03.04.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பாபாவிடம் புத்துணர்ச்சி அடைவதற்காக வருகின்றீர்கள், இங்கு உங்களுக்கு உலகீய வைப்ரேசனிலிருந்து (எதிர்மறை அதிர்வுகளிலிருந்து) தூர விலகி சத்தியமானவருடன் உண்மையான சங்கம் (தொடர்பு) கிடைக்கின்றது.

 

கேள்வி:

பாபா குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக என்ன அறிவுரை தருகின்றார்?

 

பதில்:

இனிமையான குழந்தைகளே ஒருபோதும் உங்களுக்குள் உலகீய வேண்டாத விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள். யாரேனும் பேசினாலும் அதனை கேட்டும் கேளாதவராக இருந்து விடுங்கள். நல்ல குழந்தைகள் தனது சேவைகளை முடித்துக் கொண்டு பாபாவின் நினைவில் மூழ்கி விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் வீணான விசயங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்கிறார்கள், பேசுகின்றார்கள். இதனால் அதிக நேரம் வீணாகின்றது, பிறகு முன்னேற்றம் ஏற்படுவதில்லை.

 

ஓம் சாந்தி.

இருமுறை ஓம் சாந்தி சொன்னாலும் சரிதான். குழந்தைகளுக்கு அர்த்தம் புரிய வைக்கப் பட்டுள்ளது. நான் சாந்த சொரூப ஆத்மா, எனது தர்மமே சாந்தியாக இருக்கும் பொழுது பிறகு காட்டில் சென்று அலைவதால் அமைதி கிடைக்க முடியாது. பாபா சொல்கிறார் நானும் சாந்த சொரூபமாக இருக்கின்றேன். இது மிகவும் சுலபம் தான். ஆனால் மாயை போர் புரிவதால் சிறிது கடினமாக உள்ளது. இது குழந்தைகள் அனைவருக்கும் தெரியும் எல்லையில்லா தந்தையைத் தவிர வேறு யாரும் இந்த ஞானம் தர முடியாது. ஞானக் கடல் ஒரு பாபா தான். தேகதாரி மனிதர்களை ஒருபோதும் ஞானக் கடல் என்று சொல்ல முடியாது. படைப்பவர்தான் படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் தருகின்றார். அது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கின்றது. சில நல்ல நெருக்கமான (சமர்பண) குழந்தைகளும் மறந்து விடுகின்றனர். ஏனெனில், பாபாவின் நினைவு பாதரசம் போன்றது. பள்ளியில் கண்டிப்பாக வரிசைக் கிரமமாகத்தான் இருப்பார்கள் அல்லவா! பள்ளியில் எப்போதும் நம்பர் கணக்கிடப்படுகிறது, சத்யுகத்தில் ஒருபோதும் நம்பர் கணக்கிடப்படுவதில்லை, இது பள்ளிக்கூடம், இதைப் புரிந்துக் கொள்வதற்கும் விசால புத்தி வேண்டும். அரைக் கல்பம் பக்தி, நடைபெறுகிறது, பக்திக்குப் பிறகு ஞானக் கடல் ஞானம் தர வருகின்றார். பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் ஒருபோதும் ஞானம் தர முடியாது. ஏனெனில் அனைவரும் மனிதர்கள். சிவபாபா பக்தி செய்கிறார் என்று சொல்ல முடியாது. அவர் யாரை பக்தி செய்வார். ஒரே ஒருவர்தான் தந்தை, அவருக்கென தேகமில்லை. அவர் எவரையும் பக்தி செய்யவில்லை. மீதமுள்ள தேகதாரிகள் அனைவரும் பக்தி செய்கின்றனர், ஏனென்றால் படைப்புகள் அல்லவா? படைப்பாளர் ஒரு தந்தைதான். இந்த கண்களால் காணும் அனைத்தும், சித்திரங்களும் எல்லாமே படைப்புகள் இந்த விசயங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றது.

 

பாபா புரிய வைக்கின்றார்: உங்களுக்கு ஆஸ்தி தந்தையைத் தவிர வேறு யாரிடமிருந்தும் கிடைக்க முடியாது. வைகுண்ட இராஜாங்கம் உங்களுக்கு கிடைக்கின்றது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. 2500 வருடங்கள் சூரிய வம்சம் - சந்திர வம்சத்தவரின் இராஜாங்கம் நடைபெற்றது. இது நேற்றைய விசயம் என்று நீங்கள்தான் புரிந்துள்ளீர்கள். தந்தையைத் தவிர வேறு எவரும் சொல்ல முடியாது. பதீத - பாவனன் தந்தை ஒருவர் தான். புரிய வைப்பதிலும் அதிக முயற்சி தேவைப்படுகிறது. பாபாவே சொல்கிறார் கோடியில் சிலரே புரிந்து கொள்வார்கள். இந்த சக்கரமும் புரிய வைக்கப்பட்டுள்ளது. இது முழு உலகிற்குமான ஞானம். ஏணிப்படியும் மிக நல்ல சித்திரம், இருப்பினும் (முணு முணுக்கின்றனர்) ஏற்பதில்லை. பாபா சொல்கிறார், கல்யாண மண்டபம் கட்டுபவர்களுக்குப் புரிய வைத்து திருஷ்டி வழங்குங்கள். போகப் போக அனைவருக்கும் இந்த விசயங்கள் பிரியமானதாகி விடும். குழந்தைகள் நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். பாபா யாரிடமும் செல்ல மாட்டார். பகவான் வாக்கு:- பூஜாரியானவர்களை ஒருபோதும் பூஜைக்குரியவர் என்று சொல்ல முடியாது. கலியுகத்தில் ஒருவர் கூட தூய்மையாக இருக்க முடியாது. பூஜைக்குரிய தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்பவரும் அனைத்திலும் உயர்ந்த பூஜைக்குரியவரே ஆவார். அரைக் கல்பம் பூஜைக்குரியவர்கள் பிறகு அரைக் கல்பம் பூஜாரியாகின்றனர். இந்த பாபாவும் (பிரம்மா) பல குருமார்களை நாடி வந்தார், இப்போது புரிந்து கொள்கின்றார் குருவை நாடியது பக்தி மார்க்கமாகும். இப்போது சத்குரு கிடைத்துள்ளார், அவரே பூஜைக்குரியவராக மாற்றுகின்றார். ஒருவரை மட்டுமல்ல, அனைவரையும் மாற்றுகின்றார். ஆத்மாக்கள் அனைவரும் பூஜைக்குரிய சதோபிரதானமாகின்றனர். இப்போது பூஜாரி, தமோபிரதானமானவர்கள். இவையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். பாபா சொல்கிறார் கலியுகத்தில் ஒருவர் கூட தூய்மையானவராக, பூஜைக்குரியவராக இருக்க முடியாது. அனைவரும் விகாரத்தில் பிறக்கின்றனர். இராவணன் இராஜ்யம் இது. இந்த இலட்சுமி- நாராயணரும் மறு பிறவி எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் பூஜைக்குரியவர்கள்; ஏனெனில் அங்கு இராவணன் கிடையாது. வார்த்தையில் மட்டும் சொல்கிறார்கள் ஆனால் இராம இராஜ்யம் எப்போது, இராவணன் இராஜ்யம் எப்போது, இதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை, இந்த சமயத்தில் எத்தனை சபைகள் பாருங்கள். இந்த சபை, அந்த சபை எங்காவது ஏதேனும் கிடைத்து விட்டால் ஒன்றை விட்டு விட்டு வேறு பக்கம் சென்றுவிடுவர். நீங்கள் இப்போது பாரஸ் புத்தியுடையவராகின்றீர்கள். இருப்பினும் அதிலும் சிலர் 20% சிலர் 50% தான் அவ்வாறு ஆகிகின்றனர். பாபா சொல்கிறார், இந்த இராஜதானி ஸ்தாபனை ஆகின்றது. இப்போதும் மீதமுள்ள ஆத்மாக்களும் மேலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர். சர்க்கஸ் காட்சியிலும் சிலர் நல்ல-நல்ல நடிகரும், சிலர் சாதாரண நடிகரும் உள்ளனர். இது எல்லையில்லாத விசயம். குழந்தைகளுக்கு எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கப்படுகின்றது. இங்கு நீங்கள் வருவதே புத்துணர்ச்சி பெறத்தானேத் தவிர, காற்று வாங்குவதற்காக அல்ல. சிலர் கல் புத்தியுடையவர்களை அழைத்து வருகின்றனர், அவர்கள் உலகீய அதிர்வலைகளில் உள்ளனர். இப்போது குழந்தைகளான நீங்கள் பாபாவின் ஸ்ரீமத்படி மாயை மீது வெற்றியடைகின்றீர்கள். மாயை அடிக்கடி உங்களது புத்தியை ஏமாற்றி அழைக்கின்றது. இங்கு பாபா கவர்ந்திழுக் கின்றார். பாபா ஒருபோதும் தவறான விசயங்களை பேசமாட்டார். பாபா சத்யமானவர். நீங்கள் இங்கே சத்யமானவரின் சங்கத்தில் அமர்ந்துள்ளீர்கள். மற்ற அனைவரும் பொய்யான சங்கத்தில் அமர்ந்துள்ளனர். அவற்றையெல்லாம் சத்சங்கம் என்று சொல்வது கூட தவறு. உங்களுக்குத் தெரியும் சத்யமானவர் தந்தை ஒருவர்தான். மனிதர்கள் சத்யமான பரமாத்மாவிற்கு பூஜை செய்கிறார்கள், ஆனால் நாம் யாரை பூஜை செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை. எனவேதான் அவைகளை கண்மூடித்தனம் என்று சொல்லப்படுகின்றது. ஆஹாகான் அவர்களுக்கு எவ்வளவு தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் எங்கேனும் சென்றால் அதிக மரியாதை கிடைக்கிறது. வைரங்களை எடைக்கு எடை தருகின்றனர். பொதுவாக அப்படி வைரத்தை எடை போட்டு தருவதில்லை. சத்யுகத்தில் வைரம், வைடூரியம் யாவும் உங்களுக்கு கற்களைப் போன்றது தான், அவைகளை வீடுகளில் பதிக்கின்றீர்கள். இங்கே யாருக்கும் வைரமே தானம் கிடைப்பதாக இல்லை. மனிதர்களிடம் பணம் அதிகம் இருப்பதால் தானம் தருகின்றனர். ஆனால் அவர்கள் பாவ ஆத்மாக்களுக்கு தானம் செய்வதால் தானம் செய்தவர் மீதும் பாவமே சேருகிறது. அஜாமில் போன்ற கடும் பாவ ஆத்மாவாகின்றனர். இங்கே பகவானே அமர்ந்து புரிய வைக்கின்றார். மனிதன் அல்ல. எனவே பாபா சொல்லியிருக்கின்றார். உங்களுடைய அனைத்து சித்திரங்களிலும் எப்போதும் பகவான் வாக்கு என்று எழுதுங்கள். எப்போதுமே திரிமூர்த்தி சிவ பகவான் வாக்கு என்று எழுத வேண்டும். பகவான் என்று மட்டும் சொல்வதாலும் மனிதர்கள் குழப்பமடைகின்றனர். பகவான் என்றாலே நிராகார், எனவே திரிமூர்த்தி என்று அவசியம் எழுதுங்கள். சிவ பாபா என்று மட்டும் இருக்கக் கூடாது. பிரம்மா, விஷ்ணு, சங்கர் மூவர் பெயரும் உள்ளது. பிரம்ம தேவதா நமஹ, பிறகு அவரை குரு என்றும் சொல்லப்படுகிறது. சிலர் சிவனும் சங்கரும் ஒன்று என்று சொல்லிவிட்டனர். சங்கர் எப்படி ஞானம் தருவார். அமர கதையும் உள்ளது. நீங்கள் அனைவரும் பார்வதிகள், பாபா உங்கள் அனைவரையும் ஆத்மா என புரிந்து ஞானம் தருகின்றார். பக்தியின் பலனை பகவானே தருகின்றார். சிவ பகவான் ஒருவர்தான், ஈஸ்வர் பகவான் என்பதெல்லாம் கிடையாது. சிவ பாபா என்ற வார்த்தை மிக இனிமையானது, பாபா அவரே சொல்கின்றார், இனிமையான குழந்தைகளே என்று அப்படியென்றால் அவர் பாபாதானே (தந்தை அல்லவா)!

 

பாபா புரிய வைக்கின்றார்: ஆத்மாக்களில் தான் சம்ஸ்காரம் நிரம்பி உள்ளது. ஆத்மா கறை படியாதது அல்ல. கறைபடிவதில்லையென்றால் ஏன் தூய்மையை இழக்கின்றது. கீழானவர்கள் என்றும் சொல்வார்கள். தேவதைகள் சிரேஸ்டாச்சாரிகள் (உயர்ந்தவர்கள்). அவர்களை, நீங்கள் சர்வ குணங்களில் சம்பன்னமானவர்கள் என்று மகிமை செய்கின்றீர்கள், நங்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள் எனவே தன்னை தேவதை என்று சொல்ல முடியாது. இப்போது தந்தையே அமர்ந்து மனிதர்களை தேவதைகளாக மாற்றுகின்றார். கிரந்தத்தில் குரு நானக்கைப் பற்றியும் மகிமை உள்ளது. சீக்கியர் சொல்கின்றனர் சத் ஸ்ரீ அகால். யார் அகால மூர்த்தியோ, அவரே உண்மையான சத் குரு. எனவே அவர் ஒருவரை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அர்த்தம் ஒன்றும் புரிந்துக் கொள்வதில்லை. இப்போது சத்குருவான, அகால (அழியாத) மூர்த்தியான, இறைவன் அவரே அமர்ந்து புரிய வைக்கின்றார். உங்களிலும் வரிசைக்கிரமம் தான். எதிரில் அமர்ந்திருந்தும் ஒன்றும் தெரிந்து கொள்வதில்லை. சிலர் இங்கிருந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். பாபா தடை செய்கிறார். குழந்தைகளே, ஒருபோதும் உலகீய வீண் விசயங்களை கேட்கக் கூடாது. சிலர் மிகவும் மகிழ்ச்சியுடன் அப்படிப்பட்ட விசயங்களை பேசுகிறார்கள், கேட்கிறார்கள். பாபாவின் மகா வாக்கியத்தை மறந்துவிடுகின்றனர். உண்மையில் நல்ல குழந்தைகள் தன் கடமைகளை முடித்துக் கொண்டு பிறகு தனது இறை தந்தை நினைவில் மூழ்கிவிடுகின்றனர். பாபா புரியவைத்துள்ளார். கிருஷ்ணர், கிறிஸ்தவர்களுக்கிடையே மிக நல்ல சம்மந்தம் உள்ளது. கிருஷ்ணரின் இராஜாங்கம் உள்ளது. பிறகு தான் இலட்சுமி-நாராயணன் என்ற பெயர் வந்தது. வைகுண்டம் என்றவுடன் உடனேயே கிருஷ்ணர் நினைவு தான் வரும். இலட்சுமி-நாராயணர் பெயர் கூட நினைவு வருவதில்லை. ஏனெனில் சிறு குழந்தை கிருஷ்ணன். சிறு குழந்தை தூய்மையானது. நீங்கள் இதையும் காட்சியாகப் பார்த்துள்ளீர்கள், குழந்தை எப்படி பிறக்கிறது, நர்ஸ் நின்று கொண்டேயிருப்பார்கள், உடனே தூக்கி, பராமரிப்பார்கள். குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், வயோதிகப்பருவம் தனித்தனி நடிப்பு உள்ளது, நடந்தது அனைத்தும் நாடகம் அதற்காக சங்கல்பம் எதுவும் செய்வதில்லை, இது நாடகமாக அமைக்கப் பட்டுள்ளது. நாடக அமைப்பின் படி நம்முடைய நடிப்பும் நடைபெறுகிறது, நாடகப்படி மாயையும் பிரவேசமாகின்றது. பாபாவும் பிரவேசமாகின்றார். சிலர் பாபாவின் வழியில் செல்கின்றனர். சிலர் இராவணன் வழியில் செல்கின்றனர். இராவணன் என்பது என்ன பொருள்? யாராவது எப்போதாவது பார்த்ததுண்டா? சித்திரம் மட்டும் பார்த்திருக்கிறீர்கள். சிவ பாபாவிற்கு. இந்த ரூபம் உள்ளது. இராவணன் என்ன ரூபம். 5 விகாரமெனும் பூதம் பிரவேசமாகும் பொழுது இராவணன் என்று சொல்லப்படுகின்றது. இது பூதங்களின் உலகம்.  அசுரர்களின் உலகம். நீங்கள் தெரிந்துள்ளீர்கள் நமது ஆத்மா இப்போது சீர்த்திருத்தமடைந்துக் கொண்டேயிருக்கின்றது. இங்கே உடலும் அசுர உடல் தான். ஆத்மா சீரடைந்து, அடைந்து தூய்மையாகின்றது. பிறகு இந்த ஆடையை (உடல்) கழற்றி விடும். பிறகு சதோபிராதனத்தின் உடல்(தங்கம் போன்ற உடல்) கிடைக்கும். ஆத்மாவும் தங்கமாக ஆகின்றது, தங்கம் போன்ற உடல் கிடைக்கும் போது ஆபரணமும் தங்கத்தால் ஆனதாக இருக்கும். தங்கத்தில் இந்தகாலத்தில் கலப்படமும் சேர்க்கப்படுகிறது. இப்போது உங்கள் புத்தியில் முதல்-இடை-கடைசியின் ஞானம் சக்கரம் போல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. மனிதர்களுக்கு ஒன்றும் தெரியாது. சொல்கிறார்கள் ரிஷி, முனிவர்களுக்கும் தெரியாது, தெரியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். நாம் சொல்கின்றோம், இந்த லட்சுமி- நாராயணரிடம் கேளுங்கள், ஆனால் இவர்களிடம் கேட்கப்படுவதில்லை. யார் கேட்பார்கள்? குருமார்களிடம்தான் கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம் இந்த கேள்வி கேட்கலாம். நீங்கள் புரிய வைப்பதற்காக எவ்வளவு முயற்சி செய்கின்றீர்கள். தொண்டையே வற்றிப்போகிறது. பாபா யார் புரிந்து கொண்டார்களோ அந்த குழந்தைகளுக்குத்தானே சொல்வார். புரியாதவர்களிடம் புரியவைக்க சிரமபடுவாரா என்ன? நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

(1) சேவைக்கான கடமையை முடித்துக் கொண்டு தனது போதையில் இருங்கள். வீண் விசயங்களை பேசவோ, கேட்கவோ கூடாது. ஒரு பாபாவின் மகா வாக்கியங்களை மட்டுமே நினைவில் வைக்கவும். அவற்றை மறக்கக் கூடாது.

 

(2) சதா குஷியில் இருப்பதற்காக படைப்பு மற்றும் படைப்பவரைப் பற்றிய ஞானம் புத்தியில் சுழன்று கொண்டேயிருக்கட்டும். அதாவது அதை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டிருங்கள். எந்த விசயத்தைப் பற்றியும் சங்கல்பம் ஓடிக் கொண்டேயிருக்கக் கூடாது. அதற்காக நாடகத்தை நல்ல முறையில் புரிந்து கொண்டு நடிக்க வேண்டும்.

 

வரதானம் :

வள்ளலின் கொடையை (பரிசு) நினவில் வைத்து, அனைத்துப் பற்றுதல்களில் இருந்தும் விடுபட்டு இருக்கக் கூடிய, கவர்ச்சியிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 

அநேகக் குழந்தைகள் கூறுகின்றனர் -- எனக்கு இவரிடம் பற்றுதல் இல்லை, ஆனால் இவருடைய  இந்த குணம் மிக நன்றாக உள்ளது என்று. ஆனால் எந்த ஒரு மனிதர் அல்லது வைபவத்தின் பக்கமாவது அடிக்கடி சங்கல்பம் செல்வதும் கூட ஒரு கவர்ச்சி தான். எவருடைய விசேஷத்தன்மையைப் பார்த்தாலும், குணங்களை அல்லது சேவையைப் பார்த்தாலும், வள்ளலை (பாபா) மறக்காதீர்கள். இது வள்ளலின் கொடை இந்த நினைவில் இருந்தால் பற்றுதல்களில் இருந்து விடுபட்டவராக, கவர்ச்சியில் இருந்து விடுபட்டவராக ஆக்கி விடும். அவர்கள் யாராலும் எதனாலும் கவரப்பட மாட்டார்கள்.

 

சுலோகன் :

அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாவுக்குப் புகடலிம் கொடுங்கள், பகவானுடன் சந்திக்கச் செய்யுங்கள் - அத்தகைய ஆன்மிக சமூக சேவகர் ஆகுங்கள்

 

ஓம்சாந்தி