03.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அனைவருக்கும் சத்கதி கொடுக்கக்கூடிய ஜீவன் முக்தியின் வள்ளல் ஆக இருப்பவர் உங்களுடைய தந்தையாக ஆகி விட்டார், நீங்கள் அவருடைய குழந்தைகள், ஆகவே உங்களுக்கு எவ்வளவு நஷா இருக்க வேண்டும்.

 

கேள்வி:

எந்த குழந்தைகளுடைய புத்தியில் பாபாவின் நினைவு நிரந்தரமாக இருக்க முடியாது?

 

பதில்:

யாருக்கு முழுமையான நம்பிக்கை இல்லையோ, அவர்களுடைய புத்தியில் நிலையாக நினைவு இருக்க முடியாது. நமக்குக் கற்றுத் தருபவர் யார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லையெனில், யாரை நினைவு செய்வார்கள். யார் மிகவும் சரியாகப் புரிந்து கொண்டு நினைவு செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் அழிந்து விடும். தந்தை தானே வந்து தன்னுடைய மற்றும் தனது வீட்டின் சரியான அறிமுகத்தைத் தருகின்றார்.

 

ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்பதன் அர்த்தமானது எப்பொழுதும் குழந்தைகளுக்கு நினைவில் இருக்கும். நாம் ஆத்மாக்கள், நமது வீடு நிர்வாணதாமம், மூலவதனமாகும். மேலும் பக்தியில் மனிதர்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்தாலும், நாம் எங்கு செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாது. சுகம், துக்கம் எதிரில் இருக்கிறது என்பது கூடத்தெரியாது. யாகம், ஜபம், தானம், புண்ணியம் செய்தும் கூட படிப்படியாக கீழே இறங்கி விட்டனர். இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைத்து விட்டது. எனவே, பக்தி முடிந்து விட்டது. மணி அடிப்பது, மேளம் கொட்டுவது போன்ற சூழ்நிலை முடிந்து விட்டது. புதிய உலகத்திற்கும், பழைய உலகத்திற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா! புதிய உலகம் தூய்மையான உலகமாகும். குழந்தைகள் உங்கள் புத்தியில் சுகதாமம் இருக்கிறது. சுகதாமத்தை சொர்க்கம் எனவும், துக்கமான உலகத்தை நரகம் எனவும் அழைக்கிறோம். மனிதர்கள் அமைதியை விரும்புகின்றனர், ஆனால் அந்த உலகத்திற்கு யாரும் போக முடிவதில்லை. நான் இங்கு பாரத தேசத்தில் வந்து குழந்தைகள் உங்களை அழைத்துச் செல்கிறேன் என தந்தை கூறுகின்றார். பாரதத்தில் தான் சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நிராகாரமானவர் அவசியம் சாகார ரூபத்தில் வரவேண்டுமல்லவா! சரீரம் இல்லாமல் ஆத்மாவால் எதுவும் செய்ய முடியாதல்லவா? சரீரம் இல்லையெனில் ஆத்மா தனியாக அலைந்து கொண்டிருக்கும். சில நேரம் வேறு ஒருவரின் சரீரத்தில் பிரவேசமாகிவிடும். சில ஆத்மா நல்லதாக இருக்கும், சில ஆத்மா குழப்பம் ஏற்படுத்தி ஒரேயடியாக புத்தியைக் கெடுத்துவிடும். ஆத்மாவிற்கு சரீரம் அவசியம் வேண்டுமல்லவா! அதேபோன்று பரமபிதா பரமாத்மாவிற்கும் சரீரம் இல்லையெனில் பாரதத்தில் வந்து என்ன செய்வார்! பாரதமே அழியாத கண்டமாகும், சத்யுகத்தில் ஒரேயொரு பாரத கண்டம் இருந்தது, மற்ற எல்லா கண்டங்களும் அழிந்து விடும். ஆதி சனாதன தேவி-தேவதை தர்மம் இருந்தது. மனிதர்கள் பிற்காலத்தில் ஆதி சனாதன இந்து தர்மம் எனக் கூறிவிட்டனர். உண்மையில் ஆரம்பத்தில் இந்து தர்மம் இல்லை, தேவி-தேவதைகள் இருந்தனர். ஐரோப்பாவில் இருப்பவர்கள் தன்னை கிறிஸ்துவர்கள் எனக் கூறுகின்றனர். ஐரோப்பிய மதம் என கூறுவதில்லை. இங்கு இந்துஸ்தானத்தில் வசிப்பவர்கள் தன்னை இந்து மதத்தினர் எனக் கூறுகின்றனர். எந்த தேவதா தர்மம் சிரேஷ்டமாக இருந்ததோ, அதே தர்மம் 84 பிறவிகளில் வந்து தாழ்ந்த தர்மமாகி விட்டது. தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களே இங்கு வருவார்கள். நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் நமது தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென பொருளாகும். அவர்கள் இங்கு வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு எதுவும் புரியாது. அங்கு பிரஜைகளிலும் கூட குறைவான பதவி அடைவார்கள். அனைவரும் சுகம், சாந்தியை விரும்புகின்றனர், அது சத்யுகத்தில்தான் கிடைக்கும். அனைவரும் சுகதாமத்திற்குச் செல்ல முடியாது. அனைத்து தர்மத்தினரும் அவரவர் நேரப்படி வருவார்கள். அனேக தர்மங்கள் இருக்கிறது, மரம் வளர்ச்சி அடைகின்றது. முக்கிய ஆதாரமாக தேவி - தேவதா தர்மம் இருக்கிறது. பிறகு 3 பிரிவுகள் உருவாகின்றன.

 

சொர்க்கத்தில் இவ்வாறு இருப்பதில்லை. துவாப்ரயுகத்திலிருந்து புது தர்மம் (மதம்) வெளிப்படுகிறது, இதைத்தான் பல்வேறு விதமான மனித உலக மரம் எனக் கூறப்படுகிறது. விராட ரூபம் தனிப்பட்டது, இது பலவிதமான மனித உலக மரமாகும். விதவிதமான மனிதர்கள் இருக்கின்றனர். எத்தனை தர்மங்கள் இருக்கிறது என நீங்கள் புரிந்துள்ளீர்கள். சத்யுக ஆரம்பத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது, புது உலகமாக இருந்தது. பாரதமே பழமையான பூந்தோட்டமாக இருந்தது என வெளிநாட்டினரும் அறிந்துள்ளனர். பெரிய செல்வந்த நாடாக இருந்தது, எனவே, பாரதத்திற்கு நிறைய மரியாதை கிடைக்கிறது. யாரேனும் செல்வந்தர், ஏழையாகி விட்டால் அவர் மீது இரக்கப்படுவார்கள். பாவம் இந்த பாரதத்திற்கு என்னவாகி விட்டது? இதுவும் நாடகத்தில் பதிவாகி உள்ளது. அனைவரையும் காட்டிலும் இரக்க மனம் உடையவர் ஈஸ்வரர் எனக் கூறுகின்றனர், மேலும் அவர் பாரதத்தில் தான் வருகின்றார். ஏழைகளின் மீது செல்வந்தர்கள் அவசியம் இரக்கப்படுவார்கள் தானே! இந்த தந்தை எல்லையற்ற செல்வந்தர், உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக்குபவர்; நீங்கள் யாருடைய குழந்தைகளாக ஆகி விட்டீர்கள் என்ற நஷாவும் (போதை) வேண்டும். நாம் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள், அவரைத்தான் ஜீவன் முக்தியின் வள்ளல், சத்கதி கொடுக்கும் வள்ளல் எனக்கூறப்படுகிறது. சத்யுகத்தில் தான் முதலில் ஜீவன்முக்தி கிடைக்கிறது. இங்கு ஜீவன் பந்தனமாக (கர்மத் தளை) இருக்கிறது. பாபா எங்களை பந்தனத்திலிருந்து விடுதலை செய்யுங்கள் என பக்தி மார்க்கத்தில் அழைக்கின்றனர், இப்போது நீங்கள் அவ்வாறு கூப்பிடுவதில்லை. தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார், அவரே உலகத்தின் வரலாறு, பூகோளத்தின் சாரத்தைப் புரிய வைக்கின்றார், அவரே ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். இவர் தன்னை பகவான் என கூறுவதில்லை. நீங்கள் இப்பொழுது தேகத்திலிருந்து விடுபட்டு ஆத்ம அபிமானி ஆக வேண்டும். முழு உலகத்தையும், தனது சரீரத்தையும் கூட மறக்க வேண்டும். இவரை பகவான் என்று கூறவில்லை. இவர்களை பாப்தாதா என்றுதான் அழைக்கின்றோம். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையாக இருக்கின்றார். இது மிகவும் பதீதமான பழைய சரீரமாக இருக்கின்றது, ஆனாலும் மகிமை என்பது ஒருவருக்கு மட்டும் தான். அவரிடத்தில் யோகத்தை ஈடுபடுத்துவதன் மூலமாகவே பாவனமாவீர்கள். இல்லையென்றால் ஒருபோதும் பாவனமாக முடியாது. மேலும் கடைசியில் கணக்குகளை முடித்து தண்டனை அடைந்து வீடு திரும்புவார்கள். பக்தி மார்க்கத்தில் நாமே அதுவாக ஆகின்றோம் என்ற மந்திரத்தை கேட்டு வந்தீர்கள், நாம் ஆத்மாவில் இருந்து பரமாத்மாவாக, பரமாத்மாவில் இருந்து ஆத்மாவாக ஆகின்றோம் என்ற மந்திரம் பரமாத்மாவிடமிருந்து நமது கவனத்தை திசை திருப்புவதாகும். குழந்தைகளே, பரமாத்மாவில் இருந்து ஆத்மாவாக ஆகின்றோம் என்று கூறுவது மிகவும் தவறானதாகும். இப்பொழுது குழந்தைகளுக்கு பல்வேறு குலங்களைப் பற்றிய இரகசியமும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. நாம் பிராமணனிலிருந்து தேவாத்மாவாக ஆவதற்காக முயற்சி செய்கின்றோம், பிறகு நாம் தேவாத்மாவில் இருந்து சத்ரியராக ஆவோம். நாம் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கின்றோம்? எந்தெந்த குலங்களில் வருகின்றோம்? என்பது யாருக்கும் தெரியாது. நாம் இப்பொழுது பிராமணராக இருக் கின்றோம், பாபாவை பிராமணர் என கூறமுடியாது என நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் மட்டுமே எல்லா குலங்களிலும் வருகின்றீர்கள். இப்பொழுது பிராமணர் தர்மத்தில் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றீர்கள். சிவபாபா மூலமாக பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக ஆகி இருக்கின்றீர்கள். நிராகாரமான ஆத்மாக்கள் உண்மை யாகவே ஈஸ்வரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள், ஆத்மாக்கள் அனைவரும் நிராகாரமான உலகத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு சாகார உலகத்தில் வருகின்றனர், நடிப்பதற்காக வரவேண்டியதாக இருக்கின்றது. அங்கிருந்து வந்து தேவதா குலத்தில் 8 பிறவிகள் எடுக்கின்றீர்கள், பிறகு சத்ரிய குலத்தில், வைசிய குலத்தில் வருகின்றீர்கள். நீங்கள் இத்தனை பிறவிகள் தெய்வீக குலத்திலும், பிறகு சத்ரிய குலத்தில் இத்தனை பிறவிகளும் எடுப்பதை தந்தை புரிய வைக்கின்றார். இது 84 பிறவிகளின் சக்கரம் ஆகும். உங்களைத் தவிர இந்த ஞானம் வேறு யாருக்கும் கிடைக்க முடியாது. யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களோ அவர்கள் மட்டுமே இங்கு வருவார்கள். இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சிலர் இராஜா இராணியாகவும், சிலர் பிரஜையாகவும் ஆவார்கள், சூரிய வம்சத்தின் முதலாவது, இரண்டாவது இலட்சுமி, நாராயணர் என்று இவ்வாறு 8 வம்சங்கள் தொடரும், பிறகு சத்திரிய வம்சத்திலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என வம்சங்கள் தொடரும். இவை அனைத்தையும் தந்தை புரிய வைக்கின்றார். ஞானக்கடல் இங்கு வரும்போது பக்தி முடிவடைகின்றது, இரவு முடிந்து பகல் வருகின்றது. அந்த உலகத்தில் எந்தவிதமான அலைக்கழிப்பும் ஏற்படாது, ஓய்வாக இருக்கும், எந்தவிதமான குழப்பங்களும் இருக்காது, இதுவும் நாடகத்தில் பதிவாகி இருக்கின்றது. பக்தி முடியும் நேரத்தில் தந்தை வருகின்றார், அனைவரும் அவசியம் வீடு திரும்ப வேண்டும், பிறகு வரிசைப்படி இறங்கி வருவார்கள். கிறிஸ்து வந்தவுடன் அவருடைய தர்மத்தைச் சேர்ந்தவர்களும் வந்து கொண்டே இருப்பார்கள். இப்பொழுது எவ்வளவு கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என நீங்களே பாருங்கள். கிறிஸ்து கிறிஸ்தவ தர்மத்தின் விதையாக இருக்கின்றார். இந்த தேவி - தேவதா தர்மத்தின் விதையாக பரமபிதா பரமாத்மா சிவன் இருக்கின்றார். உங்களுடைய தர்மத்தை பரமபிதா பரமாத்மா படைக்கின்றார். உங்களை பிராமண தர்மத்தில் கொண்டு வந்தது யார்? தந்தை உங்களை தத்தெடுத்ததன் மூலம் சின்னஞ்சிறிய பிராமண தர்மம் உருவானது. பிராமண தர்மம் மிக உயர்ந்ததாக மகிமை செய்யப்பட்டு இருக்கிறது, அதாவது விராட ரூப சித்திரத்தில் அடையாளமாக குடுமி காட்டப்பட்டிருக்கிறது, பிறகு கீழே பார்த்தால் சரீரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. இவை அனைத்தையும் தந்தை மட்டுமே வந்து புரிய வைக்கின்றார். எந்த தந்தை கல்யாணகாரியாக இருக்கின்றாரோ அவரே பாரதத்திற்கு நன்மை செய்கின்றார். மிகவும் அதிகமான நன்மையை குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே செய்கின்றார், ஆக நீங்கள் இதன் மூலம் எப்படிப்பட்ட நிலையில் இருந்து என்னவாக ஆகின்றீர்கள் என பாருங்கள், அதாவது நீங்கள் அமர லோகத்தில் எஜமானராக ஆகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் காம விகாரத்தின் மீது வெற்றி பெறுகின்றீர்கள், அங்கு திடீர் மரணம் ஏற்படாது, இறந்து போவதற்கான விசயமே கிடையாது. மற்றபடி உடல் என்ற சட்டையை மாற்ற வேண்டுமல்லவா! பாம்பு எவ்வாறு ஒரு சட்டையை கழற்றிவிட்டு இன்னொன்றை எடுப்பதுபோல் அது நடக்கும். இங்கும் கூட நீங்கள் இந்த பழைய உடல் என்ற சட்டையை விட்டு விட்டு புதிய உலகத்தில் புதிய உடலை அடைவீர்கள். சத்யுகமானது மலர் தோட்டம் என அழைக்கப்படுகிறது. அங்கு யாரும் வேண்டாத வார்த்தைகளைப் பேச மாட்டார்கள். இங்கு தீய சகவாசம் இருக்கின்றது, மாயாவுடைய சகவாசம் இருப்பதால் இதன் பெயர் கொடிய நரகம் ஆகும். பழைய இடமாகி விட்டால் முனிசிபாலிட்டியைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை காலி செய்ய வைக்கின்றனர். இந்த உலகம் பழைய நிலையை அடையும் போது நான் வருகின்றேன் என தந்தை கூறுகின்றார். ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கின்றது, இப்பொழுது இராஜயோகம் கற்றுத்தரப்படுகின்றது. பக்தியில் இப்படிப்பட்ட பெரிய விசயங்கள் ஒன்றுமில்லை. அங்கு எந்தளவு தானம், புண்ணியம் செய்கின்றார்களோ அந்தளவு அல்பகாலமாக சுகம் கிடைக்கின்றது. சன்னியாசிகள் இராஜாக்களுக்கும் வைராக்கியத்தை ஏற்படுத்தினார்கள், அதாவது இந்த உலகத்தின் சுகம் காக்கை எச்சத்திற்கு சமம் என கூறினார்கள். இப்பொழுது குழந்தைகள் உங்களுக்கு எல்லையற்ற வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்காக கற்றுத்தரப்படுகின்றது. இந்த உலகம் பழைய உலகம், எனவே சுகமான உலகத்தை நினைவு செய்யுங்கள், பிறகு சாந்திதாமம் சென்று இங்கு மீண்டும் வர வேண்டும். தில்வாடா கோவில் உண்மையாகவே இந்த நேரத்திற்கான நினைவுச் சின்னமாகும். கீழே தபஸ்யாவில் அமர்ந்திருக்கிறார்கள், மேலே சொர்க்கம் காட்டப்பட்டிருக்கிறது, சொர்க்கத்தை அவ்வாறுதான் காட்ட முடியும். மனிதர்கள் இறந்தால் சொர்க்கம் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். சொர்க்கம் மேலே இருப்பதாகப் புரிந்துள்ளனர், ஆனால் மேலே அவ்வாறு சொர்க்கம் இல்லை. பாரதமே சொர்க்கமாகவும் பிறகு நரகமாகவும் ஆகின்றது. இந்த தில்வாடா கோவில் மிகச் சரியான நினைவுச் சின்னம் ஆகும், இந்த கோவில் அனைத்தும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். சொர்க்கத்தில் பக்தி நடைபெறுவதில்லை, அங்கு மிகவும் சுகம் நிறைந்து இருக்கும். இந்த அனைத்து இரகசியங்களையும் தந்தை புரியவைக்கின்றார். அனைவருடைய பெயரும் மாறிவரும், ஆனால் சிவபாபாவின் பெயர் மாறுவதில்லை, ஏனென்றால் அவருக்கென்று சரீரம் ஏதுமில்லை. ஆனாலும் சரீரம் இல்லாமல் எவ்வாறு படிப்பிக்க முடியும்? தூண்டுதல் மூலமாக எந்த விசயமும் ஏற்படுவதில்லை, தூண்டுதல் என்றால் சிந்தனை என்பதாகும். மேலே இருந்து கொண்டு தூண்டுதல் செய்வதன் மூலம் இங்கு வந்து சேரும் என்பதற்கான விசயம் இல்லை. எந்த குழந்தைகள் தந்தையை முழுமையாகப் புரிந்து கொள்ள வில்லையோ, முழு நம்பிக்கை இல்லையோ அவர்களுடைய புத்தியில் நினைவு கூட நிலையாக இருக்க முடியாது. நமக்குக் கற்றுத்தருபவர் யார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் நினைவு யாரை நோக்கி செய்வார்கள்? தந்தையின் நினைவு மூலமாகவே உங்களுடைய பாவங்கள் அழியும். பல பிறவிகளாக லிங்க ரூபத்தில் நினைவு செய்து வந்தனர், இது பரமாத்மாவின் அடையாளச் சின்னம் என புரிந்து வந்தனர். அவர் நிராகாரமாக இருக்கின்றார், சாகார ரூபம் அவருக்குக் கிடையாது. ஆனாலும் நான் இயற்கையை ஆதாரமாக எடுத்தாக வேண்டும் என தந்தை கூறுகின்றார், இல்லையென்றால் உங்களுக்கு உலகத்தின் காலச்சக்கரத்தின் இரகசியத்தை எவ்வாறு புரிய வைக்க முடியும்? இதுதான் ஆன்மீக ஞானம், ஆத்மாக்களுக்குத் தான் இந்த ஞானம் கிடைக் கின்றது, இந்த ஞானத்தை ஒரு தந்தையால் மட்டுமே கொடுக்க முடியும். எல்லா ஆத்மாக்களுக்கும் நடிப்பதற்கான பங்கு கிடைத்திருக்கின்றது, மறுபிறவிகள் எடுத்தாக வேண்டும், பரந்தாமத்திற்கு இடையில் யாரும் செல்ல முடியாது, மோட்சம் யாருக்கும் கிடைக்காது. முதல் நம்பரில் முழு உலகத்திற்கும் எஜமானராக ஆனவரே முதலில் 84 பிறவிகளில் சுற்றி வருகின்றார், காலச்சக்கரத்தில் அவசியம் சுற்றி வர வேண்டும். மோட்சம் கிடைக்கும் என மனிதர்கள் புரிந்துள்ளனர், ஆக எத்தனை வழிமுறைகள் இருக்கின்றன! இந்த உலகம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது, இடையில் யாரும் திரும்பிச் செல்லவில்லை. 84 பிறவிகளின் கதையை தந்தை மட்டுமே கூறுகின்றார். குழந்தைகள் நீங்கள் படித்து பிறருக்குக் கற்பிக்க வேண்டும். இந்த ஆன்மீக ஞானம் உங்களைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது, சூத்திரர்களால், தேவதைகளால் கொடுக்க முடியாது. சத்யுகத்தில் துர்கதி என்பது இல்லை. எனவே ஞானம் கிடைப்பதற்கான அவசியம் இல்லை. சத்கதி அடைவதற்காக இந்த ஞானம் தேவைப்படுகின்றது. சத்கதி கொடுக்கும் வள்ளல், காப்பாற்றுபவர் மற்றும் வழி காட்டியாக இருப்பவர் ஒரு தந்தை மட்டுமே. நினைவு யாத்திரை செய்யாமல் யாராலும் தூய்மையாக முடியாது, பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும், இதனால் பதவியும் தாழ்ந்துவிடும், அனைவருடைய கணக்கு, வழக்குகளும் முடியவேண்டுமல்லவா! உங்களுக்கு உங்களை பற்றிய விசயங்களை மட்டும் புரியவைக்கப்படுகிறது, மற்ற தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவசியம் இல்லை. இந்த ஞானம் பாரதவாசிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றது. பாரத தேசத்தில் தந்தை வந்து மூன்று தர்மங்களைப் படைக்கின்றார். இப்பொழுது உங்களை சூத்திர தர்மத்தில் இருந்து வெளியேற்றி உயர்ந்த குலத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அதுதான் மிகவும் பதீதமான குலமாகும், இப்பொழுது பாவனமாக்குவதற்காக நீங்கள் பிராமணர்கள் நிமித்தமாக ஆகியிருக்கின்றீர்கள். இதனை ருத்ரஞான யாகம் என கூறப்படுகின்றது. சிவபாபா ருத்ரன் மூலமாக இந்த யாகம் படைக்கப்பட்டது, இந்த எல்லையற்ற யாகத்தில் முழு பழைய உலகமும் அர்ப்பணம் ஆக வேண்டும், பிறகு புது உலகம் படைக்கப்படும். பழைய உலகம் முடிந்துவிடும். நீங்கள் புதிய உலகிற்காக இந்த ஞானத்தை அடைகின்றீர்கள். தேவதைகளின் நிழல் கூட இந்த பழைய உலகத்தில் ஏற்படாது. கல்பத்திற்கு முன்பாக யார் இங்கு வந்தார்களோ அவர்களே மீண்டும் இங்கு வந்து ஞானத்தை அடைவார்கள் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். வரிசைப்படி முயற்சியின் ஆதாரத்தில் படிப்பார்கள். மனிதர்கள் இந்த உலகத்தில் அமைதியை விரும்புகின்றனர், ஆத்மாவானது சாந்திதாமத்தில் வசிக்கக்கூடியது. மற்றபடி இந்த உலகத்தில் அமைதி எவ்வாறு ஏற்படமுடியும்? இந்த நேரம் ஒவ்வொரு வீட்டிலும் அசாந்தி! இராவண இராஜ்யம் அல்லவா! சத்யுகத்தில் முற்றிலும் அமைதியான இராஜ்யம் நடைபெறும், அங்கு ஒரு தர்மம், ஒரு மொழி மட்டுமே இருக்கும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த பழைய உலகத்தில் இருந்து எல்லையற்ற வைராக்கியம் உடையவராகி, தனது சரீரத்தையும் மறந்து சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். நிச்சயபுத்தி உடையவராகி நினைவு யாத்திரை செய்ய வேண்டும்.

2. நாமே அதுவாக ஆகின்றோம் என்ற மந்திரத்தின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இப்பொழுது பிராமணரிலிருந்து தேவதையாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும், அனைவருக்கும் இதனுடைய சரியான அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டும்.

 

வரதானம்:

மூன்று சேவைகளின் சமநிலையின் மூலம் அனைத்து குணங்களின் அனுபவம் செய்யக் கூடிய குணமூர்த்தி ஆகுக.

 

எந்த குழந்தைகள் சங்கல்பம், வார்த்தை மற்றும் ஒவ்வொரு காரியத்தின் மூலம் சேவை செய்வதற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களே வெற்றி மூர்த்திகளாக ஆகின்றனர். மூன்றிலும் மதிப்பெண்கள் சமமாக இருக்கிறது. முழு நாளும் மூன்று சேவைகளிலும் சமநிலையுடன் இருந்தால் நேர்மையுடன் தேர்ச்சி அல்லது குணமூர்த்திகளாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் மூலம் தெய்வீக குணங்களின் அலங்காரம் தெளிவாகத் தென்படும். ஒருவருக்கொருவர் தந்தையின் குணங்கள் அல்லது தனது தாரணையின் குணங்களின் உதவி செய்வது தான் குணமூர்த்தி ஆவதாகும். ஏனெனில் குண தானம் தான் அனைத்தையும் விட மிக உயர்ந்த தானமாகும்.

 

சுலோகன்:

நிச்சயம் என்ற அஸ்திவாரம் உறுதியானதாக இருந்தால் சிரேஷ்ட வாழ்க்கையின் அனுபவம் தானாகவே ஏற்படும்.

 

ஓம்சாந்தி