03-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பாபாவின் நினைவில் இருப்பதற்கு சைகையால் உணர்த்தி, எச்சரிக்கை செய்து கொண்டே முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருங்கள்.

கேள்வி:

பாபாவிற்கு சமமாக ஞானம் நிறைந்தவராக ஆகக் கூடிய குழந்தைகளின் வாழ்கையின் முக்கிய தாரணைகளைச் சொல்லுங்கள்.

பதில்:

அவர்கள் சதா புன்சிரிப்போடு இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு போதும் எந்த ஒரு விசயத் திலும் அழுகை வராது. எது நடந்தாலும் எதுவுமே புதிதல்ல என்பது தெரியும். அது போல் இப்போது யார் ஞானம் நிறைந்தவராக, அதாவது அழுகையற்றவராக ஆகிறார்களோ, ஒருபோதும் எந்த ஒரு விசயத்திலும் அமைதி யற்றவராக ஆவதில்லையோ, அவர்களுக்குத் தான் சொர்க்கத் தின் இராஜ்ய பதவி கிடைக்கும். யார் அழுதார்களோ, அவர்கள் இழந்தார்கள். அழுபவர்கள் தங்களின் பதவியை இழக்கிறார்கள்.

பாடல்:
உங்களை அடைந்ததால் உலகத்தை அடைந்தோம்........

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தாங்களே பாடிய பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளுக்குத் தெரியும், நாம் எல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்துள்ளோம். அதனால் குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, உங்களிடமிருந்து பெற்றிருந்த உலகத்தின் இராஜ பதவியை இப்போது மீண்டும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். சத்யுகத்தில் இது போல் மகிமை பாட மாட்டார்கள். நீங்கள் இதை சங்கமயுகத்தில் தான் பாட முடியும். நீங்கள் அறிவீர்கள், நாம் வீட்டில் அமர்ந்தவாறே அல்லது வேலை செய்து கொண்டே எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை மீண்டும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். சென்டர்களிலும் கூட படிப்பினை கிடைக் கிறது, அதாவது தந்தையை நினைவு செய்யுங்கள், மேலும் நாம் உலகத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். புதிய விசயம் எதுவும் கிடையாது. நாம் கல்ப-கல்பமாக உலகத்தின் இராஜ பதவியை அடைகிறோம். புதிதாக யாராவது கேட்பார்களானால் இவர்கள் இவரை (பிரம்மா) சிவபாபா எனச் சொல்கின்றனர் என்று புரிந்து கொள்வார்கள். இப்போது அவர் நிராகார் ஆத்மாக்களின் தந்தை. ஆத்மா நிராகார் என்றால் பரமாத்மா தந்தையும் நிராகார் ஆக இருக்கின்றார். சாகார உருவம் எடுக்காத வரை ஆத்மாவை நிராகார் எனச் சொல்வார்கள். ஆக, குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டனர், நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆன்மிக ஆசிரியர் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார், ஒருவர் மற்றவருக்கு எச்சரிக்கை கொடுக்கின்றார். முதலில் இந்த ஆன்மிக எச்சரிக்கை கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையின் நினைவில் அனைவரும் இருக்கின்றனர். மேலும் சமிக்ஞை தருகின்றனர்-தந்தையின் நினைவில் இருங்கள், வேறெங்கும் புத்தி செல்லக் கூடாது.. அதனால் சொல்லப்படுகிறது-ஆத்ம அபிமானி ஆகுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் பதீத-பாவனராகிய தந்தை. இப்போது அவர், என்னை நினைவு செய்யுங்கள் என்று நமக்கு முன்பாக அமர்ந்து சொல்கிறார். எவ்வளவு சகஜமான யுக்தி - மன்மனாபவ என்ற சொல்லும் உள்ளது. ஆனால் அதை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா! நினைவு யாத்திரையைக் கற்றுத் தருபவர் ஒரு தந்தை மட்டுமே. நாம் ஆன்மிக யாத்திரையில் இருக் கிறோம் என்பதைக் குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள். அது சரீர சம்மந்தமான யாத்திரை. இப்போது நாம் உலகாயத யாத்திரிகர்கள் அல்ல. நாம் ஆன்மிக யாத்திரிகர்கள். இந்த நினைவினால் தான் விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் விகர்மாஜீத் ஆகி விடுவீர்கள். விகர்மாஜீத் ஆவதற்கு வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது. ஒன்று விகர்மாஜீத் சகாப்தம். இன்னொன்று விகர்ம சகாப்தம். பிறகு விகர்மங்கள் ஆரம்பமாகின்றன. இராவண இராஜ்யம் தொடங்கியது என்றால் விகாரங்கள் ஆரம்பமாகி விட்டன. இப்போது விகர்மாஜீத் ஆவதற்கான புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அங்கு எந்த ஒரு விகர்மமும் ஏற்படுவ தில்லை. அங்கு இராவணன் கிடையாது. உலகத்தில் இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் பாபா மூலமாக அனைத்தும் அறிந்து கொண்டு விட்டீர்கள். தந்தை ஞானம் நிறைந்தவர் எனச் சொல்லப்படு கின்றார். ஆகவே குழந்தைகளுக்கு ஞானம் கொடுப்பார் இல்லையா? காட் ஃபாதருக்குப் பெயரும் கூட இருக்க வேண்டும். பெயர்-வடிவத்திலிருந்து அவர் விடுபட்டவர் அல்ல. தந்தையை பூஜை செய்கின்றனர். அவர் பெயர் சிவன். அவர் பதீத-பாவனர், ஞானக்கடல். அந்தப் பரமபிதா பரமாத்மாவை ஆத்மா நினைவு செய்கிறது. ஆத்மா தந்தையை மகிமை செய்கிறது. அவர் சுகம்-சாந்தியின் கடல். தந்தை குழந்தை களுக்கு நிச்சயமாக ஆஸ்தியை தருவார். யார் இருந்து சென்றுள்ளனரோ, அவர்களுக்கு நினைவுச் சின்னம் உருவாக்குகின்றனர். ஒரு சிவபாபா விற்கு மட்டும் மகிமையும் பாடப் படுகிறது, பூஜையும் நடைபெறுகின்றது. நிச்சயமாக அவர் சரீரத்தின் மூலம் காரியம் செய்கிறார். அதனால் தான் அவருக்கு மகிமை உள்ளது. அவர் சதா தூய்மையாக இருக்கிறார். தந்தை ஒரு போதும் பூஜாரி ஆவதில்லை. அவர் எப்போதுமே பூஜைக்குரியவராக உள்ளார். பாபா சொல்கிறார், நான் ஒரு போதும் பூஜாரி ஆவதில்லை. நான் பூஜிக்கப்படுகிறேன். பூஜாரிகள் எனக்குப் பூஜை செய்கின்றனர். சத்யுகத்திலோ நீங்கள் எனக்குப் பூஜை செய்வதில்லை. பக்தி மார்க்கத்தில் பதீத-பாவனர் தந்தையாகிய என்னை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். முதன்-முதலில் கலப்படமற்ற பக்தி அந்த ஒருவருக்கு மட்டுமே நடைபெறுகின்றது. அதன் பிறகு கலப்படமான (பலரை வழிபடுவது) பக்தியாக ஆகி விடுகின்றது. பிரம்மா-சரஸ்வதியை சிவபாபா உலகத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். பக்தியின் விஸ்தாரம் எவ்வளவு உள்ளது! விதைக்கு விரிவான விளக்கம் எதுவும் கிடையாது.

