02.08.2020    காலை முரளி            ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 01.03.1986 மதுபன்


 

புனித அன்னப்பறவை புத்தி, விருத்தி, திருஷ்டி மற்றும் வாய்

 

இன்று பாப்தாதா சர்வ புனித அன்னப்பறவைகளின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது சாதாரண சபையன்று. ஆனால் ஆன்மிக புனித அன்னப்பறவைகளின் சபை. பாப்தாதா ஒவ்வொரு புனித அன்னப் பறவையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்-- அனைவரும் எது வரை புனித அன்னப்பறவையாக ஆகியிருக்கின்றனர்? அன்னப்பறவையின் விசேசத்தை நல்லபடியாக அறிந்து கொண்டிருக்கிறீர்களா? அனைத்திலும் முதலாவதாக அன்னப்பறவை புத்தி, அதாவது சதா ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சிரேஷ்டமானதை, சுபமானதை யோசிப்பவர். புனித அன்னப்பறவை என்றால் கல் மற்றும் இரத்தினத்தை நல்லபடியாகப் பகுத்தறிபவர் மற்றும் பிறகு தாரணை செய்பவர். முதலில் ஒவ்வோர் ஆத்மாவின் உள்நோக்கத்தைக் கண்டறிபவர் மற்றும் தாரணை செய்பவர். ஒரு போதும் எந்த ஓர் ஆத்மாவுக்காகவும் சுபமல்லாத அல்லது சாதாரண நோக்கத்தை (பாவ் -intension) தாரணை செய்பவராக இருக்கக் கூடாது. சதா சுப பாவ் மற்றும் சுப பாவனையை தாரணை செய்ய வேண்டும். நோக்கத்தை (பாவ்) அறிந்து கொள்வதன் மூலம் ஒரு போதும் யாருக்கும் சாதாரண சுபாவம் அல்லது வீணான சுபாவம் ஏற்படாது. சுப நோக்கம், சுப பாவனை. அதாவது எதை பாவ-சுபாவம் எனச் சொல்கிறீர்களோ, அந்த வீணானதை மாற்ற வேண்டும். பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார் -- அத்தகைய அன்னப்பறவை புத்தி உள்ளவராக எது வரை ஆகியிருக்கிறார்கள்? அதே போல் அன்ன விருத்தி (உள்ளுணர்வு) அதாவது சதா ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சிரேஷ்ட நன்மையின் விருத்தி. ஒவ்வோர் ஆத்மாவின் தீமை பற்றிய விசயத்தைக் கேட்டாலும் பார்த்தாலும் தீமையை நன்மையின் விருத்தியால் மாற்றிவிட வேண்டும் -- இது தான் புனித அன்னப்பறவையின் விருத்தி எனச் சொல்லப் படும். தன்னுடைய நன்மையின் விருத்தி மூலம் மற்றவர்களையும் கூட நீங்கள் மாற்ற முடியும். அவர்களது தீமையின் விருத்தியை உங்களது நன்மையின் விருத்தியால் மாற்றிவிட வேண்டும். இது தான் புனித அன்னப்பறவையின் கடமையாகும். இதே விதமாக திருஷ்டியில் சதா ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சிரேஷ்ட, சுத்த, அன்பின் திருஷ்டி இருக்க வேண்டும். எப்படிப் பட்டவராக இருந்தாலும் சரி, உங்களிடமிருந்து அனைவருக்காகவும் ஆன்மிகமான, ஆத்மிக அன்பின் திருஷ்டியை தாரணை செய்ய வேண்டும். இதைத் தான் புனித அன்னப்பறவையின் திருஷ்டி எனச் சொல்வார்கள். இதே விதமாக பேச்சிலும் கூட முன்பே சொல்லப் பட்டுள்ளது -- தீய சொல் என்பது வேறு விசயம். அதுவோ பிராமணர்களுக்கு மாறி விட்டது. ஆனால் வீணான பேச்சையும் கூட புனித அன்னப்பறவையின் வாய் எனச் சொல்ல மாட்டார்கள். வாயும் கூட புனித அன்னப்பறவையின் வாயாக இருக்க வேண்டும். அவருடைய வாயிலிருந்து ஒரு போதும் வீணான சொற்கள் வெளிப்படாமல் இருக்க வேண்டும். இதைத் தான் அன்னப்பறவை வாயின் ஸ்திதி எனச் சொல்வார்கள். ஆக, புனித அன்னப்பறவை புத்தி, விருத்தி, திருஷ்டி மற்றும் வாய். எப்போது இவை பவித்திரமாக, அதாவது சிரேஷ்டமாக ஆகி விடுகிறதோ, அப்போது தானாகவே புனித அன்னப்பறவையின் ஸ்திதியின் பிரத்தியட்ச பிரபாவம் காணப்படும். எனவே அனைவரும் தங்களைப் பாருங்கள் -- எது வரை சதா புனித அன்னப்பறவை ஆகி நடமாடுகிறோம், சுற்றி வருகிறோம்? ஏனென்றால் சுய முன்னேற்றத்திற்கான நேரம் அதிகம் இல்லை. எனவே தன்னைத் தான் சோதித்துப் பாருங்கள் மற்றும் மாற்றிக் கொள்ளுங்கள்.

