01.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - நீங்கள் அனைவருக்கும் ஜீவன்முக்தியின் மந்திரத்தை கொடுக்கக் கூடிய சத்குருவின் குழந்தைகள் குரு ஆவீர்கள், நீங்கள் ஈஸ்வரனைப் பற்றி ஒருபோதும் பொய் சொல்ல முடியாது.

 

கேள்வி:-

ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அடைவதற்கான விதி மற்றும் அதனுடைய புகழ் என்ன?

 

பதில்:-

ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அடைவதற்காக குடும்பத்தில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக ஆகுங்கள். இந்த கடைசி பிறவியில் மட்டும் தூய்மையின் சத்தியம் செய்தீர்கள் என்றால் ஜீவன்முக்தி கிடைத்து விடும். இதைப் பற்றி தான் ராஜா ஜனகரின் உதாரணம் பாடப்பட்டுள்ளது. குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே ஒரு வினாடியில் சத்தியத்தின் ஆதாரத்தில் ஜீவன் முக்தியை அடைந்தார்.

 

பாட்டு:-

இந்த நேரம் போய்க்கொண்டிருக்கிறது.............................

 

ஓம் சாந்தி.

அனைவருக்கும் ஒரு வினாடியில் ஜீவன் முக்தியை கொடுப்பதற்காக பாபா வருகின்றார். அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல், ஜீவன் முக்தியை வழங்கும் வள்ளல் ஒருவரே என்று பாடப்பட்டுள்ளது. ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என்று ஏன் சொல்கிறார்கள்? ராஜா ஜனகரின் உதாரணத்தைப் போல் ஆகும். அவருடைய பெயர் ஜனகர் ஆகும். ஆனால் எதிர்காலத்தில் அவரே அனுஜனகர் ஆகின்றார். ஜனகரைப் பற்றிச் சொல்லும்போது, அவருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது என்று சொல்கிறார்கள், ஆனால் ஜீவன் முக்தி என்று சத்யுகம்-திரேதாவைத் தான் சொல்ல முடியும். குருமார்கள் காதில் மந்திரம் சொல்கிறார்கள், அதை வசீகர (வசப்படுத்தும்) மந்திரம் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் மந்திரம் கொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு மகாமந்திரம், ஜீவன்முக்திக்கான மந்திரம் கிடைக்கிறது. இந்த மந்திரத்தைக் கொடுப்பது யார்? பிரம்மாகுமார- பிரம்மாகுமாரிகளாவர். அவர்களுக்கு இந்த மந்திரம் எங்கிருந்து கிடைத்தது? அந்த சத்குருவிடமிருந்து. சர்வோத்தமமானவர் ஒரு பாபா தான் ஆவார். பிறகு குழந்தைகளாகிய நீங்கள் சர்வோத்தமர்களாக ஆகின்றீர்கள். அவர்களில் சர்வோத்தம குரு இருக்கிறார்கள். நீங்களும் கூட சத்குருவின் குழந்தைகள் குரு ஆவீர்கள். கீதை சொல்லக் கூடியவர்களையும் குரு என்று சொல்லப்படுகிறது. வரிசைக்கிரமமாக இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் கூட சத்தியத்தைப் பேசக்கூடிய குரு ஆவீர்கள். நீங்கள் ஒருபோதும் ஈஸ்வரனைப் பற்றி பொய் சொல்வதில்லை. முதன்-முதலில் நீங்கள் தூய்மையைப் பற்றி தான் புரிய வைக்கின்றீர்கள், நாங்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என்று சத்தியம் செய்யச் சொல்கிறீர்கள். பொய் சொல்லாமல் இருப்பது என்பது பொதுவான விஷயமாகும். பொய் நிறைய பேரிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு அந்த விஷயம் கிடையாது. இங்கே தூய்மையின் விஷயமாகும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே இந்த கடைசி