02-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நினைவு எனும் மருந்தின் மூலம் தங்களை எப்போதும் நோயற்றவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள், நினைவு மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்றுவதின் பழக்கத்தை ஏற்படுத்தினீர்கள் என்றால் விகர்மங்களை வென்றவர்களாக ஆகி விடுவீர்கள்

கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு எப்போதும் தங்களுடைய முன்னேற்றத்தைப் பற்றிய கவலை இருக்கிறதோ, அவர்களுடைய அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
அவர்களுடைய ஒவ்வொரு செயலும் எப்போதும் ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் இருக்கும். குழந்தைகளே, தேக-அபிமானத்தில் வராதீர்கள், நினைவு யாத்திரையின் சார்ட் வையுங்கள் என்பது பாபாவின் ஸ்ரீமத்தாகும். தங்களுடைய கணக்கு-வழக்குகளின் கணக்கை வையுங்கள். எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில் இருந்தேன், எவ்வளவு நேரம் யாருக்கும் புரிய வைத்தேன்? என்று சோதனை செய்யுங்கள்.

பாடல்:
நீங்கள் அன்புக் கடலாக இருக்கின்றீர்கள்.........................

ஓம் சாந்தி.
இங்கே அமரும்போது நீங்கள் பாபாவின் நினைவில் அமர வேண்டும். மாயை நிறைய பேரை நினைவு செய்யவே விடுவதில்லை ஏனென்றால் தேக-அபிமானிகளாக இருக்கின்றீர்கள். சிலருக்கு நண்பர்கள் - உறவினர்கள், சிலருக்கு உணவு போன்றவைகள் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் இங்கே வரும்போது பாபாவை வரவேற்க வேண்டும். லஷ்மியின் பூஜை நடக்கும்போது லஷ்மியை வந்தனம் செய்கிறார்கள், லஷ்மி ஒன்றும் வருவதில்லை. இது வெறுமனே சொல்லப்படுகிறது, நீங்களும் கூட பாபாவை நினைவு செய்யுங்கள் அல்லது அழையுங்கள், விஷயம் ஒன்று தான் ஆகும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் (பாவ கர்மம்) வினாசம் ஆகும். தாரணை ஏற்படுவதில்லை ஏனென்றால் நிறைய விகர்மங்கள் செய்திருக் கிறீர்கள், இந்த காரணத்தினால் பாபாவை நினைவு செய்ய முடியாது. எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு விகர்மங்களை வென்றவர்களாக ஆவீர்கள், ஆரோக்கியம் கிடைக்கும். மிகவும் சகஜமானதாகும், ஆனால் மாயை அல்லது கடந்த கால விகர்மங்கள் தடையை ஏற்படுத்துகிறது. நீங்கள் அரைக்கல்பமாக யதார்த்தமற்ற நினைவு செய்தீர்கள் என்று பாபா கூறுகின்றார். இப்போது நடைமுறையில் அழைக்கின்றீர்கள் ஏனென்றால் வரப்போகின்றார் முரளி சொல்லப்போகின்றார் என்பதை தெரிந்துள்ளீர்கள். ஆனால் இந்த நினைவின் பழக்கம் ஏற்பட்டு விட வேண்டும். எப்போதும் நோயற்றவர்களாக்கிக் கொள்வதற்காக என்னை நினைவு செய்யுங்கள் என்று டாக்டர் மருந்து கொடுக்கின்றார். பிறகு நீங்கள் என்னை வந்து அடைவீர்கள். என்னை நினைவு செய்வதின் மூலம் தான் நீங்கள் ஆஸ்தியை அடைவீர்கள். பாபா மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்ய வேண்டும். எங்கே செல்ல வேண்டுமோ, அதை புத்தியில் வைக்க வேண்டும். பாபா இங்கே வந்து உண்மையான அறிமுகத்தை கொடுக்கின்றார், வேறு யாரும் ஈஸ்வரனுடைய அறிமுகத்தை அளிப்பதில்லை. அவர்கள் இங்கே நடிப்பை நடிக்க வருகின்றார்கள் பிறகு ஈஸ்வரனை மறந்து விடுகிறார்கள். ஈஸ்வரனைப் பற்றி தெரிவதில்லை. உண்மையில் அவர்களை தூதுவர்கள், செய்தியை அளிப்பவர்கள் என்று சொல்ல முடியாது. இப்படி மனிதர்கள் பெயர் வைத்து விட்டார்கள். அவர்கள் இங்கே தங்களுடைய நடிப்பை நடிக்க வருகிறார்கள். பிறகு எப்படி நினைவு செய்வார்கள்? நடிப்பை நடித்துக் கொண்டே பிறகு தூய்மை யற்றவர்களாக ஆகத்தான் வேண்டும். பிறகு கடைசியில் தூய்மையாக ஆக வேண்டும். பாபா தான் வந்து தூய்மையாக்குகின்றார். பாபாவின் நினைவின் மூலம் தான் தூய்மையாக ஆக வேண்டும். தூய்மையாக ஆவதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது - தேகம் உட்பட தேகத்தின் சம்மந்தம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவற்றை மறந்து விட வேண்டும், என்று பாபா கூறுகின்றார்.

ஆத்மாவாகிய என்ன நினைவு செய்வதற்கான கட்டளை கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அதன்படி நடப்பதின் மூலம் தான் கட்டளைப்படி நடப்பவர் என்று சொல்ல முடியும். யார் எந்தளவிற்கு முயற்சி செய்கிறார்களோ அந்தளவிற்கு கட்டளைப்படி நடப்பவர் ஆவர். குறைவாக நினைவு செய்தால் குறைவாக கட்டளைப்படி நடப்பவர் ஆவார். கட்டளைப்படி நடப்பவர்கள் பதவியும் உயர்வாக அடைகிறார்கள். பாபாவின் கட்டளை என்னவென்றால், ஒன்று தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், மற்றொன்று ஞானத்தை தாரணை செய்யுங்கள். நினைவு செய்ய வில்லை என்றால் நிறைய தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் நிறைய செல்வம் கிடைக்கும். பகவானுடைய மகாவாக்கியம் - என்னை செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுங்கள் அதாவது நாடகத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்து கொள்ளுங்கள். என் மூலமாக என்னையும் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் சக்கரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு விஷயங்கள் முக்கியமானதாகும். இதன்மீது கவனம் கொடுக்க வேண்டும். ஸ்ரீமத்தின் மீது முழு கவனம் கொடுத்தீர்கள் என்றால் உயர்ந்த பதவி அடைவீர்கள். இரக்க மன முடையவர்களாக ஆக வேண்டும், அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும், நன்மை செய்ய வேண்டும். நண்பர்கள்-உறவினர்கள் போன்றவர்களுக்கு உண்மையான யாத்திரையில் அழைத்துச் செல்வதற்கு யுக்திகளை உருவாக்க வேண்டும். அது உடலில் மூலம் செல்லக் கூடிய யாத்திரை யாகும், இது ஆன்மீக யாத்திரையாகும். இந்த ஆன்மீக ஞானம் வேறு யாரிடமும் இல்லை. அவை யனைத்தும் சாஸ்திரங்களின் தத்துவங்களாகும். இது ஆன்மீக ஞானமாகும். பரம் ஆத்மா, ஆத்மாக் களுக்கு புரிய வைத்து திரும்பி அழைத்துச் செல்வதற்காக இந்த ஞானத்தை கொடுக் கின்றார்.

