02-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இது மரண உலகத்தின் முடிவாகும். அமர உலகத்தின் ஸ்தாபனை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் மரண உலகத்தில் இருப்பவர்களை நினைக்க வேண்டாம்.

கேள்வி:

பாபா தன்னுடய ஏழை குழந்தைகளுக்கு என்ன நினைவு படுத்துகிறார்?

பதில்:

குழந்தைகளே, நீங்கள் எப்போது தூய்மையாக இருந்தீர்களோ அப்போது மிகவும் சுகமாக இருந்தீர்கள். உங்களைப் போன்று பணக்காரர்கள் வேறு யாரும் இல்லை. நீங்கள் அளவற்ற சுகமுடையவராக இருந்தீர்கள். பூமி, ஆகாயம் அனைத்தும் உங்கள் கையில் இருந்தது. இப்போது பாபா மீண்டும் உங்களை செல்வந்தர்களாக மாற்றுவதற்கு வந்திருக்கிறார்.

பாடல்:
கண்ணில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபுவே...

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், ஆத்மாக்கள் பாடலைக் கேட்டீர் களா? யார் கூறியது? ஆத்மாக்களின் ஆன்மீகத் தந்தை. ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையை பாபா என் கின்றனர். அவருக்கு ஈஸ்வரர் என்றும் கூறப்படுகிறது. தந்தை என்றும் கூறப்படுகிறது. எப்படிப்பட்ட தந்தை? பரம தந்தை. இரண்டு தந்தையர் இருக்கின்றனர். ஒருவர் லௌகீகம், இன்னொருவர் பரலௌகீக தந்தை ! லௌகீக தந்தையின் குழந்தைகள் பரலௌகீக தந்தையை அழைக்கிறார்கள். ஓ, பாபா, பாபாவின் பெயர்? சிவன். அந்த சிவன் நிராகாரி பூஜிக்கப்படுகிறார். அவருக்கு சுப்ரீம் பாதர் என்று கூறப்படுகிறது. லௌகீக தந்தையை சுப்ரீம் என்று கூற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே ஆவார். அனைத்து ஜீவாத்மாக்களும் அந்த தந்தையை நினைக்கிறார்கள். நம்முடைய தந்தை யார்? என்பதை மறந்து விட்டனர். ஓ, இறை தந்தையே, கண்ணில்லாத எங்களுக்கு கண்ணைக் கொடுத்தால் நாங்கள் எங்களுடைய தந்தையை அறிந்துக் கொள்வோம் என அழைக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் நாம் குருடர்களாகி தாழ்ந்த நிலையை அடைந்து திரிந்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த தாழ்ந்த நிலையிலிருந்து விடுவியுங்கள் என்கின்றனர். பாபா தான் கல்ப கல்பமாக வந்து பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறார். இது கலியுகம் ஆகும். சத்யுகம் வரப்போகிறது. கலியுகம் மற்றும் சத்யுகத்திற்கு இடைப்பட்டது சங்கமம் எனப்படுகிறது. இது புருஷோத்தம சங்கமம் ஆகும். எல்லையற்ற தந்தை வந்து யார் கீழானவர்களாகி விட்டனரோ அவர்களை சிரேஷ்டமானவர்களாக புருஷோத்தமர்களாக மாற்றுகின்றார். லஷ்மி நாராயணன் புருஷோத் தமர்களாக இருந்தனர். லஷ்மி நாராயண வம்சத்தின் இராஜ்யம் இருந்தது. தந்தை வந்து இவற்றை நினைவு படுத்துகிறார். பாரதவாசிகளாகிய நீங்கள் இன்றிலிருந்து 5000 வருடத்திற்கு முன்பு சொர்க்கவாசியாக இருந்தீர்கள். இப்போது நரகவாசி ஆகிவிட்டீர்கள். இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் இருந்தது. பாரதத்திற்கு நிறைய மகிமை இருந்தது. தங்கம் வைரத்திலான மாளிகை இருந்தன. இப்போது எதுவும் இல்லை. அச்சமயம் வேறு எந்த தர்மமும் இல்லை. சூரிய வம்சத்தினர் இருந்தனர். சந்திர வம்சத்தினர் பின்னால் வருகின்றனர். நீங்கள் தான் சூரிய வம்சத்தினராக இருந்தீர்கள் என பாபா புரிய வைக்கிறார். இது வரை லஷ்மி நாராயணரின் கோயிலைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் எப்போது இருந்தது? எப்படி இராஜ்யத்தை அடைந்தனர்? இது யாருக்கும் தெரியவில்லை. பூஜை செய்கிறார்கள். ஆனால் அறியவில்லை என்றால் மூட நம்பிக்கை அல்லவா ! சிவனை, லஷ்மி நாராயணரை பூஜை செய்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை வரலாற்றினை யாரும் அறியவில்லை. பாரதவாசிகளே, நாங்கள் பதீதமாக இருக்கிறோம் என கூறுகிறார்கள். ஓ, பதீத பாவனா! பாபா வாருங்கள், வந்து எங்களை துக்கத்திலிருந்து, இராவண இராஜ்யத்திலிருந்து விடுவியுங்கள் என அழைக்கின்றனர் தந்தை வந்து அனைவரையும் விடுவிக்கிறார். சத்யுகத்தில் ஒரே ஒரு இராஜ்யம் தான் இருந்தது என குழந்தைகள் அறிகிறார்கள். காங்கிரஸ்காரர்கள் மற்றும் பாபுஜி கூட எங்களுக்கு மீண்டும் இராம இராஜ்யம் வேண்டும் என்று தான் கேட்டார்கள். நாம் சொர்க்கவாசியாக மாற விரும்புகின்றோம். இப்போது நரகவாசிகளின் நிலை என்ன என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நரகம், பேய் உலகம் என கூறப்படுகிறது. இதே பாரதம் தெய்வீக உலகமாக இருந்தது. இப்போது பேய் உலகமாகி விட்டது.

நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். 84 லட்சம் இல்லை என பாபா புரிய வைக்கிறார். இது போன்று சாஸ்திரங்களில் கட்டுக் கதைகளை எழுதி விட்டனர். இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு சத்கதியின் வழி இருந்தது அங்கே பக்தியும் இல்லை. துக்கத்தின் பெயர் அடையாளமும் கிடையாது. அதற்கு சுகதாமம் என்று கூறப்படுகிறது. உண்மையில் நீங்கள் சாந்தி தாமத்தைச் சார்ந்தவர்கள் என பாபா புரிய வைக்கின்றார். இங்கே நீங்கள் நடிப்பதற்காக வந்துள்ளீர்கள். மறுபிறவி 84 தான் எடுக்கிறீர்கள். இப்போது எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். பாபா ஆத்மாக்களாகிய உங்களிடம் பேசுகின்றார். மற்ற சத்சங்கங்களில் மனிதர்கள் மனிதர்களுக்கு பக்தியின் விஷயத்தைக் கூறுகிறார்கள். அரை கல்பமாக பாரதம் சொர்க்கமாக இருந்தது. ஒருவர் கூட அழுக்காக இல்லை. இப்போது ஒருவர் கூட தூய்மையாக இல்லை. இதுவே அழுக்கான உலகமாகும். கீதையில் கிருஷ்ண பகவான் கூறினார் என எழுதி விட்டனர். கிருஷ்ணர் பகவானும் இல்லை. அவர் கீதையை கூறவும் இல்லை என பாபா புரிய வைக்கின்றார். இந்த மக்கள் தங்களது தர்ம சாஸ்திரத்தை கூட அறியவில்லை. தர்மத்தை மறந்து விட்டனர். முக்கியமான தர்மங்கள் 4 ஆகும். முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சூரிய வம்சமும் பின்னால் சந்திர வம்சம் இரண்டும் சேர்ந்து தேவி தேவதா தர்மம் எனப்படுகிறது. அங்கே துக்கத்தின் அடையாளம் எதுவும் இல்லை. நீங்கள் 21 பிறவிகள் சுகதாமத்தில் இருந்தீர்கள். பிறகு இராவண இராஜ்ஜியம், பக்தி மார்க்கம் (வழி) ஆரம்பம் ஆகிறது. சிவபாபா எப்போது வருகின்றார்? எப்போது இரவாகிறது. பாரத வாசிகள் காரிருளில் வரும் போது தான் பாபா வருகிறார். பொம்மைகளின் பூஜையை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரேயொருவருடைய வாரலாறு கூடத் தெரியவில்லை. பக்தி மார்க்கத்தில் பல்வேறு விதமாக அலைந்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். தீர்த்த யாத்திரைக்ளுக்குச் செல்லுங்கள், சுற்றுங்கள் எந்த பிராப்தியும் இல்லை நான் வந்து உங்களுக்கு பிரம்மா மூலமாக உண்மையான ஞானத்தைக் கூறுகிறேன் என பாபா கூறுகின்றார். எங்களுக்கு சுகதாமம் மற்றும் சாந்தி தாமத்திற்கு வழி காட்டுங்கள் என அழைக்கிறார்கள். இன்றிலிருந்து 5000 வருடத்திற்கு முன்பு நான் உங்களை மிகவும் பணக்காரராக மாற்றினேன் என பாபா கூறுகின்றார். இவ்வளவு செல்வத்தை அளித்தேன். பிறகு எங்கே இழந்தீர்கள். நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தீர்கள். பாரதம் என்று யார் சொல்வார்கள். பாரதம் தான் அனைத்தையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த கண்டமாக இருந்தது. உண்மையில் அனைவரின் தீர்த்த ஸ்தல மாகும். ஏனென்றால் பதீத பாவனர் தந்தையின் பிறப்பிடம் ஆகும். எந்தெந்த தர்மத்தினராக இருந்தாலும் தந்தை வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். இப்போது இராவண ராஜ்யம் இலங்கையில் மட்டும் அல்ல, முழு சிருஷ்டியிலும் இருக்கிறது. சூரிய வம்சத்தின் ராஜ்யம் இருந்த போது விகாரம் இல்லை. பாரதம் விகாரம் அற்றதாக இருந்தது. இப்போது விகாரம் நிறைந்ததாக இருக்கிறது. அனைவரும் நரகவாசிகளக இருக்கின்றனர். சத்யுகத்தின் தெய்வீக சம்பிரதாயத்தினராக இருந்தவர்களே 84 பிறவிகளை அனுபவித்து அசுர சம்பிரதாயத்தினராக மாறியிருக்கின்றனர். பாரதம் மிகவும் பணக்கார நாடாக இருந்தது. இப்போது ஏழையாகி விட்டது. ஆகவே, பிச்சை