02-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களுடைய அதிர்ஷ்டத்தை எதிர்கால புதிய உலகத்திற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த இராஜயோகமே புதிய உலகத்திற்கானதாகும்.

கேள்வி:

அதிர்ஷ்டசாலி குழந்தைகளினுடைய முக்கியமான அடையாளங்கள் என்னவாக இருக்கும்?

பதில்:

(1) அதிர்ஷ்டசாலி குழந்தைகள் முறைப்படி ஸ்ரீமத்படி நடப்பார்கள். சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு காரியத்தையும் செய்து தங்களைத் தாங்களே அல்லது தந்தையை ஏமாற்ற மாட்டார்கள். (2) அவர்களுக்கு படிப்பில் முழுமையான ஆர்வம் இருக்கும். மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கான ஆர்வம் கூட இருக்கும். (3) பாஸ் வித் ஆனார் ஆகி, ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்வார்கள். (4) ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். ஒரு பொழுதும் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்.....

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர் கள். புதியவர்களும் கேட்டீர்கள். பழையவர்களும் கேட்டீர்கள். குமாரிகளும் கேட்டீர்கள். இது பாட சாலை ஆகும். பாடசாலையில் ஏதாவதொரு அதிர்ஷ்டத்தை உருவக்குவதற்காக செல்கிறார்கள். அங்கு அநேகவிதமான பாக்கியம் இருக்கும். ஒருவர் மருத்துவர் ஆவதற்கான, மற்றொருவர் வழக்கறிஞர் ஆவதற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறார்கள். பாக்கியத்திற்கு லட்சியம், நோக்கம் என்று கூறப்படுகிறது. பாக்கியத்தை அமைக்காமல் பாடசாலையில் என்ன படிப்பார்கள். இங்கு நாம் புதிய உலகத்திற்காக, தங்களுடைய இராஜ்ய பாக்கியத்தை பெறுவதற்காக, அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்துள்ளோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இது புதிய உலகத்திற்கான இராஜயோகம் ஆகும். அவர்கள் பழைய உலகத்திற்காக வழக்கறிஞர், இஞ்ஜினியர், சர்ஜன் ஆகியோர் ஆகிறார்கள். அவ்வாறு ஆகி ஆகி இப்பொழுது பழைய உலகத்தின் காலம் மிகவும் குறைவாக உள்ளது. அதுவோ முடிந்து போய் விடும். அந்த அதிர்ஷ்டம் இந்த மரண உலகத்திற் காக உள்ளது. இந்த பிறவிக்காக உள்ளது. உங்களுடைய படிப்பு புது உலகத்திற்காக உள்ளது. நீங்கள் புது உலகத்திற்கான பாக்கியத்தை உருவாக்கி வந்துள்ளீர்கள். புது உலகத்தில் உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். யார் கற்பிக்கின்றார்? எல்லையில்லாத தந்தை. அவரிட மிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டி உள்ளது. எப்படி மருத்துவருக்கு தன்னுடைய கல்வியின் மூலம் மருத்துவத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது. நல்லது. வயதான பிறகு குருவிடம் செல்கிறார் கள். குருவிடம் என்ன விரும்புகிறார்கள்? எங்களுக்கு சாந்திதாமம் செல்வதற்கான அறிவுரை கொடுங்கள். எங்களுக்கு சத்கதி அளியுங்கள். இந்த உலகத்திலிருந்து விடுபட்டு சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கின்றார்கள். இந்த பிறவிக்காக தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. ஆனால் குருவிடமிருந்து எதுவும் கிடைப்பதில்லை. ஆசிரியரிடமிருந்து ஏதாவது கொஞ்சம் ஆஸ்தி பெறுகிறார்கள். ஏனெனில் தொழிலோ வேண்டும் அல்லவா? தந்தையின் ஆஸ்தி இருக்கும் பொழுது கூட தாங்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக படிக்கின்றார்கள். குருவிட மிருந்து எந்த வருமானமும் கிடைக்காது. ஆம், ஒரு சிலர் கீதை ஆகியவற்றை நல்லவிதமாக படித்து கீதையின் சொற்பொழிவு நிகழ்த்து கிறார்கள். இவை எல்லாம் குறுகிய கால சுகத்திற் கானதாகும். இப்பொழுது மரண உலகத்தின் கடைசி ஆகும். நாம் புதிய உலகத்தின் பாக்கியத்தை உருவாக்க வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பழைய உலகம் முடிய போகிறது. தந்தையினுடையது அல்லது தங்களுடையது - எல்லா சொத்தும் சாம்பலாகி விடும். பிறகு வெறுங்கையுடன் செல்வார்கள். இப்பொழுது புதிய உலகத்திற்காக சம்பாத்தியம் வேண்டும். பழைய உலகத்தின் மனிதர்கள் அதை செய்ய முடியாது. புதிய உலகத்தின் சம்பாத்தியத்தை செய்விப்பவர் சிவபாபாவே ஆவார். இங்கு நீங்கள் புதிய உலகத்திற்கான அதிர்ஷ்டத்தை அமைக்க வந்துள்ளீர்கள். அந்த தந்தையே உங்களுடைய தந்தையும் ஆவார், ஆசிரியரும் ஆவார், குருவும் ஆவார். மேலும் அவர் சங்கமத்தில் வருங்காலத்திற்கான சம்பாத்தியத்தை