02.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் புருஷோத்தமர் ஆவதற்கான முழுமையான புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நினைவு மற்றும் படிப்பின் மீது கவனம் கொடுங்கள்.

 கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் மிகப் பெரிய வியாபாரி ஆவீர்கள். நீங்கள் எப்பொழுதும் எந்த விஷயத்தில் கவனம் கொடுத்து சிந்தனை செய்ய வேண்டும்?

 பதில்:

எப்பொழுதும் இலாபம் மற்றும் நஷ்டம் பற்றி சிந்தனை செய்யுங்கள். ஒரு வேளை இது பற்றி சிந்தனை செய்யவில்லை என்றால் பிரஜையில் வேலைக்காரன், வேலைக்காரியாக (தாசர் தாசி) ஆக வேண்டி வரும். தந்தை அளிக்கும் 21 பிறவிகளின் இராஜ்யத்திற்கான ஆஸ்தியை இழந்து விடுவீர்கள். எனவே தந்தையிடம் முழுமையாக வியாபாரம் செய்ய வேண்டும். தந்தை வள்ளல் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் குசேலரைப் போல ஒரு பிடி அவல் கொடுத்து உலக அரசாட்சியையே பெறுகிறீர்கள்.

 ஓம் சாந்தி.

குழந்தைகள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். இது பள்ளிகூடம் ஆகும். இது ஒன்றும் சத்சங்கம் அல்ல. மடாதிபதி, பிராமணர் அல்லது ஏதோ ஒரு சந்நியாசி முன்னால் அமர்ந்து கொண்டு இல்லை. சுவாமி கோபித்து கொண்டு விடுவாரோ என்ற பயத்தின் எந்த விஷயமும் இல்லை. பக்தி மார்க்கத்தில் யாராவது சாது சந்நியாசியை வீட்டிற்கு அழைக்கிறார்கள் என்றால் அவருடைய பாதங்களைக் கழுவிக் குடிப்பார்கள். இவரோ தந்தை ஆவார் அல்லவா? வீட்டில் குழந்தைகள் எப்பொழுதாவது தந்தைக்குப் பயப்படுகிறார்களா என்ன? நீங்களோ கூடவே உணவு உட்கொண்டும் அருந்திக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கிறீர்கள். சந்நியாசி, குரு ஆகியோரிடம் இவ்வாறு செய்கிறார்களா என்ன? அவர்களோ நாள் முழுவதும் குருஜீ, குருஜீ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இங்கோ அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இவரோ தந்தை ஆவார். குருவிடமிருந்து அவரது ஆஸ்தி, ஆசிரியரிடமிருந்து அவரது ஆஸ்தி கிடைக்கிறது. தந்தையிடமிருந்தோ சொத்து கிடைக்கிறது. குழந்தை பிறந்த உடனேயே வாரிசு ஆகி விடுகிறது. இங்கு கூட தந்தைக்கு குழந்தை ஆனார். தந்தையை அடையாளம் கண்டு கொண்டார் என்றால் அவ்வளவு தான். நாம் சொர்க்கத்தின் அதிபதி ஆகிறோம். தந்தை தான் சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கத்தின் இராஜ்யத்தை எப்படி மற்றும் எங்கிருந்து பெற்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நாம் இது போல இருந்தோம், மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இவர்கள் யார், நாம் யாரை பூஜிக்கிறோம் என்பது பற்றி மனிதர்களோ எதுவும் சிந்தனை செய்வதில்லை. சிவனின் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து விட்டு வருகிறார்கள். ஆனால் எதுவும் தெரியாது. நாம் இந்த மரண உலகத்தில் சரீரத்தை விட்டு விட்டு அமரலோகத்திற்குச் செல்வோம் என்ற உணர்வு இப்பொழுது உங்களுக்கு வருகிறது. எவ்வளவு உயர்ந்த பிராப்தி உள்ளது! பக்தி மார்க்கத்தில் எதுவுமே பிராப்தி இல்லை. நான் 12 குருக்களிடம் சென்றிருந்தேன் என்று சுயம் பாபா கூட கூறுகிறார். அவ்வாறு நேரத்தை வீணாக் கினோம் மற்றும் இன்னுமே கீழே இறங்கிக் கொண்டே வந்தோம் என்பதை இப்பொழுது புரிந்துள்ளீர்கள். ஆனால் இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. நமக்கு