காலை முரளி            03.11.2019          அவ்யக்த பாப்தாதா,                                   மதுபன்

ரிவைஸ்    02.03.1985


 

தற்போதைய ஈஸ்வரிய பிறவி மிகவும் மதிப்புள்ள பிறவியாகும்

 

இன்று இரத்தினத்தை வழங்கும் தந்தை தன்னுடைய மிகவும் மதிப்புள்ள இரத்தினங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இது மிகவும் மதிப்புள்ள இரத்தினங்களின் ஆன்மீக சபை. ஒவ்வொரு இரத்தினமும் மிகவும் மதிப்புள்ளது. தற்சபோதைய உலகத்தின் முழு சொத்துக்களையும் மற்றும் உலகத்தின் அனைத்து பொக்கிஷங்களையும் ஒன்றாக சேர்த்தாலும் அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒவ்வொரு ஈஸ்வரிய இரத்தினமும் பல மடங்கு மதிப்புள்ளது. ஒரு இரத்தினம் உங்களின்ன் உலகத்தின் முழு பொக்கிஷங்களும் ஒன்றுமே இல்லை. நீங்கள் அந்தளவு மதிப்புள்ள இரத்தினங்கள். இந்த மதிப்புள்ள இரத்தினம் இந்த சங்கமயுகத்தைத் தவிர முழுகல்பத்திலும் கிடைக்க முடியாது. சத்யுகத்தில் தேவதையாகுவதற்கான பங்கு இந்த சங்கமயுக தேவதையாவதற்கான பங்கின் எதிரில் இரண்டாம் எண்ணில் வந்து விடுகிறது. நீங்கள் இப்பொழுது ஈஸ்வரனின் குழந்தைகள். சத்யுகத்தில் தேவதைகளின் குழந்தைகளாக இருப்பீர்கள். எப்படி ஈஸ்வரனுக்கு அனைவரையும் விட பெயர் இருக்கிறது, மகிமை இருக்கிறது, பிறவி இருக்கிறது, காரியங்கள் இருக்கிறது, அதே போல் ஈஸ்வரிய இரத்தினங்களின் மற்றும் ஈஸ்வரிய குழந்தைகளின் ஆத்மாவின் மதிப்பும் மிகவும் உயர்ந்தது. இந்த சிரேஷ்ட மகிமை மற்றும் சிரேஷ்ட நினைவின் நினைவுச் சின்னமாக இன்று வரையிலும் நவ இரத்தினங்களின் ரூபத்தில் மகிமை செய்யப்படுகிறது. மேலும் பூஜை செய்யப்படுகிறது. நவ இரத்தினங்களை பல தடைகளை அழிக்கும் இரத்தினங்கள் என்று வர்ணிக்கப்படுகிறது. எப்படிப்பட்ட தடையோ அதே விசேஷம் உள்ள இரத்தினத்தை மோதிரம் செய்து அணிகிறார்கள் மற்றும் லாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள். ஏதாவது ரூபத்தில் அந்த இரத்தினத்தை வீட்டில் வைத்துக் கொள்வார்கள். இப்பொழுது கடைசி ஜென்மம் வரையிலும் விக்ன விநாசக் (தடைகளை அழிப்பவர்) ரூபத்தில் தன்னுடைய நினைவுச் சின்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வரிசைக்கிரமமாகவோ அவசியம் இருக்கிறீர்கள். வரிசைக்கிரமமாக