பிறவியில் நாம் பாபாவிடம் சத்தியம் செய்கின்றோம், நாங்கள் தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருப்போம். எனவே இங்கு தூய்மையாக இருப்பதற்கான விஷயமாகும். இது உயர்ந்த குறிக்கோள், இது நடக்காது என்று சொல்வார்கள். ஆஹா ! ஏன் முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள். தாமரை மலருக்குச் சமமாக................. என்று பாடப்பட்டுள்ளது. இந்த உதாரணம் சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாபா தான் இப்படிப்பட்ட படிப்பினையைக் கொடுத்திருக்கிறார். இது பகவானுடைய மகாவாக்கியம் அல்லது பிராமணர்களுடைய வாக்கியமாகும். பகவான் அனைவருக்கும் சொல்வதில்லை. பிராமண குழந்தைகள் தான் கேட்கிறார்கள். இந்த விஷயத்தை நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். முக்கியமான விஷயம் தூய்மையாகும். தாமரை மலருக்குச் சமமாக ஜனகரைப் போல் தூய்மையாக ஆக வேண்டும். அதே ஜனகர் தான் பிறகு அனுஜனகரானார். எப்படி ராதை அனுராதை ஆவதுபோலாகும். யாருடைய பெயராவது நாராயணன் என்றிருந்தால் எதிர்காலத்தில் அனு நாராயணன் ஆகிறது. இது சரியான விஷயமாகும். எனவே யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே உயர்ந்த பதவியை அடைய முடியும். நாங்கள் அனுபவத்தின் மூலம் கூறுகின்றோம், பொய்யல்ல. பகவானுடைய மகாவாக்கியம் - முக்கியமான விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் - பகவான் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார். கண்டிப்பாக ஜீவன் முக்தியை வழங்கும் வள்ளலும் அவரே ஆவார். இது குடும்ப மார்க்கமாகும். சன்னியாசிகளுடையது விடுதலை (துறவற) மார்க்கமாகும். அவர்கள் ஒருபோதும் இராஜயோகத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது. அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு ஓடக்கூடியவர்கள். அவர்கள் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது, இது இராஜயோகமாகும். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருக்க வேண்டும். சத்யுகத்தில் பாரதம் தூய்மையான குடும்ப மார்க்கமுடையதாக இருந்தது, விகாரமற்ற உலகமாக இருந்தது. இராஜ்யத்தில் ஆண்-பெண் இருபாலரும் வேண்டும். எனவே புரிய வைக்கப்படுகிறது - நாங்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருக்க முடியும். தூய்மையாக ஆகி, பாபாவின் மூலம் தூய்மையான உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம் என்பதை நாங்கள் தெரிந்திருக்கிறோம். தூய்மையான குடும்ப மார்க்கம் இருந்தது, இப்போது தூய்மையற்ற குடும்ப மார்க்கமாக இருக்கிறது. இந்த உலகமே கீழானதாக இருக்கிறது. அது உயர்ந்த உலகமாக இருந்தது. இராவணன் கீழானவர்களாக மாற்றுகின்றான், இராமர் உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். அரைகல்பம் இராவண இராஜ்யம் நடக்கிறது. கீழான உலகத்தில் பக்தி மார்க்கம் இருக்கிறது. தானம்-புண்ணியம் போன்றவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், கீழான தன்மை இருக்கிறது. மனிதர்கள் எந்தளவிற்கு பக்தி, தானம்-புண்ணியம் செய்வார்களோ அதை வைத்து பகவான் கிடைப்பார் என்று புரிந்து கொள்கிறார்கள். பகவானை பக்தி செய்கிறார்கள். வந்து எங்களை உயர்ந்தவர்களாக மாற்றுங்கள் என்று சொல்கிறார்கள். பாரதம் உயர்ந்ததாக இருந்தது. இப்போது இல்லை.

