03.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா,     

ரிவைஸ் 05-10-1987      மதுபன்


 

பிராமண வழ்க்கையின் சுகம் -- திருப்தி மற்றும் மகிழ்ச்சி

 

இன்று பாப்தாதா நாலாபுறம் உள்ள தம்முடைய மிகவும் செல்லமான, தேடிக் கண்டெடுக்கப் பட்ட பிராமணக் குழந்தைகளுக்குள் விசேச பிராமண வாழ்க்கையின் விசேசதா நிறைந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்று அமிர்தவேளை பாப்தாதா அனைத்து பிராமணக் குழந்தைகளில் இருந்து அந்த விசேச ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் -- சதா திருப்தியின் மூலம் தாங்களும் சதா திருப்தியாக இருந்துள்ளனர் மற்றும் பிறருக்கும் தங்களின் திருஷ்டி, விருத்தி மற்றும் கிருத்தி (செயல்) மூலம் திருப்தியின் அனுபூதி செய்வித்தே வந்துள்ளனர் . இன்று சதா சங்கல்பத்தில் , பேச்சில் , குழுவின் சம்மந்தம்-தொடர்பில், கர்மத்தில் திருப்தியின் பொன்மலர்களை பாப்தாதா மூலம் தங்கள் மீது பொழிவிக்கின்ற அனுபவம் செய்யக்கூடிய மற்றும் அனைவர் மீதும் திருப்தியின் பொன்மலர்களை சதா பொழியச் செய்து கொண்டே இருக்கின்ற அப்படிப்பட்ட திருப்திமணிகளின் மாலையை பாப்தாதா உருட்டிக் கொண்டிருந்தார். அத்தகைய திருப்தியான ஆத்மாக்கள் நாலாபுறமும் இருந்து சிலர் தென்பட்டனர். மாலை பெரியதாக உருவாகவில்லை, சிறிய மாலை ஒன்று உருவானது. பாப்தாதா அடிக்கடி திருப்திமணிகளின் மாலையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். ஏனென்றால் அப்படிப்பட்ட திருப்திமணிகள் தாம் பாப்தாதாவின் கழுத்து மாலை ஆகின்றனர், இராஜ்ய அதிகாரி ஆகின்றனர் மற்றும் பக்தர்கள் நினைவு செய்வதற்கான மாலை ஆகின்றனர்.

 

பாப்தாதா மற்றக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் -- அவர்கள் சில நேரம் திருப்தியாக இருந்து சில நேரம் அதிருப்தியின் சங்கல்பம் என்ற நிழலுக்குள் வந்து விடுகின்றனர் மற்றும் பிறகு வெளியில் வந்து விடுகின்றனர். சிக்கிக் கொள்வதில்லை. மூன்றாவது குழந்தைகள் சில நேரம் சங்கல்பத்தின் அதிருப்தி, சில நேரம் தன் மீது தானே அதிருப்தி அடைவது, சில நேரம் பரிஸ்திதிகளின் மூலம் அதிருப்தி, சில நேரம் தனது குழப்பத்தின் மூலம் அதிருப்தி மற்றும் சில நேரம் சிறிய-பெரிய வியங்களால் அதிருப்தி -- இந்தச் சக்கரத்திலேயே செல்கின்றனர் மற்றும் வெளிவருகின்றனர். பிறகு மீண்டும் சிக்கிக் கொண்டே இருக்கின்றனர். அந்த மாதிரி மாலையையும் பார்த்தார். ஆக, மூன்று மாலைகள் தயாராயின. அனைவருமே மணிகள் தாம். ஆனால் திருப்திமணிகளின் ஜொலிப்பு மற்றும் மற்ற இரண்டு விதமான மணிகளின் ஜொலிப்பு என்னவாக இருக்கும் -- இதையோ நீங்களே அறிந்து கொள்ளலாம். பிரம்மா பாபா அடிக்கடி மூன்று மாலைகளையும் பார்த்துப் புன்சிரிக்கவும் செய்கிறார். அதோடு கூடவே இரண்டாவது நம்பர் மாலையின் மணிகள் முதல் மாலையில் வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆன்மிக உரையாடல் நடந்து கொண்டிருந்தது, ஏனென்றால் இரண்டாவது மாலையின் ஒரு சில மணிகள் மிகக் கொஞ்சமாக அதிருப்தியின் நிழல் மட்டும் இருந்த காரணத்தால் முதல் மாலையிலிருந்து வஞ்சிக்கப் பட்டவர்களாக இருந்தனர். இதை மாற்றம் செய்து எப்படியாவது முதல் மாலையில் கொண்டு வர வேண்டும். ஒவ்வொருவரின் குணங்கள், சக்திகள், சேவை -- அனைத்தையும் முன்னால் கொண்டு வந்து அடிக்கடி இதைத் தான் சொன்னார், அதாவது இதை முதல் நம்பரில் கொண்டு வர வேண்டும். அது போல் சுமார் 25-30 மணிகள் இருந்தனர். அவர்களைப் பற்றி பிரம்மா பாபாவின் விசேச உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரம்மா பாபா சொன்னார் -- முதல் நம்பர் மாலையில் இந்த மணிகளையும் வைக்க வேண்டும். ஆனால் பிறகு தாமே புன்சிரிப்புடன் இதைச் சொன்னார் -- பாபா இவர்களை முதல் நம்பரில் அவசியம் கொண்டு வந்து காட்டுவார். ஆக, அத்தகைய விசேச மணிகளும் இருந்தனர்.