எடுத்துக் கொண்டிருக் கின்றனர். பாபா ஏழை குழந்தைகளாகிய உங்களுக்கு, நீங்கள் எவ்வளவு சுகம் நிறைந்தவராக இருந்தீர்கள் என நினைவு படுத்துகின்றார். உங்களைப் போன்ற சுகம் வேறு யாருக்கும் இல்லை. பூமி, ஆகாயம் அனைத்தும் உங்கள் கையில் இருந்தது. சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுளை நீண்ட தாகக் காண்பித்து, அனைவரையும் கும்பகர்ணனின் அசுர தூக்கத்தில் தூங்க வைத்து விட்டனர். இந்த பாரதம் சிவபாபா ஸ்தாபனை செய்த சிவாலயமாக இருந்தது. அங்கே தூய்மை இருந்தது. அந்த புதிய உலகில் தேவி தேவதைகள் ஆட்சி செய்தனர். இராதை கிருஷ்ணர் தங்களுக்குள் என்ன உறவு என்பதை மனிதர்கள் அறியவில்லை. இருவரும் வெவ்வேறு இராஜ்ஜியத்தினராக இருந்தனர். சுயம்வரத்திற்குப் பிறகு லஷ்மி நாராயணன் ஆகினர். இந்த ஞானம் எந்த மனிதருக்குள்ளும் இல்லை. ஆன்மீக ஞானத்தை ஒரு தந்தை மட்டுமே அளிக் கின்றார். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று பாபா கூறுகிறார். தங்களுடைய பரம தந்தையை நினையுங்கள். நினைவினால் தான் அழுக்கிலிருந்து தூய்மையாக முடியும். மனிதனிலிருந்து தேவதை அல்லது அழுக்கிலிருந்து தூய்மையாவதற்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள். இப்போது இது இராவண இராஜ்யம் ஆகும். பக்தியில் இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகிறது. பக்தி செய்பவர்கள் அனைவரும் இராவணனின் சிறையில் இருக்கிறார்கள். முழு உலகமும் 5 விகாரங்கள் என்ற இராவணனின் கைதியாக இருக்கிறது. சோக வனத்தில் இருக்கிறார்கள். தந்தை வந்து அனைவரையும் விடுவித்து வழிகாட்டியாகி உடன் அழைத்துச் செல்கிறார். அதற்காகத் தான் இந்த மகாபாரத போர் ! இது 5000 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்போது பாபா மீண்டும் சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். யாரிடம் நிறைய செல்வம் இருகிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பது கிடையாது. இப்போது இருப்பதோ நரகம் ஆகும். பதீத பாவனர் என்று தந்தைக்குத் தான் கூறப்படுகிறது. நதிக்குக் கிடையாது. இது அனைத்தும் பக்தி மார்க்கமாகும். இந்த விஷயங்களை பாபா தான் வந்து புரிய வைக்கின்றார். ஒன்று லௌகீக தந்தை, இரண்டாவது பாரலௌகீக தந்தை, மூன்றாவது அலௌகீக தந்தை இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது பாரலௌகீக தந்தை சிவபாபா பிரம்மா மூலமாக பிராமண தர்மத்தை உருவாக்குகின்றார். பிராமணர்களை தேவதையாக மாற்றுவதற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஆத்மா தான் மறுபிறவி எடுக்கின்றது. நான் ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறேன் என ஆத்மா தான் கூறுகிறது. தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைத்தால் நீங்கள் தூய்மையாவீர்கள் என பாபா கூறுகின்றார். எந்த ஒரு தேகதாரியையும் நினைக்காதீர்கள். இது மரண உலகத்தின் முடிவாகும். அமர உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்ற தர்மங்கள் அனைத்தும் அழிந்து போகும். சத்யுகத்தில் ஒரேயொரு தேவி தேவதா தர்மம் இருந்தது. பிறகு சந்திர வம்சத்தைச் சார்ந்த இராம், சீதா திரேதாவில் இருந்தனர். குழந்தைகளாகிய உங்களுக்கு முழு சக்கரத்தை நினைவு படுத்துகிறார். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தின் ஸ்தாபனையை பாபா தான் செய்விக்கிறார். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதியை அளிக்க முடியாது. அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் ஆவர்.

