03-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்த ஒரு மலிவான வியாபாரத்தைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வேண்டும்?

பதில்:

இந்தக் கடைசிப் பிறவியில் பாபாவின் கட்டளைப்படி நடந்து பவித்திரமாகுங்கள். அப்போது 21 பிறவிகளுக்கு உலகத்தின் அரசாட்சி கிடைத்து விடும். இது மிகவும் மலிவான வியாபாரமாகும். இந்த வியாபாரத்தையே செய்வதற்கு நீங்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள். இப்போது சிவபாபாவை நினைவு செய்து பவித்திரமாவீர்களானால் பவித்திர உலகத்தின் எஜமானராக ஆகி விடுவீர்கள் என்று கூறுங்கள்.

ஓம் சாந்தி. ஆன்மிகக் குழந்தைகள் அறிவார்கள், ஆன்மிகத் தந்தை புரிய வைக்கிறார், கண்காட்சி அல்லது மேளாவில் காட்சிகள் காட்டுகிறீர்கள் அல்லது சித்திரங்களை வைத்து மனிதர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள், தந்தையிடமிருந்து இப்போது எல்லையற்ற ஆஸ்தி பெற வேண்டும். என்ன ஆஸ்தி? மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான அல்லது எல்லையற்ற தந்தையிடமிருந்து அரைக் கல்பத்திற்கான சொர்க்கத்தின் இராஜ்யத்தை எப்படிப் பெறுவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தையும் கூட வியாபாரி தான். அவருடன் இந்த வியாபாரம் செய்ய வேண்டும். இதையோ மனிதர் கள் அறிந்துள்ளனர், பாரதத்தில் எப்போது சத்திய யுகம் இருந்ததோ அப்போது தேவி-தேவதைகள் தூய்மையாக இருந்தனர் என்று. நிச்சயமாக அவர்கள் சொர்க்கத்திற்காக ஏதேனும் பலனை அடைந்திருக்க வேண்டும். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவராகிய தந்தையல்லாமல் வேறு யாரும் பலனைத் தர முடியாது. தூய்மைப்படுத்தக்கூடிய தந்தை தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கி தூய்மையான உலகத்தின் இராஜ்யத்தைத் தருபவர். வியாபாரம் எவ்வளவு மலிவானதாகத் தருகிறார். இது உங்களது கடைசிப் பிறவி என்று மட்டும் சொல்கிறார். நான் எது வரை இங்கே இருக்கிறேனோ, தூய்மையாகுங்கள். நான் வந்திருப்பது தூய்மையாக்குவதற்காகவே. நீங்கள் இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையாவதற்கான புருஷார்த்தம் செய்வீர்களேயானால் தூய்மையான உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவீர்கள். வியாபாரமோ மிக மலிவானது. ஆக, பாபாவுக்கு சிந்தனை வந்தது, குழந்தைகளுக்கு அந்த மாதிரிப் புரிய வைக்க வேண்டும், அதாவது இது தந்தையின் கட்டளை – பவித்திரமாகுங்கள் என்பதாகும். இது புருஷோத்தம சங்கமயுகம். இது தூய்மையாக ஆவதற்கான யுகம். உத்தமரிலும் உத்தம ஆத்மாக்கள் தேவதைகள். லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் நடந்துள்ளது இல்லையா? தெய்வீக உலகின் இராஜ்ய அதிகாரம் உங்களுக்கு தந்தையிடமிருந்து கிடைக்க முடியும். தந்தையின் வழிப் படி நடந்து இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையாவீர்களானால், இதையும் கூட யுக்தியாகச் சொல்கிறார் - அதாவது யோக பலத்தின் மூலம் தன்னை தமோபிரதானில் இருந்து சதோபிரதான் எப்படி ஆக்கிக் கொள்வது? என்பதை குழந்தைகள் நன்மை செய்வதற்காகச் செலவோ செய்யத் தான் வேண்டியுள்ளது. செலவு இல்லாமல் இராஜதானி அமைய முடியாது. இப்போது லட்சுமி-நாராயணரின் இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். மனம்-சொல்-செயலால் எந்த ஒரு தலைகீழான காரியமும் செய்யக் கூடாது. தேவதைகளுக்கு ஒரு போதும் தவறான சிந்தனை எதுவும் வராது. வாயிலிருந்து அப்படிப் பட்ட எந்த ஒரு வார்த்தையும் வெளிவராது. அவர்கள் சர்வகுண சம்பன்னம், சம்பூர்ண நிர்விகாரி, மரியாதா புருஷோத்தம்..... இப்படி யார் இருந்து விட்டுச் செல்கின்றனரோ, அவர்களின் மகிமை பாடப்படுகின்றது. இப்போது குழந்தைகள் உங்களையும் கூட அதே போல தேவி-தேவதையாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன். ஆக, மனம்-சொல்-செயலால் அத்தகைய எந்த ஒரு தீய காரியமும் செய்யக் கூடாது. தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தனர். இந்த குணங்களும் கூட நீங்கள் இப்போது தான் தாரனை செய்ய முடியும். ஏனென்றால் இந்த மரண உலகத்தில் இது உங்களுக்குக் கடைசிப் பிறவியாகும். தூய்மை இழந்த உலகம் மரண உலகம் என்றும் தூய்மையான உலகம் அமர உலகம் என்றும் சொல்லப் படுகின்றது. இப்போது மரண உலகத்தின் விநாசம் ஆகுவதற்கு தயாராக உள்ளது. நிச்சயமாக அமரபுரியின் ஸ்தாபனை ஆகியே தீரும். இது அதே மகாபாரத யுத்தமாகும். அது சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் பழைய விகாரி உலகம் அழிந்து போகின்றது. ஆனால் இந்த ஞானம் யாரிடமும் கிடையாது. பாபா சொல்கிறார், அனைவரும் அஞ்ஞான உறக்கத்தில் உறங்கிப் போயுள்ளனர். 