இருந்தபோதிலும் நீங்கள் அனைவருமே மிகவும் மதிப்புள்ளவர்கள் மற்றும் தடைகளை அழிப்பவர்கள். இன்று கூட சிரேஷ்ட சொரூபத்தில் உலகில் உள்ள ஆத்மாக்கள் இரத்தினங்கள் உங்களுக்கு, உங்கள் மீது சுய மரியாதை வைக்கிறார்கள். மிகவும் அன்புடன், தூய்மையுடன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் எப்படியாக இருந்தாலும் தன்னை இந்தளவு தகுதியானவர்; இல்லை என்று நினைத்தாலும் ஆனால் தந்தையோ ஆத்மாக்கள் நீங்கள் தகுதியானவர்; என்று புரிந்து, தன்னுடைய குழந்தையாக ஆக்கி இருக்கிறார் நீ என்னுடையவன் நான் உன்னுடையவன் என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்.. எந்த ஆத்மாவின் மீது தந்தையின் பார்வை விழுந்ததோ, அந்த பிரபுவின் பார்வையின் காரணமாக அந்த ஆத்மா மதிப்புள்ளவராக ஆகியே விடுகிறார். பரமாத்மாவின் திருஷ்டியின் காரணமாக ஈஸ்வரிய படைப்பின், ஈஸ்வரிய உலகத்தின் சிரேஷ்ட ஆத்மாவாக ஆகியே விடுகிறார். பாரஸ்நாத்தின் சம்மந்தத்தில் வருகிறார் என்றால், பாரஸ் அதாவது தங்கத்தின் பிரபாவம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, பரமாத்மா அன்பின் பார்வை கிடைப்பதினால் முழு கல்பத்திலும் சைதன்ய தேவதைகளின் ரூபத்திலோ, அரை கல்பம் ஐட விக்கரகங்களின் ரூபத்திலோ, மற்றும் பல விதமான நினைவுச் சின்னங்களின் ரூபத்தில் எப்படி இரத்தினங்கள் ரூபத்திலும் உங்களின் நினைவு சின்னம் இருக்கின்றதோ, நட்சத்திரங்களின் ரூபத்திலும் உங்களின் நினைவு சின்னம் இருக்கிறது. எந்த ரூபத்திலும் நினைவு சின்னம் இருந்தாலும் முழு கல்பத்திலும் அனைவரின் பிரியமானவர்களாக இருந்திருக்கிறீர்கள். ஏனென்றால் அழியாத அன்புக் கடலின் அன்பின் பார்வையானது முழு கல்பத்திற்கும் அன்பிற்குரியவராக ஆக்கி விடுகிறது. எனவே, பக்த மனிதர்கள் ஒரு விநாடி, அரை விநாடி பார்வைக்காகவும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய பார்வையால் நான் நன்மை அடைந்து விட வேண்டும். என்ற துடிப்பில் இருக்கின்றார்கள். எனவே இந்த நேரத்தில் அன்பின் பார்வை அழியாத அன்பிற்கு உரியவராக ஆக்கிவிடுகிறது. அழியாத பிராப்தி இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. அன்போடு நினைவு செய்கிறார்கள். அன்போடு தன்னுடன் வைத்துக் கொள்கிறார்கள். அன்போடு பார்க்கிறார்கள்.

