02.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது 21 பிறவிகளுக்காக இங்கே தான் படிப்பைப் படிக்க வேண்டும். முள்ளில் இருந்து மணமிக்க மலராக ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்வதோடு செய்விக்கவும் வேண்டும்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகளின் புத்தியின் பூட்டு வரிசைக்கிரமமாகத் திறந்து கொண்டே போகிறது?

 

பதில்:

ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கும் குழந்தைகள். பதீத-பாவனர் பாபாவின் நினைவில் இருப்பவர்கள். கல்வியைக் கற்றுதருபவரோடு யாருக்கு (யோகம்) நினைவின் தொடர்பு இருக்கிறதோ, அவர்களின் புத்தியின் பூட்டு திறந்து கொண்டே செல்கிறது. பாபா சொல்கிறார் - குழந்தைகளே, பயிற்சி செய்யுங்கள், நாம் ஆத்மா சகோதர-சகோதரன், நாம் பாபாவிடமிருந்து ஞானம் கேட்கிறோம். ஆத்ம அபிமானியாகிக் கேட்கவும் மற்றவர் களுக்கு சொல்லவும் செய்வீர்களானால் பூட்டு திறந்து கொண்டே செல்லும்.

 

ஓம் சாந்தி.

பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் சிவபாபாவின் நினைவில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. அது சாந்தி மட்டும் என்று ஆகி விடும். பிறகு சுகமும் வேண்டும் அல்லவா? நீங்கள் சாந்தியில் இருக்க வேண்டும். மேலும் சுயதரிசனச் சக்கரதாரி ஆகி இராஜ்யத்தையும் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் புருஷார்த்தம் செய்வதே நரனில் இருந்து நாராயணனாக அல்லது மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக. இங்கே எவ்வளவு தான் ஒருவரிடம் தெய்வீக குணங்கள் இருந்தாலும் அவரை தேவதா எனச் சொல்ல மாட்டார்கள். தேவதைகள் இருப்பது சொர்க்கத்தில் தான். உலகத்தில் மனிதர்களுக்கு சொர்க்கத்தைப் பற்றித் தெரியாது. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், புது உலகம் சொர்க்கம் என்றும் பழைய உலகம் நரகம் என்றும் சொல்லப் படுகின்றது. இதையும் பாரதவாசிகள் தான் அறிந்து கொண்டுள்ளனர். எந்த தேவதைகள் சத்யுகத்தில் இராஜ்யம் செய்தனரோ, அவர்களின் சித்திரங்கள் கூட பாரதத்தில் தான் உள்ளன. இது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினுடையது. பிறகு அவர்களுடைய சித்திரங்களைப் பூஜைக்காக வெளியில் எடுத்துச் செல்கின்றனர். வெளியில் எங்கே சென்றாலும் அங்கே போய்க் கோவில்களைக் கட்டுகின்றனர். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் எங்கே சென்றாலும் தங்களின் சித்திரங்களுக்குத் தான் பூஜை செய் கின்றனர். எந்தெந்த கிராமங்களின் மீது வெற்றி பெறுகின்றனரோ, அங்கே போய் சர்ச் முதலியவற்றைக் கட்டுகின்றனர். ஒவ்வொரு தர்மத்தின் சித்திரங்களும் பூஜைக்காக அவரவருக்கென்று உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் கூடத் தெரியாதிருந்தீர்கள், நாம் தான் தேவி-தேவதையாக இருந்தோம் என்று. தங்களைத் தனியாக உணர்ந்து அவர்களுக்குப் பூஜை செய்து வந்தனர். மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்கின்றனர் என்றால் நம்முடைய தர்ம ஸ்தாபகர் கிறிஸ்து, நாம் கிறிஸ்தவர்கள் அல்லது பௌத்தர்கள் என்று எண்ணுகின்றனர். இந்த ஹிந்து ஜனங்கள் தங்களின் தர்மத்தைப் பற்றி அறிந்திராத காரணத்தால் தங்களை ஹிந்து எனச் கூறிக் கொள்கின்றனர். மேலும் தேவதைகளுக்குப் பூஜை செய்கின்றனர். நாம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினர் என்பதையும் கூடப் புரிந்து