இப்போது நீங்கள் ஈஸ்வரிய சந்ததியினர் ஆவர். பாபாவிடமிருந்து இராஜ்ஜிய பாக்கியத்தை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இராஜ்ஜியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நிறைய பிரஜைகள் உருவாக வேண்டும். கோடியில் ஒரு சிலர் இராஜா ஆகிறார்கள். சத்யுகத்திற்கு மலர்களின் தோட்டம் என்று கூறப்படுகிறது. இப்போது முள் காடாக இருக்கிறது. இராவண இராஜ்யம் மாறிக் கொண்டிருக்கிறது. வினாசம் நடக்க வேண்டும். இப்போது இந்த ஞானம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. லஷ்மி நாராயணனுக்கு இந்த ஞானம் இல்லை. மறைந்து போய் விடுகிறது. பக்தி மார்க்கத்தில் பாபாவை பற்றி யதார்த்தமாக புரிந்துக் கொள்ள வில்லை. பாபா படைப்பவர் ஆவார். பிரம்மா விஷ்ணு சங்கரும் படைப்பாகும். சர்வ வியாபி என கூறுவதால் ஆஸ்தியில் உரிமை இல்லாது போகிறது. தந்தை வந்து அனைவருக்கும் ஆஸ்தியை அளிக்கிறார். யார் முதன் முதலில் சத்யுகத்தில் வருகிறார்களோ அவர்களே 84 பிறவிகளை எடுக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கிட்டதட்ட 40 பிறவிகள் எடுப்பார்கள். ஒரு பகவானைத் தேடுவதற் காக எவ்வளவு அலைகிறார்கள். இப்போது நீங்கள் அலைய வேண்டிய தில்லை. ஒரு தந்தையை நினைத்தால் அழுக்கிலிருந்து தூய்மையாகி விடலாம். இது யாத்திரையாகும். இது இறைவனுடைய யுனிவர்சிட்டி ஆகும். உங்களுடைய ஆத்மா படிக்கின்றது. ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று சாது சன்னியாசிகள் கூறி விடுகின்றனர். ஆனால் ஆத்மா தான் கர்மங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவியை எடுக்கிறது. ஆத்மா தான் நல்ல மற்றும் கெட்ட கர்மங்களை செய்கிறது. இச்சமயம்(கலியுகத்தில்) உங்களுடைய கர்மம் விகர்மம் ஆகிறது. சத்யுகத்தில் உங்களுடைய கர்மம் அகர்மம் ஆகிறது. அங்கே விகர்மம் நடப்பதில்லை. அது புண்ணிய ஆத்மாக்களின் உலகம் ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒரு தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தை அடைய வேண்டும். சிரேஷ்ட கர்மம் செய்ய வேண்டும். தந்தை கிடைத்த பிறகு எந்த ஒரு நஷ்டத்தையும் அடையக் கூடாது.