 

கீழானவர்கள் தான் உயர்ந்தவர்களாக ஆகின்றார்கள். பாரதத்தின் புதிய படைப்பின் கதையை யாரும் தெரிந்திருக்கவில்லை. சித்திரங்களின் மூலம் நல்ல விதத்தில் புரிய வைக்க முடியும். அப்படிப்பட்ட சித்திரங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கிளை நிலையத்திலும் கண்காட்சியின் சித்திரங்கள் இருக்க வேண்டும். எங்களிடம் சித்திரம் இல்லை என்று கடிதம் எழுதினார்கள் என்றால் அதை உருவாக்கி அனைவருக்கும் அனுப்புங்கள். அப்போது அனைவரிடமும் கண்காட்சி சித்திரங்கள் வந்து விடும் என்று பாபா டைரக்ஷன் கொடுக்கின்றார். இந்த சித்திரங்கள் மிகவும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. முதன்-முதலில் நாம் பாபாவின் குழந்தைகள் என்பது புத்தியில் வர வேண்டும். பகவான் சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் ஆவார். நரகத்தை படைப்பவன் இராவணன். நாடகச்சக்கரத்தின் மேலே 10 தலைகளையுடைய இராவணனின் சித்திரத்தை உருவாக்கி விடுங்கள். சொர்க்கத்தின் சக்கரத்தின் மீது சதுர்புஜ விஷ்ணுவின் சித்திரமாகும். இது இராம இராஜ்யம், இது இராவண இராஜ்யம் என்றும் எழுதலாம். இந்த சமயத்தில் இராவணன் சர்வவியாபியாக இருக்கின்றான். அங்கே நாம் இராமர் சர்வவியாபி என்று கூற முடியாது. ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தன என்று பாடப்படுகிறது பிறகு அழகிய சந்திப்பு நிகழ்ந்தது சத்குரு தரகராக கிடைத்த போது. எனவே கண்டிப்பாக அவர் வருவார் அல்லவா? இந்த கணக்கை யாரும் தெரிந்திருக்கவில்லை. முதன்-முதலில் தேவி-தேவதைகளின் ஆத்மாக்கள் தனித்தனியாக பிரிந்தன. இது ஞானமாகும், யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். ஆத்மாக்களுக்கு தந்தை இருக்கின்றார் அல்லவா? இப்போது ஹே ஆத்மாக்களே! பரமபிதா பரமாத்மாவின் தொழிலை சொல்லுங்கள்? என்ன தெரியாதா? தந்தையின் தொழிலைத் தெரியாத குழந்தைகள் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் தங்களுடைய பிறவிகளை தெரிந்திருக்கவில்லை, முதன்-முதலில் யார் தேவி-தேவதைகளாக இருந்தார்களோ அவர்கள் இத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள். அப்படியென்றால் மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்திருப்பார்கள்? அதிக பட்சம் இத்தனை பிறவிகள் என்று நிரூபித்து புரிய வைக்க வேண்டும். இவையனைத்தையும் நான் புரிய வைக்கின்றேன் என்று பாபா தான் வந்து புரிய வைக்கின்றார். மரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. முதன்-முதலில் தேவி-தேவதைகள் இருந்தார்கள். அவர்களுக்குத் தான் 84 பிறவிகள் என்று சொல்லப் படுகிறது. பாரதத்தின் ஞானம் அல்லவா! பழமையான பாரதத்தின் ஞானத்தை யார் கொடுத்தது? கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை பகவான் தான் கொடுத்திருக்கிறார். ஞானக்கடல் இறைதந்தை அல்லவா? பிரம்மாவைக் கூட ஞானக்கடல் என்று சொல்ல முடியாது, கிருஷ்ணரையும் சொல்ல முடியாது. கிருஷ்ணருடைய மகிமை தனிப்பட்டதாகும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் தெளிவான ஞானமாகும். பகவான் அனைவருக்கும் ஒரேயொரு நிராகார பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் படைப்பவர் ஆவார். கிருஷ்ணர் படைப்பு ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஒருவரே அல்லவா! அவரை சர்வவியாபி என்று கூற முடியாது. பாரதத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஜனாதிபதி பிறகு வரிசைக்கிரமமாக மற்றவர்கள். அனைவருடைய தொழிலையும் சொல்வார்கள். அனைவரும் ஒன்று தான் என்பது கிடையாது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அழிவற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். தங்களுக்குள் ஆலோசித்து சேவைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனால் யாருடைய தொடர்பு தெளிவில்லாமல் இருக்குமோ, ஏதாவது விகாரம் இருக்குமோ அல்லது பெயர்-ரூபத்தில் மாட்டிக் கொண்டிருந்தாலோ இந்த காரியம் நடக்கவே முடியாது. இதில் தொடர்பு மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். முடிவு கடைசியில் வெளிவரும். இப்போது அனைவரும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். இந்த வியாச பகவான் சாஸ்திரத்தை உருவாக்கினார் என்று மனிதர்கள் கூறுகின்றனர். வியாசரை பகவான் என்று சொல்ல முடியாது. உண்மையில் தர்ம சாஸ்திரங்கள் 4 ஆகும். பாரதத்தின் தர்ம சாஸ்திரம் தாயும் தந்தையுமான கீதையாகும். ஆஸ்தி அவரிடமிருந்து தான் கிடைக்கிறது. தாயின் மூலம் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. கீதை தாயின் படைப்பவர் தந்தையாவார். எனவே கீதையின் மூலம் தான் பாபா பழமையான சகஜ இராஜயோகத்தின் ஞானத்தை கொடுத்திருக்கிறார். கீதை பாரதகண்டத்தின் சாஸ்திரமாகும். பிறகு இஸ்லாமியர்களின் தர்ம சாஸ்திரம் தனியாக இருக்கிறது, கிறிஸ்தவர்களுடையது தனியாக இருக்கிறது, பௌத்தர்களுடையது தனியாக இருக்கிறது. கீதை அனைத்திற்கும் தாய் தந்தையாகும், மற்ற சாஸ்திரங்கள் குழந்தைகளாகும். அவை பின்னால் உருவாகின்றன. மற்ற வேத-உப நிஷத்துக்கள் போன்ற இவையனைத்தும் எந்த தர்மத்தைச் சேர்ந்தவைகள்? இதை யார் உச்சரித்தது என்பது தெரிய வேண்டும். அதன் மூலம் எந்த மதம் உருவானது? எந்த தர்மமும் இல்லை. கீதை அவமதிக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயரை கொடுத்து விட்டார்கள். வாழ்க்கை சரித்திரம் அனைவருக்கும் தனித்தனியாக இருக்கிறது. பாபா கூறுகின்றார், சர்வ தர்மான்ய பரித்யஜ்................ என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். பரமாத்மா ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார் - நீங்கள் அசரீரியாக ஆகுங்கள், என்னை நினைவு செய்யுங்கள். அசரீரியான தந்தை தான் இதை சொல்ல முடியும். சன்னியாசிகள் சொல்ல முடியாது. இது கீதையின் வார்த்தைகளாகும். அசரீரியாக ஆகுங்கள் என்று அனைத்து தர்மத்தைச் (மதம்) சேர்ந்தவர்களுக்கும் கூறுகின்றார். இப்போது நாடகம் முடிகிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால், என்னிடம் வந்து விடுவீர்கள் என்று அனைவருக்கும் மந்திரம் கிடைக்கிறது. முக்திக்குப் பிறகு கண்டிப்பாக ஜீவன்முக்தி இருக்கிறது. ஜீவன்முக்தி பதவி முக்தி வழியாக கிடைக்கிறது. யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் சதோ, ரஜோ, தமோவை கடக்கிறார்கள். எவ்வளவு நல்ல ஞானமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகள் ஒரு காதின் வழியாக கேட்டு மற்றொன்றின் வழியாக விட்டு விடுகிறார்கள். சொல்லப்போனால் மிகவும் சகஜமானதாகும்.

 

நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் கண்காட்சி வையுங்கள், நாளேடுகளிலும் வர வேண்டும். அதற்கு செலவு செய்யலாம். அனைவரும் கேட்கட்டும். நாளேடுகளில் கண்டிப்பாகப் போட வேண்டும். குழந்தைகளுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் தான் மீதம் இருக்கிறது. அதீந்திரிய சுகத்தைப்பற்றி தெரிந்து கொள்ள கோப-கோபியர்களிடம் கேளுங்கள். இவர்கள் கோபி வல்லபரின் கோப கோபிகைகள் என்று பாடப்பட்டுள்ளது. கோப-கோபிகைகள் சத்யுகத்திலும் இருப்பதில்லை, கலியுகத்திலும் இருப்பதில்லை. அங்கே லஷ்மி தேவி, ராதை தேவி இருக்கிறார்கள். கோப-கோபியர்கள் இப்போது தான் இருக்கிறார்கள், கோபி வல்லபரின் குழந்தைகள் பேரன்-பேத்திகளாவர். கண்டிப்பாக தாத்தாவும் இருப்பார். தாத்தா, தந்தை மற்றும் மம்மா - இது சங்கமயுகத்தில் புதிய படைப்பாகும். பாபா கூறுகின்றார், நான் ஒவ்வொரு கல்பத்திலும், கல்பத்தின் சங்கமயுகத்தில் புதிய உலகத்தை உருவாக்க வருகின்றேன். நீங்கள் அசுர குழந்தையிலிருந்து ஈஸ்வரிய குழந்தையாக ஆகியுள்ளீர்கள், பிறகு தேவதைகளின் குழந்தைகளாக ஆவீர்கள். பிறகு 84 பிறவிகளில் சத்திரிய, வைசிய, சூத்திர குழந்தைகளாக ஆவீர்கள். பிறகு கூடவே மரம் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. மரமும் முழுமையாக வேண்டும். பிரளயம் ஏற்படுவதில்லை. பாரதம் அழிவற்ற கண்டமாக இருக்கிறது. பாரதத்தை அதிகம் மகிமை பாட வேண்டும். பாரதம் அனைத்து கண்டத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது. ஒருபோதும் அழிவதில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

இரவு வகுப்பு 16.04.1968

 

பிராமண குழந்தைகளாகிய உங்களைத் தவிர சங்கமயுகம் எப்போது வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த கல்பத்தின் சங்கமயுகத்திற்கு அதிக மகிமை இருக்கிறது. பாபா வந்து இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றார். சத்யுகத்திற்கு முன்னால் கண்டிப்பாக சங்கமயுகம் தான் வரும். அங்கே இருப்பவர்களும் மனிதர்களே. அதில் சிலர் கீழானவர்களாகவும், சிலர் உத்தமர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் தாங்கள் உத்தமபுருஷர்கள், நாங்கள் கீழானவர்களாக இருக்கிறோம் என்று மகிமை பாடுகிறார்கள். நான் இப்படி இருக்கின்றேன், அப்படி இருக்கின்றேன் என்று தாங்களே கூறுகின்றீர்கள்.

 