 

இன்னொரு விசயம், சுத்தம் என்றால் தூய்மை. நீங்கள் இந்த நேரம் தந்தையின் மூலமாக தூய்மையின் பிறப்பு உரிமையின் அதிகாரத்தை அடைகிறீர்கள். தூய்மை மற்றும் சுத்தம் தன்னுடைய இயற்கையான குணம் என்று தெரிந்திருக்கிறீர்கள். எனவே, தூய்மையைக் கடைபிடிக்கும் காரணத்தினால் எங்கு உங்கள் நினைவு சின்னம் இருக்குமோ அங்கு தூய்மை மற்றும் சுத்தம் இப்பொழுது கூட நினைவுச் சின்னத்தின் ரூபத்தில் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அரை கல்பமோ தூய்மையான பாலனை மற்றும் தூய்மையான உலகம் இருக்கவே இருக்கிறது. அரை கல்பம் தூய்மையான ஐன்மம் எடுக்கிறீர்கள், தூய்மையாக வளர்க்கப்படுகிறீர்கள் மற்றும் அரை கல்பம் தூய்மையுடன் பூஜை செய்யப்படுகிறீர்கள்.

 

மூன்றாவது விசயம் மிகவும் உள்ளப்பூர்வமாக, உயர்ந்த விவேகத்துடன், மிகவும் மதிப்புள்ளது என்று புரிந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் இந்த நேரம் சுயம் பகவான் தாய் தந்தையின் ருபத்தில் குழந்தைகள் உங்களை பாதுகாக்கிறார் அதாவது பாலனை செய்கின்றார். எனவே அழியாத பாலனை இருக்கும் காரணத்தினால், அழியாத அன்போடு பாதுகாக்கும் காரணத்தினால் முழு கல்பத்திலும் மிக இராயலாக, அன்புடன், மரியாதையுடன் பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த மாதிரி அன்பு, சுத்தம், தூய்மை அன்புடன் பாதுகாக்கப்படுவதற்கான அழியாத பாத்திரம் ஆனவர் ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் எந்தளவு மதிப்புள்ளவர்கள் என்று புரிந்துகொண்டுள்ளீர்களா? ஒவ்வொரு இரத்தினத்திற்கும் எந்தளவு மதிப்பிருக்கிறது. அப்படி இன்று இரத்ததினங்களை வழங்கும் தந்தை ஒவ்வொரு இரத்தினத்தின் மதிப்பை பார்த்துக் கொண்டிருந்தார். முழு உலகத்தின் எண்ணில் அடங்கா ஆத்மாக்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆனால் 5 பாண்டவர்கள் நீங்கள் அந்த எண்ணிலடங்காதவர்களை விட சக்திசாலியான வர்கள்! அந்த எண்ணிலடங்காதவர்கள் உங்கள் எதிரில் ஒருவருக்குக் கூட சமமானவர்களாக இல்லை நீங்கள் அந்தளவு சக்திசாலியானவர்கள்! அப்படி நீங்கள் எந்தளவு மதிப்புள்ளவர்களாக ஆகிவிட்டீர்கள். தனக்கு இத்ததனை மதிப்பிருக்கிறது என்று தெரிந்திருக்கிறீர்களா? அல்லது தன்னைத்தானே மறந்து விடுகிறீர்களா. எப்பொழுது தன்னைத் தானே மறந்து விடுகிறீர்களோ அப்பொழுது மிகவும் நொந்து போகிறீர்கள். தன்னைத் தானே மறக்காதீர்கள். எப்பொழுதும் தன்னை மிகவும் மதிப்புள்ளவர் என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள். ஆகவே சின்னஞ்சிறிய தவறு கூட செய்யாதீர்கள். மிகவும் மதிப்புள்ளவர்கள் தான் ஆனால் தந்தையின் துணை இருக்கும் காரணத்தினால் மதிப்புள்ளவர்கள், தந்தையை மறந்து விட்டு தன்னை மட்டும் அப்படி நினைத்தருந்தாலும் தவறாகிவிடும். உங்களை அந்த மாதிரி ஆக்குபவரை மறக்காதீர்கள். ஆகிவிட்டீர்கள் ஆனால் ஆக்குபவரின் துணையோடு ஆகியிருக்கிறீர்கள். இது தான் புரிந்து கொள்வதற்கான விதி. ஒருவேளை விதியை மறந்துவிடுகிறீர்கள் என்றால் புரிந்து கொண்டது புரியாததாக மாறிவிடுகிறது. பிறகு நான் எனது என்பது வந்து விடுகிறது. விதியை மறப்பதினால் சித்தியை அதாவது வெற்றியை அனுபவம் செய்ய முடிவதில்லை, எனவே விதிப்பூர்வமாக தன்னை மதிப்புள்ளவன் என்று தெரிந்து உலகத்தின் மூதாதையராக ஆகிவிடுங்கள். நானோ ஒன்றுமே இல்லை என்று நொந்து போகாதீர்கள். நான் ஒன்றுமே இல்லை என்று நினைக்கக் கூட செய்யாதீர்கள். அதேபோல் நான் தான் எல்லாமே என்றும் நினைக்காதீர்தகள்! இரண்டுமே தவறானவை. நான் அப்படி இருக்கிறேன் என்றால், என்னை அந்த மாதிரி ஆக்கியவர் ஆக்கினார். தந்தையை அகற்றி விடுகிறீர்கள் என்றால், பாவம் ஆகிவிடும். தந்தை இருக்கிறார் என்றால் பாவம் இருக்காது. எங்கு தந்தையின் பெயர் இருக்கிறதோ அங்கு பாவத்தின் பெயர் அடையாளம் இருக்காது. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு தந்தையின் பெயர் அடையாளம் இருக்காது. அப்படி தன்னுடைய மதிப்பை புரிந்து கொண்டீர்களா?

