காலை முரளி                                10.11.2019           அவ்யக்த பாப்தாதா,                                   மதுபன்

ரிவைஸ்           06.03.1985


 

கடின உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான சுலபமான வழி

 

நிராகார சொரூபத்தில் நிலைத்திருப்பது பாப்தாதா குழந்தைகளின் அன்பின் காரணமாக சப்தத்திலிருந்து விலகி நிர்வாண நிலையிலிருந்து சப்தத்தில் வருகிறார். எதற்காக? குழந்தைகளுக்கு தனக்குச் சமமாக நிர்வாண நிலையின் அனுபவத்தை செய்விப்பதற்காக! நிர்வாண இனிமையான இல்லத்திற்கு அழைத்துச் செல்வதற்காக! நிர்வாண நிலை எந்த தீய எண்ணமும் இல்லாத நிலை. நிர்வாண நிலை விகாரங்கள் அற்ற நிலை. நிர்வாண நிலையிலிருந்து நிராகார நிலையிலிருந்து சாகாகர அதாவது உடல் சொரூபமானவர் ஆகி, சப்தத்தில் வருகிறார். உடலில் வந்த பொழுது உடலற்ற நிலையில் நினைவு எப்பொழுதும் நினைவில் இருக்கிறது. நான் உடல் அற்றவன் உடலின் ஆதாரத்தை எடுத்து பேசிக் கொண்டிருக்கிறேன். உடலில் இருந்தபொழுதும் உடலற்ற நிலையில் நினைவில் இருப்பது என்பது தான் உடலற்றவராக இருப்பவர் உடல் மூலமாக பேச்சிலும், காரியத்திலும் வருவது. உண்மையான சொரூபம் உடலற்ற சொரூபம், உடல் ஆதாரமாக, இந்த இரட்டை நிலையில் உடலற்றவர் உடலில் இருக்கிறேன் என்பது சக்திசாலியான நிலை உடலின் ஆதாரத்தை எடுத்த போதிலும் உடலற்ற சொரூபத்தை மறக்காதீர்கள். நீங்கள் மறக்கிறீர்கள், எனவே நினைவு செய்வதற்குக் கடினமாக இருக்கிறது. எப்படி உலக வாழ்க்கையில் தன்னுடைய உடல் சொரூபம் இயல்பாகவே நான் இன்னார் மற்றும் நான் இன்னார், இந்த நேரம் இந்த காரியம் செய்துக் கொண்டிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கும். செய்யும் காரியம் மாறும், ஆனால் நான் இன்னார் என்பது மாறுவதில்லை, மறப்பதும் இல்லை. அதே போல் நான் உடலற்ற ஆத்மா என்ற இந்த உண்மையான சொரூபத்தை எந்த காரியம் செய்துக் கொண்டிருந்தபோதிலும் இயல்பாக மற்றும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது ஒரு தடவை நினைவில் வந்து விட்டது. நான் உடலற்ற ஆத்மா என்று அறிமுகமும் கிடைத்து விட்டது, அறிமுகம் என்றால் ஞானம் அப்படி ஞானத்தின் சக்தி மூலமாக சொரூபத்தைத் தெரிந்து கொண்டீர்கள், தெரிந்து கொண்ட பிறகு எப்படி மறக்க முடியும். எப்படி ஞானத்தின் சக்தி மூலம் உடல் உணர்வை மறக்க வைத்தாலும் மறக்க முடிவதில்லை. அப்படியானால் இந்த ஆத்மீக சொரூபத்தை எப்படி மறக்க முடியும்? எனவே, தன்னைத்தானே கேளுங்கள் மற்றும் பயிற்சி செய்யுங்கள். நடைமுறையில் காரியங்கள் செய்துக் கொண்டே உடலின் ஆதாரத்தை எடுத்து இந்த காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைவு இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். இவர் இயல்பாகவே தீய எண்ணம் அற்ற நிலை உடலற்ற நிலை, தடையற்ற நிலை சுலபமாகவே இருக்கும். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். எப்பொழுது நீங்கள் அடிக்கடி மறக்கிறீர்களோ அப்பொழுதுதான் கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. பிறகு நினைவு செய்வதற்கும் கடும் உழைப்பு செய்கிறீர்கள். எனவே, ஏன் மறக்கவே செய்கிறீர்கள்? நீங்கள் யார்? உடலா அல்லது உடலற்ற ஆத்மாவா என்று பாப்தாதா கேட்கிறார். நீங்கள் உடலற்ற ஆத்மாக்கள் தான் இல்லையா? அப்படியானால் உடலற்றவராக இருந்தபோதிலும் ஏன் மறந்து விடுகிறீர்கள். உண்மையான சொரூபம் மறந்து விடுகிறது, போலியானவர் எனவே வந்து விடுகிறதா சில நேரம் பாப்தாதா குழந்தைகள் மீது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தன்னைத் தான் மறந்து விடுகிறார்கள். மேலும் மறந்து பிறகு என்ன செய்கிறார்கள்? தன்னைத் தானே மறந்து மிகவும் நொந்து போகிறார்கள். எப்படி தந்தையையும் அன்போடு உடலற்ற நிலையிலிருந்து உடலில் வரவேற்று அழைத்து வர முடியும் என்றால், யார் மீது அன்பு இருக்கிறதோ அவர் மாதிரி உடலற்ற நிலையில் நிலைத்திருக்க முடியாதா? பாப்தாதாவிற்கு குழந்தைகள் கடுமையாக உழைப்பதைப் பார்க்க முடியாது. மாஸ்டர் சர்வ சக்திவான் மேலும் கடும் உழைப்பா ? நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவான் அனைத்து சக்திகளின் எஜமானன். எந்த சக்தியை எந்த நேரத்திலும் நல்ல எண்ணத்தோடு வரவழைத்தீர்கள் என்றால், அந்த சக்தி எஜமானர்கள் உங்கள் எதிரில் ஆஜர் ஆகிவிடும். அந்தமாதிரியான எஜமானன் யாருக்கு அனைத்து சக்திகளும் சேவாதாரியாக இருக்கிறார்களோ அவர் கடுமையாக உழைப்பாரா அல்லது நல்ல எண்ணத்தோடு ஆணையிடுவாரா? என்ன செய்வீர்கள் நீங்கள் ராஜாதான் இல்லையா அல்லது பிரஜையா? பொதுவாகவே நல்ல தகுதியான குழந்தை இருக்கிறார் என்றால் அவரை என்னவென்று கூறுவார்கள்? இராஜா குழந்தை என்று கூறுவார்கள் இல்லையா? அப்படியானால் நீங்கள் யார் ? நீங்கள் இராஜா குழந்தைகளா அல்லது அடிமை குழந்தைகளா? நீங்கள் அதிகாரி ஆத்மாக்கள் தான் இல்லையா? இந்த சக்திகள், இந்த குணங்கள் இவை அனைத்தும் உங்களுடைய சேவாதாரிகள். வரவழையுங்கள் உடனே ஆஜர் ஆகிவிடும். யார் பலவீனமாக இருப்பாரோ அவருக்கு சக்திசாலி யான ஆயுதங்கள் இருந்தபோதிலும் பலவீனத்தின் காரணமாக அவர் தோல்வியடைந்து விடுவார். நீங்கள் பலவீனமானவரா என்ன? நீங்கள் பலம் நிறைந்த குழந்தைகள் தான் இல்லையா? சர்வசக்திவானின் குழந்தைகள் பலவீனமாக இருக்கின்றார் என்றால், அனைவரும் என்ன கூறுவார்கள்? நன்றாக இருக்குமா? எனவே வரவழைக்க, ஆணையிட கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் சேவாதாரிகள் யாருடைய ஆணையை ஏற்று