5 விகாரங்களின் நஷா உள்ளது. இப்போது பாபா சொல்கிறார், தூய்மையாகுங்கள். மாஸ்டர் கடவுளாகவோ ஆவீர்கள் இல்லையா? லட்சுமி-நாராயணரை பகவான்-பகவதி எனச் சொல்கின்றனர். அதாவது இறைவன் மூலமாக ஆஸ்தி பெற்றுள்ளனர். இப்போதோ பாரதம் தூய்மையற்று உள்ளது. மனம்-சொல்-செயலால் காரியமே அது போல் நடைபெறுகின்றது. எந்த ஒரு விசயமும் முதலில் புத்தியில் வருகின்றது. பிறகு வாயிலிருந்து வெளிப்படுகின்றது. கர்மத்தில் வருவதால் விகர்மம் ஆகி விடுகின்றது. பாபா சொல்கிறார், அங்கே எந்த ஒரு விகர்மமும் நடப்பதில்லை. இங்கே விகர்மங்கள் நடைபெறுகின்றன. ஏனென்றால் இராவண ராஜ்யம். இப்போது பாபா சொல்கிறார், மீதி உள்ள ஆயுளில் தூய்மையாகுங்கள். உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும், தூய்மையாகி என் மீது புத்தியின் தொடர்பை ஈடுபடுத்தவும் வேண்டும். இதன் மூலம் உங்களுடைய ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள் கூட நீங்கி விடும். அப்போது தான் நீங்கள் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் எஜமானர் ஆவீர்கள். தந்தை தானே வந்து தரவிருக்கிறார், இவர் மூலம் இந்த ஆஸ்தி தருகிறார் என்பதை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். அவர் சிவபாபா, இவர் தாதா. அதனால் எப்போதுமே பாப்தாதா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். சிவபாபா, பிரம்மா தாதா. தந்தை எவ்வளவு வியாபாரம் செய்கிறார்! மரண உலகத்தின் விநாசம் அழிவு தயாராகி கொண்டுள்ளது. அமர உலகத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. பாரதவாசிகளுக்கு நன்மை கிடைக் கட்டும் என்பதற்காகவே கண்காட்சி, மேளா நடத்துகிறீர்கள். பாபா தான் வந்து பாரதத்தில் இராம ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். இராமராஜ்யத்தில் நிச்சயமாக தூய்மையானவர்கள் தான் இருப்பார்கள். பாபா சொல்கிறார், குழந்தைகளே, காமம் என்பது மகா விரோதி. இந்த 5 விகாரங்கள் தான் மாயா எனச் சொல்லப் படுகின்றது. இதன் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். உலகை வென்றவர்கள் தேவி-தேவதைகள். வேறு யாரும் உலகை வென்ற வராக ஆக முடியாது. பாபா புரிய வைத்துள்ளார் - கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து விட்டால் முழு சிருஷ்டியின் இராஜ்யத்தையே பெற முடியும். ஆனால் அதற்கு சட்டம் இல்லை. இந்த வெடி குண்டுகள் பழைய உலகத்தை அழிப்பதற்காகத் தான். கல்ப-கல்பமாக இதுபோல் புதிய உலகத்திலிருந்து பழையதாக, பழையதில் இருந்து புதியதாக ஆகின்றது. புது உலகத்தில் ஈஸ்வரிய இராஜ்யம் இருக்கும். அது இராமராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. ஈஸ்வரனை அறியாத காரணத்தால் தான் ராம்-ராம் என ஜெபித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆக, குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் இந்த விஷயங்கள் தாரணை ஆக வேண்டும். நிச்சயமாக நாம் 84 பிறவிகளில் சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானமாக ஆகியிருக்கிறோம். இப்போது மீண்டும் சதோபிரதான மாக அவசியம் ஆக வேண்டும். சிவபாபாவின் கட்டளை உள்ளது, இப்போது அதன்படி நடப்பீர் களானால் 21 பிறவிகளுக்குப் தூய்மையான உலகத்தில் உயர்ந்த பதவி பெறுவீர்கள். இப்போது புருஷார்த்தம் செய்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நினைவில் இருந்து மற்றவர்களுக்கு வழி சொன்னாலும் சரி, சொல்லவில்லை என்றாலும் சரி. கண்காட்சிகள் மூலம் குழந்தைகள் அநேகருக்கு வழி சொல்லிக் கொண்டுள்ளனர். தனக்கும் கூட நன்மை செய்து கொள்ள வேண்டும். வியாபாரம் மிகவும் மலிவானதாகும். இந்தக் கடைசிப் பிறவியில் மட்டும் தூய்மையாக இருப்பதன் மூலம் நீங்கள் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். எவ்வளவு மலிவான வியாபாரம்! வாழ்க்கையே மாறி விடுகின்றது. இது போன்று சிந்தனை செய்ய வேண்டும். பாபாவிடம் செய்திகள் வருகின்றன. ராக்கி கட்டுவதற்காகச் சென்றால் சிலர் சொன்னார்கள், இச்சமயம் தமோபிரதான உலகமாக உள்ளது, இதில் தூய்மை கடைபிடிப்பதென்பது நடக்க முடியாத ஒன்று. இப்போது சங்கம யுகம் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. பாபா தான் தூய்மையாக்குகிறார். இவர்களின் உதவியாளர் பரமபிதா பரமாத்மா. அவர்களுக்கு இது தெரியாது, இங்கே மதில் சுவர்(பாதுகாப்பு) மிகப் பெரியது என்று. தூய்மை அடைவதால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகலாம். தந்தை சொல்கிறார், இந்த மாயா என்ற 5 விகாரங்கள் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். அப்போது நாம் ஏன் தூய்மையாக மாட்டோம்? முதல் தரமான வியாபாரம். பாபா சொல்கிறார், காமம் மிகப் பெரிய விரோதி. இதன் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள். மாயாஜீத் ஜெகத்ஜீத் (மாயாவை வென்றவர் உலகை வென்றவராவார்). இது யோக பலத்தின் மூலம் மாயாவை வெல்வதற்கான விஷயம். பரமபிதா பரமாத்மா தான் வந்து ஆத்மாக் களுக்குப் புரிய வைக்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் கறை நீங்கி விடும். நீங்கள் சதோபிரதான உலகின் எஜமானர் ஆகி விடுவீர்கள். சங்கமயுகத்தில் தான் பாபா ஆஸ்தி தருகிறார். அனைவரைக் காட்டிலும் உத்தம ஆத்மாக்களாக இந்த லட்சுமி-நாராயணர் இருந்தனர். அவர்கள் தான் மரியாதா புருஷோத்தம் தேவி-தேவதா எனச் சொல்லப் படுகின்றனர். மிக நன்றாகவே புரிய வைக்கப் படுகின்றது. ஆனால் அவ்வப்போது இந்தப் பாயின்ட்டுகள் மறந்து போகிறது. பிறகு பின்னால் நினைவு வருகிறது, சொற்பொழிவில் இப்படிப்பட்ட பாயின்ட்டுகளைப் புரிய வைக்கவில்லை. புரிய வைப்பதற் கான பாயின்ட்டுகளோ அநேகம் உள்ளன. அந்த மாதிரி ஆகி விடுகிறது. வக்கீல்களும் கூட ஒரு சில பாயின்ட்டுகளை மறந்து விடுகின்றனர். பிறகு அந்தப் பாயின்ட் பின்னால் நினைவு வந்தால் சண்டை யிடுகின்றனர். டாக்டர்களுக்கும் கூட அதுபோல் சிந்தனை ஓடுகிறது - இந்த நோய்க்கு இந்த மருந்து சரியானது. இங்கேயும் கூட பாயின்ட்டுகளோ ஏராளமாக உள்ளன. பாபா சொல்கிறார், இன்று உங்களுக்கு ஆழமான பாயின்ட்டைப் புரிய வைக்கிறேன். ஆனால் புரிந்து கொள்பவர்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். அழைக்கவும் செய்கின்றனர், ஹே பதித-பாவனா...... பிறகு யாரையாவது நீங்கள் தூய்மையற்றவர் எனச் சொன்னால் கோபப் படுவார்கள். ஈஸ்வரனுக்கு முன்னால் உண்மை சொல்கின்றனர் - ஹே பதித-பாவனா வாருங்கள். வந்து எங்களைப் தூய்மையாக்குங்கள். ஈஸ்வரனை மறந்து விடுகின்றனர் என்றால் பிறகு பொய் சொல்கின்றனர். அதனால் மிகவும் யுக்தியோடு புரிய வைக்க வேண்டும் - பாம்பும் சாக வேண்டும், கம்பும் ஒடியக் கூடாது என்று சொல்லப் படுவது போல். பாபா சொல்கிறார், எலியிடமிருந்து குணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எலி யுக்தியோடு கடிக்கிறது. இரத்தமும் வருகின்றது. ஆனால் அது பற்றி எதுவும் தெரிவதில்லை. ஆக, குழந்தைகளின் புத்தியில் அனைத்துப் பாயின்ட்டுகளும் இருக்க வேண்டும். யோகத்தில் இருப்பவர்களுக்கு சமயத்தில் உதவி கிடைக்கும். இப்படியும் நடக்கலாம் - அதாவது கேட்பவர்கள் சொல்பவர்களை விடவும் அதிகமாக பாபாவுக்குப் பிரியமானவராக ஆகி விடலாம். ஆக, பாபா தாமே கூட அமர்ந்து புரிய வைப்பார். தூய்மையாவது மிக நல்ல விசயம் என்று அவர்கள் புரிந்து கொள்கிற மாதிரி அப்படிப் புரிய வைக்க வேண்டும். இந்த ஒரு பிறவி தூய்மையாக இருப்பதன் மூலம் நாம் 21 பிறவிகளுக்குப் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆவோம். பகவான் சொல்கிறார்- இந்தக் கடைசிப் பிறவி தூய்மையா வீர்களானால் நான் உத்திரவாதம் தருகிறேன், டிராமாவின் திட்டத்தின் படி நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி பெற முடியும். நாமோ கல்ப-கல்பமாக ஆஸ்தி பெற்றுக் கொண்டே இருக்கிறோம். யாருக்கு சேவையின் ஆர்வம் இருக்குமோ, அவர்களோ நாம் போய் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் எனப் புரிந்து கொள்வார்கள். யாருக்கு ஆத்மா தூய்மையாக உள்ளதோ, அப்போது தாரணையும் ஆகும். தனது பெயரை விளங்கச் செய்து காட்டுவார்கள். கண்காட்சி, மேளா மூலம் தெரிந்து விடும், யார் என்ன சேவை செய்கிறார்கள் என்று. டீச்சர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்-யார் எப்படிப் புரிய வைக்கிறார்கள் என்று. அதிகமாக லட்சுமி-நாராயணர், ஏணிப்படி சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பது நல்லது. யோகபலத்தின் மூலம் இது போல் லட்சுமி-நாராயணர் ஆகிறார்கள். லட்சுமி-நாராயணர் தான் ஆதி தேவ், ஆதி தேவி. சதுர்புஜத்தில் லட்சுமி-நாராயணர் இருவரும் வந்து விடுகின்றனர். இரண்டு புஜங்கள் லட்சுமியினுடையவை, இரண்டு புஜங்கள் நாராயணருடையவை. இதையும் கூட பாரதவாசிகள் அறிந்திருக்கவில்லை. மகாலட்சுமிக்கு 4 புஜங்கள் உள்ளன. இதன் அர்த்தமே அவர்கள் யுகல் (தம்பதியர்) என்பது தான். விஷ்ணு சதுர்புஜங்கள் உள்ளவர்.