யாரிடமும் பகைமை இல்லை. நமக்கு ஒரு தந்தையிடம் மட்டுமே அன்பு உள்ளது. நீங்கள் வகுப்பிற்குள் வரும் பொழுது "நாம் படித்து இவர்கள் போல ஆகிறோம்" என்று இந்தப் படங்களைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். இந்த இராஜதானி எப்படி ஸ்தாபனை ஆகிறது என்று உங்களுக்குத் தெரியும். குழந்தைகளே குழப்பம் அடையாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை இவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். பிறகும் ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள், கூறினார்கள் மற்றும் ஓடி விடுபவர்களாக ஆகி விடுகிறார்கள். மாயையினுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். அவர்கள் துரோகி எனப்படுவர். ஒரு இராஜதானியிலிருந்து வெளியேறி இன்னொரு இராஜ்யத்தைச் சேர்ந்தவராக ஆகி விடுகிறார்கள். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கிறார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு அலைகிறார்கள்! தானம், புண்ணியம், தீர்த்தங்கள், விரதம், நியமங்கள் ஆகியவை நிறைய செய்கிறார்கள். நல்லது சாட்சாத்காரம் ஆகி விட்டது என்றால் என்ன ஆகியது? முன்னேறும் கலை ஒன்றும் ஆகவில்லை. இன்னுமே இறங்கும் கலை ஆகியது. உங்களுடையது நாளுக்கு நாள் முன்னேறும் கலை ஆகும். மற்ற அனைவரினுடையதும் இறங்கும் கலை ஆகும். ஞானம் என்பது பிரம்மாவின் பகல் ஆகும். பக்தி என்பது பிரம்மாவின் இரவு என்று குருமார்கள் கூறவும் செய்கிறார்கள். ஞானம் மற்றும் பக்திக்கிடையே இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. ஞானத்தினால் சுகம் கிடைக்கிறது. நீங்கள் தான் உலகின் அதிபதியாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் கீழே இறங்கி வந்துள்ளீர்கள் என்று தந்தை எவ்வளவு சுலபமாகப் புரிய வைக்கிறார். உங்களை ஆத்மா என்று உணருங்கள் அவ்வளவே என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஆத்மா அவினாஷி (அழியாதது) ஆகும். ஹே அவினாஷி தந்தையே! வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று ஆத்மா கூறுகிறது. இதில் முக்தி, ஜீவன் முக்தி எல்லாமே வந்து விடுகிறது. பக்தியில் நாம் எதுவும் தெரியாமல் இருந்திருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தேடிக் கொண்டே இருந்தோம். ஹே பகவான்! கருணை புரியுங்கள் என்று பாடிக் கொண்டே இருந்தோம். பகவான் என்று கூறுவதால் அவ்வளவு சுவை இருப்பதில்லை. ஆஸ்தி நினைவிற்கு வருவதில்லை. நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா என்று கூறும் பொழுது உடனே ஆஸ்தி நினைவிற்கு வரும். இது இராவண இராஜ்யம் ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இராம ராஜ்யம் சத்யுகத்தில் இருக்கும். இப்பொழுதோ கலியுகம் ஆகும். சத்யுகத்தில் மிகவும் குறைவான மனிதர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு ஆதி சனாதன தர்மம் இருந்தது. சுகம் சாந்தி இருந்தது. இங்கு மனிதர்கள் அமைதிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மாநாடுகள் ஆகியவற்றிற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்! அமைதியின் கடல், தூய்மையின் கடல், செல்வங்களுக்கும் அவர் கடல் ஆவார் என்பதை நீங்கள் அவர்களுக்கு எழுதலாம். எல்லாமே அவரிடமிருந்து கிடைக்கிறது.

