03-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

நினைவில் அமருவதற்கான விதி என்ன? மேலும் அதனால் ஏற்படும் இலாபம் என்னென்ன?

பதில்:

புதில்: எப்பொழுது நினைவில் அமருகின்றீர்களோ அப்பொழுது தொழில் முதலிய அனைத்து விவகாரங்களையும் மறந்து தன்னை ஆத்மா என்று உணருங்கள். தேகம் தேக சம்பந்தங்கள் என்பது மிகப்பெரிய வலையாகும். அந்த வலைகளையெல்லாம் அழித்து தேக அபிமானத்திலிருந்து விடுபடுங்கள் அதாவது நீங்கள் இந்த உலகத்திலிருந்து இறந்துவிட்டது போல. உயிரோடு வாழ்ந்துக் கொண்டே அனைத்தையும் மறந்து ஒரு பாபாவினுடைய நினைவில் இருங்கள். இதுதான் அசரீரி நிலை. இதன் மூலமாகவே ஆத்மாவில் இருக்கும் துரு விலகுகின்றது.

பாடல்:

இரவு நேர பிரயாணிகளே..!

ஓம்சாந்தி. குழந்தைகள் நினைவு யாத்திரையில் அமர்ந்துள்ளீர்கள். இதனைத்தான் சொல்லப்படு கின்றது நிஷ்டையில் அமருவது அதாவது சாந்தியாக அமர்ந்திருப்பது. சாந்தியாக மட்டும் அமருவது இல்லை. ஏதோ செய்துக் கொண்டிருக்கின்றீர்கள். சுயதர்மத்தில் நிலைத்திருக்கின்றீர்கள். ஆனால் யாத்திரையில் உள்ளீர்கள். இந்த யாத்திரையை கற்பிக்கக் கூடிய பாபா நம்மை தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். உலகத்தில் இருப்பவர்கள் உலகாயத பிராமணர்கள், (தீர்த்த ஸ்தல) யாத்திரையில் உடன் அழைத்துச் செல்கின்றார்கள். நீங்கள் ஆன்மீக பிராமணர்கள். பிராமணர்களின் குலம் அல்லது வர்ணம் (தர்மம்) என்று சொல்லலாம். இப்பொழுது குழந்தைகள் நினைவு யாத்திரையில் அமர்ந்துள்ளீர்கள். மற்ற சத்சங்கங்களில் அமர்ந்திருப்பவர்கள் சரீரமுள்ள குருவினுடைய நினைவில் தான் அமர்ந்திருப்பார்கள். குரு வந்து சொற்பொழிவாற்றுவார்கள். அவையனைத்தும் பக்தி மார்க்கம். இது நினைவு யாத்திரையாகும். இதன் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகின்றது. துருவை அகற்றுவதற்காகத்தான் நீங்கள் நினைவில் அமருகின்றீர்கள். பாபாவினுடைய கட்டளை நினைவின் மூலமாகத்தான் துரு அகலும். ஏனென்றால் நான் தான் பதீத பாவனன் ஆவேன். நான் யாருடைய நினைவினாலும் வருவதில்லை. நான் வருவது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. எப்பொழுது தூய்மை இழந்த உலகம் தூய்மையாக வேண்டுமோ, ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் முற்றிலும் மறைந்துவிட்டதோ அப்போது வருகிறேன். அதனை மீண்டும் பிரம்மா மூலமாக நான் ஸ்தாபனை செய்கின்றேன். பிரம்மாவிலிருந்து விஷ்ணு ஆவதற்கு ஒரு வினாடி என்று இந்த பிரம்மாவிற்குத்தான் புகழ் பாடப்பட்டுள்ளது. விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆவதற்கு முழுமையாக 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றது. இது புத்தியின் மூலமாக புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். நீங்கள் சூத்திரனாக இருந்தீர்கள். இப்பொழுது பிராமண வர்ணத்திற்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் பிராமணன் ஆகியிருக் கின்றீர்களென்றால் சிவபாபா பிரம்மா மூலமாக உங்களுக்கு நினைவு யாத்திரையை கற்பிக்கின்றார். அழுக்கை அகற்றுவதற்காக. இந்த படைப்பிற்கான சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்பதைப் புரிந்துக் கொண்டீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகவில்லை. இப்பொழுது முழுமையான கலியுகம் ஆகும். இப்பொழுது தான் கலியுக ஆரம்பம் என்று உலகில் கூறுகின்றார்கள். இதுதான் கலியுக கடைசி என்று பாபா கூறுகின்றார். அடர்ந்த இருள். உங்களுக்கு அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார்.

குழந்தைகள் அதிகாலையில் அமரும்போது தந்தை நினைவில் அமருங்கள். இல்லையென்றால் மாயையினுடைய புயல் வரும். தொழில் முதலானவை பக்கம் புத்தி சென்று கொண்டேயிருக்கும். இது வெளி சம்மந்தப்பட்ட விவகாரங்கள் அல்லவா. எப்படி சிலந்தி எவ்வளவு வலையை உருவாக்கு கின்றதோ? அவ்வளவையும் அதுவே விழுங்க வேண்டும். தேகத்தினுடைய சம்மந்தங்கள் எவ்வளவு உள்ளது. சித்தி, சித்தப்பா, மாமா குரு போன்றவர்கள் உள்ளனர். எவ்வளவு பெரிய வலையாகும். அவையனைத்தையும் தேகத்துடன் மறக்க வேண்டும். தனியான ஆத்மா ஆக வேண்டும். மனிதர்கள் சரீரத்தை விட்டால் அனைத்தையும் மறந்துவிடுகின்றார்கள். நீங்களும் இந்த உலகத்திலிருந்து இறந்தது போலாகி விடவும். இந்த உலகம் முடியப் போகின்றது என்ற ஞானம் புத்தியில் உள்ளது. யாருக்கு வாய் (ஞானத்திற்காக) திறக்கவில்லையோ அவர்கள் நினைவு மட்டும் செய்யவும் என்று பாபா கூறுகின்றார். எப்படி இந்த பாபா நினைவு செய்கின்றார். கன்னியர், பதியை நினைவு செய்கின்றார்கள் ஏனென்றால் பதி பரமேஸ்வர் என்று சொல்லப்படுகின்றது. எனவே பாபாவிடமிருந்து புத்தியை அகற்றி பதியை நினைவு செய்கின்றார்கள். இவர் பதிகளுக்கெல்லாம் பதி மணமகன் அல்லவா? நீங்கள் அனைவரும் மணமகள் அல்லவா? பகவானை அனைவரும் பக்தி செய்கின்றார்கள். அனைத்து பக்தர்களும் இராவணனினுடைய சிறையில் கைதிகளாக உள்ளார்கள். எனவே பாபாவிற்குக்கூட அவர்கள் மீது கருணை ஏற்படுகின்றது. பாபா கருணை நிறைந்தவர், அவரைத்தான் கருணை உள்ளம் உடையவர் என்று சொல்லப்படுகின்றது. இந்த நேரம் அநேக விதமாக குருமார்கள் உள்ளார்கள். யார் சிறிது படிப்பினைக் கொடுத்தாலும் அவர்களை குரு என்று கூறுகின்றார்கள். இங்கு பாபா நடைமுறையில் இராஜயோகத்தை கற்பிக்கின்றார். பரமாத்மாவைத்தவிர வேறு யாருக்கும் இந்த இராஜயோகத்தை கற்பிக்கத் தெரியாது. பரமாத்மா வந்துதான் இராஜயோகத்தை கற்பித்தார். பிறகு அதனால் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. கீதைக்கு விளக்கம் நிறைய தருகின்றார்கள். சிறிய சிறிய குமாரிகள் கூட கீதையை ஒப்பித்துவிடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு மகிமை செய்கின்றார்கள். கீதை ஒன்றும் மறைந்துவிடவில்லை. கீதைக்கு மகிமை இருக்கின்றது. கீதையின் ஞானத்தின் மூலமாகத்தான் பாபா முழு உலகையும் மாற்றியமைக்கின்றார். உங்களுடைய சரீரம் கல்ப மரத்தைப் போல அதாவது அமரர் ஆகிவிடுகின்றது.

குழந்தைகள் நீங்கள் பாபாவினுடைய நினைவில் இருக்கின்றீர்கள், பாபாவை கூப்பிடுவதில்லை. நீங்கள் பாபாவினுடைய நினைவில் இருந்து தன்னை முன்னேற்றிக் கொள்கின்றீர்கள். பாபா வினுடைய கட்டளைப்படி நடப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். நாம் சிவபாபாவை நினைவு செய்து தான் உணவு உட்கொள்ள வேண்டும். அதாவது சிவபாபாவுடன் சாப்பிட வேண்டும். அலுவலகத்தில் கூட சிறிது நேரம் கிடைக்கின்றது. பாபாவிற்கு எழுதுகின்றார்கள். நாற்காலியில் அமரும்போது கூட பாபா நினைவில் அமருகின்றார்கள். மேலாளர் வந்துப் பார்க்கின்றார், அவர்கள் அமர்ந்தபடியே மறைந்துவிடுகின்றார்கள் அதாவது அசரீரி ஆகிவிடுகின்றார்கள். சிலருடைய கண்கள் மூடிவிடு கின்றது, சிலருடைய கண்கள் திறந்திருக்கின்றது. சிலர் எதையுமே பார்க்காதது போல அமர்ந்திருப் பார்கள். மறைந்து இருப்பதுபோல இருப்பார்கள். அப்படி இருக்கின்றார்கள் பாபா புத்தியின் கயிற்றை இழுத்துவிடுகின்றார் அந்த போதையில் அமர்ந்துவிடுகின்றார்கள். உங்களுக்கு என்ன ஆனது? என்று கேட்டால் நான் பாபாவினுடைய நினைவில் அமர்ந்திருந்தேன் என்று பதில் கூறுவார்கள். நான் பாபாவிடம் செல்ல வேண்டும் என்று புத்தியில் இருக்கின்றது. ஆத்ம அபிமானி ஆகிவிட்டீர் களென்றால் நீங்கள் என்னிடம் வந்துவிடுவீர்கள். அங்கு தூய்மையாகாமல் செல்ல முடியுமா? இப்பொழுது எப்படி தூய்மையாவது? அதனை பாபா வந்துதான் கற்பிக்கின்றார். மனிதர்களால் கற்றுத்தர முடியாது. நீங்கள் கொஞ்சமாவது புரிந்துக் கொண்டால்தான் மற்றவருக்கு நன்மை செய்ய முடியும். நீங்கள் பிறருக்கு நன்மை செய்யவும், பாபாவின் அறிமுகத்தை கொடுப்பதற்கும் அவசியம் முயற்சி செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட ஓ! பகவானே தந்தையே! என்று கூறி நினைவு செய்கின்றார்கள். பகவானே கருணை காட்டுங்கள் என்று அழைக்கின்றார்கள். அழைப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. பாபா குழந்தைகளை தனக்குச் சமமாக கல்யாண்காரி ஆக்குகின்றார். மாயை அனைவரையும் எவ்வளவு புத்தியற்றவர் ஆக்கிவிட்டது. லௌகீக தந்தை கூட குழந்தைகள் நடத்தை சரியில்லையென்றால் நீ என்ன புத்தியற்றவனா? என்று கேட்கின்றார்கள். ஒரே வருடத்தில் அப்பாவினுடைய அனைத்து சொத்துக்களையும் அழித்துவிடுகின்றார்கள். உங்களை நான் எப்படி யாக்கியிருந்தேன் என்று எல்லையற்ற தந்தை கூட கேட்கின்றார். இப்பொழுது தன்னுடைய நடத்தையைப் பாருங்கள். எப்படிப்பட்ட அதிசயமான விளையாட்டு என்று குழந்தைகள் புரிந்திருக்கின்றீர்கள். பாரதம் எவ்வளவு கீழான நிலையை அடைந்துவிட்டது. பாரதவாசிகளின் இறங்குமுகம். நாம் கீழே வந்துவிட்டோம், நாம் கலியுகத்தில் இருக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பாரதம் சொர்க்கமாக இருந்தது. அதாவது மனிதர்கள் சொர்க்கவாசிகளாக இருந்தார்கள். அதே மனிதர்கள் நரகவாசிகளாகிவிட்டார்கள். இந்த ஞானம் யாரிடமுடம் இல்லை. பிரம்மா பாபா கூட ஒன்றும் அறியாமல் தான் இருந்தார். இப்பொழுது புத்தியில் ஒளி வந்துவிட்டது. 84 பிறவி எடுத்து எடுத்து ஏணிப்படியில் அவசியம் இறங்க வேண்டியுள்ளது. மேலே ஏறுவதற்கு இடமில்லை. இறங்கி இறங்கி தூய்மை இழக்கின்றீர்கள். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் இல்லை. பாபா வந்துதான் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பிறகு நீங்கள் பலருக்கு புரிய வைக்கின்றீர்கள் நீங்கள் சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள் நரகவாசியாகிவிட்டீர்கள். 84 பிறவி நீங்கள்தான் எடுத்துள்ளீர்கள். மறுபிறவியை ஏற்றுக்கொள்கின்றீர்களல்லா? அவசியம் கீழே இறங்குகின்றோம். எத்தனை மறுபிறவி எடுத்துள்ளோம் என்பதை பாபா வந்துப் புரிய வைக்கின்றார். இந்த நேரம் நீங்கள் உணருகின்றீர்கள் நாம் எவ்வளவு தூய்மையான தேவி தேவதைகளாக இருந்தோம். பிறகு இராவணன் வந்து நம்மை தூய்மை இழக்க வைத்துவிட்டான். சூத்திரனிலிருந்து தேவதையாக்க பாபா வந்து படிப்பைக் கற்றுத்தர வேண்டியுள்ளது. பாபாவை லிபரேட்டர், வழிகாட்டி என்று கூறுகின்றார்கள் ஆனால் அர்த்தம் புரிந்துக் கொள்ளவில்லை. பாருங்கள் என்னவாக இருந்தவர்கள் என்னவாகிவிட்டார்கள் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் அந்த நேரம் விரைவில் வர இருக்கின்றது. நாடகம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது நாம் இலட்சுமி நாராயணன் ஆவோம் என்று கனவில் கூட நினைத்ததில்லை. பாபா எவ்வளவு நினைவுகளை ஏற்படுத்துகின்றார். இப்பொழுது பாபாவிடமிருந்து ஆஸ்தியடைய வேண்டுமென்றால் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நினைவு யாத்திரைக்கான முயற்சி செய்ய வேண்டும். பாதிரியார்கள் நடைபயணம் செய்யும்போது எவ்வளவு அமைதியாக செல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் கிறிஸ்துவின் நினைவில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கிறிஸ்து மீது அன்புள்ளது. ஆன்மீக வழிகாட்டிகளாகிய உங்களுக்கு அன்பு பரம்பிதா பரமாத்மாவின் மீதுள்ளது. எவ்வளவு முயற்சி செய்து ஸ்ரீமத்படி நடக்கின்றீர்களோ, அவ்வளவு கல்பத்திற்கு முன்பு போல நம்பர்வார் முயற்சியின் அனுசாரமாக இராஜ்யம் அவசியம் ஸ்தாபனையாகும். பாபா மிக நல்ல நல்ல வழிகளை தருகிறார். பிறகும் கூட ஸ்ரீமத்படி நடப்பதில்லை கிரகச்சாரம் அப்படி பிடித்துவிடுகின்றது. ஸ்ரீமத்படி நடப்பதில்தான் வெற்றி இருக்கின்றது. நிச்சயத்தில் தான் வெற்றி இருக்கின்றது. நீங்கள் என்னுடைய வழிப்படி நடக்கவும் என்று பாபா கூறுகின்றார். பிரம்மா தான் வழி தருகின்றார் என்று ஏன் நினைக்கின்றீர்கள். சிவபாபா தான் வழி தருகின்றார் என்று எப்பொழுதும் நினைக்கவும். இவர் சேவைக்கான வழிகளைத்தான் தருகின்றார். பாபா இந்த வியாபாரம் தொழில் செய்யட்டுமா என்று சிலர் கேட்கின்றார்கள். பாபா இந்த விஷயங்களுக் கெல்லாம் ஒருபோதும் வழி கூறுவதில்லை. நான் வந்திருப்பதே தூய்மையற்ற ஆத்மாக்களை தூய்மையாவதற்கான வழி தருவதற்காக, இந்த விஷயங்களுக்காக அல்ல என்று பாபா கூறுகின்றார். என்னை பதீத பாவனனே வாருங்கள் என்றுதான் அழைத்தீர்கள் நான் தூய்மையாவதற்கான வழியைக் கூறுகின்றேன். மிக சகஜமானது. குப்தமான சேனைகள் என்பது உங்களுடைய பெயர். அவர்கள் ஆயுதங்கள் அம்பு முதலியவற்றை காட்டிவிட்டார்கள். ஆனால் இதில் வில் அம்பிற்கான விஷயம் எதுவுமில்லை. அவையனைத்தும் ஞான சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

பாபா வந்து வழியை கூறுகின்றார், இதன் மூலம் நீங்கள் அரைக் கல்பத்திற்கு சத்தியமான கண்டத்திற்கு சென்றுவிடுகின்றீர்கள். அங்கு வேறு எந்த கண்டமும் இருப்பதில்லை. யாருக்காவது புரிய வைத்தால் இதனை ஏற்றுக் கொள்வதில்லை அதெப்படி பாரதம் மட்டும்தான் இருக்க முடியும் என்று கூறுகின்றார்கள். கிறிஸ்து வருவதற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. அப்பொழுது வேறு எந்த தர்மமும் இல்லை. பிறகு மரம் விருத்தியடைந்துக் கொண்டே யிருக்கின்றது. நீங்கள் தன்னுடைய தந்தையை, தன்னுடைய தர்மத்தை, கர்மத்தை மறந்துவிட்டீர்கள். தன்னை தேவி தேவதா தர்மம் என்று புரிந்துக் கொண்டால் அழுக்கான பொருளை சாப்பிட மாட்டார்கள். ஆனால் சாப்பிட்டுவிடுகின்றார்கள், ஏனென்றால் அந்த தெய்வீக குணம் இல்லை. எனவே தன்னை இந்து என்று கூறிவிட்டார்கள். வெட்கம் வர வேண்டுமல்லவா நம்முடைய பெரியவர்கள் (மூதாதையர்) இப்படி தூய்மையாக இருந்தார்கள் நாம் இப்படி இருக்கின்றோமே? என்று. ஆனால் தன்னுடைய தர்மத்தை மறந்துவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் நாடகத்தின் ஆதி, மத்ய, அந்திமத்தின் ஞானத்தை நன்றாகப் புரிந்து கொண்டீர்கள். யாராவது ஏதாவது பேசினால் பாபா இந்த பாயிண்ட் இன்னும் கூறவில்லை என்று கூறிவிடவும். இல்லையென்றால் ஒருவேளை குழப்பம் அடைந்துவிடுவார்கள். நாங்களும் படித்துக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று கூறிவிடுங்கள். இப்பொழுதே அனைத்தையும் தெரிந்துவிட்டால் பிறகு வினாசம் ஏற்பட்டுவிடும். ஆனால் அப்படி யல்ல. இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது. நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம். கடைசியில் தான் முழுமையாக தூய்மையாவோம். நம்பர்வார் துரு அகலும் சதோபிரதானமாகிவிடுவீர்கள். பிறகு இந்த தூய்மையில்லா உலகிற்கு வினாசம் ஏற்பட்டுவிடும். பரமாத்மா எங்கோ அவசியம் வந்திருக்கின்றார் என்று தற்சமயம் கூறுகின்றார்கள். ஆனால் குப்தமானது. இது வினாசத்திற்கான நேரம் அல்லவா? பாபாதான் விடுவிப்பவர் மற்றும் வழிகாட்டியாக இருக்கின்றார், அவரே அனைவரையும் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார் அல்லவா? கொசுக்கூட்டத்தைப்போல. அனைவரும் ஒரே மாதிரியான நினைவில் அமருவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சிலருக்கு சரியான நினைவிருக்கின்றது, சிலருக்கு அரை மணி நேரம், சிலருக்கு 15 நிமிடங்கள் கூட இருக்கின்றது. சிலருக்கு ஒரு நிமிடம் கூட இருப்பதில்லை. நாங்கள் முழு நேரமும் பாபாவின் நினைவில் இருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள் என்றால் அவசியம் முகம் மலர்ந்த மகிழ்ச்சியான முகமாக இருக்கும். அதீந்திரிய சுகம் அப்படிப்பட்ட குழந்தைகளுக்குத்தான் கிடைக்கின்றது. அவர்களின் புத்தி எங்கும் அலையாது. அவர்கள் சுகத்தை அனுபவிப்பார்கள். ஒரு நாயகனுடைய நினைவில் அமர்ந்தால் எவ்வளவு துரு அகலும் என்று புத்தி கூட கூறுகின்றது. பிறகு பழக்கம் ஆகிவிடும். நினைவு யாத்திரையின் மூலமாகத்தான் நீங்கள் சதா செல்வந்தன், சதா ஆரோக்கியமானவர்கள் ஆகின்றீர்கள். சக்கரம் கூட நினைவில் வருகின்றது. நினைவில் இருப்பதற்கு மட்டும் முயற்சி செய்யுங்கள் சக்கரம் புத்தியில் சுழன்றுக் கொண்டேயிருக்கும்.

இப்பொழுது நீங்கள் மாஸ்டர் விதை ரூபம் ஆகியிருக்கின்றீர்கள். நினைவின் கூடவே சுயதர்சன சக்கரத்தையும் சுழற்றுங்கள். பாரதவாசிகள் நீங்கள்தான் லைட் ஹவுஸாக இருக்கின்றீர்கள். ஆன்மீக லைட் ஹவுஸ் அனைவருக்கும் வீட்டிற்கான வழியைக் காட்டுகின்றீர்கள். இதையும் புரிய வைக்க வேண்டியுள்ளது. நீங்கள் முக்தி-ஜீவன்முக்திக்கான வழி கூறுகிறீர்கள். ஆகவே தான் நீங்கள் தான் ஆன்மீக லைட் ஹவுஸ் உங்களுடைய சுயதர்சன சக்கரம் சுழன்றுக் கொண்டேயிருக்கின்றது. பெயரை எழுதினால் புரியவைக்க வேண்டியிருக்கும். பாபா புரியவைத்துக் கொண்டேயிருக்கின்றார். நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கின்றீர்கள். யார் அன்பானவருடன் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் ஞான மழை. எதிரில் அமரும்போது தான் அதிக சந்தோஷம் இருக்கின்றது. பிறகு இரண்டாவது (டேப்பில்) பதிவு செய்யப்பட்ட ஒ-நாடா மூலம் கேட்பது. மூன்றாவது நம்பர் முரளியாகும். சிவபாபா பிரம்மா மூலமாக புரிய வைக்கின்றார். இந்த பிரம்மா கூட தெரிந்திருக்கின்றார் அல்லவா? ஆனாலும் நீங்கள் சிவபாபா, சொல்கின்றார் என்று புரிந்து கொள்ளவும். இதனை புரிந்து கொள்ளாத காரணத்தால் கட்டளையை மீறிவிடுகின்றார்கள். சிவபாபா என்ன கூறினாலும் அதில் நன்மை தான் இருக்கின்றது. ஒருவேளை தீமை ஏற்ப்பட்டாலும் அது நன்மையாக மாறிவிடும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) பாபாவினுடைய ஒவ்வொரு கட்டளைப்படியும் நடந்து முன்னேற்றம் அடைய வேண்டும். ஒரு பாபாவிடம் உண்மையிலும் உண்மையான அன்பு வைக்க வேண்டும். நினைவில் இருந்து தான் சாப்பாடு சமைக்க வேண்டும் சாப்பிட வேண்டும்.

2) ஆன்மீக கலங்கரை விளக்காகி அனைவருக்கும் முக்தி-ஜீவன் முக்திக்கான வழிகாட்ட வேண்டும். பாபாவிற்கு சமமாக கல்யாண்காரியாக வேண்டும்.

வரதானம்:

ஒரு தந்தையிடம் முழு உலகத்தின் அனுபவம் செய்யக்கூடிய எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆகுக.

யார் தந்தையை மட்டும் தனது உலகமாக புரிந்திருக்கின்றார்களோ, அவர்களே எல்லையற்ற வைராக்கியம் உடையவர்கள் ஆகமுடியும். யாருக்கு தந்தையே உலகமாக இருக்கின்றாரோ, அவர்கள் தன்னுடைய உலகத்திலேயே இருப்பார்கள், வேறு விசயங்களுக்கு செல்லவே இல்லை என்றால் தானாகவே அவற்றிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள். உலகம் என்பதில் மனிதன் மற்றும் பொருள் அனைத்தும் வந்துவிடுகிறது. தந்தையினுடைய செல்வமே தனது செல்வம் என்ற இந்த நினைவில் இருப்பதனால் எல்லையற்ற வைராக்கியம் உடையவராக ஆகிவிடுவார்கள். பிறரைப் பார்த்தாலும் பார்க்கமாட்டார்கள், பிறர் தென்படவே மாட்டார்கள்.

சுலோகன்:

சக்திசாலி ஸ்திதியினுடைய அனுபவம் செய்வதற்காக ஏகாந்தம் (தனிமை) மற்றும் இரமணீகரத் தன்மையின் (அனைவருடனும் கலந்திருத்தல்) சமநிலை கொண்டிருங்கள்.