பாபா சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். போதும். எப்படி மரம் விரிவடைந்து உள்ளது. அது போல் பக்திக்கும் அதிக விரிவாக்கம் உள்ளது. ஞானம் என்பது விதை. எப்போது உங்களுக்கு ஞானம் கிடைக் கிறதோ, அப்போது நீங்கள் சத்கதியை அடைகிறீர்கள். நீங்கள் ஒன்றும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி இருக்காது. ஞானம் மற்றும் பக்தி உள்ளது. சத்யுக-திரேதாவில் பக்தியின் மரம் இருப்பதில்லை. அரைக்கல்பம் இந்த பக்தியின் மரம் இருக்கின்றது. அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரவர் பழக்க-வழக்கங்கள் உள்ளன. பக்தியோ எவ்வளவு பெரியது! ஞானமோ அனைவருக்கும் ஒன்று தான்-மன்மனாபவ என்பது மட்டும் தான். அல்லாவை (தந்தையை) நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வீர்களானால் ஆஸ்தி கண்டிப்பாக நினைவு வரும். ஆஸ்தி என்பதின் விரிவாக்கம் கிடைத்து விடுகின்றது இல்லையா? அது எல்லைக்குட் பட்ட ஆஸ்தி ஆகின்றது. இங்கே உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தி நினைவில் வருகின்றது. எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற ஆஸ்தியை பாரதவாசிகளுக்குக் கொடுக்கிறார். அவருடைய பிறவியும் இங்கே தான் பாடப்படுகின்றது. இது இந்த டிராமாவில் ஆதி, அந்தம் இல்லாது நிரந்தரமாக பதிவாகி யுள்ளது. எப்படி பகவான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக உள்ளார், அது போல் பாரத கண்டமும் உயர்ந்ததிலும் உயர்ந்ததாகும். இங்கே பாபா வந்து முழு உலகத்திற்கும் சத்கதி அளிக்கிறார். ஆக, அனைத்திலும் பெரிய தீர்த்த ஸ்தலம் ஆகிறது அல்லவா? ஹே காட் ஃபாதர், எங்களை வீட்டிற்கு சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லவும் செய்கின்றனர். பாரதத்தின் மீது அனைவருக்கும் அன்பு உள்ளது. பாபாவும் பாரதத்தில் தான் வருகிறார். இப்போது நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபி வல்லபரின் கோப-கோபியர் நீங்கள். சத்யுகத்தில் கோப-கோபியரின் விசயம் இருப்பதில்லை. அங்கோ விதிமுறைப்படி இராஜ்யம் நடைபெறுகின்றது. சரித்திரம் கிருஷ்ணருக்குக் கிடையாது. சரித்திரம் ஒரு தந்தைக்கு மட்டுமே! அவருடைய சரித்திரம் எவ்வளவு பெரியது! தூய்மை இழந்த படைப்பு முழுவதையும் தூய்மை யாக்குகிறார். இது எவ்வளவு பெரிய திறமை! இச்சமயம் மனிதர்கள் அனைவரும் அஜாமில் போன்ற பாவிகளாக உள்ளனர். மனிதர்கள் நினைக்கின்றனர், இந்த சாதுக்கள் முதலானவர்கள் மிக உயர்ந்தவர்கள். பாபா சொல்கிறார், இவர்களுக்கும் நான் தான் விமோசனம் அளிக்க வேண்டும். எப்படி நீங்கள் நடிகர்களாக இருக்கிறீர்களோ, அது போல் நானும் நடிகர் தான் அல்லவா? நீங்கள் 84 பிறவிகள் எடுத்து பாகத்தை நடிக்கிறீர்கள். பாபா படைப்பவர், இயக்குபவர், முக்கிய நடிகராக உள்ளார். செய்பவர்-செய்விப்பவர் அல்லவா? என்ன செய்கிறார்? தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குகிறார். பாபா சொல்கிறார்-நீங்கள் என்னை அழைக்கிறீர்கள், நீங்கள் வந்து எங்களை தூய்மை யானவர்களாக ஆக்குங்கள். நானும் இந்த நடிப்பின் பாகத்தில் கட்டுப் பட்டிருக் கிறேன். இது போல் யாராலும் சொல்ல முடியாது. இது ஏன் உருவாக்கப்பட்டது? எப்போது உருவாக்கப்பட்டது? இது ஆரம்பமும் முடிவும் இல்லாமல் உருவாக்கப்பட்ட டிராமாவாகும். இதற்கு முதல்-இடை-கடை என்பது கிடையாது. பிரளயம் ஏற்படுவதில்லை. ஆத்மா அழியாதது. அது ஒரு போதும் அழிவதில்லை. நடிப்பின் பாகமும் அழியாத தாகக் கிடைத்துள்ளது. இது எல்லையற்ற டிராமா அல்லவா? சுருக்கமாக பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். இந்த டிராமாவின் பங்கும் எப்படி நடைபெறுகின்றது? மற்றப்படி பரமாத்மா என்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. இந்தக் குருட்டு நம்பிக்கையின், மாயாஜால வித்தையின் விசயங்கள் இங்கே கிடையாது. என்னை ஹே பதீத-பாவனரே வாருங்கள்! நீங்கள் வந்து எங்களை தூய்மை யாக்குங்கள் என்று அழைக்கின்றனர். ஆகவே நிச்சயமாக அவர் வருகிறார். கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக உள்ளது. பகவான் தான் கீதையைச் சொல்லியிருக்கிறார். நல்லது, சகஜ இராஜ யோகத்தை எப்போது