 

சத்யுகத்தில் நாங்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்தில் அமைதி அப்போது இருந்தது. மற்ற ஆத்மாக்களுக்கு அமைதி பரந்தாமமாகிய வீட்டில் இருக்கும். உலகத்தில் நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் பொழுது சுகம், சாந்தி எல்லாமே இருந்தது. எனவே குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்திற்காக சாஸ்திரங்களில் என்னென்ன விஷயங்கள் எழுதி விட்டுள்ளார்கள்! இப்பொழுது நீங்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு எல்லாமே நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். முதலிலோ என் ஒருவனை நினைவு செய்யுங்கள். "தூய்மையற்றவர்களை வந்து பாவனமாக (தூய்மையாக) ஆக்குங்கள், அதாவது பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குங்கள்" என்று நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால் பொருள் எதுவும் புரியாமல் இருக்கிறார்கள். நூலுருண்டை சிக்கி விட்டுள்ளது போல. இப்பொழுது சிக்கலை விடுவிக்க வேண்டி உள்ளது.

 

பக்தியில் எவ்வளவு படங்கள் அமைத்துள்ளார்கள்! கிருஷ்ணருக்கு சக்கரம் கொடுத்து விட்டுள்ளார்கள். அதனால் அகாசுரன், பகாசுரனைக் கொன்றார் என்கிறார்கள். அட! அவர் ஹிம்சை செய்பவராக இருந்தாரா என்ன? பிறகு இன்னாரை விரட்டிச் சென்றார் என்றும் கூறுகிறார்கள். டபுள் ஹிம்சகராக ஆக்கி விட்டுள்ளார்கள். ஆச்சரியமாக உள்ளது அல்லவா? யார் சாஸ்திரங்கள் அமைத்தார்களோ அவர்களுடைய புத்தியின் அற்புதம் ஆகும்! பிறகு அவர்களுக்கு வியாச பகவான் என்கிறார்கள். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். வேறு எந்த விஷயமும் இல்லை. நீங்கள் யோகத்தில் அமர்த்தப்படுகிறீர்கள். ஏனெனில் நிறைய பேர் பாபாவை நினைவு செய்வதில்லை. தங்களுடைய தொழில்களிலேயே மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரமே இல்லை. ஆனால் இதிலோ காரியங்கள் ஆகியவை செய்யும் பொழுதும் புத்தி மூலமாக நினைவு செய்ய வேண்டும். பிரியதரிசனனாகிய எனக்கு நீங்கள் அனைவரும் பிரிய தரிசினிகள் ஆவீர்கள். இப்பொழுது மற்ற தொடர்பை விடுத்து என் ஒருவனிடம் தொடர்பை இணையுங்கள் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். உண்ணும் பொழுதும் அருந்தும் பொழுதும் நான் ஆத்மா ஆவேன் என்ற பழக்கத்தை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உங்களை எவ்வளவு உயர்ந்தவராக ஆக்குகிறார். நீங்கள் இந்த ஒரு பைசாவின் விஷயத்தை ஏற்றுக் கொள்வதில்லை? என்னை நினைவு செய்வதில்லை. உங்களது குழந்தை குட்டிகளை நினைவு செய்கிறீர்கள். என்னை நினைவு செய்ய முடியாதா? உண்மையில் நேஷ்டை என்ற வார்த்தையைக் கூறுவது தவறு ஆகும். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று பாபா நேரிடையாக வந்து கூறுகிறார். முந்தைய கல்பத்தில் கூட தந்தை நேரிடையாக வந்து புரிய வைத்திருந்தார். இப்பொழுது "இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, கல்பத்திற்குப் பின்னால் கிடைத்திருக்கும் செல்லமான குழந்தைகளே.. இப்பொழுது உங்களுடைய 84 பிறவிகள் முடிந்து விட்டன" என்று புரிய வைக்கிறார். இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் அவசியம் தூய்மையாக ஆக வேண்டி உள்ளது. விகாரத்தில் சென்ற காரணத்தினால் தான் நீங்கள் மிகவுமே பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளீர்கள். பாவனமாக ஆகவில்லை என்றால் பதவியும் குறைவானதாகக் கிடைக்கும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் 84ன் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். இதுவே சுய தரிசன சக்கரம் ஆகும். இதன் பொருள் கூட யாரும் அறியாமல் உள்ளார்கள். வாயால் ஞான சங்கு ஊத வேண்டும். இது ஞானத்தின் விஷயங்கள் ஆகும். இவர் உங்களுடைய எல்லையில்லாத தந்தை ஆவார். சொர்க்கத்தின் படைப்பு கர்த்தா ஆவார். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு முன்னேறும் கலை ஆகி விடும். எவ்வளவு சுலபமான விஷயங்கள் ஆகும்!