கொள்வதில்லை. நாம் நம்முடைய பெரியவர்களைப் பூஜிக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஒரு கிறிஸ்துவைப் பூஜிக்கின்றனர். நமது தர்மம் எது என்று பாரதவாசிகளுக்குத் தெரியாது. அதை யார் எப்போது ஸ்தாபனை செய்திருந்தார்? பாபா சொல்கிறார், இந்த பாரதத்தின் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் எப்போது மறைந்து விடுகிறதோ, அப்போது அதை மீண்டும் ஸ்தாபனை செய்வதற்காக நான் வருகிறேன். இந்த ஞானம் இப்போது தான் உங்களுடைய புத்தியில் உள்ளது. முன்பு எதுவுமே தெரியாமல் இருந்தீர்கள். புரிந்து கொள்ளாமலே பக்தி மார்க்கத்தில் சித்திரங்களின் பூஜை செய்து கொண்டே இருந்தீர்கள். இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் பக்தி மார்க்கத்தில் இல்லை. இப்போது பிராமணகுல பூஷணர்களாகிய உங்களுக்கும் சூத்திர குலத்தினருக்கும் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. அதையும் இச்சமயம் நீங்கள் புரிந்து கொண்டிருக் கிறீர்கள். சத்யுகத்தில் புரிந்து கொள்ள மாட்டீர்கள். இச்சமயம் தான் உங்களுக்குப் புரிதல் கிடைக் கின்றது. பாபா ஆத்மாக்களுக்கு ஞானம் கொடுக்கிறார். பழைய உலகம் மற்றும் புது உலகம் பற்றி பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் தெரியும். பழைய உலகத்தில் ஏராளமான மனிதர்கள் உள்ளனர். இங்கோ மனிதர்கள் எவ்வளவு சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர்! இதுவே முள் நிறைந்த காடு. நீங்கள் அறிவீர்கள், நாமும் முள்ளாக இருந்தோம். இப்போது பாபா நம்மை மலராக மாற்றிக் கொண்டிருக்கிறார். முட்கள் இந்த மணமுள்ள மலர்களுக்கு வணக்கம் செய்கின்றனர். இந்த ரகசியத்தை இப்போது தான் நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் தான் தேவதையாக இருந்தோம். பிறகு நாம் வந்து இப்போது மணமுள்ள மலர்களாக (பிராமணர்கள்) ஆகியிருக்கிறோம். பாபா புரிய வைத்துள்ளார், இது டிராமா என்று. முன்பு இந்த டிராமா, சினிமா முதலியவை இருந்த தில்லை. இவை கூட இப்போது தான் உருவாக்கப்பட்டுள்ளன. எதற்காக உருவாக்கப் பட்டுள்ளன? ஏனென்றால் பாபா உதாரணம் சொல்வதற்கு சுலபமாக இருக்கும். குழந்தை களும் புரிந்து கொள்ள முடியும். இந்த (ஆன்மிக) விஞ்ஞானத்தையும் கூட குழந்தைகள் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா? புத்தியில் இவர்கள் அனைவரும் விஞ்ஞானத்தின் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்வார்கள். அது பிறகு அங்கே பயன்படும். உலகம் ஒன்றும் முற்றாக அழிந்து விடாது. சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்று பிறகு பிறவி எடுப்பார் கள். விமானம் முதலியவற்றையும் தயார் செய்கின்றனர். என்னென்ன பொருட்கள் அங்கே பயன்பாட்டுக்குத் தகுதி உள்ளவையாக உள்ளனவோ, அவை உருவாகின்றன. கப்பல் கட்டுகிறவர்களும் உள்ளனர். ஆனால் கப்பலோ அங்கே பயன்படாது. யாரேனும் ஞானத்தைப் பெற்றுக் கொண்டாலும் சரி, பெற்றுக் கொள்ள வில்லை என்றாலும் சரி, அந்த சம்ஸ்காரம் அங்கே உபயோகப்படாது. அங்கே கப்பல் முதலியவற்றின் அவசியமே கிடையாது. டிராமாவிலேயே இல்லை. ஆம், விமானங்கள், மின்சாரம் முதலியவற்றின் தேவை இருக்கும். அவற்றின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனர். அங்கிருந்து குழந்தைகள் கற்றுக் கொண்டு வருகின்றனர். இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் தான் உள்ளது.

