02.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது புருஷோத்தம சங்கமயுகமாகும். பழைய உலகம் மாறி இப்பொழுது புதியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து உத்தம தேவ பதவியை அடைய வேண்டும்.

 

கேள்வி:

சேவை செய்யக் கூடிய குழந்தைகளின் புத்தியில் எந்த ஒரு விஷயம் எப்பொழுதும் நினைவிலிருக்கும்?

 

பதில்:

செல்வம் தானம் கொடுக்கக் கொடுக்க செல்வம் குறையாது என்பது அவர் களுக்கு நினைவில் இருக்கும். எனவே அவர்கள் இரவு பகலாக தூக்கத்தையும் தியாகம் செய்து ஞான செல்வத்தின் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். களைப்படைய மாட்டார்கள். ஆனால் சுயம் தங்களுக்குள்ளே ஏதாவது அவகுணம் இருந்தது என்றால், சேவை செய்வதற்கு கூட ஊக்கம், உற்சாகம் வராது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்காக தந்தை வந்து புரிய வைக்கிறார். பரமபிதா ஒவ்வொரு நாளும் புரிய வைக்கிறார் என்பதை குழந்தை கள் அறிந்துள்ளார்கள். எப்படி ஆசிரியர் தினந்தோறும் கற்பிக்கிறார். தந்தை அறிவுரை மட்டும் அளிப்பார், பராமரித்துக் கொண்டு இருப்பார். ஏனெனில், தந்தையினுடைய வீட்டில் தான் குழந்தைகள் இருக்கிறார்கள். தாய் தந்தை கூட இருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம் ஆகும். ஆன்மீகத் தந்தையிடம் நீங்கள் இருக்கிறீர்கள். ஒன்று ஆன்மீகத் தந்தையிடம் மூலவதனத்தில் இருக்கிறீர்கள். பிறகு கல்பத்தில் ஒரே ஒரு முறை தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தி அளிக்க அல்லது தூய்மையாக்க, சுகம் அல்லது சாந்தியை அளிக்க வருகிறார். எனவே அவசியம் கீழே வந்து இருக்கக்கூடும். இதில் தான் மனிதர்களுக்கு குழப்பம் உள்ளது. சாதாரண உடலில் பிரவேசம் செய்கிறார் என்ற பாடலும் உள்ளது. இப்பொழுது சாதாரண உடல் எங்கிருந்தோ பறந்து கொண்டு ஒன்றும் வருவதில்லை. அவசியம் மனித உடலில் தான் வருகிறார். அதுவும் நான் இந்த உடலில் பிரவேசம் செய்கிறேன் என்று அவரே கூறுகிறார். தந்தை நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி அளிக்க வந்துள்ளார் என்று குழந்தைகளாகிய நீங்கள் கூட இப்பொழுது புரிந்துள்ளீர்கள். அவசியம் நாம் தகுதி உடையவர்களாக இல்லை. தூய்மையற்றவராக ஆகி விட்டுள்ளோம். ஹே பதீத பாவனரே ! வாருங்கள் வந்து தூய்மையற்றவர்களாகிய எங்களை தூய்மை ஆக்குங்கள் என்று எல்லோரும் கூறவும் செய்கிறார்கள். எனக்கு கல்ப கல்பமாக தூய்மை இழந்தவர்களை தூய்மை ஆக்குவதற்கான கடமை கிடைத்துள்ளது என்று தந்தை கூறுகிறார். ஹே குழந்தைகளே ! இப்பொழுது இந்த தூய்மை இல்லாத உலகத்தை தூய்மைபடுத்த வேண்டும். பழைய உலகத்திற்கு தூய்மையற்றது என்றும் புதிய உலகத் திற்கு தூய்மையானது என்றும் கூறுவார்கள். அதாவது பழைய உலகத்தை புதியதாக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார். கலியுகத்தை யாருமே புதிய உலகம் என்று கூற மாட்டார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் இல்லையா? கலியுகம் என்பது பழைய உலகமாகும். தந்தை கூட அவசியம் பழையது மற்றும் புதியதின் சங்கமத்தில் வருவார். எங்காவது நீங்கள் இதைப் புரிய வைக்கும் பொழுது இது புருஷோத்தம சங்கமயுகமாகும் தந்தை வந்து விட்டுள்ளார் என்பதைக் கூறுங்கள். முழு உலகத்தில் இது புருஷோத்தம சங்கமயுகமாகும் என்பது எந்த மனிதருக்கும் தெரியாது. அவசியம் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், அதனால் தான் புரிய