01.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! தங்கள் மீது முழுமையான கவனம் வையுங்கள், எந்தவொரு விதிக்கு புறம்பான நடத்தையும் இருக்கக் கூடாது, ஸ்ரீமத்தை அவமதிப்பதின் மூலம் தரம் குறைந்து விடுவீர்கள்.

 

கேள்வி:

பதமாபதம் பதியாக (பல மடங்கு பாக்கியத்திற்கு அதிபதி) ஆவதற்கு எந்தவொரு எச்சரிக்கை வேண்டும்?

 

பதில்:

எப்படிப்பட்ட கர்மத்தை நாம் செய்கிறோமோ, நம்மை பார்த்து மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள், என்ற கவனம் எப்போதும் இருக்க வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற அகங்காரம் வரக்கூடாது. ஒருபோதும் முரளியை தவற விடக்கூடாது. தங்களுடைய மனம்-சொல்-செயலை விழிப்புடன் இருக்கவும். இந்த கண்கள் ஏமாற்றவில்லை என்றால் பல மடங்கு வருமானத்தை சேமிக்க முடியும். இதற்கு உள் நோக்குமுகமாக இருந்து பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் விகர்மங்களிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்கு பாபா புரிய வைத்திருக்கிறார், இவர் தந்தையாகவும் இருக்கிறார் ஆசிரியர் மற்றும் குருவாகவும் இருக்கின்றார் என்ற சிந்தனையில் குழந்தைகள் இங்கே கண்டிப்பாக அமர வேண்டும். மேலும் பாபாவை நினைவு செய்து-செய்து தூய்மையாக ஆகி, தூய்மையான இடத்திற்கு சென்றடைவோம் என்பதையும் அறிந்துள்ளீர்கள். தூய்மையான இடத்திலிருந்து தான் நீங்கள் இறங்கி வந்துள்ளீர்கள் என்பதையும் பாபா புரிய வைத்துள்ளார். அதனுடைய பெயரே தூய்மையான இடம் என்பதாகும். சதோபிரதானத்திலிருந்து பிறகு சதோ, ரஜோ, தமோ...... நாம் கீழே இறங்கிவிட்டோம் அதாவது விகார உலகத்தில் இருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், ஆனால் ஞானத்திலிருந்து மூலம் நாம் ஒதுங்கி விலகி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், இருந்தாலும் நாம் சிவபாபாவின் நினைவில் இருக்கிறோம் என்றால் சிவாலயம் தூரம் இல்லை. சிவபாபாவை நினைவு செய்யவில்லை என்றால் சிவாலயம் மிகவும் தூரமாகும். தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால் மிகவும் தூரமாகி விடுகிறது. எனவே பாபா ஒன்றும் அதிக கஷ்டம் கொடுப்பதில்லை. ஒன்றை அடிக்கடி கூறுகின்றார், மனம்-சொல்-செயல் தூய்மையாக ஆக வேண்டும். இந்த கண்கள் கூட அதிகம் ஏமாற்றம் அளிக்கிறது, இதனிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக கவனமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தியானத்தில் செல்வதை யோகம் என்று சொல்ல முடியாது. போக் கொண்டு செல்கிறார்கள் என்றால் கூட வழிகாட்டுதலின் படி தான் செல்ல வேண்டும். இதில் கூட மாயை அதிகம் வருகிறது. மாயை மூக்கைப் பிடித்து மூச்சை அடைத்து விடுகிறது. எப்படி பாபா பலமிக்கவராக இருக்கிறாரோ, அதுபோல் மாயையும் மிகவும் பலமிக்கதாக இருக்கிறது. முழு உலகத்தையும் விகார உலகத்தில் தள்ளி விடுகிறது ஆகையினால் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. பாபாவின் விதிமுறைப்படி நினைவு வேண்டும். விதிக்கு மாறாக எந்த காரியத்தை செய்தாலும் ஒரேயடியாக விழ வைத்து விடுகிறது. தியானம்(டிரான்ஸ்) போன்றவற்றில் செல்வதற்கான ஆசை எதுவும் வைக்கக் கூடாது. ஆசை என்றால் என்ன என்றே தெரியாதாவர்களாக இருக்க வேண்டும்....... பாபா வினுடைய கட்டளைகளின் படி நடந்தீர்கள் என்றால், பாபா தங்களுடைய அனைத்து மன ஆசைகளையும் கேட்காமலேயே பூர்த்தி செய்து விடுகிறார். ஒருவேளை பாபாவின் கட்டளைகளின் படி நடக்காமல் தலைகீழான வழியை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்திலேயே விழுந்து விடலாம். யானையை முதலை விழுங்கியது என்று பாடப்பட்டுள்ளது. நிறைய பேருக்கு ஞானத்தைக் கொடுத்த வர்கள், போக் வைத்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்? ஏனென்றால் விதிக்கு மாறான நடத்தையின் காரணமாக முழுமையாக மாயையினால் பீடிக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். தேவதையாக ஆகி-ஆகி பிசாசாகி விடுகிறார்கள். மிகவும் நல்ல முயற்சியாளர்கள் யார் தேவதையாகக் கூடியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் அசுரர்களோடு இருக்கிறார்கள்? காட்டிக் கொடுப்பவர்களாக ஆகி விடுகிறார்கள். பாபாவினுடையவர்களாக ஆகி பிறகு மாயை யினுடையவர்களாக ஆகி விடுகிறார்கள், அவர்களை காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. தங்கள் மீது கவனம் வைக்க வேண்டியிருக்கிறது. ஸ்ரீமத்தை அவமதித்தால் விழுந்தார்கள். தெரியவும் தெரியாது. அதலபாதாளத்திற்கு செல்லும்படியான நடத்தைகளில் நடக்காதீர்கள் என்று பாபா குழந்தைகளை எச்சரிக்கின்றார்.

