02-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எந்த பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்?

பதில்:

நினைவில் இருக்கக்கூடிய பழக்கம். இது ஆன்மீக பழக்கமாகும். இந்த பழக்கத்தின் கூடவே நீங்கள் தெய்வீக மற்றும் அலௌகீக காரியங்களும் செய்ய வேண்டும். நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் அனைவருக்கும் உண்மையிலும் உண்மையான கதையை அவசியம் கூற வேண்டும். சேவைக்கான பழக்கமும் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்க வேண்டும்.

பாடல்:

மனிதர்களே, பொறுமையாக இருங்கள் .........

ஓம் சாந்தி. யாராவது நோய்வாய்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் நோயாளி துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பம் வைப்பார்கள். அவர் உடல்நிலை எப்படி இருக்கின்றது? எப்போது நோயி-ருந்து விடுபடுவார்? என்று மருத்துவரிடம் கேட்பார்கள். அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட விஷயங்களாகும். இது எல்லையற்ற விஷயமாகும். தந்தை வந்து குழந்தைகளுக்கு வழிகாட்டுகின்றார். சுகம் மற்றும் துக்கத்திற்கான விளையாட்டு இது என்பதை குழந்தைகள் அறிந்துக் கொண்டீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம் செல்வதை விட அதிக நன்மை இங்கு இருக்கிறது, ஏனெனில் நாம் இந்த நேரத்தில் ஈஸ்வரிய மடியில் இருக்கிறோம், ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக இருக்கிறோம் என்பதை அறிவீர்கள். இந்த நேரத்தில் நமக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த குப்தமான மகிமை இருக்கிறது. மனிதர்கள் தந்தையை சிவன், ஈஸ்வரன், பகவான் என்று தான் கூறுகின்றனர், ஆனால் சரியானபடி அறியாமல் இருக்கின்றனர். அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். நாடகப்படி இவ்வாறு நடக்க வேண்டியிருக்கிறது. ஞானம் மற்றும் அஞ்ஞானம், பகல் மற்றும் இரவு. இவ்வாறும் பாடிக் கொண்டு வருகின்றனர், ஆனால் தன்னை யாரும் தமோபிரதானம் என்றுப் புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு தமோபிரதான புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர். யாருடைய அதிர்ஷ்டத்தில் தந்தையின் ஆஸ்தி அடையவேண்டுமென்று இருக்கிறதோ அவர்களது புத்தியில் தான் அமரும். நாம் முற்றிலும் காரிருளில் இருந்தோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார் எனில் எவ்வளவு வெளிச்சம் கிடைத்திருக்கிறது! தந்தை எந்த ஞானம் புரிய வைக்கின்றாரோ அது எந்த வேதம், சாஸ்திரம், கிரந்தம் போன்றவைகளில் கிடையாது. அதையும் தந்தை நிரூபணம் செய்துப் புரிய வைக்கின்றார். குழந்தை களாகிய உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் வெளிச்சத்தை கொடுக்கின்றார். பிறகு அது மறைந்துவிடுகிறது. நானின்றி வேறு யாரும் ஞானம் அடைய முடியாது. பிறகு இந்த ஞானம் மறைந்து போய்விடும். கலியுகம் கடந்துவிட்டது, 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது புது விஷயமாகும். இது சாஸ்திரங்களில் கிடையாது.

