02-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! அமைதி உங்களுடைய கழுத்து மாலை. ஆத்மாவின் சுய தர்மம் ஆகும். ஆகையால் அமைதிக்காக அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களுடைய சுய தர்மத்தில் நிலைத்திருங்கள்.

கேள்வி:
மனிதர்கள் எந்த ஒரு பொருளையும் சுத்த படுத்துவதற்காக என்ன யுக்தியைப் படைக்கிறார்கள்? மேலும் பாபா என்ன யுக்தியைப் படைக்கிறார்?

பதில்:
மனிதர்கள் எந்த ஒரு பொருளையும் சுத்தபடுத்துவதற்காக அதை நெருப்பில் போடு கிறார்கள். வேள்வி அமைக்கிறார்கள். என்றாலும் அதிலும் நெருப்பை மூட்டுகிறார்கள். இங்கேயும் பாபா ருத்ர வேள்வியை அமைத்துள்ளார். ஆனால் இது ஞான வேள்வியாகும். இதில் அனைத்தும் எரிந்து போக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தேகம் உட்பட அனைத்தையும் இதில் அர்ப்பணிக்கிறீர்கள். நீங்கள் யோகா செய்ய வேண்டும். யோகத் தினுடைய பந்தயம் (ரேஸ்) ஆகும். இதிலிருந்து நீங்கள் முதலில் ருத்ரனின் கழுத்து மாலை யாகிறீர்கள். பிறகு விஷ்ணுவின் கழுத்து மாலையில் சுழற்றப் படுவீர்கள்.

பாடல்:
ஓம் நமசிவாய.....

