02-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இராஜரிஷிகள். உங்களுக்கு எல்லையற்ற தந்தை பழைய உலகம் முழுவதையும் சந்நியாசம் செய்வதற்குக் கற்றுத் தருகிறார். இதனால் நீங்கள் இராஜ்ய பதவி பெற முடியும்.

கேள்வி:
இந்தச் சமயம் எந்த ஒரு மனிதரின் கர்மமும் அகர்மம் ஆக முடியாது. ஏன்?

பதில்:
ஏனென்றால் முழு உலகத்தின் மீதும் மாயாவின் இராஜ்யம் உள்ளது. அனைவருக் குள்ளும் ஐந்து விகாரங்கள் பிரவேசமாகியுள்ளன. அதனால் மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மமாகத் தான் ஆகும். சத்யுகத்தில் தான் கர்மம் அகர்மம் ஆகும். ஏனென்றால் அங்கே மாயா இருப்பதில்லை.

கேள்வி:
எந்தக் குழந்தைகளுக்கு மிக நல்ல பரிசு கிடைக்கிறது?

பதில்:
ஸ்ரீமத்படி தூய்மையாகி பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோல் ஆகிறவர்களுக்கும், ஒரு போதும் 5 விகாரங்களின் வசமாகி குலத்திற்குக் களங்கம் செய்யாதவர்களுக்கும் மிக நல்ல பரிசு கிடைக்கிறது. யாராவது மாயாவிடம் அடிக்கடி தோல்வியடைகின்றனர் என்றால் அவர் களின் பாஸ்போர்ட்டே (கடவு சீட்டு) ரத்தாகி விடும்.

பாடல்:
ஓம் நமோ சிவாய....