 

பகவானின் திருஷ்டிக்கு பாத்திரம் ஆனவர்கள் ஆகியிருக்கிறீர்கள்! பாலனைக்.கு (வளர்ப்பு) பாததிரம் ஆகியிருக்கிறீர்கள்! இது ஒன்றும் சாதாரண விசயம் இல்லை. அழியாத பிறப்புரிமையின் அதிகாரத்தின் அதிகாரி ஆகியிருக்கிறீர்கள், எனவே பிறப்பு உரிமை ஒருபொழுதும் கடினமாக இருக்காது. சகஜமாக பிராப்தியாகும். அதே போலவே யார் அதிகாரி குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தூய்மையைக் கடைப்.பிடிப்பது கடினமாக இராது. கடினம் இருககக்காது என்ற அனுபவம் நிறைந்தவர்கள் நீங்கள்! யாருக்கு தய்மையைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கிறதோ அவர் தன்னுடைய நிலையில் அதிகமாக மேலே கீழே ஆடிக் கொண்டிருப்பார். தூய்மை இயற்கையான குணம், பிறப்புரிமை என்றால் எப்பொழுதுமே சகஐமாக இருக்கும். வெளி உலகத்தில் இருப்பவர்கள் கூட ஏன் தூரமாக ஓடி விடுகிறார்கள்? என்ன காரணத்திற்காக? ஏனென்றால் தூய்மையைப் கடைப்பிடிப்பதை கடினமாக அனுபவம் செய்கிறார்கள், யார் அதிகாரி ஆத்மாக்களாக இல்லையோ அவர்களுக்கு கண்டிப்பாக கடினமாகத்தான் இருக்கும். அதிகாரி ஆத்மாக்கள் வந்த உடனேயே தூய்மை தந்தையின் அதிகாரம், எனவே நான் கண்டிப்பாக துய்மை ஆக வேண்டும் என்ற திட எண்ணத்தை வைப்பார்கள். உள்ளத்தைத தூய்மை கவர்ந்திழுத்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை இந்த வாழ்க்கையில் நடைமுறையில் இருந்துக் கொண்டே எங்காவது மாயா சோதனை செய்வதற்காக எண்ணங்களின் மூலம், கனவின் ரூபத்தில் வருகிறது என்றாலும் கூட அதிகாரி ஆத்மா ஞானம் நிறைந்தவராக இருக்கும் காரணத்தினால் பயப்படமாட்டார்கள். ஆனால் ஞானத்தின் சக்தி மூலம் எண்ணத்தை பரிவர்த்தனை செய்து விடுவார்கள். ஒரு எண்ணத்தின் பின்னால் அநேக எண்ணத்தை உருவாக்க மாட்டார்கள். அம்சத்தை வம்சத்தின் ரூபத்தில் கொண்டு வரமாட்டார்கள். என்ன ஆனது, இது ஆனது இது தான் வம்சம். ஏன் என்பதிலிருந்து வரிசையை (க்யூ) உருவாகிவிடுகிறது. ஏற்கனவே கூறி இருந்தோம் இல்லையா அது வம்சத்தை உருவாக்கிவிடுகிறது. வந்தது மேலும் சதா காலத்திற்காக சென்று விட்டது. சோதிப்பதற்காக வந்தது, நீங்கள் தேர்ச்சி அடைந்து விட்டீர்கள், விசயம் முடிவடைந்தது.