ஓம் சாந்தி.
யாருடைய மகிமையைக் கேட்டீர்கள். பாரலௌகீக பரம்பிதா பரம ஆத்மா என்றால் பரமாத்மாவைப் பற்றியது. அனைத்து பக்தர்கள் மற்றும் சாதனை செய்யக் கூடியவர்கள் அவரை நினைக்கிறார்கள். அவருடைய பெயர் பதீத பாவனர் என்பது கூட ஆகும். பாரதம் தூய்மையாக இருந்தது என குழந்தைகள் அறிகிறார்கள். இலஷ்மி நாராயணன் போன்றோரின் தூய்மையான இல்லற மார்க்க தர்மம் இருந்தது. அதற்கு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் என்று கூறப்படுகிறது. பாரதத்தில் தூய்மை, சுகம், அமைதி, செல்வம் அனைத்தும் இருந்தது. தூய்மை இல்லை என்றால் அமைதியும் இல்லை, சுகமும் இல்லை. அமைதிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். காடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்குக் கூட அமைதி இல்லை. ஏனென்றால், பாபாவையும் அறியவில்லை. தன்னை ஆத்மா என்றும், இது என்னுடைய உடல் என்றும் அறியவில்லை. இதன் மூலமாக காரியங் களை செய்ய வேண்டி இருக்கிறது. என்னுடைய சுய தர்மமோ அமைதி ஆகும். இது சரீரத்தின் உறுப்பு ஆகும். ஆத்மாக்களாகிய நாம் நிர்வாணதாமம் அல்லது பரந்தாமத்தின் வாசிகள் என்பது கூட ஆத்மாவிற்குத் தெரியவில்லை. இந்த கர்ம சேத்திரத்தில் நாம் உடலை ஆதாரமாக எடுத்து நடிப்பை நடிக்கிறோம். அமைதியின் மாலை கழுத்தில் இருக்கிறது. ஆனால் வெளியில் சென்று ஏமாந்து கொண்டிருக்கிறோம். மனதிற்கு எப்படி அமைதி கிடைக்கும்? எனக் கேட்கிறார்கள். ஆத்மாவில் தான் மனம் புத்தி இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆத்மா பரம்பிதா பரமாத்மாவின் வாரிசு ஆகும். அவர் அமைதியின் கடல் நாம் அவருடைய வாரிசுகள். இப்போது முழு உலகத்திலும் அசாந்தி இருக்கிறது அல்லவா? அனைவரும் அமைதி வேண்டும் என கூறுகிறார்கள். இப்போது முழு உலகத்திற்கும் அதிபதி ஒருவரே. அவரை சிவாய நமஹ என்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். சிவன் யார் இதையும் எந்த மனிதர்களும் அறியவில்லை. பூஜையும் செய்கிறார்கள். சிலர் தன்னையே சிவோஹம் என கூறிக் கொள்கிறார்கள். அட, சிவன் ஒரேயொரு தந்தை அல்லவா! மனிதர்கள் தன்னை சிவன் என கூறிக் கொள்கிறார்கள். இது மிகப் பெரிய பாவம் ஆகும். சிவனுக்குத் தான் பதீத பாவனர் எனக் கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கோ, அல்லது வேறு எந்த மனிதர்களையும் பதீத பாவனர் எனக் கூற முடியாது. சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவரே ஆவார். மனிதர்கள் மனிதர் களை பரிசுத்தமாக்க முடியாது. ஏனென்றால் முழு உலகத்திலும் கேள்வி இருக்கிறது அல்லவா? சத்யுகம் எப்போது இருந்ததோ அப்போது பாரதம் தூய்மையாக இருந்தது. இப்போது பதீதமாகி விட்டது என பாபா கூறுகின்றார். எனவே, யார் முழு சிருஷ்டியையும் தூய்மையாக மாற்றுகிறாரோ அவரை நினைக்க வேண்டும். மற்றபடி இதுவே, பதீத உலகம் ஆகும். மகான் ஆத்மா என்று யாரைக் கூறுகிறார்களோ, அப்படி யாரும் இல்லை. பாரலௌகீக தந்தையை அறியவில்லை. பாரதத்தில் சிவஜெயந்தி போற்றப்படுகிறது என்றால் நிச்சயமாக பாரதத்தில் தான் பதீதர்களை பாவனமாக மாற்றுவதற்காக வந்திருப்பார். நான் சங்கமத்தில் வருகிறேன். அதற்கு கும்ப மேளா (மகா மகம்) எனக் கூறப் படுகிறது என பாபா கூறுகிறார். அந்த தண்ணீரினுடைய கடல் மற்றும் நதியினுடைய கும்பம் கிடையாது. ஞானக்கடல் பதீத பாவனர் பாபா வந்து அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக மாற்றுகிறார். இதற்கு (சந்திப்பு) தான் கும்பம் எனக் கூறப்படுகிறது. பாரதம் சொர்க்கமாக இருந்தபோது ஒரேயொரு தர்மம் தான் இருந்தது என அறிகிறீர்கள். சத்யுகத்தில் சூரிய வம்சத்தின் இராஜ்யம் இருந்தது. பிறகு திரேதா வில் சந்திர வம்சம், இராமர் இராஜா, இராமர் பிரஜா..... என்று இதனுடைய மகிமை இருக்கிறது. திரேதாவிற்கே இத்தனை மகிமை இருக்கிறது என்றால் சத்யுகத்திற்கு அதை விட அதிகமாக இருக்கும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. பரிசுத்தமாக ஜீவ ஆத்மக்கள் இருந்தன. மீதம் உள்ள மற்ற அனைத்து தர்மங்களின் ஆத்மாக் கள் நிர்வாண தாமத்தில் இருந்தனர். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? இதையும் எந்த மனிதரும் அறியவில்லை. ஆத்மா இவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறது. இதில் 84 பிறவிகளின் பாகம் நிறைந்திருக்கிறது. 84 இலட்சம் பிறவிகள் இருக்க முடியாது. 84 இலட்சம் பிறவிகளில் கல்ப கல்பமாக சுழன்றுக் கொண்டே இருக்க வேண்டும். இது இவ்வாறு நடக்காது. இருப்பதே 84 பிறவிகளின் சக்கரம் ஆகும். அதுவும் அனைவருக்கும் கிடையாது. யார் முதலில் இருந்தார்களோ அவர்கள் இப்போது பின்னால் இருக்கின்றனர். பிறகு அவர்கள் முதலில் போவார்கள். பின்னால் வரக் கூடிய அனைத்து ஆத்மாக்களும் நிர்வாண தாமத்தில் வசிக்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் பாபா புரிய வைக்கிறார். அவருக்குத் தான் உலகத்தின் ஆல்மைட்டி அத்தாரிட்டி எனக் கூறப்படுகிறது.