கற்பிப்பதற்காக வருகின்றார். இப்பொழுது இந்த பழைய உலகத்திலோ கொஞ்சம் நாட்கள் தான் உள்ளது. இது உலகத்தின் மனிதர்களுக்குத் தெரியாது. புது உலகத்திற்காக இவர் நமது தந்தை ஆசிரியர் சத்குரு ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல தந்தை வருகின்றார். ஒருவர் அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதில்லை என்றால், ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். ஒரே வீட்டில் மனைவி படிக்கிறார், கணவன் படிப்பதில்லை. இது போல ஆகிக் கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் குடும்பம் குடும்ப மாக வந்தார்கள். ஆனால் மாயையினுடைய புயல்கள் தாக்கியதால் ஆச்சரியப்படும் வகையில் ஞானத்தை கேட்டார் கள், (பிறருக்கு) கூறினார்கள். பிறகு தந்தையை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள், கூறினார்கள், தந்தையினுடையவர் ஆனார் கள், படிப்பை படிப்பித்தார்கள் பிறகும்.... ஐயோ இயற்கையே அனைத்தும் நாடகம். டிராமாவில் இருந்தது தான் நடந்தது அல்லவா? ஆஹா டிராமா, ஆஹா மாயா என்று சுயம் தந்தை கூறுகிறார். யாருடைய கையை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். கணவன், மனைவி ஒருவரையொருவர் விவாகரத்து செய்கிறார்கள். குழந்தைகள் தந்தையின் கையை விட்டு விட்டுப் போகிறார்கள். இங்கு அது கிடையாது. இங்கு கையை விட்டு விட்டு போக முடியாது. தந்தை குழந்தைகளுக்கு உண்மையான சம்பாத்தியம் செய்விக்க வந்துள்ளார். தந்தை யாரையாவது குழியில் தள்ளுவாரா என்ன? தந்தை பதீத பாவனராக, கருணை யுள்ளம் கொண்டவராக இருக்கின்றார். தந்தை வந்து துக்கத்திலிருந்து விடுவிக்கிறார் (லிபரேட்) மற்றும் (கைடு) வழிகாட்டியாகி அழைத்து செல்வார். இது போல எந்த ஒரு லௌகீக குருவும் நான் உங்களை அழைத்து செல்வேன் என்று கூறமாட்டார். சாஸ்திரங் களில் உங்கள் அனைவரையும் கூட்டிச் செல்வேன் என்று பகவான் கூறுகிறார் என்று உள்ளது. கொசுக்கள் போல எல்லோரும் போக வேண்டி உள்ளது. இப்பொழுது நாம் வீடு செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். இந்த சரீரத்தை விட வேண்டி உள்ளது. நீங்கள் இறந்தால் உலகமே இறந்து விட்டது போலத் தான். தன்னை ஆத்மா என்று மட்டும் உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவோ பழைய சீ-சீ சட்டை ஆகும். இந்த உலகம் பழையதாகும். எப்படி பழைய வீட்டில் உட்கார்ந்திருக்கையில் புதிய வீடு முன்னால் உருவாகிக் கொண்டு இருக்கும் பொழுது நமக்காக உருவாகி கொண்டிருக்கிறது என்று தந்தையும் நினைப்பார், குழந்தை களும் நினைப்பார்கள். புதிய வீட்டின் பக்கம் புத்தி சென்று விடும். இதில் இதை அமையுங் கள். இதை செய்யுங்கள் என்று புத்தி அதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிறகு பழையதை இடித்து விடுவார்கள். பற்று முழுவதும் பழையதிலிருந்து நீங்கி புதியதில் இணைந்து விடுகிறது. இது எல்லை யில்லாத உலகத்தின் விஷயம் ஆகும். பழைய உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்க வேண்டும். மேலும் புது உலகத்தின் மீது ஈடுபடுத்த வேண்டும். இந்த பழைய உலகம் முடியப் போகிறது என்று அறிந்துள்ளீர்கள். புது உலகம் என்பது சொர்க்க மாகும். அதில் நாம் இராஜ்ய பதவியை அடைகிறோம். எந்த அளவிற்கு யோகத்தில் இருப்பீர்களோ, ஞானத்தை தாரணை செய்வீர்களோ, மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்களோ, அந்த அளவிற்கு குஷியின் அளவு அதிகரிக்கும். மிகப் பெரிய பரீட்சையாகும். நாம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். செல்வந்தராக ஆவது நல்லது தானே ! நீண்ட ஆயுள் கிடைத்தால் நல்லது தானே! சிருஷ்டிச் சக்கரத்தை எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ, எத்தனை பேரை தனக்குச் சமானமாக ஆக்கு வீர்களோ, அந்த அளவிற்கு நன்மை உள்ளது. ராஜா ஆக வேண்டும் என்றால், பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். கண்காட்சியில் இத்தனை ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே பிரஜைகளாக ஆகிக் கொண்டே செல்வார்கள். ஏனெனில், இந்த அழிவற்ற ஞானம் அழிந்து போகாது. தூய்மையாக ஆகி தூய்மையான உலகத்திற்கு அதிபதி ஆக வேண்டும் என்பது புத்தியில் வரும். இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டி ருக்கிறது. இராவண இராஜ்யம் அழிந்து போய் விடும். சத்யுகத்தில் தேவதைகள் இருப்பார்கள்.

