ஓம் சாந்தி.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முன்னால் அமர்ந்துள்ளீர்கள்.
ஹே, ஜீவ ஆத்மாக்களே! கேட்கிறீர்களா என்று தந்தை கூறுகிறார்.
ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். எங்கு துக்கத்தின் பெயர் இல்லையோ
அங்கு நம்மை நமது எல்லையில்லாத தந்தை அழைத்துச் செல்கிறார்
என்பதை ஆத்மாக்கள் அறிந்துள்ளார்கள். இந்த பாவ உலகத்திலிருந்து
பாவன உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பாடலில் கூட
கூறுகிறார்கள். பதீத (தூய்மை யற்ற) உலகம் என்று எதற்குக்
கூறப்படுகிறது என்பது உலகத்திற்குத் தெரியாது. பாருங்கள், இந்த
கால மனிதர்களிடம் காமம், கோபம் எவ்வளவு அதிகம் உள்ளது. நாங்கள்
இவருடைய தேசத்தை அழித்து விடுவோம் என்று கோபத்திற்கு
வசப்பட்டுக் கூறுகிறார்கள். ஹே பகவான், எங்களை கோரமான
இருளிலிருந்து பட்டப்பகலுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்றும்
கூறுகிறார்கள். ஏனெனில், பழைய உலகம் ஆகும். கலியுகத்திற்கு
பழைய யுகம், சத்யுகத்திற்கு புதிய யுகம் என்று கூறப்படுகிறது.
தந்தை இல்லாமல் புதிய யுகத்தை யாரும் அமைக்க முடியாது.
நம்முடைய இனிமையான பாபா நம்மை இப்பொழுது துக்கதாமத்திலிருந்து
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாபா உங்களைத் தவிர வேறு
யாருமே நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. பாபா
எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். பிறகும் எவரது
புத்தியிலும் பதிவது இல்லை. இச்சமயம் பாபாவின் சிறந்த வழி
கிடைக்கிறது. சிறந்த வழியினால் நாம் சிறந்தவர்களாக ஆகிறோம்.
இங்கு சிறந்தவர்களாக ஆனீர்கள் என்றால் சிரேஷ்ட உலகத்தில்
உயர்ந்த பதவியை அடைவீர்கள். இதுவோ தாழ்ந்த தாக (பிரஷ்டாச்சாரி)
இருக்கும் இராவணனின் உலகம். தனது வழி படி நடப்பதற்கு மனவழி
என்று கூறப்படுகிறது. ஸ்ரீமத்படி நடக்கவும் என்று தந்தை
கூறுகிறார். உங்களை பிறகு அடிக்கடி அசுர வழி நரகத்திற்குச்
தள்ளி விடுகிறது. கோபப்படுவது அசுர வழியாகும். ஒருவர் மீது
ஒருவர் கோபப்படாதீர்கள் என்று பாபா கூறுகிறார். அன்புடன்
நடக்கவும். ஒவ்வொருவரும் தங்களுக்காக ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைகளே ஏன் பாவம் செய்கிறீர்கள்? என்று தந்தை கூறுகிறார்.
புண்ணிய காரியம் செய்யுக்கள். உங்களுடைய செலவைக் குறைத்து
கொள்ளுங்கள். தீர்த்தங்களுக்கு சென்று கஷ்டப்படுவது, சந்நியாசி
களிடம் சென்று களைத்துப் போவது இம்மாதிரி கர்ம காண்டங்கள் மீது
எவ்வளவு செலவு செய்கிறார்கள்!. அவை அனைத்தி-ருந்தும் விடுவித்து
விடுகிறார். திருமணத்தில் மனிதர்கள் எவ்வளவு ஆடம்பர செலவு
செய்கிறார்கள்! கடன் வாங்கிக் கூட திருமணம் செய்விக்கிறார்கள்.
ஒன்று கடன் வாங்குகிறார்கள். இன்னொன்று பதீதமாக ஆகிறார்கள். அது
கூட யார் பதீதமாக ஆக விரும்பு கிறார்களோ அவர்கள் போய் ஆகட்டுமே!
யார் ஸ்ரீமத் படி நடந்து பவித்திரமாக ஆகிறார்களோ அவர்களை ஏன்
தடுக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்
சண்டையிட்டார்கள் என்றால், சகித்துக் கொள்ள வேண்டி தான் வரும்.
மீரா கூட எல்லாமே சகித்து கொண்டார் அல்லவா? எல்லையில்லாத தந்தை
வந்துள்ளார். இராஜயோகம் கற்பித்து பகவான் பகவதி பதவியை அடையச்
செய்விக்கிறார். இலட்சுமி-பகவதி, நாராயணர்-பகவான் என்று
கூறப்படு கிறது. கலியுகக் கடைசியிலோ எல்லோருமே பதீதமாக
உள்ளார்கள். பிறகு அவர்களை யார் மாற்றினார்கள்? பாபா எப்படி
வந்து சொர்க்கம் அல்லது இராம இராஜ்யத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் சூரிய
வம்சத்தின் அல்லது சந்திரவம்சத்தின் பதவியை அடைவதற்காக இங்கே
வந்துள்ளோம். யார் சூரிய வம்சத்தின் நல்ல குழந்தைகளாக
இருப்பார்களோ அவர்களே நல்ல முறையில் படிப்பைப் படிப்பார்கள்.
முயற்சி செய்து நீங்கள் தாய் தந்தையைப் பின்பற்றுங்கள் என்று
தந்தை எல்லோருக்கும் புரிய வைக்கிறார். இவர்களுடைய வாரிசாகிக்
காண்பிக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட புருஷார்த்தம் (முயற்சி)
செய்யுங்கள். மம்மா பாபா என்று கூறுகிறீர்கள் என்றால்,
வருங்காலத்தில் சிம்மா சனத்தில் அமர்வோராக ஆகிக் காண்பியுங்கள்.
தந்தையோ என்னை விடவும் உயர்ந்து செல்லும் வகையில் அந்த அளவிற்கு
படியுங்கள் என்று கூறுகிறார். அது போல தந்தையை விட உயர்ந்து
சென்று விடக் கூடிய அப்பேர்ப்பட்ட குழந்தைகள் நிறைய பேர்
இருக்கிறார்கள். நான் உங்களை உலகத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன்
என்று எல்லையில்லாத தந்தை கூறுகிறார். நான் ஆகிறேனா என்ன!
எவ்வளவு இனிமையான தந்தை ஆவார். அவருடைய ஸ்ரீமத் பிரசித்தமானது.
நீங்கள் சிறந்த தேவி தேவதைகளாக இருந்தீர்கள். பின்னர் 84
பிறவிகள் எடுத்து எடுத்து இப்பொழுது (தூய்மையற்றவர்களாக)
பதீதமாக ஆகி உள்ளீர்கள். தோல்வி மற்றும் வெற்றியின் விளையாட்டு
ஆகும். மாயையிடம் தோற்றால் தோல்வி. மாயையை வென்றால் வெற்றி.
மனம் என்ற வார்த்தை கூறுவது தவறு ஆகும். மனம் சிந்தனை செய்யா
ததாக ஆக முடியுமா என்ன? மனமோ சங்கல்பம் (எண்ணங்கள்) உருவாக்
கும். நாம் விரும்பி னால் எண்ணமின்றி அமர்ந்து விடலாம். ஆனால்
எது வரை? கர்மமோ செய்ய வேண்டும் அல்லவா? அவர்கள் இல்லற
தர்மத்தில் இருப்பது என்பது கர்மம் செய்வது அல்ல என்று
நினைக்கிறார்கள். இந்த ஹடயோக சந்நியாசிகளினுடையதும் பாகம் ஆகும்.
அவர்களு டையதும் இந்த துறவற மார்க்கத்தினுடைய ஒரு தர்மம் ஆகும்.
வேறு எந்த தர்மத்திலும் வீடு வாசலை விட்டு விட்டு காட்டிற்குப்
போவதில்லை. அப்படியே யாராவது விட்டிருந்தாலும் கூட
சந்நியாசிகளைப் பார்த்து அவ்வாறு செய்கிறார்கள். பாபா ஒன்றும்
வீட்டின் மீது வைராக்கிய மூட்டுவதில்லை. தாராளமாக வீட்டில்
இருங்கள். ஆனால் தூய்மை யாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
பழைய உலகத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். உங்களுக்காக புதிய
உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். சங்கராச்சாரியர்
உங்களுக்காக புதிய உலகத்தை அமைக்கிறேன் என்று ஒன்றும்
சந்நியாசிகளுக்காக கூறமாட்டார். அவர் களுடையது எல்லைக்குட்பட்ட
சந்நியாசம். அதனால் அல்பகால சுகம் கிடைக்கிறது. அபவித்திரமான
மனிதர்கள் போய் தலை வணங்குகிறார்கள். தூய்மைக்கு பாருங்கள்
எவ்வளவு மதிப்பு உள்ளது. இப்பொழுதோ பாருங்கள் எவ்வளவு பெரிய
பெரிய அடுக்கு மாடிகள் எல்லாம் அமைக்கிறார்கள். மனிதர்கள் தானம்
செய்கிறார்கள். இப்பொழுது இதனால் எதுவுமே புண்ணியம் ஆகவில்லை.
மனிதர்கள் நாம் இறைவன் பெயரில் என்ன செய்கிறோமோ அதை புண்ணியம்
என்று நினைக்கிறார்கள். பாபா கூறுகிறார் - என் பெயரில் நீங்கள்
எந்தெந்த காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்கள்!. யார் பாவம்
செய்வதில்லையோ அவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். ஒரு வேளை
அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால், உங்கள் மீது அதனுடைய
பாதிப்பு ஏற்பட்டு விடும். ஏனெனில் நீங்கள் தான் பணம்
கொடுத்தீர்கள். பதீதர்களுக்கு கொடுத்துக் கொடுத்து நீங்கள் ஏழை
ஆகி விட்டுள்ளீர்கள். பணமோ எல்லாம் வீணாகி விட்டுள்ளது.
வேண்டுமானால் அல்ப கால சுகம் கிடைத்து விடு கிறது. இது கூட
நாடகம் ஆகும். இப்பொழுது நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி
பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். செல்வம் கூட உங்களிடம்
அங்கு ஏராளமாக இருக்கும். அங்கு யாருமே பதீதமானவர்கள் இருப்பது
இல்லை. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
நீங்கள் ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள். உங்களிடம் மிகுந்த
கம்பீரத் தன்மை இருக்க வேண்டும். குருவை நிந்திப்பவருக்கு பதவி
கிடையாது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு தந்தை, ஆசிரியர்,
குரு தனித்தனி ஆவார்கள். இங்கோ தந்தை ஆசிரியர் சத்குரு ஒரே
ஒருவர் ஆவார். ஒரு வேளை நீங்கள் ஏதாவது தவறான வழியில்
நடந்தீர்கள் என்றால், மூவரையும் நிந்திப்பவராக ஆகி விடுவீர்கள்.
சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குருவின் வழிப்படி
நடப்பதால் தான் நீங்கள் சிறந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள்.
சரீரமோ விடவே வேண்டி உள்ளது. எனவே ஏன் இதை ஈசுவரிய அலௌகீக
சேவையில் ஈடுபடுத்தி தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொள்ளக்
கூடாது? நான் இதை வாங்கி என்ன செய்வேன் என்று தந்தை கூறுகிறார்.
நான் உங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சியை அளிக்கிறேன். அங்கு
கூட நான் மாளிகைகளில் இருப்பதில்லை. இங்கு கூட நான் மாளிகைகளில்
இருப்ப தில்லை. பம் பம் மகாதேவா.... எனது பையை நிரப்புங்கள்
என்று பாடுகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது மற்றும் எப்படி பையை
நிரப்புகிறார் என்பது யாருக்குமே தெரியாது. பையை நிரப்பி
இருந்தார். எனவே அவசியம் உயிரூட்டமாக இருந்திருந்தார். 21
பிறவிகளுக்கு நீங்கள் மிகவுமே சுகமுடைய செல்வந்தராக ஆகி
விடுகிறீர்கள். அப்பேர்ப்பட்ட தந்தையின் வழிப் படி ஒவ்வொரு
அடியும் நடக்க வேண்டும். மிகப் பெரிய குறிக்கோள் ஆகும். ஒரு
வேளை யாராவது என்னால் நடக்க முடியாது என்று கூறுகிறார்கள்
என்றால், நீங்கள் பின் பாபாவை என்று ஏன் கூறுகிறீர்கள் என்று
பாபா கூறுவார். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் நிறைய அடி
வாங்குவீர்கள். பதவியும் தாழ்ந்தாக ஆகி விடும். பாடலில் கூட
கேட்டீர்கள் - எங்கு சுகம் மற்றும் சாந்தி இருக்குமோ
அப்பேர்ப்பட்ட உலகிற்கு என்னை கூட்டிச் செல்லுங்கள் என்று
கூறுகிறார்கள். ஆக அதை தந்தை தான் கொடுக்க முடியும். தந்தையின்
வழிப்படி நடக்க வில்லை என்றால், தங்களுக்குத் தான் நஷ்டத்தை
ஏற்படுத்திக் கொள்வீர்கள். இங்கு எந்த ஒரு செலவு ஆகியவற்றின்
விஷயம் கிடையாது. குருவிற்கு முன்னால் தேங்காய் ஆகியவை எடுத்து
வாருங்கள் அல்லது பள்ளிக் கூடத்தில் கட்டணம் செலுத்துங்கள்
என்றெல்லாம் கூறப்படுகிறதா என்ன? எதுவுமே கிடையாது. பைசாவை
தாராளமாக உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஞானத்தை
மட்டும் படியுங்கள். வருங்கால சீர்திருத்தம் செய்வதில் நஷ்டமோ
ஒன்றும் கிடையாது. இங்கு தலை வணங்குவதற்குக் கற்பிக்கப்படுவது
இல்லை. அரைக் கல்பமாகவே நீங்கள் பைசாவை வைத்து தலை வணங்கி
வணங்கி ஏழையாக ஆகி விட்டுள்ளீர்கள். இப்பொழுது தந்தை மீண்டும்
உங்களை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருந்து
சுகதாமத்திற்கு அனுப்பி விடுவார். இப்பொழுது நவயுகம் - புதிய
உலகம் வரப்போகிறது. நவயுகம் என்று சத்யுகத்திற்கு கூறுவார்கள்.
பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது தந்தை உங்களை
தகுதியுடையவராக ஆக்கிக் கொண்டிருக் கிறார். நாரதரின் உதாரணம்.....
ஒரு வேளை எந்த ஒரு பூதம் இருந்தாலும் சரி, நீங்கள் இலட்சுமியை
வரம் (மணம்) முடிக்க முடியாமல் இருந்து விடுவீர்கள். ஆனால்
குழந்தைகள் நீங்களோ உங்கள் வீடு வாசலையும் பராமரிக்க வேண்டும்.
மேலும் சேவை கூட செய்ய வேண்டும். முதலில் இவர்கள் ஓடி
வந்தார்கள். ஏனெனில், இவர்கள் மீது நிறைய அடிகள் விழுந்தன.
நிறைய கொடுமைகள் ஏற்பட்டன. அடி வாங்குவதைக் கூட இவர்கள் பொருட்
படுத்தவில்லை. பட்டியில் ஒரு சிலர் பக்குவமானவர்களாக, ஒரு சிலர்
அரைகுறையானவர் களாக வெளிப்பட்டார்கள். நாடகத்தின் செயல் அவ்வாறு
இருந்தது. எது நடந்ததோ நடந்து விட்டது. மறுபடியும் நடக்கும்.
நிந்தையும் செய்வார்கள். எல்லோரையும் விட அதிகத்திலும் அதிகமாக
திட்டு வாங்குபவர் பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். பரமாத்மா
சர்வ வியாபி ஆவார் என்கிறார்கள். நாய், பூனை, ஆமை, மீன்
எல்லாவற்றிலும் இருக்கிறார். நானோ பரோப காரி ஆவேன் என்று தந்தை
கூறுகிறார். உங்களை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறேன்.
ஸ்ரீகிருஷ்ணர் சொர்க்கத்தின் இளவரசர் ஆவார் அல்லவா? அவரை பாம்பு
கொத்தியது கருப்பாக ஆகி விட்டார் என்கிறார்கள். இப்பொழுது அங்கு
பாம்பு எப்படி கொத்தும்? கிருஷ்ணபுரியில் கம்சன் எங்கிருந்து
வந்தான்? இவை எல்லாமே கட்டுக் கதை களாகும். இவை பக்தி
மார்க்கத்தின் விசயங்கள் ஆகும். அதனால் நீங்கள் கீழே
இறங்கியபடியே வந்துள்ளீர்கள். பாபாவோ உங்களை மலராக ஆக்குகிறார்.
ஒரு சிலரோ மிகவும் பெரிய முள் ஆக இருக்கிறார்கள். ஓ காட்ஃபாதர்
என்று கூறுகிறார்கள். ஆனால் எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள்.
ஃபாதர் - தந்தையாகவோ இருக்கிறார். ஆனால் தந்தையிடமிருந்து ஆஸ்தி
என்ன கிடைக்கும்? எதுவுமே தெரியாது. நான் உங்களுக்கு
எல்லையில்லாத ஆஸ்தி அளிக்க வந்துள்ளேன் என்று எல்லையில்லாத
தந்தை கூறுகிறார். உங்களுடையவர் ஒருவர் லௌகீக தந்தை, இரண்டாமவர்
அலௌகீக பிரஜாபிதா பிரம்மா, மூன்றாவது பரலோக தந்தை சிவன்.
உங்களுக்கு 3 தந்தை ஆகிறார்கள். நாம் பாட்டனாரிடமிருந்து
பிரம்மா மூலமாக ஆஸ்தி பெறு கிறோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எனவே ஸ்ரீமத் படி நடக்க வேண்டி உள்ளது.
அப்பொழுது தான் சிறந்தவர்களாக ஆகிடுவீர்கள். சத்யுகத்தில்
நீங்கள் பிராப்தியை அனுபவிக் கிறீர்கள்.அங்கு பிரஜாபிதா
பிரம்மாவையும் அறிந்திருக்க மாட்டீர்கள். சிவனையும்
அறிந்திருக்க மாட்டீர்கள். அங்கு லௌகீக தந்தையை மட்டும்
அறிந்திருப்பீர்கள். சத்யுகத்தில் ஒரு தந்தை ஆவார். பக்தியில்
இருப்பது இரண்டு தந்தையர். லௌகீக மற்றும் பரலௌகீக தந்தை. இந்த
சங்கமத்தில் 3 தந்தையர் இருக்கிறார்கள். இந்த விஷயங்களை வேறு
யாரும் புரிய வைக்க முடியாது. எனவே நிச்சயம் ஏற்பட்டிருக்க
வேண்டும். அப்படியின்றி இப்பொழுதே நிச்சயம், பிறகு இப்பொழுதே
சந்தேகம் என்பதல்ல. இப்பொழுதே ஜென்மம் எடுத்து, உடன் இப்பொழுதே
இறந்து விடுவது! இறந்து விட்டார் என்றால் ஆஸ்தி முடிந்தது.
இப்பேர்ப்பட்ட தந்தையை கைவிட்டு போகக் கூடாது. எந்த அளவிற்கு
நிரந்தரமாக நினைவு செய்வீர்களோ, சேவை செய்வீர்களோ அந்த அளவிற்கு
உயர்ந்த பதவியை அடைவீர்கள். என் வழிப்படி நடந்தீர்கள் என்றால்
பிழைத்து விடுவீர்கள் என்பதையும் தந்தை கூறுகிறார்.
இல்லையென்றால் நிறைய தண்டனை வாங்க வேண்டி வரும். இது போல
நீங்கள் பாவம் செய்தீர்கள் என்றால் எல்லாமே சாட்சாத்காரம்
செய்விப்பார் (காட்சிகள் தெரிதல்) ஸ்ரீமத் படி நீங்கள்
நடக்கவில்லை. சூட்சும சரீரத்தை தாரணை செய்வித்து, தண்டனை
கொடுக்கப்படுகிறது. கர்ப்ப சிறையில் கூட சாட்சாத்காரம்
செய்விக்கிறார். இந்த பாவச் செயல் செய்தீர்கள், இப்பொழுது
வாங்குங்கள் அதற்குத் தண்டனை. விருட்சம் விருத்தி அடைந்து
கொண்டே போகும். யார் இந்த தர்மத்தினர் களாக இருந்து வேறு வேறு
தர்மத்திற்குள் நுழைந்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் வெளி
வருவார்கள். மற்றவர்கள் அவரவர் பிரிவுகளில் சென்று விடுவார்கள்.
தனித்தனி பிரிவுகள் உள்ளன. விருட்சம் பாருங்கள் எப்படி
வளருகிறது. சிறு சிறு கிளைகள் வெளிப் பட்டுக் கொண்டே போகும்.
இனிமையான பாபா நம்மை திரும்ப அழைத்துச் செல்ல வந்துள்ளார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே அவரை லிபரேட்டர் என்று
கூறுகிறார்கள். துக்கஹர்த்தா, சுககர்த்தா (துக்கத்தை நீக்கி,
சுகமளிப்பவர்) ஆவார். கைடு - வழிகாட்டி ஆகி பிறகு
சுகதாமத்திற்கு கூட்டிச் செல்வார். 5 ஆயிரம் வருடங்களுக்கு
முன்பு உங்களை சுகத்தின் சம்பந்தத்தில் அனுப்பி இருந்தேன்
என்பதையும் கூறுகிறார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள்.
இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங் கள்.
ஸ்ரீகிருஷ்ணருடன் அனைவருக்கும் அன்பு உள்ளது. கிருஷ்ணரிடம்
அன்பு இருக்கும் அளவிற்கு இலட்சுமி நாராயணரிடம் இல்லை. இராதை
கிருஷ்ணர் தான் இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள் என்பது
மனிதர்களுக்குத் தெரியாது. யாருமே இந்த விஷயத்தை அறியாமல்
உள்ளார்கள்.இராதை கிருஷ்ணர் தனித்தனி இராஜாங்கத்தில்
இருந்தார்கள். பிறகு சுய வரத்திற்குப் பிறகு இலட்சுமி நாராயணர்
ஆனார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்களோ
கிருஷ்ணரை துவாபரத்திற்கு கூட்டிச் சென்று விட்டுள்ளார்கள்.
கிருஷ்ணரை யாருமே பதீத பாவனர் என்று கூற முடியாது. முறைப்படி
தினமும் படிக்காமல் யாருமே உயர்ந்த பதவி அடைய முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நமது நடத்தையை மிகவும் ராயலாக வைத்திருக்க
வேண்டும். மிகவும் குறைவாகவும் இனிமையாகவும் பேச வேண்டும்.
தண்டனைகளிலிருந்து தப்பித்திருக்க ஒவ்வொரு அடியிலும் தந்தையின்
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
2. படிப்பை மிகவும் கவனத்துடன் நல்ல முறையில் படிக்க
வேண்டும். தாய் தந்தையைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமருபவராக
வாரிசு ஆக வேண்டும். கோபத்தின் வசப்பட்டு துக்கம் கொடுக்கக்
கூடாது.