2. பாபா நினைவு படுத்தி இருப்பதை நினைவில் வைத்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். எந்த ஒரு தேகதாரியையும் நினைக்கக் கூடாது.

வரதானம்:

நிமித்தம் என்ற நினைவு மூலம் தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தின் மீதும் கவனம் கொடுக்கக்கூடிய நிவாரண சொரூபம் ஆகுக.

நிமித்தமாகி இருக்கக்கூடிய ஆத்மாக்கள் மீது அனைவருடைய பார்வையும் உள்ளது. ஆகையினால், நிமித்தமாகி இருப்பவர்கள் விசேமாக தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தின் மீதும் கவனம் கொடுக்க வேண்டும். ஒருவேளை, நிமித்தமாகி இருக்கக்கூடிய குழந்தைகள் கூட ஏதாவது காரணம் சொல்கின்றார்கள் என்றால் அவர்களைப் பின்பற்றக்கூடியவர்களும் அனேக காரணங் களை சொல்லிவிடுகின்றார்கள். ஒருவேளை, நிமித்தமாக இருப்பவர்களிடம் ஏதாவது குறை இருக்கிறது என்றால் அதை மறைக்க முடியாது. ஆகையினால், விசேமாக தன்னுடைய எண்ணம், வார்த்தை மற்றும் கர்மத்தின் மீது கவனம் கொடுத்து நிவாரண சொரூபம் ஆகுங்கள்.

சுலோகன்:

யாரிடம் தன்னுடைய குணங்கள் மற்றும் விசேசத் தன்மைகளுடைய அபிமானம் இல்லையோ, அவர்களே ஞான சொரூப ஆத்மா ஆவார்கள்.


மாதேஸ்வரி அவர்களுடைய விலைமதிப்பற்ற மகாவாக்கியம மனிதருடைய இலட்சியம் என்ன? அதை அடைவதற்கான சரியான வழி

