02-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்த குழந்தைகளுக்கு அநேகருடைய ஆசீர்வாதங்கள் இயல்பாகவே கிடைத்துக் கொண்டே இருக்கும்?

பதில்:

எந்த குழந்தைகள் நினைவில் இருந்து தானும் தூய்மையாக ஆகி, மற்றவர்களையும் தனக்குச் சமானமாக ஆக்குகிறார்களோ அவர்களுக்கு அநேகருடைய ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அவர்கள் மிகவும் உயர்ந்த பதவி அடைகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சிறந்தவர்களாக ஆவதற்கு ஒரே ஒரு ஸ்ரீமத் கொடுக்கிறார் - குழந்தைகளே எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாமல் என்னை நினைவு செய்யுங்கள்.

பாடல்:

கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று.. .. ..

ஓம் சாந்தி. ஓம் சாந்தியின் பொருளை ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். ஓம் என்றால் நான் ஆத்மா ஆவேன். மேலும் இது என்னுடைய சரீரம் ஆகும். ஆத்மாவோ கண்ணுக்குத் தென்படுவதில்லை. ஆத்மாவில் தான் நல்லது அல்லது தீய சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. ஆத்மாவில் தான் மனம் புத்தி உள்ளது. சரீரத்தில் புத்தி இல்லை. முக்கியமானது ஆத்மாவாகும். சரீரமோ என்னுடையது ஆகும். ஆத்மாவை யாருமே பார்க்க முடியாது. சரீரத்தை ஆத்மா பார்க்கிறது. ஆத்மாவை சரீரம் பார்க்க முடியாது. ஆத்மா வெளியேறி விடும் பொழுது சரீரம் ஜடமாகி விடுகிறது. ஆத்மாவைப் பார்க்க முடியாது. சரீரம் பார்க்கப்படுகிறது. அதே போல ஆத்மாவின் தந்தையை ஓ காட் ஃபாதர் என்று கூறுகிறார்கள். அவரும் கூட கண்களுக்குத் தென்படுவதில்லை. அவரைப் புரிந்து கொள்ள முடியும், அறிந்து கொள்ள முடியும். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சகோதரர்கள் ஆவோம். சரீரத்தில் வரும் பொழுது இவர்கள் சகோதர சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் சகோதர சகோதரிகள் ஆவார்கள் என்று கூறுவார்கள். ஆத்மாக்களோ எல்லோரும் சகோதர சகோதரர்களே ஆவார்கள். ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார். ஸ்தூல சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் பார்க்க முடியும். ஆத்மாக்களின் தந்தை ஒருவர் ஆவார். அவரைப் பார்க்க முடியாது. எனவே இப்பொழுது தந்தை பழைய உலகத்தைப் புதியதாக ஆக்க வந்துள்ளார். சத்யுகம் புதிய உலகமாக இருந்தது. இப்பொழுது பழைய உலகம் கலியுகமாக இருக்கிறது. இது இப்பொழுது மாற வேண்டி உள்ளது. பழைய உலகமோ முடிந்து போய் விட வேண்டும் அல்லவா? பழைய வீடு அழிந்து புதிய வீடு அமைகிறது அல்லவா? அதே போல இந்த பழைய உலகம் கூட அழியப் போகிறது. சத்யுகத்திற்குப் பின்னால் பிறகு திரேதா, துவாபரம், கலியுகம் பிறகு சத்யுகம் அவசியம் வரப்போகிறது. உலகத்தின் சரித்திரம் பூகோளம் மீண்டும் நடைபெற உள்ளது. சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருக்கும். சூர்ய வம்சம் மற்றும் சந்திர வம்சம் அதற்கு முறையே இலட்சுமி நாராயணர் பரம்பரை, இராமர் சீதையின் பரம்பரை என்பார்கள். இது சுலபம்தான் அல்லவா? பிறகு துவாபரம் கலியுகத்தில் மற்ற தர்மங்கள் (மதங்கள்) வருகின்றன. பிறகு தூய்மையாக இருந்த தேவதைகள் தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்கள். இதற்கு இராவண இராஜ்யம் என்று கூறப் படுகிறது. இராவணனை வருடா வருடம் எரித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் எரிந்து போவதே இல்லை. மீண்டும் மீண்டும் எரித்து கொண்டே இருக்கிறார்கள். இவன் எல்லோரையும் விட பெரிய எதிரி ஆவான். எனவே அவனை எரிப்பதற்கான வழக்கம் ஏற்பட்டுள்ளது. பாரதத்தின் முதல் நம்பர் எதிரி யார்? மேலும் பின்னர் முதல் நம்பர் நண்பன், சதா சுகம் அளிப்பவர் குதா (இறைவன்) ஆவார். குதாவை தோஸ்த் (நண்பன்) என்று கூறுகிறார்கள் அல்லவா? இது பற்றி ஒரு கதை கூட உள்ளது.