 

நேற்று கூட பாபா புரிய வைத்தார் - நிறைய கோபர்கள் தங்களுக்குள் கமிட்டி அமைக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்களோ, ஸ்ரீமத்தின் ஆதாரம் இல்லாமல் செய்கிறார்கள் என்றால் டிஸ்சர்வீஸ் செய்கிறார்கள். ஸ்ரீமத் இல்லாமல் செய்கிறார்கள் என்றால் விழுந்து (தரமிழந்து) கொண்டு தான் செல்வார்கள். பாபா ஆரம்பத்தில் கமிட்டி அமைத்தார் என்றால் தாய்மார்களின் கமிட்டி அமைத்தார், ஏனென்றால் கலசம் தாய்மார்களுக்குத் தான் கிடைக்கிறது. வந்தே மாதரம் என்று பாடப்பட்டிருக்கிறது அல்லவா? கோபர்கள் கமிட்டி அமைக்கிறார்கள் என்றால் வந்தே கோபர்கள் என்று (கோபர்களை உயர்வாக) பாடப்பட்டிருக்கவில்லை. ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயையின் வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். பாபா தாய்மார்களின் கமிட்டியை உருவாக்கினார், அவர்களின் கையில் அனைத்தையும் ஒப்படைத்து விட்டார். பெரும்பாலும் ஆண்கள் திவாலாவார்கள் (சேமிப்பை இழக்கின்றனர்), பெண்கள் அல்ல. எனவே பாபாவும் கூட கலசத்தை தாய்மார்களின் மீது வைக்கின்றார். இந்த ஞான மார்க்கத்தில் தாய்மார்கள் கூட திவாலாகலாம். யார் பதமாபதம் பாக்கியசாகளாக ஆகக்கூடியவர்களோ, அவர்கள் கூட மாயையிடம் தோல்வியடைந்து இழந்துவிடக்கூடும். இதில் ஆண்-பெண் இருபாலரும் திவாலாகலாம் மேலும் ஆகவும் செய்கிறார்கள். எத்தனை பேர் தோல்வியடைந்து சென்று விட்டார்கள், சேமித்ததை இழந்து விட்டார்கள் அல்லவா! பாரதவாசிகள் முழுமையாக திவாலாகி விட்டார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். மாயை எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது! நாம் என்னவாக இருந்தோம், ஒரேயடியாக எங்கே வந்து விழுந்து (தாழ்ந்து) விட்டோம் என்று புரிந்து கொள்ள முடியாது. இங்கேயும் கூட மேலே ஏறி-ஏறி பிறகு ஸ்ரீமத்தை மறந்து தங்களுடைய வழிப்படி நடக்கிறார்கள் என்றால் நஷ்டமடைகிறார்கள். அவர்கள் திவாலாகிறார்கள் என்றால் 5-7 ஆண்டுகளுக்கு பிறகு நின்று விடுகிறார்கள். இங்கேயோ 84 பிறவிகளுக்கு திவாலாகிறார்கள். உயர்ந்த பதவி அடைய முடியாது. திவாலாகிக் கொண்டே இருக்கிறார்கள். பாபாவிடம் போட்டோ இருந்தது என்றால் சொல்வார். பாபா முற்றிலும் சரியாக சொல்கிறார் என்று நீங்கள் சொல்வீர்கள். இவர் எவ்வளவு பெரிய மகாரதியாக இருந்தார், நிறைய பேரை எழுப்பினார். இன்று இல்லை. திவாலாகி விட்டார். பாபா அடிக்கடி குழந்தைகளை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றார். தங்களுடைய வழிப்படி கமிட்டிகள் போன்றவற்றை உருவாக்குவதில் எந்த ஒரு உபயோகமான முடிவும் இல்லை. தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கோள் சொல்லிக் கொள்வது, இவர் இப்படி செய்தார், இன்னார் இப்படி செய்தார்................, முழு நாளும் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். பாபாவிடம் புத்தியோகம் வைப்பதின் மூலம் தான் சதோபிரதானமாக ஆக முடியும். பாபாவினுடையவர்களாக ஆகியுள்ளீர்கள் மற்றும் பாபாவோடு யோகம் இல்லை என்றால் அடிக்கடி விழுந்து கொண்டே இருப்பீர்கள். தொடர்பே விட்டு விடுகிறது. தொடர்பு விட்டு விட்டால் பயப்படக் கூடாது. இதில் மாயை ஏன் இவ்வளவு துன்புறுத்துகிறது? காரணத்தை ஆராய வேண்டும். மீண்டும் முயற்சி செய்து பாபாவோடு தொடர்பை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகும்? விகர்மங்கள் நடப்பதின் மூலம் பேட்டரி இறங்கி விடுகிறது. ஆரம்பத்தில் எவ்வளவு அதிகமானோர் வந்து பாபாவினுடையவர்களாக ஆனார்கள். பட்டியில் வந்தார்கள் பிறகு இன்று எங்கே இருக்கிறார்கள்? மாயையின் வலையில் விழுந்து விட்டார்கள் ஏனென்றால் பழைய உலகம் நினைவிற்கு வந்து விட்டது. இந்த பழைய உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தாதீர்கள் என்று நான் உங்களுக்கு எல்லையற்ற வைராக்கியத்தை ஏற்படுத்துகின்றேன் என்று இப்போது பாபா கூறுகின்றார். மனதை சொர்க்கத்தின் மீது ஈடுபடுத்த வேண்டும். இப்படி இலஷ்மி-நாராயணனைப் போல் ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். புத்தியின் தொடர்பு ஒரு பாபாவோடு இருக்க வேண்டும். பழைய உலகத்தின் மீது வைராக்கியம் இருக்க வேண்டும். சுகதாமம் மற்றும் சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள். எவ்வளவு முடியுமோ எழும்போதும், அமரும்போதும், நடக்கும்போது, சுற்றும்போதும் பாபாவை நினைவு செய்யுங்கள். இது முற்றிலும் சகஜமாகும். நீங்கள் இங்கே நரனிலிருந்து நாராயணனாக ஆகவே வந்துள்ளீர்கள். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும் என்று அனைவருக்கும் சொல்ல வேண்டும், ஏனென்றால் இது வீடு திரும்பும் பயணமாக இருக்கிறது. உலகத்தின் வரலாறு-புவியியல் திரும்பவும் நடக்கிறது என்றால் நரகத்திலிருந்து சொர்க்கம், பிறகு சொர்க்கத்திலிருந்து நரகமாகும். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

 

