02.03.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் தேகத்துடன் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து ஒரு தந்தையை னைவு செய்யுங்கள். இது தான் உண்மையான கீதையின் சாரம்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய உங்களுடைய சகஜ புருஷார்த்தம் எது?

 

பதில் :

பாபா சொல்கிறார், நீங்கள் முற்றிலும் அமைதியாக இருங்கள். அமைதியாக இருப்பதன் மூலம் தான் பாபாவின் ஆஸ்தி பெறுவீர்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும், சிருஷ்டிச் சக்கரத்தைச் சுற்ற வேண்டும். பாபாவின் நினைவினால் உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். ஆயுள் அதிகமாகும். மேலும் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் சக்கரவர்த்தி ராஜா ஆகி விடுவீர்கள். இது தான் சகஜ புருஷார்த்தம்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் புரிய வைக்கிறார். குழந்தைகளோ, கல்பத்திற்கு முன் போலவே நாம் நிச்சயமாக கீதா ஞானத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் கிருஷ்ணர் கற்றுத் தருவதில்லை. பரமபிதா பரமாத்மா நமக்குக் கற்றுத் தருகிறார். அவர் தான் நமக்கு மீண்டும் இராஜயோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். நீங்கள் இப்போது நேரடியாக பகவானிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகளின் ஆதாரம் முழுவதும் கீதையில் தான் உள்ளது. அந்த கீதையிலும் எழுதப்பட்டுள்ளது - ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்தார் என்று. இது யக்ஞமாக உள்ளது என்றால் பாடசாலையாகவும் உள்ளது. பாபா எப்போது வந்து உண்மையான கீதை சொல்கிறாரோ, அப்போது நாம் சத்கதி அடைகிறோம். மனிதர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. அனைவருக்கும் சத்கதி அளிப்பவராகிய தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். கீதையைப் படித்து வந்திருந்த போதிலும் படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி அறியாத காரணத்தினால் நேத்தி-நேத்தி (எங்களுக்குத் தெரியாது-தெரியாது) என்றே சொல்லி வந்துள்ளனர். உண்மையானகீதையையோ உண்மையான தந்தை தான் வந்து சொல்கிறார். இவை விசார் சாகர் மந்தன் செய்வதற்கான விஷயங்களாகும். யார் சேவையில் உள்ளனரோ, அவர்கள் மீது நல்லபடியாக கவனம் செல்லும். பாபா சொல்லியிருக்கிறார், ஒவ்வொரு சித்திரத்திலும் ஞானக்கடல் பதிதபாவனர், கீதா ஞானம் தருபவர் பரமபிதா பரமாத்மா, பரம ஆசிரியர், பரம சத்குரு சிவபகவான் வாக்கு என எழுதப்பட்டிருக்க வேண்டும். திரிமூர்த்தி சிவபரமாத்மா தான் கீதையின் பகவான், ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்று. இந்த வார்த்தையை அவசியம் எழுதுங்கள், அதைப் பார்த்து மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அபிப்பிராயமும் இதைப் பற்றி எழுதச் செய்கிறோம். நமக்கு முக்கியமானது கீதை. பாபா நாளுக்கு நாள் புதுப்புது பாயின்ட்டுகளும் தந்து கொண்டே இருக்கிறார். முன்பே பாபா ஏன் சொல்லவில்லை என்று வரக் கூடாது. டிராமாவில் இல்லை. பாபாவின் முரளியிலிருந்து புதுப்புதுப் பாயின்ட்டுகளை வெளிக்கொண்டுவர வேண்டும். உயர்வும் வீழ்ச்சியும் என எழுதவும் செய்கின்றனர். உயர்வு என்றால் தெய்விக இராஜ்யத்தின் ஸ்தாபனை-நூறு சதவிகிதம் தூய்மை, அமைதி, செல்வச் செழிப்பின் ஸ்தாபனை நடைபெறுகின்றது. பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் வீழ்ச்சி ஏற்படுகின்றது. அசுர இராஜ்யத்தின் வீழ்ச்சி. தெய்வீக இராஜ்யத்தின் உயர்வும் நிர்மாணித்தலும் நடைபெறுகின்றது. வீழ்ச்சியுடன் கூடவே அழிவையும் எழுத வேண்டும்.

 

உங்களின் அனைத்து ஆதாரமும் கீதையில் தான் உள்ளது. பாபா தான் வந்து உண்மையான கீதை சொல்கிறார். பாபா தினந்தோறும் இதைப் பற்றித் தான் புரிய வைக்கிறார். குழந்தைகளோ ஆத்மாக்கள் தான் பாபா சொல்கிறார், இந்த தேகத்தின் முழு விஸ்தாரத்தையும் மறந்து தன்னை ஆத்மா என உணருங்கள். ஆத்மா சரீரத்திலிருந்து தனியாகச் சென்று விடுகிறது என்றால் அனைத்து சம்மந்தங்களும் மறந்து போகிறது. ஆக, பாபாவும் சொல்கிறார், தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டுவிட்டு தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும் இல்லையா? அரைக்கல்பமாக திரும்பிச் செல்வதற்காகத் தான் இத்தனை பக்தி முதலியவற்றைச் செய்திருக்கிறீர்கள். சத்யுகத்திலோ யாரும் திரும்பிச் செல்வதற்கான முயற்சி செய்வதில்லை. அங்கேயோ சுகத்தின் மேல் சுகம்! பாடவும் செய்கின்றனர், துக்கத்தில் அனைவரும் நினைக்கின்றனர், சுகத்தில் யாருமே நினைப்பதில்லை. ஆனால் சுகம் எப்போது இருக்கும், துக்கம் எப்போது இருக்கும் - இதைப் புரிந்து கொள்ளவில்லை. நம்முடைய இவ்விஷயங்கள் அனைத்தும் குப்தமானவை. நாமும் ஆன்மிக சேனை இல்லையா? சிவபாபாவின் சக்தி சேனை. இதன் அர்த்தத்தையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது. தேவிகள் முதலானவர்களுக்கு இவ்வளவு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிந்திருக்கவில்லை. யாருக்குப் பூஜை செய்கின்றனரோ, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் இல்லையா? உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய சிவனுக்கு மகிமை, பிறகு பிரம்மா-விஷ்ணு-சங்கருக்கு, பிறகு லட்சுமி-நாராயணர், ராதை-கிருஷ்ணரின் கோவில்கள் உள்ளன. வேறு யாரும் கிடையாது. ஒரே ஒரு சிவபாபாவுக்கு எத்தனை விதவிதமான பெயர்களை வைத்துக் கோவில்களைக் கட்டியுள்ளனர். இப்போது உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. டிராமாவில் முக்கிய நடிகர்களும் உள்ளனர் இல்லையா? அது எல்லைக்குட்பட்ட டிராமா. இது எல்லையற்ற டிராமா. இதில் முக்கியமானவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்களோ, ராம் ஜீ, உலகம் உருவாகவே இல்லை எனச் சொல்லி விடுகின்றனர். இதைப் பற்றியும் ஒரு சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர். அர்த்தம் எதையும் புரிந்து கொள்ளவில்லை.

 

பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் சகஜமான புருஷார்த்தம் கற்றுத் தந்துள்ளார். அனைத்தையும் விட சகஜமான புருஷார்த்தம் - நீங்கள் முற்றிலும் அமைதியாக இருங்கள். அமைதியாக இருப்பதன் மூலம் தான் பாபாவின் ஆஸ்தியைப் பெறுவீர்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தை னைவு செய்ய வேண்டும். பாபாவின் நினைவினால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் நோயற்றவர்களாக ஆகி விடுவீர்கள். ஆயுள் பெரியதாகும். சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் சக்கரவர்த்தி ராஜா ஆவீர்கள். இப்போது நரகத்தின் மாலிக்காக இருக்கிறீர்கள். பிறகு சொர்க்கத்தின் மாலிக் ஆவீர்கள். சொர்க்கத்தின் மாலிக்காகவோ அனைவருமே ஆகின்றனர். பிறகு அதில் உள்ளது பதவியின் வேறுபாடு. எவ்வளவு உங்களைப் போல் மற்றவர்களை ஆக்குவீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும். அவிநாசி ஞான ரத்தினங்களின் தானமே செய்யவில்லை என்றால் பிரதிபலனாக என்ன கிடைக்கும்? யாராவது பணக்காரர் ஆகிறார் என்றால் இவர் முன் ஜென்மத்தில் தான-புண்ணியம் நன்கு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகின்றது. இப்போது குழந்தைகள் அறிவார்கள், இராவண இராஜ்யத்திலோ அனைவரும் பாவங்களையே செய்கின்றனர். அனைவரிலும் புண்ணிய ஆத்மாக்கள் லட்சுமி-நாராயணர். ஆம், அனைவரையும் உயர்த்துகின்றவரே பிராமணர்களை உயர்வானவர்களாக உருவாக்குகிறார். அதுவோ பிராலப்தம் (பலன்). இந்த பிரம்மா முகவம்சாவளி பிராமணகுல பூஷணர்கள் ஸ்ரீமத் படி இந்த சிரேஷ்ட காரியத்தைச் செய்கின்றனர். பிரம்மாவின் பெயர் முக்கியமாகும். திரிமூர்த்தி பிரம்மா எனச்சொல்கின்றனர் இல்லையா? இப்போதோ நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் திரிமூர்த்தி சிவன் எனச் சொல்ல வேண்டும். பிரம்மா மூலம் ஸ்தாபனை, சங்கர் மூலம் விநாசம்-இதுவோ பாடல் இல்லையா? விராட ரூபத்தையும் உருவாக்குகின்றனர். ஆனால் அதில் சிவனையும் காட்டவில்லை, பிராமணர்களையும் காட்டவில்லை. இதையும் குழந்தைகள் நீங்கள் புரிய வைக்க வேண்டும். உங்களிலும் கூட யதார்த்த ரீதியில் அபூர்வமாக யாரோ சிலரது புத்தியில் தான் பதிகின்றது. நிறைய பாயின்ட்டுகள் உள்ளன இல்லையா? அதைத் தலைப்புகள் என்றும் சொல்கின்றனர். எத்தனைத் தலைப்புகள் கிடைக்கின்றன! உண்மையான கீதை பகவானிடமிருந்து கேட்பதால் மனிதரில் இருந்து தேவதையாக, உலகத்தின் மாலிக்காக ஆகி விடுகிறார்கள். தலைப்பு எவ்வளவு நன்றாக உள்ளது! ஆனால் புரிய வைப்பதற்கும் புத்தி வேண்டும். இவ்விஷயத்தைத் தெளிவாக எழுதி வைக்க வேண்டும், அதைப் பார்த்து மனிதர்கள் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். எவ்வளவு சுலபம்! ஒவ்வொரு ஞானப் பாயின்ட்டும் லட்சம்-கோடி ரூபாய் பெறுமானதாகும். இதன் மூலம் நீங்கள் எதிலிருந்து எதுவாக ஆகி விடுகிறீர்கள்! உங்களுடைய ஒவ்வோர் அடியிலும் (பதம்) பல மடங்கு பலன் உள்ளது. அதனால் தேவதைகளுக்கும் கூட பத்மம்-தாமரை மலரைக் காட்டுகின்றனர். பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய உங்களுடைய பெயரையே மறைத்து விட்டுள்ளனர். அந்த பிராமணர்கள் கக்கத்தில் அல்லது மடியில் புத்தகம்- கீதையை வைத்துக் கொள்கின்றனர். இப்போது நீங்கள் உண்மையான பிராமணர்கள். உங்கள் கக்கத்தில் (புத்தியில்) உள்ளது சத்தியம். அவர்களின் கச்சத்தில் உள்ளது புத்தகம். ஆக, உங்களுக்கு நஷா அதிகரிக்க வேண்டும் - நாமோ ஸ்ரீமத்படி சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பாபா இராஜயோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். உங்களிடம் எந்த ஒரு புத்தகமும் இல்லை. ஆனால் இந்த எளிய பேட்ஜ் தான் உங்களுடைய உண்மையான கீதையாகும். இதில் திரிமூர்த்தியின் சித்திரமும் உள்ளது. ஆக, முழு கீதையும் இதில் வந்து விடுகின்றது. ஒரு விநாடியில் கீதை முழுவதும் புரிய வைக்கப்படுகின்றது. இந்த பேட்ஜ் மூலம் நீங்கள் ஒரு விநாடியில் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். இவர் உங்களுடைய தந்தை, இவரை நினைவு செய்வதால் உங்களுடைய பாவங்கள் விநாசமாகும். இரயிலில் சென்றால், போகும் போதும் வரும் போதும் யாரையாவது சந்தித்தால் நீங்கள் அவர்களுக்கு நல்லபடியாகப் புரிய வையுங்கள். கிருஷ்ணபுரிக்கோ அனைவரும் செல்ல விரும்புகின்றனர் இல்லையா? இந்தப் படிப்பினால் இதுபோல் ஆக முடியும். படிப்பின் மூலம் இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. மற்ற தர்ம ஸ்தாபகர்கள் யாரும் தர்மத்தை ஸ்தாபனை செய்வதில்லை. நீங்கள் அறிவீர்கள், நாம் வருகின்ற 21 பிறவிகளுக்காக இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம். எவ்வளவு நல்ல படிப்பு! தினந்தோறும் ஒரு மணி நேரம் மட்டும் படியுங்கள், போதும். அந்தப் படிப்போ 4-5 மணி நேரம் நடைபெறுகின்றது. இந்த ஒரு மணி நேரமே போதும். அதுவும் காலை நேரம் அப்படிப்பட்டது, அனைவருமே ஓய்வாக இருக்கும் நேரம். மற்றப்படி யாராவது பந்தனத்திலுள்ளவர் முதலானவர்கள் என்றால் காலையில் வர முடியாது. ஆகவே வேறு சமயம் அவர்களுக்காக வைக்கப் படுகின்றது. பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும், எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள், இந்தச் செய்தியைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். செய்தித்தாள்களிலோ பேட்ஜ் போட முடியாது. ஒரு பக்கமாகப் போட முடியும் என்றாலும் மனிதர்களுக்குப் புரிய வைத்தாலன்றி அப்படியே புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால் மிகவும் சுலபம். இந்தத் தொழிலையோ யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். நல்லது, தானே நினைவு செய்யாவிட்டாலும் சரி, மற்றவர்களுக்கு நினைவு படுத்தலாம். அதுவும் நல்லது தான். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என மற்றவர்களுக்குச் சொல்லி விட்டு, தான் தேக அபிமானியாக இருப்பார்களானால் ஏதேனும் விகர்மங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். முதல்-முதலில் புயல் மனதில் வருகின்றது. பிறகு செயலில் வருகின்றது. மனதில் அதிகம் வரும். அதைப் பற்றிப் பிறகு புத்தி மூலம் முடிவு செய்ய வேண்டும். தீய காரியத்தை ஒருபோதும் செய்யக் கூடாது. நல்ல கர்மம் செய்ய வேண்டும். சங்கல்பங்கள் நல்லவையாகவும் உள்ளன, தீயவை கூட வருகின்றன. தீயவற்றை நிறுத்திவிட வேண்டும். இதற்கான புத்தி பாபா தந்துள்ளார். வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களோ தவறான காரியங்களையே செய்து கொண்டுள்ளனர். நீங்கள் இப்போது சரியான காரியங்களையே செய்ய வேண்டும். நல்ல புருஷார்த்தத்தினால் சரியான காரியங்கள் நடைபெறுகின்றன. பாபாவோ ஒவ்வொரு விஷயத்தையும் மிக நன்றாகப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) இந்த ஒவ்வோர் அவிநாசி ஞான ரத்தினமும் லட்சம்-கோடி ரூபாய் பெறுமானதாகும். இவற்றை தானம் செய்து ஒவ்வோர் அடியிலும் பல மடங்கு வருமானத்தைச் சேமிக்க வேண்டும். தன்னைப்போல் மற்றவர்களை ஆக்கி உயர்ந்த பதவி பெற வேண்டும்.

 

2) விகர்மங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். மனதில் எப்போதாவது தீய சங்கல்பங்கள் வந்தால் அவற்றை நிறுத்திவிட வேண்டும். நல்லவிதமான சங்கல்பங்களை மனதில் ஓட்ட வேண்டும். கர்மேந்திரியங்களினால் யாதொரு தவறான காரியத்தையும் செய்யக்கூடாது.

வரதானம் :

சேவை  மூலமாக  யோக யுக்த்  நிலையை  (ஸ்திதியை ) அனுபவம்  செய்யக்கூடிய  ஆன்மீக  சேவாதாரி  ஆகுங்கள்.

பிராமண  வாழ்க்கை  சேவை  செய்வதற்கான  வாழ்க்கையாகும்.  மாயையிடமிருந்து விலகியிருக்க ஒரு சிரேஷ்டமான  சாதனம்  சேவா. சேவை  நம்மை யோகயுத்தாக  மாற்றுகிறது.ஆனால்  வெறும்  வாயினால் மட்டும்  சேவை  அல்ல. காதினால்  கேட்ட  மதுரமான  வாணியின் ஸ்வரூபமாகி சேவை  செய்ய  வேண்டும். எல்லைக்கு  உட்பட்ட  ஆசையிலிருந்து விடுபட்டு  எதிர்பார்ப்பு  இல்லாத சேவை  செய்ய  வேண்டும். இதைத்தான் ஈஸ்வரிய  அல்லது  ஆன்மீக  சேவை  எனப்படும்.  வாயின்  கூடவே  மனதின்  மூலமாகமும்  சேவை செய்வதின்  அர்த்தம் மன்மனாபவ ஸ்திதியில்  நிலைத்திருப்பதாகும்.

சுலோகன் :

உருவத்தை    பார்க்காமல் நிராகாரமான தந்தையை  பார்ப்பதினால் ஆகர்ஷண மூர்த்தி (கவர்ச்சிக்கக்கூடிய மூர்த்தி)ஆகி விடலாம்.

  

ஓம்சாந்தி