கண்காட்சியிலோ தினந்தோறும் புரிய வைக்கப் படுகின்றது. இரதமும் காட்டப் பட்டுள்ளது. அர்ஜுனன் அமர்ந்திருந்ததாகச் சொல்கின்றனர். கிருஷ்ணர் இரதத்தைச் செலுத்துபவராக இருந்தார். இவை அனைத்தும் கதைகள். இப்போது இவை ஞானத்தின் விசயங்கள். ஞான அமிர்தத்தின் கலசத்தை லட்சுமியின் தலையில் வைத்திருப்பதாகக் காட்டுகின்றனர். உண்மையில் ஜெகதம்பா மீது தான் கலசம் வைக்கப்படுகிறது. அவர் தாம் பிறகு லட்சுமி ஆகிறார். இதையும் புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் ஒரு தர்மம், ஒரு வழிமுறையில் மனிதர்கள் இருப்பார்கள். தேவதைகளுக்கு ஒரே வழிமுறை தான். தேவதைகள் தான் ஸ்ரீ என்று சொல்லப் படுகின்றனர். வேறு யாரையும் சொல்வ தில்லை. ஆக, பாபாவுக்கு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது - புரிய வைப்பதற்காக வார்த்தைகள் கொஞ்சமாக இருக்க வேண்டும். இந்தக் கடைசிப் பிறவியில் 5 விகாரங்கள் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் இராமராஜ்யத்தின் எஜமானர் ஆவீர்கள். இதுவோ மலிவான வியாபாரமாகும். பாபா வந்து அழிவில்லாத ஞான ரத்தினங்களின் தானம் கொடுக்கிறார். பாபா ஞானக்கடலாக இருக்கிறார். அவர் தான் ஞான ரத்தினங்களைத் தருகிறார். இந்திர சபையில் சிலர் மரகதமாக, சிலர் புஷ்பராகமாக உள்ளனர். அனைவருமே உதவி செய்பவர்கள் தான். ஆபரணங்களில் விதவிதமாக உள்ளன இல்லையா? அதனால் நவரத்தினங்கள் காட்டப்பட்டுள்ளன. நல்ல படியாகப் படிப்பவர்கள் பதவி பெறுவார்கள் என்பதோ நிச்சயம். நம்பர்வாரோ இருக்கத் தானே செய்கின்றனர்? புருஷார்த்தம் செய்வதற்கான நேரமே இது தான். இதையோ குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாபாவின் மாலையில் மணியாக ஆகின்றோம். எவ்வளவு சிவபாபாவை நினைவு செய்கிறோமோ, அவ்வளவு நாம் நினைவு யாத்திரையில் முன்னால் ஓடிச் செல்கிறோம். பாவங்களும் விரைவாக விநாசமாகும்.