 

இது ஏற்கனவே அமைக்கப்பட்ட நாடகம் ஆகும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் தந்தை வருகிறார். இப்பொழுது நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள். நீங்கள் செல்வத்திற்குப் பின்னால் ஏன் சாகிறீர்கள். நல்லது. மாதத்தில் 1-2 இலட்சம் சம்பாதிப்பீர்கள். ஆனால் இவை எல்லாமே முடிந்து போய் விடும்.சாப்பிடக் கூடிய குழந்தை குட்டிகளே இருக்க மாட்டார்கள். மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் சாப்பிடுவார்கள் என்ற பேராசை இருக்கும். அப்படி இன்றி எல்லோரும் அதே குலத்திலேயே மறுபிறவி எடுப்பார்கள் என்பதும் கிடையாது. மறுபிறவி எங்கெங்கு எடுப்பார்களோ தெரியாது. நீங்களோ 21 பிறவிகளுக்கு ஆஸ்தி பெறுகிறீர்கள். குறைவான புருஷார்த்தம் (முயற்சி) செய்தீர்கள் என்றால் பிரஜையில் போய் தாசர், தாசிகள் ஆகி விடுவீர்கள், பின் எவ்வளவு நஷ்டம் ஏற்படும்! எனவே இலாபம் மற்றும் நஷ்டத்தைப் பற்றிக் கூட சிந்தனை செய்யுங்கள். வியாபாரிகள் பாவமும் நிறைய செய்கிறார்கள், பின் ஏதாவது கொஞ்சம் தர்மம் செய்வதற்காக என்று ஒதுக்கி வைக்கிறார்கள். இதுவோ அவினாஷி ஞான ரத்தினங்களின் வியாபாரம் ஆகும். இந்த வியாபாரத்தை யாரோ ஒருவர் தான் செய்கிறார்கள். இந்த வியாபாரத்தை நேரிடையாக தந்தையிடம் செய்ய வேண்டும். தந்தை ஞான ரத்தினங்களை அளிக்கிறார். அவரோ வள்ளல் ஆவார். குழந்தைகள் ஒரு பிடி அவல் கொடுக்கிறார்கள். தந்தையோ உலக அரசாட்சியையே கொடுக்கிறார். அதோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு பிடி அவல் தானே ஆகிறது! நீங்கள் எல்லோருமே குசேலர் ஆவீர்கள். என்ன கொடுக்கிறீர்கள் மற்றும் என்ன பெறுகிறீர்கள்! உலகத்தின் அரசாட்சி பெற்று உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். ஒரே ஒரு பாரத கண்டம் இருக்கும் என்று புத்தி கூறுகிறது. இயற்கையும் புதியதாக இருக்கும். ஆத்மாவும் சதோபிரதானமாக இருக்கும். சத்யுகத்தில் தேவதைகளாகிய நீங்கள் இருக்கும் பொழுது தூய தங்கமாக இருந்தீர்கள். பிறகு திரேதாவில் கொஞ்சம் வெள்ளி ஆத்மாவில் படுகிறது. அது வெள்ளியுகம் என்று அழைக்கப்படுகிறது. படி கீழே இறங்கிக் கொண்டே வருகிறீர்கள். இச்சமயம் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் ஆவீர்கள். விராட ரூபத்தின் படமும் உள்ளது. ஆனால் அதன் பொருளை மட்டும் அறியாமல் இருக்கிறார்கள், எத்தனை ஏராளமான படங்கள் உள்ளன! ஒரு சிலர் கிறிஸ்துவின் படம் வைக்கிறார்கள். பின் ஒரு சிலர் சாயி பாபாவினுடையதை வைக்கிறார்கள். முகம்மதியர்களைக் கூட குருவாக ஏற்கிறார்கள். பிறகு அங்கு சென்று கூட்டாக சாராயம் குடிக்கிறார்கள். எவ்வளவு அறியாமை என்ற இருள் உள்ளது என்று தந்தை கூறுகிறார். இவை எல்லாமே பக்தியின் இருள் ஆகும். சகவாசத்தில் மிகவும் கவனம் கொள்ள வேண்டும். நல்ல தொடர்பு