இலட்சுமி நாராயணரின் சித்திரத்தை அமைப்பவர்கள் அந்த படத்தில் முன் பிறவியில் இவர்கள் தமோபிரதான உலகத்தில் இருந்தார்கள். பிறகு இந்த முயற்சியினால் தமோபிரதான உலகத் திலிருந்து சதோபிரதானமான உலகிற்கு அதிபதி ஆகி விடுவார்கள் என்பதை எழுத வேண்டும் என்று பாபா புரிய வைத்திருந்தார். இராஜா பிரஜைகள் எல்லோருமே அதிபதி ஆகிறார்கள் அல்லவா? எங்களுடைய பாரதம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று பிரஜைகளும் கூறுவார்கள். உண்மையில் பாரதம் தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருந்தது. இப்பொழுது இல்லை. நிச்சயம் இருந்தது. இப்பொழுதோ முற்றிலுமே ஏழையாக ஆகி விட்டுள்ளது. பழைமையான பாரதம் எல்லாவற்றையும் விட செல்வந்தர் நாடாக இருந்தது. பாரதவாசிகளாகிய நாம் எல்லாவற்றையும் விட உயர்ந்த தேவதை குலத்தினராக இருந்தோம். வேறு யாரையும் தேவி தேவதை என்று கூற முடியாது. இப்பொழுது பெண் குழந்தைகளாகிய நீங்களும் படிக்கிறீர்கள். பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் அல்லவா? பாபா டைரக்சன் கொடுத்து இருந்தார் அல்லவா? எப்படி கண்காட்சிகளின் போது தந்தி அனுப்ப வேண்டும். அதை எழுதிக் கொண்டு வாருங்கள். உங்களிடம் படங்களும் உள்ளன. அவர்கள் இந்த பதவியை (லட்சுமி, நாராயணன்) எப்படி அடைந்தார்கள் என்பதை உங்களால் நிரூபித்துக் கூற முடியும். இப்பொழுது மீண்டும் சிவபாபாவிடமிருந்து இந்த பதவியை அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்களுடைய படமும் உள்ளது. சிவன் பரமபிதா பரமாத்மா ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரனின் படங்கள் உள்ளன. பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். விஷ்ணுபுரி எதிரிலேயே நிற்கிறது. விஷ்ணு மூலமாக புதிய உலகத்தின் பாலனை. விஷ்ணு, ராதை கிருஷ்ணரின் இரண்டு ரூபம் ஆகும். இப்பொழுது கீதையின் பகவான் யார் ஆகிறார்? முதலில் கீதையின் பகவான் நிராகார சிவன் ஆவாரே அன்றி கிருஷ்ணர் அல்ல என்பதை எழுதுங்கள். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா எப்படி ஆகிறார்? ஒரு படத்தைப் புரிய வைப்பதற்கே எவ்வளவு நேரம் பிடிக்கிறது. புத்தியில் விஷயம் பதிய வேண்டி உள்ளது. முதன் முதலிலோ இதைப் புரிய வைத்து, பின்னர் எழுத வேண்டும். பிரம்மா மூலமாக உங்களுக்கு யோகபலத்தினால் 21 பிறவிகளுக்கான அதிகாரம் கிடைக்கிறது என்று தந்தை கூறுகிறார். சிவபாபா பிரம்மா மூலமாக ஆஸ்தி அளித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் இவருடைய ஆத்மா கேட்கிறது. ஆத்மா தான் தாரணை செய்கிறது. அடிப்படை விஷயமே இது தான். சிவனுடைய படத்தை காண்பிக் கிறார்கள். இவர் பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். பிறகு பிரஜாபிதா பிரம்மாவும் அவசியம் வேண்டும். இங்கு பிரஜாபிதா பிரம்மாவின் பிரம்மாகுமார் குமாரிகள் ஏராளமாக உள்ளார்கள். பிரம்மாவின் குழந்தை ஆகாத வரை, பிராமணர்கள் ஆகாத வரை சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியை எப்படி எடுக்க முடியும்? விகாரத்தின் பிறப்பாக முடியாது. வாய் வழிவம்சாவளி என்றும் பாடப் படுகிறது. நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழி வம்சாவளி ஆவோம் என்று நீங்கள் கூறுவீர்கள். அவர்கள் குருக்களின் சீடர்கள் அல்லது பின் பற்றுபவர்களாக இருப்பார்கள். இங்கு நீங்கள் ஒருவரைத் தான் தந்தை, ஆசிரியர், சத்குரு என்று கூறுகிறீர்கள். அது கூட நிராகாரமான சிவபாபா ஞானக்கடல் நாலேஜ்ஃபுல் ஆக