இந்தப் படிப்பு ஒன்றும் மிகப் பெரிய அளவிலானது அல்ல. தூய்மையாக மட்டும் ஆக வேண்டும். வாயினால் ஒரு போதும் கல் (கடும்) போன்ற சொல் வெளிப்படுத்தக் கூடாது. கல்லை எறிபவர்கள் கல்புத்தியாகவே ஆவார்கள். இரத்தினங்களை வெளிப்படுத்துபவர்கள் தான் உயர்ந்த பதவி பெறுவார்கள். இதுவோ மிகவும் சுலபமானது. மாணவர்களுக்குப் புரிய வையுங்கள் - பதீத-பாவனர், அனைவருக்கும் முக்தி-ஜீவன்முக்தி அளிக்கும் வள்ளல் பரமபிதா பரமாத்மா சொல்லியிருக்கிறார் - ஹே பாரதவாசி ஆன்மிகக் குழந்தைகளே, இராவண இராஜ்யம், மரண உலகத்தின் இந்தக் கலியுகத்தின் கடைசிப் பிறவியில் தூய்மையாக இருப்பதன் மூலம் மற்றும் பரமபிதா பரமாத்மா சிவனுடன் புத்தியோக பலத்தின் யாத்திரை மூலம் தமோபிரதான ஆத்மாக்கள் சதோபிரதான ஆத்மா ஆகி சதோப்ரதான சத்யுக உலகத்தில் தூய்மை, சுகம், சாந்தி, செல்வம் நிறைந்த மரியாதா புருஷோத்தம், தெய்விக சுயராஜ்ய பதவியை 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே மீண்டும் பெற முடியும். ஆனால் வரப் போகிற மகாபாரத யுத்தத்திற்கு முன்பாக தந்தை நமக்கு ஆஸ்தி தருகிறார், கல்வி கற்பிக்கிறார். எவ்வளவு படிக்கிறீர்களோ, அந்தளவு பதவி பெறுவீர்கள். கூடவே எடுத்துச் செல்லவோ போகிறீர்கள். பிறகு நமக்கு இந்தப் பழைய சரீரத்தின் அல்லது இந்த உலகத்தின் சிந்தனை ஏன் இருக்க வேண்டும்? உங்களுக்கு இது பழைய உலகத்தை விடுவதற்கான சமயம். இப்படி-இப்படி விஷயங்களை புத்தியில் சிந்தனை செய்து கொண்டே இருந்தால் கூட மிக நல்லது. இன்னும் போனால் புருஷார்த்தம் செய்து-செய்து சமயம் வந்து கொண்டே இருக்கும். பிறகு மூச்சுத் திணறல் வராது. உலகமும் கொஞ்ச காலமே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்பீர்கள் அதனால் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்த வேண்டும். சேவை செய்வதால் உதவியும் கிடைக்கும். எவ்வளவு யாருக்காவது சுகத்திற்கான வழி சொல்கிறீர்களோ, அவ்வளவு குஷி இருக்கும். புருஷார்த்தமும் நடைபெறுகின்றது. அதிர்ஷ்டம் தென்படுகிறது. பாபாவோ அதற்கான முயற்சியைக் கற்றுத் தருகிறார். சிலர் அதில் ஈடுபடுகின்றனர். நீங்கள் அறிவீர்கள், கோடீஸ்வரர்கள், பல கோடிக்கு அதிபதிகள் அனைவரும் அப்படியே அழிந்து போவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) உயர்ந்த பதவி பெறுவதற்காக வாயிலிருந்து சதா இரத்தினங்களையே வெளிப்படுத்த வேண்டும், கல்லை (கடும், சொற்களை) அல்ல. மனம்-சொல்-செயலால், அப்படிப்பட்ட கர்மம் செய்ய வேண்டும். மரியாதா புருஷோத்தம் (தெய்வீக மரியாதைகள் உள்ள உத்தமர்களாக) ஆகின்ற மாதிரி

2) இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மையாவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தூய்மையாவதற்கான யுக்திகளைத் தான் அனைவருக்கும் சொல்ல வேண்டும்.

வரதானம்:

சதா (கல்யாண்காரி) நன்மை செய்யக் கூடிய பாவனையின் மூலம்

குணகிராகி (நற்குணங்களை கிரகிப்பவர்) ஆகக்கூடிய ஆடாத, அசையாதவர் ஆகுக.
தனது ஸ்திதியை ஆடாத, அசையாததாக ஆகுவதற்காக சதா குணகிராகி ஆகுங்கள். ஒருவேளை ஒவ்வொரு விˆயத்திலும் குணகிராகி ஆவீர்களானால் குழப்பத்தில் வர மாட்டீர்கள். குணகிராகி என்றால் நன்மையின் பாவனை. அவகுணத்திலும் குணத்தைப் பார்ப்பவரைத் தான் குணகிராகி எனச் சொல்கின்றனர். எனவே அவகுணங்கள் உள்ளவரிடம் இருந்தும் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி அவர் அவகுணத்தில் திடமாக (உறுதியாக) இருக்கிறாரோ, அது போல் நீங்கள் நற்குணத்தில் திடமாக இருங்கள். குணங்களை கிரகிப்பவர் ஆகுங்கள். அவகுணத்தை அல்ல.

சுலோகன்:

தன்னிடமுள்ள அனைத்தையும் பாபாவுக்கு அர்ப்பணம் செய்து, சதா லேசாக இருப்பவர்கள் தான் ஃபரிஸ்தா ஆவார்கள்.