ஆரம்பத்தில் இராம இராஜ்யமாக இருக்கிறது. இச்சமயம் அனைவரும் அசுர இராவண சம்பிரதாயத்தினர் அல்லவா? இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்கிறார்கள். அதன் பொருள் இது நரகம் அல்லவா ! சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்றால் நல்ல பெயராகும். அப்படியென்றால் இங்கே என்னவாக இருந்தனர். நிச்சயம் நரகவாசி யாக இருந்தனர். நாம் நரகவாசியாக இருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது பாபாதான் வந்து சொர்க்கவாசியாக மாற்றுகின்றார் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தின் இறை தந்தை என்று பாடப்பட்டுள்ளது. அவரே வந்து சொர்க்கத்தை உருவாக்கு கின்றார். பதீத பாவனர் சீதா ராம், நாங்கள் அழுக்காக இருக்கின்றோம். தூய்மையாக மாற்றக்கூடியவர் தாங்களே என்று அனைவரும் பாடு கின்றார்கள். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் சீதைகள் ஆவர். பாபா இராமர் ஆவார். யாருக்காவது நேரடியாக சொன்னால் ஏற்றுக் கொள்வதில்லை. இராமரை அழைக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மூன்றாவது கண்ணைக் கொடுத்திருக்கின்றார். நீங்கள் தனி உலகத்தைச் சார்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள்.

இப்பொழுது அனைவரும் தமோபிரதானமாக நிச்சயம் ஆகவேண்டும். அப்பொழுது தான் பாபா வந்து சதோபிரதானமாக மாற்றுவார் என பாபா புரிய வைக்கின்றார். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தங்களின் சேவை செய்தாலும் கூட தந்தையை நினைக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தூய்மையாவதற்கு வேறு எந்த வழியும் கூறமுடியாது. அனை வருக்கும் ஆன்மீக சர்ஜன் ஒருவரே அவரே வந்து ஆத்மாக்களுக்கு ஊசி போடுகின்றார். ஏனென்றால், ஆத்மா தான் அழுக்காகியிருக் கின்றது. பாபாவிற்கு அழிவற்ற சர்ஜன் என கூறப்படுகிறது. ஆத்மா அழிவற்றது. பரமாத்மா பாபாவும் அழிவற்றவர். இப்பொழுது ஆத்மா தூய்மையிலிருந்து அழுக்காகியிருக்கிறது. அதற்கு ஊசி போட வேண்டும். குழந்தைகளே ! தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுடைய தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். புத்தியோகத்தை மேலே கொண்டு சென்றால், இனிமையான உலகத்திற்குச் சென்றுவிடலாம். நாம் இப்போது நம்முடைய இனிமையான அமைதியான இல்லத்திற்குப் போக வேண்டும் என உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஞானம் மற்றும் யோகத்தினால் புத்தியை தங்கமாக மாற்ற வேண்டும். எவ்வளவு தான் நோய்வாய் பட்டியிருந்தாலும், துன்பமாக இருந்தாலும் அப்போதும் ஒரு தந்தையின் நினைவு இருக்கட்டும்.

2. தங்களின் உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள முழுமையான நிச்சயபுத்தி உடையவராக வேண்டும். புத்தி யோகத்தை தங்களின் இனிமையான, அமைதியான இல்லத்தோடு இணைக்க வேண்டும்.

வரதானம்:

சதா இணைந்த சொரூபத்தின் நினைவு மூலம் கடினமான காரியத்தை எளிதாக்கக் கூடிய டபுள் லைட் ஆகுக.

எந்தக் குழந்தைகள் நிரந்தர நினைவில் இருக்கிறார்களோ, அவர்கள் சதா துணையின் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு முன்னால் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தன்னை பாபாவுடன் இணைந்த நிலையில் இருப்பதாக அனுபவம் செய்வார்கள். பயப்பட மாட்டார்கள். இந்த இணைந்த சொரூபத்தின் நினைவு எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதாக்கிவிடும். சில நேரம் ஏதாவது பெரிய பிரச்சினை முன்னால் வந்தால் சுமையை பாபாவிடம் வைத்து விட்டு, சுயம் டபுள் லைட் ஆகி விடுவார்கள். ஆக, ஃபரிஸ்தாவுக்கு சமமாக இரவும் பகலும் குஷியில் மனதால் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள்.

சுலோகன்:

எந்த ஒரு காரணத்திற்கும் நிவாரணம் செய்து திருப்தியாக இருக்கின்ற மற்றும் திருப்திப் படுத்துகின்றவர் தாம் திருப்தியின் மணி ஆவார்.


