ஓம் சாந்தி 03.05.2020 காலை முரளி அவ்யக்த பாப்தாதா, மதுபன்

ரிவைஸ்: 06.01.1986


 

சங்கமயுகம் - சேமிப்பு செய்வதற்கான யுகம்

 

இன்று அனைத்துக் குழந்தைகளின் மூன்று காலங்களையும் தெரிந்திருக்கும் திரிகால தரிசி பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் சேமிப்புக் கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். முழுக் கல்பத்தில் சிரேஷ்ட கணக்கு சேமிப்பு செய்வதற்கான காலம் இந்த சங்கமயுகம் மட்டும் தான் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்தேயிருக்கிறீர்கள். சின்னஞ்சிறு யுகம், சின்னச்சிறு வாழ்க்கை. ஆனால் இந்த யுகத்தின், இந்த வாழ்க்கையின் விசேஷமே இப்பொழுது எவ்வளவு சேமிக்க விரும்புகிறீர்களோ அவ்வளவு சேமிப்பை செய்ய முடியும். இந்த நேரத்தின் சிரேஷ்ட கணக்கின் பிரகாரம் பூஜைக்குரிய வாழ்க்கை பதவியையும் அடைகிறீர்கள், மேலும் பூஜைக் குரியவர்களிலிருந்து பூஜாரியாகவும் ஆகிறீர்கள். இந்த நேரத்தின் சிரேஷ்ட காரியத்தின், சிரேஷ்ட ஞானத்தின், சிரேஷ்ட சம்பந்தத்தின், சிரேஷ்ட சக்திகளின், சிரேஷ்ட குணங்களின் அப்படி அனைத்து சிரேஷ்ட கணக்குகளையும் இப்பொழுது சேமிப்பு செய்கிறீர்கள். துவாபர் யுகத்திலிருந்து பக்தியின் கணக்கு அது அற்பகாலமானது, இந்த நேரம் செய்தீர்கள், இந்த நேரமே பலனை அடைந்தீர்கள் மற்றும் முடிந்து விட்டது. பக்தியின் கணக்கு அற்பகாலத்திற்கானது. ஏனென்றால் இந்த நேரம் சம்பாதித்தீர்கள், மேலும் அதை சாப்பிட்டு முடித்தும் விட்டீர்கள், சேமிப்பு செய்வதற்கான அழியாத கணக்கு பல பிறவிகள் உடன் வருவதற்கான சேமிப்பு செய்யும் நேரம் இந்த நேரம் தான்! எனவே இந்த சிரேஷ்ட சமயத்தை புருஷோத்தம யுகம் அல்லது நன்மையே பயக்கும் யுகம் என்று கூறுவது. பரமாத்மாவின் அவதாரம் ஆகும் யுகம் என்றும் கூறுவது. நேரடியாக தந்தை மூலமாக அனைத்து சக்திகளையும் பிராப்தி செய்யும் யுகம் இது தான் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த யுகத்தில் தான் தந்தை வழங்குபவர் மற்றும் வரம் அளிக்கும் வள்ளலின் பங்கைச் செய்கிறார். எனவே இந்த யுகத்தை வரம் பெறும் யுகம் என்றும் கூறுவோம். இந்த யுகத்தில் அன்பின் காரணமாக தந்தை கள்ளம் கபடமற்ற வெகுளியாக வாரி வாரி வழங்குபவராக ஆகிவிடுகிறார். இந்த நேரம் ஒன்றிற்கு பல மடங்கு பலன் கொடுக்கிறார். ஒன்றிற்கு பல மடங்கு சேமிப்பு ஆவதற்கான விசேஷ பாக்கியம் இந்த