நிறைய குழந்தைகள் இங்கே வந்து அமருகிறார்கள் என்றால் ஏதாவது ஆசையோடு அமருகிறார்கள். தங்களுடைய சுயமுன்னேற்றத்தைப் பற்றிய சிந்தனை எதுவும் கிடையாது. நிறைய தேக-அபிமானம் இருக்கிறது. ஆத்ம-அபிமானியாக இருந்தால் இரக்கமனமுடையவர் களாக ஆக வேண்டும், ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். கட்டளைப்படி நடப்பவர்களாக இருப்பதில்லை. எவ்வளவு நேரம் நினைவு செய்தோம்? எந்தெந்த நேரத்தில் நினைவு செய்கிறோம்? என்று தங்களுடைய சார்ட் எழுந்துங்கள் என்று பாபா கூறுகின்றார். முன்பு சார்ட் வைத்தார்கள். நல்லது பாபாவிற்கு அனுப்ப வேண்டாம், தங்களிடத்திலாவது சார்ட் வையுங்கள். நாம் லஷ்மியை மணம் புரிவதற்கு தகுதியானவர்களாக ஆகியிருக்கிறோமா? என்று தங்களுடைய முகத்தைப் பார்க்க வேண்டும். வியாபாரிகள் தங்களுடைய கணக்கு வைக்கிறார்கள், சில மனிதர்கள் தங்களுடைய முழு நாளின் தினச்சரியத்தை எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதற்கான பழக்கத்தை வைத்திருக் கிறார்கள். இந்த கணக்கு-வழக்கு வைப்பது மிகவும் நல்ல விஷயமாகும், நாம் எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில் இருந்தோம்? எவ்வளவும் நேரம் மற்றவர்களுக்குப் புரிய வைத்தோம்? இப்படி சார்ட் வைத்தீர்கள் என்றால் அதிக முன்னேற்றம் ஏற்படும். இப்படி-இப்படியெல்லாம் செய்யுங்கள் என்று பாபா வழி சொல்கிறார்கள். குழந்தைகள் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். யார் மாலையில் மணியாக ஆகிறார்களோ அவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். இப்போது பிராமணர்களின் மாலை உருவாக முடியாது, கடைசியில் தான் உருவாகும், ருத்ர மாலை உருவாகும் போது தான் உருவாகும் என்று பாபா சொல்லியிருந்தார். பிராமணர்களின் மாலையின் மணி மாறிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு யார் 3-4 வது நம்பரில் இருக்கிறார்களோ, அவர்கள் நாளைக்கு கடைசிக்கு சென்று விடுகிறார்கள். எவ்வளவு வித்தியாசமாகி விடுகிறது. சிலர் விழுகிறார்கள் என்றால் துர்கதியை அடைந்து விடுகிறார்கள். மாலையில் இருந்து என்னவோ சென்று விட்டார்கள், பிரஜையிலும் முற்றிலும் சண்டாளர்களாக ஆகி விடுகிறார்கள். மாலையில் கோர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். தங்களை எப்படி முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று பாபா மிகவும் நல்ல வழியை கூறுகின்றார். அனை வருக்கும் கூறுகின்றார். ஒருவேளை யாராவது ஊமையாக இருந்தாலும் கூட சைகையின் மூலம் யாருக்கும் பாபாவின் நினைவை ஏற்படுத்த முடியும். பேசுபவர்களை விடவும் உயர்வாக செல்ல முடியும். குருடர்கள், செவிடர்கள் எப்படி இருந்தாலும் ஆரோக்கியமானவர்களை விடவும் அதிகமாக பதவி அடைய முடியும். ஒரு வினாடியில் சைகை காட்டப்படுகிறது. வினாடியில் ஜீவன் முக்தி என்று பாடப்பட்டுள்ளது அல்லவா. பாபா வினுடையவர்களாக ஆனீர்கள் என்றால் ஆஸ்தி கிடைத்தே விடுகிறது. பிறகு அதில் கண்டிப்பாக வரிசைகிரமமான பதவி என்பது இருக்கிறது. குழந்தை பிறந்தது என்றால் ஆஸ்திக்கு உரிமையுடையதாக ஆகி விடுகிறது. இங்கே ஆத்மாக் களாகிய நீங்கள் அனைவரும் ஆண்பாலர்கள் ஆவீர்கள். எனவே தந்தையிட மிருந்து ஆஸ்தியின் உரிமையை எடுக்க வேண்டும். அனைத்தும் முயற்சியில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. கல்பத்திற்கு முன்பு கூட இப்படி முயற்சி செய்திருந்தீர்கள் என்று சொல்லலாம். மாயையோடு குத்துச்சண்டை நடக்கிறது. பாண்டவர்களுக்கு மாயை இராவணனோடு சண்டை நடந்தது. சிலர் முயற்சி செய்து உலகத்திற்கு எஜமானர்களாக இரட்டை கிரீடமுள்ளவர்களாக ஆகிறார்கள், சிலர் பிரஜையிலும் கூட வேலைக்காரர்களாக ஆகிறார்கள். அனைவரும் இங்கே படித்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, கண்டிப்பாக கவனம் முன்னால் இருக்கும் இரண்டு பக்கமும் செல்லும். 8 மணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள், என்பது முயற்சியின் மூலம் தெரிகிறது. மனதில் இருப்பதை தெரிந்தவர், அனைவருக்குள்ளும் இருப்பதை படிக்கின்றார் என்பது கிடையாது. உள்ளிருப்பதை அறிந்தவர் என்றால் அனைத்தும் அறிந்தவர். ஒவ்வொரு வருடைய மனதின் விஷயத்தை அமர்ந்து தெரிந்து கொள்கிறார் என்பது கிடையாது. அனைத்தும் அறிந்தவர் என்றால் ஞானம் நிறைந்தவர். சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக் கிறார். ஒவ்வொருவருடைய மனதில் இருப்பதையும் அமர்ந்து படிப்பார். என்னை எண்ணங்களை படிப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? நான் அனைத்தும் தெரிந்தவன் என்றால் ஞானம் நிறைந்தவன் என்பதாகும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைத் தான் சிருஷ்டியின் முதல், இடை, கடைசி என்று சொல்லப்படுகிறது. இந்த சக்கரம் எப்படி திரும்பவும் சுற்றுகிறது, என்ற சக்கரத்தை தெரிந்திருக்கிறேன். அந்த ஞானத்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்க வருகின்றேன். யார் எவ்வளவு சேவை செய்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். பாபா ஒவ்வொருவரையும் அமர்ந்து தெரிந்து கொள்கிறார் என்பது கிடையாது. பாபா இந்த வேலையை அமர்ந்து செய்து கொண்டிருக்க வில்லை. அவர் அனைத்தும் தெரிந்தவர் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்ரார், ஞானக்கடலாக இருக்கின்றார். மனித சிருஷ்டியின் முதல், இடை, கடைசியை மற்றும் முக்கிய நடிகர்களை தெரிந்திருக்கின்றேன். மற்றபடி எண்ணிலடங்கா படைப்புகள் இருக்கின்றன. இந்த அனைத்தும் அறிந்தவர் என்ற வார்த்தை பழையதாகும். எந்த ஞானத்தை நான் தெரிந்திருக் கிறேனோ, அதை உங்களுக்கு கற்பிக்கின்றேன். மற்றபடி நீங்கள் என்னென்ன செய்கிறீர்களோ அதை முழு நாளும் அமர்ந்து பார்ப்பேனா என்ன? நான் சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தை கற்றுக் கொடுக்க வருகின்றேன். குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள், நான் குழந்தைகளுக்கு முன்னால் வெளிப்படுகின்றேன் (பிரத்யக்ஷம் ஆகியுள்ளேன்) என்று பாபா கூறுகின்றார். அனைத்து காரியங்களும் குழந்தைகளின் மூலம் ஆகும். யார் என்னுடைய குழந்தை களாக ஆகிறார்களோ, அவர்களுக்கு நான் தந்தையாக இருக்கின்றேன். பிறகு அவர்கள் நல்லவர்கள் அல்லது வழிப்படி நடக்காதவர்கள் என்பதை நான் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவருக்குமான படிப்பாகும். ஸ்ரீமத்படி செயலில் வர வேண்டும். நன்மை செய்பவர்களாக ஆக வேண்டும். பிரகஸ்பதியை விருட்சபதி என்றும் சொல்லப்படுகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். விருட்சபதியாகவும் இருக்கின்றார், சிவனாகவும் இருக்கின்றார். இருவருமே ஒன்று தான் ஆகும். குருவார் தினத்தில் பள்ளியில் சென்று அமருகிறார்கள் என்றால் குருவை அடைகிறார்கள். எப்படி சோமநாத்தின் நாள் சோமவாரம், சிவபாபா சோமரசத்தை ஊட்டுகின்றார். அவருடைய பெயர் என்னவோ சிவன் ஆகும் ஆனால் கற்பிக்கின்றார் ஆகையினால் சோமநாத் என்று சொல்லி விட்டார்கள். சோமநாதருக்குத் தான் ருத்ரன் என்றும் சொல்லப்படுகிறது. ருத்ரன் ஞான யக்ஞத்தை படைக்கிறார் என்றால் ஞானத்தை சொல்லக் கூடியவர் ஆகி விட்டார் அல்லவா. நிறைய பெயர் வைத்து விட்டார்கள். எனவே அதை புரிய வைக்கப்படுகிறது. ஆரம்பத்திலிருந்து இந்த ஒரு யக்ஞம் தான் நடக்கிறது, முழு பழைய உலகத்தின் பொருட்களும் இந்த யக்ஞத்தில் அர்ப்பணம் ஆக வேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லை. மனிதர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, வேறு என்னவெல்லாம் இருக்கிறதோ, தத்துவங்கள் உட்பட அனைத்தும் மாற வேண்டும். இதையும் குழந்தைகள் பார்க்க வேண்டும், பார்க்கக் கூடியவர்கள் பெரிய மகாவீர்களாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும், மறக்கக் கூடாது. மனிதர்கள் ஐயோ-ஐயோ காப்பாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். முதல்-முதலில் புரிய வைக்க வேண்டும், கொஞ்சம் சிந்தியுங்கள், சத்யுகத்தில் ஒரு பாரதம் தான் இருந்தது, மனிதர்கள் மிகவும் குறைவானவர்களே இருந்தார்கள், ஒரு தர்மம் தான் இருந்தது, இப்போது கலியுக கடைசியில் எவ்வளவு தர்மங்கள் இருக்கின்றன! இது எதுவரை செல்லும்? கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சத்யுகமாக ஆகும். யார் சத்யுகத்தை ஸ்தாபனை செய்வார்? படைப்பவர் பாபா தான் அல்லவா. சத்யுகத்தின் ஸ்தாபனை மற்றும் கலியுகத்தின் வினாசம் நடக்கிறது. வினாசம் முன்னால் இருக்கிறது. இப்போது உங்களுக்கு பாபாவின் மூலம் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தின் ஞானம் கிடைத்திருக்கிறது. இந்த சுயதரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும். பாபா மற்றும் பாபாவின் படைப்பை நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது.