தந்தை இந்த ஞானத்தை அனைவருக்கும் ஒன்றுபோலத் தான் கற்பிக்கின்றார், ஆனால் தாரணை களில் வரிசைக்கிரமம் இருக்கிறது. நல்ல சேவாதாரி குழந்தைகள் வருகின்றபொழுது பாபாவின் நடனமும் அவ்வாறு நடைபெறுகிறது. நடனப் பெண்களின் நடனத்தைப் பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றபொழுது அவர்களும் மிகக் குஷியுடன், நன்றாக நடனம் ஆடுவர். குறைந்த எண்ணிக்கை யில் அமர்ந்திருக்கின்றனர் எனில் பொதுவான முறையில் சிறிது நடனம் ஆடுவர். ஆஹா ஆஹா என்று கூறக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர் எனில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துவிடும். ஆக இங்கும் அப்படித்தான். முரளி அனைத்து குழந்தைகளும் கேட்கத் தான் செய்கின்றனர், ஆனால் எதிரில் கேட்கும் விஷயமே தனிப்பட்டது அல்லவா! கிருஷ்ணர் நடனம் ஆடுவதாகவும் காண்பித்திருக் கின்றனர். உண்மையில் அந்த (உலகாயத) நடனம் கிடையாது. ஞான நடனமாகும். நான் ஞான நடனம் செய்வதற்காக வந்திருக்கிறேன், நான் ஞானக் கடலானவன் என்று சிவபாபா சுயம் கூறுகின்றார். ஆக நல்ல நல்ல கருத்துகள் வெளிப்படுகின்றன. இது ஞான முரளியாகும். புல்லாங்குழ-ன் முரளி கிடையாது. பதீத பாவன் தந்தை வந்து எளிய இராஜயோகம் கற்பிப்பாரா? அல்லது புல்லாங்குழ-ன் முரளி வாசிப்பாரா? தந்தை வந்து இப்படிப்பட்ட இராஜயோகம் கற்பிப்பார் என்ற எண்ணம் யாருக்கும் வருவது கிடையாது. இப்பொழுது நீங்கள் அறிவீர்கள், வேறு எந்த மனிதனின் புத்தியிலும் வர முடியாது. வரக் கூடியவர்களிலும் வரிசைக்கிரமமான பதவி அடைகிறீர்கள். கல்பத்திற்கு முன்பு என்ன முயற்சி செய்தார்களோ அதேபோன்று செய்துக் கொண்டிருக்கிறீர்கள். முந்தைய கல்பத்தைப் போன்று தந்தை வருகின்றார், வந்து குழந்தைகளுக்கு அனைத்து இரகசியங்களையும் கூறுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நானும் பந்தனத்தில் கட்டுப்பட்டு இருக்கிறேன் என்று கூறுகின்றார். ஒவ்வொருவரும் இந்த நாடகம் என்ற பந்தனத்தில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். சத்யுகத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அது மீண்டும் நடைபெறும். இன்று பலவகையான பொருட்கள் உள்ளன. சத்யுகத்தில் இத்தனை வகைகள் இருக்காது. அங்கு மிகக் குறைவான வகைகள் தான் இருக்கும், பிறகு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எவ்வாறு தர்மங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அல்லவா! சத்யுகத்தில் (மற்ற தர்மங்கள்) கிடையவே கிடையாது. எது சத்யுகத்தில் இருந்ததோ அது மீண்டும் சத்யுகத்தில் தான் பார்ப்பீர்கள். சத்யுகத்தில் அசுத்தம் ஏற்படுத்தக்கூடிய எந்த பொருளும் இருக்கவே முடியாது. அந்த தேவி தேவதைகளைத் தான் பகவான், பகவதி என்று கூறுகின்றனர். வேறு எந்த கண்டத்திலும் ஒருபொழுதும் யாரையும் பகவான், பகவதி என்று கூறுவது கிடையாது. அந்த தேவதைகள் அவசியம் சொர்க்கத்தில் இராஜ்யம் செய்திருந்தனர். அவர்களுக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது என்பதைப் பாருங்கள்!

குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது பொறுமை வந்துவிட்டது. எனது பதவி உயர்வானதா? அல்லது குறைந்ததா? என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவேன்? ஒவ்வொருவரும் அவரவர்களை புரிந்துக் கொள்ள முடியும் அல்லவா! இன்னார் நன்றாக சேவை செய்கின்றனர், நாள் செல்ல செல்ல புயல்களும் வந்துவிடுகின்றன. குழந்தைகளிடத்தில் எந்த கிரஹச்சாரமும், புயல்களும் வரக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். மாயை நல்ல நல்ல குழந்தைகளையும் கீழே தள்ளிவிடுகிறது. ஆக இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது என்று தந்தை குழந்தைகளுக்கு பொறுமை ஏற்படுத்துகின்றார். நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். ஸ்தாபனை ஏற்பட்டுவிட்டால் பிறகு அங்கு சென்றே ஆக வேண்டும். இதில் ஒரு விநாடியும் கூட முன் பின் ஏற்பட முடியாது. இந்த இரகசியங்களை குழந்தைகள் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். நாம் நாடகத்தின் நடிகர்கள், இதில் நமக்கு முக்கியமான பாகம் இருக்கிறது. பாரதத்தில் தான் வெற்றி மற்றும் தோல்விக் கான விளையாட்டு பதிவாகியிருக்கிறது. பாரதம் தான் பாவனமாக இருந்தது. எவ்வளவு அமைதி மற்றும் தூய்மையுடன் இருந்தது! இது நேற்றையை விஷயமாகும். நேற்று நாம் தான் நடிப்பு நடித்திருந்தோம். 5 ஆயிரம் ஆண்டிற்கான பாகம் பதிவாகியிருக்கிறது. நாம் சுற்றி வந்திருக்கிறோம். இப்பொழுது மீண்டும் பாபாவிடம் தொடர்பு வைத்திருக்கிறோம், இதன் மூலம் தான் கறைகள் நீங்குகின்றன. தந்தை நினைவிற்கு வரும்பொழுது அவசியம் ஆஸ்தியின் நினைவும் வரும். முதன் முதலில் அல்லாவை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்னை அறிந்து கொள்வதன் மூலம் என் மூலமாக அனைத்தையும் அறிந்துக் கொண்டுவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஞானம் மிகவும் எளிது, ஒரு விநாடிக்கானது. இருப்பினும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். கருத்துகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். முக்கியமான கருத்து மன்மனாபவ, இதில் தான் தடைகள் ஏற்படுகின்றன. தேக அபிமானம் வந்துவிடுவதால் பிறகு பல விதமான சோம்பல் வந்துவிடுகிறது. பிறகு யோகாவில் இருக்க விடுவது கிடையாது. பக்தி மார்க்கத்திலும் கூட கிருஷ்ணரின் நினைவில் அமர்கின்றபொழுது புத்தி எங்கெங்கேயோ அலைய ஆரம்பித்துவிடுகிறது! பக்தியின் அனுபவம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த பிறப்பிற்கான விஷயமாகும். இந்த பிறப்பை அறிந்துக் கொள்வ தினால் சிறிதாவது கடந்தவைகளையும் புரிந்துக் கொள்ள முடியும். தந்தையை நினைவு செய்வதற் கான பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவு குஷி அதிகரிக்கும். கூடவே தெய்வீக மற்றும் அலௌகீக காரியமும் செய்ய வேண்டும். நீங்கள் பிராமணர்கள். நீங்கள் சத்திய நாராயணனின் கதை, அமரக் கதையை கூறுகிறீர்கள். மூல விஷயம் ஒன்றே ஒன்று தான், அதில் அனைத்து விஷயங்களும் வந்துவிடுகின்றன. நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகின்றன. இந்த ஒரே ஒரு பழக்கம் தான் ஆன்மீகமானது ஆகும். ஞானம் மிகவும் எளிது என்பதை தந்தைப் புரிய வைக்கின்றார். கன்னிகைகளின் பெயரும் பாடப்பட்டிருக்கிறது. அதர்குமாரி, திருமணமாகாத குமாரிகள், திருமணமாகாத கன்னிகைகளின் பெயர் அனைவரையும் விட பிரபலமாக இருக்கிறது. அவர்களுக்கு எந்த பந்தனமும் கிடையாது. கணவன்மார்கள் விகாரி களாக ஆக்கிவிடுகின்றனர். இந்த தந்தை சொர்க்கம் அழைத்துச் செல்வதற்காக அலங்கரிக்கின்றார். இனிய கடலுக்கு அழைத்துச் செல்கின்றார். இந்த பழைய உலகம், பழைய சரீர சகிதமாக அனைத்தை யும் முற்றிலும் மறந்துவிடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நாம் 84 பிறவிகள் எடுத்துவிட்டோம் என்று ஆத்மா கூறுகிறது. இப்பொழுது மீண்டும் நாம் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைவோம். தைரியம் வைக்கிறீர்கள், இருப்பினும் மாயையிடம் யுத்தம் நடைபெறவே செய்கிறது. முத-ல் இருப்பது இந்த பாபா ஆவார். மாயையின் புயல்கள் முதலில் இவரிடம் தான் அதிகம் வருகிறது. பாபா, எனக்கு இவ்வாறு நடக்கிறது என்று பலர் வந்து கேட்கின்றனர். குழந்தைகளே! ஆம், இந்த புயல்கள் அவசியம் வரும் என்று பாபா கூறுகின்றார். முத-ல் என்னிடத்தில் வருகின்றது. கடைசியில் அனைவரும் கர்மாதீத நிலை அடைந்துவிடுவீர்கள். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. முந்தைய கல்பத்திலும் நடைபெற்றது. நாடகத்தில் நடிப்பு நடித்துவிட்டோம், இப்பொழுது மீண்டும் வீட்டிற்குச் செல்கிறோம். இது சைத்தன்ய நாடகமாகும். இந்த பழைய உலகம் நரகமாகும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இந்த இலட்சுமி நாராயணன் பாற்கட-ல் இருந்தனர் என்றும் கூறுகின்றனர். இவர்களது கோயில்களை எவ்வளவு நன்றாக உருவாக்குகின்றனர்! முதன் முத-ல் கோயில் கட்டியிருக்கும் பொழுது அவசியம் பாலை குளமாக ஆக்கி அதில் விஷ்ணுவை அமரச் செய்திருப்பர். மிக நல்ல நல்ல சிலைகளை உருவாக்கி பூஜை செய்தனர். அந்த நேரத்தில் விலை மிகவும் குறைவாக இருந்தது. பாபா அனைத்தையும் பார்த்திருக்கின்றார். உண்மையில் இந்த பாரதம் எவ்வளவு தூய்மையாக, பாற்கடல் போன்று இருந்தது! பால், நெய் போன்றவைகள் நதி போன்று இருந்தது. இது மகிமையாக பாடப்பட்டிருக்கிறது. சொர்க்கம் என்ற பெயர் கூறியதும் வாயில் நீர் ஊறுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. ஆக புத்தியில் தெளிவு வந்திருக்கிறது. புத்தி தனது வீட்டிற்குச் சென்றுவிடுகிறது, பிறகு சொர்க்கத்திற்கு வருவோம். அங்கு அனைத்தும் புதியதிலும் புதியதாகவே இருக்கும். ஸ்ரீநாராயணனின் மூர்த்தியைப் பார்த்து மிகவும் குஷியடைந்தார், மிக அன்பாக வைத்துக் கொண்டார். நான் தான் இவ்வாறு ஆவேன் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.இந்த ஞானம் இப்பொழுது பாபாவிடமிருந்து கிடைக்கிறது. உங்களிடம் பிரம்மாண்டம் (பரந்தாமம்) மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் முதல், இடை, கடையின் ஞானம் இருக்கிறது. நாம் எப்படியெல்லாம் சக்கரத்தில் வருகிறோம் என்பதை அறிவீர்கள். பாபா நமக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். பாக்கி இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. சரீரத்திற்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது இது உங்களது கடைசிப் பிறப்பாகும். இப்பொழுது உங்களது சுகமான நாட்கள் நாடகப்படி வந்துக் கொண்டிருக்கிறது. விநாசம் எதிரில் இருப்பதை பார்க்கிறீர்கள். உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனத்தைப் பற்றி நன்றாக அறிந்திருக்கிறீர்கள். இந்த சுயதரிசன சக்கரம் உங்களது புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. குஷி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தை நமக்கு ஆசிரியராக ஆகி கற்பிக்கின்றார். ஆனால் புதிய விஷயமாக இருக்கின்ற காரணத்தினால் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள். இல்லையெனில் பாபா என்று கூறியதும் குஷியின் அளவு அதிகரித்துவிட வேண்டும். இராம்தீர்த் என்பவர் கிருஷ்ணரின் பக்தன் ஆவார். கிருஷ்ணரை தரிசிப்பதற்காக என்னவெல்லாம் செய்தார்! அவருக்கு சாட்சாத்காரம் கிடைத்ததும் மிகவும் குஷியடைந்தார். ஆனால் அதனால் என்ன கிடைத்தது? எந்த பலனும் கிடையாது. இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு குஷியும் இருக்கிறது, ஏனெனில் 21 பிறவிகளுக்கு நாம் உயர்ந்த பதவி அடையப் போகிறோம் என்பதை அறிவீர்கள். 