02.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆழ்ந்த அமைதியில் செல்வதற்கு பயிற்சி செய்யுங்கள். புத்தி தந்தையின் பக்கம் இருந்தால், பாபாவும் உங்களுக்கு அசரீரி ஆவதற்கு சக்தி கொடுப்பார்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கும் போது என்ன சாட்சாத்காரம் கிடைக்கின்றது ?

 

பதில்:

சத்யுக ஆரம்பத்திலிருந்து கலியுக கடைசி வரை நாம் எவ்வாறெல்லாம் நடிக்கிறோம் என்ற அனைத்தும் சாட்சாத்காரம் ஆகிறது. நீங்கள் முழு உலகையும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அறிந்து கொள்கிறீர்கள். அறிந்து கொள்வதற்குத் தான் சாட்சாத்காரம் என்று பெயர். நாம் தெய்வீக குணங்களை உடைய தேவதைகளாக இருந்தோம் அசுர குணமுடையவர் ஆகிவிட்டோம், என இப்போது புரிந்து கொள்கிறீர்கள், இப்போது மீண்டும் தெய்வீக குணம் உடைய தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். இப்போது நாம் புது உலகம், புது வீட்டிற்கு செல்கிறோம்.

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை யாத்திரையில் அமர்வதில்லை. அவர் குழந்தைகளுக்கு சக்தியின் உதவி செய்து கொண்டிருக்கிறன்றார். அதாவது இந்த சரீரத்தை மறக்க வைத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் சரீரத்தை மறந்து விடுவதற்காக பாபாவின் உதவி கிடைத்திருக்கிறது. ஆத்மாக்களுக்கு சக்தி கொடுக்கிறார். ஏனென்றால் பாபா ஆத்மாக்களைத் தான் பார்க்கின்றார். உங்கள் ஒவ்வொருவருடையவரின் புத்தியும் பாபாவின் பக்கம் செல்கிறது. பாபாவின் புத்தி மற்றும் பார்வை குழந்தைகள் பக்கம் செல்கிறது. வித்தியாசம் இருக்கிறது. (ஆழ்ந்த அமைதி) ஆழ்ந்த அமைதிக்காக பயிற்சி செய்கிறீர்கள். சரீரத்தை விட்டு, விடுபட விரும்புகிறீர்கள். எவ்வளவு நினைக்கிறோமோ அவ்வளவு இந்த உடலில் இருந்து விடுபட்டு போகலாம் என ஆத்மா புரிந்து கொள்கிறது. பாம்பின் எடுத்துக்காட்டு போல. என்ன எடுத்துக் காட்டு கொடுக்கிறார்களோ, அதில் ஏதோ மகிமை இருக்கிறது. நாம் உடலை விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி செல்வோம், பிறகு வருவோம் என அறிகிறீர்கள். இந்த விஷயங்களை வேறு யாரும் அறியவில்லை. இந்த நாடகத்தை யாரும் அறியவில்லை. இந்த நினைவினால் உங்களுடைய விகர்மம் வினாசம் ஆகும் என்று வேறு யாரும் உத்திரவாதம் கொடுப்பதில்லை. இது போன்ற விஷயங்களை வேறு யாரும் கூறவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்- இப்போது நம்முடையது திரும்பும் பயணம் ஆகும். ஆத்மாவின் புத்தியோகம் அந்த பக்கம் இருக்கிறது. இப்போது நாடகம் முடியப் போகிறது. இப்போது வீட்டிற்கு போக வேண்டும். பாபாவைத் தான் நினைக்க வேண்டும். அவரே பதீத பாவனர். கங்கைத் தண்ணீரை விடுவிக்கக் கூடியவர் என்றோ, வழிகாட்டி என்றோ கூற முடியாது. ஒரு தந்தை தான் விடுவிக்கக்கூடியவர் மற்றும் வழிகாட்டி ஆக முடியும். இது மிகவும் புரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டிய விசயம் ஆகும். அது பக்தி ஆகும். அதனால் எந்த நன்மையும் இல்லை. தண்ணீர் நீராடுவதற்காக என்பது குழந்தைகளுக்குத் தெரியும். தண்ணீர் ஒரு போதும் தூய்மையாக்க முடியாது. பாவனையின் பலன் கிடைக்கிறது என்பதும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் அதற்கு மகத்துவம் கொடுத்து விட்டனர். இந்த விசயங்கள் அனைத்திற்கும் குருட்டு நம்பிக்கை என்று பெயர். இவ்வாறு நம்பிக்கை வைத்து வைத்து மனிதர்களுக்கு பட்டம் கிடைக்கிறது. குருடர்களின் வாரிசு குருடர்களே. பகவான் வாக்கு அல்லவா! குருடர்கள் மற்றும் பார்வை உடையவர்கள் யார் என நீங்கள் அறிகிறீர்கள். முழு உலகத்தின் முதல், இடை, கடை பாபா மூலமாக அறிகிறீர்கள். நீங்கள் பாபாவை அறிந்து