வைக்கிறீர்கள். முக்கியமான விஷயமே சங்கமயுகத்தினுடையது தான். எனவே பாயிண்ட்ஸ் கூட மிகவும் அவசியம். எந்த விஷயம் யாருக்குமே தெரியவில்லையோ அதைப் புரிய வைக்க வேண்டி இருக்கிறது. எனவே இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகமாகும் என்பதை அவசியம் எழுத வேண்டும் என்று பாபா கூறி இருந்தார். புதிய யுகம் அதாவது சத்யுகத் தின் படங்கள் கூட உள்ளன. இந்த லட்சுமி நாராயணர் சத்யுகமான புதிய உலகத்திற்கு அதிபதி ஆவார்கள் என்பதை மனிதர்கள் எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கு மேலே புருஷோத்தம சங்கமயுகம் என்ற வார்த்தைகள் அவசியம் வேண்டும். இதை அவசியம் எழுத வேண்டும். ஏனெனில் இதுவே முக்கியமான விஷயமாகும். மனிதர்கள் கலியுகத் தில் இன்னும் நிறைய வருடங்கள் மீதி உள்ளன என்று நினைக்கிறார்கள். முற்றிலுமே காரிருளில் இருக்கிறார்கள். எனவே புதிய உலகத்தின் அதிபதி இந்த லட்சுமி நாராயணர் ஆவார்கள் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இது முழுமையான அடையாளமாகும். இந்த ராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நவ யுகம் வந்துள்ளது. அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள் என்ற பாடலும் உள்ளது. இப்பொழுது சங்கமயுகமாகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதை நவயுகம் என்று கூற மாட்டார்கள். சங்கமத்திற்கு சங்கமயுகம் என்றே கூறப்படு கிறது. இது புருஷோத்தம சங்கமயுகமாகும். இப்பொழுது பழைய உலகம் முடிந்து புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிறது. மனிதனிலிருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். தேவதைகளிலும் கூட உத்தமமான பதவி இந்த லட்சுமி நாராயணரினுடையதே ஆகும். இவர்களும் மனிதர்கள் தான். இவர் களிடம் தெய்வீக குணங்கள் உள்ளன. எனவே தேவி தேவதை என அழைக்கப்படு கின்றனர். எல்லாவற்றையும் விட உத்தமமான குணம் தூய்மையாகும். அதனால் தான் மனிதர்கள் தேவதைகளுக்கு முன்னால் சென்று தலை வணங்குகிறார்கள். இந்த எல்லா கருத்துகளும் கூட யார் சேவை செய்து கொண்டே இருக்கிறார்களோ அவர்களுடைய புத்தியில் தாரணையாகும். செல்வத் தானம் கொடுக்க கொடுக்க குறையாது என்று கூறப்படுகிறது. நிறைய விளக்கங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஞானமோ மிகவும் சுலபமாகும். ஆனால் ஒரு சிலருக்குள் நல்ல தாரணை ஆகிறது. ஒரு சிலருக்குள் ஆவதில்லை. யாருக்குள் அவகுணம் இருக்கிறதோ அவர்களால் சென்டரை பராமரிக்க வும் முடியாது. எனவே கண்காட்சியில் கூட நேரிடையான வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். புருஷோத்தம சங்கம யுகத்தைப் பற்றி முக்கியமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த சங்கமத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த தர்மம் இருக்கும் பொழுது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இந்த மகாபாரத போர் கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. இது கூட இப்பொழுது தான் வெளிப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் இருந்ததா என்ன? 100 வருடங்களுக்குள் எல்லாமே முடிந்து போய் விடுகிறது. சங்கம யுகத்திற்கு குறைந்தது 100 வருடம் வேண்டும் அல்லவா? முழு உலகமே புதியதாக ஆக வேண்டி உள்ளது. புது டில்லி அமைப்பதற்கு எவ்வளவு வருடங்கள் பிடித்தது.

