02-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! படிப்பை நினைவு செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் எந்த விசயத்திலும் குழம்ப மாட்டீர்கள். நமக்கு கற்பிக்கக் கூடியவர் சுயம் நிராகாரமான பகவான் ஆவார் என்ற போதை எப்பொழுதும் இருக்க வேண்டும்.

கேள்வி:
எந்தக் குழந்தைகளுக்கு இந்த ஞான இரத்தினங்களுடைய அழிவற்ற போதை இருக்க முடியும்?

பதில்:
ஏழைக் குழந்தைகளுக்கு. ஏழைக் குழந்தைகள் தான் தந்தை மூலமாக பத்மாபதம்பதி (பல கோடி மடங்கு செல்வந்தர்கள்) ஆகிறார்கள். அவர்கள் மணி மாலையில் வரமுடியும். செல்வந்தர் களுக்கோ தன்னுடைய அழியக்கூடிய செல்வத்தின் போதை இருக்கிறது. பாபாவிற்கு இந்த சமயத்தில் கோடீஸ்வரக் குழந்தைகள் தேவையில்லை. ஏழைக் குழந்தைகளுடைய ஒவ்வொரு பைசா மூலம் தான் சொர்க்கத்தின் ஸ்தாபனை நடக்கிறது. ஏனெனில், ஏழைகள் தான் செல்வந்தர்கள் ஆக வேண்டும்.

பாடல்:
இந்த பாவ உலகத்திலிருந்து......

ஓம் சாந்தி.
எங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் கூட இருக்காதோ, எதற்கு சுகதாமம் என்ற பெயர் உள்ளதோ, அத்தகைய உலகிற்கு இப்பொழுது நாம் சென்றுகொண்டு இருக்கின்றோம் என்பதை இனிமையிலும் இனிமையான பாப்தாதாவின் குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். நாம் அந்த சுகதாமம் அல்லது சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தோம். சுகதாமத்தில் சத்யுகம் மட்டும் இருந்தது. தேவி, தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள், எனவே, நீங்கள் பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர் ஆவீர்கள். சிவபாபா கேர் ஆஃப் (ஸ்ரீ/ர்) பிரம்மாகுமாரிகள் என்று நீங்கள் எழுதவும் செய்கிறீர்கள். நம்முடையது ஏறும் கலை ஆகும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். ஏறும் கலை மற்றும் இறங்கும் கலையைப் பற்றி குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில் புரிந்திருக்கிறீர்கள். பாரதம் எப்பொழுது ஏறும் கலையில் இருந்ததோ, அப்பொழுது அங்கு வாழ்ந்தவர்கள் தேவி, தேவதைகள் என்று கூறப்பட்டனர் என்பதைக் கூட நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது இறங்கும் கலையில் இருக்கிறார்கள். ஆகையால், அவர்களை தேவி, தேவதை என்று கூறமுடியாது. இப்பொழுது தங்களை மனிதர்கள் என்று புரிந்திருக்கின்றனர். கோவில்களில் சென்று தேவி, தேவதைகளுக்கு முன்பு தலை வணங்குகின்றனர். இவர்கள் வாழ்ந்துவிட்டு சென்றவர்கள் என்று புரிந்திருக்கின்றனர். எப்பொழுது? என்பதை அறிந்திருக்கவில்லை. கிறிஸ்துவிலிருந்து 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரியவைக்க இயலும். சக்கரம் இப்பொழுது சுழன்றுதான் ஆக வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். பதீத உலகம் பாவனம் ஆகத்தான் வேண்டும். நாம் தந்தை மூலம் மனிதரிலிருந்து தேவதை ஆகிக்கொண்டு இருக்கிறோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. தந்தை கற்பிக்கின்றார் என்ற இந்த போதை ஏற வேண்டும் அல்லவா ! பகவானின் மகா வாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக் கின்றேன் என்ற மகிமையும் செய்யப்பட்டு இருக்கிறது. தந்தைக்கு பதில் குழந்தையின் பெயரைப் போட்டுவிட்டார்கள், இந்தத் தவறு மட்டும் செய்துவிட்டார்கள். இந்தத் தவறைக் கூட குழந்தை களாகிய நீங்கள் தான் புரிந்திருக்கிறீர்கள், வேறு எவரும் புரிந்திருக்கவில்லை.