எனவே குதா நண்பன் ஆவார். இராவணன் எதிரி ஆவார். நண்பனாக இருக்கும் குதாவை ஒரு பொழுதும் எரிக்க மாட்டார்கள். அவன் எதிரி ஆவான். எனவே 10 தலை உடைய இராவணனை உருவாக்கி அதை வருடா வருடம் எரிக்கிறார்கள். காந்தியடிகள் கூட எங்களுக்கு இராம இராஜ்யம் வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். இராம இராஜ்யத்தில் சுகம் இருக்கும். இராவண இராஜ்யத்தில் துக்கம் இருக்கும். இப்பொழுது இதை யார் வந்து புரிய வைக்கிறார்கள்? பதீத பாவன தந்தை சிவபாபா ! பிரம்மா, தாதா (மூத்த சகோதரர்) ஆவார். பாபா எப்பொழுதும் பாப்தாதா என்று கையொப்பம் கூட இடுகிறார். பிரஜாபிதா பிரம்மா கூட அனைவருடையவர் ஆகிறார். அவருக்கு ஆதாம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர் என்று கூறப்படுகிறது. மனித சிருஷ்டியின் பிரஜாபிதா ஆவார். பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிராமணர்கள் படைக்கப்படுகிறார்கள். பிறகு பிராமணர்களே தேவதை ஆகிறார்கள். தேவதைகள் பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரராக ஆகி விடுகிறார்கள். இவருக்கு பிரஜாபிதா பிரம்மா என்று கூறப்படுகிறது. மனித சிருஷ்டிக்கு அவரே பெரியவர் ஆவார். பிரஜாபிதா பிரம்மாவிற்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள். பாபா பாபா என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இவர் சாகார பாபா ஆவார். சிவபாபா நிராகார பாபா ஆவார். பிரஜாபிதா பிரம்மா மூலமாக புதிய மனித சிருஷ்டியைப் படைக்கிறார் என்றும் பாடப்படு கிறது. இப்பொழுது இது உங்களுடைய பழைய சட்டை ஆகும். இது இருப்பதே பதீத உலகமாக, இராவண இராஜ்யமாக. இப்பொழுது இராவணனினுடைய அசுர உலகம் முடிந்து போய் விடும். அதற்காகத் தான் இந்த மகாபாரத போர் உள்ளது. பிறகு சத்யுகத்தில் இந்த இராவணன் என்ற எதிரியை யாரும் எரிக்கவே மாட்டார்கள். இராவணன் இருக்கவே மாட்டான். இராவணன் தான் துக்கத்தின் உலகத்தை அமைத்துள்ளான். அப்படியின்றி யாரிடம் நிறைய பணம் இருக்கிறதோ, பெரிய பெரிய அரண்மனை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பதல்ல. ஒருவரிடம் எவ்வளவு கோடி இருந்தாலும் சரி, ஆனால் இவை எல்லாமே மண்ணோடு மண்ணாகப் போகப் போகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். புதிய உலகத்தில் பின் புது சுரங்கங்கள் வெளிப்படுகின்றன. அதன் மூலம் புது உலகத்தில் அரண்மனைகள் ஆகியவை முழுவதும் அமைக்கப்பட்டு விடுகின்றன. இந்த பழைய உலகம் இப்பொழுது முடியப் போகிறது. மனிதர்கள் பக்தி செய்வதே சத்கதிக்காக. எங்களை பாவனமாக ஆக்குங்கள். நாம் விகாரி ஆகி விட்டுள்ளோம். விகாரி என்று பதீதமானவர்களுக்குக் கூறப்படுகிறது. சத்யுகத்தில் இருப்பவர்களே (வைஸ்லெஸ்) சம்பூர்ண நிர்விகாரி ஆவார்கள். அங்கு குழந்தைகள் யோக பலத்தினால் பிறக்கிறார்கள். அங்கு விகாரம் இருப்பதே இல்லை. தேக அபிமானமும் கிடையாது. காமம், கோபம்.... 5 விகாரம் இருப்பதே இல்லை. எனவே அங்கு ஒரு பொழுதும் இராவணனை எரிப்பதே இல்லை. இங்கோ இராவண இராஜ்யம் ஆகும். இப்பொழுது நீங்கள் தூய்மை ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். இந்த பதீதமான உலகம் முடியப் போகிறது. யார் ஸ்ரீமத் படி தூய்மையாக இருக்கிறார்களோ அவர்களே தந்தையின் வழிப்படி நடந்து உலக அரசாட்சி யின் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது அல்லவா? இப்பொழுது இராவண இராஜ்யம் உள்ளது. அது முடியப் போகிறது. சத்யுக இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகப்போகிறது. டில்லி சத்யுகத்தில் பரிஸ்தானாக இருந்தது. டில்லி தான் பீடமாக இருந்தது. இராவண இராஜ்யத்தில் கூட டில்லி தலை நகரமாகும். இராம இராஜ்யத்தில் கூட