 

இச்சமயத்தின் மாற்றம் நீண்ட கால மாற்றத்திற்குரிய பொன்னுலகின் அதிகாரி ஆக்கி விடும். இந்த சமிக்ஞையை பாப்தாதா முன்பே கொடுத்துள்ளார். சுயத்தின் பக்கம் இரட்டை அடிக்கோட்டின் மூலம் அனைவர்க்கும் கவனம் உள்ளதா? சிறிது காலத்தின் கவனம் என்பது நீண்ட காலத்தின் கவனத்திற்கான பலன் சொரூபமாகப் பெறக்கூடிய சிரேஷ்ட பிராப்தியின் பிராலப்தத்திற்குச் சமமானதாகும். எனவே இந்தக் கொஞ்ச காலம் என்பது மிக உயர்ந்ததும் அழகானதும் ஆகும். கடின உழைப்பும் இல்லை. பாபா என்ன சொன்னாரோ, அதை தாரணை செய்தீர்கள். அவ்வளவு தான். மேலும் தாரணை செய்வதால் நடைமுறையில் தானாகவே ஆகி விடும். புனித அன்னப்பறவையின் காரியமே தாரணை செய்வதாகும். ஆக, இது அத்தகைய புனித அன்னப்பறவைகளின் சபை தான் இல்லையா? ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள். வீணானதையும் சாதாரணமானதையும் நல்லபடியாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். ஆக, புரிந்து கொண்ட பிறகு கர்மத்தில் தானாகவே வருகிறது. அது போல் சாதாரண பாஷையில் இதைத் தான் சொல்கிறீர்கள் இல்லையா -- இப்போது எனக்குப் புரிந்து விட்டது என்பதாக? பிறகு அதைச் செய்யாமல் இருக்க முடியாது. ஆகவே முதலில் இதைச் சோதித்துப் பாருங்கள் -- செய்தது சாதாரணமானதா அல்லது வீணானதா? ஒரு போதும் சாதாரணமானதை சிரேஷ்டமானதாகப் புரிந்து கொள்வதில்லையே? எனவே முதல்-முதலில் முக்கியமானது புனித அன்னப்பறவை புத்தி. இதில் தானாகவே பகுத்தறியும் சக்தி வந்து விடுகிறது. ஏனென்றால் சரியா தவறா எனக் கண்டறிய முடியாத போது தான் வீண் சங்கல்பமும் வீண் சமயமும் செல்கிறது. மேலும் மற்றவர்களின் உழைப்பைப் பெறுவதற்கான சுமையும் ஏறுகிறது. காரணம்? ஏனென்றால் புனித அன்னப்பறவை புத்தி உள்ளவராக ஆகவில்லை. ஆகவே பாப்தாதா, புனித அன்னப்பறவைகள் அனைவருக்கும் இந்த சமிக்ஞையைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் -- அதாவது தலைகீழானதைத் தலைகீழானதாக ஆக்காதீர்கள். இவர்கள் தலைகீழாகவே இருக்கிறார்கள் என்று யோசிக்காதீர்கள். ஆனால் தலைகீழானவர்களை எப்படி நேராக ஆக்குவது என்பது பற்றி யோசியுங்கள். இது தான் நன்மையின் பாவனை எனச் சொல்லப் படும். சிரேஷ்ட நோக்கம், சுப பாவனை மூலம் தங்களின் பாவ-சுபாவங்கள் மற்றும் மற்றவர்களின் பாவ-சுபாவங்களை மாற்றுவதில் வெற்றியாளர் ஆவீர்கள். புரிந்ததா? முதலில் தன் மீது வெற்றியாளர். பிறகு அனைவர் மீதும் வெற்றியாளர், பிறகு இயற்கை மீது வெற்றியாளர் ஆவீர்கள். இந்த மூன்று வெற்றிகளும் உங்களை விஜயமாலையின் மணியாக ஆக்கி விடும். இயற்கையில் வாயுமண்டலம் அல்லது ஸ்தூல இயற்கையின் பிரச்சினைகள் அனைத்தும் வந்து விடுகின்றன. ஆக, மூன்றின் மீதும் வெற்றி பெற்றிருக்கிறீர்களா? இந்த ஆதாரத்தில் தான் விஜயமாலையில் தங்களின் நம்பரை உங்களால் பார்க்க முடியும். ஆகவே பெயரே வைஜயந்தி மாலை என வைக்கப் பட்டுள்ளது. ஆக, நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களா? நல்லது.

 

இன்று ஆஸ்திரேலியாக் காரர்களுக்கான வாய்ப்பு. ஆஸ்திரேலியாக்காரர்களுக்கு மதுபன் மூலமாகவும் கோல்டன் சான்சலர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. ஏனென்றால் அனைவரையும் முன்னால் வைப்பதற்கான வாய்ப்புக் கொடுக்கிறீர்கள். இது விசேசத் தன்மையாகும். மற்றவர்களை முன்னால் வைப்பது, இந்த வாய்ப்புக் கொடுப்பது என்பது சான்சலர் ஆவதாகும். சான்ஸ் (வாய்ப்பு) எடுத்துக் கொள்பவர், சான்ஸ் கொடுப்பவர் இருவரையும் சான்சலர் எனச் சொல்கின்றனர். பாப்தாதா சதா ஒவ்வொரு குழந்தையின் விசேசத் தன்மையைப் பார்க்கிறார் மற்றும் வர்ணனை செய்கிறார். ஆஸ்திரேலியாவில் பாண்டவர்களுக்கு சேவைக்கான வாய்ப்பு விசேசமாகக் கிடைத்துள்ளது. அதிக சென்டர்களையும் பாண்டவர்கள் பராமரிக்கின்றனர். சக்திகள் பாண்டவர் களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். முன்னிலையில் வைப்பவர்கள் எப்போதுமே முன்னால் இருப்பார்கள். இதுவும் சக்திகளின் விசாலத் தன்மையாகும். ஆனால் பாண்டவர்கள் தங்களை சதா நிமித்தம் என உணர்ந்து சேவையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? சேவையில் நிமித்த உணர்வு தான் சேவையின் வெற்றிக்கான ஆதாரம். பாப்தாதா மூன்று வார்த்தைகள் சொல்கிறார் இல்லையா? அது சாகார் பிரம்மா பாபா மூலமாகவும் கடைசியில் சொல்லப் பட்டது. இந்த மூன்று விசேசத் தன்மைகளும் நிமித்த உணர்வினால் தாமாகவே வருகின்றன. நிமித்த உணர்வு இல்லையென்றால் இந்த மூன்று விசேசத் தன்மைகள் அனுபவம் ஆகாது. நிமித்த உணர்வு அநேக விதமான நான், எனது என்பதை சகஜமாகவே முடித்து விடும். நான் என்பது இல்லை, எனது என்பதும் இல்லை. ஸ்திதியில் குழப்பம் வருவது இந்த ஒரு குறைபாட்டின் காரணத்தினால் தான். சேவையிலும் முயற்சி செய்ய வேண்டி உள்ளது மற்றும் தனது பறக்கும் கலையின் ஸ்திதியிலும் கூட முயற்சி செய்ய வேண்டி உள்ளது. நிமித்தமாக இருக்கிறீர்கள் என்றால் நிமித்தமாக ஆக்குபவர் சதா நினைவிருக்க வேண்டும். ஆக, இதே விசேசதா மூலம் சதா சேவையை விருத்தி செய்து கொண்டு முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறீர்கள் இல்லையா? சேவையின் விஸ்தாரம் ஏற்படுவதும் கூட சேவையின் வெற்றிக்கான அடையாளமாகும். இப்போது ஆடாத அசையாத ஸ்திதியின் நல்ல அனுபவி ஆகி விட்டிருக்கிறீர்கள். புரிந்ததா -- ஆஸ்திரேலியா என்றால் கொஞ்சம் அதிகப்படியாக உள்ளது, மற்றவர்களிடம் இல்லாதது. ஆஸ்திரேலியாவில் மற்ற பலவிதமான குஜராத்தி முதலானவர்கள் இல்லை. தர்மத்தை வீட்டிலிருந்து தொடங்குகிற காரியத்தை அதிகம் செய்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களை விழிப்படையச் செய்திருக்கிறீர்கள். குமார்-குமாரிகளுக்கு நல்ல நன்மை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கையில் தனது வாழ்க்கைக்கான உயர்ந்த தீர்வைக் காண வேண்டும். தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்களானால் சதா காலத்திற்கும் சிரேஷ்டமானவர்களாக ஆகி விட்டீர்கள். தலைகீழான ஏணியில் ஏறுவதில் இருந்து தப்பி விட்டீர்கள். பாப்தாதா குஷியடைகிறார் -- ஒருவர் மற்றவரை விட அதிகமாக அநேக தீபங்களை ஏற்றி தீபமாலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர். ஊக்கம்-உற்சாகம் நன்றாக உள்ளது. சேவையில் பிஸியாக இருப்பதன் மூலம் நன்றாக முன்னேறிக் கொண்டிருக் கிறீர்கள்.