இங்கே சுயதரிசன சக்கரதாரியாக ஆகி அமருங்கள் என்று பாபா சொல்லியிருக்கிறார். நாம் எவ்வளவு முறை சக்கரத்தை சுற்றியிருக்கிறோம் என்ற நினைவிலேயே இருங்கள். இப்போது நாம் மீண்டும் தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் யாருமே இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்வதில்லை. இந்த ஞானம் தேவதைகளுக்கு இல்லை. அவர்கள் தூய்மையானவர்களாகவே இருக்கிறார்கள். சங்கொலி எழுப்ப அவர்களிடத்தில் ஞானமே இல்லை. அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த அடையாளத்தைக் கொடுப்பதற்கான அவசியமே இல்லை. இரண்டும் சேர்திருக்கும்போது தான் அடையாளம் காட்டப்படுகிறது. உங்களுக்கும் கூட அடையாளம் இல்லை ஏனென்றால் இன்று நீங்கள் தேவதையாக ஆகி-ஆகி நாளை அசுரர்களாக ஆகி விடுகிறீர்கள். பாபா தேவதையாக மாற்றுகின்றார், மாயை அசுரர்களாக மாற்றி விடுகிறது. பாபா புரிய வைக்கும்போது தான் தெரிகிறது, உண்மையில் நம்முடைய நிலை தாழ்ந்திருக்கிறது. பாவம் எவ்வளவு பேர் சிவபாபாவின் பொக்கிஷத்தில் சேமித்து பிறகு கேட்டு பெற்று அசுரர்களாக ஆகி விடுகிறார்கள். இதில் அனைத்தும் யோகத்தின் குறைபாடே ஆகும். யோகத்தின் மூலம் தான் தூய்மையாக வேண்டும். பாபா வாருங்கள், வந்து எங்களை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக மாற்றுங்கள் அதன்மூலம் நாங்கள் சொர்க்கத்திற்கு செல்வோம், என்று அழைக்கிறீர்கள். நினைவு யாத்திரையே தூய்மையாக ஆகி உயர்ந்த பதவி அடைவதற்காக ஆகும், ஆனால் நிறைய பேர் போகப்போக இறந்து விடுகிறார்கள், இருந்தாலும் கூட ஏதாவது கேட்டிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக சிவாலயத்திற்கு வருவார்கள். எப்படிப்பட்ட பதவி அடைந்தாலும் சரி. ஒரு முறை நினைவு செய்தார்கள் என்றால் கண்டிப்பாக சொர்க்கத்தில் வருவார்கள். மற்றபடி உயர்ந்த பதவியை அடைய முடியாது. சொர்க்கத்தின் பெயரைக் கேட்டு குஷி அடைய வேண்டும். தோல்வியுற்று ஒரு பைசாவிற்கு ஒப்பில்லாத பதவியை அடைந்து விட்டு இதிலேயே குஷி அடைந்து விடக் கூடாது. நான் வேலைக்காரன், என்ற உணர்வு ஏற்பட வேண்டும். கடைசியில் நாம் என்னவாக ஆகப்போகிறோம், நம் மூலம் என்ன விகர்மங்கள் நடந்ததால் இந்த நிலை ஏற்பட்டது, என்பன அனைத்தும் உங்களுக்கு காட்சியாகத் தெரியும். நான் ஏன் மகாராணியாக ஆக வில்லை? ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக நடப்பதின் மூலம் நீங்கள் பதமாபதம்பதி (பல மடங்கு பாக்கியத்திற்கு அதிபதியாக) ஆக முடியும். கோயில்களில் தேவதைகளுக்கு தாமரையை அடையாளமாக காட்டுகிறார்கள். பதவியில் வித்தியாசமாகி விடுகிறது. இன்றைய இராஜ்யத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது! அதுவும் அல்பகாலத்தியினுடையதாகும். எப்போதைக்கும் இராஜாவாக ஆக முடியாது. எனவே இப்போது பாபா கூறுகின்றார் - நீங்கள் லஷ்மி-நாராயணனாக