 

மாயா ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? அங்கிருந்து வந்தது! வரக் கூடாது ஏன் வந்து விட்டது? என்ற இந்த வம்சம் இருக்கக் கூடாது. நல்லது வந்துவிட்டால் கூட அதனை உட்கார வைக்காதீர்கள் விரட்டிவிடுங்கள். ஏன் வந்தது என்று அப்படி யோசித்தீர்கள் என்றால் அது வந்து அமர்ந்து விடும். உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்காக, சோதனை செய்வதற்காக வந்தது. வகுப்பில் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான அனுபவி ஆக்குவதற்காக வந்தது. ஏன் வந்தது அந்த மாதிரி வந்தது இந்த மாதிரி வந்தது என்று இப்படி யோசிக்காதீர்கள். பிறகு மாயா அந்த மாதிரியான ரூபம் உடையதாக இருக்குமா என்று யோசிக்கிறார்கள். சிகப்பாக இருக்குமா, பச்சையாக இருக்குமா, மஞ்சளாக இருக்குமா என்ற விஸ்தாரத்தில் சென்று விடுகிறார்கள். ஏன் பயப்படுகிறீர்கள். கடந்து சென்று விடுங்கள். மதிப்புடன் தோர்ச்சி அடைந்தவர் ஆகிவிடுங்கள். ஞானத்தின் சக்தி தான் ஆயுதம்! நீங்கள் மாஸ்டர் சர்வசக்திவான், திரிகால தரிசி, திரி நேத்திரி உங்களுக்கு என்ன குறை இருக்கிறது. உடனே பயப்படாதீர்கள் எறும்பு வந்தால் கூட பயந்து விடுகிறீர்கள். அதிகமாக யோசிக்கிறீர்கள் யோசிப்பது என்றால் மாயாவை விருந்து உபச்சாரம் செய்வது பிறகு அது உங்களிடமே அமர்ந்து விடும். எப்படி வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது அசுத்தமான பொருள் தென்படுகிறது என்றால், என்ன செய்வீர்கள் அங்கு நின்று கொண்டு இது யார் வீசியது ஏன் ஆனது இப்படி ஆகக் கூடாது என்று யோசிப்பீர்களா? அல்லது ஒதுங்கி ஓரமாக சென்று விடுவீர்களா.? அதிகமாக வீணான எண்ணங்களின் வம்சத்தை உருவாக விடாதீர்கள். அம்சத்தின் ரூபத்திலேயே அதை அழித்து விடுங்கள். முதலில் ஒரு வினாடிக்கான விசயமாக இருக்கும், பிறகு அதை பல மணி நேரங்களில், நாட்களாக, மாதங்களாக அதிகரித்து விடுகிறீர்கள். மேலும் ஒரு வேளை ஒரு மாதத்திற்குப் பிறகு என்ன ஆனது என்று கேட்டால், அந்த விசயமோ ஒரு வினாடிக்கானதாக இருக்கும். எனவே பயப்படாதீர்கள். ஆழத்தில் செல்லுங்கள், ஞானத்தின் ஆழத்தில் செல்லுங்கள் விசயத்தின் ஆழத்தில் செல்லாதீர்கள். இந்தளவு உயர்ந்த மதிப்புள்ள இரத்தினங்களை சின்ன சின்ன மணித்துளிகளோடு விளையாடுவதை பாப்தாதா பார்க்கிறார் என்றால், இவர்கள் இரத்தினங்கள் இரத்தினங்களோடு விளையாடுபவர்கள் மண்ணின் தூசிகளோடு விளையாடுகிறார்கள் என்று யோசிப்பார். நீங்கள் இரத்தினங்கள் இரத்தினங்களோடு விளையாடுங்கள்.

 

பாப்தாதா உங்களை எந்தளவு செல்லமாக அன்புடன் வளர்த்திருக்கிறார். பிறகு நீங்கள் மண்ணின் துகள்களை எப்படிப் பார்க்க முடியும்? பிறகு அழுக்காக்கிவிட்டு இப்பொழுது சுத்தப்படுத்துங்கள் சுத்தப்படுத்துங்கள் என்று கூறுகிறீர்கள், பயந்தும் விடுகிறீர்கள் இப்பொழுது நான் என்ன செய்வேன் எப்படி செய்வேன் என்று பயப்படுகிறீர்கள். மண்ணோடு ஏன் விளையாடுகிறீர்கள். அதுவும் மண்ணின் தூசிகள் தரையில் கிடப்பவை. எனவே, எப்பொழுதும் தன்னுடைய மதிப்பை தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

அந்த மாதிரி முழு கல்பத்தின் மதிப்புள்ள ஆத்மாக்களுக்கு, பிரபுவின் அன்புக்கு பாத்திரமான ஆத்மாவிற்கு, பிரபுவின் பாலனைக்கு பாத்திரமான ஆத்மாக்களுக்கு, தூய்மையின் பிறப்புரிமை அதிகாரத்தின் அதிகாரி ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தந்தை மற்றும் நான் என்ற இந்த விதியோடு வெற்றியை அடையக் கூடிய ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் விலைமதிக்கமுடியாத இரத்தினமாகி இரத்தினங்களோடு விளையாடக் கூடிய ராயல் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்!

 

பார்ட்டிகளுடன் சந்திப்பு :

1. எப்பொழுதும் தன்னை தந்தையின் கண்களில் நிரம்பியிருக்கும் ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? கண்களில் யார் நிரம்புவார்கள்? யார் மிகவும் லேசாக புள்ளியாக இருக்கிறார்களோ அவர்கள் தான். அந்த மாதிரி நீங்கள் எப்பொழுதுமே புள்ளியாகி தந்தையின் கண்களில் நிரம்புபவர்கள். அப்படி நீங்கள் பிந்துவாகி தந்தையின் கண்களில் நிரம்புபவர்கள். பாப்தாதா உங்களுடைய கண்களில் நிரம்பியிருக்கிறார். மேலும் நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கண்களில் நிரம்பியிருக்கிறீர்கள். எப்பொழுது கண்களில் பாப்தாதாதான் இருக்கிறார் என்றால், வேறு எதுவுமே தென்படாது. எனவே, எப்போதும் இந்த நினைவின் மூலம் நானும் பிந்துவாகத்தான் இருக்கிறேன் என்று டபுள் லைட்டாக இருங்கள். பிந்துவில் எந்த சுமையும் இருக்காது. இந்த நினைவு சொரூபம் எப்போதுமே முன்னேற வைத்துக் கொண்டே இருக்கும். கண்களின் நடுவில் பார்த்தீர்கள் என்றால், பிந்துதான் தென்படும். பிந்து தான் பார்க்கிறது. பிந்து இல்லையென்றால் கண்கள் இருந்தபொழுதிலும் பார்க்க முடியாது. எனவே எப்பொழுதும் இதே சொரூபத்தில் இருங்கள். பறக்கும் கலையை அனுபவம் செய்யுங்கள். பாப்தாதா குழந்தைகளின் தற்சமயம் எதிரிகாலத்தின் பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். தற்சமயம் எதிர்காலத்தின் அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கான எழுதுகோல் தற்சமயத்தை சிரேஷ்டமாக ஆக்குவதற்கான சாதனம் பெரியவர்களின் சமிக்ஞைகளை எப்பொழுதும் ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே விசேஷ குணம் மூலம் தற்சமயம் மற்றும் எதிர்காலத்தின் அதிர்ஷ்டம் சிரேஷ்டமாக ஆகிவிடும்.

 

2. அனைவரின் நெற்றியில் பாக்கியத்தின் நட்சத்திரம் மின்னிக் கொண்டிருக்கிறது தான் இல்லையா? எப்பொழுதுமே மின்னிக் கொண்டிருக்கிறதா? சில நேரம் அணைந்து அணைந்து மின்னவில்லையே? அகண்ட ஜோதி தந்தையுடன் சேர்ந்து நீங்களும் அகண்ட ஜோதி எப்போதுமே பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஆகிவிட்டீர்கள். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? எப்போதாவது காற்று தீபத்தை மற்றும் நட்சத்திரத்தை அசைப்பதோ இல்லையே? எங்கு தந்தையின் நினைவு இருக்கிறதோ அங்கு அழியாது பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாக இருக்கும். அணைந்து அணைந்து மின்னுவது இருக்காது. மின் விளக்கு கூட அணைந்து அணைந்து எரிகிறது என்றால் அது யாருக்குமே பிடிக்காது எனவே அதனை அணைத்துவிடுவார்கள். எப்பொழுதும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம். எப்பொழுதும் ஞான சூரியன் தந்தையிடமிருந்து ஒளியைப் பெற்று மற்றவர்களுக்கும் நீங்கள் ஒளியைக் கொடுப்பவர்கள். உங்களிடம் சேவைக்கான ஊக்கம் உற்சாகம் எப்போதுமே இருக்க்கிறது. நீங்கள் அனைவருமே சிரேஷ்ட ஆத்மாக்கள். சிரேஷ்ட தந்தையின் சிரேஷ்ட ஆத்மாக்கள்.

