03.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆத்மா என்ற பேட்டரி 84 கார்களில் சென்றதால் டல்லாகி (களைப்பு) விட்டது. இப்போது நினைவு யாத்திரையின் மூலம் நிரப்புங்கள்.

 

கேள்வி :

பாபா எந்த குழந்தைகளை மிக மிக பாக்கியசாலி என நினைக்கிறார்?

 

பதில் :

யார் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் பந்தனம் இல்லாமல் இருக்கிறார்களோ அப்படிப்பட்ட குழந்தைகளை பாபா நீங்கள் மிகப்பெரிய பாக்கியசாலி என்று கூறுகிறார். நீங்கள் நினைவு யாத்திரையில் இருந்து உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஒரு வேளை யோகா இல்லாமல் ஞானம் மட்டும் சொல்கிறீர்கள் என்றால் அம்பு சென்று தைக்காது. எவ்வளவு தான் பகட்டாக தனது அனுபவத்தை கூறினாலும் தனக்குள் தாரணை இல்லை என்றால் மனம் அரித்துக் கொண்டே இருக்கும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? சிவபாபா. அவரே தான் பகவான். எல்லையற்ற தந்தை. மனிதர்களுக்கு ஒரு போதும் எல்லையற்ற தந்தை மற்றும் ஈஸ்வர் அல்லது பகவான் என்று கூற முடியாது. பல பேருக்கு சிவன் என்ற பெயர் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் தேகத்தை உடையவர்கள். ஆகவே அவர் களை பகவான் என்று கூற முடியாது. இந்த தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நான் யாருக்குள் பிரவேசம் ஆகிறேனோ அவருடையது கடைசி பிறவி ஆகும். நீங்கள் இவரை பகவான் என்று ஏன் கூறுகிறீர்கள் என குழந்தைகளாகிய உங்களிடம் பலர் உங்களைக் கேட்கிறார்கள். எந்த ஒரு ஸ்தூல மற்றும் சூட்சும தேகத்தை உடையவர்களை பகவான் என கூற முடியாது என பாபா முதலிலிருந்து புரிய வைக்கின்றார். சூட்சும தேகத்தை உடையவர்கள் சூட்சும உலகத்தினைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு தேவதை என்று கூற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தான் பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்தது அவரது பெயர், அவர் இருக்கும் இடமும் உயர்ந்ததாகும். பாபா அனைத்து ஆத்மாக்களுடன் அங்கே வசிக்கிறார். அவர் இருக்கும் இடம் உயர்ந்ததாகும். உண்மையில் அமரக் கூடிய இடம் எதுவும் இல்லை. நட்சத்திரம் எங்காவது அமர்ந்திருக்குமா? நிற்கிறது அல்லவா? ஆத்மாக் களாகிய நீங்களும் உங்களின் சக்தியினால் அங்கே நிற்கிறீர்கள். அங்கே சென்று நிற்கும் அளவிற்கு சக்தி கிடைக்கிறது. பாபாவின் பெயரே சர்வ சக்திவான் அவரிடமிருந்து சக்தி கிடைக்கிறது. ஆத்மா அவரை நினைக்கிறது. பேட்டரி சார்ஜ் ஆகிறது. காரில் பேட்டரி இருக்கிறது. அதனுடைய சக்தியினால் கார் இயங்குகிறது. பேட்டரியில் மின்சாரம் நிரம்பி இருக்கிறது. பிறகு போகப்போக காலி ஆகிவிடுகிறது. மீண்டும் பேட்டரியை மெயின் பவருடன் சார்ஜ் செய்து காரில் போடுகிறார்கள். அது எல்லைக்குட்பட்ட விஷயம் ஆகும். இது எல்லைக்கப்பாற்பட்ட விஷயம் ஆகும். உங்களுடைய பேட்டரியோ 5000 வருடம் செல்கிறது. செல்ல செல்ல மந்தமாகி விடுகிறது. ஒரேயடியாக காலியாகவில்லை. கொஞ்சம் இருக்கிறது என தெரிகிறது. டார்ச்சில் கூட டிம்மாகி விடுகிறது. ஆத்மா இந்த உடலில் பேட்டரி ஆகும். இதுவும் டல்லாகி விடுகிறது. பேட்டரி இந்த உடலில் இருந்து விடுபட்டு இரண்டாவது, மூன்றாவது காரில் கூட செல்கிறது. 84 கார்களில் அது போடப்படுகிறது என்றால் நீங்கள் எவ்வளவு மந்தமான கல்புத்தி உடையவர் ஆகிவிட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார். இப்போது மீண்டும் உங்களுடைய பேட்டரியை நிரப்புங்கள். பாபாவின் நினைவைத் தவிர ஆத்மா ஒரு போதும் தூய்மை ஆக முடியாது. சர்வ சக்திவான் பாபா ஒரேயொருவர் தான். அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். நான் யார், எப்படி இருக்கிறேன் என பாபாவே அவருடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார். உங்களுடைய ஆத்மாவின் பேட்டரி எப்படி டல்லாகியுள்ளது. இப்போது என்னை நினைத்தால் பேட்டரி சதோபிரதானமாக முதல் தரமாகி விடும் என்று ஆலோசனை கொடுக்கிறேன். தூய்மை யாவதால் ஆத்மா 24 கேரட் ஆகிறது. இப்போது நீங்கள் கலப்படம் ஆகிவிட்டீர்கள். முற்றிலும் சக்தி அழிந்து விட்டது. அந்த அழகு இல்லை. குழந்தைகளே, முக்கியமான விஷயம் யோகத்தில் இருங்கள், தூய்மையாகுங்கள் என இப்போது குழந்தைகளுக்கு பாபா புரிய வைக்கின்றார். இல்லை என்றால் பேட்டரி நிறையாது, தொடர்பு ஏற்படாது. வெறும் ஞானி பலர் இருக்கின்றனர், ஞானம் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த நிலை இல்லை. இங்கே மிகவும் பகட்டாக அனுபவத்தை கூறுகிறார்கள். உள்ளுக்குள் அரித்துக் கொண்டி ருக்கிறது. ஞான வர்ணனை செய்யக் கூடிய அளவிற்கு அவர்களது நிலை இல்லை. அனேக யோகி ஆத்மா குழந்தைகளும் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளின் மகிமை நிறைய செய்கிறார். குழந்தைகளே ! நீங்கள் மிக மிக பாக்கியசாலி என்று பாபா கூறுகிறார். உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள் இல்லை. யாருக்கு குழந்தைகள் அதிகமாக இருக்கிறார் களோ அவர்களுக்கு பந்தனம் இருக்கிறது. பாபாவிற்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார் கள். அனைவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்பாவையும் நினைக்க வேண்டும். பிரியதர்ஷனின் நினைவு நன்கு உறுதியாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வளவு பாபாவை நினைத்தீர்கள். ஏ, பகவான் பூஜை கூட முதன் முதலில் அவருக்குத் தான் செய்தீர்கள். முதலில் நிராகார பகவானை தான் பூஜித்தீர்கள். அச்சமயம் ஆத்ம உணர்வில் இருக்கவில்லை. ஆத்மா உணர்வில் இருப்பவர்கள் பூஜை செய்ய மாட்டார்கள். முதன் முதலில் பக்தி ஆரம்பம் ஆகும் போது ஒரு பாபாவின் பூஜை செய்கிறார்கள் என பாபா புரிய வைக்கின்றார். ஒரே ஒரு சிவனின் பூஜை செய்கிறார்கள். ராஜா ராணி எப்படியோ அவ்வாறே பிரஜைகளும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பாபா அவரைத்தான் நினைக்க வேண்டும். மற்றவர்கள் யாரெல்லாம் கீழே இருக்கிறார் களோ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் போன்றவரை நினைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையைத் தான் நினைக்க வேண்டும். ஆனால் நாடகத்தின் பாகம் கீழே இறங்கு வதற்காகவே இருக்கிறது. நீங்கள் கீழே எப்படி இறங்குகிறீர்கள் என பாபா புரிய வைக்கிறார். ஒவ்வொரு விஷயமும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை மேலிருந்து கீழ் வரை பாபா புரிய வைக்கிறார். பக்தியும் முதன் முதலில் சதோபிரதானமாகவும், பின் சதோ, ரஜோ, தமோ நிலையை அடைகின்றது. இப்போது நீங்கள் சதோ பிரதானமாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் தான் முயற்சி தேவை. தூய்மையாக வேண்டும். தன்னைத்தான் காத்துக் கொள்ள வேண்டும். மாயை எங்கும் ஏமாற்றிவிட வில்லையே ! என்னுடைய பார்வை குற்றப் பார்வையாக இல்லையே ! ஏதாவது பாவத்தின் எண்ணங்கள் தோன்றவில்லையே ! பிரஜா பிதா பிரம்மாவின் புகழ் பாடுகிறார்கள் என்றால் அவருடைய வாரிசுகள் பிராமணன் பிராமணிகள் சகோதரன் சகோதரிகள் அல்லவா? இங்கே இருக்கக் கூடிய பிராமணர்கள் கூட தங்களை பிரம்மாவின் வாரிசு என கூறிக் கொள்கிறார்கள். நீங்களும் பிராமணர்கள் சகோதரன் சகோதரி அல்லவா? பிறகு ஏன் விகார பார்வை வைக்கிறீர்கள். நீங்கள் பிராமணர் களுக்கும் நன்கு திருஷ்டி கொடுக்கலாம். பிரம்மாவின் வாரிசுகள் பிராமணன் பிராமணிகள் ஆகி பிறகு தேவதைகள் ஆகிறார்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிகிறீர் கள். தந்தை வந்து பிராமண தேவி தேவதா தர்மத்தினை ஸ்தாபனை செய்கிறார் என கூறுகிறார்கள். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? நாம் பிரம்மாவின் வாரிசுகள் சகோதரன் சகோதரிகள் ஆகிவிட்டோம் என்றால் கெட்ட பார்வை ஒரு போதும் இருக்கக் கூடாது. அதைத் தடுக்க, வேண்டும். இவரும் நம்முடைய இனிமையான சகோதரி என்ற அன்பு இருக்க வேண்டும். ரத்த சம்பந்தத்தில் அன்பு இருக்கிறது. அது மாறி ஆன்மீகமாக வேண்டும். இதில் கடின உழைப்பு தேவை. இருப்பினும் எளிய நினைவாகும். தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொண்டு தந்தையை நினைக்க வேண்டும். விகார பார்வை இருக்கக் கூடாது. இந்த கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என பாபா புரிய வைக்கின்றார். நாம் ஆத்மாக்கள் இப்போது நாம் சிவபாபாவின் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட சகோதரன் சகோதரிகள். நாம் நம்மை பி.கே. என்று கூறிக் கொள்கிறோம். நடத்தையில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? வகுப்பறையில் அனைவரிடமும் நமக்கு சகோதரன் சகோதரி என்ற பார்வை இருக்கிறதா அல்லது சஞ்சலம் இருக்கிறதா என புரிந்துக் கொள்கிறீர்களா? என கேட்பது டீச்சரின் வேலையாகும். உண்மையான தந்தையின் முன்பு உண்மையைக் கூறவில்லை பொய் கூறினோம் என்றால் நிறைய தண்டனை கிடைக்கும். நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய சொல்கிறார்கள் அல்லவா? உண்மையான ஈஸ்வர் தந்தைக்கு முன்பு உண்மையைக் கூறலாம். உண்மையான தந்தையின் குழந்தையும் உண்மையாக இருப்பர். தந்தை சத்தியமானவர் அல்லவா? அவர் சத்தியத்தைத் தான் தெரிவிக்கின்றார். மற்ற அனைத்தும் கட்டுக் கதை களாகும். ஸ்ரீஸ்ரீ 108 என்று தன்னை கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் இது மாலை அல்லவா அதை உருட்டுகிறார்கள். உண்மையில் ஏன் உருட்டுகிறோம் என்பது கூட தெரியவில்லை. பௌத்த மதத்திற்கும் மாலை இருக்கிறது, கிறிஸ்தவர்களுக்கும் கூட மாலை இருக்கிறது, ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி மாலையை உருட்டுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. 108-ன் மாலையில் மேலே மலராக இருப்பது நிராகாரர் என கூறுங்கள். அவரைத் தான் அனைவரும் நினைக்கிறார்கள். அவரின் நினைவினால் தான் நாம் சொர்க்கத்தின் பட்டத்து ராணி ஆக அதாவது மகாராணி ஆகின்றோம். நரனிலிருந்து நாராயணன், பெண்ணிலிருந்து லஷ்மியாக மாறுதல் சூரிய வம்சத்தின் வெல்வட் அணிந்த பட்ட ராணியாகுதல் ஆகும். பிறகு பருத்தி அணிந்தவராகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட கருத்துக்களை புத்தியில் வைத்து பிறகு புரிய வைக்க வேண்டும். பிறகு உங்களின் பெயர் பிரசித்தம் ஆகும். பேசுவதில் பெண் சிங்கம் ஆகுங்கள். நீங்கள் சிவ சக்தி சேனை அல்லவா? பல்வேறு விதமான படைகள் இருக்கிறார்கள் அல்லவா. அங்கே கூட என்ன கற்றுத் தருகிறார்கள் என பாருங்கள். லட்சக்கணக்கான மனிதர்கள் போகிறார்கள். குற்றப்பபார்வை மிகவும் ஏமாற்றக் கூடியது என பாபா புரிய வைத்திருக்கிறார். தன்னுடைய நிலையை வர்ணிக்க வேண்டும். நாம் வீட்டில் எப்படி இருக்கிறோம்? தன் நிலை மீது என்ன உணர்வு ஏற்படுகிறது என்று அனுபவத்தைக் கூறுங்கள். எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கிறேன் என டைரியில் குறித்து வையுங்கள். பலசாலிகளிடம் மாயையும் பலசாலி ஆகி சண்டை இடுகிறது என பாபா புரிய வைக்கிறார். யுத்த மைதானம் அல்லவா? மாயா மிகவும் பலசாலி ஆகும். மாயை என்றால் 5 விகாரங்கள். பணத்திற்கு செல்வம் என்று பெயர். யாரிடம் அதிகம் பணம் இருக்கிறதோ அவர்கள் தான் அதிகமாக அஜாமில் ஆகிறார்கள்.