டில்லி தலைநகரமாக இருக்கும். ஆனால் இராம இராஜ்யத்தில் வைரம் வைடூரியங்களின் அரண்மனை இருந்தது. ஏராளமான சுகம் இருந்தது. இப்பொழுது தந்தை கூறுகிறார், நீங்கள் உலக இராஜ்யத்தை இழந்துள்ளீர்கள். நான் மீண்டும் உங்களுக்கு அளிக்கிறேன். நீங்கள் என்னுடைய வழிப்படி நடங்கள்! சிறந்தவர்களாக ஆக வேண்டும் என்றால், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். வேறு எந்த தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தன்னை ஆத்மா என்றுணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள். என்னுடைய கழுத்தின் மாலையாக ஆகி பிறகு விஷ்ணுவின் மாலை ஆகி விடுவீர்கள். மாலையின் மேலே இருப்பது நான் இருக்கிறேன். பிறகு இருவர் பிரம்மா சரஸ்வதி ஆவார்கள். அவர்களே சத்யுகத்தின் மகாராஜா மகாராணி ஆகிறார்கள். அவர்களுடையது பிறகு முழு மாலை ஆகும். அவர்கள் பின் வரிசைக்கிரமமாக சிம்மாசனத்தில் அமருகிறார்கள். நான் இந்த பாரதத்தை இந்த பிரம்மா சரஸ்வதி மற்றும் பிராமணர்கள் மூலமாக சொர்க்கமாக ஆக்குகிறேன். யார் உழைப்பு முயற்சி செய்கிறார்களோ அவர்களுடையது தான் பிறகு நினைவார்த்தமாக அமைகிறது. அது ருத்ர மாலை ஆகும். மேலும் அது விஷ்ணுவின் மாலை ஆகும். ருத்ரமாலை ஆத்மாக்களினுடையது. மேலும் விஷ்ணுவின் மாலை மனிதர்களினுடையது. ஆத்மாக்கள் இருக்கக் கூடிய இடம் அந்த நிராகார பரந்தாமம் ஆகும். அதற்கு பிரம்மாண்டம் என்றும் கூறுகிறார்கள். ஆத்மா ஒன்றும் முட்டை போல இருப்பது கிடையாது. ஆத்மாவோ புள்ளி போல உள்ளது. ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் இனிமையான இல்லத்தில் இருப்பவர்களே ஆவோம். தந்தையுடன் கூட ஆத்மாக்களாகிய நாம் இருக்கிறோம். அது முக்தி தாமம் ஆகும். மனிதர்கள் எல்லோரும் முக்தி தாமம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஒருவர் கூட திரும்பிச் செல்ல முடியாது. எல்லோரும் பாகத்தை நடிக்க வந்தே ஆக வேண்டும். அது வரை தந்தை உங்களை தயார் செய்வித்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றால் பிறகு யாரெல்லாம் ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள். பிறகு முடிந்து போய் விடும்.நீங்கள் போய் புது உலகத்தில் ஆட்சி புரிவீர்கள். பிறகு வரிசைக்கிரமமாக சக்கரம் நடக்கும்.பாடலில் கேட்டீர்கள் அல்லவா? கடைசியில் அந்த நாளும் வந்தது .. .. .. இப்பொழுது நரகவாசிகளாக இருக்கும் பாரதவாசிகள் மீண்டும் சொர்க்கவாசி ஆகிடுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்ற எல்லா ஆத்மாக்களும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். மிகவும் குறைவாக புரிய வைக்க வேண்டும். அல்ஃப் - பாபா, பே -(பாதுஷாயி) அரசாட்சி. ஆத்மாவிற்கு அரசாட்சி கிடைத்து விடுகிறது. நான் அதே இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்கிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். நீங்கள் 84 பிறவிகள் அனுபவித்து இப்பொழுது பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளீர்கள். இராவணன் பதீதமாக ஆக்கி விட்டுள்ளான். பிறகு யார் பாவனமாக ஆக்குகிறார்? பகவான் ! அவரை பதீத பாவனர் என்று கூறுகிறார்கள். நீங்கள் எப்படி பதீத நிலையிலிருந்து பாவனமாக, பாவன நிலையிலிருந்து பதீதமாக ஆகிறீர்கள். அந்த முழு சரித்திரம், பூகோளம் திரும்பவும் நடைபெறும். இந்த விநாசம் இருப்பதே இதற்காகத் தான். கூறுகிறார்கள் - பிரம்மாவின் ஆயுள் சாஸ்திரங்களில் 100 வருடங்கள் என்றுள்ளது. இவர் பிரம்மா ஆவார். இவருக்குள் தந்தை அமர்ந்து ஆஸ்தி அளிக்கிறார். அவருடைய சரீரம் கூட விடுபட்டு விடும். ஆத்மாக்களின் தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். மனிதர்கள் மனிதர்களை பாவனமாக ஆக்க முடியாது. தேவதைகள் ஒரு