உயர்த்தும், தீய சகவாசம் வீழ்த்தும் என்றும் கூறப்படுகிறது. தீய சகவாசம் என்பது மாயை என்ற 5 விகாரங்களினுடையது. இப்பொழுது உங்களுக்கு சத்தியமான தந்தையின் சகவாசம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். தந்தை தான் சத்தியத்தைக் கூறுகிறார். கல்ப கல்பமாக உங்களுக்கு சத்தியத்தின் தொடர்பு கிடைக்கிறது. அரை கல்பத்திற்குப் பிறகு இராவணனுடைய தீய சகவாசம் கிடைக்கிறது. முந்தைய கல்பத்தைப் போலவே அவசியம் இராஜதானி ஸ்தாபனை ஆகும். நீங்கள் அவசியம் உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள். இங்கோ பிரிவினை ஆன காரணத்தால் எவ்வளவு சண்டைகள் ஏற்படுகின்றன! அங்கோ ஒரே ஒரு தர்மம் தான் இருக்கும். அத்வைத தேவதைகளின் இராஜ்யம் இருக்கும் பொழுது உலகத்தில் அமைதி இருந்தது. அங்கு அசாந்தி எங்கிருந்து வந்தது? அது இருப்பதே ஈசுவரிய இராஜ்யமாக! ஆன்மீக ஞானத்தின் மூலமாக பரமாத்மா இராஜாங்கத்தை ஸ்தாபனை செய்துள்ளார். எனவே அவசியம் அங்கு சுகம் இருக்கும். தந்தைக்கு குழந்தைகளின் மீது அன்பு இருக்கும் அல்லவா? நீங்கள் எவ்வளவு அடி வாங்க வேண்டி உள்ளது என்பதை நான் அறிந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். பகவான் ஏதாவதொரு ரூபத்தில் வந்து விடுவார் என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் எருது மீது சவாரி (நந்தி வாகனம்) கூடக் காண்பிக்கிறார்கள். இப்பொழுது எங்காவது எருது மீது சவாரி ஆகுமா என்ன? எவ்வளவு (அஞ்ஞான) இருள் உள்ளது! எனவே "தந்தை அனைவருக்கும் ஆஸ்தி அளிக்க வந்துள்ளார். பிரம்மா மூலமாக புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது" என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். பாபா எப்பொழுதும் ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கிறார். அதே போல இதனுடைய அஸ்திவாரத்தை (ஃபவுண்டேஷன்) மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். பின் வேறு எந்த தர்மமும் இருக்காது. பாரதம் அவினாஷி கண்டம் ஆகும் மற்றும் அவினாஷி தீர்த்தம் ஆகும். தந்தையின் ஜன்ம பூமி ஆகும் அல்லவா? பாபா இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு எவ்வளவு அன்புடன் புரிய வைக்கிறார். ஆசிரியர் ரூபத்தில் படிப்பிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் படித்து என்னை விடவும் உயர்ந்து சென்று விடுகிறீர்கள். நானோ இராஜ்யத்தைப் பெறுவதில்லை. நீங்கள் எப்பொழுதாவது வாருங்கள் என்று என்னை சொர்க்கத்திற்கு அழைத்தீர்களா என்ன? நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறேன். எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயமாகும்! நல்லது. நீடூழி வாழுங்கள்.நான் போய் வானப்பிரஸ்த நிலையில் இருந்து கொள்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.