 

பாரதத்தில் தான் புது உலகம் ஸ்தாபனை ஆகிறது என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். பிறகு பழையது முடிந்து போய் விடும். கொஞ்சமாவது இருக்கும் தானே ! பிரளயமோ ஆவதில்லை. இந்த எல்லா விஷயங்களும் புத்தியில் உள்ளது. இப்பொழுது இருப்பது சங்கம யுகமாகும். புதிய உலகத்தில் அவசியம் இந்த தேவி தேவதைகள் இருந்தார்கள். பிறகும் அவர்களே இருப்பார்கள். இது இராஜயோகத்தின் படிப்பாகும். யாருக்காவது விளக்கமாகப் புரிய வைக்க முடியவில்லை என்றால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கூறுங்கள் - அனைவருக்கும் தந்தையான பரமபிதா பரமாத்மாவை அனைவரும் நினைவு செய்கிறார்கள். அவர் குழந்தைகளாகிய நம் அனைவருக்கும் கூறுகிறார் - நீங்கள் தூய்மை இல்லாதவர்களாக ஆகி விட்டுள்ளீர்கள். பதீத பாவனரே வாருங்கள் என்று கூப்பிடவும் செய்கிறீர்கள். உண்மையில் கலியுகத்தில் இருப்பவர்கள் தூய்மையற்றவர்கள் சத்யுகத்தில் தூய்மையாக இருப்பார்கள். இப்பொழுது பரமபிதா பரமாத்மா கூறுவதாவது - தேகத்துடன் கூட இந்த எல்லா அசுத்தமான சம்மந்தங்களை விடுத்து என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மை ஆகி விடுவீர்கள். இது கீதையினுடைய வார்த்தைகளாகும். இது கீதையின் யுகமாகும். கீதை சங்கமயுகத்தில் தான் பாடப்பட்டிருந்தது. அப்பொழுது தான் விநாசம் ஆகி இருந்தது. தந்தை இராஜயோகத்தைக் கற்பித்திருந்தார். இராஜ்யம் ஸ்தாபனையாகி இருந்தது. மீண்டும் அவசியம் ஆகும். இவை அனைத்தையும் ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார் அல்லவா? சரி இந்த உடலில் வரவில்லை என்றால் வேறு எந்த உடலிலாவது வரட்டுமே? விளக்கங்களோ தந்தையினுடையது தான் அல்லவா? நாம் இவருடைய (பிரம்மா) பெயரை எடுப்பதே இல்லை. நாமோ இவ்வளவு தான் கூறுகிறோம் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால், நீங்கள் தூய்மையாகி என்னிடம் வந்து விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். எவ்வளவு சுலபமானதாகும். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். மேலும் 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானம் புத்தியில் இருக்கட்டும். யார் தாரணை செய்வார்களோ அவர்கள் சக்கரவர்த்தி ராஜா ஆகிடுவார்கள். இந்த செய்தி அனைத்து தர்மத்தினருக்காகவும் உள்ளது. வீட்டிற்கோ அனைவரும் செல்ல வேண்டி உள்ளது. நாம் கூட வீட்டிற்கான வழியைத் தான் கூறுகிறோம். பாதிரி யார்கள் மற்றும் அதுபோன்று யாராக இருந்தாலும் சரி, நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் செய்தியை அளிக்க முடியும். உங்களுக்கு மிகவுமே அளவு கடந்த குஷி இருக்க வேண்டும் - என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும் என்று பரமபிதா பரமாத்மா கூறுகிறார். அனைவருக்கும் இதையே நினைவூட்டுங்கள். தந்தையின் செய்தியைக் கூறுவது தான் முதல் நம்பர் சேவையாகும். கீதையின் யுகம் கூட இப்பொழுது உள்ளது. தந்தை வந்துள்ளார், எனவே அதே படத்தை ஆரம்பத்தில் வைக்க வேண்டும். நாங்கள் தந்தையின் செய்தியைக் கொடுக்க முடியும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் தயாராக இருக்க வேண்டும். நாம் கூட குருடர்களுக்கு கைத்தடியாக வேண்டும் என்று மனதில் தோன்ற வேண்டும். இந்த செய்தியை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். பி.கே. என்ற பெயரை கேட்டே பயப்படுகிறார்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். நான் உயர்ந்ததிலும் உயர்ந்தவன் பதீத பாவனன் ஆவேன். என்னை நினைவு செய்வதால் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். இதை குறித்துக் கொள்ளுங்கள். இது மிகவுமே பயன்படக் கூடிய விசயம். உள்ளங்கையில் அல்லது கையில் வார்த்தைகளை எழுத வைக்கிறார்கள் அல்லவா? இதையும் எழுதி விடுங்கள். இவ்வளவு மட்டும் கூறினால் கூட கருணை யுள்ளம் கொண்டவர்களாக, நன்மை செய்பவர்களாக (கல்யாணகாரி) ஆகி விடுவீர்கள் .தங்களிடம் தாங்களே உறுதி எடுக்க வேண்டும். சேவை அவசியம் செய்ய வேண்டும். பிறகு பழக்கம் ஏற்பட்டு விடும். இங்கும் நீங்கள் புரிய வைக்கலாம். படங்களை அளிக்கலாம். இது செய்தி அளிப்பதற்கான பொருளாகும். லட்சக்கணக்கில் தயாரிக்கப் பட்டு விடும். வீடு வீடாக சென்று செய்தி அளிக்க வேண்டும். பைசா கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. கூறுங்கள் - தந்தையோ இருப்பதே ஏழைப்பங்காளனாக. வீடு வீடாக செய்தி அளிப்பது எங்களது கடமையாகும். இவர் பாப்தாதா - இவரிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது. 84 பிறவிகள் இவர் எடுக்கிறார். இது இவருடைய கடைசி பிறவியாகும். நாம் பிராமணர்கள் ஆவோம். நாமே பிறகு தேவதையாகி விடுவோம். பிரம்மா கூட பிராமணர் ஆவார். பிரஜாபிதா பிரம்மா தனியாக ஒன்றும் இருக்க மாட்டார் அல்லவா? அவசியம் பிராமண வம்சாவளி கூட இருப்பார்கள் அல்லவா? பிரம்மாவே விஷ்ணு தேவதை. பிராமணர்கள் குடுமி உடையோர். அவர்களே தேவதை, க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிறார்கள். உங்களுடைய விஷயங்களைப் புரிந்து கொள்பவர்கள் யாராவது அவசியம் வெளிப்படுவார்கள். அவர்கள் கூட சேவை செய்ய முடியும். அதிகாலை எழுந்து மனிதர்கள் கடை திறக்கும் பொழுது காலையின் கடவுள்... என்கிறார்கள். நீங்கள் கூட அதிகாலை சென்று தந்தையின் செய்தியைக் கூறுங்கள். உங்களுடைய தொழில் மிகவும் நன்றாக நடக்கும் என்று கூறுங்கள். நீங்கள் தலைவனை நினைவு செய்தீர்கள் என்றால் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கும். அமிருத வேளை யின் நேரம் நன்றாக இருக்கும். தற்காலத்தில் தொழிற்சாலைகளில் தாய்மார்கள் கூட அமர்ந்து வேலை செய்கிறார்கள். இந்த பேட்ஜ் கூட தயாரிப்பது மிகவும் சுலபமாகும்.