நேரம் தான் பிராப்தியாகிறது. மற்ற யுகங்களில் எந்தளவு சேமிப்போ அந்தளவு பலன் என்ற கணக்கு இருக்கிறது, எனவே வித்தியாசம் உள்ளது இல்லையா? எனென்றால் இப்போது நேரடியாக தந்தை ஆஸ்தி மற்றும் வரதானம் இரண்டு ரூபத்திலும் பிராப்தி செய்விப்பதற்கு பொருப்பாளர் ஆகிறார். பக்தியில் பாவனைக்கான பலன் இருக்கிறது. இப்போது ஆஸ்தி மற்றும் வரதானத்தின பலன் இருக்கிறது. எனவே இந்த நேரத்தின் மகத்துவத்தைத் தெரிந்து, பிராப்திகளைத் தெரிந்து, சேமிப்பு கணக்கை தெரிந்து, திரிகால தரிசியாகி வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கிறீர்களா? இந்த நேரத்தின் ஒரு வினாடி சாதாரண நேரத்தை விட எவ்வளவு பெரியது என்பதை தெரிந்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் எவ்வளவு வருமானம் செய்ய முடியுமா? மேலும் ஒரு நொடியில் எவ்வளவு இழக்கிறீர்கள்? இந்த கணக்கை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? அல்லது சாதாரண முறையில் கொஞ்சம் சம்பாத்தித்தோம் சொஞ்சம் இழந்தோம் என்று அப்படி இருக்கிறதா? அம்மாதிரி விலை மதிக்க முடியாத நேரத்தை ஒன்றுமில்லாமல் இழந்து விட்டோம் என்று இருக்கவில்லையே? பிரம்மா குமார் குமாரிகளாகவோ ஆகிவிட்டீர்கள். ஆனால் அழியாத ஆஸ்தி விசேஷ வரதானங்களின் அதிகாரியாக ஆகியிருக்கிறீர்களா? ஏனென்றால், இந்த நேரத்தில் அதிகாரி ஆகுபவர்கள் பல பிறவிகளுக்கு (உரிமையுள்ள) அதிகாரியாக ஆகிறார். இந்த நேரத்தில் ஏதாவது சுபாவம் சம்ஸ்காரம் மற்றும் ஏதாவது உறவின் அடிமையாக இருக்கும் ஆத்மா பல ஜென்மங்களுக்கு அதிகாரி ஆவதற்குத் பதிலாக, பிரஜை பதவியின் அதிகாரி ஆகிறார். இராஜ அதிகாரியாக ஆவதில்லை. பிரஜா பதவி அதிகாரி ஆகிறார். இராஜயோகி இராஜ்ய அதிகாரியாக ஆவதற்காக வந்தார். ஆனால் அடிமைத்தனத்தின் சம்ஸகாரத்தின் காரணமாக வழங்குபவரின் குழந்தையாக இருந்தபோதிலும் இராஜ்ய அதிகாரியாக ஆக முடியவில்லை. எனவே சுய அதிகாரியாக எந்தளவு ஆகியிருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே சோதனை செய்யுங்கள். யார் சுய அதிகாரித்தை அடைய முடியவில்லையோ அவர் விஷ்வ இராஜ்யத்தை எப்படி பிராப்தி செய்ய முடியும்? விஷ்வ ராஜ்ய அதிகாரி ஆவதற்கான சைத்தன்ய மாடலை இப்பொழுது சுய ராஜ்ய அதிகாரி ஆவதனால் தயார் செய்கிறீர்கள். எந்த ஒரு பொருளுக்கும் முதலில் மாடல் தயார் செய்வார்கள் இல்லையா? எனவே முதலில் இந்த மாடலைப் பாருங்கள்.

 

சுய அதிகாரி என்றால் அனைத்து இந்திரியங்கள் என்ற பிரஜைகளின் இராஜா ஆவது. பிரஜையின் இராஜ்யம் இருக்கிறதா? அல்லது இராஜாவின் இராஜ்யம் இருக்கிறதா? பிரஜையின் இராஜ்யம் இருக்கிறது என்றால் இராஜா என்று கூறமாட்டோம் என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? பிரஜைகளின் இராஜ்யத்தில் இராஜ வம்சம் முடிவடைந்து விடுகிறது. ஏதாவது ஒரு கர்மேந்திரியம் ஏமாற்றம் கொடுக்கிறது என்றால் சுய இராஜ்ய அதிகாரி என்று கூறமாட்டோம். சம்பூரணமாகவோ இறுதியில் தான் ஆக வேண்டும் ஓரிரு பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும் என்று அந்த மாதிரி ஒரு பொழுதும் நினைக்காதீர்கள். ஆனால் நீண்ட காலத்தின் ஒரு பலகீனம் கூட தேவையான நேரத்தில் ஏமாற்றம் கொடுத்துவிடுகிறது. நீண்ட காலத்து அடிமையாக இருக்கும் சம்ஸ்காரம் அதிகாரி ஆக விடாது. எனவே அதிகாரி என்றால் சுய அதிகாரி. இறுதியில் (எப்படியாவது) சம்பூர்ணம் ஆகிவிடுவோம் என்ற இந்த ஏமாற்றத்திலேயே இருந்து விடாதீர்கள். நீண்டகாலத்து சுய அதிகாரியின் சம்ஸகாரம் நீண்டகாலத்து விஷ்வ அதிகாரியாக ஆக்கும். கொஞ்ச காலத்து சுயராஜ்ய அதிகாரி கொஞ்ச காலத்திற்கு விஷ்வ இராஜ்ய அதிகாரி ஆவார். யார் இப்பொழுது தந்தையின் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற கட்டளைப்படி தந்தையின் இதய சிம்மாசனதாரியாக ஆகிறார்களோ அவர்கள் தான் இராஜ்ய சிம்மாசதனாரியாகவும் ஆகிறார்கள். தந்தைக்குச் சமமாக ஆவது என்றால் தந்தையின் இதய சிம்மாசன தாரியாக ஆவது. எப்படி பிரம்மா தந்தை சம்பன்னம் மற்றும் சமமாக ஆனாரோ, அதேபோல் சம்பூர்ணம் மற்றும் சமமாக ஆகுங்கள். இராஜ சிம்மாசனதாரியாக ஆகுங்கள். எந்தவிதமான அலட்சியத்தில் தன்னுடைய அதிகாரித்தின் ஆஸ்தியை மற்றும் வரதானத்தை குறைவாக பிராப்தி செய்யாதீர்கள். எனவே சேமிப்புக் கணக்கை சோதனைச் செய்யுங்கள். புதிய வருடம் தொடங்கி விட்டது இல்லையா? பழைய கணக்கை சோதனை செய்யுங்கள். மேலும் புதிய கணக்கில் நடக்கும் நேரம் மற்றும் தந்தையின் வரதானத்தினால் அதிகத்திலும் அதிகமாக சேமிப்பு செய்யுங்கள். சம்பாதித்தோம் மற்றும் சாப்பிட்டோம் என்ற கணக்கை உருவாக்காதீர்கள். சேமிப்பு செய்தேனா என்றும் பாருங்கள், அமிர்தவேளை யோக செய்தேன் - சேமிப்பு செய்தேன், வகுப்பில் முரளி கேட்டேன், சேமிப்பு செய்தேன், பிறகு முழு நாளும் பிரச்சனைகளின் வசமாகி, மற்றும் மாயாவின் தாக்குதன் வசமாகி, மற்றும் தன்னுடைய சம்ஸ்காரங்களின் வசமாகி என்னென்ன சேமிப்பு செய்தீர்களோ அதை யுத்தம் செய்து வெற்றி அடைவதிலேயே செலவழித்து விட்டீர்கள். அப்படியானால் ரிசல்ட் என்ன ஆனது? சம்பாதித்தீர்கள் மற்றும் செலவழித்தீர்கள், சேமிப்பு என்ன ஆனது? எனவே சேமிப்பு கணக்கை எப்போதும் சோதனை செய்யுங்கள்., மேலும் அதை அதிகரித்துக் கொண்டே இருங்கள். தினசரி சார்ட்டில் வகுப்பு கேட்டீர்களா? ஆம் என்று அப்படியே ரைட் என்று எழுதாதீர்கள். யோகா செய்தீர்களா? ஆனால் எப்படி சக்தி சாலியான யோகா நேரத்திற்கேற்றபடி இருக்க வேண்டுமோ அப்படி இருந்ததா? நேரத்தை நன்றாகக் கழித்தேன், மிகுந்த ஆனந்தம் வந்தது, நிகழ்காலமோ நன்றாக ஆனாது. ஆனால் நிகழ்காலத்தின் கூடவே சேமிப்பு ச்யதீர்களா? அந்தளவு சக்திசாலியான அனுபவம் ஆனதா? இந்த வாழ்க்கையில் நன்றாக இருக்கிறேனா என்பதை மட்டும் சோதனை செய்யாதீர்கள். யாரிடமாவது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் மிக நன்றாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால் எந்த வேகத்தில் இந்த வாழ்க்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை சோதனை செய்யுங்கள். என்னுடைய வேகம் எறும்பு மாதிரி நகர்கிறதா? அல்லது ராக்கெட் மாதிரி வேகமாக செல்கிறதா? இந்த வருடம் அனைத்து விசயங்களில் சக்திசாலியாக ஆவதின் வேகத்தை மற்றும் சதவிகிதத்தை சோதனை செய்யுங்கள். எத்தனை சதவிகிதத்தில் சேமிப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள் 5 ரூபாய் கூட சேமிப்பு என்று தான் கூறுவோம், 500 ரூபாயும் சேமிப்பு என்று தான் கூறுவோம். சேமிப்பு செய்தீர்கள், ஆனால் எந்தளவு சேமிப்பு செய்தீர்கள்? புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று?

 

பொன்விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த முழு ஆண்டுமே பொன் விழா ஆண்டு தான் இல்லையா? எனவே ஒவ்வொரு விசயத்திலும் பொற்காலம் அதாவது சதோபிரதான நிலை இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். அல்லது சதோ அதாவது வெள்ளிக் கால நிலையா? முயற்சி செய்வது கூட சதோபிரதான பொற்கால நிலையாக இருக்க வேண்டும். சேவையும் பொற்காலத்திற்குத் தகுதியானதாக இருக்க வேண்டும். சிறிதளவு கூட பழைய சம்ஸ்காரத்தின் கலப்படம் இருக்க வேண்டாம். எப்படி இன்றைய நாட்களில் வெள்ளியின் மேலும் தங்க முலாம் பூசி விடுகிறார்கள். வெளியில் இருந்து பார்த்தால் தங்கமாகத் தெரியும் ஆனால் உள்ளே என்ன இருக்கிறது? கலப்படம் என்று தான் சொல்வோம் இல்லையா? அதேபோல் சேவையிலும் அபிமானம் மற்றும் அவமானத்தின் கலப்படம் இருக்க வேண்டாம். இதைத்தான் பொற்காலத்து நிலையில் உள்ள சேவை என்று கூறுவோம். சுபாவத்திலும் கூட பொறாமைப் படுவது, பிடிவாதம் செய்வது, மற்றும் நிரூபணம் செய்வதின் பாவனை இருக்க வேண்டாம், இதுவெல்லாம் கலப்படம். இந்த கலப்படத்தை முடித்துவிட்டு பொற்காலத்தின் சுபாவம் உள்ளவராக ஆகுங்கள். சம்ஸ்காரத்தில் எப்போதும் சரி சரி என்று கூறும் பழக்கம் இருக்க வேண்டும். எப்படிநேரமோ, எப்படி சேவையோ, அப்படி தன்னை வளைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உண்மையான தங்கம் ஆக வேண்டும். நான் வளைந்து கொடுக்க வேண்டும். மற்றவர்கள் செய்தார்கள் என்றால் நானும் செய்வேன் என்பது பிடிவதாம் செய்வதாக ஆகிவிடும். அது உண்மையான தங்கம் ஆகாது,. இந்த கலப்படத்தையும் அகற்றி பொற்காலத்து நிலை உள்ளவராக ஆகுங்கள். சம்மந்தத்தில் எப்பொழுதும் ஒவ்வொரு ஆத்மாவிற்காக சுபபாவனை, நன்மையே பயக்கும் பாவனை இருக்கட்டும். அன்பின் பாவனை, சகயோகத்தின் பாவனை இருக்கட்டும். மற்றவர்கள் எப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும், நீங்கள் எப்போதும் சிரேஷ்ட பாவனை உள்ளவராக இருங்கள். இந்த அனைத்து விசயங்களிலும் தன்னை மாற்றிக் கொள்வது தான் பொன்விழாவைக் கொண்டாடுவது என்பதாகும். கலப்படத்தை எரிப்பது என்றால் பொன் விழா கொண்டாடுவது. வருடத்தின் தொடக்கத்தை பொற்கால நிலையில் இருந்து செய்யுங்கள் சுலபம் தான் இல்லையா? கேட்கும் நேரத்திலோ கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறீர்கள். ஆனால் பிரச்சனை எதிரில் வரும்பொழுது, இதுவோ மிகவும் கடினமான விசயம் என்று யோசிக்கிறீர்கள். பிரச்சனையின் நேரத்தில் சுய ராஜ்ய அதிகார தன்மையின் அதிகாரத்தை காண்பிப்பதற்கான நேரமாகத்தான் இருக்கும் தாக்குதலின் நேரத்தில் வெற்றி அடைபவர் ஆவதாக இருக்கும். பரிட்சையின் நேரத்தில் நம்பர் 1 பெறுவதற்கான நேரமாக இருக்கும். எனவே பிரச்சனை சொரூபமானவராக ஆகாதீர்கள். ஆனால் சமாதான சொரூபமாக ஆகுங்கள். இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? அப்பொழுது தான் பொன்விழாவின் முடிவு நிறை வேறியதின் பொன் விழா என்று கூறுவோம். வேறு என்ன புதுமை செய்வீர்கள்? பாப்தாதாவிடம் அனைத்துக் குழந்தைகளின் எண்ணமோ வந்து சேர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. நிகழ்ச்சியிலும் புதுமையாக என்ன செய்வீர்கள்? பொன்னான எண்ணங்களைக் கூறும் தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இல்லையா! நல்ல எண்ணம் நல்ல சிந்தனை அது ஒருவரை தங்கமாக ஆக்கிவிட வேண்டும் மேலும் பொன்னுலகத்தைத் கொண்டுவந்து விடவேண்டும். இந்த தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இல்லையா? நல்லது. இன்று சூட்சம வதனத்தில் இந்த விசயத்தின் மேல் ஆன்மீக உரையாடல் நடந்தது. அதைப்பற்றி பின்பு கூறுவோம். நல்லது.

 

அனைத்து ஆஸ்தி மற்றும் வரதானத்தின் இரட்டை அதிகாரி பாக்கியவான் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் சுயராஜ்ய அதிகாரி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னை பொற்கால நிலையில் நிலைத்திருக்கச் செய்யும் உண்மையான தங்கமான குழந்தைகளுக்கு, எப்பொழுதும் சுயபரிவர்த்ததனை செய்யும் ஈடுபாட்டின் மூலம் விஷ்வ பரிவர்த்தனை செய்வதில் முன்னேறிச் செல்லும் விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினனவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

மீட்டிங்கில் வந்திருக்கும் டாக்டர்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:

தன்னுடைய சிரேஷ்ட ஊக்கம், உற்சாகம் மூலமாக அநேக ஆத்மாக்களை நிரந்தர குஷியானவராக ஆக்கும் சேவையில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? ஒவ்வொரு ஆத்மாவிற்கும் குஷி கொடுப்பது தான் டாக்டர்களின் விசேஷ காரியம். குஷி தான் முதல் மருந்து. குஷி பாதி நோயை அகற்றி விடுகிறது. அம்மாதிரி ஆன்மீக டாக்டர்கள் என்றால் குஷி என்ற மருந்து கொடுப்பவர்கள். நீங்கள் அம்மாதிரியான டாக்டர்கள் தான் இல்லையா? ஒருதடவையாவது ஆத்மாவிற்கு குஷியின் அனுபவம் ஆகிவிட்டது என்றால், அந்த ஆத்மா எப்பொழுதுமே குஷியின் அந்த உணர்விலேயே முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார். அம்மாதிரி நீங்கள் அனைவரையும் டபுள் லைட்டாக அதாவது சுமையற்றவராக ஆக்கி, பறக்க வைக்கும் டாக்டர்கள் தான் இல்லையா? அந்த டாக்டர்கள் படுக்கையிலிருந்து எழுப்பி விடுகிறார்கள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளியை எழுப்பி விட்டு நடக்க வைக்கிறார்கள். நீங்கள் பழைய உலகத்திலிருந்து எழுப்பி புதிய உலகத்தில் அமர வையுங்கள். அம்மாதிரியான திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? ஆன்மீகக் கருவிகளை உபயோகிப்பதற்கான திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? இன்ஞக்ஷன் (ஊசி) என்றால் என்ன?, மாத்திரைகள் என்றால் என்ன? இரத்தம் கொடுப்பது என்றால் என்ன என்ற இந்த அனைத்து ஆன்மீக சாதனைங்களை உருவாக்கியிருக்கிறீர்களா? யாருக்காவது இரத்தம் கொடுப்பதற்கான அவசியம் இருக்கிறது என்றால் ஆன்மீக இரத்தமாக எதைக் கொடுப்பது? இதய நோயாளிக்கு என்ன மருந்து கொடுப்பது? இதய நோயாளி என்றால் மனம் உடைந்து போயிருக்கும் நோயாளி. அம்மாதிரி இந்த அனைத்து ஆன்மீக பொருட்கள் தேவையாக இருக்கின்றன. எப்படி அவர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள், அவர்கள் அறிவியலின் சாதனங்கள் மூலம் கண்டுபிடிப்பு செய்கிறார்கள். நீங்கள் அமைதியின் சாதனங்கள் மூலமாக நிரந்தரமாக நோயற்றவர் ஆக்கிவிடுங்கள். எப்படி அவர்களிடம் இந்த கருவி, அந்த கருவி என்று அனைத்து பட்டியலும் இருக்கிறது. அதேபோல் உங்களுடைய பட்டியலும் நீளமானதாக இருக்கட்டும். நீங்கள் அம்மாதிரியான டாக்டர்கள். நிரந்தர ஆரோக்கியமானவராக ஆக்குவதற்கு இத்தனை நல்ல சாதனம் இருக்கட்டும். தன்னுடைய தொழிலை அந்த மாதிரியானதாக ஆக்கியிருக்கிறீர்களா? அனைத்து டாக்டர்களும் அவரவர்களின் ஸ்தானங்களில் எவர் ஹெல்தி எவர் ஹெல்தி ஆவதற்கான மருத்துவமனை என்ற போர்டு போட்டு இருக்கின்றீர்களா? எப்படி அவர்கள் தங்களுடைய தொழிலை போர்டில் எழுதுகிறார்கள். அதேபோல் உங்களுடைய போர்டைப் பார்த்து இது என்ன என்று புரிந்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளே வரவேண்டும். கவர்ந்திழுக்கும் போர்டாக இருக்கட்டும். அந்த போர்டில் எழுதப்பட்டிருப்பது படிப்பவர்களுக்கு இதைத் தெரிந்துக் கொள்ளமால் இருக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். நீங்கள் ஒருவரை அழைப்பதற்கான அவசியமேயில்லாமல் அவர்களே விரும்பாவிட்டாலும் உள்ளே வந்துவிடவேண்டும்,. அந்தமாதிரியான போர்டு இருக்கட்டும். அந்த டாக்டர்கள் எம்.பி.பி.எஸ் இந்த மாதிரி தொழில் இருப்பவர்கள் என்று போர்டில் எழுதுகிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களுடைய போர்டில் ஆன்மீக தொழிலை எழுதுங்கள். இதைப் படிப்பவர்கள் இம்மாதிரியான மருத்துவமனையும் அவசியம் வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அம்மாதிரி தன்னுடைய ஆன்மீகத் தகுதி, பட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? அல்லது பழைய டிகிரிகளையே எழுதுகிறீர்களா?

 

(சேவைக்கான சிரேஷ்ட சாதனமாக என்ன இருக்க வேண்டும்) சேவைக்கான மிகவும் சக்திசாலியான சாதனம் - சக்திசாலியான எண்ணம் மூலம் சேவை செய்வது. சக்திசாலியான எண்ணமும் இருக்கட்டும், வார்த்தைகளும் இருக்கட்டும் மேலும் காரியமும் இருக்கட்டும். மூன்றும் சேர்ந்து காரியம் செய்யட்டும்,. இது தான் சக்திசாலியான சாதனம். வார்த்தைகளில் வருகிறீர்கள் என்றால் சக்திசாலியான எண்ணத்தின் சதவிகிதம் குறைந்து விடுகிறது, அல்லது அந்த சதவிகிதம் இருக்கிறது என்றால் வார்த்தைகளின் சக்தியில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அப்படியிருக்க வேண்டாம். மூன்றுமே சேர்ந்தே இருக்க வேண்டும். எப்படி ஏதாவது ஒரு நோயாளியை ஒரே நேரத்தில் ஒருவர் நாடி பிடித்துப் பார்க்கின்றார், ஒருவர் ஆப்ரேஷன் செய்கின்றார்..... அப்படி சேர்ந்தே செய்கிறார்கள், நாடி பிடித்துப் பார்ப்பவர் காலம் தாழ்த்தி பின்னால் பார்க்கிறார் மற்றும் ஆப்ரேஷன் செய்பவர் முதலில் செய்து விடுகிறார் என்றால் என்னவாகும்? சேர்ந்தே எத்தனை காரியங்கள் நடக்கின்றன. அதேபோல் ஆன்மீகத்தின் சேவையிலும் சேர்ந்தே அனைத்து சாதனங்களும் செயல்படட்டும். மற்றப்படி சேவைக்கான திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், அது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஏதாவது அந்தமாதிரி சாதனத்தை உருவாக்குங்கள் அதன் மூலம் அனைவருமே ஆம் இந்த ஆன்மீக டாக்டர் நிரந்தரமாக ஆரோக்கியமாக ஆக்குபவர் என்று புரிந்துக் கொள்ளட்டும் நல்லது.