நடப்பார்கள்? யார் எஜமானனாக இருப்பாரோ அவருடைய ஆணையைத் தான் ஏற்று நடப்பார்கள். எஜமானன் அவரே சேவாதாரி ஆகிவிட்டார், கடும் உழைப்பு செய்பவராக இருக்கின்றார் என்றால் சேவாதாரி ஆகிவிட்டார் இல்லையா? மனதின் கடும் உழைப்பிலிருந்து இப்பொழுது விடுபட்டு விட்டீர்கள். உடலால் உழைக்கும் யக்ஞ சேவை வேறு விசயம் ஆகும். அதுவும் யக்ஞ சேவையின் மகத்துவத்தைத் தெரிந்துக் கொண்டதினால் கடும் உழைப்பாக அனுபவம் ஆகாது. மதுபன்னில் எப்பொழுது தொடர்பில் இருக்கும் ஆத்மாக்கள் வருகிறார்கள் மற்றும் பார்க்கிறார்கள், இத்தனை அதிக எண்ணிக்கையில் ஆத்மாக்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது மேலும் அனைத்து காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து பார்த்து இவர்கள் எந்தளவு கடுமையான வேலையை எப்படி செய்கிறார்கள்? என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய காரியம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் செய்பவர்கள் அந்த மாதிரி பெரிய காரியத்தையும் என்னவென்று நினைக்கிறார்கள் ? சேவையின் மகத்துவத்தின் காரணமாக இதுவோ அவர்களுக்கு விளையாட்டாக ஆகிறது, கடும் உழைப்பாக ஆவதில்லை. அந்தமாதிரி மகத்துவத்தின் காரணமாக தந்தை மீது இருக்கும் அன்பின் காரணமாக கடும் உழைப்பின் நிலை மாறிவிடுகிறது. அதே போல் மனதின் உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான நேரம் இப்பொழுது வந்து விட்டது. துவாபரயுகத்திலிருந்து தேடுவதில், துடிப்பதில், அழைப்பதில் மனதால் உழைத்து வந்திருக்கிறீர்கள். மனதின் உழைப்பின் காரணமாக பணம் சம்பாதிப்பின் வேகம் கடுமையாக அதிகரித்துக் கொண்டே ஆகிவிட்டது. இன்று யாரிடம் கேட்டாலும் என்ன கூறுகிறார்கள்? பணம் சம்பாதிப்பது என்பது, நினைத்தால் சித்தி வீட்டிற்குச் செல்வது போல் சாதாரண விசயம் இல்லை. மனதின் உழைப்பின் காரணமாக பணம் சம்பாதிப்பதிலும் உழைப்பை அதிகரித்து விட்டீர்கள். மேலும் உடலோ நோயற்றதாக ஆகி விட்டது, எனவே உடலால் செய்யும் காரியத்திலும் கடும் உழைப்பு இருக்கிறது, மனதிற்கும் உழைப்பு பணத்திற்கும் உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த அளவு மட்டும் இல்லை, ஆனால் இன்று குடும்பத்திலும் அன்பு வைத்து நடந்து கொள்வதிலும் கடினமாக இருக்கிறது. ஒரு நேரம் ஒருவர் கோபப்படுகிறார், மறு நேரம் இன்னொருவர் கோபப்படுகிறார்...... பிறகு இவர்களை சமாதானம் செய்வதற்கும் கடினமாக இருக்கிறது. இன்று உன்னுடையவர், நாளை உன்னுடையவர் இல்லை பிரிந்து சென்று விடுகிறார். அந்த மாதிரி அனைத்து விதமான கடின உழைப்பு செய்து களைப்படைந்து விட்டிருந்தீர்கள் இல்லையா? உடலால், மனதால், பணத்தினால், சம்மந்தத்தினால் அப்படி அனைத்திலும் களைப்பு அடைந்து விட்டீர்கள்.