விட்டீர்கள். ஆகவே சிருஷ்டியின் முதல் இடை, கடை மற்றும் கால நேரத்தை அறிந்து விட்டீர்கள். ஒவ்வாரு விஷயத்தை பற்றியும் விசாரசாகர மந்தனம் செய்து தனக்கு தானே தீர்மானிக்க வேண்டும். பக்தி மற்றும் ஞானத்திற்கு வேறு பாடுகள் இருக்கிறது. ஞானம் முற்றிலும் விடுபட்ட விஷயம் ஆகும். இந்த ஞானம் பிரசித்தமானது. இராஜாயோகத்தின் படிப்பு அல்லவா! தேவதைகள் தான் சம்பூரண நிர்விகாரியாக இருந்தனர் என்பது குழந்தைகளுக்கு தெரியும். படைக்கக் கூடியவர் தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவரே பரமாத்மா பரமாத்மாவிற்கு பரம் ஆத்மாவிற்கு தான் பரமாத்மா என்று பெயர். ஆங்கிலத்தில் சுப்ரீம் சோல் என்று கூறப்படுகிறது. சோல் என்றால் ஆத்மா. பாபாவின் ஆத்மா பெரியதாக இருக்காது. பாபாவின் ஆத்மாவும் குழந்தைகளைப் போன்று தான் இருக்கிறது. குழந்தைகளுடையது சிறியதாகவோ பாபாவிடையது பெரியதாகவோ இருக்காது. அந்த சுப்ரீம் நாலெட்ஜ்ஃபுல் தந்தை மிகவும் அன்போடு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது ஆத்மா ஆகும். நிச்சயமாக சரீரத்தை ஏற்று நடிக்கும். ஆத்மா வசிக்கக் கூடிய இடம் சாந்தி தாமம் ஆகும். ஆத்மாக்கள் பிரம்ம மகா தத்துவத்தில் இருக்கின்றது எனக் குழந்தைகள் அறிகிறார்கள். இந்துஸ்தானில் வசிப்பவர்கள் தங்களை இந்துக்கள் என்று கூறுவது போல பிரம்மாண்டத்தில வசிப்பவர்களும் பிரம்மத்தை ஈஸ்வர் என நினைக்கிறார்கள். நாடகத்தில் விழுவதற்கான வழியும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. யார் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் திரும்பிச் செல்ல முடியாது. நாடகம் முடியும் போது அனைத்து நடிகர்களும் ஒன்றாக சேர்வார்கள், படைக்கக் கூடியவர், முக்கிய நடிகர்களும் நிற்கிறார்கள். இந்த நாடகம் முடியப் போகிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். இந்த விஷயங்களை எந்த ஒரு சாது சன்னியாசியும் தெரிந்து கொள்ள முடியாது. ஆத்மாவில் இந்த ஞானம் வேறு யாருக்கும் இல்லை. பரமாத்மா தந்தை இங்கு ஒரே முறை தான் வருகிறார். மற்ற அனைவரும் இங்கு நடித்து தான் ஆக வேண்டும். விருத்தி அடைந்து கொண்டே இருக்கிறது அல்லவா! ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனர்? ஒரு வேளை யாராவது திரும்பிப் போனால் பிறகு அது பழகி இருக்கும் அல்லவா! ஒருவர் வந்தார் இன்னொருவர் சென்றார். பிறகு அங்கு மறு பிறவி என்று கூற வேண்டியது இல்லை. ஆரம்பத்திலிருந்து மறு பிறவி இருக்கிறது. இந்த இலஷ்மி நாராயணன் முதல் நம்பரில் இருக்கின்றனர். மறு பிறவி எடுத்து எடுத்து கடைசியில் வரும் போது முதல் எண்ணில் போக வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். இதில் சந்தேகப்படுவதற்கு எந்த விஷயமும் இல்லை. ஆத்மாக்களின் தந்தை அவரே வந்து புரிய வைக்கிறார். என்ன புரிய வைக்கிறார்? தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றர். பரமாத்மா என்றால் என்ன என முன்பு தெரியுமா? சிவனுடைய கோவிலுக்கு மட்டும் சென்றனர். இங்கே நிறைய கோவில்கள் இருக்கின்றது. சத்யுத்தில் கோவில், பூஜை எதுவும் இல்லை அங்கே நீங்கள் பூஜைக்குரிய தேவி தேவதைகளாக மாறுகின்றீர்கள். அரைக் கல்பத்திற்கு பிறகு பூஜாரிகளாக மாறுகிறீர்கள். அவர்களை தேவி தேவதைகள் என்று கூற முடியாது. மீண்டும் தந்தை வந்து பூஜைக்குரியவராக மாற்றுகிறார். வேறு எந்த தேசத்திலும் இந்தப் புகழ் கிடையாது. இராம இராஜ்யம், இராவண இராஜ்யம், இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராம இராஜ்யத்தின் கால அளவு எவ்வளவு என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இது நாடகம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