 

இவ்வாறு ஆன்மிக உரையாடல் நடக்கும் போது ஒரு விசயம் வெளிப்பட்டது, அதாவது அதிருப்திக்கான விசேச காரணம் என்ன? சங்கமயுகத்தின் விசேச வரதானமே திருப்தி தான் என்றால் பிறகும் வரதாதாவிடம் வரதானம் பெற்ற வரதானி ஆத்மாக்கள் இரண்டாம் நம்பர் மாலையில் ஏன் வருகின்றனர்? திருப்தியின் விதை அனைத்துப் பிராப்திகளும் ஆகும். அதிருப்தியின் விதை, ஸ்தூல மற்றும் சூட்சும அப்பிராப்தி (இல்லாமை). இப்போது பிராமணர்களுக்கான மகிமை -- பிராமணர்களின் கஜானாவில் அல்லது பிராமணர்களின் வாழ்க்கையில் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை. பிறகு அதிருப்தி ஏன்? வரதாதா வரதானம் கொடுப்பதில் வித்தியாசம் வைத்தாரா அல்லது பெற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக எடுத்துக் கொண்டார்களா, என்னவாயிற்று? எப்போது வரதாதா, வள்ளலின் கஜானா நிறைந்ததாக உள்ளதோ, அவ்வளவு நிறைவாக உள்ளது -- உங்களுடைய அதாவது சிரேஷ்ட நிமித்த ஆத்மாக்களின் நீண்டகாலத்தின் பிரம்மாகுமார்-பிரம்மாகுமாரிகள் ஆகி விட்டவர்கள். அவர்களின் 21 பிறவிகளின் வம்சாவளி மற்றும் பிறகு அவர்களுடைய பக்தர்கள், பக்தர்களுக்கும் வம்சாவளி, அவர்களும் கூட அந்தப் பிராப்திகளின் ஆதாரத்தில் சென்று கொண்டே இருப்பார்கள். இவ்வளவு பெரிய பிராப்தி, பிறகும் அதிருப்தி ஏன்? அளவற்ற கஜானா அனைவருக்கும் கிடைத்துள்ளது - ஒருவர் மூலமாக, ஒரே மாதிரி, ஒரே சமயத்தில், ஒரே விதியின் மூலம். ஆனால் கிடைத்துள்ள கஜானாவை ஒவ்வொரு சமயம் காரியத்தில் ஈடுபடுத்துவதில்லை. அதாவது ஸ்மிருதியில் வைப்பதில்லை. வாய் வார்த்தையினால் குஷியடைகிறார்கள் ஆனால் மனதால் குஷியடைவதில்லை. புத்தியின் குஷி உள்ளது, மனதின் குஷி இல்லை. காரணம்? பிராப்திகளின் கஜானாக்களை ஸ்மிருதி சொரூபமாகி, காரியத்தில் ஈடுபடுத்துவதில்லை. ஸ்மிருதி உள்ளது, ஆனால் ஸ்மிருதி சொரூபத்தில் வருவதில்லை. பிராப்தி எல்லையற்றது. ஆனால் அவற்றை அங்கங்கே எல்லைக்குட் பட்ட பிராப்தியாக மாற்றி விடுகிறீர்கள். இந்தக் காரணத்தால் எல்லைக்குட் பட்டது, அதாவது அல்பகால பிராப்திக்கான ஆசை, எல்லையற்ற பிராப்தியின் பலன் சொரூபம், அதனால் சதா திருப்தியின் அனுபவமாக இருக்கும் அதிலிருந்து வஞ்சிக்கப் பட்டவராக ஆக்கி விடுகிறது. எல்லைக்குட் பட்ட பிராப்தியில் எல்லைக்குட் பட்டதைப் போட்டு விடுகிறது. அதனால் அதிருப்தியின் அனுபவம் ஏற்படுகிறது. அதிலிருந்து வஞ்சித்து விடுகிறது. எல்லைக்குட் பட்ட பிராப்தி மனங்களில் (குறிப்பிட்ட வரையறையை) எல்லையைப் போட்டு விடுகிறது. அதனால் அதிருப்தியின் அனுபவம் ஏற்படுகிறது. சேவைக்கு எல்லை வைத்து விடுகின்றனர். ஏனென்றால் எல்லைக்குட் பட்ட ஆசையின் பலனாக மனம் விரும்பிய பலன் கிடைப்பதில்லை. எல்லைக்குட் பட்ட ஆசைகளின் பலன் அற்பகாலத்தில் பூர்த்தியாகக் கூடியது. அதனால் அவ்வப்போது திருப்தி, அவ்வப்போது அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. எல்லைக்குட் பட்டது, எல்லையற்றதை அனுபவம் செய்ய விடாது. அதனால் சோதித்துப் பாருங்கள் -- மனதின் அதாவது சுயத்தின் திருப்தி, அனைவரின் திருப்தி அனுபவமாகிறதா?