 

முதன் முதலில் நீங்கள் விலைமாதர்களைக் காப்பாற்றுங்கள் என பாபா கூறுகிறார். அவர்கள் பிறகு அவர்களின் அமைப்பை உருவாக்குவார்கள். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். நான் உங்களை சிவாலயத்திற்கு அதிபதியாக்குவதற்காக வந்திருக் கிறேன். இது கடைசி பிறவி ஆகும் என்று பாபா கூறுகின்றார். உங்களின் பெயரின் காரண மாக பாரதத்தின் மரியாதை போய் விட்டது என விலைமாதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இப்போது சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். ஸ்ரீமத்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். இப்போது நீங்கள் உலகத்திற்கு அதிபதியாகுங்கள். பாரதத்தின் பெயரை எங்களைப் போன்று காப்பாற்றுங்கள். நாங்களும் பாபாவை நினைவு செய்வதால் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இந்த ஒரு பிறவிக்கு சீ,சீ வேலைகளை விட்டு விடுங்கள். இரக்கப்பட வேண்டும் அல்லவா? பிறகு உங்களின் பெயர் பிரசித்தமாகி விடும். இப்படிப்பட்ட அழுக்கான வேலையை விட வைத்து விட்டார்கள். இவர்களுக்குள் அந்த சக்தி இருக்கிறது என்று கூறுவார்கள். அனைவருக்கும் அமைப்புகள் இருக்கிறது. நீங்கள் உங்களுடைய அமைப்பை உருவாக்கி அரசாங்கத்திடம் இருந்து என்ன வேண்டுமோ அடையலாம். எனவே, இப்போது இவ்வாறு யாரெல்லாம் பாரதத்தின் பெயரை கெட்ட பெயர் ஆக்கினார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு சேவை செய்யுங்கள். உங்களுடைய ஒற்றுமையும் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். 10-12 பேர் தங்களுக்குள் இணைந்து சென்று புரிய வைக்கலாம். தாய்மார்களும் நன்றாக இருக்க வேண்டும். ஒருசிலராவது புதிய தம்பதியினர் நாங்கள் தூய்மையாக இருக்கின்றோம் என கூறுங்கள். தூய்மையாவதால் தான் உலகத்திற்கு அதிபதியாக முடியும் என்றால் ஏன் தூய்மை யாக முடியாது. அனைவரும் கூட்டமாகச் செல்லுங்கள், மிகவும் பணிவோடு நாங்கள் உங்களுக்கு பரம்பிதா பரமாத்மாவின் செய்தியை கொடுக்க வந்திருக்கிறோம் என கூறுங்கள். இப்போது வினாசம் எதிரில் இருக்கிறது. நான் அனைவரையும் திருத்துவதற்காக வந்திருக் கிறேன் என பாபா கூறுகிறார். நீங்கள் இந்த ஒரு பிறவி மட்டும் விகாரத்தில் ஈடுபடாதீர்கள். நாம் பிரம்மா குமார், குமாரிகள் தங்களுடைய உடல் மனம் பொருளால் சேவை செய்கிறோம் என நீங்கள் புரிய வைக்கலாம். நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. ஈஸ்வரனின் குழந்தைகள் நாங்கள், இப்படி எல்லாம் திட்டம் போடுங்கள். நீங்கள் உதவி செய்ய முடியாது என்பதில்லை. ஆஹா, ஆஹா என கூறும் அளவிற்கு காரியங்களைச் செய்யுங்கள். ஆயிரக்கணக்கானோர் உதவுவதற்கு வருவார்கள். உங்களுடைய குழுவை உருவாக்குங்கள். முக்கியமானவர்களை தேர்ந்தெடுங்கள். வகுப்பெடுங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு பலர் வருவார் கள். நீங்கள் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுங்கள். இந்த அளவிற்கு பரந்த மனம் இருந்தால் உடனடியாக சேவையில் ஈடுபட்டு விடுவர். ஒரு புறம் இந்த சேவை, இன்னொரு விஷயம் கீதையினுடையதாகும். இந்த விஷயங்களைச் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் படிப்பதே லஷ்மி நாராயணன் ஆவதற்காக ஆகும். எனவே குழந்தைகளாகிய உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது. ஒரு வேளை ஏதாவது ஒருவிஷயத்தை பாபாவிடம் மறைக்கிறீர்கள், உண்மையைக் கூறவில்லை என்றால் தனக்கு தானே நஷ்டப்படுத்திக் கொள்கிறீர்கள். மேலும் 100 மடங்கு பாவம் ஏறுகிறது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. நாம் இனிமையான தந்தையின் குழந்தைகள் நமக்குள் இனிமையான சகோதரன் சகோதரியாக இருக்க வேண்டும். ஒரு போதும் விகாரத்தின் பார்வை இருக்கக் கூடாது. பார்வையில் எந்த ஒரு சஞ்சலம் இருந்தாலும் ஆன்மீக சர்ஜனிடம் உண்மையைக் கூற வேண்டும்.