தாங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள். நாங்கள் இவ்வாறு இருக்கிறோம் என குழந்தைகள் வர்ணணை செய்கிறார்கள். நாம் இவர்களைப் போன்று சம்பூர்ண நிர்விகாரியாக மாற வேண்டும் என இச்சமயம் நீங்கள் அறிகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. வேறு யாருக்காவது தெரியும் என்றால் கூறவும். பிரம்மம் அல்லது தத்துவம் நிர்விகாரி என்று யாரும் கூற மாட்டார்கள். இல்லை. ஆத்மா தான் நிர்விகாரியாகிறது. பிரம்மம் மற்றும் தத்துவத்தை ஆத்மா என்று கூற முடியாது. அது வசிக்கும் இடம் ஆகும். ஆத்மாவில் தான் புத்தி இருக்கிறது என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. அது தமோபிரதானம் ஆகும் போது முட்டாள் ஆகிவிடுகிறது. புத்திசாலி மற்றும் முட்டாள் இருக்கிறார்கள் அல்லவா? உங்களுடைய புத்தி எவ்வளவு தூய்மையாகிறது! பிறகு அழுக்காகவும் ஆகிறது. நீங்கள் தூய்மை மற்றும் அசுத்தத்தின் வேறுபாடுகளை அறிந்திருக்கிறீர்கள் அசுத்தமான ஆத்மா திரும்பப் போக முடியாது. இப்போது அபவித்திரத்திலிருந்து பவித்ரமாக எப்படி மாறுவது? அதற்காக அடித்துக் கொள்கிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இது சங்கமயுகம் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா ஒரு முறை தான் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அனைவரும் புது உலகத்திற்கு செல்ல முடியாது. யாருடைய பார்ட் இல்லையோ அவர்கள் சாந்தி தாமத்தில் இருக்கிறார்கள். ஆகவே படங்களும் காட்டப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு என்னென்ன சித்திரங்கள் இருக்கிறதோ அது பக்தி மார்த்தினுடையது ஆகும். இது ஞான மார்கத்தினுடையது ஆகும். இதன் மூலமாக சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுழல்கிறது, நாம் எவ்வாறு கீழே இறங்குகிறோம் என்பது புரிய வைக்கப்பட்டிருக்கிறது 14 கலைகளில் இருந்து 12 கலைகள் ஆகிறது. இப்போது எந்த கலையும் இல்லை. வரிசைக் கிரமமாக இருக்கிறது அல்லவா! நடிகர்களில் கூட வரிசைக் கிரமம் இருக்கிறது. சிலருக்கு 1000, சிலருக்கு 1500, சிலருக்கு 100 என வருமானம் கிடைக்கிறது. எவ்வளவு வித்தியாசம்! படிப்பில் கூட எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. அந்த பள்ளிக் கூடத்தில் யாராவது தேர்ச்சி அடைய வில்லை என்றால் மீண்டும் படிக்க வேண்டியதாக உள்ளது. இங்கேயோ மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை, பதவி குறைந்து போகிறது. பிறகு ஒரு போதும் படிப்பு இருக்காது. ஒரு முறை தான் படிப்பு. தந்தை ஒரே முறை தான் வருகின்றார். முதன் முதலில் ஒரே ஒரு இராஜ்யம் தான் இருந்தது என புரிந்துக் கொள்கிறீர்கள். இதை நீங்கள் யாருக்கு புரிய வைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். கிறிஸ்துவர்கள் விஞ்ஞானத்தில் கூட கூர்மையாக இருக்கிறார்கள். அனைவரும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடையது இவ்வளவு தங்க புத்தியாகவும் இல்லை. அவ்வளவு கல்புத்தியாகவும் மாற வில்லை. இச்சமயம் அவர்களின் அறிவு அதிசயம் செய்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் பிரச்சாரம் அனைத்தும் கிறிஸ்துவர்களால் தான் வெளிப்பட்டது. அதுவும் சுகத்திற்காகத் தான். இந்த பழைய