மாதேஷ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியங்கள்
ஞானம் மற்றும் யோகத்திற்கிடையில் வேறுபாடு

யோகம் மற்றும் ஞானம் - இரண்டு சொற்கள். பரமாத்மாவின் நினைவு தான் யோகம் எனச் சொல்லப்படுவது. வேறு எந்த ஒருவரின் நினைவினுடைய சம்பந்தத்திலும் யோகம் என்ற சொல் வருவதில்லை. யோகம் கற்பிக்கும் குருமார்கள் அனைவருமே பரமாத்மாவின் பக்கமாகத் தான் யோகம் வைக்குமாறு சொல்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் பரமாத்மாவைப் பற்றிய முழு அறிமுகம் மட்டும் கிடையாது. அதனால் யோகத்தின் முழு சித்தி (பலன்) கிடைப்பதில்லை. யோகம் மற்றும் ஞானம் இரண்டுமே பலம் தான். இந்த இரண்டின் புருஷார்த்தத்தினால் சக்தி கிடைக்கிறது மற்றும் நாம் விகர்மாஜீத் ஆகி சிரேஷ்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றோம். யோகம் என்ற சொல்லையோ அனைவருமே சொல்கின்றனர். ஆனால் யார் மீது யோகம் வைக்கப்படுகின்றதோ, அவரது அறிமுகம் முதலில் வேண்டும். இப்போது இந்தப் பரமாத்மாவின் அறிமுகமும் கூட நமக்குப் பரமாத்மாவின் மூலம் தான் கிடைக்கிறது. அந்த அறிமுகத்தின் மூலம் யோகம் வைக்கும் போது முழு பலன் கிடைக்கிறது. யோகத்தின் மூலம் நாம் கடந்த கால விகர்மங்களின் சுமையை பஸ்மம் செய்கிறோம் மற்றும் ஞானத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்கிறோம் - இனி வரும் காலத்திற்காக நாம் எத்தகைய கர்மம் செய்ய வேண்டும் மற்றும் ஏன் செய்ய வேண்டும்? வாழ்க்கையின் ஆதாரம் சம்ஸ்காரம். ஆத்மாவும் அநாதி சம்ஸ்காரங் களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்மத்தின் மூலம் அந்த சம்ஸ்காரங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. யோகம் மற்றும் ஞானத்தின் மூலம் ஆத்மாவுக்கும் உயர்ந்த தன்மை வருகிறது. மற்றும் வாழ்க்கையில் பலம் (சக்தி) வருகிறது. ஆனால் இந்த இரண்டு பொருள்களும் பரமாத்மாவிடமிருந்து கிடைக்கின்றன. கர்ம பந்தனங்களில் இருந்து விடுபடுவதற்கான வழியும் நமக்குப் பரமாத்மாவிடமிருந்து கிடைக்கிறது. விகர்மங் களின் மூலம் நாம் உருவாக்கிய கர்ம பந்தனங்களில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். மேலும் வருங்காலத்திற்காக நமது கர்ம மானது விகர்மமாக ஆகாதிருக்க வேண்டும் என்றால் இந்த இரண்டின் பலத்தை பரமாத்மாவைத் தவிர வேறு யாராலும் தர இயலாது. யோகம், ஞானம் இரண்டு பொருள் களும் பரமாத்மா கொண்டு வருகிறார். யோக அக்னி மூலம், செய்யப்பட்ட விகர்மங்களை பஸ்மம் செய்விக்கிறார். மேலும் ஞானத்தின் மூலம் வருங்காலத்திற்காக சிரேஷ்ட கர்மத்தைக் கற்பிக்கிறார். இதன் மூலம் கர்மம், அகர்மம் ஆகிறது. அதனால் தான் பரமாத்மா சொல்லி யிருக்கிறார் - இந்தக் கர்ம-அகர்ம-விகர்மங்களின் கதி (விளைவு) மிக ஆழமானது. இப்போதோ ஆத்மாக்கள் நமக்கு நேரடியாக பரமாத்மாவின் பலம் தேவை. சாஸ்திரங்கள் மூலம் இந்த யோகம் மற்றும் ஞான பலம் கிடைக் காது. ஆனால் அந்த சர்வசக்திவான் பலவான் மூலம் தான் பலம் கிடைக்கிறது. இப்போது நமது வாழ்க்கையின் வேரை (சம்ஸ்காரங்கள்) அந்த மாதிரி உருவாக்க வேண்டும் - அதன் மூலம் வாழ்க்கையில் சுகம் கிடைக்க வேண்டும். ஆக, பரமாத்மா வந்து வாழ்க்கையின் வேரில் சுத்த சம்ஸ்காரங்கள் என்ற விதையைப் போடுகிறார். அந்த சுத்த சம்ஸ்காரங்களின் ஆதாரத்தில் நாம் அரைக் கல்பத்திற்கு ஜீவன் முக்த் ஆகி விடுவோம். நல்லது. ஓம் சாந்தி.