ஆக வேண்டும் என்றால் அதற்கான முயற்சியும் செய்ய வேண்டும். நாம் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றோம்? உள் நோக்குமுகமாகி எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில் இருக்கிறோம்? இப்போது நாம் நம்முடைய இனிமையான வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். பிறகு சுகதாமத்திற்கு வருவோம். இந்த ஞான சிந்தனை அனைத்தும் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். பாபாவினிடத்தில் ஞானம் மற்றும் யோகம் இரண்டுமே இருக்கிறது. உங்களிடத்திலும் இருக்க வேண்டும். நமக்கு சிவபாபா படிப்பிக்கின்றார் என்றால் ஞானமும் ஆகிவிட்டது யோகமும் ஆகி விட்டது என்பதை தெரிந்துள்ளீர்கள். ஞானம் மற்றும் யோகம் இரண்டும் சேர்ந்தே நடக்கிறது. யோகத்தில் அமருகிறீர்கள், பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பீர்கள், ஞானம் மறந்து விடுகிறது என்பது கிடையாது. பாபா யோகத்தை கற்றுக் கொடுக்கிறார் என்றால் ஞானம் மறந்து விடுகிறதா என்ன? முழு ஞானமும் அவருக்குள் இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களிடத்திலும் ஞானம் இருக்க வேண்டும். படிக்க வேண்டும். எப்படிப்பட்ட கர்மத்தை நான் செய்வேனோ, என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். நான் முரளி படிக்கவில்லை என்றால் மற்றவர்களும் படிக்க மாட்டார்கள். அனைத்தும் தெரியும் என்ற அகங்காரம் வந்து விடுகிறது என்றால் மாயை உடனே சண்டை போட்டு விடுகிறது. ஒவ்வொரு அடியிலும் பாபாவிடம் ஸ்ரீமத்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவது விகர்மங்களாகி விடுகிறது. நிறைய குழந்தைகள் தவறுகள் செய்து கொண்டே இருக்கிறார்கள் பாபாவிற்கு சொல்வதே இல்லை என்றால் தாங்களே அழிவை (நஷ்டத்தை) ஏற்படுத்தி கொள்கிறார்கள். தவறு நடப்பதின் மூலம் மாயை அறை கொடுத்து விடுகிறது. ஒரு பைசாவிற்கு பிரயோசனம் இல்லாதவர்களாக்கி விடுகிறது. அகங்காரத்தில் வருவதின் மூலம் மாயை அதிக விகர்மங்களை செய்ய வைக்கிறது. இப்படி-இப்படி ஆண்களின் கமிட்டி உருவாக்குங்கள் என்று பாபா சொல்லி யிருக்கிறாரா என்ன? கமிட்டியில் ஒன்றிரண்டு புத்திசாலி சகோதரிகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்களுடைய வழிப்படி காரியம் நடக்க வேண்டும். கலசம் இலஷ்மி மீது வைக்கப்படுகிறது அல்லவா! அமிர்தத்தைக் குடித்து விட்டு யக்ஞத்தில் தடையை ஏற்படுத்தியதாக பாடப்பட்டுள்ளது அல்லவா! அனேக விதமான தடைகளை ஏற்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். முழு நாளும் இந்த கோள் சொல்லும் விஷயங்களையே செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் மோசமானதாகும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் பாபாவிற்கு சொல்ல வேண்டும். மாற்றக்கூடியவர் ஒரு பாபாவே ஆவார். நீங்கள் தங்களுடைய