பொழுதும் விகாரத்தினால் பிறப்பதில்லை. மறுபிறவியோ எல்லோரும் எடுத்துக் கொண்டே வருகிறார்கள் அல்லவா? தந்தை அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். தந்தை வருவதே முழு மனித குலத்தின் அதிர்ஷ்டத்தை எழுப்புவதற்கு. எல்லோருமே பதீதமாக துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? ஐயோ! ஐயோ! என்ற கதறலுடன் விநாசம் ஆகி விடும். எனவே தந்தை கூறுகிறார், ஐயோ ! ஐயோ ! என்பதற்கு முன்னதாக எல்லை யில்லாத தந்தையாகிய என்னிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் இந்த உலகத்தில் எல்லாமே முடிந்து போய் விடும். பாரதத்தின் வீழ்ச்சி, பாரதத்தின் உயர்ச்சி. சொர்க்கத்தில் யார் யார் ஆட்சி புரிகிறார்கள் - இதை தந்தை தான் வந்து புரிய வைக்கிறார். பாரதத்தின் உயர்வு - தேவதைகளின் இராஜ்யம். பாரதத்தின் வீழ்ச்சி இராவண இராஜ்யம். இப்பொழுது புது உலகம் அமைந்து கொண்டிருக்கிறது. புது உலகத்தின் ஆஸ்தி பெறுவதற்காக தந்தையிடம் படித்து கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு சுலபமானது ஆகும். இது மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கான படிப்பு ஆகும். இதையும் நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த தர்மம் எப்பொழுது வருகிறது. துவாபரத்திற்கு பின்னால் தான் பிற தர்மங்கள் வருகின்றன. முதலில் சுகத்தை அனுபவிக் கிறார்கள். பிறகு துக்கம். இந்த முழு சக்கரத்தை புத்தியில் பதிய வைக்க வேண்டி உள்ளது. இதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி மகாராஜா மகாராணி ஆகிறீர்கள்.அல்ஃப், பே - தந்தை மற்றும் அரசாட்சியை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது விநாசம் ஆகத் தான் போகிறது. எவ்வளவு குழப்பம் ஏற்பட்டு விடும் என்றால் வெளிநாட்டிலிருந்து பிறகு வரக் கூட முடியாமல் போய் விடும். எனவே பாரத பூமி எல்லாவற்றையும் விட உத்தமமானது என்று தந்தை புரிய வைக்கிறார். கடுமையான யுத்தம் ஏற்பட்டது என்றால் பிறகு அங்கு இருப்பவர்கள் அங்கேயே இருந்து விடுவார்கள். 50-60 இலட்சம் கொடுத்தாலும் கூட வருவது கடினமாக இருக்கும். பாரத பூமி எல்லாவற்றையும் விட உத்தமமானது ஆகும். இங்கு தந்தை வந்து அவதாரம் எடுக்கிறார். சிவஜெயந்தி கூட இங்கு கொண்டாடப்படுகிறது. காட்ஃபாதர் தான் வந்து லிபரேட் செய்கிறார் (விடுவிக்கிறார்). எனவே இப்பேர்ப்பட்ட தந்தையைத் தான் வணங்க வேண்டும். அவருக்குத் தான் ஜெயந்தி கொண்டாட வேண்டும். அந்த தந்தை இங்கு பாரதத்தில் வந்து அனைவரையும் பாவனமாக ஆக்குகிறார். எனவே இது எல்லாவற்றையும் விட பெரிய தீர்த்தமாக ஆகிறது. அனைவரையும் துர்க்கதியிலிருந்து விடுவித்து சத்கதி அளிக்கிறார். இவ்வாறு நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. நமது பாபா நமக்கு இந்த சரீரம் மூலமாக இந்த ரகசியத்தைப் புரிய வைத்து கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாவாகிய நாம் இந்த சரீரத்தின் மூலமாக கேட் கிறோம். ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கிக் கொண்டே போகும். மேலும் நீங்கள் தூய்மையாக ஆகி தந்தையிடம் வந்து விடுவீர்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு தூய்மை ஆவீர்கள். மற்றவர்களையும் தனக்குச் சமமாக ஆக்கினீர்கள் என்றால் அநேகரின் ஆசீர்வாதம் கிடைக்கும். உயர்ந்த பதவியை அடைந்து விடுவீர்கள். எனவே ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று பாடப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஸ்ரீமத்படி தூய்மையாக ஆகி ஒவ்வொரு அடியிலும் தந்தையின் வழிப்படி நடந்து உலக அரசாட்சியைப் பெற வேண்டும். தந்தைக்குச் சமானமாக துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆக வேண்டும்.