நாம் மீண்டும் நம்முடைய சாந்திதாமத்திலிருந்து சுகதாமம் செல்வதற்காக தூய்மை ஆகிக்கொண்டு இருக்கிறோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் வந்திருக்கிறது. பதீத பாவனரே வாருங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். பதீத பாவனரோ இறைத் தந்தை தான் ஆவார். கிருஷ்ணரைக் கூற முடியாது. இதை புத்தியில் நினைவு செய்துகொண்டே இருக்க வேண்டும். பள்ளியில் குழந்தைகளுடைய புத்தியில் படிப்பைப் பற்றிய சிந்தனை இருக்கிறது அல்லவா ! ஒருவேளை, நீங்கள் கூட இந்த சிந்தனை செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் குழம்பமாட்டீர்கள். இப்பொழுது நம்முடையது ஏறும் கலை ஆகும் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது என்று பாடப்பட்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டது என்றால் ஆஸ்தியின் உரிமையாளர் ஆகிவிட்டது. ஆனால், அது ஒன்றும் ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடையாது. இங்கே உங்களுக்கு ஜீவன்முக்தியின் இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. தந்தையிடமிருந்து அவசியம் கிடைக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து பாரதத்திற்கு எல்லையற்ற ஆஸ்தி கிடைத்திருந்தது, இப்பொழுது மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதைக் கூட அறிந்திருக் கிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எவரையாவது நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். அனைவருடைய சித்திரங்களும் உள்ளன, பூஜிக்கப்படுகின்றனர் அல்லவா ! இந்த இரகசியத்தைக் கூட தந்தை புரியவைத்திருக்கின்றார். இந்த விசயங்களை கோடியில் ஒரு சிலர் நல்ல முறையில் புரிந்துகொள்வார்கள் மற்றும் நம்பிக்கை கொள்வார்கள். பிறகு, சிலர் சந்தேகத்தை எழுப்புவார்கள். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக முதலில் சம்பந்தத்தைப் பற்றிய விசயத்தைப் புரியவைக்க வேண்டும். அர்ஜூனருக்கு பகவான் அமர்ந்து புரியவைத்தார் என்று கீதையில் கூட உள்ளது அல்லவா! இப்பொழுது குதிரை வண்டியில் அமர்ந்து இராஜயோகத்தைக் கற்பிப்பது என்பது நடைபெறவே முடியாது. அவ்வாறு அமர்ந்து இராஜயோகத்தைக் கற்பிக்கமாட்டார். அப்படியென்றால் இது பொய்யாகி விட்டது. விஷ்ணுவினுடைய நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்று காண்பிக்கின்றனர். மேலும், பிரம்மாவின் கையில் சாஸ்திரங்களைக் கொடுத்துவிட்டனர். சூட்சும வதனத்திலோ இருக்க முடியாது. எனவே, இங்கே தான் சாரத்தைப் புரியவைப்பார் அல்லவா! இத்தகைய சித்திரங்களை வைத்து நீங்கள் புரிய வைக்க இயலும். கண்காட்சியில் கூட இந்தச் சித்திரம் அவசியம் பயன்படும். சூட்சுமவதனத்தின் விசயமே கிடையாது. பிரம்மா வாய் மூலம் யாருக்குப் புரியவைப்பார்? அங்கே இருப்பதோ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மட்டும் தான். எனில், சாஸ்திரங்களின் சாரத்தை யாருக்குப் புரியவைப்பார்? இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சத்யுக, திரேதாயுகத்தில் இந்த பக்தி மார்க்கமே இருக்க முடியாது. அங்கே இருப்பதே தேவதைகளின் இராஜ்யம். பக்தி எங்கிருந்து வரமுடியும்? இந்த பக்தி பின்னர் தான் துவங்குகிறது. நிச்சயபுத்தி உடையவர்கள் தான் வெற்றியாளர் ஆகின்றார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை மீது நம்பிக்கை வைத்தீர்கள் என்றால் இராஜ்யம் கிடைக்கும். நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர், தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்கக்கூடியவர் என்று