தன்னுடைய வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக உருவாக்குவதற்கு எது சரியானது? என்பதை ஒவ்வொரு மனிதரும் அவசியம் சிந்திக்க வேண்டும். மனிதருடைய வாழ்க்கை எதற்காக? அதில் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறதா? என்று இப்பொழுது தன்னுடைய உள்ளத்தில் கேட்க வேண்டும். இந்த வாழ்க்கையின் இலட்சியம் என்ன? என்ற இந்த ஞானம் மனித வாழ்க்கையில் முதலில் தேவை. இந்த வாழ்க்கைக்கு எப்பொழுதும் சுகம் மற்றும் சாந்தி தேவை என்பதை அவசியம் ஏற்றுக் கொள்வார்கள். அது இப்பொழுது கிடைத்துக்கொண்டு இருக்கிறதா? இந்த பயங்கரமான கலியுகத் தில் துக்கம், அசாந்தியைத் தவிர வேறு எதுவுமே இல்லை. சுகம், சாந்தி எவ்வாறு கிடைக்கும்? என்பதை இப்பொழுது சிந்திக்க வேண்டும். சுகம் மற்றும் சாந்தி என்ற இந்த இரண்டு வார்த்தைகள் அவசியம் இந்த உலகத்தில் எப்பொழுதோ இருந்திருக்கும், ஆகையினாலேயே, இந்த இரண்டையும் வேண்டுகின்றார்கள். ஒருவேளை, யாராவது ஒரு மனிதர் நாம் அப்படிப்பட்ட உலகத்தைப் பார்த்ததே இல்லை, பிறகு அந்த உலகத்தை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வீர்கள் என்று கேட்கலாம். பகல் மற்றும் இரவு என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன என்றால் அவசியம் இரவு மற்றும் பகல் என்பது இருந்து வந்திருக்கும் என்று புரியவைக்கப்படுகிறது. நாங்கள் இரவைத் தான் பார்த்திருக்கிறோம், எனவே, பகலை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று எவரும் சொல்ல முடியாது. ஆனால், இரண்டு வார்த்தைகளும் உள்ளன என்றால் அதனுடைய பாகமும் இருந்திருக்கும். அவ்வாறே, இந்தக் கலியுகத்தை விட ஒரு உயர்ந்த நிலையும் இருந்தது, அதை சத்யுகம் என்று சொல்லப்படுகிறது என்பதை நாமும் கேட்டிருக்கிறோம் ஒருவேளை, காலம் இதுபோன்றே நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றால் பிறகு, அந்த சமயத்திற்கு சத்யுகம் என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? எனவே, இந்த சிருஷ்டியானது தனது நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. எவ்வாறு குழந்தைப் பருவம், பால்ய பருவம், இளமைப் பருவம், வயோதிகப் பருவம் இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கிறதோ, அவ்வாறே சிருஷ்டியும் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்றைய வாழ்க்கை மற்றும் அந்த வாழ்க்கைக்கு இடையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது! எனவே, அந்த சிரேஷ்ட வாழ்க்கையை உருவாக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

நிராகாரி உலகம், ஆகாரி உலகம் மற்றும் சாகாரி உலகத்தின் விஸ்தாரம்

இந்த முழு பிரம்மாண்டத்திற்குள் மூன்று உலகங்கள் உள்ளன - ஒன்று நிராகாரி உலகம், இரண்டாவது ஆகாரி, மூன்றாவது சாகாரி உலகம். நிராகார உலகத்தில் ஆத்மாக்கள் நிவாசம் செய்கின்றார்கள் மற்றும் சாகார உலகத்தில் சாகார மனித சம்பிரதாயத்தினர் வசிக்கின்றார்கள் என்பதை இப்பொழுது அறிந்துகொண்டோம். மீதம் உள்ளது ஆகாரி சூட்சும உலகம். இந்த ஆகாரி உலகம் எப்பொழுதும் உள்ளதா அல்லது கொஞ்ச சமயத்திற்கு அதனுடைய நடிப்பு உள்ளதா? என்ற எண்ணம் இப்பொழுது வருகிறது. சூட்சும உலகம் மேலே உள்ளது, அங்கு ஃபரிஷ்தாக்கள் இருக்கின்றனர் அதையே சொர்க்கம் என்று கூறுகின்றார்கள், அங்கு சென்று சுகத்தை அனுபவிப் போம் என்று உலகாய மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால், சொர்க்கம் மற்றும் நரகம் இந்த சிருஷ்டியின் மீது தான் நடக்கிறது என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. மற்றபடி இந்த சூட்சும ஆகாரி உலகம் என்ன உள்ளதோ, எங்கு சுத்த ஆத்மாக்களின் காட்சி கிடைக்கிறதோ, அது துவாபர யுகத்திலிருந்து ஆரம்பமாகி உள்ளது. எப்பொழுது பக்தி மார்க்கம் ஆரம்பமானதோ, அப்பொழுதிலிருந்து இருக்கிறது. மற்றபடி சூட்சும உலகம் எப்பொழுதும் உள்ளது என்று கூற முடியாது. அதில் கூட குறிப்பாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரருடைய காட்சி இந்த சமயத்தில் நமக்குக் கிடைக்கிறது. ஏனெனில், இதே சமயத்தில் தான் பரமாத்மா மூன்று காரியத்தை செய்வதற்காக மூன்று ரூபத்தைப் படைக்கின்றார். நல்லது. ஓம் சாந்தி.