ஓம் சாந்தி.
அனைவரிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா, அதாவது பரம ஆத்மா. அவர் படைப்பவர். முதலில் பிரம்மா, விஷ்ணு, சங்கரைப் படைக்கிறார். பிறகு கீழே அமர லோகத் திற்கு வாருங்கள், அங்கே லட்சுமி- நாராயணரின் இராஜ்யம். சூரியவம்சி இராஜ்யம், அப்போது சந்திரவம்சி இராஜ்யம் கிடையாது. இதை யார் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்? ஞானக்கடல். மனிதர்கள் மனிதர்களுக்கு ஒரு போதும் புரிய வைக்க முடியாது. பாபா அனைவரைக்காட்டிலும் உயர்ந்தவர். அவரை பாரதவாசிகள் தாய்-தந்தை எனச் சொல் கின்றனர். ஆக, நிச்சயமாக நடைமுறையில் தாய்-தந்தை வேண்டும். மகிமை பாடுகின்றனர் என்றால் ஏதேனும் ஒரு சமயத்தில் இருந்திருக்க வேண்டும். ஆக, முதல்-முதலில் உயர்ந்த வரிலும் உயர்ந்தவர் அந்த நிராகார் பரமபிதா பரமாத்மா. மற்றப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஆத்மா உள்ளது. ஆத்மா எப்போது சரீரத்திற்குள் உள்ளதோ, அப்போது சுகமாக அல்லது துக்கமாக உள்ளது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இவை ஒன்றும் கட்டுக் கதைகள் அல்ல. மற்ற குருமார்கள் என்ன சொல்கின்றனரோ, அவை கட்டுக் கதைகள். இப்போது பாரதம் நரகமாக உள்ளது. சத்யுகத்தில் இது சொர்க்கம் எனச் சொல்லப் படுகிறது. லட்சுமி-நாரயணர் இராஜ்யம் செய்தனர். அங்கே அனைவரும் சௌபாக்கிய சாலிகளாக இருந்தனர். துர்பாக்கியசாலி யாரும் அங்கே இருந்ததில்லை. எந்த ஒரு துக்கமோ நோயோ இருந்ததில்லை. இது பாவாத்மாக்களின் உலகம். பாரதவாசிகள் சொர்க்கவாசிகளாக இருந்தனர். லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. கிருஷ்ணரையோ அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பாருங்கள், இவருக்கு இரண்டு (உலக) உருண்டைகள் கொடுத் துள்ளனர். கிருஷ்ணரின் ஆத்மா சொல்கிறது, இப்போது நான் நரகத்தை எட்டி உதைத்துக் கொண்டிருக் கிறேன். சொர்க்கத்தைக் கையில் எடுத்து வந்துள்ளேன். முதலில் கிருஷ்ணபுரி இருந்தது. இப்போது கம்சபுரி உள்ளது. இதில் இந்த கிருஷ்ணரும் உள்ளார். இவருடைய 84 பிறவிகளின் கடைசிப் பிறவி இது. ஆனால் இப்போது அந்த கிருஷ்ணரின் வடிவம் இல்லை. இதை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். பாபா தான் வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். இப்போது நரகம், மீண்டும் சொர்க்கத்தை உருவாக்குவதற்காக பாபா வந்துள்ளார். இது பழைய உலகம். புதிய உலகமாக இருந்தது இப்போது பழையதாக உள்ளது. வீடும் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. கடைசியில் இடித்துத் தகர்க்க வேண்டியதாக ஆகி விடுகிறது. இப்போது பாபா சொல் கிறார், நான் குழந்தைகளை சொர்க்க வாசி ஆக்குவதற்காக இராஜயோகம் கற்றுத் தருகிறேன். நீங்கள் இராஜரிஷிகள். இராஜ்யத்தை அடைவதற்காக நீங்கள் விகாரங்களின் சந்நியாசம் செய்கிறீர்கள். அந்த எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் வீடு-வாசலைத் துறந்து காட்டுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால் பிறகும் பழைய உலகத்தில் தான் உள்ளனர். எல்லையற்ற தந்தை உங்களை நரகத்தின் சந்நியாசம் செய்ய வைக்கிறார் மற்றும் சொர்க்கத்தின் சாட்சாத் காரம் செய்விக்கிறார். பாபா சொல்கிறார், நான் உங்களை அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளேன். நீங்கள் உங்களுடைய பிறவி களை அறிந்து கொள்ளவில்லை என்று பாபா அனைவருக்குமே சொல்கிறார். யார் எப்படிப்பட்ட காரியத்தைச் செய்கின்றனரோ, நல்லதோ கெட்டதோ, அந்த சம்ஸ்காரத்திற்கு ஏற்ப ஜென்மம் எடுப்பார்கள். சிலர் பணக்காரர், சிலர் ஏழை, சிலர் நோயாளி, சிலர் ஆரோக்கிய மானவராக ஆகின்றனர். இது முந்தைய ஜென்மத்தின் கர்மங்களின் கணக்காகும். சிலர் ஆரோக்கியமாக உள்ளனர் என்றால் நிச்சயமாக முந்தைய ஜென்மத்தில் ஆஸ்பத்திரி முதலியவற்றைக் கட்டியிருப்பார்கள். தான-புண்ணியம் அதிகம் செய்கின்றனர் என்றால் பணக்காரராக ஆகின்றனர். நரகத்தில் மனிதர்கள் என்ன கர்மம் செய்கின்றனரோ, அது நிச்சயமாக விகர்மமாகத் தான் ஆகும். ஏனென்றால் அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. இப்போது சந்நியாசிகள் தூய்மையாக ஆகின்றனர், பாவம் செய்வதை விட்டு விடுகின்றனர், காட்டில் சென்று வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் கர்மம் அகர்மம் ஆகிறது என்பதெல்லாம் கிடையாது. பாபா புரிய வைக்கிறார், இந்தச் சமயம் இருப்பது மாயாவின் இராஜ்யம். அதனால் மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் பாவகர்மமே செய் வார்கள். சத்யுக-திரோதாவில் மாயா இருப்பதில்லை. அதனால் ஒரு போதும் விகர்மம் உருவா காது. துக்கமும் இருக்காது. இச்சமயம் ஒன்று இராவணனின் சங்கிலிகள், பிறகு பக்தி மார்க்கத் தின் சங்கிலிகள். ஜென்ம-ஜென்மாந்தரமாக அடி வாங்கியே (ஏமாற்ற மடைந்தே) வந்துள்ளனர். பாபா சொல்கிறார், நான் இதற்கு முன்பும் கூட சொல்லியிருக் கிறேன், அதாவது இந்த ஜப-தபம் முதலியவற்றால் நான் கிடைப்பதில்லை. எப்போது பக்தியின் கடைசி நேரமோ அப்போது தான் நான் வருகிறேன். பக்தி துவாபர யுகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. மனிதர்கள் துக்கம் வந்தால் அப்போது நினைவு செய்கின்றனர். சத்யுக-திரேதாவில் இருப்பவர்கள் சௌபாக்கியசாலிகள், இங்கே இருப்பவர்களோ துர்பாக்கியசாலிகள். அழுது புரண்டு கொண்டே இருக்கின்றனர். அகால மரணம் நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. பாபா சொல்கிறார், எப்போது நரகத்தை சொர்க்க மாக்க வேண்டுமோ அப்போது நான் வருகிறேன். பாரதம் புராதன தேசம், யார் முதலில் இருந்தனரோ, அவர்கள் தான் கடைசி வரை இருந்தாக வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் பாடப்பட்டுள்ளது. அரசாங்கம் திரிமூர்த்தியை (சின்னமாக) உருவாக்குகிறது. அதில் பிரம்மா, விஷ்ணு, சங்கர் இருக்க வேண்டும். ஆனால் மிருகத்தைப் போட்டு விடுகின்றனர். படைப்ப வராகிய தந்தையின் சித்திரம் இல்லை. மேலும் கீழே சக்கரமும் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் சர்க்கா என நினைக்கின்றனர். ஆனால் அது டிராமா சிருஷ்டியின் சக்கரம். இப்போது சக்கரத் திற்கு அசோகச் சக்கரம் எனப் பெயர் வைத்துள்ளனர். இப்போது நீங்கள் இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதால் தான் அசோக் (சோகம் இல்லாதவராக) ஆகிறீர்கள். அது சரி தான், ஆனால் தலைகீழாக ஆக்கி விட்டார். நீங்கள் இந்த 84 பிறவி களின் சக்கரத்தை நினைவு செய்வதால் தான் சக்கரவர்த்தி ராஜா ஆகிறீர்கள் - 21 பிறவி களுக்கு. இந்த தாதாவும் கூட 84 பிறவிகளை முடித்து விட்டார். இது கிருஷ்ணரின் கடைசி ஜென்மம். இவருக்கு பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். உண்மையில் உங்கள் அனைவருக்குமே இது கடைசி ஜென்மம். எந்த பாரதவாசிகள் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனரோ, அவர்கள் தான் 84 பிறவிகளை எடுக்கின்றனர். இப்போதோ அனைவரின் சக்கரம் முடிவடைகின்றது. இப்போது இந்த உங்களுடைய உடல் மோசமாக ஆகி விட்டது. இந்த உலகமே மோசமானதாக உள்ளது. அதனால் உங்களை இந்த உலகத்தில் இருந்து சந்நியாசம் செய்ய வைக்கிறேன். இந்த சுடுகாட்டின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. இப்போது தந்தை மற்றும் ஆஸ்தி மீது மனதை ஈடுபடுத்துங்கள். ஆத்மாக்கள் நீங்கள் அழியாதவர்கள். இந்த சரீரம் அழியக் கூடியது. இப்போது என்னை நினைவு செய்வீர்களானால் அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். பாடலும் உள்ளது - கடைசிக் காலத்தில் பெண்ணை நினைவு செய்தால்.... இப்போது பாபா சொல்கிறார், கடைசி காலத்தில் யார் சிவபாபாவை நினைப்பார்களோ, அவர்கள் நாராயண பதவி பெற முடியும். நாராயண பதவி கிடைப்பது சத்யுகத்தில் தான். பாபாவைத் தவிர இந்தப் பதவியை யாராலும் கொடுக்க முடியாது. இந்தப் பாடசாலையே மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கானது. பாடம் கற்பிப்பவர் தந்தை. அவருடைய மகிமை கேட்டீர்கள் - ஓம் நமோ சிவாய... நீங்கள் அறிவீர்கள், நாம் அவருடைய குழந்தைகள் ஆகியிருக்கிறோம். இப்போது ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக் கிறோம்.

இப்போது நீங்கள் மனிதரின் வழிப்படி நடப்பதில்லை. மனித வழிப்படி நடந்ததாலோ அனைவரும் நரகவாசி ஆகி விட்டனர். சாஸ்திரங்களும் மனிதர்கள் உருவாக்கியவை என்று தான் பாடப் பட்டுள்ளது. பாரதம் முழுவதும் இச்சமயம் தர்மத்தில் தாழ்ந்ததாக, கர்மத்தில் தாழ்ந்ததாக ஆகி விட்டுள்ளது. தேவதைகளோ தூய்மையாக இருந்தனர். இப்போது பாபா சொல் கிறார், சௌபாக்கியசாலி ஆக விரும்புகிறீர்கள் என்றால் தூய்மையாக ஆகுங்கள். உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - பாபா, நாங்கள் தூய்மையாகி உங்களிடம் இருந்து முழு ஆஸ்தியை அவசியம் பெறுவோம். இதுவோ பழைய அசுத்தமான உலகம் அழிந்துவிடப் போகிறது. சண்டை- சச்சரவு என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது! கோபம் எவ்வளவு உள்ளது! பாம்ஸ் (வெடிகுண்டுகள்) எவ்வளவு பெரிது-பெரிதாகச் செய்து வைத்துள்ளனர்! எவ்வளவு கோபக்காரர்களாக, பேராசைக்காரர்களாக உள்ளனர்! அங்கே ஸ்ரீகிருஷ்ணர் எப்படி கர்ப்ப மாளிகையில் இருந்து வெளிப்படுகிறார். அதுவும் குழந்தைகள் சாட்சாத்காரமாகப் பார்த்துள்ளனர். இங்கே இருப்பது கர்ப்ப ஜெயில். வெளியில் வந்ததும் மாயா பாவ கர்மம் செய்ய வைத்து விடுகிறது. அங்கோ கர்ப்ப மாளிகையில் இருந்து குழந்தை வெளிவரும். அப்போது ஒளிப் பிரகாசமாக ஆகி விடுகிறது. மிகவும் ஓய்வாக இருப்பார்கள். கர்ப்பத்திலிருந்து வெளி வந்ததும் தாதிகள் கையில் எடுத்துக் கொள்வார்கள். இசைக்கருவிகள் முழங்கத் தொடங்கும். இங்கே இருப்பதற்கும் அங்கே இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்!

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு மூன்று தாம்கள் (வீடு, வசிப்பிடம்) புரிய வைக்கப் பட்டுள்ளது. சாந்திதாமத்தில் இருந்து தான் ஆத்மாக்கள் வருகின்றனர். ஆத்மாவோ நட்சத்திரம் போல் உள்ளது. அது புருவமத்தியில் உள்ளது. ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அவிநாசி பார்ட் ரிக்கார்டாகி உள்ளது. டிராமாவும் ஒரு போதும் விநாசமாவதில்லை. நடிப்பு மாறுவதும் இல்லை. இதுவும் அதிசயம் - எவ்வளவு சிறிய ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் பார்ட் முற்றிலும் கச்சிதமாக நிரம்பியுள்ளது! இது ஒரு போதும் பழையதாக ஆவதில்லை. என்றும் புதியதாகவே உள்ளது. ஆத்மா அப்படியே மீண்டும் தனது பார்ட்டை நடிக்க ஆரம்பிக்கிறது. இப்போது குழந்தைகள் நீங்கள் ஆத்மாவே தான் பரமாத்மா எனச் சொல்ல மாட்டீர்கள். ஹம் ஸோ என்பதன் அர்த்தம் பாபா தான் சரியான அர்த்தத்துடன் புரிய வைக்கிறார். அவர்களோ தலை கீழான அர்த்தம் உருவாக்கி விட்டுள்ளனர். அல்லது அகம் பிரம்மாஸ்மி, நான் பரமாத்மாவே தான் மாயாவைப் படைக்கிறேன் எனச் சொல்லி விடு கின்றனர். இப்போது உண்மையில் மாயா படைக்கப்படுவதில்லை. மாயா என்பது 5 விகாரங்களாகும். அந்தத் தந்தை மாயாவைப் படைப்ப தில்லை. பாபாவோ புதிய சிருஷ்டி யைப் படைக்கிறார். நான் சிருஷ்டியைப் படைக்கிறேன் என்று வேறு யாரும் சொல்ல முடியாது. எல்லையற்ற தந்தை ஒருவர் தான். ஓம் என்பதன் அர்த்தமும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது. ஆத்மா சாந்த சொரூபமாகவே உள்ளது. அது சாந்திதாமத்தில் வசிக்கிறது. ஆனால் தந்தை ஞானக்கடலாக, ஆனந்தக் கடலாக இருப்பவர். ஆத்மாவுக்கு இந்த மகிமை பாட மாட்டார்கள். ஆம், ஆத்மாவுக்குள் ஞானம் வருகிறது. பாபா சொல்கிறார், நான் ஒரு தடவை மட்டுமே வருகிறேன். நான் ஆஸ்தியும் அவசியம் கொடுத்தாக வேண்டும். எனது ஆஸ்தியினால் பாரதம் ஒரேயடியாக சொர்க்கமாகவே ஆகி விடுகிறது. அந்த சொர்க்கத்தில் தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் இருந்தது. இது எல்லையற்ற தந்தையின் சதா சுகத்திற்கான ஆஸ்தி. தூய்மை இருந்தது எனவே சுகம், சாந்தியும் இருந்தது. இப்போது இருப்பது தூய்மை இல்லை எனவே துக்கம் அசாந்தி உள்ளது. பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், ஆத்மாக்கள் நீங்கள் முதல்-முதலில் மூலவதனத்தில் இருந்தீர்கள். பிறகு தேவி- தேவதா தர்மத்தில் வந்தீர்கள். பிறகு சத்திரிய தர்மத்தில் வந்தீர்கள். 8 பிறவிகள் சதோபிர தானம், பிறகு 12 பிறவிகள் சதோவில், பிறகு 21 பிறவிகள் துவாபர யுகத்தில், பிறகு 42 பிறவிகள் கலியுகத்தில். இங்கே சூத்திரர் ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது மீண்டும் பிராமண வர்ணத்தில் வர வேண்டும். பிறகு தேவதா வர்ணத்தில் செல்வீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய மடியில் இருக்கிறீர்கள். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார்! 84 பிறவிகளை அறிந்து கொள்வதால் அதில் பிறகு அனைத்தும் வந்து விடுகின்றன. முழுச் சக்கரத்தின் ஞானம் புத்தியில் உள்ளது. இதையும் நீங்கள் அறிவீர்கள், சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே உள்ளது. வேர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி இராஜ்யம். இப்போது நீங்கள் லட்சுமி-நாராயண பதவி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். சத்யுகம் என்பது தூய்மையான உலகம். அங்கே மிகக் குறைவாக ஆத்மாக்கள் தான் இருப்பார்கள். மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்திதாமத்தில் இருப்பார்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை மட்டுமே. அவரை யாரும் அறிந்து கொள்ளவில்லை. மேலும் பரமாத்மா சர்வவியாபி என்றும் சொல்லி விடுகின்றனர். பாபா கேட்கிறார், உங்களுக்கு அவ்வாறு யார் சொன்னார்கள்? கீதையில் எழுதப் பட்டுள்ளது எனச் சொல்கின்றனர். கீதையை யார் இயற்றினார்? பகவான் வாக்கு - நானோ இந்த சாதாரண பிரம்மா சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன். யுத்த மைதானத்தில் ஒரே ஓர் அர்ஜுனனுக்கு எப்படி அமர்ந்து ஞானம் சொல்வார்? உங்களுக்கு யுத்தம் அல்லது சூதாட்டம் முதலியவற்றைப் பற்றி எல்லாம் கற்பிக்கப் படுவதில்லை.

பகவானோ மனிதரில் இருந்து தேவதை ஆக்குபவர். அவர் சூதாட்டம் ஆடுங்கள், யுத்தம் செய்யுங்கள் என்று எப்படிச் சொல்வார்? பிறகு திரௌபதிக்கு 5 கணவன்மார் இருந்தனர் என்று சொல்கின்றனர். இது எப்படி இருக்க முடியும்? கல்பத்திற்கு முன் பாபா சொர்க்கத்தை உருவாக்கியிருந்தார். இப்போது மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணருக்கு 84 பிறவிகள் முடிவடைந்தன. இராஜா-ராணிக்கு எப்படியோ, அப்படியே பிரஜைகள் அனைவருக்கும் 84 பிறவிகள் முடிந்தன. இப்போது நீங்கள் சூத்திரரில் இருந்து மாறி பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். யார் பிராமண தர்மத்தில் வருகின்றனரோ, அவர்கள் தான் மம்மா-பாபா எனச் சொல்வார்கள். பிறகு யார் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் சரி. நம்முடைய குறிக்கோள் உயர்ந்தது எனப் புரிந்து கொண்டுள்ளனர். பிறகும் கூட ஏதாவது கொஞ்சமாவது கேட்பார்களானால் சொர்க்கத்தில் கண்டிப்பாக வருவார்கள். ஆனால் குறைந்த பதவி பெறுவார்கள். அங்கே ராஜா-ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகளும் கூட அனைவருமே சுகமாக இருப்பார்கள். பெயரே ஹெவன் (சொர்க்கம்). ஹெவன்லி காட் ஃபாதர் ஹெவன் ஸ்தாபனை செய்கிறார். இது ஹெல் (நரகம்). சீதைகள் அனைவரையும் இராவணன் சிறையில் அடைத்து வைத்துள்ளான். அனைவரும் சோகத்தில் அமர்ந்து, இந்த இராவணனிடம் இருந்து எங்களை விடுவியுங்கள் என்று பகவானை நினைவு செய்து கொண்டிருக்கின்றனர். சத்யுகம் அசோகவனம் (துக்க மில்லாத உலகம்). எது வரை உங்களுடைய சூரியவம்சி ராஜதானி ஸ்தாபனை ஆக வில்லையோ, அது வரை விநாசம் ஆக முடியாது. இராஜதானி ஸ்தாபனை ஆகி, குழந்தை களுக்கு கர்மாதீத் நிலை வந்து விட்டால் அப்போது இறுதி யுத்தம் நடைபெறும். அது வரை ஒத்திகை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த யுத்தத்திற்குப் பிறகு சொர்க்கத்தின் கதவு திறக்கும். குழந்தைகள் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக வேண்டும். பாபா பாஸ்போர்ட் ஏற்பாடு செய்கிறார். எவ்வளவு தூய்மை யாவீர்களோ, பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோல் ஆவீர்களோ, அப்போது பரிசும் நல்ல தாகக் கிடைக்கும். பாபாவிடம் உறுதிமொழி கொடுக்க வேண்டும் - இனிமையான பாபா, உங்கள் நினைவில் நிச்சயமாக இருப்போம். முக்கிய விசயம் தூய்மை. 5 விகாரங்களின் தானம் அவசியம் செய்ய வேண்டும். சிலர் தோல்வியடைந்து நின்று விடவும் செய்கின்றனர். 2-4 தடவை மாயாவிடம் குத்து வாங்கிப் பிறகு கீழே விழுந்து விட்டால் ஃபெயிலாகி விடு வார்கள். பாஸ்போர்ட் ரத்தாகி விடும். பாபா சொல்கிறார், குழந்தைகளே, குலத்திற்குக் களங்கம் செய்தவராக ஆகாதீர்கள். நீங்கள் விகாரங்களை விட்டுவிடுங்கள். நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானராக அவசியம் ஆக்குவேன். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சௌபாக்கியசாலி ஆவதற்காக பாபாவிடம் தூய்மையாக இருப்பதற்கான உறுதிமொழி கொடுக்க வேண்டும். இந்த மோசமான தூய்மை இல்லாத உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது.

2. மாயாவிடம் ஒரு போதும் குத்து வாங்கக் கூடாது. குலத்திற்குக் களங்கம் செய்தவராக ஆகக் கூடாது. தகுதி உள்ளவர் ஆகி சொர்க்கத்திற்கான பாஸ்போர்ட்டை பாபாவிட மிருந்து பெற வேண்டும்.

வரதானம்:
மனதை பிஸியாக வைக்கும் கலை மூலம் வீணானதிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய சதா சக்தி சொரூபமானவர் ஆகுக.

இன்றைய காலத்தில் பெரிய பதவியில் இருக்கக் கூடியவர்கள் தனது அன்றாட செயல்களை அட்டவணைப்படி (நேரத்திற்கு) அமைத்துக் கொள்கிறார்கள். அதுபோல நீங்களும் கூட புது உலகத்தை வடிவமைப்பதற்கு ஆதார மூர்த்தியாக உள்ளீர்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட நாடகத்தில் கதாநாயகன் என்ற நடிப்பை நடிக்கிறீர்கள். வைரத்திற்கு சமமான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். நீங்கள் தனது மனம் மற்றும் புத்தியை சக்திசாலியான மனநிலையில் நிலையாக வைப்பதற்கான ப்ரோகிராமை அமையுங்கள். மனதை பிஸியாக வைக்கும் கலையில் முழுமையாக பயன்படுத்தினீர்கள் என்றால் வீணானதிலிருந்து விடுபட்டு விடலாம். ஒருபொழுதும் மனதளர்ச்சி அடைய மாட்டீர்கள்.

சுலோகன்:
நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்றால், ஒருபொழுதும் நன்மை மற்றும் தீமையின் பக்கம் ஈர்க்கப்பட மாட்டீர்கள்.