உலகம் அழியத்தான் வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு சாந்திதாமம் சுகதாமத்திற்குச் செல்கிறீர்கள். இல்லை என்றால் இவ்வளவு மனித ஆத்மாக்கள் வீட்டிற்கு எப்படித் திரும்பி போவார்கள். விஞ்ஞானத்தின் மூலமாக அழிவு ஏற்படும். அனைத்து ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இந்த வினாசத்திலேயே முக்தி அடங்கி இருக்கிறது. அரை கல்பம் முக்திக்காக உழைத்துக் கொண்டு வந்தீர்கள் அல்லவா! எனவே விஞ்ஞானம் மற்றும் இயற்கை சீற்றங்கள் அதாவது இயற்கையான ஆபத்துக்கள் என்று கூறுகிறோம் இவை எல்லாம் நடந்தே தீரும். இந்த போரானது முக்தி தாமம் செல்வதற்கு நிமித்தமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை பேரும் முக்தி தாமத்திற்குப் போக வேண்டும். நீங்கள் கடினமாக முயற்சி செய்திருக்கலாம், குருவிடம் சென்றிருக்கலாம், ஹடயோகம் கற்றுக் கொண்டிருக்கலாம்,. யாரும் முக்திதாமத்திற்குச் செல்ல முடியாது. இத்தனை விஞ்ஞானத்தின் குண்டுகள் தயாராக இருக்கின்றது. நிச்சயமாக வினாசம் நடக்கும் என புரிந்து கொள்ள வேண்டும். புது உலகத்தில் நிச்சயமாக மிகச் சிலரே இருப்பார்கள். மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். படிப்பின் சக்தியினால் ஜீவன் முக்தியில் வருகிறார்கள். நீங்கள் ஆடாத, உறுதியான, இடைவிடாத இராஜ்யம் செய்வீர்கள். இங்கே பாருங்கள்! அனைத்து கண்டங்களும் துண்டு, துண்டாகி இருக்கிறது. பாபா உங்களை உறுதியான, துண்டிக்கப்படாத முழு உலகத்திற்கு சக்கரவர்த்தி இராஜா ஆக்குகின்றார். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற இராஜ்ய சொத்து கிடைக்கிறது. இந்த சொத்து எப்போது, யார் கொடுத்தது? இது யாருடைய புத்தியிலும் இல்லை. நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். ஞானத்தின் மூன்றாவது கண் ஆத்மாவிற்குக் கிடைத்திருக்கிறது. ஆத்மா ஞான சொரூபம் ஆகிறது. அதுவும் ஞானக் கடல் தந்தை தான் மாற்ற வேண்டும். தந்தை தான் வந்து படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை ஞானத்தைக் கொடுக்கின்றார். அதுவும் ஒரு நொடியின் விஷயம் ஆகும். நொடியில் ஜீவன் முக்தி. மற்ற அனைவருக்கும் முக்தி கிடைக்கிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது- இராவணனின் பந்தனத்தில் இருந்து அனைவரும் விடுபடுகிறார்கள். அந்த மக்கள் உலகத்தின் அமைதிக்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள்! இதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். உலகத்தில் பிரம்மாண்டத்தில் அமைதி எப்போது ஏற்படுகிறது! பிரம்மாண்டத்திற்கு அமைதி என்று கூறப்படுகிறது. உலகத்தில் சுகம் மற்றம் அமைதி இரண்டும் இருக்கின்றது. உலகம் தனி, பிரம்மாண்டம் தனி. சந்திரன் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டதாகும். பிரம்மாண்டம். அங்கே இது எதுவும் இருக்காது. அதற்கு அமைதியான உலகம் என்று பெயர். சரீரத்தை விட்டு விட்டு அமைதிக்கு சென்று விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அதுவும் நினைவு இருக்கிறது. இப்போது நீங்கள் அங்கே செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். வேறு யாருக்கும் தெரியாது. தயார் செய்ய வேண்டியிருக்கிறது. மற்றபடி இந்த போர் போன்றவை நன்மைக்கே. அனைவரின் கணக்கு வழக்கும் முடிய வேண்டும். அனைவரும் தூய்மையாகி விடுவார்கள். யோக அக்னி அல்லவா! அக்னியால் ஒவ்வொரு பொருளும் தூய்மையாகி விடும். எப்படி பாபா டிராமாவின் முதல், இடை, கடைசியைத் தெரிந்திருக்கிறார். அதுபோல நடிகர்களாகிய நீங்களும் டிராமாவின் முதல், இடை கடையைத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்து கொள்வதற்கு தான் சாட்சாத்காரம் என்று கூறப்படுகிறது. இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. உண்மையில் நாம் முழு உலகத்திற்கும் சத்யுக ஆரம்பதிலிருந்து கலியுகக் கடைசி வரை முழுவதுமாக அறிந்துக் கொண்டீர்கள். மற்ற மனிதர்கள் யாரும் அறிந்து கொள்ள வில்லை. தெய்வீக குணங்களை உடையவர்களாக இருந்தவர்களே அசுர குணமுடையவராக மாறி இருக்கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். மீண்டும் பாபா வந்து தெய்வீக குணங்களை உடையவர்களாக மாற்றுகின்றார். தந்தை வந்திருப்பதே பதீதர்களை பாவனமாக மாற்றவதற்காக. இந்த தேவி தேவதா தர்மத்தினர் தான் முழுவதும் 84 பிறவிகளை எடுக்கிறார்கள் என உலகத்தில் யாருக்கும் தெரியவில்லை. பாவனமாகவும் பதீதமாகவும் மாறுகிறார்கள் இது யாருடைய புத்தியிலும் இல்லை. இவைகள் ஜட சிலைகள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். துல்லியமாக அவர்களுடைய போட்டோவை எடுக்க முடியாது. அவர்கள் இயற்கையாகவே வெள்ளையாக இருக்கிறார்கள். தூய்மையான இயற்கையினால் சரீரம் கூட தூய்மையாகிறது. இங்கே அசுத்தமாக இருக்கிறார்கள். இந்த வண்ணங்கள் நிறைந்த உலகம் சத்யுகத்தில் இருக்காது. கிருஷ்ணருக்கு ஷியாம் சுந்தர் என்று பெயர். சத்யுகத்தில் அழககாக இருக்கிறார். கலியுகத்தில் கருப்பாக இருக்கிறார். சத்யுகத்தில் இருந்து கலியுகம் வரை எப்படி வருகின்றார் என நம்பர் ஒன்னிலிருந்து உங்களுக்கு தெரியும். கிருஷ்ணர் கர்பத்திலிருந்து வெளியே வந்ததும் பெயர் கிடைத்தது. நிச்சயம் பெயர் வேண்டும் அல்லவா! கிருஷ்ணரின் ஆத்மா அழகாக இருந்தது என நீங்கள் கூறுவீர்கள். பிறகு கருப்பாகி விட்டது. ஆகவே சியாம் சுந்தர் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஜாதகம் கிடைத்து விட்டது என்றால் முழு சக்கரம் பற்றியும் கிடைத்து விட்டது. எவ்வளவு இரகசியம் நிறைந்திருக்கிறது. இதை நீங்கள் தான் புரிந்துக் கொள்கிறீர்கள். வேறு யாரும் புரிந்துக் கொள்ள வில்லை. இப்போது நீங்கள் புதிய உலகம் புதிய வீட்டிற்குப் போக வேண்டும். யார் நன்றாக படிப்பைப் படிக்கிறார்களோ அவர்களே புது உலகத்திற்கு போவார்கள். பாபா எல்லையற்ற முழு உலகத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை. பாபாவிற்கு அதிபதி என்று பெயர். இது படிப்பாகும். இதில் எந்த சந்தேகம் அல்லது கேள்வி எழ முடியாது. இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆசிரியரே அனைவரையும் விட உயர்ந்தவர். அவரே அமர்ந்து படிக்க வைக்கிறார். அவரே சத்தியமானவர். சத்திய நாராணனனின் உண்மையான கதையை படிப்பின் ரூபத்தில் கற்றுக் கொடுக்கிறார்.நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தனது அனைத்து கணக்கு வழக்குளையும் முடித்து விட்டு அமைதியான உலகத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். நினைவின் பலத்தினால் ஆத்மாவை சம்பூரண பாவனமாக்க வேண்டும்.

 

2. ஞானக்கடலின் ஞானத்தை சொரூபத்தில் கொண்டு வர வேண்டும். விசார சாகர மந்தனம் செய்து தனது முடிவை தானே எடுக்க வேண்டும். ஜீவன் முக்தியின் உயர்ந்த பதவியை அடைய தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.

 

வரதான்:

நேரத்தின் மகத்துவத்தைத் தெரிந்து வேகத்தின் மூலம் முதலாவதாக வரக்கூடிய தீவிர வேகத்தின் முயற்சியாளர் ஆகுக.

 

அவ்யக்த பார்ட்டில் வந்துள்ள ஆத்மாக்களுக்கு இறுதியாக வந்திருந்தாலும் வேகமாக, வேகத்தின் மூலம் முதன்மையாக வரக்கூடிய வரதானம் கிடைத்திருக்கிறது. அதனால் நேரத்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு கிடைத்துள்ள வரதானத்தை சொரூபத்தில் கொண்டு வாருங்கள். இந்த அவ்யக்த பாலனை எளிதாகவே சக்திசாலியாக மாற்றக்கூடியது, ஆகையால் எந்தளவு முன்னேற விரும்புகிறீர்களோ, அந்தளவு முன்னேற முடியும். பாப்தாதா மற்றும் நிமித்த ஆத்மாக்களின் அனைவருக்காக சதா முன்னேறி பறப்பதற்கான ஆசீர்வாதம் இருக்கும் காரணத்தினால் தீவிர வேகத்தில் முயற்சிக்கான பாக்கியம் எளிதாகவே கிடைத்திருக்கிறது.

 

சுலோகன்:

நிராக்காரத்திலிருந்து சாகாரம் என்ற மகா மந்திரத்தின் நினைவு மூலம் நிரந்தர யோகி ஆகுக.

 

ஓம்சாந்தி