இருப்பவருக்குக் கூறுகிறீர்கள். அவர் படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானம் அளிக்கிறார். ஆசிரியராகவும் இருக்கிறார். நிராகாரமானவர் வந்து சாகாரத்தின் மூலமாகக் கூறுகிறார். ஆத்மா பேசுகிறது அல்லவா? எனது சரீரத்தினை கஷ்டப்படுத்தாதே என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா துக்கமடைகிறது. இச்சமயத்தில் பதீத ஆத்மாவாக உள்ளது. பதீதர்களை பாவனமாக ஆக்குபவர் பரமபிதா பரமாத்மா ஆவார். ஹே பதீத பாவனரே, ஹே காட்ஃபாதர் என்று ஆத்மா கூப்பிடுகிறது. இப்பொழுது தந்தை ஒருவரே அமர்ந்துள்ளார். பிறகும் யாரை நினைவு செய்கிறார்கள்? இது என்னுடைய ஆத்மாவின் தந்தை என்று ஆத்மா கூறுகிறது. அவர் சரீரத்தின் தந்தை ஆவார். இப்பொழுது நிராகாரமானவராக இருக்கும் ஆத்மாக்களின் தந்தை பெரியவரா, இல்லை சரீரத்தின் படைப்பு கர்த்தாவான சாகார தந்தை பெரியவரா என்பது புரிய வைக்கப்படுகிறது. சாகாரமானவர் நிராகாரமானவரை நினைவு செய்கிறார். இப்பொழுது எல்லோருக்குமே புரிய வைக்கப் படுகிறது. விநாசம் எதிரிலேயே உள்ளது. எல்லோரையும் திரும்ப அழைத்துச் செல்வதற்கு பரலோக தந்தை கடைசியில் வருகிறார். மற்றது அனைத்தும் விநாசம் ஆகப்போகிறது. இதற்கு மரண உலகம் என்று கூறப்படுகிறது. யாராவது இறந்து விட்டால் இன்னார் பரலோகம் சென்று விட்டார், சாந்தி தாமம் சென்றார் என்று கூறு கிறார்கள். பரலோகம் என்று சத்யுகத் திற்கு கூறப்படுகிறதா? இல்லை சாந்திதாமத்திற்குக் கூறப்படு கிறதா? என்று மனிதர்களுக்குத் தெரியாது. சத்யுகம் இங்கு இருக்கிறது. பரலோகம் என்று சாந்தி தாமத்திற்கு கூறுவார்கள். புரிய வைப்பதற்கான மிகுந்த யுக்தி (வழிமுறை) வேண்டும். கோவில் களுக்குப் போய் புரிய வைக்க வேண்டும். இது சிவபாபாவின் நினைவார்த்தம் ஆகும். அந்த சிவபாபா நமக்கு கற்பித்துக் கொண்டி ருக்கிறார். சிவன் உண்மையில் பிந்து ஆவார். ஆனால் பிந்து விற்கு எப்படி பூஜை செய்வது? பழங்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை எப்படி படைப்பது? எனவே பெரிய ரூபத்தை அமைத்துள்ளார்கள். இவ்வளவு பெரிய ரூபம் எதுவும் இருக்காது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்று பாடவும் படுகிறது. பெரிய பொருளாக இருந்திருந்தால் விஞ்ஞானிகள் சட்டென்று அதை பிடித்திருப்பார்கள். அவர் களுக்கு பரமபிதா பரமாத்மாவின் முழு அறிமுகம் கிடைக்கவில்லை என்று பாபா புரிய வைக்கிறார். அதற்கு அதிர்ஷ்டம் திறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் திறக்கப்படவில்லை. எதுவரை தந்தையை அறியவில்லையோ, தனது ஆத்மா பிந்துவாக உள்ளது என்று தெரிய வில்லையோ அதுவரை அதிர்ஷ்டம் திறக்கப்படாது. சிவபாபாவும் பிந்து ஆவார். நாம் பிந்துவை நினைவு செய்கிறோம். இவ்வாறு உணர்ந்து நினைவு செய்தால், விகர்மம் விநாசம் ஆகும். மற்றபடி இவை தெரிய வருகிறது அது வருகிறது... இதற்கு மாயையின் தடை என்று கூறப்படுகிறது. இப்பொழுது நமக்கு பரமாத்மா கிடைத்துள்ளார் என்ற குஷி இருக்கிறது. ஆனால் ஞானம் வேண்டும் அல்லவா? யாருக்கு கிருஷ்ணருடைய சாட்சாத்காரம் ஆகிறதோ, அவர்கள் குஷி ஆகி விடுகிறார்கள். பாபா கூறுகிறார் - கிருஷ்ணருடைய சாட்சாத்காரம் செய்து மிகுந்த மகிழ்ச்சியில் நடனம் புரிகிறார்கள். ஆனால் அவற்றால் எந்த ஒரு சத்கதியும் ஏற்படுவதில்லை. இந்த சாட்சாத் காரம் அனாயாசமாகவே ஆகி விடுகிறது. நல்ல முறையில் படிக்கவில்லை என்றால் பிரஜையில் சென்று விடுவார்கள். சிறிதளவு கேட்கிறார்கள் என்றால் கூட கிருஷ்ணபுரியில் சாதாரண பிரஜை யாக ஆகி விடு வார்கள். சிவபாபா நமக்கு இந்த ஞானம் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார்.