 

திருப்தியின் அடையாளம் -- அவர்கள் மனதால், இதயத்தால், அனைவருடனும், பாபாவுடனும், டிராமாவுடனும் திருப்தியாக இருப்பார்கள். அவர்களது மனம் மற்றும் உடலில் சதா மகிழ்ச்சியின் அலை காணப்படும். எந்த ஒரு பரிஸ்திதி வந்தாலும், கணக்கு-வழக்கை முடிப்பதற்காக யாரேனும் ஆத்மா எதிர்கொள்வதற்காக முன்னால் வந்தாலும், சரீரத்தின் கர்மபோகம் எதிர்கொள்வதாக வந்து கொண்டிருந்தாலும் எல்லைக்குட் பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்ட ஆத்மா திருப்தியின் காரணத்தால் சதா மகிழ்ச்சியின் ஒளியில் ஜொலிக்கும் நட்சத்திரமாகக் காணப்படுவார். மகிழ்ச்சி நிறைந்த உள்ளம் கொண்டவர் ஒரு போதும் எந்த ஒரு விசயத்திலும் கேள்வி கேட்பவராக இருக்க மாட்டார். கேள்வி இருந்தால் மகிழ்ச்சி இல்லை. திருப்தியடைந்தவர்களின் அடையாளம் -- அவர்கள் சதா சுயநலமற்றவராக, சதா அனைவரையும் குற்றமற்றறவராக அனுபவம் செய்வார்கள். வேறு யார் மீதும் குற்றம் சுமத்த மாட்டார்கள் -- பாக்கிய விதாதா மீது, எனது பாக்கியத்தை இப்படி உருவாக்கி விட்டீர்கள் என்றோ, டிராமா மீது -- டிராமாவில் எனக்குப் பார்ட்டே இது போல் தான் உள்ளது என்றோ, இவர்களின் சுபாவ-சம்ஸ்காரம் இது போல் உள்ளது என்று மனிதர்கள் மீதோ, இயற்கையின் வாயுமண்டலம் இப்படி உள்ளது என்று இயற்கையின் மீதோ. எனது சரீரமே இப்படித் தான் என்று சரீரத்தின் மீதோ குற்றம் சுமத்த மாட்டார்கள். திருப்தியானவர் என்றால் சதா சுயநலமற்றவர், குற்றமற்ற விருத்தி-திருஷ்டி உள்ளவர். ஆக, சங்கமயுகத்தின் விசேசதா திருப்தியாகும் மற்றும் திருப்தியின் அடையாளம் மகிழ்ச்சி. இது பிராமண வாழ்க்கையின் விசேச பிராப்தி. திருப்தி இல்லை, மகிழ்ச்சி இல்லை என்றால் பிராமணர் ஆனதற்கான நன்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிராமண வாழ்க்கையின் சுகமே திருப்தி, மகிழ்ச்சி தான். பிராமண வாழ்க்கை அமைந்தது, அதன் சுகத்தை அடையவில்லை என்றால் பெயரளவுக்கு பிராமணர் ஆனீர்களா, பிராப்தி சொரூப பிராமணர் ஆனீர்களா? ஆக, பாப்தாதா பிராமணக் குழந்தைகள் அனைவர்க்கும் இந்த ஸ்மிருதியைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் -- பிராமணர் ஆனீர்கள், அஹோ சௌபாக்கியம்! ஆனால் பிராமண வாழ்க்கையின் ஆஸ்தி, சொத்து திருப்தி தான். மற்றும் பிராமண வாழ்க்கையின் ஆளுமை (பர்சனாலிட்டி) மகிழ்ச்சியாகும். இந்த அனுபவத்திலிருந்து ஒரு போதும் வஞ்சிக்கப் பட்டவர்களாக இருந்து விடக் கூடாது. அதிகாரிகள் (உரிமை யுள்ளவர்கள்) நீங்கள். எப்போது வள்ளல், வரதாதா திறந்த மனதோடு பிராப்திகளின் கஜானாவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், கொடுத்து விட்டார் என்றால் நன்றாகத் தனது சொத்து மற்றும் பர்சனாலிட்டியை அனுபவத்தில் கொண்டு வாருங்கள். மற்றவர்களையும் அனுபவி ஆக்குங்கள். புரிந்ததா? ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளுங்கள் -- நான் எந்த நம்பர் மாலையில் இருக்கிறேன்? மாலையில் இருக்கவே செய்கிறீர்கள், ஆனால் எந்த நம்பரின் மாலையில் இருக்கிறேன்? நல்லது.