 

தந்தை கூறுகிறார்: இப்பொழுதோ ஆபத்துக்கள் தலை மீது நின்று கொண்டிருக்கிறது. எனவே இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் புருஷோத்தமர் ஆவதற்கான முழுமையான புருஷார்த்தம் செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டே இருங்கள். அப்பொழுது விகர்மங்கள் விநாசம் ஆகி விடும். மேலும் யார் எந்த அளவு படிக்கிறார்களோ அந்த அளவு உயர்ந்த குலத்தில் செல்வார்கள். தமது முயற்சி யில் தான், தங்களுக்கு போதை ஏறும் என்று தந்தை கூறுகிறார். எப்பொழுதுமே குழந்தைகளுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. மற்றபடி கன்னிகா தானம் நடக்கிறது. இங்கோ அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கிடைக்கிறது. அதுவும் எல்லையில்லாத ஆஸ்தி. எனவே இதன் மீது முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். பகவான் படிப்பிக்கிறார். ஒரு நாள் கூட தவற விடக் கூடாது. எனக்கு நேரம் இல்லை என்று பாபாவிடம் கூறுகிறார் கள்!! அட, என்னிடம் படிப்பதற்கு ஆத்மாவிற்கு நேரம் இல்லையா? இவ்வாறு கூற வெட்கமாக இல்லை? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தீய சகவாசத்திலிருந்து (தொடர்பு) தங்களை மிகவுமே காத்துக் கொள்ள வேண்டும். ஒரு சத்தியமான தந்தையின் சகவாசத்தில் இருக்க வேண்டும். மாயை என்ற 5 விகாரங்களின் சகவாசத்திலிருந்து மிகவும் விலகி இருக்க வேண்டும்.

 

2. படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய போதையில் இருங்கள். தாங்கள் தனது முயற்சியில் தான் போதை ஏறும் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் கூட படிப்பைத் தவற விடாதீர்கள்.

 

வரதானம்:

பாபாவின் உதவி மூலம் ஈட்டியை முள்ளாக மாற்றக்கூடிய சதா கவலையற்றவர் மற்றும் டிரஸ்டி ஆகுக.

 

பழைய கணக்கு என்பது ஈட்டி. ஆனால் பாபாவின் உதவி மூலம் அது முள்ளாகி விடுகின்றது. பிரச்சனைகள் கண்டிப்பாக வரத்தான் செய்யும். ஏனென்றால் அனைத்தையும் இங்கேயே முடித்துவிட வேண்டும். ஆனால் பாபாவின் உதவி அவற்றை ஈட்டியிலிருந்து முள்ளாக மாற்றி விடுகிறது. பெரிய பிரச்சினையை சிறியதாக ஆக்கி விடுகிறது. ஏனென்றால் பெரிய தந்தை கூடவே இருக்கிறார். இந்த நிச்சயத்தின் ஆதாரத்தில் சதா கவலையற்று இருங்கள். மேலும் டிரஸ்டி ஆகி எனது என்பதை உனது என மாற்றி, இலேசாக ஆகி விடுங்கள். அப்போது அனைத்து சுமைகளும் ஒரு விநாடியில் முடிந்து போகும்.

 

சுலோகன் :

சுபபாவனையின் கையிருப்பு (ஸ்டாக்) மூலம் எதிர்மறையை நேர்மறையாக மாற்றி விடுங்கள்.

 

பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆவதற்கான விசேஷ புருஷார்த்தம்

உள்முக ஸ்திதி மூலம் ஒவ்வொருவரின் மனதின் இரகசியத்தை அறிந்து, அவர்களைத் திருப்திப்படுத்துங்கள். இதற்காக சாதாரண ரூபத்தில் அசாதாரண ஸ்திதியின் அனுபவத்தைத் தானும் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் செய்வியுங்கள். வெளிமுகநோக்கில் வரும்போது உள்முகநோக்கின் ஸ்திதியையும் உடன் வைத்திருங்கள்.

 

ஓம்சாந்தி