அவசியம் தூய்மை ஆக வேண்டும் என்பது பாபாவின் கட்டளை ஆகும். ஆனால் ஒரு சிலரால் தூய்மையாக இருக்க முடிவதில்லை. ஒரு சில நேரங்களில் பதீதமானவர்கள் இங்கு ஒளிந்து கொண்டு வந்து விடுகிறார்கள். தங்களுக்குத் தான் தீமை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். தந்தையை ஏமாற்றுவதற்கான விஷயமே கிடையாது. தந்தையை ஏமாற்றி ஏதாவது பைசா வாங்க வேண்டி உள்ளதா என்ன? சிவபாபாவின் ஸ்ரீமத்படி விதிப்படி நடக்கவில்லை என்றால், என்ன நிலைமை ஏற்படும். நிறைய தண்டனைகள் வாங்க வேண்டி வரும். இரண்டாவது, பதவியும் கூட இழிந்ததாக ஆகி விடும். சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாது. உனது நடத்தை சரியில்லை என்று தந்தை புரிய வைப்பார் அல்லவா? தந்தையோ சம்பாதிப் பதற்கான வழி கூறுகிறார். பிறகு யார் செய்கிறாரோ இல்லையோ, அது அவரது அதிர்ஷ்டம். தண்டனைகளைப் பெற்று சாந்திதாமத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. சத்யுகத்தில் பதவி இழிந்ததாகி விடும். பின்பு எதுவுமே கிடைக்காது. நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் இங்கு தந்தை யிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான விஷயம் ஆகும். பாபாவிடமிருந்து நாங்கள் சொர்க்கத்தின் சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவியை அடைந்து விடுவோம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். மாணவர்கள் கூட ஸ்காலர்ஷிப் பெறுகிறார்கள் அல்லவா? தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. யாரெல்லாம் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளார்களோ அவர்களுடைய மாலை அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த அளவிற்கு எப்படி தேர்ச்சி பெறுவார் களோ அந்த அளவிற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். விருத்தி ஆகி ஆகி ஆயிரக்கணக் கானோர் ஆகி விடுகிறார்கள். இராஜ்ய பதவி என்பது ஸ்காலர்ஷிப். யார் நல்ல முறையில் படிப்பை படிக்கிறார்களோ அவர்கள் மறைமுகமாக இருக்க முடியாது. நிறைய புத்தம் புதியவர்கள் பழையவர்களை விட முன்னால் வெளிப்படுவார்கள். வைரம் போன்ற வாழ்க்கை அமைப்பார்கள். தங்களுடைய உண்மையான சம்பாத்தியம் செய்து 21 பிறவிகளுக் கான ஆஸ்தியைப் பெறுவார்கள். எவ்வளவு குஷி ஏற்படுகின்றது. இந்த ஆஸ்தியை இப்பொழுது எடுக்கவில்லை என்றால் பிறகு ஒரு பொழுதும் எடுக்க முடியாது என்பதை அறிந்துள்ளார்கள். படிப்பினுடைய ஆர்வம் இருக்கிறது அல்லவா? ஒரு சிலருக்கு சிறிதளவு கூட புரிய வைப்பதற்கான ஆர்வம் இல்லை. நாடகப்படி அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் பகவான் கூட என்ன செய்ய முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. எந்த ஒரு செயலையும் ஸ்ரீமத்திற்குப் புறம்பாக செய்யக் கூடாது. படிப்பை நல்ல முறையில் படித்து உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்க வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது.