தந்தை அமர்ந்து புரியவைக்கின்றார். சிவனை ஒருபொழுதும் வெண்மையானவர் (தூய்மையானவர்), கருப்பானவர் (தூய்மையற்றவர்) என்று கூறமாட்டார்கள். கிருஷ்ணரைத் தான் ஷியாம்சுந்தர் என்று கூறுகின்றனர். சிவனோ சக்கரத்தில் வருவதில்லை என்பதைக் கூட குழந்தைகள் புரிந்திருக்கின்றனர். அவரை வெண்மையாகவோ அல்லது கருப்பாகவோ காண்பிக்க முடியாது. குழந்தைககளாகிய உங்களுடையது ஏறும் கலை ஆகும் என்பதை தந்தை புரியவைக்கின்றார். கருப்பிலிருந்து (தூய்மையற்ற நிலையிலிருந்து) வெண்மை (தூய்மை) ஆக வேண்டும். பாரதம் தூய்மையாக இருந்தது, இப்பொழுது ஏன் கருப்பாகிவிட்டது? காமச்சிதையில் அமர்ந்ததால் கருப்பாகி விட்டது. கடலினுடைய குழந்தைகளை காமம் எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று கூட பாடப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை உங்களை ஞானச்சிதையில் அமர வைக்கின்றார். உங்கள் மீது ஞான மழை பொழிகின்றது. இது ஒன்று மட்டும் தான் சத்தியமான தொடர்பு ஆகும் என்பதைக் கூட புரிந்திருக்கிறீர்கள். பரமபிதா பரமாத்மா யார் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவரோ, அவரை அமரநாதன் என்றும் கூறுகின்றனர், எனில், அவசியம் இங்கே குழந்தைகளுக்கு அமர்ந்து புரியவைப்பார் அல்லவா! மலையில் வைத்து ஒரு பார்வதிக்கு மட்டும் அமர்ந்து கூறியிருப்பாரா என்ன? அவரோ முழு பதீத உலகத்தையும் பாவனம் ஆக்க வேண்டும். ஒருவருக்கான விசயம் கிடையாது. நாம் தான் பாவனமான உலகத்தின் எஜமானர்களாக இருந்தோம், மீண்டும் நாம் தான் ஆகப்போகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடைசியில் சின்னச் சின்ன கிளைகள் வெளிப்படுகின்றன என்று மரத்தைப் பற்றியும் கூட புரியவைக்கப் பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சின்னச்சின்ன மடங்கள், சம்பிரதாயங்கள் ஆகும். முதன் முதலில் மிகவும் அழகிய இலைகள் வெளிப்படுகின்றன. எப்பொழுது மரம் இற்றுப்போன நிலையை அடைகிறதோ, அப்பொழுது புதிய இலைகளும் வளர்வதில்லை மற்றும் பழமும் வருவதில்லை. ஒவ்வொரு விசயத்தையும் தந்தை குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரிய வைத்துக்கொண்டு இருக்கின்றார். உங்களுடைய யுத்தம் கூட மாயையின் கூடவே நடைபெறுகிறது. இவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கிறது எனில், அவசியம் கொஞ்சம் உழைக்கவும் செய்வீர்கள் அல்லவா! படிக்கவும் வேண்டும், தூய்மையும் ஆக வேண்டும். அரைக்கல்பமாக இராவண இராஜ்யம் நடைபெறுகிறது மற்றும் இப்பொழுது இராம இராஜ்யம் வர வேண்டும். இராம இராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று கூறவும் செய்கின்றனர். ஆனால், எப்பொழுது மற்றும் எவ்வாறு ஏற்படும்? என்பது அவர்களுக்குத் தெரியாது. சாஸ்திரங்களிலோ இந்த விசயங்களே கிடையாது. பாண்டவர்கள் மலைகளில் சென்று மறைந்துவிட்டனர் என்று காண்பிக்கின்றனர். நல்லது. பின்னர் என்னவாயிற்று? பிரளயமோ ஏற்படுவதில்லை. ஒருபுறம் தந்தை இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்று காண்பிக்கின்றனர். நீங்கள் எதிர்காலத்தில் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகப்போகிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆனால், பிறகு பாண்டவர்கள் அழிந்துவிட்டதாகக் காண்பிக்கின்றனர். இது எவ்வாறு நடைபெற முடியும்? புது உலகத்தின் ஸ்தாபனை எவ்வாறு நடைபெறும்? ஸ்ரீ கிருஷ்ணர் எங்கிருந்து வந்தார்? அவசியம் பிராமணர் தேவை.