நான் வந்து பிரம்மா மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்கள், கீதை போன்றவற்றின் சாரத்தைப் புரிய வைக்கிறேன் என பாபா புரிய வைக்கிறார். இது அனைத்தும் பக்தி மார்க்கத் தின் கர்ம காண்டத்தின் சாஸ்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் வந்து எப்படி வேள்வி யைப் படைத்தேன் என்ற விஷயங்கள் சாஸ்திரங்களில் இல்லை. இதனுடைய பெயரே இராஜஸ்வ அஸ்வ மேத ருத்ர ஞான வேள்வியாகும். ருத்திரன் சிவன் ஆவார். இதில் அனைத்தும் அர்ப்பணம் ஆக வேண்டும். தேகம் உட்பட எந்தெந்த உறவினர் நண்பர் போன்றோர் இருக் கிறார்களோ அவர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள் என பாபா கூறுகின்றார். ஒரே ஒரு தந்தையை மட்டும் நினையுங்கள். நான் சன்னியாசி, கிறிஸ்தவன்..... இது அனைத்தும் தேகத்தின் தர்மம் ஆகும். இவற்றை விட்டு என்னை மட்டும் நினையுங்கள். நிராகாரர் வருகிறார் என்றால் நிச்சயமாக உடலில் அல்லவா? நான் உடலை ஆதாரமாக எடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறுகின்றார். நான் தான் வந்து இந்த உடல் மூலமாக புது உலகத்தை உருவாக்குகிறேன். பழைய உலகத்தின் அழிவு எதிரிலேயே நிற்கிறது. பிரஜா பிரதா பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்று பாடப்படுகிறது. சூட்சும வதனம் என்பது ஃபரிஸ்தாக்களின் உலகம் ஆகும். அங்கே எலும்பு சதை போன்றவை இருக்காது. அங்கே சூட்சும உடல் இருக்கிறது. வெள்ளை வெளேர் என்று பேய் போன்று இருக்கும். எந்த ஆத்மாவிற்கு உடல் இல்லையோ அது அலைந்து கொண்டு இருக்கிறது. நிழல் போன்ற உடல் தென்படுகிறது. அதைப் பிடிக்க முடியாது. குழந்தைகள் நினைத்தால் நினைவின் மூலமாக உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும் என்று பாபா கூறுகின்றார். நிறைய போய் விட்டது. சிறிதே இருக்கிறது...... என்று பாடபட்டிருக் கிறது. இப்போது சிறிது நேரமே இருக்கிறது. எவ்வளவு முடியுமோ தந்தையை நினைத்தால் கடைசி நேரத்தில் அவருடைய நினைவு இருக்கும். கீதையில் ஒன்றிரண்டு வார்த்தைகள் சரியாக எழுதி இருக்கிறார்கள். மாவில் உப்பு போடும் அளவிற்குத் தான் சில வார்த்தைகள் உண்மையாக இருக்கிறன. முதலில் பகவான் நிராகாரர் என்பது தெரிய வருகிறது. நிராகார் பகவான் எப்படி பேசுவார்? சாதாரண உடலில் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். குழந்தை களே! என்னை நினையுங்கள். ஒரு தர்மத்தை உருவாக்கி மற்ற தர்மங்களை அழிப்பதற்காக நான் வருகிறேன். இப்போது பல தர்மங்கள் இருக்கின்றது. இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு ஒரேயொரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. அனைத்து ஆத்மாக்களும் அவரவர் கணக்கு வழக்கை முடித்து விட்டுப் போகிறார்கள். அதற்கு மரணத்தின் தருணம் என்று கூறப்படுகிறது. அனைவரின் துக்கங்களின் கணக்கு வழக்கும் முடிவடைகிறது. பாவங்களின் காரணமாக துக்கம் கிடைக்கிறது. பாவங்களின் கணக்கு முடிவடைந்த பின்பு புண்ணியம் ஆரம்பம் ஆகிறது. ஏதேனும் பொருளை சுத்தமாக்குவதற்கு தீயில் எரிக்கப்படுகிறது. வேள்வி படைக்கும் போதும் அதில் நெருப்பை எரிய வைகிறார்கள். இது ஸ்தூலமான வேள்வி கிடையாது. இது ருத்ர ஞான யாகம் ஆகும். கிருஷ்ண ஞான யாகம் எனக் கூறுவதில்லை. கிருஷ்ணர் எந்த வேள்வியையும் படைக்கவில்லை. கிருஷ்ணர் இளவரசனாக இருந்தார். பொதுவாக ஆபத்துக்கள் நடக்கும் போது வேள்வி படைக்கப் படு கிறது. இச்சமயம் அனைத்து பக்கமும் ஆபத்துக்கள் இருக்கின்ற அல்லவா? நிறைய மனிதர்கள் ருத்ர யாகத்தைக் கூட படைக்கிறார்கள். ருத்ர ஞான வேள்வியைப் படைப்பதில்லை. அதை ருத்திரன் பரம்பிதா பரமாத்மாவே வந்து படைக்கிறார். இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் அனைத்தும் முடிந்து போகும் என்று கூறுகிறார்கள். பாபா வந்திருக்கிறார். வேள்வியையும் படைத்திருக்கிறார். இராஜ்யமும் உருவாகிவிடும். அனைவரும் தூய்மையாகி விடுவார்கள். உடனடியாக அனை வரும் தூய்மையாக மாட்டார்கள். கடைசி வரை யோகா செய்து கொண்டே இருங்கள். இது யோகத்தின் ரேஸ் ஆகும். பாபாவை எவ்வளவு அதிகமாக நினைக்கிறீர்களோ அவ்வளவு ஓட்டம் பிடித்து ருத்ரனின் கழுத்தில் மாலையாகிறீர்கள். பிறகு விஷ்ணுவின் கழுத்து மாலையாவீர்கள். முதலில் ருத்ரனின் மாலை பிறகு விஷ்ணுவின் மாலை. முதலில் பாபா அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு நரனிலிருந்து நாராயணனாக பெண்ணிலிருந்து லஷ்மியாகி இராஜ்யம் செய்கிறார்கள். அப்படி என்றால் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் உருவாகிக் கொண்டிருக் கிறது. உங்களுக்கு பாபா இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். 5000 வருடங் களுக்கு முன்பு எப்படி கற்றுக் கொடுத்தாரோ அப்படியே மீண்டும் கல்பத்திற்குப் பிறகு கற்பிக்க வந்திருக்கின்றார். சிவஜெயந்தி மற்றும் சிவராத்திரி கூட கொண்டாடுகின்றார்கள். இரவு என்றால் கலியுக பழைய உலகின் முடிவு. புது உலகத்தின் ஆரம்பம் ஆகும். சத்யுகம் திரேதா, பகல் ஆகும். துவாபர் கலியுகம் இரவாகும். எல்லையற்ற பகல் பிரம்மாவினுடையது. பிறகு பிரம்மாவினுடைய எல்லையற்ற இரவு கிருஷ்ணரின் இரவு பகல் என்று சொல்லப்படவில்லை. கிருஷ்ணருக்கு ஞானம் இல்லை. பிரம்மாவிற்கு சிவபாபாவிற்கு ஞானம் கிடைக்கிறது. மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு இவரிடமிருந்து கிடைக்கிறது. சிவபாபா உங்களுக்கு பிரம்மாவின் உடலிலிருந்து ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களை திரிகால தர்ஷியாக மாற்றுகிறார். மனித சிருஷ்டியில் ஒருவர் கூட திரிகால தர்ஷியாக இருக்க முடியாது. ஒரு வேளை இருந்தால் ஞானம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுழல்கிறது. ஒரு போதும் யாரும் ஞானத்தை அளிக்க முடியாது.

அனைவருக்கும் பகவான் ஒருவரே. கிருஷ்ணரை யாரும் பகவான் என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் இராஜ குமாரன் ஆவார். இராஜகுமாரன் பகவான் ஆவாரா? ஒரு வேளை அவர் இராஜ்ஜியத்தை செய்கிறார் என்றால் பிறகு இழக்க வேண்டி இருக்கும். உங்களை உலகத்திற்கு அதிபதியாக மாற்றுகிறேன். பிறகு நான் நிர்வாணதாமத்தில் சென்று வசிக்கிறேன் என பாபா கூறுகிறார். பிறகு துக்கம் ஆரம்பம் ஆகும் போது என்னுடைய நடிப்பும் ஆரம்பம் ஆகிறது. நான் வழக்குகளைக் கேட்கிறேன். ஓ, இரக்க மனம் உடையவரே என என்னைக் கூறுகிறார்கள். பக்தி கூட முதலில் தூய்யைமான அதாவது ஒரு சிவனை பூஜிக்கிறார்கள். பிறகு தேவதைகளை வணங்க ஆரம்பிக்கிறார்கள். இப்போதோ தூய்மையற்ற பக்தி ஆகி விட்டது. எப்போதிலிருந்து பூஜை ஆரம்பம் ஆகிறது என்பது பூஜாரிகளுக்குத் தெரியவில்லை. சிவன் அல்லது சோமநாத் ஒரே விஷயம் ஆகும். சிவன் நிராகார் ஆவார். சோமநாத் என்று ஏன் கூறுகிறோம்?. ஏனென்றால் சோமநாத் பாபா குழந்தைகளுக்கு ஞான அமிர்தத்தைக் குடிக்க வைத்துள்ளார். நிறைய பெயர்கள் இருக்கின்றன. பபுல்நாத் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் கருவேல மரத்தின் முட்களை மலராக மாற்றக் கூடியவர், அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல் ஆவார். அவரை மீண்டும் சர்வ வியாபி என்று கூறுவது நிந்தித்தல் ஆகிறது அல்லவா! சங்கமத்தின் நேரம் நடக்கும் போது ஒரு முறை தான் நான் வருகிறேன். பக்தி மார்க்கம் முடிவடையும் போது தான் நான் வருகிறேன் என பாபா கூறுகிறார். இது நியமம் ஆகும். நான் வருவதே ஒரு முறை தான். தந்தை ஒருவரே. அவதாரமும் ஒன்றே. ஒரே முறை வந்து அனைவரையும் தூய்மையான இராஜயோகியாக மாற்றுகிறேன். உங்களுடையது இராஜயோகம் ஆகும். சன்னியாசிகளுடையது ஹடயோகம் ஆகும். இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியாது. இந்த ஹடயோகிகளிடம் கூட பாரதத்தை காப்பபாற்றக் கூடிய ஒரு தர்மம் இருக்கிறது. தூய்மை வேண்டும் அல்லவா? பாரதம் 100 சதவீதம் தூய்மையாக இருந்தது. இப்போது அழுக்காகி விட்டது. அப்போது தான் எங்களை தூய்மையாக்குங்கள் எனக் கூறுகிறார்கள். சத்யுகம் என்பது தூய்மையான ஜீவ ஆத்மாக்களின் உலகம் ஆகும். இப்போது இல்லற தர்மம் அழுக்காக இருக்கிறது. சத்யுகத்தில் இல்லற தர்மம் தூய்மாக இருந்தது. இப்போது மீண்டும் அதே தூய்மையான இல்லற தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு தந்தை தான் அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தி வழங்கும் வள்ளல் ஆவார். மனிதர்கள் மனிதர்களுக்கு ஜீவன் முக்தியை ஒருபோதும் வழங்க முடியாது.

நீங்கள் ஞானக் கடல் தந்தையின் குழந்தைகள். நீங்கள் பிராமணர்கள் உண்மையிலும் உண்மையான யாத்திரை செய்விப்பவர்கள். மற்ற அனைவரும் பொய்யான யாத்திரையை செய்விப்பவர்கள். நீங்கள் டபுள் அகிம்சையாளர்கள். எந்த இம்சையும் கொடுப்பதில்லை. சண்டை போடுவதும் இல்லை. காம விகாரத்தில் ஈடுபடுவதும் இல்லை. காமத்தை வெற்றி அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. விகாரங்களை வெற்றி கொள்ள வேண்டும். நீங்கள் பிரம்மா குமார் குமாரிகள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறீர்கள். நீங்கள் உங்களுக்குள் சகோதரன் சகோதரி ஆவீர். நாம் இப்போது நிராகார் பகவானின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதரன் சகோதரன் ஆவீர். பிறகு பிரம்மாவின் குழந்தைகள் என்றால், நிச்சயமாக நிர்விகாரி ஆக வேண்டும் அல்லவா? அதாவது உலகத்தின் இராஜ்ய பதவி உங்களுக்கு கிடைக்கிறது. இது பல பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாகுங்கள். அப்போது உயர்ந்த பதவி கிடைக்கும். இப்போது பாபா மூலமாக நீங்கள் மிகவும் புத்திசாலி ஆகிறீர்கள். சிருஷ்டியின் ஞானம் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நீங்கள் சுய தரிசன சக்கரதாரி ஆகிவிட்டீர்கள். சுயம் ஆத்மாவிற்கு தரிசனம் ஆகிறது என்றால் பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து ஞானம் கிடைக்கிறது. அவரைத் தான் ஞானம் நிறைந்தவர் எனக் கூறுகிறார்கள். மனித சிருஷ்டியின் விதை வடிவமாக இருக்கிறார். சைத்தன்யமாக இருக்கிறார். இப்போது ஞானம் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். ஒரேயொரு விதை தான் இருக்கிறது. இதையும் அறிகிறீர்கள். விதையிலிருந்து மரம் எப்படி தோன்றுகிறது?. இது தலைகீழான மரம் ஆகும். விதை மேலே இருக்கிறது. முதன் முதலில் தெய்வீக மரம், இஸ்லாமியம், பௌத்தம்..... வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகிறது. இந்த ஞானம் இப்போது உங்களுக்கு கிடைக்கிறது. வேறு யாரும் கொடுக்க முடியாது. இப்போது நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தின் ஆரம்பத்தில் சாஸ்திரங்கள் கிடையாது. எவ்வளவு எளிதான 5000 வருடங்களின் கதையாக இருக்கிறது அல்லவா? நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நேரம் குறைவாக இருக்கிறது. நிறைய போய்விட்டது. சிறிதே இருக்கிறது.... ஆகவே மீதம் இருக்கின்ற சுவாசத்தை பாபாவின் நினைவில் அர்ப்பணிக்க வேண்டும். பழைய பாவத்தின் கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டும்.

2. அமைதி சுய தர்மத்தில் நிலைத்திருப்பதற்கு நிச்சயம் தூய்யைமாக வேண்டும். எங்கே தூய்மை இருக்கிறதோ அங்கே அமைதி இருக்கிறது. என்னுடைய சுய தர்மமே அமைதி, நான் அமைதிக் கடல் பாபாவின் வாரிசு...... இதை அனுபவம் செய்ய வேண்டும்.

வரதானம்:
பணிவின் விசேத்தன்மை மூலம் எளிதாக வெற்றியை அடையக்கூடிய அனைவருடைய மரியாதைக்கும் உரியவர் ஆகுக.

அனைவரிடமிருந்தும் மரியாதையை பெறுவதற்கான எளிதான சாதனம் - பணிவுத் தன்மை யாகும். எந்த ஆத்மாக்கள் தன்னை சதா பணிவுத் தன்மையின் விசேத்தன்மையோடு நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எளிதாக வெற்றியை அடைகிறார்கள். பணிவுடைய வராக ஆவது தான் சுயமரியாதையுடன் இருப்பதாகும். பணிவுடையவர் ஆவது என்றால் தலைகுனிவ தில்லை. ஆனால் அனைவரையும் தனது விசேஷத்தன்மை மற்றும் அன்பினால் தலை வணங்க வைப்பது. தற்சமயத்திற்கேற்றவாறு சதா மற்றும் எளிதாகவே வெற்றியை அடைவதற் கான முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஒவ்வொரு காரியத்திலும், சம்மந்தம் மற்றும் தொடர்பில் பணிவாக இருக்கக் கூடியவர்கள் தான் வெற்றி இரத்தினம் ஆகிறார்கள்.

சுலோகன்:
ஞானத்தின் சக்தியை தாரணை செய்து விட்டீர்கள் என்றால் தடைகள் போர் செய்வதற்கு பதிலாக தோல்வியை அடைந்து விடும்.