2. இந்த பழைய உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்கி விட வேண்டும். புத்தியோகத்தை புது உலகத்தின் மீது ஈடுபடுத்த வேண்டும். குஷியில் இருப்பதற்காக ஞானத்தை தாரணை செய்து மற்றவர்களுக்கு தாரணை செய்விக்க வேண்டும்.

வரதானம்:

லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கு) இன் ஸ்திதி மூலமாக பாவ கர்மங்களை அழிக்கக் கூடிய புண்ணிய ஆத்மா ஆகுக

வெளிச்சம் இருக்கும் இடத்தில் எந்தவொரு பாவ செயலும் ஏற்படாது. எனவே சதா லைட் ஹவுஸின் மன நிலையில் இருப்பதால் மாயா எந்தவிதத்திலும் பாவ காரியம் செய்ய வைக்க முடியாது. சதா புண்ய ஆத்மாவாக ஆகிவிடலாம். புண்ய ஆத்மாக்கள் எண்ணத் திலும் கூட எந்தவித பாவ செயல் செய்ய முடியாது. பாவம் ஏற்படும் இடத்தில் பாபாவின் நினைவு இருக்காது. எனவே நான் புண்ணிய ஆத்மா, எனக்கு முன்னால் பாவம் வர முடியாது என்ற உறுதியான எண்ணத்தை கொண்டு வாருங்கள். கனவு மற்றும் எண்ணத் திலும் கூட பாவத்தை வர விடாதீர்கள்.

சுலோகன்:

யார் ஒவ்வொரு காட்சியையும் சாட்சியாக இருந்து பார்க்கிறார்களோ, அவர்கள் தான் சதா புன்முறுவலுடன் இருக்கிறார்கள்.