நாம் புது உலகத்திற்குச் செல்வதற்கான முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். இங்கே ஞானக்கடலிடம் புத்துணர்ச்சி அடைவதற்காக வருகிறீர்கள். அங்கே ஞான கங்கைகள் மூலம் கேட்கிறீர்கள். அமர்நாத்தில் மானசரோவர் என்ற ஒரு குளத்தைக் காண்பிக்கிறார்கள். அதில் ஸ்நானம் செய்வதால் பரி (தேவதை) ஆகிவிடுகிறார்கள் என்று கூறுகின்றனர். உண்மையில் இது ஞான மானசரோவர் ஆகும். ஞானக்கடல் தந்தை அமர்ந்து ஞான ஸ்நானம் செய்விக்கின்றார், இதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் பரிகள் (தேவதைகள்) ஆகிவிடு கிறீர்கள். பரிகள் என்ற பெயரைக் கேட்டு இறக்கைகள் உடைய மனிதர்களை உருவாக்கிவிட்டனர். உண்மையில் இறக்கை போன்றவற்றிற்கான விசயமே கிடையாது. ஆத்மா பறந்து செல்வதற் கான இறக்கை இப்பொழுது உடைந்துவிட்டது. சாஸ்திரங்களில் என்னென்ன விசயங்களை எழுதிவிட்டனர் ! இவர் கூட அதிக சாஸ்திரங்களைப் படித்திருக்கின்றார். இவருக்கும் கூட தந்தை கூறுகின்றார் - நீங்கள் தன்னுடைய பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நான் உங்களுடைய அனேகப் பிறவிகளின் கடைசிப் பிறவியில் பிரவேசம் செய்கின்றேன். கிருஷ்ணருடைய பிறப்பு சத்யுகத்தின் முதல் பிறப்பு ஆகும். சுயம்வரத்திற்குப் பிறகு இலட்சுமி, நாராயணர் ஆகின்றார்கள். யார் ஸ்ரீ நாராயணராக இருந்தாரோ, அவர் அனேகப் பிறவிகளின் இறுதியில் இப்பொழுது சாதாரணமாக இருக்கின்றார். பிறகு, அவசியம் அவருடைய உடலில் மட்டும் தான் வரவேண்டியதாக இருக்கிறது. பகவான் பதீத உலகத்தில் எவ்வாறு வருவார்! என்று சிலர் கூறுகின்றனர். புரிந்து கொள்ளாத காரணத்தினால் அனைவரையும் விட தூய்மையான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரை பகவான் என்று அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. பகவானோ நிராகாரமாக இருக்கின்றார். சிவன் என்ற அவருடைய பெயர் புகழ் வாய்ந்ததாகும். பிரஜாபிதா பிரம்மாவோ இங்கே இருக்கின்றார். சூட்சும வதனத்திலோ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றார்கள். இதைக் கூட நல்ல முறையில் புரியவைக்க வேண்டும். தாரணை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். தங்களுக்குள் ஒருவருக் கொருவர் இந்த நினைவை ஏற்படுத்த வேண்டும். பாபாவை நினைவு செய்கிறீர்கள், 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவு செய்கிறீர்கள். இப்பொழுது வீட்டிற்குச் செல்கிறீர்கள். இந்த பழைய உலகம், பழைய ஆடை ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். இப்பொழுது நாம் புது உலகத்திற்காக தயார் ஆகிக்கொண்டு இருக்கிறோம். பழைய உலகத்தின் போதை இல்லை. இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் போதை ஆகும், அந்த போதையைக் குறைப்பதற்குக் கடினமாக இருக்கிறது. ஏழைகளுடைய போதை குறைந்துவிடுகிறது. நான் ஏழைப் பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். இங்கே வருகின்றவர்களும் கூட ஏழ்மை யானவர்களே. தற்காலத்தில் கோடீஸ்வரரைத் தான் பணம் உடையவர் என்று கூறப்படுகின்றது. இலட்சாதிபதியை பணம் உடையவர் என்று சொல்வதில்லை. அவர்கள் இந்த ஞானத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. எங்களுக்கு கோடியோ, நூறு கோடியோ தேவையே இல்லை. என்ன செய்வது! நாங்கள் ஏழைகளின் ஒவ்வொரு பைசாவின் மூலம் சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். நாங்கள் பக்கா வியாபாரியாகவும் இருக்கிறோம். தேவையில்லாமல் பெறமாட்டோம், இல்லையெனில், திரும்பக் கொடுக்க வேண்டியதாக இருக்கும். உங்களுடையது குப்பைக் கூளங்கள் ஆகும். ஆகையால், கள்ளம் கபடமற்றவர் என்று அழைக்கப்படுகின்றார். ஏழ்மையிலும் ஏழ்மை யானவர்களே மாலையில் மணி ஆகிறார்கள். முயற்சியே அனைத்திற்கும் ஆதாரம் ஆகும், இதில் பணத்திற்கான விசயம் கிடையாது. படிப்பு விசயத்தில் ஏழ்மையானவர்கள் நன்றாக கவனம் கொடுப்பார்கள். படிப்பு ஒன்று தான் அல்லவா ! ஏழ்மையானவர்கள் நன்றாகப் படிப்பார்கள், ஏனெனில், செல்வந்தர்களுக்கு பணத்தின் போதை இருக்கின்றது.