கைகளில் சட்டத்தை எடுக்காதீர்கள். நீங்கள் பாபாவினுடைய நினைவில் இருங்கள். அனைவருக்கும் பாபாவினுடைய அறிமுகத்தை கொடுத்துக் கொண்டே இருங்கள், அப்போது தான் இவர்கள் போல (இலஷ்மி-நாராயணன்) ஆக முடியும். மாயை மிகவும் கடுமையானதாகும். யாரையும் விடுவதில்லை. எப்போதும் பாபாவிற்கு செய்தியை எழுத வேண்டும். வழியை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சொல்லப்போனால் வழி எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பாபா தாங்களாகவே இந்த விஷயத்தைப் பற்றி புரிய வைத்து விட்டீர்கள், பாபா அனைவருக்குள்ளும் இருப்பதை அறிந்தவர் என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். பாபா சொல்கிறார் அப்படியில்லை, நான் ஞானத்தை படிப்பிக்கின்றேன். இதில் அனைத்தையும் தெரிந்து கொள்வதற் கான விஷயமே இல்லை. இவர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என்பதை தெரிந்துள்ளேன். ஒவ்வொரு சரீரத்திற்குள்ளும் என்னுடைய குழந்தை இருக்கிறது! மற்றபடி அனைவருக்குள்ளும் பாபா அமர்ந்திருக்கிறார் என்பது கிடையாது. மனிதர்கள் தலைகீழாகவே புரிந்து கொள்கிறார்கள். அனைத்து சிம்மாசனத் திலும் ஆத்மா அமர்ந்திருக்கிறது என்பதை நான் தெரிந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். இது எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது. உயிருள்ள ஆத்மாக்கள் அனைத்தும் அதனதனுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது, இருந்தாலும் கூட பரமாத்மாவை சர்வவியாபி என்று சொல்லிவிடுகிறார்கள், இது மிகச் சரியான தவறாகும். இந்த காரணத்தினால் தான் பாரதம் இந்தளவிற்கு கீழான நிலையில் இருக்கிறது. நீங்கள் என்னை அதிகம் நிந்தனை செய்துள்ளீர்கள் என்று பாபா கூறுகின்றார். உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றக் கூடியவரை திட்டினீர்கள் ஆகையினால் பாபா கூறுகின்றார், யதா யதாஹி........ வெளியில் உள்ளவர்கள் இந்த சர்வவியாபியின் ஞானத்தை பாரதவாசிகளிடமிருந்து தான் கற்கிறார்கள். எப்படி பாரதவாசிகள் அவர்களிடமிருந்து கலைகளை கற்கிறார்கள், அவர்கள் தலைகீழாக கற்கிறார்கள். நீங்கள் ஒரு பாபாவையே நினைவு செய்ய வேண்டும் மேலும் பாபாவின் அறிமுகத்தையும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் கண்ணிலாதவர்களுக்கு ஊன்றுகோலாவீர்கள். ஊன்றுகோன் மூலம் வழியைச் சொல்கிறார்கள் அல்லவா! நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) பாபாவின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். ஒருபோதும் ஸ்ரீமத்துக்கு அவமரியாதை ஏற்படக் கூடாது அப்போது தான் அனைத்து மன ஆசைகளும் கேட்காமலேயே பூர்த்தியாகும். தியானம் மற்றும் காட்சிகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை வைக்கக் கூடாது, ஆசை என்பதே என்ன என்று தெரியாதவர்களாக ஆக வேண்டும்.