 

நீங்கள் அறிவீர்கள், நாம் படிப்பதே புது உலகத்திற்காகத் தான். பாபா நமக்கு எதிர்கால 21 பிறவிகளுக்காகப் கல்வி கற்றுத் தருகிறார். நாம் சொர்க்கவாசி ஆவதற்காகப் பவித்திரமாகிக் கொண்டிருக்கிறோம். முதலில் நரகவாசியாக இருந்தோம். மனிதர்கள் சொல்லவும் செய் கின்றனர், இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று. ஆனால் நாம் நரகத்தில் உள்ளோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. புத்தியின் பூட்டு திறப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது மெது-மெதுவாகப் பூட்டு திறந்து கொண்டே செல்கிறது, நம்பர்வார். யார் ஸ்ரீமத்படி நடக்க முற்படுகிறார்களோ, மற்றும் பதீத-பாவனர் பாபாவை நினைவு செய் கிறார்களோ, அவர்களுடைய பூட்டுத் தான் திறக்கும். பாபா ஞானமும் தருகிறார், நினைவு செய்யவும் கற்றுத் தருகிறார். ஆசிரியர் இல்லையா? ஆக, ஆசிரியர் நிச்சயமாகக் கற்பிப்பார். எவ்வளவு ஆசிரியர் மற்றும் படிப்போடு யோகம் இருக்குமோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். அந்தப் படிப்பிலோ யோகம் இருக்கவே செய்கிறது. வக்கீல் கற்றுத் தருகிறார் என்று அவர்கள் அங்கே அறிந்திருக்கிறார்கள். இங்கே பாபா கற்றுத் தருகிறார். இதையும் மறந்து விடுகின்றனர். ஏனென்றால் புது விசயம் இல்லையா? தேகத்தை நினைவு செய்வதோ மிகச் சுலபம். அடிக்கடி தேகம் நினைவுக்கு வந்து விடுகின்றது. நாம் ஆத்மா என்பது மறந்து விடுகின்றது. ஆத்மாக்களாகிய நமக்கு பாபா புரிய வைக்கிறார். நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்கள். பாபாவோ தம்மை அறிந்திருக்கிறார், நாம் பரமாத்மா என்று. ஆத்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து மற்ற ஆத்மாக் களுக்கு அமர்ந்து கற்றுக் கொடுங்கள். இதை ஆத்மா காதுகளால் கேட்கிறது. சொல்பவர் பரமபிதா பரமாத்மா. அவர் சுப்ரீம் (மிக மேலான) ஆத்மா எனச் சொல்லப் படுகிறார். நீங்கள் யாருக்காவது இந்த ஞானத்தைப் புரிய வைக்கும் போது புத்தியில் வர வேண்டும், ஆத்மாவாகிய எனக்குள் இந்த ஞானம் உள்ளது, நான் இதை ஆத்மாவுக்குச் சொல்கிறேன். நாம் பாபாவிடம் என்ன கேட்டோமோ, அதை ஆத்மாவுக்குச் சொல்கிறோம். இது முற்றிலும் புது விசயம். நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கும் போது ஆத்ம அபிமானி ஆகிக் கற்றுத் தருவதில்லை. மறந்து விடுகிறீர்கள். குறிக்கோள் உள்ளது இல்லையா? புத்தியில் இது நினைவில் இருக்க வேண்டும். நான் ஆத்மா அவிநாசி. நான் ஆத்மா இந்தக் கர்மேந்திரியங் கள் மூலம் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆத்மாக்கள் நீங்கள் சூத்திர குலத்தில் இருந்தீர்கள். பிறகு தேவதா குலத்தில் செல்வீர்கள். அங்கே சரீரமும் பவித்திரமானதாகக் கிடைக்கும். நாம் ஆத்மாக்கள் சகோதர- சகோதரர்கள். தந்தை குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். குழந்தைகள் பிறகு சொல்வார்கள், நாங்கள் சகோதர-சகோதரர்கள், சகோதரருக்குக் கற்றுத் தருகிறோம். ஆத்மாவுக்குத் தான் புரிய வைக்கிறோம். ஆத்மா சரீரத்தின் மூலம் கேட்கிறது. இவை மிகவும் நுட்பமான விசயங்கள். நினைவில் வருவதில்லை. அரைக் கல்பமாக நீங்கள் தேக அபிமானத்தில் இருந்திருக்கிறீர்கள். இச்சமயம் நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என நிச்சயம் செய்ய வேண்டும். ஆத்மா என நிச்சயம் செய்து அமர்ந்திருங்கள். ஆத்மா என நிச்சயம் செய்து கேளுங்கள். பரமபிதா பரமாத்மா தான் சொல்கிறார். அதனால் தான் சொல்கின்றனர் - ஆத்மா-பரமாத்மா நீண்ட காலம் பிரிந்து இருந்து விட்டனர். என்று? அங்கோ படிப்பிப்பதில்லை. இங்கே வந்து தான் கற்பிக்கிறேன். மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர் சரீரம் என்பது உள்ளது. இந்தத் தந்தையோ சுப்ரீம் ஆத்மா. அவருக்கு சரீரம் கிடையாது. அவருடைய ஆத்மாவின் பெயர் தான் சிவன். நீங்கள் அறிவீர்கள், இந்த சரீரம் என்னுடையதல்ல என்று. நான் சுப்ரீம் ஆத்மா. என்னுடைய மகிமை தனிப்பட்டது. ஒவ்வொருவருடைய மகிமையும் தனித்தனி இல்லையா? பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார். அவர் ஞானக்கடல், மனித சிருஷ்டியின் விதை வடிவம். அவர் சத்தியமானவர், சைதன்யமானவர், ஆனந்தம்-சுகம்-சாந்தியின் கடலாக இருப்பவர். இது பாபாவின் மகிமை. குழந்தைகளுக்கு உலகீய தந்தையின் ஆஸ்தி பற்றித் தெரியும் - நம்முடைய தந்தையிடம் அந்தத் தொழிற்சாலை உள்ளது, இந்த மில் உள்ளது, நஷா உள்ளது அல்லவா? குழந்தை தான் அந்த ஆஸ்திக்கு எஜமான் ஆகிறார். இந்த ஆஸ்தியோ ஒரு தடவை தான் கிடைக்கிறது. தந்தையிடம் என்ன ஆஸ்தி உள்ளது என்பதைக் கேட்டீர்கள்.