 

இன்று இராஜஸ்தான் மற்றும் உ.பி. குழுவினர் உள்ளனர். இராஜஸ்தான் என்றால் இராஜ்ய சம்ஸ்காரம் உள்ளவர்கள். ஒவ்வொரு சங்கல்பத்திலும் சொரூபத்திலும் இராஜ்ய சம்ஸ்காரத்தை நடைமுறையில் கொண்டு வருபவர்கள். அதாவது பிரத்தியட்சமாகக் காண்பிப்பவர்கள். இவர்களைத் தான் இராஜஸ்தான் நிவாசி எனச் சொல்வது. அப்படிப் பட்டவர்கள் தாம் இல்லையா? ஒரு போதும் பிரஜையாக ஆகி விடுவதில்லை தானே? வசமாகி விட்டீர்கள் என்றால் பிரஜை எனச் சொல்வார்கள். மாலிக் என்றால் இராஜா. சில நேரம் இராஜா, சில நேரம் பிரஜை என்று அப்படி இல்லை. சதா இராஜ்ய சம்ஸ்காரம் தானாகவே ஸ்மிருதி சொரூபத்தில் இருக்க வேண்டும். அத்தகைய இராஜஸ்தான் நிவாசி குழந்தைகளுக்கு மகத்துவமும் உள்ளது. இராஜாவை அனைவரும் சதா உயர்ந்த பார்வையில் பார்ப்பார்கள் மற்றும் இராஜாவுக்கு உயர்ந்த ஸ்தானமும் அளிப்பார்கள். இராஜா எப்போதுமே சிம்மாசனத்தில் அமர்வார். பிரஜைகள் கீழே அமர்வார்கள். ஆக, இராஜஸ்தானின் இராஜ்ய சம்ஸ்காரம் உள்ள ஆத்மாக்கள் என்றால் சதா உயர்ந்த ஸ்திதி என்ற இருப்பிடத்தில் இருப்பவர்கள். அந்த மாதிரி ஆகி விட்டீர்களா அல்லது ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? ஆகியிருக்கிறீர்கள் மற்றும் சம்பன்னம் ஆகத் தான் வேண்டும். இராஜஸ்தானின் மகிமை குறைந்தது கிடையாது. ஸ்தாபனைக்கான தலைமை நிலையமே இராஜஸ்தானில் தான் உள்ளது. ஆகவே உயர்ந்தவர்கள் ஆகிறீர்கள் இல்லையா? பெயராலும் உயர்ந்தவர்கள், செயலாலும் உயர்ந்தவர்கள். இத்தகைய இராஜஸ்தானின் குழந்தைகள் தங்கள் வீட்டில் வந்து சேர்ந்து விட்டீர்கள். புரிந்ததா?