பாட்டு: நீ அன்புக் கடலாக இருக்கின்றாய்........ சித்திரங்களில் ஞானக்கடல், ஆனந்தக்கடல் என்று எழுது கிறார்கள், அதில் அன்புக்கடல் என்பது கண்டிப்பாக வர வேண்டும். பாபாவின் மகிமை முற்றிலும் தனிப்பட்டதாகும். சர்வவியாபி என்று சொல்வதின் மூலம் மகிமைகளையே இல்லாமல் செய்து விடுகிறார்கள். எனவே அன்புக்கடல் என்ற வார்த்தையை கண்டிப்பாக எழுத வேண்டும், இது எல்லையற்ற தாய்-தந்தையரின் அன்பாகும், அதற்காகவே உங்களுடைய அருளின் மூலம் சுகம் கிடைக்கிறது என்று பாடுகிறார்கள், ஆனால் தெரிந்திருக்கவில்லை. இப்போது பாபா கூறுகின்றார், நீங்கள் என்னை தெரிந்து கொள்வதின் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள். நான் தான் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் ஞானத்தைப் புரிய வைப்பேன். ஒரு பிறவியின் விசயம் கிடையாது, முழு உலகத்தின் கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்திருக்க வேண்டுமென்றால் புத்தியில் எவ்வளவு வரவேண்டும். யார் ஆத்ம-அபிமானிகளாக ஆவதில்லையோ அவர்களுக்கு தாரணையும் ஆவதில்லை. முழு கல்பமும் தேக-அபிமானம் நடக்கிறது. சத்யுகத்திலும் கூட பரமாத்மாவின் ஞானம் இருப்ப தில்லை. இங்கே நடிப்பை நடிக்க வருகிறார்கள், பரமாத்மாவின் ஞானத்தை மறந்து விட்டார்கள். ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கிறது என்பதை புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அங்கே துக்கத்தின் விஷயம் கிடையாது. ஞானத்தின் கடல், அன்புக்கடல் என்பது பாபாவின் மகிமையாகும். மன்மனாபவ, மத்தியாஜி பவ...... என்பது ஒரு துளியாகும். இது கிடைப்பதின் மூலம் நாம் விஷக்கடலிலிருந்து பாற்கடலுக்கு சென்று விடுகிறோம். சொர்க்கத்தில் பாலாறு ஓடும் என்று சொல்கிறார்கள் அல்லவா. இவையனைத்தும் மகிமைகளாகும். மற்றபடி பாலாறு ஓட முடியுமா என்ன! மழை பொழியும் போது தண்ணீர் தான் வரும். நெய் எங்கிருந்து வரும்! இது மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. சொர்க்கம் என்று எதை சொல்லப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அஜ்மீரில் மாதிரி இருக்கிறது ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் யாருக்கும் புரிய வைத்தீர்கள் என்றால் உடனே புரிந்து கொள்வார்கள். எப்படி பாபாவிற்கு முதல், இடை, கடைசியின் ஞானம் இருக்கிறதோ அதுபோல் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியிலும் சுற்ற வேண்டும். பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், துல்லியமான மகிமையைச் சொல்ல வேண்டும், அவருடைய மகிமை அளவு கடந்ததாகும். அனைவரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நடிப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் போகப்போக பார்ப்பீர் கள், திவ்ய திருஷ்டியில் பாபா என்னென்ன காட்டினாரோ அவை நடைமுறையில் நடக்க வேண்டும். ஸ்தாபனை மற்றும் வினாசத்தின் காட்சியை செய்வித்துக் கொண்டே இருக்கின்றார். அர்ஜூணனுக்கும் கூட திவ்ய திருஷ்டியின் மூலம் காட்சி காட்டினார் பிறகு நடைமுறையில் பார்த்தார். நீங்களும் கூட இந்த கண்களினால் வினாசத்தைப் பார்ப்பீர்கள். வைகுண்டத்தின் காட்சி யையும் பார்த்தீர்கள், அதுவும் நடைமுறையில் நடந்தேறினால் பிறகு காட்சியைக் காண்பது நின்று விடும். எவ்வளவு நல்ல - நல்ல விஷயங் களைப் புரிய வைக்கின்றார், பிறகு இதை குழந்தை களாகிய நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் - சகோதரர்களே-சகோதரிகளே வந்து அப்படிப்பட்ட பாபாவிடமிருந்து இந்த ஞானம் மற்றும் யோகத்தின் மூலம் ஆஸ்தியை அடையுங்கள்.