 

ஆத்மாக்கள் நீங்களோ அமரர்கள். ஒருபோதும் மரணமடைவதில்லை. அன்பின் கடலாகவும் ஆகிறீர்கள். இந்த லட்சுமி-நாராயணர் அன்பின் கடலாக இருப்பவர்கள். ஒரு போதும் சண்டையிட்டுக் கொள்வதில்லை. இங்கோ எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கின்றனர்! அன்பில் இன்னும் குழப்பம் (குறைவு) ஆகி விடுகிறது. பாபா வந்து விகாரத்தை நிறுத்தி விடுகிறார் என்றால், எவ்வளவு அடி விழுகிறது! பாபா சொல்கிறார், குழந்தைகளே, பாவனமாவீர்களானால் தூய்மையான உலகின் எஜமானன் ஆவீர்கள். காமம் மகா சத்ரு. அதனால் பாபாவிடம் வருகிறார்கள் எனறால் சொல்கின்றார், என்ன விகர்மங்கள் செய்திருக்கிறீர்களோ, அதைச் சொல்லி விட்டால் இலேசாகி விடும். இதிலும் முக்கியமாக விகாரத்தின் விசயம் உள்ளது. பாபா குழந்தைகளின் நன்மைக்காகக் கேட்கிறார். பாபாவிடம் தான் சொல்கின்றனர் - ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. ஏனென்றால் விகாரத்தில் செல்பவர்கள் தான் பதீத் எனச் சொல்லப்படுகின்றனர். இந்த உலகமும் பதீத், மனிதர்களும் பதீத், 5 தத்துவங்களும் பதீத். அங்கே உங்களுக்காகத் தத்துவங்களும் கூடப் பவித்திரமானதாக வேண்டும். இந்த அசுர பூமியில் தேவதைகளின் நிழல் படாது. லட்சுமியை அழைக்கின்றனர். ஆனால் லட்சுமி இங்கே வர முடியாது. இந்த 5 தத்துவங்களும் மாற வேண்டும். சத்யுகம் புது உலகம். இது பழைய உலகம். இது அழிவதற்கான சமயம் இது. இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் கலியுகம் இருக்கும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். கல்பமே 5000 ஆண்டுகள் எனும்போது பிறகு ஒரு கலியுகம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி இருக்க முடியும்? எவ்வளவு அஞ்ஞான இருள் உள்ளது! ஞானம் என்பதே இல்லை. பக்தி என்பது பிராமணர்களின் இரவு. ஞானம் என்பது பிரம்மா மற்றும் பிராமணர்களின் பகல். அது இப்போது நடைமுறையில் உள்ளது. ஏணிப்படியின் சித்திரத்தில் இது மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. புது உலகம் மற்றும் பழைய உலகம் பாதிப் பாதி எனச் சொல்வார்கள். புது உலகத்திற்கு அதிக நேரம், பழைய உலகத்திற்குக் கொஞ்ச நேரம் என்பதெல்லாம் கிடையாது. சரியாக பாதிப் பாதி என்பது இருக்கும். ஆக, அதைக் கால் பகுதியாகவும் ஆக்க முடியும். பாதியாக இல்லாது போனால் கால் பகுதியும் கூட முழுமையாக இருக்க முடியாது. ஸ்வாஸ்திகாவிலும் 4 பாகங்கள் தருகின்றனர். நாம் கணேசரை வெளிப்படுத்து கின்றோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகின்றது. நாம் புது உலகத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் புது உலகத்திற்காக நரனிலிருந்து நாராயணனாக ஆகிறோம். கிருஷ்ணரும் புது உலகத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணருக்கோ மகிமை பாடப்படுகிறது. அவரை மகாத்மா எனச் சொல்கின்றனர். ஏனென்றால் சிறு குழந்தை. சிறு குழந்தைகள் அன்புக்குரியவர்கள். சிறியவர்கள் மீது அன்பு செலுத்துகிற அளவுக்குப் பெரியவர்கள் மீது அன்பு செலுத்துவதில்லை. ஏனென்றால் சதோபிரதான நிலை. விகாரத்தின் துர்நாற்றம் கிடையாது. பெரியவர்களானதும் விகாரத்தின் துர்நாற்றம் வந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு ஒரு போதும் குற்றமான பார்வை இருக்க முடியாது. இந்தக் கண்கள் தாம் ஏமாற்றுபவை. அதனால் உதாரணம் தருகின்றனர்-அவர் தம்முடைய கண்களைத் தோண்டி எடுத்து விட்டதாக. அது போன்ற விசயம் எதுவும் கிடையாது. அதுபோல் யாரும் கண்களை வெளியில் எடுப்பதில்லை. இச்சமயம் பாபா ஞானத்தின் விசயங்களைப் புரிய வைக்கிறார். உங்களுக்கோ இப்போது ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கின்றது. ஆத்மாவுக்கு ஆன்மிக ஞானம் கிடைக்கின்றது. ஆத்மாவில் தான் ஞானம் உள்ளது. பாபா சொல்கிறார், எனக்கு ஞானம் உள்ளது. ஆத்மாவில் எதுவும் (பாவ புண்ணியம்) ஒட்டாது (நிர்லேப்) எனச் சொல்ல முடியாது. ஆத்மா தான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கின்றது. ஆத்மா அழியாதது. அதுவும் எவ்வளவு சிறியதாக உள்ளது! அதில் 84 பிறவிகளின் பார்ட் உள்ளது. இந்த மாதிரி விசயத்தை யாராலும் சொல்ல முடியாது அவர்களோ நிர்லேப் எனச் சொல்லி விடுகின்றனர். அதனால் பாபா சொல்கிறார், முதலில் ஆத்மாவை உணருங்கள். சிலர் கேட்கின்றனர், மிருகங்கள் எங்கே போகும் என்று. அட, மிருகங்களின் விசயத்தையே விட்டு விடுங்கள். முதலில் தான் ஆத்மா என்பதை உணருங்கள். நான் ஆத்மா என்பது எப்படி, என்னவாக இருக்கிறேன்? பாபா சொல்கிறார், எப்போது தன்னை ஆத்மா என்றே அறிந்து கொள்ளவில்லையோ, என்னைப் பிறகு எப்படி அறிவீர்கள்? இந்த அனைத்து நுட்பமான விசயங்களும் குழந்தைகள் உங்கள் புத்தியில் உள்ளது. ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் பாகம் உள்ளது. அது நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிலர் பிறகு சொல் கின்றனர், டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது, என்றால் பிறகு நாம் ஏன் புருஷார்த்தம் செய்ய வேண்டும்? அட, புருஷார்த்தம் இல்லை யென்றால் தண்ணீர் கூடக் கிடைக்காது. டிராமா அனுசாரம் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்பது கிடையாது. கர்மமோ அவசியம் செய்தாக வேண்டும். நல்ல அல்லது கெட்ட கர்மம் ஆகிறது. இதை புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். பாபா சொல்கிறார், இது இராவண இராஜ்யம். இதில் உங்களது கர்மம் விகர்மம் ஆகி விடுகிறது. அங்கே இராவண இராஜ்யம் கிடையாது, விகர்மம் ஆவதற்கு. நான் தான் உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தின் கதியைப் புரிய வைக்கிறேன். அங்கே உங்கள் கர்மம் அகர்மம் (எதிர் விளைவும் இல்லாமல்) ஆகின்றது. இராவண இராஜ்யத்தில் கர்மம் விகர்மம் ஆகின்றது. கீதை சொல்பவர்கள் கூட அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வில்லை. அவர்களோ வெறுமனே படித்துச் சொல்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் சுலோகத்தைச் சொல்லிப் பிறகு ஹிந்தியில் அர்த்தம் சொல்கின்றனர். பாபா சொல்கிறார், ஒரு சில வார்த்தைகள் சரியாக உள்ளன. பகவான் வாக்கு என்று சொன்ன போதிலும் பகவான் எனச் சொல்லப்படுபவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) எல்லையற்ற தந்தையின் ஆஸ்திக்கு நான் ஆத்மா மாலிக். எஜமானர் தந்தை அமைதி, தூய்மை மற்றும் பவித்திரதா, ஆனந்தத்தின் கடலாக உள்ளாரோ, அதுபோல் நான் ஆத்மா மாஸ்டர் கடலாக உள்ளேன். இதே நஷாவில் இருக்க வேண்டும்.

2) டிராமா எனச் சொல்லி முயற்சியை விட்டுவிடக் கூடாது. கர்மம் அவசியம் செய்ய வேண்டும். கர்ம-அகர்ம-விகர்மத்தின் கதியைப் (விளைவை) புரிந்து கொண்டு சதா உயர்வான கர்மத்தையே செய்ய வேண்டும்.

 

வரதானம்:

எப்பொழுதும் பாபாவின் அழியாத மற்றும் சுயநலமற்ற அன்பில் மூழ்கி இருக்கக்கூடிய மாயாவின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 

எந்த குழந்தைகள் பாபாவின் அன்பில் மூழ்கி இருப்பார்களோ அவர்களை மாயா கவர்ச்சிக்க முடியாது. எப்படி தண்ணீர் ஒட்ட முடியாத துணியில் தண்ணீரின் ஒரு சொட்டு கூட தென்படாது. அப்படியே எவர் ஈடுபாட்டில் மூழ்கி இருப்பாரோ அவர் மாயாவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இருப்பார். மாயாவின் எந்த யுத்தமும், யுத்தம் செய்ய முடியாது. ஏனெனில் பாபாவின் அன்பு அழியாதது மற்றும் சுயநலமற்றது ஆகும். இந்த அனுபவம் எவருக்கு ஏற்பட்டு உள்ளதோ அவர் அற்பகால அன்பில் மாட்டிக் கொள்ளமாட்டார். ஒரு பாபா மற்றும் நான் இதன் இடையில் மூன்றாவது எவரும் வர முடியாது.

 

சுலோகன்:

எவர் ஒருவர் அன்பாக மற்றும் விலகிய நிலையிலிருந்து கர்மம் செய்வரோ அவரே நொடியில் முற்று புள்ளி வைக்க இயலும்.

 

ஓம்சாந்தி