 

குழந்தைகளாகிய நீங்கள் தான் இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு விட வேண்டும். தூக்கத்தை விட்டு விட வேண்டும். தந்தையின் அறிமுகம் கிடைக்கும் பொழுது மனிதர்கள் தலைவனுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். நீங்கள் யாருக்கு வேண்டு மானாலும் செய்தியை அளிக்க முடியும். உங்களுடைய ஞானமோ மிகவும் உயர்ந்ததாகும். நாங்களோ ஒருவரை நினைவு செய்கிறோம் என்று கூறுங்கள். கிறிஸ்துவினுடைய ஆத்மா கூட அவருடைய குழந்தையாக இருந்தார். ஆத்மாக்களோ அனைவருமே அவருடைய குழந்தைகள். அதே காட்ஃபாதர் தான் கூறுகிறார். வேறு எந்த ஒரு தேகதாரி யையும் நினைவு செய்யாதீர்கள். நீங்கள் தன்னை ஆத்மா என்று உணர்ந்து என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால், விகர்மங்கள் விநாசமாகி விடும். என்னிடம் வந்து விடுவீர்கள். வீடு செல்வதற்காகவே மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் யாருமே செல்வதில்லை. குழந்தைகள் மிகவுமே மந்தமாக உள்ளார்கள் என்று பார்க்கப் படுகிறது. அந்த அளவிற்கு உழைப்பு செய்வதில்லை. சாக்குப்போக்கு கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் மிகவும் சகித்துக் கொள்ள வேண்டியும் உள்ளது. தர்ம ஸ்தாபகர் களோ எவ்வளவு சகித்து கொள்ள வேண்டி உள்ளது! கிறிஸ்துவிற்கும் அவரை சிலுவையில் அறைந்தார்கள் என்று கூறப்படுகிறது. உங்களுடைய வேலையே அனைவருக்கும் செய்தி அளிப்பதாகும். அதற்கான யுக்திகளை பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். யாராவது சேவை செய்வதில்லை என்றால் தாரணை இல்லை என்று பாபா நினைக்கிறார். எப்படி செய்தி கொடுக்க வேண்டும் என்று பாபா ஆலோசனை அளிக்கிறார். ரயில் வண்டியில் கூட நீங்கள் இந்த செய்தியை அளித்துக் கொண்டே இருங்கள். நாம் சொர்க்கத்திற்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒரு சிலர் சாந்தி தாமத்திற்கும் செல்வார்கள் அல்லவா? வழியை நீங்கள் தான் கூற முடியும். பிராமணர் களாகிய நீங்கள் தான் போக வேண்டும். இருப்பதோ நிறைய பேர். பிராமணர்களை எங்காவது இருக்க வைக்க வேண்டும் அல்லவா? பிராமணர், தேவதை, க்ஷத்திரியர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளோ அவசியம் இருப்பார்கள் அல்லவா? ஆதியில் இருப்பவர்களே பிராமணர்கள். பிராமணர்களாகிய நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் ஆவீர்கள். அந்த பிராமணர்கள் குகவம்சாவளி ஆவார்கள். பிராமணர்களோ அவசியம் வேண்டும் அல்லவா? இல்லையென்றால், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் எங்கே சென்றார்கள் ? பிராமணர்களுக்கு நீங்கள் புரிய வைத்தீர்கள் என்றால், அவர்கள் உடனே புரிந்துக் கொண்டு விடுவார்கள். கூறுங்கள் நீங்கள் கூட பிராமணர்கள் ஆவீர்கள். நாங்கள் கூட எங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். இப்போது கூறுங்கள் உங்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்வது யார் ? பிரம்மாவின் பெயரைத் தவிர வேறு பெயரை கூற மாட்டார்கள். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். பிராமணர் களினுடையதும் மிகவும் பெரிய பெரிய குலங்கள் (பரம்பரை) இருக்கும். பூசாரி பிராமணர்களோ ஏராளமானோர் உள்ளார்கள். அஜ்மீருக்கு ஏராளமான குழந்தைகள் செல்கிறார்கள். ஒரு பொழுதும் யாருமே இவ்வாறு சமாசாரம் கொடுக்கவில்லை - நாங்கள் பிராமணர்களை சந்தித்தோம், அவர்களிடம் உங்களுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்பவர் யார்? பிராமண தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார் என்று கேட்டோம். உண்மையான பிராமணர்கள் யார் என்று உங்களுக்கோ தெரியும். நீங்கள் அனேகருக்கு நன்மை செய்ய முடியும். யாத்திரைகளில் பக்தர்கள் தான் செல்கிறார்கள். லட்சுமி நாராயணருடைய இந்த படமோ மிகவும் நன்றாக உள்ளது. ஜகதம்பா யார்? லட்சுமி யார்? என்பது உங்களுக்குத் தெரியும். இது போல நீங்கள் வேலைக்காரர்களுக்கும் காட்டு வாசியினர் போன்றோருக்கும் புரிய வைக்கலாம். உங்களைத் தவிர அவர்களுக்கு கூறுவதற்கு வேறு யாருமில்லை. மிகவும் கருணையுள்ளம் உடையவராக வேண்டும். கூறுங்கள் நீங்கள் கூட தூய்மை ஆகி தூய்மையான உலகத்திற்குச் செல்ல முடியும் என்று கூறுங்கள். தன்னை ஆத்மா என்று உணருங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங் கள். யாருக்கேனும் வழியைக் கூறுவதற்கான ஆர்வம் மிகவுமே இருக்க வேண்டும். யார் சுயம் நினைவு செய்து கொண்டு இருப்பார்களோ அவர்களே மற்றவர்களுக்கு நினைவு செய்விப்பதற்கான முயற்சி செய்வார்கள். தந்தையோ போய் மற்றவர்களிடம் பேச மாட்டார், இதுவோ குழந்தைகளாகிய உங்களுடைய வேலை ஆகும். ஏழைகளுக்குக் கூட நன்மை செய்ய வேண்டும். பாவம், மிகவுமே சுகமுடையவர்களாக ஆகி விடு வார்கள். சிறிதளவு நினைவு செய்தால் பிரஜைகளில் கூட வந்து விடுவார்கள். அது கூட நல்லது தான். இந்த தர்மமோ மிகவும் சுகம் அளிக்க கூடியது. நாளுக்கு நாள் உங்களுடைய சப்தம் (செய்தி) தீவிரமாக வெளிப்படும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற இதே செய்தியை அனைவருக்கும் அளித்து கொண்டே இருங்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள், கோடானு கோடி பாக்கியசாலி ஆவீர்கள். மகிமையைக் கேட்கும் பொழுது புரிந்துக் கொள்கிறீர்கள், பிறகும் மற்ற விஷயத்தின் மீதும் ஏன் கவலை கொள்ள வேண்டும். இது மறைமுகமான ஞானம், மறைமுகமான குஷி ஆகும். நீங்களோ மறைமுகமான வீரர்கள். யாருக்குமே தெரியாத வீரர்கள் என்று உங்களைக் கூறுவார்கள். வேறு யாருமே யாருக்கும் தெரியாத வீரர்களாக முடியாது. உங்களுடைய தில்வாலா கோயில் முழுமையான நினைவார்த்த மாகும். மனதை கவரக்கூடிய பரிவாரமாகும் அல்லவா? மகாவீர் மகாவீராங்கனை மற்றும் அவர்களுடைய குழந்தைகள். இது முழுக்க முழுக்க தீர்த்தமாகும். காசியை விடவும் உயர்ந்த இடமாகியது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. வீடு வீடாகச் சென்று தந்தையின் அறிமுகம் அளிக்க வேண்டும். சேவை செய்வதற்கான உறுதி எடுங்கள். சேவைக்காக எந்த ஒரு சாக்கு போக்கும் கூறாதீர்கள்.

 

2. எந்த ஒரு விஷயத்திற்கும் கவலைப்படக் கூடாது. உள்ளூர குஷியில் இருக்க வேண்டும். எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

பிரச்சனைகளை (சூழ்நிலைகள்) குட்லக் (நல்ல அதிர்ஷ்டம் - வாய்ப்பு) எனப் புரிந்துக் கொண்டு நம்பிக்கையின் அஸ்திவாரத்தை உறுதியாக மாற்றக்கூடிய ஆடாத அசையாதவர் ஆகுக.

 

ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் கூட நீங்கள் அதை உயரமாக தாண்டி சென்று விடுங்கள், ஏனெனில் பிரச்சனைகள் வருவது கூட நன்மைக்கான வாய்ப்பு ஆகும். இது நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தை உறுதி செய்யக்கூடிய சாதனமாகும். நீங்கள் ஒருமுறை அங்கதனை போன்று உறுதியாக இருந்தால், இந்த பேப்பர் (பிரச்சனை - சூழ்நிலை) கூட உங்கள் முன்னால் வணக்கம் (நமஸ்காரம்) தெரிவிக்கும். ஆரம்பத்தில் பயங்கரமான உருவத்தில் வரும், பிறகு வேலைக்காரனாக ஆகிவிடும். நாங்கள் மகாவீரர் என்று சவால் விடுங்கள். தண்ணீர் மீது கோடு போட்டால், அது நிலைத்திருக்காது, அதுபோல மாஸ்டர் கடலாகிய என்னிடம் எந்தவித பிரச்சனையும் போர் செய்ய முடியாது. சுய ஸ்திதியில் (மரியாதை) இருப்பதினால் ஆடாத-அசையாதவர் ஆகிவிடலாம்.

 

சுலோகன்:

யாருடைய ஒவ்வொரு காரியத்திலும் உயர்ந்த தன்மை மற்றும் வெற்றி நிறைந்திருக்கிறதோ, அவர்கள் தான் ஞானம் நிறைந்தவர்.

ஓம்சாந்தி