 

2) தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஒருவர் மற்றவருடைய குறைகளை(மற்றவர்களைப் பற்றிய சிந்தனை) பேசக்கூடாது. உள் நோக்குமுகமுடையவர்களாகி தங்களை சோதனை செய்ய வேண்டும், நான் பாபாவினுடைய நினைவில் எவ்வளவு நேரம் இருக்கின்றேன், உள்ளுக்குள் ஞான சிந்தனை நடக்கிறதா?

 

வரதானம்:

பிந்து ரூபத்தில் நிலைத்திருந்து மற்றவர்களுக்கும் நாடகம் என்ற பிந்துவின் நினைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை வென்றவர் ஆகுக.

 

எந்த குழந்தைகள் எந்த விசயத்திற்கும் கேள்வி கேட்பதில்லையோ, சதா பிந்து ரூபத்தில் நிலைத்திருந்து ஒவ்வொரு காரியத்தில் மற்றவர்களுக்கும் நாடகம் என்ற பிந்துவின் நினைவு ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் தான் தடைகளை வென்றவர் (விக்ன விநாசக்) என்று கூறப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களையும் சக்திசாலியாக்கி வெற்றி என்ற இலட்சியத்தின் அருகாமையில் அழைத்து வருவார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து விடமாட்டார்கள். ஆனால் எல்லையற்ற வெற்றி மூர்த்திகளாக இருப்பார்கள். சதா ஏக்ரஸ், ஒரு உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருப்பார்கள். அவர்கள் தங்களது வெற்றியின் சுய ஸ்திதியின் மூலம் தோல்வியையும் மாற்றி விடுவார்கள்.

 

சுலோகன்:

ஆசிர்வாதம் அடையுங்கள், ஆசிர்வாதம் கொடுங்கள், அப்போது விரைவிலேயே மாயாவை வென்று விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி