03.10.21    காலை முரளி            ஓம் சாந்தி   31.03.88      பாப்தாதா,   மதுபன்


சொல் மற்றும் செயல் -- இரண்டு சக்திகளையும் சேமிப்பதற்கான ஈஸ்வரிய திட்டம்

 
இன்று ஆன்மிக ஜோதி தம்முடைய ஆன்மிக விட்டில் பூச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாலாபுறமும் உள்ள விட்டில் பூச்சிகள் ஜோதியின் மீது பலியாகி விட்டனர். பலியாகக் கூடிய அநேக விட்டில் பூச்சிகள் உள்ளனர். ஆனால் பலியான பிறகு ஜோதியின் அன்பில் ஜோதிக்கு சமமாக ஆவதில், பலியாவதில் நம்பர்வார் உள்ளனர். உண்மையில் பலியாவதே மனப்பூர்வ அன்பின் காரணத்தால் தான். மனப்பூர்வ அன்பு மற்றும் அன்பு - இதிலும் வேறுபாடு உள்ளது. அன்பு அனைவருக்குமே உள்ளது. அன்பின் காரணத்தால் தான் பலியாகியுள்ளனர். மனதின் சிநேகி பாபாவின் மனதிலுள்ள விஷயங்களை அல்லது மனதின் ஆசைகளை அறிந்திருக்கவும் செய் கின்றனர் மற்றும் பூர்த்தி செய்கின்றனர். மனதின் சிநேகி மனதின் ஆசைகளை நிறைவேற்று பவர்கள். மனதின் சிநேகி என்றால் பாபாவின் மனம் என்ன சொன்னதோ, அது குழந்தைகளின் மனதில் நிறைந்து விட்டது. மேலும் எதை மனதில் நிறைத்துக் கொண்டார்களோ, அது கர்மத்தில் தானாகவே நடைபெறும். சிநேகி ஆத்மாக்களுக்கு சில மனதில் நிறைந்தன, சில புத்தியில் நிறைந்தன. எது மனதில் நிறைகிறதோ, அதைக் கர்மத்தில் கொண்டு வருகின்றனர். எது புத்தியில் நிறைந்ததோ, அதில் யோசனை நடைபெறுகிறது, அதாவது செய்ய முடியுமா இல்லையா, செய்யவோ வேண்டும் தான், சமயத்தில் அது ஆகி விடும். இந்த மாதிரி யோசனை நடைபெறுகிற காரணத்தால் யோசனை வரை மட்டுமே நின்று விடுகிறது. கர்மம் வரை வருவதில்லை.

இன்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார், பலியாகிறவர்களோ அனைவரும் தான். பலியாக வில்லை என்றால் பிராமணர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால் பாபாவின் அன்பிற்காக பாபா எதைச் சொல்கிறாரோ, அதைச் செய்வதற்கு பலியாக வேண்டியுள்ளது, அதாவது தனது என்பது, தனது என்பதில் அபிமானம் இருந்தாலும் சரி, பலவீனம் இருந்தாலும் சரி, இரண்டையும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தான் பலி என்று சொல்வது. பலியாகிறவர்கள் அநேகர் உள்ளனர். ஆனால் பலியாவதற்கு தைரியம் வைப்பவர்கள் நம்பர்வார் உள்ளனர்.

இன்று பாப்தாதா ஒரு மாத ரிசல்ட்டை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இதே சீசனில் விசேஷமாக பாப்தாதா பாப்-சமான் ஆவதற்காக வெவ்வேறு ரூபத்தில் எத்தனை தடவை சமிக்ஞை செய்துள்ளார் மற்றும் பாப்தாதாவுக்கு விசேஷமாக இந்த மனதில் சிரேஷ்ட ஆசை தான் உள்ளது. இவ்வளவு கஜானாக்கள் கிடைத்துள்ளன, வரதானங்கள் கிடைத்துள்ளன! வரதானங் களுக்காக ஓடோடி வந்திருக்கிறீர்கள். குழந்தைகள் அன்பினால் சந்திக்க வருகின்றனர், வரதானங்கள் பெற்றுக் குஷியடைகின்றனர் என்பதில் பாப்தாதாவுக்கும் குஷி உள்ளது. ஆனால் பாபாவின் மனதின் ஆசையை நிறைவேற்றுபவர்கள் யார்? பாபா என்ன சொன்னாரோ, அதைக் கர்மத்தில் எது வரை கொண்டு வந்தீர்கள்? மனம், சொல், செயல் மூன்றின் ரிசல்ட் எது வரை உள்ளது எனப் புரிந்திருக்கிறீர்களா? சக்திசாலி மனம், சம்பந்தம்-தொடர்பில் எது வரை வந்தது? வெறுமனே அமர்ந்து இவையனைத்தையும் சிந்தனை செய்தீர்கள் என்றால் அது சுய முன்னேற்றத் திற்கு மிகவும் நல்லது, அதைச் செய்யத் தான் வேண்டும். ஆனால் எந்த சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு சிரேஷ்ட மனம், அதாவது சங்கல்பங்கள் யாருக்கு சக்திசாலியாக உள்ளனவோ, சுப பாவனை, சுப விருப்பம் உள்ளவராக யார் இருக்கிறார்களோ, அவர்களின் மனதின் சக்திக்கான கண்ணாடி எது? கண்ணாடி என்பது சொல் மற்றும் செயல். அஞ்ஞானி ஆத்மாக்களாயினும் சரி, ஞானி ஆத்மாக் களாயினும் சரி, இருவரின் சம்பந்தம்-தொடர்பில் சொல் மற்றும் செயல் கண்ணாடியாகும். சொல் மற்றும் செயல் சுப பாவனை, சுப விருப்பம் உள்ளதாக இல்லை என்றால் மனோசக்தியின் பிரத்தியட்ச சொரூபத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? யாருடைய மனம் சக்திசாலி மற்றும் சுபமாக உள்ளதோ, அவர்களின் சொல் மற்றும் செயல் தானாகவே சக்திசாலியாக, சுத்தமானதாக இருக்கும், சுப பாவனை உள்ளதாக இருக்கும். மனம் சக்திசாலி என்றால் நினைவின் சக்தியும் சிரேஷ்டமானதாக இருக்கும். சகஜயோகியாக இருப்பார்கள். சகஜயோகியாக மட்டுமில்லை, ஆனால் சகஜ கர்மயோகியாக இருப்பார்கள்.

பாப்தாதா பார்த்தார் - நினைவை சக்திசாலி ஆக்குவதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு கவனம் உள்ளது. நினைவை சகஜமாகவும் நிரந்தரமாகவும் ஆக்குவதற்கு ஊக்கம்-உற்சாகம் உள்ளது. முன்னேறிக் கொண்டும் இருக்கிறீர்கள், முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் பாபாவுடன் அன்பு நன்றாக உள்ளது. அதனால் நினைவின் கவனம் நன்றாக உள்ளது மற்றும் நினைவின் ஆதாரமே அன்பு தான். பாபாவுடன் ஆன்மிக உரையாடல் செய்வதிலும் அனைவரும் நன்றாகச் செய்கின்றனர். அவ்வப்போது (கோபத்தில்) கொஞ்சம் கண்ணைக் காட்டவும் செய்கின்றனர். அதுவும் தங்களுக்குள் கொஞ்சம் கோபித்துக் கொள்ளும் போது தான். பிறகு பாபாவிடம் புகார் செய்கின்றனர் - நீங்கள் ஏன் இதைச் சரி செய்வதில்லை? பிறகும் கூட அது சிநேகம் நிறைந்த அன்பின் கண்ணாக உள்ளது. ஆனால் எப்போது குழுவில் வருகின்றனரோ, கர்மத்தில் வருகின்றனரோ, விவகாரங்களில் வருகின்றனரோ, பரிவாரத்தில் வருகின்றனரோ, அப்போது குழுவில் சொல், அதாவது பேச்சு சக்தி - இதில் அதிகம் வீணானதாகக் காணப் படுகிறது.

பேச்சு சக்தி வீணாகப் போவதன் காரணத்தால் பேச்சில் பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கான கூர்மை அல்லது சக்தியை அனுபவம் செய்விக்க வேண்டியது குறைவாக உள்ளது. பேசும் விஷயங்கள் நன்றாக உள்ளன. அது வேறு விஷயம். பாபா சொல்லும் விஷயங்களை ரிப்பீட் செய்வீர்களானால் அது நிச்சயமாக நன்றாக இருக்கும். ஆனால் சொல்லின் சக்தி வீணாகப் போகிற காரணத்தால் சக்தி சேமிப்பாவதில்லை. அதனால் பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கான சப்தம் பரவுவதில் இப்போது தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. சாதாரண வார்த்தைகள் அதிகம் உள்ளன. அலௌகிக சொற்கள் இருக்க வேண்டும். ஃபரிஸ்தாக்களின் சொற்கள் இருக்க வேண்டும். இப்போது இந்த வருடம் இதன் மீது அடிக்கோடிடுங்கள். எப்படி பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள் - ஃபரிஸ்தாக்களின் சொற்களாக இருந்தது. குறைந்த சொற்கள் மற்றும் இனிமையான சொற்கள். எந்தச் சொல்லுக்கு பலன் வெளிப்படுகிறதோ, அது யதார்த்தமான சொல் மற்றும் எந்தச் சொல்லுக்கு பலன் இல்லையோ, அது வீணானதாகும். வேலைக்கான பலனாக இருக்கலாம். வேலை அல்லது தொழிலுக்காகவும் கூடப் பேச வேண்டி உள்ளது இல்லையா? அதையும் அதிகப் படுத்தாதீர்கள். இப்போது சக்தியை சேமிக்க வேண்டும். எப்படி நினைவின் மூலம் மனதின் சக்தியை சேமிக்கிறீர்கள், அமைதியில் அமர்கிறீர்கள் என்றால் சங்கல்ப சக்தியை சேமிக்கிறீர்கள். அது போல் சொல்லின் சக்தியையும் சேமியுங்கள்.

நகைச்சுவையான ஒரு விஷயம் சொல்கிறோம் - பாப்தாதாவின் வதனத்தில் அனைவரின் சேமிப்பு உண்டியல்கள் உள்ளன. உங்கள் சேவா கேந்திரங்களில் கூட உண்டியல்கள் உள்ளன இல்லையா? பாபாவின் வதனத்தில் குழந்தை களின் உண்டியல் உள்ளது. ஒவ்வொருவரும் நாள் முழுவதிலும் மனம், சொல், செயல் - மூன்று சக்திகளை வரவு வைத்து சேமிக்கின்றனர். அது உண்டியல். மனசா சக்தி எவ்வளவு சேமித்தீர்கள். சொல்லின் சக்தி, கர்மணா சக்தியை எவ்வளவு சேமித்தீர்கள். இதனுடைய கணக்கு முழுவதும் உள்ளது. நீங்களும் கூட செலவு மற்றும் சேமிப்பினுடைய கணக்கை அனுப்புகிறீர்கள் இல்லையா? ஆக, பாப்தாதா இந்த சேமிப்பின் உண்டியல்களைப் பார்த்தார். அப்போது என்ன வெளிப்பட்டிருக்கும்? ஒவ்வொருவரின் ரிசல்ட்டோ அவரவருடையதாக இருக்கும். உண்டியல்கள் அதிகமாகவே நிரம்பியிருந்தன. ஆனால் சில்லறைக்காசுகள் அதிகமாக இருந்தன. சின்னக் குழந்தைகள் உண்டியலில் சில்லறைகளைச் சேமிக்கின்றனர் என்றால் உண்டியல் எவ்வளவு பாரமாகி விடுகிறது! ஆக, சொல்லின் ரிசல்ட்டில் விசேஷமாக இதை அதிகம் பார்த்தார். எப்படி நினைவின் மீது கவனம் உள்ளதோ, அது போல் சொல்லின் மீது அவ்வளவு கவனம் இல்லை. ஆகவே இந்த வருடம் சொல் மற்றும் செயல் - இந்த இரண்டு சக்தி களையும் சேமிப்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். எப்படி அரசாங்கமும் பலவிதமான விதிகள் மூலம் பட்ஜெட்டின் திட்டத்தைத் தயாரிக்கின்றது இல்லையா? அது போல் இதில் முக்கியமானது மனம் - இதையோ அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் மனதோடு கூடவே விசேஷமாக சொல் மற்றும் செயல் - இது சம்பந்தம் - தொடர்பில் தெளிவாகக் காணப்படுகிறது. மனம் பிறகும் கூட குப்தமாக உள்ளது. ஆனால் இது தெளிவாகக் காணப்படுவதாகும். சொல்லில் சேமிப்பதற்கான சாதனம் - குறைவாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், சுய மரியாதையுடன் பேசுங்கள். எப்படி பிரம்மா பாபா, சிறியவர்கள் அல்லது பெரியவர்களை சுயமரியாதையின் சொல் மூலம் தம்முடையவராக ஆக்கினார். இந்த விதியின் மூலம் எவ்வளவு முன்னேறிச் செல்கிறீர்களோ, அந்த அளவு வெற்றி மாலை விரைவாகத் தயாராகும். ஆக, இவ்வருடம் என்ன செய்ய வேண்டும்? சேவையுடன் கூடவே விசேஷமாக இந்த சக்திகளை சேமித்தவாறே சேவை செய்ய வேண்டும்.

சேவைக்கான திட்டங்களையோ அனைவரும் நல்லதிலும் நல்லதாகவே தயார் செய்துள்ளனர். இது வரை திட்டப்படி சேவை செய்து கொண்டுள்ளனர், நாலாபுறத்திலும் - பாரதத்திலாயினும் சரி, வெளிநாட்டிலாயினும் சரி, நன்றாகச் செய்து கொண்டும் உள்ளனர், இனியும் செய்வார்கள். எப்படி சேவையில் ஒருவர் மற்றவரை விட நல்ல ரிசல்ட்டை வெளிப்படுத்துவதற்கான சுப பாவனை யுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அது போல் சேவையில் குழு ரூபத்தில் சதா திருப்தியாக இருப்பதற்கும் திருப்திப் படுத்துவதற்குமான விசேஷ சங்கல்பம் - இதுவும் சதா கூடவே இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரே சமயத்தில் மூன்று விதமான சேவை கூடவே நடை பெறுகிறது. ஒன்று - தனது திருப்தி, இது சுயத்திற்கான சேவை. இரண்டாவது குழுவில் திருப்தி, இது பரிவாரத்திற்கான சேவை. மூன்றாவது - மொழியின் மூலம் அல்லது ஏதேனும் விதி மூலம் உலக ஆத்மாக்களுக்கான சேவை. ஒரே சமயத்தில் மூன்று சேவைகள் நடைபெறுகின்றன. ஏதாவது நிகழ்ச்சி (புரோகிராம்) தயாரிக்கிறீர்கள் என்றால் அதில் மூன்று சேவைகளும் அடங்கியுள்ளன. எப்படி உலக சேவையின் ரிசல்ட் அல்லது விதியை கவனத்தில் வைக்கிறீர்களோ, அது போல் இரண்டு சேவைகளும் - சுயம் மற்றும் குழுவிற்கானவை - மூன்றுமே நிர்விக்னமாக இருக்க வேண்டும். அப்போது தான் சேவையின் நம்பர் ஒன் வெற்றி எனச் சொல்வார்கள். மூன்று வெற்றிகளும் ஒன்றாக இருப்பது தான் நம்பர் பெறுவதாகும். இந்த வருடம் மூன்று சேவைகளிலும் வெற்றி ஒன்றாகவே கிடைக்க வேண்டும் - இந்த முரசு ஒ-க்க வேண்டும். ஒரு மூலையில் முரசு ஒலிக்கிறது என்றால் கும்பகர்ணர்களின் காது வரை சென்று சேர்வதில்லை. எப்போது நாலாபுறமும் இந்த முரசு ஒலிக்கின்றதோ, அப்போது கும்பகர்ணர்கள் அனைவரும் விழித்துக் கொள்வார்கள். இப்போது ஒருவர் விழித்துக் கொண்டால் இன்னொருவர் தூங்குகிறார். இரண்டாமவர் விழித்துக் கொண்டால் மூன்றாமவர் தூங்குகிறார். கொஞ்சம் விழித்தாலும் கூட நல்லது- நல்லது என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் தூங்கி விடுகின்றனர். ஆனால் விழித்துக் கொண்டு வாயினால் அல்லது மனதால் ஆஹா பிரபு! எனச் சொல்லி முக்தியின் ஆஸ்தி பெற்றால் அப்போது முடிவு வரும். விழித்துக் கொண்டால் தான் முக்தியின் ஆஸ்தி பெறுவார்கள். ஆக, புரிந்ததா, என்ன செய்ய வேண்டும் என்று? ஒருவர் மற்றவரின் சகயோகி ஆகுங்கள். மற்றவர்களைப் பாதுகாப்பதால் தன்னுடைய பாதுகாப்பு அதாவது பட்ஜெட் ஆகி விடும்.

சேவைக்கான திட்டத்தில் எவ்வளவு தொடர்பில் அருகில் கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவு சேவையின் பிரத்தியட்ச ரிசல்ட் காணப்படும். செய்தி கொடுப்பதற்கான சேவையோ செய்தே வந்திருக்கிறீர்கள். செய்து கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால் விசேஷமாக இவ்வருடம் செய்தி கொடுத்தால் மட்டும் போதாது, சகயோகி ஆக்க வேண்டும், அதாவது தொடர்பில், அருகில் கொண்டு வர வேண்டும். வெறுமனே படிவம் நிரப்பச் செய்கிறீர்கள் - இதுவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இவ்வருடம் இன்னும் முன்னேறுங்கள். படிவத்தை நிரப்பச் செய்யுங்கள், ஆனால் நிரப்புவதோடு விட்டு விடாதீர்கள். சம்பந்தத்தில் கொண்டு வர வேண்டும். எப்படி மனிதரோ, அப்படி தொடர்பில் கொண்டு வருவதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சரி, ஆனால் லட்சியம் இதை வையுங்கள். சகயோகி என்றால் வெறும் ஒரு மணி நேரத்துக்கு அல்லது படிவம் நிரப்பும் சமயம் வரை மட்டும் ஆக்கினால் போதாது. ஆனால் சகயோகத்தின் மூலம் அவர்களை சமீபத்தில் கொண்டு வர வேண்டும். தொடர்பில், சம்பந்தத்தில் கொண்டு வாருங்கள். ஆக, முன்னால் போகப்போக சேவையின் ரூபம் மாறி விடும். நீங்கள் உங்களுக்காகச் செய்ய வேண்டி இருக்காது. உங்கள் சார்பில் சம்பந்தத்தில் வரக்கூடியவர்கள் பேசுவார்கள். நீங்கள் ஆசிர்வாதம் அல்லது திருஷ்டி மட்டும் கொடுக்க வேண்டி இருக்கும். எப்படி இப்போது சங்கராச்சாரியாரை நாற்காலியில் அமர்த்து கிறார்கள். அது போல் உங்களைப் பூஜைக்குரிய நாற்காலியில் அமர்த்துவார்கள். வெள்ளி நாற்காலியில் அல்ல. பூமியைத் தயார் செய்பவர்கள் நிமித்தமாவார்கள். மற்றும் நீங்கள் வெறுமனே திருஷ்டி மூலம் விதை போட வேண்டும். இரண்டு ஆசிர்வாதங்களின் வார்த்தை பேச வேண்டும். அப்போது தான் பிரத்தியட்சம் நடைபெறும். உங்களில் பாபா காணப்படுவார். மேலும் பாபாவின் திருஷ்டி, பாபாவின் அன்பின் அனுபூதி பெற்றதுமே பிரத்தியட்சதாவின் முரசு ஒலிக்கத் தொடங்கி விடும்.

இப்போது சேவையின் பொன் விழாவையோ முடித்து விட்டீர்கள். இப்போது மற்றவர்கள் சேவை செய்வார்கள் மற்றும் நீங்கள் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பீர்கள். எப்படி, போப் என்ன செய்கிறார்? அவ்வளவு பெரிய சபையின் நடுவில் திருஷ்டி கொடுத்து, ஆசிர்வாதத்தின் வார்த்தைகளைப் பேசுகிறார். மிக நீண்ட சொற்பொழிவு செய்பவர்கள் வேறு சிலர் நிமித்தமாவார்கள். எங்களுக்கு பாபா சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் சொல்வீர்கள். அதற்கு பதில் மற்றவர்கள் சொல்வார்கள் - இவர்கள் என்னென்ன சொன்னார்களோ, அவை பாபா வுடையவை. அவர் போல் வேறு யாரும் இல்லை. ஆக, கொஞ்சம்-கொஞ்சமாகக் கைகள் (சகயோகிகள்) தயாராவார்கள். எப்படி சேவாகேந்திரங்களைப் பராமரிப்பதற்காகக் கைகள் தயாராகியுள்ளனர் இல்லையா? அது போல் ஸ்டேஜ் மீது உங்கள் சார்பில் மற்றப் பேச்சாளர்கள் அனுபவத்திலிருந்து பேசுபவராக வெளிப்படுவார்கள். வெறுமனே மகிமை செய்பவர்களாக இல்லை. ஞானத்தின் ஆழமான பாயின்ட்டைத் தெளிவு படுத்தக் கூடியவர்கள் -- அந்த மாதிரி நிமித்தமாவார்கள். ஆனால் அதற்காக அந்த மாதிரி மனிதர்களை சிநேகி, சகயோகியாக மற்றும் தொடர்பில் கொண்டு வந்து சம்பந்தத்தில் கொண்டு வாருங்கள். இந்த முழு செயல்பாடுகளின் லட்சியமே இது தான் - அதாவது அந்த மாதிரி சகயோகி ஆக்குங்கள் - சுயம் நீங்கள் மைட் (சக்தி) ஆகி விடுங்கள் மற்றும் அவர்கள் மைக் ஆகிவிட வேண்டும். இந்த வருடத்தின் சகயோகத்தின் சேவைக்கான லட்சியம் மைக் தயார் செய்ய வேண்டும் - அனுபவத்தின் ஆதாரத்தில் உங்களுடைய அல்லது பாபாவின் ஞானத்தைப் பிரத்தியட்சம் செய்ய வேண்டும். யாருடைய பிரபாவம் தானாகவே மற்றவர் மீது சகஜமாகப் படுகிறதோ, அந்த மாதிரி மைக் தயார் செய்யுங்கள். புரிந்ததா, சேவையின் நோக்கம் என்னவென்று? இத்தனை நிகழ்ச்சிகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்றால் அதன் வெண்ணெய் என்னவாக வெளிப்படும்? நன்றாக சேவை செய்யுங்கள். ஆனால் இவ்வருடம் செய்தி கொடுப்பதோடு கூடவே இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்வையில் வையுங்கள் - யார்-யார் அது போல் தகுதியுள்ளவராக இருக்கிறார்கள் மற்றும் அவர்களை அவ்வப்போது வெவ்வேறு விதிகள் மூலம் தொடர்பில் கொண்டு வாருங்கள். ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்கள், பிறகு இரண்டாவதை மேலோட்டமாகச் செய்தீர்கள், மூன்றாவதைச் செய்தீர்கள், முதலாவது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அங்கேயே இருந்து விட்டார்கள், பிறகு மூன்றாவது வந்தவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது. இதிலும் சேமிப்பு சக்தியைப் பிரயோகத்தில் கொண்டுவர வேண்டியதிருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் மூலமாகவும் சேமித்துக் கொண்டே செல்லுங்கள். கடைசியில் அத்தகைய சம்பந்தம்-தொடர்பில் வந்தவர்களின் மாலை உருவாகி விட வேண்டும். புரிந்ததா? மீதி என்ன உள்ளது? சந்திப்பதற்கான நிகழ்ச்சி.

இவ்வருடம் பாப்தாதா 6 மாதத்திற்கான சேவையின் ரிசல்ட்டைப் பார்க்க விரும்புகிறார். சேவையில் என்னென்ன திட்டங்களை உருவாக்கி யிருந்தாலும், அதில் நாலாபுறமும் ஒருவர் மற்றவர்க்கு சகயோகி ஆகுங்கள், சேவைக்காக நாலாபுறமும் சுற்றி வாருங்கள். சிறியவர் பெரியவர் அனைவரையும் ஊக்கம்-உற்சாகத்தில் கொண்டு வந்து மூன்று விதமான சேவை களிலும் முன்னேற வையுங்கள். ஆகவே பாப்தாதா இவ்வருடம் முழு இரவையும் பகலாக்கி உங்களுக்காக முழுமையாக சேவை செய்துள்ளார். இப்போது மூன்று விதமான சேவைகளின் பலனை உண்பதற்கான வருடம் இது. இங்கே வருவதற்கானது அல்ல, பலனை உண்பதற்கானது. இவ்வருடம் வருவதற்கென்று விதிக்கப் படவில்லை. பாப்தாதாவின் சகாஷோ சதா கூடவே இருக்கிறது. எது டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளதோ, அதைச் சொல்லியாயிற்று. டிராமாவினால் ஏற்றுக் கொள்ளத் தக்கதை நீங்களும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்! சேவையை நன்றாகச் செய்யுங்கள். 6 மாதத்திலேயே ரிசல்ட் தெரிய வரும். பாபாவின் ஆசைகளைப் பூர்த்தி செய் வதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். எங்கே பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ஒவ்வொரு வரின் சங்கல்பம், சொல்லும் செயலும் பாபாவின் ஆசைகளின் தீபத்தை ஏற்றுவதாக இருக்க வேண்டும். முதலில் மதுபனில் இந்த உதாரணத்தைக் காட்டுங்கள். பட்ஜெட் திட்டத்தின் மாடலை முதலில் மதுபனில் உருவாக்குங்கள். இதை முதலில் பேங்கில் சேமியுங்கள். மதுபனில் உள்ளவர்களுக்கும் வரதானங்களோ கிடைத்து விட்டன. மீதி இருப்பவர்களுக்கும் இவ்வருடத்தில் விரைவாகப் பூர்த்தி செய்வோம். ஏனென்றால் பாபாவின் அன்போ அனைத்துக் குழந்தைகளிடமும் உள்ளது. அது போல் ஒவ்வொரு குழந்தைக்காகவும் ஒவ்வோரடியிலும் வரதானம் உள்ளது. யார் மனப்பூர்வ அன்புள்ள ஆத்மாக்களோ, அவர்கள் ஒவ்வோரடியிலும் வரதானத்தால் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். பாபாவின் வரதானம் வெறுமனே வாயினால் அல்ல, ஆனால் மனதார உள்ளது மற்றும் மனதின் வரதானம் சதா மனதில் குஷி, ஊக்கம்-உற்சாகத்தின் அனுபவம் செய்விக்கிறது. இது மனதின் வரதானத்தின் அடையாளமாகும். மனதின் வரதானத்தை யாரெல்லாம் மனதில் தாரணை செய்கிறார்களோ, அவர்களின் அடையாளம் இது தான் -- அவர்கள் சதா குஷி மற்றும் ஊக்கம்-உற்சாகத்தினால் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கின்றனர். ஒரு போதும் எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமடைவதில்லை, நின்று விடுவதும் இல்லை. வரதானங்களால் பறந்து கொண்டே இருப்பார்கள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் கீழே தங்கி விடும். பக்கவாட்டுக் காட்சிகளும் (சைடு சீன்கள்) பறப்பவர்களை நிறுத்த முடியாது.