பாபா அழைப்பிதழை திருத்திக் கொண்டிருக்கிறார். கீழே கையொப்பமிடுகிறார், உடல்-மனம்-பொருளின் மூலம் ஈஸ்வரிய சேவையில் இந்த காரியத்திற்காக ஈடுபட்டிருக்கும் என்று கையொப் பமிடுகிறார். இன்னும் போகப்போக மகிமை ஏற்படும். கல்பத்திற்கு முன்னால் யார் ஆஸ்தி எடுத்திருந்தார்களோ, அவர்கள் வரத்தான் வேண்டும். உழைக்க வேண்டும். பிறகு குஷியின் அளவு உயர்ந்து-உயர்ந்து நிலையாகி விடும். பிறகு அடிக்கடி வாடிப்போக மாட்டீர்கள். நிறைய புயல் வரும், அவற்றை கடந்து செல்ல வேண்டும். ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருங்கள். வியாபாரமும் செய்ய வேண்டும். எதுவரை சேவையின் நிரூபணத்தைக் கொடுக்க வில்லையோ அதுவரை பாபா இந்த சேவையில் ஈடுபடுத்த முடியாது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்ரீமத்தின் மீது முழு கவனம் கொடுத்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டு அனைவரையும் உண்மையான யாத்திரை செய்ய வைக்க வேண்டும், இரக்க மனமுடையவர்களாக ஆக வேண்டும்.