 

ஒன்று, நிமித்த உணர்வு பற்றிய விசயம் சொல்லப் பட்டது. இரண்டாவது யார் சேவைக்கு நிமித்தமாக ஆகின்றனரோ, அவர்களுக்காக சுய முன்னேற்றம் அல்லது சேவையின் முன்னேற்றத்திற்காக ஒரு விசேச சுலோகன் பாதுகாப்பிற்கான சாதனமாகும். நிமித்தமாக ஆகியிருக்கும் நாம் என்ன செய்கிறோமோ, நம்மைப் பார்த்து அனைவரும் செய்வார்கள். ஏனென்றால் சேவைக்கு நிமித்தமாக ஆவது என்றால் ஸ்டேஜ் மீது பார்ட் நடிப்பதாகும். ஸ்டேஜின் பக்கமாக அனைவரின் பார்வையும் இருக்கும். மேலும் ஒருவர் எந்த அளவு ஹீரோநடிகராக இருக்கிறாரோ, அவர் மீது அதிகம் பார்வை இருக்கும். ஆக, இந்த ஸ்லோகன் பாதுகாப்பிற்கான சாதனமாகும். இதனால் தானாகவே பறக்கும் கலையின் அனுபவம் செய்வீர்கள். அதே போல் சென்டரில் இருந்தாலும் சரி, அல்லது எங்கே தங்கியிருந்து சேவை செய்தாலும் சரி. சேவாதாரியோ அனைவரும் தான். அநேகர் தங்களின் நிமித்த இருப்பிடங்களில் இருந்தவாறு சேவைக்கான வாய்ப்பை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களும் கூட சேவையின் ஸ்டேஜ் மீது உள்ளனர். சேவை தவிர தங்களின் சமயத்தை வீணாக்கக் கூடாது. சேவைக்கும் கூட கணக்கு அதிகமாக சேமிப்பாகின்றது. உண்மையான மனதோடு சேவை செய்பவர்கள் தங்களின் கணக்கை மிக நன்றாக சேமித்துக் கொண்டிருக்கின்றனர். பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையின் ஆரம்பத் திலிருந்து கடைசி வரையிலான சேவையின் கணக்கு உள்ளது. மேலும் தானாகவே அதில் சேமிப்பாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருக்காகவும் கணக்கு வைக்க வேண்டியதில்லை. கணக்கு வைப்பவர்களிடம் அதிகம் ஃபைல்கள் இருக்கும். பாபாவிடம் ஸ்தூல ஃபைல்கள் எதுவும் கிடையாது. ஒரு விநாடியில் ஒவ்வொரு வரின் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலான ரிஜிஸ்டர் ஒரு விநாடியில் வெளிப்பட்டு விடும். தானாகவே சேமிப்பாகிக் கொண்டே இருக்கும். நம்மையோ யாரும் பார்ப்பதில்லை, புரிந்து கொள்ளவில்லை என்று ஒரு போதும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. பாப்தாதாவிடமோ யார் எப்படிப் பட்டவர்கள், என்னென்ன செய்கிறார்கள், எந்த ஸ்டேஜில் இருந்தவாறு செய்கிறார்கள் என்ற அனைத்தும் சேமிப்பாகின்றது. ஃபைல் இல்லை, ஆனால் ஃபைனல். ஆஸ்திரேலியாவில் சக்திகள் பாபாவுடையவர்களாக ஆவதில், பாபாவை அறிந்து கொண்டு பாபாவிடம் அன்பு வைப்பதில் மிக நல்ல தைரியம் காட்டியிருக்கிறார்கள். குழப்பத்தின் (மேலே-கீழே ஆவதின்) தவறு நடந்தாலும் அது இருப்பிடத்தின் அல்லது பூமியினுடையது அல்லது முந்தைய முழு வாழ்க்கையின் (முன்பிறவி) சம்ஸ்காரங்களின் காரணமாகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றையும் கடந்து