ஓம் சாந்தி.
இது பாரத மாதாக்களின் மகிமையாகும். எப்படிப் பரமபிதா பரமாத்மா
சிவனின் மகிமை உள்ளது. ஒரே ஒரு மாதாவின் மகிமை மட்டுமே இருக்க
முடியாது. ஒருவரே அனைத்தும் செய்ய முடியாது. அவசியம் சேனை
வேண்டும். சேனை இல்லாமல் வேலை எப்படி நடக்கும்.? சிவபாபா ஒருவர்
ஆவார். அவர் ஒருவர் இல்லையென்றால் மாதாக்களும் இருக்க
மாட்டார்கள். குழந்தைகளும் இருக்க மாட்டார்கள். பிரம்மா குமார்
மற்றும் குமாரிகளும் இருக்க மாட்டார்கள். பெரும்பான்மையோர்
தாய்மார்களாக இரு கிறார்கள். எனவே தாய்மார் களுக்குத் தான்
மகிமை கொடுக்கப்பட்டுள்ளது. பாரத மாதாக்கள், சிவசக்தி குப்த
சேனையில் இருப்பவர்கள் மேலும் அஹிம்சகர்கள் ஆவார்கள். எந்த வொரு
விதமான இம்சையும் செய்வதில்லை. இம்சை இரண்டு விதமானதாக
இருக்கிறது. ஒன்று காம வாளை பிரயோகிப்பது, மற்றொன்று குண்டு
ஆகியவைகளை வீசுவது, கோபப்படுவது, கொல்வது ஆகியவை. இச்சமயத்தில்
இருக்கும் ஸ்தூல சேனையினர் அனை வருமே இரண்டு ஹிம்சையும்
செய்கிறார்கள். தற்காலத்தில் தாய்மார்களுக்குக் கூடத்
துப்பாக்கி ஆகியவற்றைப் பயன்படுத்த கற்பிக்கிறார்கள். அது
ஸ்தூல சேனையின் தாய்மார்கள். மேலும் இது ஆன்மீக சேனையின்
தெய்வீக சம்பிர தாயத்தின் தாய்மார்கள். அவர்கள் எவ்வளவு ட்ரில்
ஆகியவை கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு பொழுதும் அந்த
மைதானத் திற்குச் சென்று கூட இருக்க மாட்டீர்கள். அவர்கள்
நிறைய உழைக்கிறார்கள். காம விகாரத்தில் கூடப் போகிறார்கள்.
திருமணம் செய்யாமல் இருப்பவர்களாக இருப்பது மிகவும் அரிதாக
உள்ளது. அந்த இராணுவத்தில் கூட நிறையக் கற்றுக் கொண்டே
இருக்கிறார்கள். சிறு சிறு குழந்தைகளுக்கும் கற்பிக்கிறார்கள்.
அதுவும் படையாகும். இதுவும் படையாகும். சேனை பற்றியோ கீதையில்
நன்றாகவே விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் என்ன
என்பதையோ நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் எவ்வளவு
மறைமுகமாக இருக்கிறோம். சிவசக்தி சேனை என்ன செய்கிறார்கள்?
உலகத்திற்கு அதிபதி எப்படி ஆகிறார்கள்? இதற்கு யுத்த ஸ்தலம்
என்று கூறப்படுகிறது. உங்களுடைய யுத்த மைதானம் கூட மறைமுகமாக
உள்ளது. மைதானம் என்று இந்த நாடக மேடைக்குக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் தாய்மார்கள் போர்க்களத்தில் சென்று கொண்டு
இருக்கவில்லை. இப்பொழுது இங்கிருந்து முழுமையாக
ஒப்பிடப்படுகிறது. இரண்டு சேனைகளிலும் தாய்மார்கள்
இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையோர் ஆண்களினு டையது ஆகும்.