 

2. ஒரு போதும் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டில் வரக் கூடாது. பரந்த மனமுடையவராகி சேவை செய்ய வேண்டும். தங்களுடைய உடல் மனம், பொருளால் மிக மிக பணிவுடையவராகி சேவை செய்து அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.

 

வரதானம்:

தன்னுடைய சிரேஷ்ட வாழ்க்கை மூலம் பரமாத்ம ஞானத்தின் பிரத்யட்ச (வெளிப்படையான) பிரமாணம் கொடுக்கக்கூடிய மாயா புரூஃப் ஆகுக.

 

தன்னை பரமாத்ம ஞானத்தின் பிரத்யட்ச பிரமாணம் அல்லது புரூஃப் என புரிந்து கொள்வதன் மூலம் மாயா புரூஃப் (மாயை அண்டாத நிலை) ஆகிவிடுவீர்கள். உங்களுடைய சிரேஷ்டமான தூய்மையான வாழ்க்கையே பிரத்யட்ச பிரமாணம் ஆகும். அனைத்தையும் விட பெரிய சாத்தியமாகாததிலிருந்து சாத்தியமாகக் கூடிய விசயம் என்னவென்றால் இல்லறத்தில் இருந்து கொண்டே அதிலிருந்து கடந்து விடுபட்ட நிலையில் இருப்பது ஆகும். தேகம் மற்றும் தேகத்தினுடைய உலகத்தின் சம்பந்தங்களிலிருந்து விடுபட்டு இருப்பது மற்றும் பழைய சரீரத்தின் கண்களால் பழைய உலகத்தின் பொருட்களைப் பார்த்தாலும் பார்க்காமல் இருப்பது அதாவது சம்பூரண பவித்ர வாழ்க்கை வாழ்வது என்ற இதுவே பரமாத்மாவை பிரத்யட்சம் செய்வதற்கான அல்லது மாயா புரூஃப் ஆகுவதற்கான சகஜ சாதனம் ஆகும்.

 

சுலோகன்:

கவனம் என்ற காவல்காரன் சரியாக இருந்தால் அதீந்திரிய சுகம் என்ற பொக்கிஷத்தை இழக்கமாட்டீர்கள்.

ஓம்சாந்தி