 

முதலில் பாப்தாதா மனதின் கடின உழைப்பை அகற்றிவிடுகிறார், ஏனென்றால் மனம் தான் விதை. மனதின் கடின உழைப்பு உடலின், பணத்தின் கடின உழைப்பை அனுபவம் செய்விக்கிறது. எப்பொழுது மனம் சரியாக இருக்கவில்லையென்றால் ஏதாவது காரியம் செய்ய வேண்டியதாக இருந்தது என்றால், இன்று இது நடக்காது என்று கூறுவார்கள். நோயற்றவராக இருக்க மாட்டார், ஆனால் தனக்கு 103 டிகிரி காய்ச்சல் இருப்பதாக நினைப்பார். அந்த மாதிரி மனதின் கடின உழைப்பு உடலின் கடின உழைப்பை அனுபவம் செய்விக்கிறது. பணத்திலும் அதே மாதிரிதான் மனம் கொஞ்சம் சரியாக இருக்காது அதனால் மிகவும் அதிக வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று கூறுவார்கள். சூழ்நிலை மிக மோசமானது, சம்பாதிப்பது மிகவும் கடினம் என்று கூறுவார்கள். மேலும் எப்பொழுது மனம் குஷியாக இருக்கிறது என்றால் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்று கூறுவார். வேலை அதே தான் இருக்கும் ஆனால் மனதின் உழைப்பு பணத்தின் உழைப்பையும் அனுபவம் செய்விக்கிறது. மனதின் பலவீனம் வாயு மண்டலத்திலும் பலவீனத்தை கொண்டு வருகிறது. பாப்தாதாவிற்கு குழந்தைகளின் மனக் கஷ்டத்தைப் பார்க்க முடியாது. 63 ஜென்மங்களில் கடுமையாக உழைத்திருப்பீர்கள். இப்பொழுது ஒரு ஜென்மம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஜென்மம் அன்பின் ஜென்மம், பிராப்திகளின் ஜென்மம் வரதானங்களின் ஜென்மம். உதவி பெறுவதற்கும் உதவி கிடைப்பதற்குமான ஜென்மம். இருந்தும் இந்த ஜென்மத்தில் கூட ஏன் கடின உழைப்பு இருக்கிறது? எனவே இப்பொழுது கடின உழைப்பை அன்பாக மாற்றம் செய்யுங்கள், மகத்துவத்தை தெரிந்து அழித்து விடுங்கள்.

 

இன்று பாப்தாதா அவர்களுக்குள் மிகவும் உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்து. என்ன செய்கிறார், பாப்தாதா புன்சிரிப்பு செய்துக் கொண்டிருந்தார், மனதின் கடினம் காரணமாக என்ன ஆகிறது, என்ன செய்கிறார்கள் என்று நினைத்து புன்முறுவல் இட்டுக் கொண்டிருந்தார் உடல் ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள், சிலநேரம் குழந்தைகளுக்கு வாய் இருக்காது, சில நேரம் காது இருக்காது, சில நேரம் கை இருக்காது. அந்த மாதிரி வீணானதின் வம்சா வழிகளை மிக அதிகம் பெற்றுக் கொள்கிறார்கள், மேலும் பிறகு எவற்றை பெற்றுக் கொண்டார்களோ அவற்றை என்ன செய்வது? அவற்றை வளர்க்கும் காரணத்தினால் கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கிறது. அந்தமாதிரியான படைப்பை படைத்த காரணத்தினால் அதிகமாக உழைத்து களைப்படைந்து விடுகிறார்கள். மனம் உடைந்தும் போய்விடு கிறார்கள். மிகவும் கடினமாக அனுபவம் ஆகிறது. நல்லது தான்! ஆனால் மிகக் கடினமானது. விடவும் விரும்புவதில்லை, பறக்கவும் விரும்புவதில்லை. எனவே என்ன செய்ய வேண்டியதாக இருக்கிறது. நடக்க வேண்டும். நடப்பதிலோ அவசியம் கடினம் இருக்கும் இல்லையா? எனவே, இப்பொழுது பலவீனமான படைப்புகளைப் படைப்பதை முடிவு கட்டுனீர்கள் என்றால், மனதின் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். சிரிப்பூட்டும் விசயமாக என்ன கூறுகிறார்கள்? இந்த படைப்பை ஏன் படைத்தீர்கள் என்று தந்தை கேட்கின்றார் : அதற்கு எப்படி இன்றைய நாட்களின் மனிதர்கள் என்ன செய்வது ஈஸ்வரன் கொடுத்துவிடுகிறார் என்று கூறுகிறார்கள் இல்லையா! பழியை ஈஸ்வரன் மீது போட்டு விடுகிறார்கள் இல்லையா? அதே போல் இந்த வீணான படைப்பின் மீது என்ன கூறுகிறார்கள்? நாங்கள் விரும்புவதில்லை, ஆனால் மாயா வந்து விடுகிறது. எங்களுடைய விருப்பம் இல்லை, ஆனால் நடந்து விடுகிறது எனவே, சர்வ சக்திவான் தந்தையின் குழந்தைகள் எஜமானன் ஆகுங்கள், இராஜா ஆகுங்கள் பலவீனம் என்றால், அடிமையான பிரஜை, எஜமானன் என்றால், சக்திசாலியான இராஜா. எனவே, எஜமானன் ஆகி வரவழையுங்கள் சுய நிலையின் சிரேஷ்ட சிம்மாசனத்தில் அமருங்கள். சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டு சக்தி என்ற சேவாதாரிகளை வரவழையுங்கள், ஆணையிடுங்கள், உங்களுடைய சேவாதாரி உங்களுடைய ஆணைப்படி நடக்கவில்லை என்று இருக்கவே முடியாது. பிறகு என்ன செய்வது சகித்துக் கொள்ளும் சக்தி இல்லாத காரணத்தினால் கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று கூறமாட்டீர்கள், உள் அடக்கும் சக்தி குறைவாக இருக்கிறது எனவே, அந்த மாதிரி ஆனது என்று கூற மாட்டீர்கள். உங்களுடைய சேவாதாரி நேரத்தில் காரியத்தில் வரவில்லை என்று சேவாதாரிக்கு என்ன ஆனது? காரியம் முடிந்துவிட்டது, பிறகு சேவாதாரி வருகிறார் என்றால் என்ன ஆகும். யாருக்கு நேரத்தின் மகத்துவம் இருக்கிறதோ அவருடைய சேவாதாரியும் நேரத்தின் மகத்துவத்தைத் தெரிந்து ஆஜர் ஆகிவிடுவார். எனவே, என்ன செய்ய வேண்டும்? சிம்மாசனத்தில் அமருவது நல்லதா அல்லது கடின உழைப்பு செய்வது நல்லதா? இப்போது இதில் நேரம் கொடுப்பதற்கான அவசியம் இல்லை. கடின உழைப்பு செய்வது சரியாக இருக்கிறதா அல்லது எஜமானன் ஆவது சரியாக படுகிறதா? எது நன்றாக இருக்கிறது? இதற்காக இந்த பயிற்சியை மட்டும் எப்பொழுதும் செய்துக் கொண்டே இருங்கள் என்று ஏற்கனவே கூறினோம்? இல்லையா உடலற்றவனாக இருக்கும் நான் உடலின் ஆதாரத்தினால் இந்த காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் செய்விப்பவனாகி கர்ம இந்திரியங்கள் மூலம் செய்வியுங்கள். தன்னுடைய உடலற்ற உண்மையான சொரூபத்தை நினைவில் வைத்தீர்கள் என்றால், உண்மையான சொரூபத்தின் குணங்கள் சக்திகள் இயல்பாகவே வெளிப்படும். எப்படி சொரூபம் இருக்குமோ அதேபோல் குணம் மற்றும் சக்திகள் இயல்பாகவே காரியத்தில் வருகின்றன. எப்படி கன்னியா எப்பொழுது தாய் ஆகிவிடுகிறாள் என்றால் தாயின் சொரூபத்தில் சேவை பாவனை, தியாகம், அன்பு, களைப்பற்ற சேவை ஆகிய குணங்கள் மற்றும் சக்திகள் இயல்பாகவே வெளிப்படுகிறது தான் இல்லையா? எனவே, அனாதி அழியாத சொரூபத்தின் நினைவு இருப்பதினால் இயல்பாகவே இந்த குணங்கள் மற்றும் சக்திகள் இயல்பாகவே வெளிப்படும். எப்படி சொரூபத்தின் நினைவு, உன்னத நிலையை தானாகவே உருவாக்கும். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்துக் கொண்டீர்களா? கடின உழைப்பு என்ற வார்த்தையை வாழ்க்கையிலிருந்து அகற்றி விடுங்கள். உழைப்பு செய்யும் காரணத்தினால் கடினமாக அனுபவம் ஆகிறது. கடின உழைப்பு முடிந்து விட்டது என்றால், கடினம் என்ற வார்த்தையும் தானாகவே அகன்று விடும். நல்லது.

 

எப்பொழுதும் கடினத்தை சுலபமாக ஆக்கக்கூடிய, கடின உழைப்பை அன்பில் மாற்றம் செய்யக் கூடிய, எப்பொழுதும் சுய சொரூபத்தின் நினைவு மூலமாக சிரேஷ்ட சக்திகள் மற்றும் குணங்களை அனுபவம் செய்யக் கூடிய, எப்பொழுதும் தந்தைக்கு அன்பின் பிரதிபலனைக் கொடுக்கக் கூடிய தந்தைக்குச் சமமாக ஆகக் கூடிய, எப்பொழுதும் சிரேஷ்ட நிலை என்ற சிரேஷ்ட ஆசனத்தில் அமர்ந்திருந்து எஜமானன் ஆகி, சேவாதாரிகள் மூலமாக செயல்களைச் செய்விக்கக் கூடிய இராஜா குழந்தைகளுக்கு, எஜமான குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தனிப்பட்ட சந்திப்பு :

(வெளிநாட்டு சகோதர சகோதரிகளுடன்) சேவை தந்தையின் துணையை அனுபவம் செய்விக்கிறது. சேவையில் செல்வது என்றால், எப்பொழுதும் தந்தை கூடவே இருப்பது! ஆகார ரூபத்தில் இருந்தாலும் சேவாதாரி குழந்தைகள் கூடவே தந்தை எப்பொழுதும் துணையாக கண்டிப்பாக இருக்கிறார். செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், நடத்துபவர் நடத்திக்கொண்டிருக்கிறார், மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கருவியாகி விளையாட்டை விளையாடிக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த மாதிரியே தான் அனுபவம் ஆகிறது இல்லையா ? அந்த மாதிரியான சேவாதாரிகள் வெற்றிக்கு அதிகாரியாக ஆகிவிடுகிறார்கள். வெற்றி பிறப்பின் உரிமையாகும். வெற்றி எப்பொழுதுமே மகான் புண்ணிய ஆத்மா ஆவதற்கான அனுபவம் செய்விக்கும் மகான் புண்ணிய ஆத்மா ஆகுபவர்களுக்கு அனேக ஆத்மாக்களின் ஆசீர்வாதங்களின் லிஸ்ட் கிடைக்கிறது. நல்லது.

 

இப்பொழுதோ அனைவரின் வாயிலிருந்து ஒருவர் ! தான் ஒருவரே தான்! என்ற பாடல் ஒலிக்கும் நாளும் கண்டிப்பாக வரும். நாடகத்தில் இந்த காட்சிதான் இன்னும் நடக்க வேண்டியதாக இருக்கிறது. இது நடந்து விட்டது என்றால், முடிவடைந்து விடும். இப்பொழுது இந்த காட்சியை அருகில் கொண்டு வர வேண்டும். இதற்காக அனுபவம் செய்விப்பது தான் விசேஷமாக கவர்ந்திழுப்பதற்கான சாதனம். ஞானத்தைக் கூறிக் கொண்டே இருங்கள். மேலும் அனுபவம் செய்வித்துக் கொண்டே இருங்கள். ஞானத்தைக் கேட்பதினால் மட்டும் திருப்தி அடைவதில்லை. ஆனால் ஞானத்தைக் கூறிக் கொண்டே அனுபவமும் செய்வித்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் ஞானத்திற்கும் மகத்துவம் இருக்கும் மேலும் பிராப்தியின் காரணமாக வரும் நாட்களில் உற்சாகமும் வந்து விடும். அவர்கள் அனைவரின் சொற்பொழிவோ ஞானம் நிறைந்ததாக மட்டும் இருக்கும். உங்களுடைய சொற்பொழிவு ஞானம் நிறைந்ததாக மட்டும் இல்லாமல், ஆனால் அனுபவத்தின் அதிகாரம் நிறைந்ததாகவும் இருக்கட்டும். மேலும் அனுபவங்களின் அதிகாரத்தோடு பேசிக்கொண்டே, அனுபவம் செய்வித்துக் கொண்டே இருங்கள். எப்படி சில நல்ல பேச்சாளர்கள் இருப்பார்கள், அவர்கள் பேசிக் கொண்டே அழவும் வைத்து விடுவார்கள், சிரிக்கவும் வைத்து விடுவார்கள். அமைதி நிசப்தத்தில் கொண்டு செல்வார்கள். எப்படி பேசுவார்களோ அந்த மாதிரி வாயு மண்டலமும் உருவாகி விடும். அதுவோ தற்காலிகமானதோ ஆனது. எப்பொழுது அவர்கள் செய்ய முடியும் என்றால், மாஸ்டர் சர்வ சக்திவான் நீங்கள் என்ன செய்ய முடியாது. யாராவது அமைதி என்று கூறினார் என்றால், அமைதியின் சூழ்நிலை இருக்க வேண்டும். ஆனந்தம் என்று கூறினார் என்றால், ஆனந்தத்தின் சூழ்நிலை உருவாகி விட வேண்டும் அந்த மாதிரி அனுபவம் செய்விக்கும் சொற்பொழிவு பிரத்யட்சத்தின் கொடியை பறக்க வைக்கும். ஏதாவது விசேஷத்தைப் பார்ப்பார்கள் இல்லையா? நல்லது! நேரம் இயல்பாகவே சக்திகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக நடக்கும், மீண்டும் அதே போல் செய்ய வேண்டும் அவ்வளவு தான். நல்லது.

 

விடைபெறும் நேரத்தில் தாதி ஜானகி அவர்களுடன் பாப்தாதாவின் சந்திப்பு :

பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறீர்கள். நெருக்கமான குழந்தைகளுக்கு மிக அதிகமான குஷி இருக்கிறது. அவர்கள் எப்பொழுதுமே குஷியின் கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறார்கள். சுகக் கடலில் அனைத்து பிராப்திகளின் கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் அவர்கள் மற்றவர்களையும் அதே கடலில் நீந்த வைக்கிறார்கள். முழு நாளும் நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? எப்படி யாருக்காவது கடலில் நீந்தத் தெரியவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்? கையைப் பிடித்து நீந்த வைப்பார்கள் இல்லையா? இதே வேலையைத் தான் நீங்கள் செய்கிறீர்கள். சுகத்தில் நீந்த வையுங்கள், குஷியில் நீந்த வையுங்கள்..... அதே போல் நீங்கள் செய்துக் கொண்டு இருக்கிறீர்கள் இல்லையா? பிசியாக இருப்பதற்கு நல்ல காரியம் கிடைத்து விட்டது. எந்தளவு பிசியாக இருக்கிறீர்கள்? ஒய்வு இருக்கிறதா? இதிலேயே எப்பொழுதும் பிசியாக இருக்கிறீர்கள், மற்றவர்களும் உங்களைப் பார்த்து பின்பற்றச் செய்கிறார்கள். நினைவு மற்றும் சேவையைத் தவிர எதுவும் தென்படுவதில்லை. இயல்பாகவே புத்தி நினைவு மற்றும் சேவையில் தான் செல்கிறது. மேலும் வேறு எங்கும் செல்ல முடியாது. செய்விக்க வேண்டியதாக இருக்காது தானாகவே நடந்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் கற்றுக் கொண்டவர் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுவது. நல்ல வேலை கொடுத்து விட்டார் இல்லையா? தந்தை திறமைசாலி ஆக்கிச் சென்றிருக்கிறார் இல்லையா ! மந்தமான தொய்வானவராகவோ விட்டு விட்டுச் செல்லவில்லை. திறமைசாலியாக்கி இடம் கொடுத்துச் சென்றிருக்கிறார் இல்லையா ! அவரோ கூடவே இருக்கவே இருக்கிறார். ஆனால் உங்களை கருவியாகவும் ஆக்கி இருக்கிறார் இல்லையா? திறமைசாலி ஆக்கி, இருக்கை கொடுத்திருக்கிறார். இங்கிருந்து தான் இருக்கைக் கொடுக்கும் பழக்கம் தொடங்கியது. தந்தை சேவைக்கான ஆசனம் மற்றும் சேவைக்கான இருக்கை கொடுத்துச் சென்று விட்டார், இப்பொழுது சாட்சியாகி பார்த்துக் கொண்டிருக்கிறார் எப்படி குழந்தைகள் முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறார், துணைக்குத் துணையாகவும் இருக்கிறார் சாட்சிக்கு சாட்சியாகவும் இருக்கிறார். இரண்டு பங்கையும் செய்துக் கொண்டிருக்கிறார். சாகார ரூபத்தில் சாட்சி என்று கூறுவோம். அவ்யக்த்த ரூபத்தில் துணைவன் என்று கூறுவோம். இரண்டு பங்கையும் செய்துக் கொண்டிருக்கிறார் நல்லது.

 

வரதானம் :

மூச்சுக்கு நினைவு மற்றும் சேவையின் சம நிலை மூலமாக ஆசீர்வாதத்தைப் பிராப்தி செய்யக் கூடிய எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்தவர் ஆகுக !

 

எப்படி நினைவின் இணைப்பு எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்ற கவனம் வைக்கிறீர்கள் அதே போல் சேவையிலும் எப்பொழுதும் இணைப்பு இணைந்திருக்க வேண்டும். மூச்சுக்கு மூச்சு நினைவு மற்றும் மூச்சுக்கு மூச்சு சேவை இருக்கட்டும். இதைத்தான் சமநிலை என்று கூறுவது. இந்த சமநிலை மூலமாக எப்பொழுதும் ஆசீர்வாதத்தின் அனுபவம் செய்துக் கொண்டே இருப்பீர்கள். மேலும் ஆசீர்வாதத்தினால் வளர்ந்து கொண்டு இருக்கிறேன் என்ற வார்த்தைகள் தான் இதயத்திலிருந்து வெளியாகும். கடின உழைப்பிலிருந்து, யுத்தம் செய்வதிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். என்ன, ஏன், எப்படி என்ற இந்த கேள்விகளிலிருந்து விடுபட்டு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிறகு வெற்றி பிறப்புரிமையின் ரூபத்தில் அனுபவம் ஆகும்.

 

சுலோகன் :

தந்தையிடமிருந்து பரிசைப் பெற வேண்டுமென்றால், தன்னோடு மற்றும் உடன் இருப்பவர்களோடு தடையற்று இருப்பதற்கான சான்றிதழ் உடனிருக்க வேண்டும்.

 

ஓம்சாந்தி