இங்குப் பெரும்பான்மையோர் தாய்மார்களினுடையது ஆகும். வேற்றுமை
இருக்கிறது அல்லவா? ஞான மார்க்கம் மற்றும் பக்தி மார்க்கத்
தினுடையது. இது கடைசி வேற்றுமை யாகும். சத்யுகத்தில்
வேற்றுமையின் விஷயம் இருக்காது. பாபா வந்து வேற்றுமை பற்றிக்
கூறுகிறார். பிராமணர்கள் என்ன செய்கிறார்கள், மேலும்
சூத்திரர்கள் என்ன செய்கிறார்கள்? இருவருமே இங்குப்
போர்க்களத்தில் இருக்கிறார்கள். சத்யுகம் அல்லது கலியுகத்தின்
விஷயம் கிடையாது. இது சங்கமயுகத்தின் விஷயமாகும்.
பாண்டவர்களாகிய நீங்கள் சங்கமயுகத்தினர் ஆவீர்கள். கௌரவர்கள்
கலியுகத்தினர் ஆவார்கள். அவர்கள் கலியுகத்தின் காலத்தை மிகவும்
நீண்டதாக ஆக்கி விட்டுள்ளார்கள். இது காரணமாகச் சங்கமம் பற்றி
அவர்களுக்குக் தெரியவே தெரியாது. மெல்ல மெல்ல இந்த ஞானத்தைக்
கூட உங்கள் மூலமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே ஒரு மாதாவின்
மகிமை மட்டும் அல்ல. இது சக்தி சேனையாகும். உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார். மேலும் நீங்கள் முந்தைய
கல்பத்தினுடைய அதே சேனை ஆவீர்கள். இந்தப் பாரதத்தை தெய்வீக
இராஜஸ்தானமாக ஆக்குவது உங்களுடைய வேலை யாகும்.
முதலில் நாம் சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு சந்திர
வம்சத்தினர், வைசிய வம்சத்தினர் ஆனோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். ஆனால் மகிமை சூரிய வம்சத் தினருக்குத் தான்
செய்வோம். நாம் முதலில் சூரிய வம்சத்தினராக அதாவது
சொர்க்கத்தில் வர வேண்டும் என்பதற்காகத் தான் அப்பேர்ப்பட்ட
முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சத்யுகத்திற்குத் தான்
சொர்க்கம் என்று கூறப்படுகிறது. திரேதாவை உண்மையில் சொர்க்கம்
என்று கூறப்படுவதில்லை. இன்னார் சொர்க்கத்தை அடைந்து விட்டார்
என்றும் கூறுகிறார்கள். இன்னார் திரேதாவில் இராமர் சீதையின்
இராஜ்யத்தில் சென்றார் என்று அப்படி ஒன்றும் கூறுவதில்லை.
வைகுண்டத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் இராஜ்யம் இருந்தது என்பதைப்
பாரதவாசி கள் அறிந்துள்ளார்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரை
துவாபரத்திற்கு எடுத்து சென்று விட்டார்கள். மனிதர்களுக்குச்
சத்தியத்தைப் பற்றித் தெரியவே இல்லை. சத்தியதைக் கூறும் சத்குரு
யாரும் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. உங்களுக்குக் கிடைத்துள்
ளார். அவர் அனைத்தையும் உண்மையாகக் கூறுகிறார். மற்றும்
உண்மையானவராக ஆக்குகிறார். குழந்தைகளுக்குக் கூறுகிறார்,
குழந்தைகளே! நீங்கள் ஒரு பொழுதும் பொய், கபடம் கொள்ளாதீர்கள்.
உங்களுடையது எதுவும் மறைந்திருக்க முடியாது. யார் எப்படிக்
கர்மம் செய்கிறார்களோ அவ்வாறு பெறுகிறார்கள். தந்தை நல்ல கர்மம்
கற்பிக்கிறார். இறைவனிடம் யாருடைய விகர்மமும் மறைந்து இருக்க
முடியாது. வினைப்பயன் கூட மிகவும் கடுமையானதாக இருக்கும். இது
உங்களுடைய கடைசிப் பிறவி என்றாலும் கூடத் தண்டனை வாங்க வேண்டி
வரும். ஏனெனில் அநேக பிறவிகளின் கணக்கு வழக்கு முடிக்க வேண்டி
உள்ளது. காசி கல்வெட்டு என்று காசியில் தலையை வெட்டிக் கொள்
கிறார்கள் என்றால் உயிர் பிரியும் வரையும் கஷ்டத்தை அனுபவிக்க
வேண்டி வரும் என்று பாபா புரிய வைத்துள்ளார். நிறையக்
கஷ்டத்தைச் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஒன்று, நோய்
ஆகியவற்றின் வினைப்பயன்: மற்றொன்று, விகர்மங்களின் தண்டனை.