 

உ.பி. (உத்தரப் பிரதேசம்) யின் பூமி விசேச பாவன பூமி எனப் பாடப் பட்டுள்ளது. பாவனமாக்கக் கூடிய கங்கை நதியும் அங்கே உள்ளது மற்றும் பக்தி மார்க்கத்தின் படி கிருஷ்ணரின் பூமியும் உ.பி. யில் தான் உள்ளது. பூமியின் மகிமை அதிகம். கீருஷ்ண லீலா, ஜன்மபூமி பார்க்க வேண்டுமானாலும் உ.பி.க்குத் தான் செல்வார்கள். ஆக, உ.பி. காரர்களுக்கு விசேசதா உள்ளது. சதா பாவனமாகி மற்றும் பாவனமாக்குவதற்கான விசேதா நிறைந்தவர்கள். எப்படி பாபாவின் மகிமை பதித-பாவனர் என்று உள்ளது உ.பி.காரர்களுக்கும் பாப்-சமான் மகிமை உள்ளது. பதித-பாவனி ஆத்மாக்கள் நீங்கள். பாக்கியத்தின் நட்சத்திரம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி பாக்கியவான் இருப்பிடம் மற்றும் ஸ்திதி -- இரண்டுக்கும் மகிமை உள்ளது. சதா பாவனம் -- இது ஸ்திதியின் மகிமை. ஆக, அத்தகைய பாக்கியவான் என்று தன்னைப் புரிந்து கொள்கிறீர்களா? சதா தனது பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்து, தானும் சதா மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டே செல்லுங்கள். ஏனென்றால் மலர்ந்த முகம் உள்ளவர் தானாகவே கவர்ச்சி மூர்த்தியாக இருப்பார். எப்படி ஸ்தூல நதி தன் பக்கம் ஈர்க்கிறது இல்லையா? ஈர்க்கப் பட்டு யாத்திரிகர்கள் செல்கின்றனர். எவ்வளவு தான் கஷ்டங்களை அடைந்தாலும் சரி, பிறகும் பாவனமாவதற்கான கவர்ச்சி ஈர்க்கின்றது. ஆக, இந்தப் பாவனமாக்குவதற்கான காரியத்தின் நினைவுச்சின்னம் உ.பி. யில் உள்ளது. இதே போல் மகிழ்ச்சியான மற்றும் கவரக்கூடிய மூர்த்தியாக ஆக வேண்டும். புரிந்ததா?

 

மூன்றாவது குருப் இரட்டை வெளிநாட்டினருடையதும் உள்ளது. இரட்டை வெளிநாட்டினர் என்றால் சதா விதேசி (வேறு தேசத்தவர்) பாபாவைக் கவர்ந்திழுப்பவர்கள். ஏனென்றால் சமமாக உள்ளனர் இல்லையா? பாபாவும் விதேசி, நீங்களும் விதேசி. சமமாக உள்ளவர்கள் அன்பானவராக இருப்பார்கள். தாய்-தந்தையை விடவும் நண்பர்கள் அதிக அன்புக்குரியவர்களாக உள்ளனர். ஆக, இரட்டை வெளிநாட்டினர் பாப்-சமான் சதா இந்த தேகம் மற்றும் தேகத்தின் கவர்ச்சியிலிருந்து விடுபட்ட விதேசி, அசரீரி, அவ்யக்தமாக இருப்பவர்கள். ஆக, பாபா தமக்கு சமமாக அசரீரி, அவ்யக்த ஸ்திதி உள்ள குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பந்தயத்தில் நல்ல வேகத்தில் சென்று கொண்டுள்ளனர். சேவையில் பலவித சாதனங்கள் மற்றும் பல்வேறு விதிகள் மூலம் பந்தயத்தில் முன்னால் நல்ல வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். விதியையும் கடைப்பிடித்து, விருத்தியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால் பாப்தாதா நாலாபுறம் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு சேவையின் வாழ்த்தும் சொல்கிறார் மற்றும் சுயத்தின் வளர்ச்சிக்கான ஸ்மிருதியையும் கொடுக்கிறார். சுயத்தின் முன்னேற்றத்தில் சதா பறக்கும் கலை மூலம் பறந்து கொண்டே இருங்கள். சுய முன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றத்தின் சமநிலை (க்ஷஹப்ஹய்ஸ்ரீங்) மூலம் சதா பாபாவின் ஆசிர்வாதத்திற்கு (க்ஷப்ங்ள்ள்ண்ய்ஞ்) அதிகாரியாக உள்ளனர் மற்றும் சதா இருப்பார்கள். நல்லது.

 

நாலாவது குரூப் எஞ்சியிருப்பது மதுபன் நிவாசிகள். இவர்களோ சதா (இங்கே-மதுபனில்) இருக்கவே செய்கிறார்கள். இதயத்தில் இருப்பவர்கள் அடுப்படியில் (சமையலறையில் - வீட்டின் முக்கிய இடத்தில்) இருக்கிறார்கள். அடுப்படியில் இருப்பவர்கள் (பாப்தாதாவின்) இதயத்தில் இருக்கிறார்கள். அனைத்திலும் அதிகமாக விதிபூர்வமாக சமைக்கப்படும் பிரம்மா போஜனமும் மதுபனில் இருக்கும் . அனைவரிலும் தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானவர்களும் மதுபன் நிவாசிகள் தாம். அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும் மதுபனில் நடைபெறுகின்றன. அனைவரையும் விட நேரடியாக முரளிகளும் மதுபன்வாசிகள் தாம் கேட்கின்றனர். ஆக, மதுபன் நிவாசிகள் சதா சிரேஷ்ட பாக்கியத்திற்கு அதிகாரி ஆத்மாக்கள். சேவையும் மனதார செய்கிறார்கள். அதனால் மதுபன் நிவாசிகளுக்கு, பாப்தாதா மற்றும் அனைத்து பிராமணர்களின் மனதின் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நல்லது.

 

நாலாபுறமும் உள்ள பாப்தாதாவின் விசேச திருப்திமணிகளுக்கு பாப்தாதாவின் விசேச அன்பு நினைவுகள். அதோடு கூடவே அனைத்து பாக்கியசாலி பிராமண வாழ்க்கையை அடையக்கூடிய கோடியில் ஒரு சிலர், அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் சுப சங்கல்பங்களை நிறைவு செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சொத்துக்கு சம்பூர்ண அதிகாரத்தை அடையக்கூடிய ஆத்மாக்களுக்கு விதாதா மற்றும் வரதாதா பாப்தாதாவின் மிக-மிக அன்பு நினைவுகளை சுவீகாரம் செய்து கொள்ளவும்.

 

தாதி ஜானகிஜி மற்றும் தாதி சந்திரமணிஜி சேவைகளுக்காக செல்வதற்கு பாப்தாதாவிடம் விடை பெற்றுக் கொள்கின்றனர்

 

சென்று கொண்டிருக்கிறீர்களா அல்லது (பாபாவை உங்களுக்குள்) நிறைத்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சென்றாலும் அல்லது வந்தாலும் சதா நிறைந்திருக்கிறீர்கள். பாப்தாதா மிக முக்கியமான விசேசமான குழந்தைகளை ஒரு போதும் தனியாகப் பார்ப்பதே இல்லை. ஆகாரத்தில் (ள்ன்க்ஷற்ப்ங்) என்றாலும் சாகாரத்தில் என்றாலும் சதா கூடவே இருக்கிறீர்கள். ஏனென்றால் மகாவீர் குழந்தைகள் தாம் இந்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறார்கள் -- அதாவது ஒவ்வொரு நேரமும் கூடவே இருப்போம், கூடவே செல்வோம். மிகச்சிலர் தாம் இந்த உறுதிமொழியை நிறைவேற்றுகின்றனர். எனவே அத்தகைய மகாவீர் குழந்தைகள், விசேசமான குழந்தைகள் எங்கே சென்றாலும் பாபாவை உடன் அழைத்துச் செல்கின்றனர். மேலும் பாபா சதா வதனத்திலும் அவர்களைக் கூடவே வைத்துக் கொள்கிறார். ஒவ்வோரடியிலும் பாபா துணையைத் தருகிறார். அதனால் சென்று கொண்டிருக்கிறீர்களா, வந்து கொண்டிருக்கிறீர்களா -- என்ன சொல்வீர்கள்? அதனால் சொன்னோம் -- சென்று கொண்டிருக்கிறீர்களா அல்லது நிறைந்து கொண்டிருக்கிறீர்களா என்று. இதே போல் கூடவே இருந்து-இருந்து சமமாக ஆகி நிறைந்து விடுவீர்கள். வீட்டில் கொஞ்ச சமயத்திற்கு ஓய்வெடுப்பீர்கள், உடனிருப்பீர்கள். பிறகு நீங்கள் இராஜ்யம் செய்வதை பாபா மேலே இருந்து பார்ப்பார். ஆனால் துணையைக் கொஞ்ச சமயத்திற்கு அனுபவம் செய்ய வேண்டும். நல்லது.