2. மனிதனை தேவதையாக ஆக்கும் இந்த படிப்பை எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைவரையும் தனக்குச் சமமாக ஆக்கும் சேவை செய்து ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும்

வரதானம்:

அதிகாரி தன்மையின் (ஸ்திதி) மூலமாக தந்தையை தனது (ஸாத்தி) துணையாக ஆக்கிக் கொள்ளக் கூடிய சதா (விஜயி) வெற்றியாளர் ஆவீர்களாக.

தந்தையை (ஸாத்தி) துணையாக ஆக்கிக் கொள்வதற்கான எளிய வழி - அதிகாரி தன்மையின் (ஸ்திதி) நிலை ஆகும். அதிகாரி தன்மையின் ஸ்திதியில் நிலைத்திருக்கும் பொழுது வீண் சங்கல்பங்கள் அல்லது அசுத்த சங்கல்பங்களின் குழப்பத்தில் மற்றும் பல சுவைகளில் புத்தி நிலைகுலைந்து போவதில்லை. புத்தியின் ஒருமுக நிலை மூலமாக எதிர் கொள்ளக் கூடிய மற்றும் தீர்மானிக்கக் கூடிய சக்தி வந்து விடுகிறது. அது சுலபமாகவே மாயையின் அநேக விதமான தாக்குதல்கள் மீது வெற்றி அடைபவராக ஆக்கி விடுகிறது.

சுலோகன்:

யார் ஒரு நொடியில் சாரத்திலிருந்து விஸ்தாரத்திற்கும், விஸ்தாரத்திலிருந்து சாரத்திற்கும் செல்லக் கூடிய பயிற்சி உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே இராஜயோகி ஆவார்கள்.