நாம் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தோம், இப்பொழுது ஏழையாக இருக்கிறோம் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார். 84 பிறவிகளின் சக்கரத்தை அவசியம் சுற்ற வேண்டும். மறுபிறப்பைக் கூட நிரூபித்துக் கூற முடியும். செல்லமான குழந்தைகளாகிய நீங்கள் தான் 84 பிறவிகளின் சக்கரத்தில் வருகிறீர்கள். இதைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், வேறு எவருக்கும் தெரியாது. சக்கரம் முடிவடைகின்றது, இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். படிப்பை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். சித்திரத்தை வைத்திருந்தால் அதைப் பார்த்து சக்கரம் நினைவிற்கு வரும். சில சில பாடல்கள் கூட மிகவும் நன்றாக உள்ளன, அதைக் கேட்கும்பொழுது போதை ஏறுகிறது. நீங்கள் இப்பொழுது சிவபாபாவினுடையவர் ஆகியிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஆஸ்தி சாகார மானவர் மூலமாக நிராகாரமானவரிடமிருந்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது. சாகாரத்தில் வராதவரையில் நிராகாரமானவர் எவ்வாறு கொடுக்க முடியும்? எனவே, நான் இவருடைய அனேகப் பிறவிகளின் இறுதியில் பிரவேசம் செய்கின்றேன் என்று கூறுகின்றார். பிரஜாபிதா கூட இங்கே தேவை அல்லவா ! பிரம்மாவின் பெயர் புகழ் வாய்ந்ததாகும், பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர். குழந்தைகளுக்குக் குட்டிக்கரண விளையாட்டைப் பற்றியும் புரியவைக்கப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது பிராமணர்களாக இருக்கிறோம், பிறகு தேவதை ஆகப்போகிறோம். உச்சிக் குடுமி காண்பதற்குத் தெரிகிறது. மேலே சிவபாபா நட்சத்திரம் போல் இருக்கின்றார், எவ்வளவு சூட்சுமமாக இருக்கின்றார்! இவ்வளவு பெரிய லிங்கம் கிடையாது, இது பூஜைக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது. ருத்ர யக்ஞத்தைப் படைக்கும்பொழுது ஒரு பெரிய சிவலிங்கம் மற்றும் சின்னச் சின்ன சாலி கிராமங்களை உருவாக்குகின்றனர். செல்வந்தர்கள் அதிகமாக உருவாக்குகின்றனர். இவை அனைத்தும் துவாபர யுகத்திலிருந்து பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகிறது. முதலில் 16 கலைகள் உள்ளன, பிறகு 14 கலைகள், பிறகு கலைகள் குறைந்து குறைந்து இப்பொழுது எந்தக் கலையும் இல்லை. இதை தந்தை புரியவைக்கின்றார். தந்தை வேறு எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. பதிகளுக்கெல்லாம் பதியை எவ்வளவு நேரம் நினைவு செய்தேன் என்பதைக் குறித்துக் கொண்டே செல்லுங்கள். ஒருவருடன் மட்டும் நிச்சயம் செய்ய வேண்டும் அல்லவா ! உற்றார், உறவினர் போன்ற அனைவரையும் மறந்துவிட வேண்டும். ஒருவரிடம் மட்டும் அன்பு செலுத்த வேண்டும். இந்த விக் கடலிலிருந்து பாற்கடலிற்குச் செல்ல வேண்டும். ஆத்மாக்களின் இருப்பிடமோ பிரம்ம தத்துவம் ஆகும். பாற்கடலில் விஷ்ணுவைக் காண்பிக்கின்றனர். விஷ்ணு மற்றும் பிரம்மா. பிரம்மா மூலம் உங்களுக்குப் புரியவைக்கின்றார். பிறகு, நீங்கள் விஷ்ணுபுரி பாற்கடலிற்குச் சென்றுவிடுகிறீர்கள். என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள், வேறு எந்தக் கஷ்டமும் கொடுக்கவில்லை என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். இதை மட்டும் கூறுகின்றார் - ஹே, ஆத்மாக்களே! என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்களை பாகம் ஏற்று நடிப்பதற்காக அனுப்பி இருந்தேன். ஆடையின்றி (அசரீரியாக) வந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகின்றேன். முதன்முதலில் நீங்கள் தேவதை ஆகி சொர்க்கத்திற்கு வந்தீர்கள். பகவான் அனைவருடைய தந்தை எனில், அனைவரும் சொர்க்கத்திற்கு வரவேண்டும் அல்லவா! ஆனால், அனைத்து தர்மத்தினரும் வரமுடியாது. 84 பிறவிகளை தேவதைகள் தான் எடுக்கின்றனர். அவர்கள் தான் வர வேண்டும். இந்த அனைத்து விசயங்களையும் உங்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாது. நல்ல புத்தி யுடையவர்கள் தான் தாரணை செய்வார்கள். குறைவான சமயமே உள்ளது, ஆகையால், தன்னைத் தான் ஆத்மா என்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள். நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன், 84 பிறவிகள் முடிவடைந்து விட்டன. இப்பொழுது இது கடைசி பிறவி ஆகும். ஆத்மா உண்மையான தங்கம் ஆகிவிடும். சத்யுகத்தில் உண்மையான ஆபரணம் இருந்தது, இப்பொழுது அனைத்தும் பொய்யானது. இப்பொழுது நீங்கள் ஞானச் சிதையில் அமர்கிறீர்கள், தூய்மை ஆகிறீர்கள். ஒவ்வொரு சுவாசத்திலும் (மூச்சுக்கு மூச்சு) நினைவு செய்வீர்கள், என்றால் அந்த நிலை இறுதியில் ஏற்படும். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாற்கடலிற்குச் செல்வதற்காக ஒரு தந்தையிடம் மட்டும் உண்மையான அன்பு செலுத்த வேண்டும். ஒருவருடைய நினைவில் மட்டும் இருக்க வேண்டும். மேலும், அனைவருக்கும் ஒரு தந்தையின் நினைவை ஏற்படுத்த வேண்டும்.

2. அழியக்கூடிய பணத்தின் போதை இருக்கக் கூடாது. ஞான செல்வத்தின் போதையில் நிலையாக இருக்க வேண்டும். படிப்பின் மூலம் உயர்ந்த பதவியை அடைய வேண்டும்.

வரதானம்:
தந்தையின் உதவி மூலமாக ஊக்கம், உற்சாகம் மற்றும் களைப்பற்ற தன்மையிளை அனுபவம் செய்யக் கூடிய கர்மயோகி ஆவீர்களாக.

கர்மயோகி குழந்தைகளுக்கு கர்மத்தில் தந்தையின் துணை இருக்கும் காரணத்தால் கூடுதலான உதவி கிடைக்கிறது. எந்தவொரு காரியமும் எவ்வளவு தான் கடினமாக இருந்தாலும் சரி, ஆனால் தந்தையின் உதவி - ஊக்கம், உற்சாகம், தைரியம் மற்றும் களைப்பற்ற தன்மையின் சக்தி கொடுக்கக் கூடியதாக இருக்கும். எந்த காரியத்தில் ஊக்கம் உற்சாகம் இருக்கிறதோ, அது அவசியம் வெற்றி ஆகிறது. தந்தை தனது கைகளால் காரியம் செய்வதில்லை. ஆனால் உதவி அளிப்பதற்கான காரியம் அவசியம் செய்கிறார். எனவே ஆப் அவுர் பாப் - நீங்கள் மற்றும் தந்தை - அப்பேர்ப்பட்ட கர்மயோகி நிலை இருந்தது என்றால், ஒரு பொழுதும் களைப்பின் உணர்வு ஏற்படாது.

சுலோகன்:
எனது என்பதில் தான் கவர்ச்சி ஏற்படுகிறது, எனவே எனது என்பதை உனது என்று பரிவர்த்தனை செய்யுங்கள்.