2) பாபாவின் ஒவ்வொரு கட்டளையையும் கடைபிடிக்க வேண்டும். நினைவு மற்றும் சேவையின் சார்ட்டை கண்டிப்பாக வைக்க வேண்டும். சுயதரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும்.

வரதானம்:
உண்மையான இதயத்துடன் அன்பான தலைவன் பாபாவை மகிழ்விக்கக்கூடிய இராஜயுக்த், யுக்தி யுக்த், யோகயுக்த் ஆகுங்கள்.

பாப்தாதாவின் டைட்டில்- தில்வாலா, (உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவர்) திலாராம் என்பன வாகும். சத்தியமான உள்ளமுள்ள குழந்தைகளைப் பார்த்து பாபாவும் மகிழ்ச்சி அடைகின்றார். இதயப்பூர்வமாக பாபாவை நினைவு செய்கின்றவர்கள், மிக எளிதாக பிந்து ரூபம் ஆகமுடியும். அவர்கள் விசேசமாக பாபாவின் ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றார்கள். உண்மை என்ற சக்தி மூலமாக அவர்களுடைய புத்தியானது சமயத்தின் அனுசாரமாக யுக்தி யுக்தாக ஆகி காரியங்களைத் தானாகவே செய்யும். பகவானையே மகிழ்வித்ததனால் அவர்களின் ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் கர்மமும் யதார்த்தமாகவே இருக்கும். அப்படிப் பட்டவர்கள் இராஜ யுக்த், யுக்தி யுக்த், யோகயுக்த் ஆகி விடுகின்றனர்.

சுலோகன்:
பாபாவின் அன்பில் சதா மூழ்கி இருக்கும் போது பலவிதமான துக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள்