03-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, இந்த படைப்பு அல்லது உலகம் துக்கமானது. இதிலிருந்து நஷ்டமோஹா (பற்றுதலை வென்றவர்) ஆகுங்கள். புதிய உலகத்தை நினைவு செய்யுங்கள். புத்தி யோகத்தை இந்த உலகத்திலிருந்து விலக்கி புதிய உலகத்தின் பக்கம் செலுத்துங்கள்.

கேள்வி:
கிருஷ்ணபுரிக்குச் செல்ல குழந்தைகளாகிய நீங்கள் எப்படிப்பட்ட முயற்சி செய்கிறீர்கள் மற்றும் பிறரை செய்ய வைக்கிறீர்கள்?

பதில்:
கிருஷ்ணபுரிக்குச் செல்வதற்காக, இந்த கடைசி பிறவியில் மட்டும் அனைத்து விகாரங் களையும் விட்டு தூய்மையாகி, பிறரையும் தூய்மையாக்க வேண்டும். தூய்மையாவது தான் துக்கதாமத்திலிருந்து சுகதாமம் செல்வதற்கான ஏற்பாடு செய்வதாகும். "இது அழுக்கான உலகம், இதிலிருந்து புத்தியோகத்தை நீக்கினால், புதிய சத்யுக உலகத்திற்கு சென்று விடுவீர்கள்" என்ற இந்த செய்தியை நீங்கள் அனைவருக்கும் கொடுங்கள்.

பாடல்:
எனக்கு உதவி அளிப்பவரே....

ஓம் சாந்தி.
இந்த பாடலில் குழந்தைகள் 'பாபா' என்று சொல்கிறார்கள். எந்த குழந்தைகளுக்கு இப்போது சுகம் கிடைத்துக் கொண்டிருக்கிறதோ, அதாவது சுகதாமத்தின் வழி கிடைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த குழந்தைகளின் புத்தி எல்லையற்ற தந்தையின் பக்கம் சென்று விடுகிறது. பாபா முற்றிலுமாக சொர்க்கத்தின் 21 ஜென்மங்களுக்கான சுகத்தைக் கொடுப்பதற் காக வந்திருக்கிறார் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இந்த சுகத்தைக் கொடுப்பதற்காக சுயம் தந்தையே வந்து அறிவுரை கொடுத்துக் கொண்டிருக் கிறார். இந்த உலகம் அதாவது இத்தனை மனிதர்களாலும் ஒன்றும் கொடுக்க முடியாது என்று புரிய வைக்கிறார். இது அனைத்தும் படைப்பு அல்லவா! ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் ஆவார்கள். படைப் பாகிய ஒருவர் மற்றவருக்கு சுகத்தின் ஆஸ்தியை எப்படி கொடுக்க முடியும். சுகத்தின் ஆஸ்தியை கொடுக்கக்கூடியவர் கண்டிப்பாக படைப்பவராகிய தந்தை ஒருவர் மட்டுமே ஆவார். இந்த உலகத்தில் பிறருக்கு சுகம் கொடுக்ககூடியவர் என்று எந்த மனிதரும் கிடையாது. ஒரே ஒரு சத்குரு மட்டும் தான் சுகத்தின் வள்ளல், சத்கதி அளிக்கக்கூடிய வள்ளல். இப்போது எப்படிப்பட்ட சுகத்தை கேட்கிறார்கள்? சொர்க்கத்தில் மிகுந்த சுகம் இருந்தது என்பதையே அனைவரும் மறந்து விட்டனர் மற்றும் இப்போது நரகத்தில் துக்கம் உள்ளது. ஆகையினால் கண்டிப்பாக தந்தைக்குத் தான் அனைத்து குழந்தைகளின் மீதும் கருணை ஏற்படும். படைப்பின் படைப்புக் கர்த்தாவை நிறைய பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் யார்? அவரிடமிருந்து என்ன கிடைக்கிறது? இவை எதுவுமே தெரிவதில்லை. இறைவனிடமிருந்து நமக்கு துக்கம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு சுகம் சாந்தி கிடைப்பதற்காக தான் நினைவு செய்கிறார்கள். கண்டிப்பாக ஏதாவது பலனை எதிர்பார்த்து தான் பக்தர்கள் பகவானை நினைவு செய் கிறார்கள். துக்கமாக இருப்பதால் தான் சுகம், சாந்திக்காக நினைவு செய்கிறார்கள். எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தை கொடுக்கக் கூடியவர் ஒரே ஒருவர் தான். மற்றபடி எல்லைக்குட் பட்ட அல்ப காலத்திற்கான சுகத்தையோ ஒருவர் மற்றவருக்கு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. பக்தர்கள் அனைவரும் ஒரு பகவானை அழைக்கிறார்கள். கண்டிப்பாக பகவான் அனைவரை யும் விட உயர்ந்தவர். அவருடைய மகிமை மிக உயர்ந்தது. ஆகையினால் கண்டிப்பாக மிகுந்த சுகம் கொடுக்கக் கூடியவராக இருப்பார். தந்தை ஒருபோதும் குழந்தைகளுக்கு அல்லது உலகத்துக்கு துக்கம் கொடுக்க முடியாது. நீங்கள் சிந்தனை செய்யுங்கள் - "நான் என்ன துக்கம் கொடுப்பதற்காகவா இந்த படைப்பு அதாவது உலகத்தை படைக்கிறேன்!" என்று பாபா புரிய வைக்கிறார். நான் படைப்பதே சுகம் கொடுப்பதற்காகத் தான். ஆனாலும் இந்த டிராமா சுகம் மற்றும் துக்கத்தினுடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அதிகமாக துக்கப்படுகிறார்கள். எப்போது புதிய உலகம், புதிய படைப்பு ஏற்படுகிறதோ, அப்போது அதில் சுகம் கிடைக்கிறது என்று பாபா புரிய வைக்கிறார். பழைய உலகத்தில் துக்கம் ஏற்படுகிறது. அனைத்தும் பழையதாகி உளுத்துப் போய்விடுகிறது. முதலில் நான் எந்த படைப்பை படைக்கிறேனோ, அது சதோ பிரதானம் எனப்படுகிறது. அந்த நேரம் அனைத்து மனிதர்களும் எவ்வளவு சுகமாக இருக்கிறார்கள்! அந்த தர்மம் இப்போது மறைந்துப் போய் விட்டதால், யாருடைய புத்தியிலும் இல்லை.

புதிய உலகம் சத்யுகமாக இருந்தது என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்போது பழையதாகி விட்டதால், தந்தை கண்டிப்பாக புதிய உலகத்தை உருவாக்குவார் என்று ஆசை வைக்கிறார்கள். முத-ல் புதிய படைப்பில், புதிய உலகத்தில் மிகக்குறைந்த பேர் இருந்தார்கள், மேலும் மிக சுகமாக இருந்தார்கள். அந்த சுகம் அளவிட முடியாததாக இருந்தது. அதைத் தான் சொர்க்கம், வைகுண்டம், புதிய உலகம் என்று சொல்கிறார்கள். ஆகையினால் அதில் புதிய மனிதர்கள் இருப்பார்கள். கண்டிப்பாக அந்த தேவி தேவதை களின் இராஜ்யத்தை நான் தான் ஸ்தாபனை செய்திருக்க வேண்டுமில்லையா! இல்லையென்றால் கலியுகத்தில் ஒரு ராஜா கூட இல்லாமல் அனைவரும் ஒன்றுமில்லாமல் ஏழை ஆகிவிடுகின்றபோது, ஒரேயடியாக சத்யுகத் தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் எங்கிருந்து வருகிறது! இந்த உலகம் எப்படி மாறுகிறது! இருப்பினும் கொஞ்சம் கூட புரிந்து கொள்வதில்லை. அனைவருடைய புத்தியும் அந்தளவு கெட்டுப் போய் விட்டது. பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மனிதர்கள் சுகத்தையும் துக்கத்தையும் கொடுப்பவர் அவரே என்று இறைவன் மீது தோஷம் போட்டு விடுகிறார்கள். இருப்பினும் ஈஸ்வரனிடம் "நீங்கள் வந்து எங்களுக்கு சுகம் சாந்தியை கொடுங்கள். இனிமையான வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று நினைவு செய்கிறார்கள். பிறகு நடிப்பதற்காக கண்டிப்பாக இந்த உலகத்துக்கு அனுப்பப்படுவார்கள் அல்லவா! கலியுகத் திற்குப் பிறகு மீண்டும் கண்டிப்பாக சத்யுகம் வர வேண்டும். மனிதர்கள் இராவணனுடைய வழியில் இருக்கிறார்கள். ஸ்ரீமத் தான் சிரேஷ்டமான வழி ஆகும். நான் சகஜ இராஜ யோகத்தை கற்றுக் கொடுக்கிறேன் என்று பாபா சொல்கிறார். நான், நீங்கள் பாடுவதைப் போல கீதையின் சுலோகங்கள் போன்று எதையும் பாடுவதில்லை. பாபா அமர்ந்து கீதை கற்றுக் கொடுப்பாரா என்ன? நான் சகஜ இராஜயோகம் கற்றுக்கொடுக்கின்றேன். பள்ளிக்கூடத்தில் பாடல்கள், கவிதை கள் சொல்லப்படுகிறதா என்ன? பள்ளிக் கூடத்தில் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. நான் உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகின்றேன், இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று பாபா கூட சொல்கிறார். என்னிடம் வேறு யாருடைய புத்தியின் தொடர்பும் ஏற்படுவதில்லை. அனைவரும் என்னை மறந்து விட்டர்கள். இப்படி மறப்பது கூட டிராமாவில் பதிவாகி உள்ளது. நான் வந்து மீண்டும் நினைவு படுத்துகிறேன். நான் உங்களுடைய தந்தை. கடவுள் நிராகாரமானவர் என்று ஏற்றுக் கொள்கின்றீர்கள் என்றால், அவருடையவர்கள் ஆகிய நீங்களும் நிராகாரமான குழந்தைகள். நிராகாரமான ஆத்மாக்களே, நீங்கள் மீண்டும் இங்கே நடிப்பை நடிக்க வருகிறீர்கள். அனைத்து நிராகாரமான ஆத்மாக்களின் இருப்பிடம் நிராகாரமான உலகம் ஆகும். அது உயர்ந்ததிலும் உயர்ந்தது. இந்த சாகார உலகம், பிறகு ஆகார உலகம் மற்றும் அந்த நிராகார உலகம் அனைத்தையும் விட உயர்ந்து மூன்றாம் மாடியில் உள்ளது. பாபா முன்னால் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். நாம் கூட அங்கே வசிக்கக் கூடியவர்கள் ஆவோம். எப்போது புதிய உலகம் இருந்ததோ அப்போது அங்கே ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. அது தான் சொர்க்கம் எனப்படுகிறது. தந்தையை சொர்க்கத்தின் இறை தந்தை என்று சொல்லப்படுகிறது. கலியுகம் கம்சபுரியாக உள்ளது. சத்யுகம் கிருஷ்ண புரியாக உள்ளது. நீங்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்க வேண்டும். நீங்கள் கிருஷ்ண புரிக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்றால் தூய்மை ஆகுங்கள். நாங்கள் எப்படி துக்கதாமத் திலிருந்து சுகதாமம் செல்ல தயார் செய்து கொண்டிருக்கிறோமோ அது போல நீங்களும் செய்யுங்கள். அதற்காக கண்டிப்பாக விகாரத்தை விட வேண்டியிருக்கிறது. இது அனைவருடைய கடைசி பிறவியாகும். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். 5000 வருடங்களுக்கு முன்பு இந்த மஹாபாரதச் சண்டை நடந்திருக்கவில்லையா! நீங்கள் மறந்து விட்டீர்களா என்ன? அந்தச் சண்டையில் அனைத்து தர்மங்களும் அழிந்து ஒரு தர்மம் ஸ்தாபனை ஆகி இருந்தது. சத்யுகத்தில் தேவி தேவதைகள் இருந்தார்கள் அல்லவா! கலியுகத்தில் தேவி தேவதைகள் கிடையாது. இப்போது இராவண இராஜ்யமாக உள்ளது. அசுர மனிதர்கள் உள்ளனர். அவர்களை மீண்டும் தேவதை ஆக்கவேண்டி உள்ளது. ஆகவே அதற்காக அசுர உலகத்தில் வருவாரா? அல்லது தெய்வீக உலகத்தில் வருவாரா? அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வருவாரா? ஒவ்வொரு கல்பமும், கல்பத்தின் சங்கம யுகத்தில் வருகிறேன் என்று பாடப்பட்டுள்ளது. நமக்கு பாபா இதுபோல் புரிய வைக்கிறார், நாம் பாபா வுடைய ஸ்ரீமத்படி நடக்கின்றோம். பாபா சொல்கிறார், நான் வழிகாட்டி யாகி குழந்தைகளாகிய உங்களை திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறேன். ஆகையினால் என்னை காலனுக்கெல்லாம் காலன் என்றும் சொல்கிறார்கள். கல்பத்திற்கு முன்பும் மஹாபாரத யுத்தம் நடந்திருந்தது, அதன் மூலம் சொர்க்கத்தின் வாசல் திறந்தது. ஆனாலும் தேவி தேவதைகளைத் தவிர, அங்கே அனைவரும் செல்லவில்லை. மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருந்தனர். ஆகையினால் அனைவரையும் நிர்வாணதாமம் அழைத்துச்செல்ல, நிர்வாணதாமத்தின் தலை வனாகிய நான் வந்துள்ளேன். நீங்கள் இராவணனின் சங்கிலியில் மாட்டிக் கொண்டுள்ள விகாரி கள், அசுத்தமான அசுர குணமுடையவர்கள். காமம் தான் முதல் நம்பர் அழுக்காகும். மேலும் கோபம், பற்று முதலியவை வரிசைக் கிரமமான அழுக்குகளாக உள்ளது. எனவே முழு உலகத்திலிருந்தும் நஷ்டமோஹா ஆக வேண்டும். அப்போது தான் சொர்க்கத்திற்குப் போக முடியும். எப்படி அப்பா எல்லைக்குட்பட்ட வீடு கட்டும் போது, புத்தி அதன் மீது சென்று விடுகிறது. குழந்தைகள், அப்பா இங்கே இதைக் கட்ட வேண்டும், நன்றாக வீடு கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, "நான் உங்களுக்காக புதிய உலகமாகிய சொர்க்கத்தை எவ்வளவு நன்றாக உருவாக்குகிறேன்" என்று சொல்கிறார். ஆகையினால் உங்கள் புத்தியின் தொடர்பு பழைய உலகத்திலிருந்து துண்டிக்கப்பட வேண்டும். இங்கே என்ன இருக்கிறது? உடலும் பழையதாக உள்ளது, ஆத்மாவிலும் துரு படிந்துள்ளது. நீங்கள் யோகத்திலிருக்கும் போது தான், அந்தத் துரு நீங்கும். ஞானமும் தாரணை ஆகும். இந்த பாபா உரையாற்றிக் கொண்டிருக்கிறார் இல்லையா! ஏ, குழந்தைகளே! நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் என்னுடைய படைப்பாக உள்ளீர்கள். ஆத்மா என்ற சொரூபத்தில் சகோதர சகோதரர் ஆவீர்கள். இப்போது நீங்கள் அனைவரும், என் கூட திரும்பி வர வேண்டும். இப்போது அனைவரும் தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். இராவண இராஜ்யமாக உள்ளது இல்லையா! இராவண இராஜ்யம் எப்போதிருந்து ஆரம்பமாகிறது என்று நீங்கள் முன்பு அறிந்ததில்லை. சத்யுகத்தில் 16 கலைகள் இருக்கிறது, பிறகு 14 கலைகள் ஆகிறது. ஒரேயடியாக 2 கலைகள் குறைந்து விடுகிறது என்பது கிடையாது. மெதுமெதுவாக இறங்குகிறது. இப்போதோ எந்த கலைகளும் இல்லை. முற்றிலு மாக கிரஹணம் பிடித்து இருக்கிறது. தானம் கொடுத்தால் கிரஹணம் விட்டு விடும் என்று பாபா இப்போது சொல்கிறார். 5 விகாரங்களின் தானம் செய்யுங்கள். மேலும் எந்த பாவமும் செய்யாதீர்கள். பாரத வாசிகள் இராவணணை எரிக் கிறார்கள். கண்டிப்பாக இராவணனுடைய இராஜ்யம் இருந்திருக்கிறது. ஆனாலும் இராவண இராஜ்யம் என்று எதைச் சொல்கிறோம், இராம இராஜ்யம் என்று எதைச் சொல்கிறோம் என்பது கூட தெரிவதில்லை. இராம இராஜ்யம் வேண்டும், புதிய பாரதம் வேண்டும் என்று சொல் கிறார்கள். இருப்பினும் புதிய உலகம், புதிய பாரதம் எப்போது ஏற்படுகிறது என்று ஒருவர் கூட அறிந்து கொள்வதில்லை. அனைவரும் சுடுகாட்டில் தூங்கி விட்டனர்.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சத்யுகம் என்னும் மரம் பார்வையில் வந்து கொண்டி ருக்கிறது. இங்கே தேவதைகள் யாருமில்லை. ஆகவே இந்த பாபா வந்து அனைத்தையும் புரிய வைக்கிறார். உங்களுடைய தாய் தந்தை அவர் தான். ஸ்தூலத்தில் இவர்கள் (மம்மா-பாபா) தாய் தந்தையாக உள்ளார்கள். நீங்கள் தாய் தந்தை என்று அவரைப் பாடுகிறீர்கள். சத்யுகத்தில் இப்படி பாட மாட்டீர்கள். அங்கே கருணைக்கான விசயம் இல்லை. இங்கே தாய் தந்தையுடைய வராகி பிறகு தகுதி உடையவராக ஆக வேண்டியுள்ளது. பாபா நினைவூட்டுகிறார், ஏ! பாரதவாசிகளே, நீங்கள் மறந்து விட்டீர்கள், தேவதைகளாகிய நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தீர்கள்! எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தீர்கள்! இப்போது எதுவும் புரியாதவராகி அனைத்தையும் இழந்து விட்டீர்கள். மாயை இராவணன் உங்களை இப்படி எதுவும் புரியாத வராக ஆக்கியிருக்கிறது. அதனால் தான் இராவணனை எரிக்கிறீர்கள். எதிரியின் கொடும் பாவியை உருவாக்கி எரிக்கிறார்கள் அல்லவா! குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஞான சிந்தனை (விசார் சாகர் மந்தன்) செய்வதில்லை மற்றும் புத்தி அலைந்து கொண்டே இருக்கிறது என்றால் இப்படிப்பட்ட விசயங்களை சொற்பொழிவின் போது சொல்ல மறந்து விடுகிறார்கள். முழுமையாக புரிய வைப்பதில்லை. உங்களுக்கோ "பாபா வந்து விட்டார்" என்ற தந்தையின் செய்தியை கொடுக்க வேண்டும். இந்த மஹாபாரத யுத்தம் கண்ணெதிரே உள்ளது. அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தேகத்தின் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறார். மற்றபடி இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் ஆகிய அனைவரும் சகோதர சகோதரர்கள் என்று மட்டும் சொல்லக் கூடாது. இவை யனைத்தும் தேகத்தின் தர்மங்கள் தானே! அனைத்து ஆத்மாக்களும் பாபாவின் குழந்தைகள். இந்த அனைத்து தேகத்தின் தர்மங்களையும் விடுத்து என் ஒருவனையே நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறார். இந்த பாபாவின் செய்தியைக் கொடுப் பதற்காகத்தான் நாம் சிவஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நாம் பிரம்மா குமார குமாரிகள் சிவனுடைய பேரப்பிள்ளைகளாவோம். நமக்கு அவரிடமிருந்து சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. மன்மனாபவ என்று பாபா நமக்கு செய்தி கொடுக்கின்றார். இந்த யோக அக்னியின் மூலம் உங்களுடைய பாவகர்மங்கள் வினாசம் ஆகும். அசரீரி ஆகுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டுவிட்டு, அசரீரி ஆத்மா என்று புரிந்து ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். யோகம் ஞானத்தின் தாரணையின் மூலம் ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும்.

(2) பாபா என்ன ஞானம் கொடுக்கின்றாரோ, அதை விசார் சாகர் மந்தனம் (சிந்தனை செய்து) செய்து அனைவருக்கும் பாபாவின் செய்தியை கொடுக்க வேண்டும். புத்தியை அலை பாய விடக்கூடாது.

வரதானம்:
தந்தையின் அடி மேல் அடி வைத்தபடியே பரமாத்ம ஆசிகளை பெற்று விடக் கூடிய கட்டளைப்படி நடப்பவர் ஆவீர்களாக.

(ஆக்ஞாகாரி) கட்டளைப்படி நடப்பவர் என்றால், பாப்தாதாவின் கட்டளை என்று அடி மீது அடி எடுத்து வைப்பவர்கள். அப்பேர்ப்பட்ட கட்டளைபடி நடப்பவர்களுக்குத் தான் அனைத்து சம்பந்தங்களாலும் பரமாத்ம ஆசிகள் கிடைக்கின்றன. இது கூட நியமம் ஆகும். சாதாரண முறையில் கூட, யாராவது ஒருவருடைய உத்தரவிற்கு உடனே சரி என்று கூறி, அந்த காரியத்தை செய்தார் என்றால், யாருடைய காரியத்தை செய்கிறாரோ அவருடைய ஆசிகள் அவசியம் கிடைக்கின்றது. இதுவோ பரமாத்ம ஆசிகள் ஆகும். அது கட்டளைப்படி நடக்கும் ஆத்மாக்களை சதா டபிள் லைட் லேசாகவும் பிரகாசமாகவும் ஆக்கி விடுகிறது.

சுலோகன்:
தெய்வீகத் தன்மை மற்றும் அலௌகீகத் தன்மையை தங்களது வாழ்க்கையின் அலங்காரமாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால், சாதாரணத் தன்மை முடிந்து போய் விடும்.