சென்று அன்பின் பந்தனத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் பாப்தாதா சக்திகளின் தைரியத்திற்காக வாழ்த்துகிறார். ஒரே பலம், ஒரே நம்பிக்கையில் முன்னேற வைக்கிறார். ஆக, சக்திகளின் தைரியம் மற்றும் பாண்டவர்களின் சேவைக்கான ஊக்கம் என்ற இரண்டு இறக்கைகளும் உறுதியாகி விட்டன. சேவையின் சேத்திரத்தில் பாண்டவர்களும் கூட மகாவீர் ஆகி முன்னேறிக் கொண்டுள்ளனர். குழப்பங்களைக் கடந்து செல்வதில் திறமை சாலிகள். அனைவரின் சித்திரம் அதே தான். பாண்டவர்களுக்கு மிகப்பெரிய நீண்ட, அகலமான கிரீடங்களைக் காட்டுகின்றனர். ஏனென்றால் ஸ்திதி அவ்வளவு உயர்ந்ததும் உறுதியானதும் ஆகும். எனவே பாண்டவர்கள் உயரமாகவும் வீரம் நிறைந்தவர்களாகவும் காட்டப் படுகின்றனர். ஆஸ்திரேலியாக்காரர்கள் மிகவும் இரக்க மனம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்கள் மீது இரக்க மனம் உள்ளவர்களாகி சேவையில் முன்னேறிக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருபோதும் சேவை இல்லாமல் இருக்க முடியாது. பாப்தாதாவுக்கு குழந்தைகளின் முன்னேற்றத்தைப் பார்த்து சதா குஷி உள்ளது. விசேசமான அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு குழந்தையின் ஊக்கம்-உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதாவுக்கு மகிழ்ச்சி. எப்படி ஒவ்வொருவரும் சிரேஷ்ட லட்சியத்தின் மூலம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். பாப்தாதா எப்போதுமே விசேசத் தன்மையை மட்டுமே பார்க்கிறார். ஒவ்வொருவரும் ஒருவர்- மற்றவரை விடவும் அன்பானவராக இருக்கிறார். நீங்களும் கூட ஒருவர்-மற்றவரை இந்த விதியின் மூலம் பார்க்கிறீர்கள் இல்லையா? யாரைப் பார்த்தாலும் சரி, ஒருவர் மற்றவரை விடப் பிரியமானவராக இருக்க வேண்டும். ஏனென்றால் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்திருந்தவர்கள் தங்களுக்குள் சந்தித்திருக்கிறீர்கள் என்றால் எவ்வளவு அன்பானவர்கள் ஆகிறார்கள்! பாபாவிடம் அன்பின் அடையாளம் இது தான் - அதாவது பிராமண ஆத்மாக்கள் அனைவருமே அன்பானவர்களாக உணரப் படுவார்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் அன்பான வராக இருக்கிறார் என்றால் பாபாவிடம் அன்பு இருப்பதாகப் பொருளாகும். மாலையில் ஒருவர் மற்றவரின் சம்மந்தத்திலோ பிராமணர்கள் தாம் வருவார்கள். பாபாவோ ரிடையராகி விட்டுப் பார்ப்பார். அதனால் பாபாவிடம் அன்பு உள்ளது என்பதற்கான அடையாளத்தை சதா அனுபவம் செய்யுங்கள். அனைவரும் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்றால் நமக்கும் கூடப் பிரியமானவர்கள். நல்லது.

 

பார்ட்டிகளுடன் -- 1. அனைவரும் தங்களை விசேச ஆத்மா எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? விசேச ஆத்மாக்கள், விசேச காரியத்திற்கு நிமித்தமாக இருக்கிறோம் மற்றும் விசேசங்களைக் காண்பிக்க வேண்டும் -- இது போல் சதா ஸ்மிருதியில் இருக்க வேண்டும். விசேச ஸ்மிருதி சாதாரண ஸ்மிருதியையும் கூட சக்திசாலி ஆக்கி விடும். வீணானவற்றைக் கூட முடித்து விடும். ஆகவே சதா இந்த விசேசம் என்ற வார்த்தையை நினைவில் வையுங்கள். பேசுவதும் விசேசமாக, பார்ப்பதும் விசேசமாக, செய்வதும் விசேசமாக, யோசிப்பதும் கூட விசேசமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் இந்த விசேசம் என்ற வார்த்தையைக் கொண்டு வருவதால் தானாகவே மாறி விடும். மேலும் இந்த ஸ்மிருதி மூலம் சுய மாற்றம், உலக மாற்றம் சகஜமாகி விடும். ஒவ்வொரு விசயத்திலும் விசேசம் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டே செல்லுங்கள். இதன் மூலம் தான் சம்பூர்ண நிலையை அடைவதற்கான லட்சியம், குறிக்கோள் என்ன உள்ளதோ, அதை அடைவீர்கள்.

 

2. சதா பாபா மற்றும் ஆஸ்தியின் ஸ்மிருதியில் இருக்கிறீர்களா? சிரேஷ்ட ஸ்மிருதி மூலம் சிரேஷ்ட ஸ்திதியின் அனுபவம் ஆகிறதா? ஸ்திதியின் ஆதாரம் ஸ்மிருதி ஆகும். ஸ்மிருதி பலவீனமாக இருக்குமானால் ஸ்திதியும் கூட பலவீனமாகி விடும். ஸ்மிருதி சதா சக்திசாலியாக இருக்க வேண்டும். அந்த சக்திசாலி ஸ்மிருதி -- நான் பாபாவுடையவன், பாபா என்னுடையவர். இந்த ஸ்மிருதி மூலம் ஸ்திதி சக்திசாலியாக இருக்கும் மற்றும் மற்றவர்களையும் சக்திசாலி ஆக்கி விடுவீர்கள். ஆகவே சதா ஸ்மிருதியின் மீது விசேச கவனம் இருக்கட்டும். சக்திசாலி ஸ்மிருதி, சக்திசாலி ஸ்திதி, சக்திசாலி சேவை தானாக நடைபெற்றுக் கொண்டிருக்கட்டும். ஸ்மிருதி, ஸ்திதி, சேவை மூன்றும் சக்திசாலியாக இருக்க வேண்டும். எப்படி ஸ்விட்ச் ஆன் செய்தால் ஒளிப் பிரகாசம் ஆகி விடுகிறது. ஆஃப் செய்தால் இருள் சூழ்ந்து விடுகிறது. அது போலவே இந்த ஸ்மிருதியும் கூட ஒரு ஸ்விட்ச். ஸ்மிருதியின் ஸ்விட்ச் பலவீனமாக இருக்குமானால் ஸ்திதியும் பலவீனமாக இருக்கும். சதா ஸ்மிருதி என்ற ஸ்விட்ச் மீது கவனம் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் சுயம் மற்றும் அனைவர்க்கும் நன்மை. புதிய பிறவி ஏற்பட்டது என்றால் புதிய ஸ்மிருதி இருக்க வேண்டும். பழைய ஸ்மிருதிகள் அனைத்தும் முடிந்தன. ஆகவே இதே விதி மூலம் சித்தியை அடைந்து கொண்டே செல்லுங்கள்.

 

3. அனைவரும் தங்களை பாக்கியவான் என உணர்ந்திருக்கிறீர்களா? வரதான பூமிக்கு வருவது என்பது மகான் பாக்கியமாகும். வரதான பூமியில் வந்து சேர்வதற்கான ஒரு பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த பாக்கியத்தை எவ்வளவு சிரேஷ்டமானதாக ஆக்க விரும்புகிறீர்களோ, ஆக்கிக் கொள்ள முடியும். சிரேஷ்ட வழிமுறை தான் பாக்கியத்தின் ரேகையை வரைவதற்கான பேனாவாகும். இதில் எவ்வளவு தங்களின் சிரேஷ்ட ரேகையை அமைத்துக் கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு சிரேஷ்டமானவராக ஆகி விடுவீர்கள். முழுக் கல்பத்திலும் இந்த சிரேஷ்ட சமயம் தான் பாக்கியத்தின் ரேகையை அமைத்துக் கொள்வதற்கான சமயமாகும். அத்தகைய சமயத்தில் மற்றும் அத்தகைய இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே கொஞ்சத்திலேயே குஷி அடைபவர்கள் அல்லர். எப்போது கொடுக்கும் வள்ளல் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ, அப்போது பெற்றுக் கொள்பவர்கள் ஏன் களைத்துப் போகிறார்கள்? பாபாவின் நினைவு தான் சிரேஷ்டமானவர்களாக ஆக்குகிறது. பாபாவை நினைவு செய்வது என்றால் சக்தியை (அதிகாரத்தை) அடைவதாகும். ஜென்ம-ஜென்மத்தின் சம்மந்தம் என்றால் நினைவு என்பது கஷ்டமா என்ன? அன்பு மற்றும் சம்மந்தத்தின் மூலம் நினைவு செய்தால் போதும். எங்கே அன்பு உள்ளதோ, அங்கே நினைவு வராது என்பது நடக்க இயலாததாகும். மறந்து போக முயன்றாலும் நினைவு வரும். நல்லது.

 

வரதானம்:

நெற்றியின் மூலம் திருப்தியின் ஜொலிப்பினுடைய பொலிவைக் காண்பிக்கக் கூடிய சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.

 

யார் சதா திருப்பதியாக இருக்கின்றனரோ, அவர்களின் நெற்றியின் மூலம் திருப்தியின் பொலிவு சதா ஜொலித்துக் கொண்டிருக்கும். அவர்களை யாராவது கவலையில் இருக்கும் ஆத்மா பார்ப்பாரானால் அவரும் குஷியடைவார். அவரது கவலை மறைந்து விடும். யாரிடம் திருப்தியின் குஷியினுடைய கஜானா உள்ளதோ, அவர்களுக்குப் பின்னால் தானாகவே அனைவரும் கவர்ந்திழுக்கப் படுவார்கள். அவர்களின் குஷியின் முகம் சைதன்ய போர்டாக ஆகிவிடும். அது அநேக ஆத்மாக்களை உருவாக்குவதற்கான அறிமுகம் கொடுக்கும். ஆகவே அத்தகைய திருப்தியாக இருக்கக் கூடிய, அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடிய திருப்தியின் மணியாக ஆகுங்கள். அதன் மூலம் அநேகருக்கு சாட்சாத்காரம் கிடைக்கட்டும்.

 

சுலோகன்:

காயப்படுத்துகிறவர்களின் வேலை காயப்படுத்துவதாகும். உங்களது வேலை தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாகும்.

 

ஓம்சாந்தி