3 பங்கு நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள். ஒருவேளை பாதி பாதியாக இருந்தால் எந்த நன்மையும் இல்லை. நீங்கள் 3 பங்கு சுகமாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்று சுகத்தை யாரும் அடைய முடியாது. உங்களுக்கு அளவு கடந்த சுகம் கிடைக்கிறது. அளவு கடந்த சுகத்தின் பொழுது துக்கம் பற்றி எதுவும் தெரியாது. சங்கமத்தில் நீங்கள் இரண்டையும் அறிந்துக் கொள்ள முடியும் - இப்பொழுது நாம் துக்கத்தி-ருந்து சுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். முகம் பகல் நோக்கியும், கால் இரவு நோக்கியும் இருக்கிறது. இந்த உலகை எட்டி உதைக்க வேண்டும் அதாவது புத்தியினால் மறக்க வேண்டும். அதிகம் நடிப்புகளை நடித்துவிட்டோம், இப்பொழுது திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது, இவ்வாறு தனக்குள் உரையாடிக் கொள்ள வேண்டும். இப்பொழுது எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வோமோ அந்த அளவிற்கு கறைகள் நீங்கும். எந்த அளவிற்கு தந்தையின் சேவை செய்து தனக்குச் சமமாக ஆக்குவீர்களோ அந்த அளவிற்கு தந்தையை வெளிப்படுத்துவீர்கள். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது புத்தியில் இருக்கிறது. ஆக வீட்டை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். பழைய கட்டடம் உடைந்துக் கொண்டே இருக்கிறது. புதிய கட்டடம் எப்படி இருக்கும்! பழைய கட்டடம் எப்படி இருக்கும்! இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. இது முழுமையாக விஷம் நிறைந்த கடலாகும். ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர். பாபா வந்த பின்பு அதிக சண்டைகளும் ஆரம்பமாகிவிட்டன. மனைவி விகாரத்திற்கு ஒத்துழைக்கவில்லையெனில் எவ்வளவு தொந்தரவு செய்கின்றனர்! எவ்வளவு சண்டையிடுகின்றனர்! முந்தைய கல்பத்திலும் தீங்கு ஏற்பட்டிருந்தது! இப்போதைய விஷயத்தை அவர்கள் பாடுகின்றனர் - எவ்வளவு கூக்குர-ட்டு அழைக்கின்றனர் என்பதை பார்க்கிறீர்கள்! அதே நாடகத்தின் பாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தந்தை அறிவார், குழந்தைகள் அறிவீர்கள் வேறு யாருக்கும் தெரியாது. நாளடைவில் அனைவரும் புரிந்து கொள்வர். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் என்றும் பாடுகின்றனர். பாரதம் சொர்க்கமாகவும், நரகமாகவும் எவ்வாறு ஆகின்றது? என்பதை நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும். வாருங்கள், நாங்கள் உங்களுக்கு முழு உலகின் சரித்திர, பூகோளத்தை புரிய வைக்கிறோம். இந்த எல்லையற்ற சரித்திர, பூகோளத்தை தந்தை மட்டுமே அறிவார், மேலும் ஈஸ்வரனின் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தூய்மை மற்றும் சுகம், சாந்தி எப்படி ஸ்தாபனை ஆகிறது? இந்த சரித்திர, பூகோளத்தை அறிந்துக் கொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்துக் கொண்டுவிடுவீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து அவசியம் நீங்கள் எல்லையற்ற ஆஸ்தி தான் அடைவீர்கள் என்பதை வந்துப் புரிந்துக் கொள்ளுங்கள். அதிக தலைப்புகள் இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்களது புத்தி இப்பொழுது நிறைந்துவிட்டது. குஷியின் அளவு எவ்வளவு அதிகரித்துவிட்டது! முழு ஞானமும் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கிறது. ஞானம் நிறைந்த தந்தையிடமிருந்து ஞானம் அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு நாம் தான் சென்று இலட்சுமி நாராயணனாக ஆவோம். அங்கு இந்த ஞானம் எதுவும் இருக்காது. புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு ஆழமான விஷயமாகும்! குழந்தைகள் ஏணியை நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா! ஆக இந்த சக்கரம் 84 பிறவிகளுக்கானது. இப்பொழுது மனிதர்களுக்கும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். இதை இப்பொழுது சொர்க்கம் என்றோ, பாவன உலகம் என்றோ கூற முடியாது. சத்யுகம் தனிப்பட்டது, க--யுகம் தனிப்பட்டது. இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது என்று புரிய வைப்பது மிகவும் எளிதாகும். புரிய வைப்பதும் நன்றாக தோன்றுகிறது. இருப்பினும் முயற்சி செய்த நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும், இது பலரால் முடிவதில்லை. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்த பழைய தேகம் மற்றும் உலகை புத்தியினால் மறந்து, தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்ய வேண்டும். நமது சுகமான நாட்கள் வந்தேவிட்டது என்ற குஷியில் சதா இருக்க வேண்டும்.

2) ஞானம் நிறைந்த தந்தையிடமிருந்து என்ன ஞானம் கிடைத்திருக்கிறதோ அதை சிந்தனை செய்து புத்தியை நிறைத்து வைத்திருக்க வேண்டும். தேக அபிமானத்தில் வந்து ஒருபொழுதும் எந்த வகையான சோர்வும் அடையக் கூடாது.

வரதானம்:

ஈஸ்வரிய பாக்கியத்தில் ஒளிக்கிரீடத்தை பிராப்தியாக அடையக் கூடிய அனைத்து பிராப்திகளின் சொரூபமானவர் ஆகுக.

உலகில் பாக்கியத்தின் அடையாளம் இராஜ்யமாக இருக்கும். மேலும் இராஜ்யத்தின் அடையாளம் கிரீடம் இருக்கும். அதே போன்று ஈஸ்வரிய பாக்கியத்தின் அடையாளம் ஒளிக்கிரீடம் ஆகும். இந்த கிரீடத்தை பிராப்தியாக அடைவதற்கு ஆதாரம் தூய்மை. சம்பூர்ன தூய்மையுடைய ஆத்மாக்கள் ஒளிக்கிரீடத்தின் கூடவே அனைத்து பிராப்திகளிலும் முழுமையானவர்களாக இருப்பார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு பிராப்தியில் குறை இருந்தால் ஒளிக்கிரீடம் தெளிவாக தென்படாது.

சுலோகன்:

தனது ஆன்மீக ஸ்திதியில் நிலைத்திருப்பவர்கள் தான் மனதில் மகாதானி ஆவர்.