இன்று குழந்தைகள் அனைவர்க்கும், யாரெல்லாம் மனதார, களைப்பற்றவராகிச் சேவை செய்திருக் கிறார்களோ, அந்த சேவாதாரிகள் அனைவர்க்கும் இந்த சீசனின் சேவைக்கான வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மதுபனில் வந்து மதுபனின் அலங்காரம் ஆனீர்கள் அத்தகைய அலங்காரம் ஆகக்கூடிய குழந்தைகளுக்கும் கூட பாப்தாதா வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நிமித்தமாகியுள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கும் கூட, சதா களைப் பற்றவராகி பாப்சமான் தங்களின் சேவைகளால் அனைவர்க்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கான வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மற்றும் ரதத்திற்கும் வாழ்த்துகள்! நாலாபுறமும் உள்ள சேவாதாரிக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்! நிர்விக்னமாகி முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் மற்றும் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த தேசம் மற்றும் வெளி தேசங்களின் அனைத்துக் குழந்தைகளுக்கும் இங்கு வந்திருப்பதற்காக வாழ்த்துகள். மேலும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் வாழ்த்துகள். ஆனால் சதா புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். 6 மாதம் மட்டும் இருந்தால் போதாது. புத்துணர்ச்சியை மேலும் மேலும் பெறுவதற்கு இங்கு வந்து விடுங்கள். ஏனென்றால் பாபாவின் கஜானாவைப் பெறுவதற்கு அனைத்துக் குழந்தைகளுக்குமே எப்போதும் அதிகாரம் உள்ளது. பாபா மற்றும் கஜானா கூடவே உள்ளது மற்றும் சதா இருக்கும். எதை அடிக்கோடிட்டீர்களோ, அதில் விசேஷமாகத் தன்னை உதாரணமாக்கி, பரீட்சையில் கூடுதல் மார்க் பெற வேண்டும். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது. தன்னை உதாரணமாக்க வேண்டும். இதில் முதலில் தன்னை முன்னிறுத்த வேண்டும் (ஓட்டே ஸோ அர்ஜுன்) அதாவது நம்பர் ஒன். அடுத்த முறை பாப்தாதா வரும் போது ஃபரிஸ்தாக்களின் கர்மம், ஃபரிஸ்தாக்களின் பேச்சு, ஃபரிஸ்தாக்களின் சங்கல்பத்தை தாரணை செய்யக்கூடியவராக சதா ஒவ்வொருவரும் தென்பட வேண்டும். அந்த மாதிரி மாற்றம் குழுவில் காணப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அனுபவம் செய்ய வேண்டும் -- இந்த ஃபரிஸ்தாக்களின் சொல், ஃபரிஸ்தாக்களின் கர்மம் எவ்வளவு அலௌகிகமாக உள்ளது! இந்த மாற்றத்தின் நிறைவு விழாவை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். ஒவ்வொருவரும் தங்களின் முழு நாளின் பேச்சை டேப் (ரிக்கார்டு) செய்தால் மிக நன்றாகத் தெரிந்து விடும். சோதித்துப் பார்ப்பீர்களானால் தெரிந்து விடும் -- எவ்வளவு வீணாகப் போகிறது என்று. மனதின் டேப்பில் சோதித்துப் பாருங்கள். ஸ்தூல டேப்பில் அல்ல. சாதாரண வார்த்தை கூட வீணானதில் சேமிப்பாகிறது. 4 சொற்களுக்கு பதிலாக 24 சொற்கள் பேசுவீர்களானால் 20 எதில் சென்றது? சக்தியை சேமியுங்கள். அப்போது உங்களின் இரண்டு சொற்கள் கூட ஆசிர்வாதங்களினுடையதாக, ஒரு மணி நேர சொற்பொழிவின் காரியத்தைச் செய்யும். நல்லது.

நாலாபுறம் உள்ள பலியாகக்கூடிய ஆன்மிக விட்டில் பூச்சிகளுக்கு, பாப்-சமான் ஆவதற்கான திட சங்கல்பத்தின் மூலம் முன்னேறிச் செல்லக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா பறக்கும் கலையின் மூலம் எந்த விதமான பக்கவாட்டுக் காட்சிகளையும் கடந்து செல்லக்கூடிய டபுள் லைட் குழந்தைகளுக்கு ஆன்மிக ஜோதி பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:
நன்மையின் பாவனை மூலம் ஒவ்வோர் ஆத்மாவின் சம்ஸ்காரங்களையும் மாற்றக்கூடிய நிச்சய புத்தி உள்ளவர் ஆகுக.

எப்படி பாபா மீது 100 சதவிகிதம் நிச்சயபுத்தி உள்ளதோ, அவர்களை யாராவது எவ்வளவு தான் மேலே-கீழே ஆக்குவதற்கு முயற்சி செய்தாலும் அவர்கள் அது போல் ஆக மாட்டார்கள். அந்த மாதிரி தெய்வீகப் பரிவாரம் மற்றும் உலகாயத ஆத்மாக்கள் மூலமாக, யாராவது எத்தகைய சோதனை செய்தாலும் கோபக்காரர் ஆகி எதிர்கொண்டாலும் அல்லது யாராவது நிந்தனை செய்தாலும் குறை சொன்னாலும் -- இதிலும் கூட மேலே-கீழே ஆக மாட்டார்கள். இதில் ஒவ்வோர் ஆத்மா மீதும் நன்மையின் பாவனை மட்டும் இருக்க வேண்டும். இந்த பாவனை அவர்களின் சம்ஸ்காரங்களை மாற்றி விடும். இதில் பொறுமையற்றவராக மட்டும் ஆகிவிடக் கூடாது. சமயத்திற்கேற்ற பலன் அவசியம் வெளிப்படும் -- இது டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது.

சுலோகன்:
பவித்திரதாவின் சக்தி மூலம் தன்னுடைய சங்கல்பங்களை சுத்த, ஞான சொரூபமாக்கி, பலவீனங்களை முடித்து விடுங்கள்.