கற்பித்தார்? இதையும் நீங்கள் அறிவீர்கள். பாபா வருவது கல்பத்தின் சங்கமயுகத்தில் தான். இச்சமயம் வந்து தூய்மையான உலகை புதிய ராஜதானியை ஸ்தாபனை செய்கிறார். சத்யுகத்தில் ஸ்தாபனை செய்ய மாட்டார். அங்கு தூய்மையான உலகம் இருக்கும். கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் கும்பமேளா நடைபெறுகின்றது. அந்தக் கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்றது. இந்தப் பெரிய கும்பமேளா 5 ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகு நடைபெறுகின்றது. இது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் மேளா ஆகும். இதில் பரமபிதா பரமாத்மா வந்து அனைத்து ஆத்மாக்களையும் தூய்மை யாக்கி அழைத்துச் செல்கிறார். கல்பத்தின் ஆயுளை மிக நீண்டதாக ஆக்கியதால் தான் மனிதர்கள் குழம்பிப் போயுள்ளனர். இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். உங்களுடைய பத்திரிகைகள் வெளிவருகின்றன. அதையும் குழந்தைகள் நீங்களே புரிந்து கொள்ள முடியும். வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது. பாபா சொல்லியிருக்கிறார் - எழுதி வையுங்கள்-எது நடந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு போலவே நடைபெறுகின்றது, எதுவும் புதிதல்ல. எது 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதோ, அது தான் இப்போது ரிப்பீட் ஆகிறது. யாராவது இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் வந்து புரிந்து கொள்ளுங்கள். இப்படி-இப்படி யுக்திகளை உருவாக்க வேண்டும். நாம் செய்தித் தாள்களில் என்ன போடலாம்? இதையும் நீங்கள் எழுத முடியும் - இந்த மகாபாரத யுத்தம் எப்படி தூய்மையான உலகத்தின் (சொர்க்கத்தின்) கதவை திறக்கிறது? கல்பத்திற்கு முன்பு போல வந்து புரிந்து கொள்ளுங்கள். இப்போது மகாபாரத யுத்தத்தின் மூலம் சத்யுகத்தின் ஸ்தாபனை எப்படி நடைபெறு கிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். தேவி- தேவதைகளின் ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. காட் ஃபாதரிடம் இருந்து பிறப்புரிமையைப் பெற வேண்டுமானால் வந்து பெற்றுக் கொள்ளுங்கள். இப்படி-இப்படி விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். அந்த மனிதர்கள் கதைகள் முதலியவற்றை உருவாக்குகின்றனர். அதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி பாகத்தை அவர்கள் நடிக்கின்றனர். வியாசரும் டிராமாவின் திட்டப்படி சாஸ்திரங்கள் முதலிய வற்றை உருவாக்கியுள்ளார். அவரது பாகமே அது போல் கிடைத்துள்ளது. இப்போது நீங்கள் டிராமாவைப் புரிந்து கொண்டு விட்டீர்கள். பிறகு அதே டிராமா மீண்டும் நடக்கும். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள். மீண்டும் ஞானத்தைக் கேட்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், மீண்டும் இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருக்கும். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்து போகும். இப்போது நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா உங்களைத் தமக்கு சமமாக ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். நீங்கள் அரைக் கல்பத்திற்கு அமைதி நிறைந்தவர் களாக இருப்பீர்கள். எந்த விதமான அசாந்தியும் அங்கே இருக்காது. அங்கே குழந்தைகள் முதலானோர் ஒரு போதும் அழுவதில்லை. சதா புன்சிரிப் புடன் இருப்பார்கள். இங்கேயும் நீங்கள் அழக் கூடாது. பாடலும் உள்ளது, அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிட வேண்டும்.......... யார் அழுகிறார்களோ, அவர்கள் இழக்கிறார்கள். பதவியும் தாழ்ந்ததாக ஆகி விடும். உங்களுக்குப் பதிகளுக்கெல்லாம் மேலான பதி கிடைத்துள்ளார். அவர் சொர்க்கத்தின் இராஜ பதவியைத் தருகிறார். அவர் ஒரு போதும் இறப்பதே இல்லை. பிறகு அழுவதற்கு என்ன அவசியம்? யார் அழாமல் இருக்கின்றார்களோ, அவர்கள் இராஜ பதவி பெறுகிறார்கள். மற்றவர்கள் பிரஜைகளில் சென்று விடுவார்கள். இந்த நிலையில் நாங்கள் என்ன ஆவோம் என்று பாபாவிடம் யாராவது கேட்பார்களானால் பாபா சொல்வார். குழந்தைகளுக்கு கடைசியில் எல்லாம் சாட்சாத்காரமாகக் கிடைக்கும். எப்படி பாடசாலைகளில் அனைவருக்கும் முடிவு தெரிந்து விடுகிறது இல்லையா? ருத்ர மாலை எத்தகையதாக உருவாகின்றது? அது கடைசியில் உங்களுக்குத் தெரிய வரும். எப்போது கடைசி நாட்கள் வருமோ, அப்போது அதிகப் புருஷார்த்தம் செய்கின்றனர். நாம் இன்ன பாடத்தில் ஃபெயிலாகி விடுவோம். உங்களுக்கும் கூடத் தெரிய வரும். அநேகர் சொல்கின்றனர், எங்களுக்குக் குழந்தைகள் மீது மோகம் உள்ளது. இதிலிருந்து விடுபட வேண்டும். ஒருவர் மீது தான் மோகம் வைக்க வேண்டும். மற்றப்படி டிரஸ்டி ஆகிப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு கூறுகின்றனர் -இவை அனைத்தையும் பாபா தந்துள்ளார் என்றால் பிறகு டிரஸ்டி ஆகி நடந்து கொள்ளுங்கள். மோகத்தை விட்டு விடுங்கள். பாபா தாமே வந்து சொல்கிறார், இவற்றின் மீது வைத்த மோகத்தை அகற்றி விடுங்கள். இவை அனைத்தும் அவருடையவை எனப் புரிந்து கொள்ளுங்கள். அவருடைய வழிமுறைப் படி செல்லுங்கள். அவருடைய காரியத்தில் ஈடுபட்டிருங் கள். அழிவற்ற ஞான ரத்தினங்களை தானமாகக் கொடுத்துக் கொண்டே இருங்கள். இங்கே கன்யாக்கள் மீது பாபாவிற்கு அனைவரைக் காட்டிலும் அதிக மதிப்பு உள்ளது. கன்யாக்கள் கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக உள்ளனர். ஆண் குழந்தைகளுக்கோ லௌகிக் தந்தையின் ஆஸ்தி யினுடைய நஷா இருக்கும். கன்யாக்கள் லௌகிக் தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதில்லை. இங்கே இந்தத் தந்தையிடம் ஆண்-பெண் என்ற பாகுபாடு கிடையாது. பாபா ஆத்மாக்களுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் அறிவீர்கள், நாம் அனைவரும் சகோதரர்கள், தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டி ருக்கிறோம். ஆத்மா படிக்கின்றது, தந்தை யிடமிருந்து ஆஸ்தி பெறுகின்றது. எவ்வளவு அதிகமாக ஆஸ்தி பெறுகின்றனரோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவார்கள். பாபா வந்து அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். சிவபாபா நிராகார், அவருக்குப் பூஜையும் செய்கின்றனர். சோமநாதர் ஆலயம் உருவாக்கப் பட்டுள்ளது. இதை இப்போது நீங்கள் அறிவீர்கள்-சிவபாபா வந்து என்ன செய்தார். ஏன் அவருக்கு நினைவுச் சின்னமாகக் கோவில் எழுப்பப் பட்டுள்ளது? இதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கல்ப-கல்பமாக இவ்வாறே நடைபெறும். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது, அது தான் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. பாபா இங்கு வர வேண்டி உள்ளது. பழைய உலகம் விநாசமாக வேண்டும். இது ஒன்றும் வருத்தத்திற்கான விசயம் கிடையாது. இது ரத்த ஆறு ஓடக்கூடிய ஒரு விளையாட் டாகும். வீணாக அனைவரும் கொல்லப்படுவார்கள். இல்லையென்றால் யாராவது ஒருவரைக் கொல்வாரானால் அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்து விடும். இப்போது யாரைப் பிடிப்பது? இயற்கைச் சேதங்கள் ரூபத்தில் வரும். விநாசம் நடைபெறவே செய்யும். அமரலோகம் மற்றும் மரண உலகத்தின் அர்த்தத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், இன்று நாம் மரண உலகத்தில் உள்ளோம். நாளை நாம் அமர லோகத்தில் இருப்போம். அதற்காக நாம் படிக்கிறோம். மனிதர்களோ பயங்கர இருளில் உள்ளனர். நீங்கள் ஞான அமிர்தத்தை அருந்தச் செய்கிறீர்கள். அவர்கள் ஆம், ஆம் என்று சொல்லிப் பிறகு தூக்கத்தில் உறங்கி விடுகின்றனர். எல்லையற்ற தந்தை ஆஸ்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றனர். இது அதே மகாபாரத யுத்தம். இதில் சொர்க்கத்தின் கதவு திறக்கின்றது. இவ்வாறு எழுதுகின்றனர், மிக நன்று, இந்த ஞானத்தை யாராலும் தர முடியாது. நாங்கள் மதிக்கிறோம். அவ்வளவு தான். அவர்கள் தாங்களாக எந்த ஒரு ஞானத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. பிறகு தூங்கிப் போகின்றனர். இவர்கள் கும்பகர்ணர்கள் எனப் படுகின்றனர். நீங்கள் சொல்ல முடியும், எழுதி கொடுக்கிறீர்கள், பிறகு வீட்டிற்கு சென்று தூங்கி விட்டீர்கள் என இருக்கக் கூடாது. கும்பகர்ணனின் சித்திரத்திற்கு முன்பு அழைத்து செல்ல வேண்டும். இதை போல் தூங்கி விடாதீர்கள். இதை புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி வேண்டும்.

பாபா சொல்கிறார், தங்களின் கடைகளிலும் மிக முக்கியமான சித்திரங்களை வையுங்கள். யாராவது வந்தால் அதை பற்றி சொல்லி புரிய வையுங்கள். அந்த வியாபாரத்தையும் செய்வியுங் கள். இதுவும் கூட உண்மையான வியாபாரம். இதன் மூலம் நீங்கள் அநேகருக்கு நன்மை செய்ய முடியும். இதில் வெட்கப்படுவதற்கான விசயம் கிடையாது. பி.கே ஆகியிருக் கிறீர்கள் என்று சிலர் சொல்கின்றனர். அவர்களுக்குச் சொல்லுங்கள், அட, பிரஜாபிதா பிரம்மாகுமார்-குமாரிகள் நீங்களும் தான். பாபா புதிய படைப்பைப் படைத்துக் கொண்டி ருக்கிறார். பழையதை நெருப்புப் பற்றிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எது வரை பி.கே. ஆக வில்லையோ, அது வரை சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இப்படி-இப்படி கடைகளில் போய் சேவை செய்வீர்களானால் எவ்வளவு எல்லையற்ற சேவை ஆகி விடும். உங்களுக்குள் ஆலோசனை செய்யுங்கள். கடை சிறிய தென்றாலும் கூட சுவர்களின் மீது சித்திரங்களைத் தொங்கவிட முடியும். தானம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். முதல்-முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பாபா சொல்கிறார் - இப்போது எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. மனிதர்களோ, பாவம், குழம்பிப் போய்யுள்ளனர். அவர்களுக்கு சொல்ல வேண்டும் - தெய்விக உலகின் இராஜ பதவி பெற வேண்டும் என்றால் வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒரு தந்தையிடம் மட்டும் தூய்மையான, உண்மையான பற்று வைக்க வேண்டும். அவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். தேகதாரியிடம் வைத்த பற்றை நீக்கிவிட வேண்டும்.

2) விகர்மாஜீத் (விகர்மங்களை வென்றவர்) ஆக வேண்டும். அதனால் கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒரு விகர்மமும் ஏற்படக்கூடாது. இதில் மிக-மிக கவனம் வைக்க வேண்டும்.

வரதானம்:

சாட்சி நிலை என்ற இருக்கையின் மூலம் குழப்பம் என்ற வார்த்தையை அழிக்கக் கூடிய மாஸ்டர் திரிகாலதர்சி ஆகுக.

இந்த நாடகத்தில் எதுவெல்லாம் நடக்கிறதோ, அதில் நன்மை நிறைந்திருக்கிறது. ஏன்? எதற்கு? என்ற கேள்வி புத்திசாலிக்குள் வரவே முடியாது. நஷ்டத்திலும் நன்மை நிறைந்திருக்கிறது. தந்தையின் துணை மற்றும் கை (ஸ்ரீமத்) இருக்கும் போது தீங்கு ஏற்படவே முடியாது. இப்படிப் பட்ட கௌரமான இருக்கையில் இருந்தீர்கள் எனில் ஒருபோதும் குழப்பமடைய மாட்டீர்கள். சாட்சி நிலை என்ற இருக்கை குழப்பம் என்ற சப்தத்தை அழித்து விடும். ஆகையால் திரிகாலதர்சி ஆகி குழப்பமடைய மாட்டேன், குழப்பம் அடையச் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி செய்யுங்கள்.

சுலோகன்:

தனது அனைத்துக் கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி நடத்துவது தான் சுயராஜ்ய அதிகாரி ஆவதாகும்.