அந்த நேரத்தில் எதுவும் பேச முடியாது. கத்திக் கொண்டே
இருப்பார்கள். ஐயோ! ஐயோ! என்று கதறுவார்கள். பாவ ஆத்மாக்களுக்கு
இங்கேயும் தண்டனை அங்கேயும் தண்டனை கிடைக்கிறது. சத்யுகத்தில்
பாவங்கள் ஏற்படுவதே இல்லை. நீதி மன்றம் கூட இருக்காது.
நீதிபதிகளும் இருக்க மாட்டார்கள். கர்ப்ப சிறையின் தண்டனையும்
இருக்காது. அங்குக் கர்ப்ப மாளிகை இருக்கும். ஆல இலையில்
கிருஷ்ணர் கட்டை விரலை சூப்பிக் கொண்டு வந்தார் என்றும்
காண்பிக்கிறார்கள். அது கர்ப்ப மாளிகையின் விஷயமாகும்.
சத்யுகத்தில் குழந்தைகள் மிகவும் ஓய்வாகப் பிறப்பார்கள். முதல்
இடை கடை சுகமே சுகமாகும். இந்த உலகத்தில் முதல் இடை கடை துக்கமே
துக்கமாகும். இப்பொழுது நீங்கள் சுகமான உலகத்தில் செல்வதற்காகப்
படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மறைமுகமான சேனை விருத்தி
அடைந்து கொண்டே இருக்கும். எந்த அளவிற்கு அநேகருக்கு வழி
கூறுவார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். நினைவில்
உழைப்புச் செய்ய வேண்டும். கிடைத்திருந்த எல்லையில்லாத ஆஸ்தியை
இப்பொழுது இழந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். லௌகீக தந்தை பரலோகத் தந்தை இருவரையும்
நினைவு செய்கிறீர்கள். சத்யுகத்தில் ஒரே ஒரு லௌகீக தந்தையை
நினைவு செய்வார்கள். பரலௌகீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டிய
அவசியமே இல்லை. அங்குச் சுகமே சுகம் இருக்கும். இந்த ஞானம்
கூடப் பாரதவாசிகளுக்காக உள்ளது. மற்ற தர்மத்தினருக்காக இல்லை.
ஆனால் யார் மற்ற தர்மங்களில் மதம் மாறி சென்றுள்ளார்களோ அவர்கள்
வெளி யேறி வருவார்கள். வந்து யோகத்தைக் கற்றுக் கொள்வார்கள்.
யோகத்தைப் பற்றிப் புரிய வைப்பதற்காக உங்களுக்கு அழைப்புக்
கிடைக்கிறது. எனவே தயார் செய்ய வேண்டும். நீங்கள் பாரதத்தின்
பழைமையான யோகத்தை மறந்து விட்டுள்ளீர்களா என்று புரிய வைக்க
வேண்டும். மன்மனாபவ என்று பகவான் கூறுகிறார். நிராகாரி
குழந்தைகளே! என்னை நினைவு செய்தீர்கள் என்றால், நீங்கள்
என்னிடம் வந்து விடுவீர்கள் என்று பரமபிதா பரமாத்மா கூறுகிறார்.
ஆத்மாவாகிய நீங்கள் இந்த உறுப்புக்கள் மூலமாகக் கேட்கிறீர்கள்.
நான் ஆத்மா இந்த உறுப்புக்களின் ஆதாரத்தில் கேட்கிறேன். நான்
அனைவரின் தந்தை ஆவேன். எல்லோரும் சர்வ சக்திவான் ஞானக் கடல்
சுகக்கடல்.... இது போன்ற மகிமையை எனக்காகப் பாடுகிறார்கள்.
இந்த விஷயம் கூட நன்றாக உள்ளது. சிவபரமாத்மா வின் மகிமை மற்றும்
கிருஷ்ணரின் மகிமையைக் கூறுங்கள். கீதையின் பகவான் யார் என்பதை
இப்பொழுது தீர்மானியுங்கள். இது பலத்த விஷயம் ஆகும். இது பற்றி
நீங்கள் புரிய வைக்க வேண்டும். கூறுங்கள் நாங்கள் அதிகமான நேரம்
எடுக்க மாட்டோம். ஒரு நிமிடம் கொடுத்தால் கூடச் சரி தான்.
பகவான் கூறுகிறார், மன்மனாபவ - என் ஒருவனை நினைவு செய்யுங்கள்,
அப்பொழுது சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். இதை யார் கூறினார்?
நிராகார பரமாத்மா பிரம்மாவின் உடல் மூலமாகப் பிராமணக்
குழந்தைகளுக்குக் கூறினார். இதற்குத் தான் பாண்டவ சேனை என்றும்
கூறுகிறார்கள். ஆன்மீக யாத்திரையில் அழைத்துச் செல்வதற்கான
வழிகாட்டிகள் நீங்கள் ஆனீர்கள். பாபா கட்டுரை கொடுக்கிறார். அதை
எப்படிப் பிறகு சீரியதாக (ழ்ங்ச்ண்ய்ங்) ஆக்கி, புரிய வைக்கலாம்
என்பது பற்றிக் குழந்தைகள் சிந்தனை செய்ய வேண்டும். தந்தையை
நினைவு செய்வதால் தான் முக்தி, ஜீவன் முக்தியின் ஆஸ்தி
கிடைக்கும். நாம் பிரம்மாகுமார் மற்றும் பிரம்மாகுமாரிகள் ஆவோம்.
உண்மையில் நீங்களும் ஆவீர்கள். ஆனால் நீங்கள் தந்தையை அடையாளம்
கண்டு கொள்ளவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பரமபிதா
பரமாத்மா மூலமாகத் தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாரதத்தில் தான் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. சிறிய
சிறிய குழந்தைகள் முழங்கும் குரலில் பெரிய பெரிய சபைகளில்
புரிய வைத்தார்கள் என்றால், எவ்வளவு தாக்கம் ஏற்படும். ஞானமோ
இவர்களிடம் உள்ளது என்று புரிந்து கொள்வார்கள். இவர்கள் பகவானை
அடைவதற்கான வழியைக் கூறுகிறார்கள். ஹே ஆத்மாக்களே! என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகி விடும்
என்று நிராகார பரமாத்மா தான் கூறுகிறார். கங்கை ஸ்நானம்,
தீர்த்த யாத்திரை ஆகியவற்றைப் பிறவிதோறும் செய்து செய்து
பதீதமாகவே (தூய்மையற்றவர் களாகவே) ஆகி வந்துள்ளார்கள்.
பாரதத்தினுடையது தான் ஏறும் கலை மற்றும் இறங்கும் கலையாகும்.
தந்தை இராஜயோகம் கற்பித்து ஏறும் கலை அதாவது சொர்க்கத்திற்கு
அதிபதி ஆக்குகிறார். பின் மாயை இராவணன் நரகத்திற்கு அதிபதியாக
ஆக்கி விடுகிறது என்றால், பின் இறங்கும் கலை என்று கூறுவார்கள்
அல்லவா? பல பிறவிகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும் கலை ஆகிக்
கொண்டே போகிறது. ஞானம் என்பது ஏறும் கலை. பக்தி என்பது இறங்கும்
கலை. பக்திக்குப் பின்னால் பிறகு பகவான் கிடைப்பார் என்று
கூறவும் செய் கிறார்கள். எனவே பகவான் தான் ஞானம் அளிப்பார்
அல்லவா? அவரே ஞானக்கடல் ஆவார். ஞான மழையைச் சத்குரு அளிக்கும்
பொழுது அறியாமை என்ற இருள் அழிந்து போகிறது. சத்குருவோ ஒரு
பரமபிதா பரமாத்மா தான் ஆவார். மகிமை சத்குருவினுடையதே அன்றிக்
குருவினுடையது அல்ல. குருமார்களோ ஏராளம் உள்ளார்கள். சத்குருவோ
ஒருவரே ஆவார். அவரே சத்கதி அளிக்கும் வள்ளல், பதீத பாவனர்,
லிபரேட்டர் (விடுவிப்பவர்) ஆவார். இப்பொழுது குழந்தைகளாகிய
நீங்கள் பகவானுவாச் - பகவான் கூறுவதைக் கேட்கிறீர்கள். என்
ஒருவனை நினைவு செய்தால் ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்தி தாமம்
சென்று விடுவீர்கள். அது சாந்திதாமம் ஆகும். அடுத்தது சுகதாமம்
ஆகும். மேலும் இது துக்கத்தாமம் ஆகும். இந்த அளவு கூடப்
புரிந்து கொள்வ தில்லையா என்ன? தந்தை தான் வந்து பதீதமான (தூய்மையற்ற)
உலகத்தைப் பாவன உலகமாக ஆக்குகிறார்.
எல்லையில்லாத சுகத்தை அளிப்பவர் எல்லையில்லாத தந்தையே ஆவார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லையில்லாத துக்கத்தை
இராவணன் கொடுக்கிறான். அவன் பெரிய எதிரி ஆவான். இராவண
இராஜ்யத்திற்குப் பதீதமான இராஜ்யம் என்று ஏன் கூறப்படு கிறது
என்பது கூட யாருக்குமே தெரியாது. இப்பொழுது தந்தை முழு
இரகசியத்தை நமக்குப் புரிய வைக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும்
இந்த 5-5 விகாரங்கள் பிரவேசமாகி உள்ளது. எனவே 10 தலையுடைய
இராவணனை உருவாக்குகிறார்கள். இந்த விஷயங்களை வித்வான்கள்
பண்டிதர்கள் ஆகியோர் அறியாமல் உள்ளார்கள். இராம இராஜ்யம்
எப்பொழுது முதல் எதுவரை நடக்கிறது என்பதை இப்பொழுது தந்தை
புரிய வைத்துள்ளார். இந்த எல்லையில்லாத சரித்திரம் பூகோளத்தைப்
பற்றிப் புரிய வைக்கிறார். இராவணன் பாரதத்தின் எல்லையில்லாத
எதிரி ஆவான். அவன் எவ்வளவு துர்க்கதி செய்துள்ளான். பாரதம் தான்
சொர்க்கமாக இருந்தது. அதை மறந்து விட்டுள்ளார்கள்.
குழந்தைகளே தந்தையை நினைவு செய்யுங்கள் என்று இப்பொழுது
குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையின் ஸ்ரீமத் கிடைக்கிறது. அ
மற்றும் ஆ (தந்தை மற்றும் ஆஸ்தி). பரமபிதா பரமாத்மா
சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். இராவணன் பிறகு நரகத்தின்
ஸ்தாபனை செய்கிறான். நீங்களோ சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யக்
கூடிய தந்தையை நினைவு செய்ய வேண்டும். இல்லற விவகாரங்களில்
தாராளமாக இருங்கள். திருமணம் ஆகியவற்றிற்குச் செல்லுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தையை நினைவு செய்யுங்கள்.
சரீர நிர்வாகத்திற்காகக் கர்மங்கள் செய்யும் பொழுது யாருடன்
உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதோ அவரை நினைவு செய்யுங்கள்.
அவரது வீட்டிற்குச் செல்லும் வரை நீங்கள் எல்லாக்
காரியங்களையும் செய்து கொண்டே இருங்கள். ஆனால் புத்தியினால்
தந்தையை மறக்காதீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தண்டனைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
தங்களது அனைத்து கணக்கு வழக்குகளையும் தீர்க்க வேண்டும்.
உண்மையான தந்தையிடம் எதையும் மறைக்கக் கூடாது. பொய் கபடம்
அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். நினைவு யாத்திரையில்
இருக்க வேண்டும்.
2. எப்படி தந்தை அபகாரிகள் மீதும் உபகாரம் செய்கிறாரோ, அதே
போல அனைவர் மீதும் உபகாரம் செய்ய வேண்டும். அனைவருக்கும்
தந்தையின் சத்திய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.