 

நினைவின் சக்தி மூலம் வெற்றி சுலபமாக பிராப்தி ஆகிறது. எந்தளவு நினைவு மற்றும் சேவை சேர்ந்தே இருக்கிறது என்றால், நினைவு மற்றும் சேவைக்கான சமநிலை சதா காலத்திற்கான வெற்றியின் ஆசீர்வாதத்தை இயல்பாகவே பிராப்தி செய்விக்கிறது. எனவே, எப்பொழுதும் சக்திசாலியான நினைவு சொரூபத்தின் சூழ்நிலை உருவாவதினால் சக்திசாலியான ஆத்மாக்களின் ஆவாகணம் ஆகிறது. மேலும் வெற்றி கிடைக்கிறது. குடும்ப காரியங்கள் நிமித்தமாக செய்ய வேண்டியவையே! ஆனால் ஈடுபாடு மற்றும் ஆர்வம் தந்தை மற்றும் சேவையிலே இருக்கிறது. குடும்பம் கூட சேவைக்காகத்தான் இருக்கிறது. நீங்கள் உங்களுடைய பற்றுதலின் காரணமாக செய்வதில்லை, டைரக்ஷன் பிரமாணம் செய்கிறீர்கள் எனவே, தந்தையின் அன்புக்கரங்கள் அந்த மாதிரியான குழந்தைகள் கூடவே இருக்கிறது. எப்பொழுதும் குμயில் ஆடுங்கள் பாடுங்கள், இதுதான் சேவைக்கான சாதனம். உங்களுடைய குஷியப் பார்த்து மற்றவர்களும் குஷியை அடைந்துவிட்டார்கள் என்றால், இதுவும் சேவையாகிவிடும். நீங்கள் எந்தளவு பெரும் வள்ளல் ஆக ஆவீர்களோ அந்தளவு உங்களிடம் பொக்கிஷங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று பாப்தாதா குழந்தைகளுக்கு எப்பொழுதுமே கூறுகிறார். பெரும் வள்ளல் ஆக ஆகுங்கள் மேலும் பொக்கிஷங்களை அதிகப்படுத்துங்கள். பெரிய வள்ளல் ஆகி, அளவற்று தானம் செய்யுங்கள். இந்த கொடுப்பது தான் பெறுவது. நல்ல பொருள் ஒன்று கிடைக்கிறது என்றால் அதை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது.

 

எப்பொழுதும் தன்னுடைய பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள். எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது. வீட்டில் அமர்ந்துக் கொண்டே பகவான் கிடைத்து விடுவது என்பதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன தான் இருக்க முடியும். இந்த பாக்கியத்தை நினைவில் வைத்து மகிழ்ச்சியோடு இருங்கள். பிறகு துக்கம் மற்றும் அமைதியின்மை நிரந்தரமாக முடிவடைந்து விடும். எப்போதும் சுகம் சொருபம், அமைதி சொருபம் ஆகிவிடுவீர்கள். யாருடைய பாக்கியத்தை சுயம் பகவானே உருவாக்குகிறார் என்றால், அது எவ்வளவு சிரேஷ்டமாக ஆனது. எனவே தன்னுள் புதிய ஊக்கம் புதிய உற்சாகம் அனுபவம் செய்துக் கொண்டே முன்னேறிச் சென்றுக் கொண்டே இருங்கள். ஏனென்றால் சங்கம யுகத்தில் ஒவ்வொரு நாளுக்கும் புதிய ஊக்கம் புதிய உற்சாகம் இருக்கிறது.

 

ஏதோ போய்க் கொண்டிருக்கிறோம் என்று அப்படி இருக்க வேண்டாம். எப்பொழுதும் புதிய ஊக்கம் புதிய உற்சாகம் எப்பொழுதும் முன்னேற வைத்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளுமே புதியது. எப்பொழுதும் தன்னில் சேவையில் ஏதாவது ஒரு புதுமை அவசியம் வேண்டும். எந்தளவு தன்னை ஊக்கம் உற்சாகத்தில் வைப்பீர்களோ அந்தளவு புதுப்புது உணர்த்துதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நீங்களே வேறு ஏதாவது விசயத்தில் பிசியாக இருந்தீர்கள் என்றால், புதிய உணர்த்துதல் ஏற்படாது. சிந்தனை செய்தீர்கள் என்றால் புதிய ஊக்கம் இருக்கும்.

 

பந்தனத்தில் இருக்கும் பெண்களுக்கு: அன்பு நினைவு கொடுத்துக் கொண்டே பந்தனத்தில் இருக்கும் மாதர்களின் நினைவு எப்பொழுதும் தந்தையிடம் வந்து சேர்கிறது. மேலும் பாப்தாதாவும் அனைத்து பந்தனத்திலிருக்கும் மாதர்களுக்கு யோகா அதாவது நினைவின் ஈடுபாட்டை அக்னி ரூபமாக ஆக்குங்கள் என்று இதைத் தான் கூறுகிறார். எப்போது ஈடுபாடு அக்னி ரூபம் ஆகிவிடுகிறது என்றால், அக்னியில் அனைத்தும் பஸ்மம் ஆகிவிடும். அப்படி இந்த பந்தனமும் ஈடுபாட்டின் அக்னியில் அகன்று விடும். மேலும் சுதந்திர ஆத்மாவாகி எந்த எண்ணத்தை வைப்பீர்களோ அதன் வெற்றிக் கிடைத்து விடும். அன்பானவர்களாக இருக்கிறீர்கள். அன்பின் நினைவு வந்து சேர்கிறது. உங்களுடைய அன்பிற்குப் பதிலாக அன்பும் கிடைக்கிறது. ஆனால் இப்பொழுது நினைவை சக்திசாலியான அக்னி ரூபமாக ஆக்குங்கள். பிறகு நேர் எதிரில் வந்து சேரும் அந்த நாளும் வந்து விடும்.

 

வரதானம் :

எப்பொழுதும் ஆன்மீக ஸ்திதியில் இருந்து மற்றவர்களையும் ஆத்மாவாகப் பார்க்கக் கூடிய ஆன்மீக ரோஜா மலர் ஆகுக !

 

ஆன்மீக ரோஜா மலர் என்றால் யாரிடம் எப்பொழுதும் ஆன்மீக நறுமணம் இருக்கிறதோ அவர் தான். ஆன்மீக நறுமணம் உள்ளவர் எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் அவர் ஆத்மாவைப் பார்ப்பார். உடலைப் பார்க்க மாட்டார். எனவே, நீங்களும் எப்பொழுதும் ஆன்மீக ஸ்திதியிலிருங்கள். மேலும் மற்றவர்களையும் ஆத்மாவாகப் பாருங்கள். எப்படி தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறார், அதே போல் அவருடைய பூந்தோட்டமும் உயர்ந்ததிலும் உயர்ந்தது. நீங்கள் அந்த பூந்தோட்டத்தின் விசேஷ அலங்காரமான ஆன்மீக ரோஜா குழந்தைகள். உங்களுடைய ஆன்மீக நறுமணம் அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்வது.

 

சுலோகன் :

மரியாதை (ஈஸ்வர்ய) மீறி யாருக்காவது சுகம் கொடுத்தீர்கள் என்றாலும், அதுவும் துக்கத்தின் கணக்கில் சேமிப்பாகி விடும்.

 

ஓம்சாந்தி