இப்போது இந்த புருஷோத்தம் சங்கமயுகத்தை பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. இதை மனிதர்கள் தெரிந்து கொள்ளுமாறு எப்படி விளம்பரம் செய்வது. சங்கமயுகத்தில் பகவான் தான் வந்து இராஜயோகத்தைக் கற்றுக் கொடுக்கின்றார். நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மனிதர்களுக்குத் தெரியும்படி என்ன யுக்தியை உருவாக்குவது. ஆனால் மெதுவாகத் தான் நடக்கும். இன்னும் நேரம் இருக்கிறது. அதிக நேரம் சென்று விட்டது. மீதம் கொஞ்சம் இருக்கிறது..... நாம் சொல்ல வேண்டும். அப்போது தான் மனிதர்கள் விரைவாக முயற்சி செய்வார்கள். இல்லையென்றால் ஞானம் ஒரு வினாடியில் கிடைக்கிறது, அதன்மூலம் நீங்கள் அந்த சமயத்தில் ஒரு வினாடியில் ஜீவன் முக்தியை அடைந்து விடுவீர்கள். ஆனால் உங்களுடைய தலையில் அரைக்கல்பத்தின் பாவம் இருக்கிறது, அது ஒரு வினாடியில் அழிந்து விடுமா என்ன! இதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. மனிதர்கள் இன்னும் நேரம் இருக்கிறது, இப்போது ஏன் நாம் பிரம்மா குமாரிகளிடம் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்கள். புத்தகங்களின் மூலம் தலைகீழாகவும் புரிந்து கொள்கிறார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள். இது புருஷோத்தமர்களாக ஆவதற்கான யுகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வைரத்திற்கு ஒப்பானது என்று புகழ் இருக்கிறது அல்லவா? பிறகு குறைந்து விடுகிறது. கோல்டன் ஏஜ், சில்வர் ஏஜ். இந்த சங்கமயுகம் டைமண்ட் ஏஜ் ஆகும். சத்யுகம் கோல்டன் ஏஜ் ஆகும். சொர்க்கத்தை விட இந்த சங்கமயுகம் நல்லது வைரம் போன்றது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அமரலோகத்தின் புகழ் இருக்கிறது அல்லவா! பிறகு குறைந்து விடுகிறது. எனவே புருஷோத்தம சங்கமயுகம் வைரம், சத்யுகம் தங்கம், திரேதா வெள்ளி,....... என்று நீங்கள் எழுதலாம். சங்கமயுகத்தில் தான் நாம் மனிதனிலிருந்து தேவதையாக ஆகின்றோம் என்று நீங்கள் புரிய வைக்கலாம். எட்டு ரத்தினங்களை உருவாக்குகிறார்கள் அல்லவா? அதில் வைரமானது மத்தியில் வைக்கப்படுகிறது. சங்கமயுக காட்சி நடக்கிறது. சங்கமயுகம் தான் வைரம் போன்றதாகும். சங்கமயுகத்தில் தான் வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது. யோகம் போன்றவைகளை கற்றுக் கொடுக்கிறார்கள், அதை ஆன்மீக யோகம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆன்மீகமானவர் தந்தையே ஆவார். ஆன்மீகத் தந்தை மற்றும் ஆன்மீக ஞானம் சங்கமயுகத்தில் தான் கிடைக்கிறது. தேக-அகங்காரம் உடைய மனிதர்கள் உடனே எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஏழைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. சங்கமயுகம் வைரம் போன்றது என்பதையும் எழுத வேண்டும். அதனுடைய ஆயுள் இவ்வளவு. சத்யுகம் கோல்டன் ஏஜ் என்றால் அதனுடைய ஆயுள் இவ்வளவு. சாஸ்திரங்களில் சுவஸ்திக் போடுகிறார்கள். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு இது நினைவிருந்தால் எவ்வளவு குஷி இருக்கும்! மாணவர்களுக்கு குஷி இருக்கிறது அல்லவா! மாணவ வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. இது வருமானத்திற்கான ஆதாரமாகும். இது மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான பாடசாலையாகும். தேவதைகள் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள். இதுவும் உங்களுக்குத் தெரியும். எனவே அளவற்ற குஷி இருக்க வேண்டும், ஆகையினால் தான் அதீந்திரிய சுகத்தை கோபி வல்லபருடைய கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டுள்ளது. டீச்சர் கடைசி வரை படிப்பிக்கின்றார் என்றால், அவரை கடைசி வரை நினைவு செய்ய வேண்டும். பகவான் கற்பிக்கின்றார், பிறகு பகவான் தன்னோடு அழைத்தும் செல்வார். அவரை விடுவிப்பவர், வழிகாட்டி என்று அழைக்கிறார்கள். துக்கத்திலிருந்து விடுவியுங்கள். சத்யுகத்தில் துக்கம் இருப்பதே இல்லை. உலகத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். முன்பு எப்போது அமைதி இருந்தது என்று கேளுங்கள்? யாருக்கும் தெரிய வில்லை. இராம இராஜ்யம் சத்யுகம், இராவண இராஜ்யம் கலியுகமாகும். இதை தெரிந்துள்ளீர்கள் அல்லவா? குழந்தைகள் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். மனதின் விஷயங்களை என்ன சொல்வது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராஜ்ஜியத்தை கொடுக்கக் கூடியவர் கிடைத்திருக்கிறார், வேறு என்ன அனுபவத்தை சொல்வது! வேறு எந்த விஷயமுமே இல்லை. இதைப்போன்ற குஷி வேறு எதுவுமே இல்லை. யாருமே யாருடனாவது கோபித்துக் கொண்டு வீட்டிலேயே அமர்ந்து கொள்ளக் கூடாது. இது தங்களுடைய அதிர்ஷ்டத்தோடு கோபித்துக் கொள்வது போலாகும். படிப்பில் கோபித்துக் கொண்டீர்கள் என்றால் என்ன கற்றுக் கொள்வீர்கள். பாபா பிரம்மாவின் மூலம் தான் கற்பிக்க வேண்டும். எனவே ஒருவர் மற்றவரோடு கோபித்துக் கொள்ளக் கூடாது. இது மாயையாகும். யக்ஞத்தில் அசுரர்களின் தடை ஏற்படுகிறது அல்லவா? நல்லது

 

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு பாபா மற்றும் தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் இனிய இரவு வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) பாபா என்ன சொல்கிறாரோ அதை ஒரு காதின் மூலம் கேட்டு மற்றொரு காதின் வழியாக விட்டு விடக் கூடாது. ஞானத்தின் போதையில் இருந்து அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும்.

 

2) அனைவருக்கும் ஒரு வினாடியில் முக்தி-ஜீவன்முக்தியின் அதிகாரத்தை கொடுப்பதற்காக, தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் தியாகம் செய்து பாபாவை நினைவு செய்யுங்கள், என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

 

வரதானம் :

பிரம்மா பாபாவைப் பின்பற்றி முதல் நிலையில் வரக்கூடிய சம நிலை ஆகுக !

 

அனைத்து குழந்தைகளுக்கும் பிரம்மா பாபாவோடு மிகுந்த அன்பு உண்டு அன்பின் அடையாளம் அவர் போன்று ஆவது ! இதில் முதலில் நான் என்னும் லட்சியம் வையுங்கள். பொறாமையின் வசமாகி, முதலில் நான் என்பது கூடாது. அது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால் தந்தையைப் பின்பற்றுவதில் நான் முதலில் என்று சொன்னவுடன் ஆகிவிட வேண்டும். முதலானவருடன் கூடவே நீங்களும் முதலில் வந்து விடுவீர்கள். எப்படி பிரம்மா பாபா முதல் நம்பரில் வந்தாரோ அப்படியே அவரைப் பின்பற்றுவோரும் முதல் நம்பர் லட்சியத்தை வைக்க வேண்டும். முதலில் வருபவரே அர்ஜூன்! அனைவருக்கும் முதலில் வர வாய்ப்புள்ளது. முதல் தரம் என்பது எல்லையற்றது! குறைந்தது அல்ல!

 

சுலோகன் :

வெற்றியாளராக ஆக வேண்டுமெனில், சுய சேவை மற்றும் பிறருக்கான சேவை இரண்டையும் சேர்த்தே செய்ய வேண்டும்.

ஓம்சாந்தி