 

(இன்று பாப்தாதா, நீங்கள் அற்புதமான மாலையை உருவாக்கினீர்கள்) நீங்களும் கூட மாலையை உருவாக்குகிறீர்கள் இல்லையா? மாலை இப்போதோ சிறியதாக உள்ளது. இப்போது இன்னும் பெரியதாக ஆகும். இப்போது யார் கொஞ்சம் அவ்வப்போது மூர்ச்சை அடைந்து விடுகிறார்களோ, அவர்களைக் கொஞ்ச சமயத்தில் இயற்கையின் அல்லது சமயத்தின் சப்தம் விழிப்புணர்வில் கொண்டு வரும். பிறகு மாலை பெரியதாக ஆகி விடும். நல்லது நீங்கள் எங்கே சென்றாலும் பாப்தாதாவின் வரதானியாகவோ இருக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வோரடியிலும் தந்தையின் வரதானம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும். பார்ப்பீர்களானால் பாபாவின் வரதானத்தை திருஷ்டி மூலம் பெற்றுக் கொள்வார்கள். பேசுவீர்களானால் வார்த்தையின் மூலம் வரதானம் பெறுவார்கள். கர்மத்தின் மூலம் கூட வரதானத்தையே பெறுவார்கள். நடக்கும் போதும் சுற்றி வரும் போதும் வரதானங்களின் மழை பொழியச் செய்வதற்காகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது வந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு வரதானத்தின் அல்லது மகாதானத்தின் அவசியம் தான் உள்ளது. நீங்கள் செல்கிறீர்கள் என்றால் திறந்த மனதோடு அவர்களுக்கு பாபாவின் வரதானம் கிடைப்பதாகும். நல்லது

 

வரதானம்

புத்தி என்ற கால்கள் மூலம் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய ஃபரிஸ்தா சொரூபம் ஆகுக.

 

ஃபரிஸ்தாக்களுக்கு எப்போதும் பிரகாசமான உடலைக் காட்டுகின்றனர். ஒளி உடல் உள்ளவர்கள் இந்த தேகத்தின் நினைவில் (ஸ்மிருதியில்) இருந்தும் விடுபட்டு இருப்பார்கள். அவர்களின் புத்தி என்ற கால் இந்த ஐந்து தத்துவங்களின் கவர்ச்சியிலிருந்து உயரத்தில் அதாவது அப்பாற்பட்ட நிலலையில் இருக்கும். அத்தகைய ஃபரிஸ்தாக்களை மாயா அல்லது எந்த ஒரு மாயாவியும் தொடகூட முடியாது. ஆனால் எப்போது நீங்கள் ஒரு போதும் யாருடைய அடிமையாகவும் இல்லாதிருக்கிறீர்களோ, அப்போது தான் இது நடக்கும். சரீரத்திற்கு கூட அதிகாரி ஆகி நடந்து கொள்ள வேண்டும். மாயாவுக்கு கூட அதிகாரி ஆக வேண்டும். லௌகிக மற்றும் அலௌகிக சம்மந்தங்களின் அடிமைத் தனத்திலும் வரக்கூடாது.

 

ஸ்லோகன்

சரீரத்தைப் பார்ப்பதற்கான பழக்கம் இருக்குமானால் ஒளி சரீரத்தைப் பாருங்கள், லைட் ரூபத்தில் நிலைத்திருங்கள்.

 

ஓம்சாந்தி