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு

(1) யார் அநேக தடவை வெற்றி அடைந்த ஆத்மாக்களாக இருப்பார்களோ அவர்களுடைய அடையாளமாக என்ன இருக்கும்? அவருக்கு ஒவ்வொரு விசயமும் மிகவும் சுலபமானதாக மற்றும் இலேசானதாக அனுபவம் ஆகும். யார் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி அடைந்த ஆத்மாவாக இல்லையோ அவருக்கு சிறிய காரியம் கூட கடினமாக அனுபவம் ஆகும். சுலபமாக இருக்காது. ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்பு இந்தக் காரியம் கண்டிப்பாக நடக்கும் என்று தனக்குள் அனுபவம் செய்வார்கள். நடக்குமா? அல்லது நடக்காதா? என்ற இந்த கேள்வி எழாது. கண்டிப்பாக நடக்கும். இந்த உணர்தல் எப்போதுமே இருக்கும். எப்பொழுதுமே வெற்றி கிடைக்கும் என்று தெரியும் என்ற நிச்சயப்புத்தி உள்ளவராக இருப்பார். எந்த ஒரு விசயமும் புதியதாக அனுபவம் ஆகாது. இது மிகவும் பழைய விசயம் என்ற இந்த நினைவின் மூலம் தன்னை முன்னேற்றிக் கொண்டேயிருப்பார்.

 

(2) டபுள் லைட் ஆனதற்கான அடையாளமாக என்ன இருக்கும்? டபுள் லைட் ஆத்மாக்கள் எப்பொழுதும் சுலபமாக பறக்கும் கலையின் அனுபவம் செய்வார்கள். சில நேரம் நிற்பது மேலும் சில நேரம் பறப்பது என்று அந்த மாதிரி இருக்காது. எப்பொழுதும் பறக்கும் கலையின் அனுபவம் நிறைந்த டபுள் லைட் ஆத்மாக்கள் தான் இரட்டை கிரீடங்களுக்கு அதிகாரியாக ஆகிறார்கள். டபுள் லைட்டாக இருப்பவர்கள் இயல்பாகவே உயர்ந்த நிலையின் அனுபவம் செய்வார்கள். எந்த ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனை வந்தாலும் நான் டபுள் லைட்டாக இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை ஆகிவிட்டீர்கள் என்றால், லேசானவர் ஆகிவிட்டீர்கள். எந்த ஒரு சுமையையும் தூக்க முடியாது. நல்லது

 

வரதானம்:

நற்சிந்தனை மற்றும் நற்சிந்தனையாளர் நிலையின் அனுபவம் மூலமாக பிரம்மா தந்தைக்குச் சமமான மாஸ்டர் வள்ளல் ஆகுக!

 

பிரம்மா தந்தைக்குச் சமமாக மாஸ்டர் வள்ளல் ஆவதற்காக பொறாமை, வெறுப்பு மற்றும் விமர்சனம் செய்வது என்ற இந்த மூன்று விசயங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகி, அனைவருக்காகவும் நற்சிந்தனையாளர் ஆகுங்கள். மேலும் நற்சிந்தனை நிலையின் அனுபவம் செய்யுங்கள். ஏனென்றால் யாரிடம் பொறாமையின் அக்னி இருக்குமோ அவர் தானும் எரிவார், மற்றவர்களையும் தொந்தரவு செய்வார், வெறுப்புணர்வு உள்ளவர் அவரும் கீழே விழுவார், மற்றவர்களையும் விழ வைப்பார். மேலும் நகைசுவைக்காக (கிண்டல்) விமர்சனம் செய்பவர்கள் ஆத்மாவை தைரியம் இல்லாதவர் ஆக்கி துக்கப்படுத்துகிறார்கள். எனவே இந்த மூன்று விசயங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகி, நற்சிந்தனையாளர் நிலையின் அனுபவம் மூலமாக வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் வள்ளல் ஆகுங்கள்.

 

சுலோகன்:

மனம் புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் மீது சம்பூர்ண இராஜ்யம் செய்யும் சுய ராஜ்ய அதிகாரி ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி