03-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இது (கப்ரிஸ்தான்) சுடுகாடு மற்றும் (பரிஸ்தான்) தேவதைகளின் உலகம் இவற்றின் விளையாட்டாகும். இச்சமயம் கப்ரிஸ்தான் பிறகு பரிஸ்தான் ஆகும். எனவே நீங்கள் இந்தச் சுடுகாட்டின் மீது மனதை ஈடுபடுத்தக்கூடாது.

கேள்வி:
மனிதர்கள் எந்த ஒரு விஷயத்தை அறிந்து கொண்டார்கள் என்றால் அனைத்து சந்தேகங்களும் விலகி விடும்?

பதில்:
தந்தை யார்? அவர் எப்படி வருகிறார் - இதை அறிந்து கொண்டார்கள் என்றால் அனைத்து சந்தேகங்களும் விலகி விடும். எது வரை தந்தையைப் பற்றி அறிந்து கொள்ள வில்லையோ, அது வரை சந்தேகங்கள் நீங்காது. நிச்சயபுத்தி உள்ளவராக ஆவதால் வெற்றி மாலையில் வந்து விடுவீர்கள். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விநாடியில் முழு நிச்சயம் ஏற்பட வேண்டும்.

பாடல்:
ஆகாயச் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்.....

ஓம் சாந்தி.
பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இவர் எல்லையற்ற ஆன்மிகத் தந்தை. ஆத்மாக்கள் அனைவரும் உருவத்தை அவசியம் மாற்றிக் கொள்கின்றனர். நிராகாரில் இருந்து சாகாரில் பார்ட்டை நடிப்பதற்காகக் கர்ம சேத்திரத்திற்கு வருகின்றனர். குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, தாங்களும் எங்களைப் போல் உருவத்தை மாற்றுங்கள். நிச்சயமாக மனித உருவத்தைத் தாரணை செய்து தான் ஞானம் தருவார் இல்லையா? மனிதரின் உருவத்தைத் தான் எடுத்துக் கொள்வார் இல்லையா? குழந்தைகளும் அறிவார்கள், நாம் ஆதமாக்கள் நிராகாராக உள்ளோம், பிறகு சாகார் (சரீரமுடையவர்) ஆகிறோம். நிச்சயமாக அப்படித் தான் இருக்கிறோம். அது நிராகாரி (ஆத்மாக்களின்) உலகம். இதைப் பாபா அமர்ந்து சொல்கிறார். பாபா சொல்கிறார், நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் கதையை அறிந்திருக்கவில்லை. நான் இவருக்குள் பிரவேசமாகி இவருக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன், இதையோ அறிந்திருக்கவில்லை இல்லையா? கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசர். இவர் தூய்மையற்ற உலகத்தில் தூய்மையற்ற சரீரத்தில் வர வேண்டி உள்ளது. கிருஷ்ணர் வெள்ளை யாக இருந்தார், பிறகு எப்படிக் கருப்பாக ஆனார்? இதை யாரும் அறிய மாட்டார்கள். பாம்பு தீண்டிய தாகச் சொல்கின்றனர். உண்மையில் இது 5 விகாரங்களின் விஷயம். காம சிதையில் அமர்வதால் கருப்பாகி விடுகின்றனர். ஷியாம்-சுந்தர் என்று கிருஷ்ணரைத் தான் சொல் கின்றனர். எனக்கோ சரீரமே கிடையாது - வெள்ளையாக அல்லது கருப்பாக ஆவதற்கு! நானோ எப்போதுமே தூய்மையாகவே இருக்கிறேன். நான் கல்ப-கல்பமாகச் சங்கமயுகத்தில் வருகிறேன்- அப்போது கலியுகத்தின் கடைசியாக, சத்யுகத்தின் ஆரம்பமாக உள்ளது. நான் தான் வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும். சத்யுகம் என்பது சுகதாமம். கலியுகம் என்பது துக்கதாமம். இச்சமயம் மனிதர்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக உள்ளனர். சத்யுகத்தின் லட்சுமி-நாராயணர், மகாராஜா- மகாராணியின் அரசை பிரஷ்டாச் சாரி (கீழானது) எனச் சொல்ல மாட்டார்கள். இங்கே அனைவரும் தூய்மையற்றவர்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது என்றால் தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஒரே ஒரு தர்மம் இருந்தது. சம்பூர்ண தூய்மையாக, சிரேஷ்டாச்சாரியாக (உயர்ந்தவர்களாக) இருந்தனர். பிரஷ்டாச்சாரிகள் சிரேஷ்டாச்சாரிகளுக்குப் (உயர்ந்தவர்களக) பூஜை செய்கின்றனர். சந்நியாசிகள் தூய்மை ஆகின்றனர் என்றால் தூய்மையற்றவர்கள் அவர்களுக்கு முன்பு தலைவணங்குகின்றனர். சந்நியாசிகளை இல்லற வாசிகள் பின்பற்றுவதோ கிடையாது. நான் இன்ன சந்நியாசியின் சீடர் (பின்பற்றுபவர்) என்று மட்டும் சொல்லி விடுகின்றனர். அப்படியானால் பின்பற்றுங்கள். நீங்களும் சந்நியாசி ஆகி விடுங்கள், அப்போது தான் பின்பற்றுபவர் எனச் சொல்வார்கள். இல்லறவாசிகள் பின்பற்றுவோராக ஆகின்றனர். ஆனால் அவர்கள் தூய்மையாகவோ ஆவதில்லை. சந்நியாசிகளும் அவர்களுக்குப் புரிய வைப்ப தில்லை, அவர்களும் தாங்கள் பின்பற்றுவதில்லை என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இங்கோ தாய்-தந்தையை முழுமை யாகப் பின்பற்ற வேண்டும். தாய்- தந்தையைப் பின்பற்றுங்கள் எனப் பாடப்படுகின்றது. மற்ற சங்கங்களில் இருந்து புத்தியோகத்தை விடுவித்து அனைத்து தேகதாரிகளையும் புத்தியி லிருந்து நீக்கி, ஒரு தந்தையோடு இணைக்க வேண்டும். அப்போது தந்தையிடம் சென்று சேர்ந்து விடுவீர்கள். பிறகு சத்யுகத் தில் வந்து விடுவீர்கள். நீங்கள் ஆல்ரவுண்டர் (காலச் சக்கரம் முழுவதிலும் வருபவர்கள்). 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, கடைசியில் இருந்து ஆரம்பம் வரை நீங்கள் அறிவீர்கள், நமக்கு ஆல்ரவுண்டு பார்ட் நடைபெறுகின்றது. மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பார்ட் நடைபெறுவதில்லை. ஆதி சநாதனம் என்பதே ஒரு தேவி-தேவதா தர்மம் தான். முதல்-முதலில் சூரிய வம்சியாக இருந்தீர்கள்.

இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் முழுமையாக 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். பின்னால் வருகிறவரோ, முழுச் சக்கரத்திலும் வர முடியாது. இது புரிந்து கொள்வதற்கான விஷயம் இல்லையா? பாபாவைத் தவிர யாராலும் புரிய வைக்க முடியாது. முதல்-முதலில் தெய்விக தர்மம். அரைக்கல்பம் சூரியவம்சி, சந்திரவம்சி இராஜ்யம் நடைபெறு கின்றது. இப்போதோ இது மிகச்சிறிய யுகம். இது தான் சங்கமம் எனச் சொல்லப்படுகின்றது. கும்பம் என்றும் சொல்லப்படுகின்றது. அவரைத் தான் நினைவு செய்கின்றனர் - ஹே பரமபிதா பரமாத்மா, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள் என அழைப்பு விடு கின்றனர். பாபாவைச் சந்திப்பதற்காக எவ்வளவு அலைந்து கொண்டே இருக்கின்றனர்! யக்ஞம்-தவம், தானம்-புண்ணியம் முதலியவற்றைச் செய்து கொண்டே இருக்கின்றனர். எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. இப்போது நீங்கள் அலைவதில் இருந்து விடுபட்டு விட்டீர்கள். அது பக்திக் காண்டம். இது ஞானக் காண்டம். பக்தி மார்க்கம் அரைக்கல்பம் நடைபெறுகின்றது. இது ஞான மார்க்கம். இச்சமயம் உங்களுக்குப் பழைய உலகத்தில் இருந்து வைராக்கியம் மேற்கொள்ள வைக்கிறேன். அதனால் இது உங்களுடைய எல்லை யற்ற வைராக்கியம். ஏனென்றால் நீங்கள் அறிவீர்கள், இந்த முழு உலகமும் சுடுகாடாக ஆகப்போகின்றது. இச்சமயம் சுடுகாடு. பிறகு தேவதா உலகம் ஆகும். இந்த விளையாட்டுக் கபிரிஸ்தான் (சுடுகாடு) மற்றும் பரிஸ்தானின் (தேவதா உலகம்) விளையாட்டாகும். பாபா பரிஸ்தானை ஸ்தாபனை செய்கிறார், அவரை நினைவு செய்கின்றனர். இராவணனை யாரும் நினைவு செய்வதில்லை. முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதால் அனைத்து சந்தேகங்களும் முடிந்து போகும். எது வரை முதலில் பாபாவை அறிந்து கொள்ள வில்லையோ, அது வரை சந்தேகப்புத்தி உள்ளவர் களாகவே இருப்பார்கள். சந்தேகப் புத்தி அழிவைத்தரும், நிச்சயபுத்தி வெற்றியை தரும், நிச்சயமாக நம் அனைவரின் தந்தை அவர். அவர் தான் எல்லையற்ற ஆஸ்தி தருகிறார். நிச்சயத்தினால் தான் வெற்றி மாலையில் மணியாக வர முடியும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு விநாடியில் நிச்சயம் ஏற்பட வேண்டும். பாபா சொல்கிறார் என்றால் அதில் முழு நிச்சயம் இருக்க வேண்டும் இல்லையா? தந்தை என்று சரீரமற்றவரை தான் சொல்லப்படுகிறார். அது போல் காந்தியையும் கூடத் தந்தை எனச் சொல்லி வந்தனர். ஆனால் இங்கோ உலகத்தின் தந்தை வேண்டும் இல்லையா? இவரோ உலகத்தின் இறைத்தந்தையாக உள்ளார். உலகத்தின் தந்தை அவர் என்றால் மிகப்பெரியவர் ஆகிறார் இல்லையா? அவரிடமிருந்து உலகத்தின் இராஜ பதவி கிடைக்கிறது. பிரம்மா மூலம் விஷ்ணுவின் இராஜ்யத்தினுடைய ஸ்தாபனை நடைபெறு கின்றது. நீங்கள் அறிவீர்கள், நாம் தான் உலகத்தின் எஜமானர்களாக இருந்தோம். நாம் தான் தேவி-தேவதையாக இருந்தோம், பிறகு சந்திரவம்சி, வைசியவம்சி, சூத்திரவம்சி ஆனோம். இந்த அனைத்து விஷயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். பாபா சொல்லவும் செய்கிறார், இந்த எனது ஞான யக்ஞத்தில் விக்னங்கள் அதிகமாக வரும். இது ருத்ர ஞான யக்ஞம், இதிலிருந்து விநாச ஜுவாலை கொழுந்து விட்டு எரியும். இதில் பழைய உலகம் முழுவதும் அழிந்து, ஒரு தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகி விடும். உங்களுக்குப் புரிய வைப்பவர் பாபா. அவர் உண்மையைச் சொல்கிறார். நரனில் இருந்து நாராயணனாக ஆவதற்கான சத்தியமான கதையைச் சொல்கிறார். இந்தக் கதையை நீங்கள் இப்போது தான் கேட்கிறீர்கள். இது ஒன்றும் பரம்பரையாக நடைபெறு வதில்லை.

இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் 84 பிறவிகளை முடித்து விட்டீர்கள். இப்போது மீண்டும் புது உலகில் உங்கள் இராஜ்யம் இருக்கும். இது இராஜயோகத்தின் ஞானம். சகஜ இராஜயோகத்தின் ஞானம் ஒரு பரமபிதா பரமாத்மாவிடம் மட்டுமே உள்ளது. புராதன பாரதத்தின் இராஜயோகம் என்று அதைச் சொல்கின்றனர். நிச்சயமாகக் கலியுகத்தைச் சத்யுக மாக மாற்றியிருந்தார். விநாசமும் ஆரம்பமாயிற்று. இது ஏவுகணைகளின் விஷயம் தான். சத்யுக-திரேதாவிலோ எந்த ஒரு சண்டையும் நடப்பதில்லை. பின்னால் தான் ஆரம்பமாகிறது. இது ஏவுகணைகளின் கடைசி யுத்தம். முன்பு வாள் கொண்டு போர் செய்தனர். பிறகு துப்பாக்கி முதலிய கருவிகளால் போரிட்டனர். பிறகு பீரங்கி வந்தது. இப்போது வெடிகுண்டு கள் வெளிவந்துள்ளன. இல்லையென்றால் முழு உலகத்தின் விநாசம் எப்படி நடைபெறு வது? பிறகு அதனுடன் இயற்கைச் சேதங்களும் உள்ளன. ஏவுகணைகளைப் பொழிவது, பஞ்சம் முதலியவை இயற்கைச் சேதங்கள், நிலநடுக்கம் நடக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதை இயற்கைச் சேதங்கள் என்று சொல்கின்றனர். அதில் யார் என்ன செய்ய முடியும்? யாராவது தனக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் கூட யார் யாருக்குக் கொடுப்பார்கள்? அனைவரும் மடிந்துப் போவார்கள். யாருக்கும் எதுவும் கிடைக்காது. இப்போது நீங்கள் மீண்டும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் - பாபாவிடம். பக்தியிலும் இன்சூர் செய்கின்றனர். ஆனால் இங்கே அரைக்கல்பத் திற்கான பிரதிபலன் கிடைக்கிறது. இதுவோ நீங்கள் நேரடியாக இன்சுர் செய்கிறீர்கள். யாரேனும் அனைத்தையும் இன்சுர் செய்வார்களானால் அவர்களுக்கு இராஜபதவி கிடைத்து விடும். எப்படிப் பாபா தம்மைப் பற்றிச் சொல்கிறார், தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து விட்டார். பாபாவிடம் முழுமை யான இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களானால் முழு இராஜ்யம் கிடைத்து விடும். மற்றப்படி இந்த உலகமே அழிந்து போகும். இது மரண உலகம். சிலருடையது மண்ணோடு மண்ணாகி விடும்.. சிலருடையதை அரசு அபகரித்துக் கொள்ளும். எங்காவது நெருப்பு பற்றிக் கொள்ளும் போது அல்லது ஏதேனும் ஆபத்து வரும் போது திருடர்கள் கொள்ளையடிக்கின்றனர். இந்தச் சமயமே கடைசி ஆகும். இப்போது பாபாவை நினைவு செய்ய வேண்டும். உதவி செய்ய வேண்டும்.

இச்சமயத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். அவர்களால் தூய்மையான உலகைத்தை ஸ்தாபனை செய்ய இயலாது. இதுவோ பாபாவின் காரியம் மட்டுமே. பாபாவைத் தான் அழைக்கின்றனர் - நிராகாரி உலகில் இருந்து வாருங்கள், வந்து உருவத்தைத் தரித்துக் கொள்ளுங் கள். ஆக, பாபா சொல்கிறார், நான் சாகாரத்தில் வந்துள்ளேன், உருவத்தைத் தரித்துள் ளேன். ஆனால் எப்போதுமே இதில் இருக்க முடியாது. நாள் முழுவதும் சவாரி இருப்பதில்லை. காளை மாட்டின் மீது சவாரி காட்டுகின்றனர். பாக்கியசாலி இரதம் என்று மனிதருடையதைக் காட்டுகின்றனர். இப்போது இது சரியா, அதுவா? பசுக்களின் பராமரிக்கும் இடத்தைக் காட்டு கின்றனர். கௌமுக் (பசுமுகம்) காட்டுகின்றனர். காளை மாட்டின் மீது சவாரி, பிறகு கௌமுக் மூலம் ஞானம் தருகிறார். ஞான அமிர்தம் வெளிப்படுகின்றது. அர்த்தம் உள்ளது இல்லையா? கௌமுக் கோவிலும் உள்ளது. அநேக மக்கள் செல்கின்றனர் என்றால் கௌமுக்கில் இருந்து அமிர்தம் வெளிப்படுவதாக நினைக் கின்றனர். அதைப்போய் அருந்த வேண்டும். 700 படிகள் உள்ளன. அனைத்திலும் பெரிய கௌமுகமோ இது தான். அமர்நாத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுச் செல்கின்றனர்! அங்கே எதுவும் இல்லை. அனைத்தும் ஏமாற்று வேலை. சங்கர், பார்வதிக்குக் கதை சொன்னதாகக் காட்டுகின்றனர். இப்போது பார்வதிக்கு என்ன துர்கதி ஏற்பட்டது, அவருக்கு அமர்ந்து கதை சொன்னார்? மனிதர்கள் கோவில் முதலியவற்றைக் கட்டுவதில் எவ்வளவு செலவு செய்கின்றனர்! பாபா சொல்கிறார், நீங்கள் செலவு செய்து-செய்தே செல்வம் அனைத்தையும் இழந்து விட்டீர்கள். நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தீர்கள்! இப்போது திவாலாகி விட்டிருக்கிறீர்கள். பிறகு நான் வந்து செல்வந்தராக்கு கிறேன். நீங்கள் அறிவீர்கள், பாபாவிடமிருந்து நாம் ஆஸ்தி பெறுவதற்காக வந்துள்ளோம். குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாரதம் பரமபிதா பரமாத்மாவின் பிறப்பிடம். ஆகவே அனைத்திலும் பெரிய தீர்த்த ஸ்தலம் ஆகிறது இல்லையா? பிறகு பாபா தான் அனைத்துப் தூய்மையற்ற அனைவரையும் தூய்மையாக்குகிறார் இல்லையா? கீதையில் தந்தையின் பெயர் இருக்குமானால் அனைவரும் இங்கே வந்து பூக்களைப் போடுவார்கள். தந்தை தவிர வேறு யார் அனைவருக்கும் சத்கதி அளிக்க முடியும்? பாரதம் தான் அனைத்திலும் பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலம். ஆனால் இது யாருக்கும் தெரியாது. இல்லையென்றால் எப்படிப் பாபாவின் மகிமை அளவற்றதாக உள்ளதோ, அது போல் தான் பாரதத்தின் மகிமையும். நரகமாகவும் சொர்க்கமாகவும் பாரதம் தான் ஆகிறது. அளவற்ற மகிமை சொர்க்கத்தினுடையது. அளவற்ற நிந்தனை பிறகு நரகத்திற்கு எனச் சொல்வார்கள்.

குழந்தைகள் நீங்கள் உண்மையான கண்டத்தின் எஜமானர் ஆகிறீர்கள். பாபாவிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தி பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், மன்மனாபவ, மற்ற அனைவரிடம் இருந்தும் புத்தியோகத்தை விடுவித்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் தான் தூய்மை ஆவீர்கள். ஞானத்தினால் ஆஸ்தி பெற வேண்டும். ஜீவன்முக்தியின் ஆஸ்தியோ அனைவர்க்கும் கிடைக்கிறது. ஆனால் சொர்க்கத்தின் ஆஸ்தியை இராஜயோகம் கற்பவர்கள் தாம் அடைகிறார்கள். சத்கதியோ அனைவருக்குமே கிடைக்கும் இல்லையா? அனைவரையும் உடன் அழைத்துச் செல்வார். பாபா சொல்கிறார், நான் காலனுக்கெல்லாம் மேலான காலன். பாபா புரிய வைத்துள்ளார், கடைசியில் பிரத்யட்சம் (வெளிப்படையாக) நடைபெறும். அப்போது புரிந்து கொள்வார்கள், நிச்சயமாக இவர் களுக்குப் புரிய வைப்பவர் எல்லையற்ற தந்தை தான். கதை சொல்பவர்கள் இப்போது கீதையின் பகவான் கிருஷ்ணரல்ல, சிவன் தான் எனச் சொன்னால் அனைவரும் சொல்வார்கள், இவர்களுக்கும் பி.கே.யின் பூதம் பிடித்துக் கொண்டது. அதனால் இவர்களுக்கு இப்போது நேரம் இல்லை. கடைசியில் ஏற்றுக் கொள்வார்கள். இப்போது ஏற்றுக் கொண்டால் அவர்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மற்ற அனைத்து தொடர்புகளை விட்டு தாய்-தந்தையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இந்தப் பழைய உலகின் மீது எல்லையற்ற வைராக்கியம் வைத்து இதை மறந்துவிட வேண்டும்.

2. இது கடைசிச் சமயம். அனைத்தும் அழிவதற்கு முன் தன்னிடம் என்னென்ன உள்ளதோ, அவற்றைக் காப்பீடு செய்து வருங்காலத்தில் முழு இராஜ்யத்தின் அதிகாரத்தைப் பெற வேண்டும்.

வரதானம்:
பிராமண வாழ்க்கையில் சதா குஷி என்ற சத்தான உணவு சாப்பிடக் கூடிய மற்றும் கொடுக்கக் கூடிய சிரேஷ்ட அதிர்ஷ்டசாலி ஆகுக.

உலகிற்கு எஜமானராக இருப்பவரின் குழந்தைகள் நாம் எஜமானர்களாக இருக்கின்றோம் என்ற ஈஸ்வரிய போதை மற்றும் குஷியுடன் இருங்கள். ஆஹா எனது சிரேஷ்ட பாக்கியம் அதாவது அதிர்ஷ்டம். இந்தக் குஷி என்ற உஞ்சலில் சதா ஆடிக் கொண்டே இருங்கள். சதா அதிர்ஷ்டசாலி களாகவும் இருக்கிறீர்கள், மேலும் சதா குஷி என்ற சத்தான உணவு சாப்பிட்டும், பரிமாறிக் கொண்டும் இருக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் குஷியின் மகாதானம் கொடுத்து அதிர்ஷ்டசாலிகளாக ஆக்குகிறீர்கள். உங்களது வாழ்க்கையே குஷியாகும். குஷியாக இருப்பது தான் வாழ்வதாகும். இதுவே பிராமண வாழ்க்கையின் சிரேஷ்ட வரதானமாகும்.

சுலோகன்:
ஒவ்வொரு கடின சூழ்நிலையிலும் பொறுமையாக இருந்தீர்கள் எனில் ஆனந்தத்தின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள்.

மாதேஸ்வரிஜீயின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம்

1) நமது இந்த ஈஸ்வரிய ஞானம் தனது புத்தியிலிருந்து வெளியேறவில்லை. இதை யாரும் தன்னுடையது என்று புரிந்து கொள்ள முடியாது, கற்பனை அல்லது எனது சங்கல்பம் என்று கூற முடியாது, ஆனால் முழு உலகையும் படைத்த அந்தப் படைப்பவரின் மூலம் கேள்விப்பட்ட ஞானமாகும். மேலும் கேட்டதன் கூடவே அனுபவம் மற்றும் விவேகத்தில் கொண்டு வந்ததை நடைமுறையில் உங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றேன். ஒருவேளை உங்களது விவேகத் திற்கான விசயம் எனில் அது தங்களிடம் மட்டுமே இருக்கும். ஆனால் இது பரமாத்மாவின் மூலம் கேட்டு விவேகத்தினால் அனுபவத்தில் தாரணை செய்கின்றோம். எந்த ஒரு தாரணைக் கான விசயம் விவேகம் மற்றும் அனுபவத்தில் வருகிறதோ அதைத் தான் என்னுடையது என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இந்த விசயமும் நாம் இவர் மூலம் அறிந்து கொண்டோம். ஆகப் பரமாத்மாவின் படைப்புகள் என்ன? பரமாத்மா யார்? மற்ற எதுவும் எனது சங்கல்பத் திற்கான விசயம் கிடையாது. ஒருவேளை இருந்தால் இது எனது சங்கல்பம் என்று எனது மனதில் தோன்றும். ஆகையால் சுயம் பரமாத்மாவின் மூலம் தாரணைக்குத் தகுதியான கருத்துக்கள் கிடைத்திருக்கின்றன. அதில் முக்கியமானது யோகா செய்வது. ஆனால் யோகா விற்கு முன் ஞானம் தேவை. யோகா செய்வதற்கு முன் முதலில் ஞானம் என்று ஏன் கூறு கின்றோம்? முதலில் யோசிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் பிறகு யோகா செய்ய வேண்டும். முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் எப்போதும் கூறப்படுகிறது. இல்லையெனில் தவறான காரியங்கள் செய்ய ஆரம்பித்து விடுவோம். ஆகையால் முதலில் ஞானம் அவசியமாகும். ஞானம் ஒரு உயர்ந்த நிலையாகும். அதை அறிந்து கொள்வதற்குப் புத்தி தேவை. ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்த பரமாத்மா நமக்குப் படிப்புக் கற்பிக்கின்றார்.

2) இந்த ஈஸ்வரிய ஞானம் ஒருபுறம் துண்டிக்க வேண்டும், மறுபுறம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு பரமாத்மாவிடம் தொடர்பு (இணைப்பு) ஏற்படுத்த வேண்டும். அந்தத் தூய சம்பந்தத்தின் மூலம் நமது ஞானத்தின் ஏணி முன்னேறிக் கொண்டே இருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் ஆத்மா கர்ம பந்தனத்திற்கு வசமாகி விட்டது. அது ஆரம்பத்தில் கர்ம பந்தனங் களின்றி இருந்தது. பிறகு கர்ம பந்தனங்களில் வந்தது, இப்பொழுது மீண்டும் அந்தக் கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட வேண்டும். இப்பொழுது கர்மங்களில் மாட்டிக் கொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் காரியங்களும் செய்ய வேண்டும். காரியங்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கர்ம பந்தனங்களில் மாட்டிக் கொள்ளமாட்டோம். இதைத் தான் ஜீவன் முக்தி என்று கூறுகின்றோம். இல்லையெனில் கர்ம பந்தனத்தில், சக்கரத்தில் வருவதிலிருந்து சதா காலத்திற்கு ஜீவன் முக்தி கிடைக்காது. இப்பொழுது ஆத்மாவிலிருந்து சக்தி நீங்கி விட்டது, அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. ஆனால் காரியங்கள் ஆத்மாவின் மூலம் ஏற்பட வேண்டும். ஆத்மாவிற்குள் சக்தி வர வேண்டும். மேலும் கர்ம பந்தனங்களில் வராத ஒரு நிலையும் இருக்க வேண்டும். இல்லை யெனில் மனிதர்கள் துக்கம், சுகம் என்ற சுற்றில் வந்து விடுவர். ஏனெனில் காரியங்கள் அவர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. ஆத்மாவிற்குள் சக்தி இருக்கும் பொழுது அது கர்மத்தின் பந்தனங்களில் வராது. இது தான் ரிசல்ட் ஆகும். இந்த விசயங்களைத் தாரணை செய்யும் போது எளிதாகி விடும். இந்த வகுப்பின் நோக்கம் இது தான். மற்றபடி வேத சாஸ்திரங்கள் படித்து எந்தப் பட்டமும் வாங்க வேண்டாம். இந்த ஈஸ்வரிய ஞானத்தின் மூலம் தனது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு ஈஸ்வரனிடமிருந்து அந்தச் சக்திகளை அடைய வேண்டும். நல்லது ஓம்சாந்தி.