இனிமையான குழந்தைகளே! ஞானம், யோகத்தின்
சக்தியின் மூலம் வாயுமண்டலத்தை தூய்மையாக ஆக்க வேண்டும்,
சுவதரிசன சக்கரத்தின் மூலம் மாயையின் மீது வெற்றியடைய வேண்டும்.
கேள்வி:
ஆத்மா ஒருபொழுதும் ஜோதியுடன்
ஐக்கியமாகாது என்பது எந்த ஒரு விசயத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது?
பதில்:
ஏற்கெனவே உருவாக்கப்பட்டது தான்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..... என்று கூறு கின்றனர். ஆக
ஆத்மாவானது அவசியம் தனது பாகத்தை திரும்பவும் நடித்துக்
கொண்டிருக் கிறது. ஒருவேளை ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டது எனில்
நடிப்பு முடிந்து விடும், பிறகு அழிவற்ற நாடகம் என்று கூறுவதும்
தவறாகி விடும். ஆத்மா ஒரு பழைய சரீரத்தை விடுத்து மற்றொரு
புதியதை எடுத்துக் கொள்கிறதே தவிர ஐக்கியமாவது கிடையாது.
பாடல்:
ஓ தூரத்திலிருக்கும் வழிப்போக்கனே
........
ஓம் சாந்தி.
இப்பொழுது யார் யோகி மற்றும் ஞானி குழந்தைகளாக இருக்கிறார்களோ,
யாரால் மற்றவர் களுக்கு புரிய வைக்க முடியுமோ அவர்கள் இந்தப்
பாட்டின் பொருளை யதார்த்தமாக புரிந்து கொள்ள முடியும். எத்தனை
மனிதர்கள் இருக்கிறார்களோ அனைவரும் பிணக்குழியில் இருக்கின்றனர்.
யாருடைய ஜோதி அணைந்திருக்கிறதோ, யார் தமோபிரதானமாக இருக்கிறார்
களோ அவர்கள் தான் பிணக்குழியில் இருப்பதாக கூறப்படுகிறது. யார்
ஸ்தாபனை செய்திருந்தார் களோ மேலும் பிறவி பிறவிகளாக பாலனை
அதாவது நிமித்தம் ஆகியிருந்தார்களோ அவர்கள் அனைவரும் தங்களது
பிறப்புகளை முடித்து விட்டனர். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை
எந்த எந்த தர்மம் ஸ்தாபனை ஆனது என்று கணக்கு எடுக்க முடியும்.
எல்லைக்குட்பட்ட நாடகத்திலும் முக்கிய நடிகர், டைரக்டர்,
தயாரிப்பாளருக்கு மரியாதை இருக்கும். எவ்வளவு பரிசுகள் கிடைக்
கின்றன! திறமையைக் காண்பிக்கின்றனர் அல்லவா! உங்களுடையது ஞான
யோகத்தின் திறமை யாகும். மரணம் எதிரில் இருக்கிறது, நாம் இந்த
நாடகத்தில் எவ்வளவு பிறப்புகள் எடுக்கிறோம்? எங்கிருந்து
வந்தோம்? என்பது மனிதர்களுக்குத் தெரியாது. அனைத்து பிறவிகளின்
விளக்கம் நான்-நீங்கள் அறியவில்லை. மற்றபடி இந்த நேரத்தில் நமது
எதிர்காலத்திற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேவதைகளாக ஆவோம், ஆனால் என்ன பதவி அடைவோம்? அதற்கான முயற்சி
செய்ய வேண்டும். இந்த இலட்சுமி நாராயணன் 84 பிறவிகள்
எடுத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது
இவர்கள் அவசியம் இராஜா இராணியாக ஆவார்கள். எதிர்காலத்தையும்
அறிவர். நடைமுறையில் சாட்சாத்காரம் ஏற்படுத்துகின்றார். பக்தி
மார்கத்திலும் சாட்சாத்காரம் ஏற்படுகிறது. அவர்கள் யாரை நினைவு
செய்கிறார்களோ அவர்களது சாட்சாத்காரம் கிடைக்கிறது. கிருஷ்ணரின்
நீல நிறத்தை பார்த்து அதை நினைவு செய்தால் அவ்வாறே சாட்சாத்
காரம் ஏற்பட்டு விடும். மற்றபடி கிருஷ்ணர் இவ்வாறு நீலநிறத்தில்
கிடையாது. மனிதர்களிடம் இந்த விசயங்களின் ஞானம் எதுவும்
இருப்பது கிடையாது. இப்பொழுது நீங்கள் நடைமுறையில்
இருக்கிறீர்கள். சூட்சுமவதனத்தையும் பார்க்கிறீர்கள்,
வைகுண்டத்தையும் பார்க்கிறீர்கள். ஆத்மா மற்றும் பரமாத்மாவின்
ஞானம் இருக்கிறது. ஆத்மாவின் சாட்சாத்காரம் தான் ஏற்படுகிறது.
இங்கு உங்களுக்கு என்ன சாட்சாத்காரம் ஏற்படுகிறதோ அதன் ஞானம்
உங்களிடம் இருக்கிறது. வெளி யில் உள்ளவர்களுக்கு ஆத்மாவின்
சாட்சாத்காரம் ஏற்படலாம், ஆனால் ஞானம் கிடையாது. ஆத்மா தான்
பரமாத்மா என்று அவர்கள் கூறி விடுகின்றனர். ஆத்மா நட்சத்திரம்
போன்று இருக்கிறது. பலருக்கு இவ்வாறு தென்படுகின்றன. எவ்வளவு
மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றன.
மனிதர்களின் சரீரத்தை இந்தக் கண்களால் பார்க்க முடிகிறது.
ஆத்மாவை திவ்ய திருஷ்டியின் மூலம் பார்க்க முடியும்.
மனிதர்களின் உருவம், தோற்றம் விதவிதமாக இருக்கின்றன, ஆத்மாக்கள்
விதவிதமாகக் கிடையாது. அனைத்தும் ஒன்று போலவே இருக்கிறது.
ஒவ்வொரு ஆத்மாவின் பாகம் தான் தனித்தனியாக இருக்கிறது. எவ்வாறு
மனிதர்கள் சிறுவர்கள் பெரியவர்களாக இருக்கிறார்களோ அவ்வாறு
ஆத்மா சிறியது பெரியதாகக் கிடையாது. ஆத்மாவின் உருவ அளவு ஒன்று
தான். ஒருவேளை ஆத்மா ஜோதியில் கலந்து விட்டால் பிறகு எப்படி
பாகத்தை திரும்பவும் நடிக்கும்? ஏற்கெனவே உருவாக்கப்பட்டது
மீண்டும்........ என்று பாடப்பட்டிருக்கிறது. இது அழிவற்ற உலக
நாடகச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதைக்
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கொசுக்களைப் போன்று
ஆத்மாக்கள் திரும்பிச் செல்வார்கள். கொசுக்களை இந்தக் கண்களால்
பார்க்க முடிகிறது. ஆத்மாவை திவ்ய திருஷ்டியில்லாமல் பார்க்க
முடியாது. சத்யுகத்தில் ஆத்மாவின் சாட்சாத்காரத்தின் அவசியம்
இருக்காது. நான் ஆத்மா பழைய சரீரத்தை விடுத்து புது சரீரத்தை
எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வர். பரமாத்மாவை
அறிந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை பரமாத்மாவை அறிந்திருந்தால்
சிருஷ்டிச் சக்கரத்தையும் அறிந்திருக்க வேண்டும். ஆக எங்களையும்
அழைத்துச் செல்லுங்கள் என்று பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கடைசியில் அதிகம் வருதப்படுவர். அனைவரும் அழைப்பு கிடைக்கிறது.
அழைப்பு கொடுப்பதற்கு எவ்வளவு யுக்திகள் உருவாகிக் கொண்டிருக்
கின்றன.
அமைதி அமைதி என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அமைதி
என்பதன் பொருளை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. அமைதி எப்படி
ஏற்படும்? என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு செக்கில் கடுகு
அரைக்கப்பட்டு விடுகிறதோ அவ்வாறு அனைவரின் சரீரமும் விநாசத்
தின் பொழுது அழிந்து விடும். ஆத்மாக்கள் நசுங்காது. அது சென்று
விடும். ஆத்மாக்கள் கொசுக் கூட்டம் போன்று ஓடிவிடும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது. அனைத்து பரமாத்மாக்களும் ஓடிவிடும் என்று
எழுதப்படவில்லை. மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது.
ஆத்மா மற்றும் பரமாத்மாவிற்குள் என்ன வித்தியாசம் இருக்கிறது?
என்பதையும் அறியவில்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் என்று
கூறுகின்றனர் எனில் அவ்வாறு சகோதரன் சகோதரனாக இருக்க வேண்டும்.
சத்யுகத்தில் சகோதரன் சகோதரனாக அதாவது சகோதரன் சகோதரிகள்
அனைவரும் தங்களுக்குள் பால் பாயாசம் (இனிமையாக) போன்று
இருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அங்கு உப்பு
தண்ணீருக்கான விசயமே இருக்காது. இங்கு பாருங்கள் இப்பொழுது
இனிமையாக (பால் பாயாசம் போன்று) இருப்பார்கள், உடனேயே உப்பு
தண்ணீராக ஆகிவிடு கின்றனர். ஒருபுறம் சீனர்கள், இந்துக்கள்
சகோதரா சகோதரர்கள் என்று கூறுகின்றனர், பிறகு அவர்களது பூதத்தை
உருவாக்கி எரிக்கின்றனர். உலகாய சகோதரா சகோதரர் களின் இந்த
நிலையைப் பாருங்கள்! ஆன்மீக சம்பந்தத்தை அறியவேயில்லை. தன்னை
ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று உங்களுக்குத் தந்தை
புரிய வைக்கின்றார். தேக அபிமானத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது.
சிலர் தேக அபிமானத்தில் மாட்டிக் கொள்கின்றனர். தந்தை
கூறுகிறார் - தேக சகிதமாக தேகத்தின் சம்பந்தங்கள் அனைத்தையும்
விட்டு விடுங்கள். இந்தக் கட்டிடம் போன்ற அனைத்தையும் மறந்து
விடுங்கள். உண்மையில் நீங்கள் பரந்தாம நிவாசிகள். எங்கிருந்து
நடிப்பு நடிக்க வந்தோமோ இப்பொழுது அங்கு செல்ல வேண்டும். பிறகு
நான் உங்களை சுகத்திற்கு அனுப்பி வைத்து விடுவேன். ஆக தந்தை
கூறுகிறார் - தகுதியானவர்களாக ஆக வேண்டும். இறைவன் இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். கிறிஸ்துவிற்கு எந்த
இராஜ்யமும் கிடையாது. எப்பொழுது லட்சக்கணக்கில் கிறிஸ்தவர்கள்
உருவாகி விடுகிறார்களோ அப்பொழுது தனது இராஜ்யம்
உருவாக்கியிருப்பார். இங்கு உடனேயே சத்யுக இராஜ்யம் உருவாகி
விடுகிறது. எவ்வளவு எளிய விசயமாகும்! உண்மையில் பகவான் வந்து
ஸ்தாபனை செய்திருக் கிறார்! கிருஷ்ணரின் பெயர் வைத்ததன் மூலம்
அனைத்தையும் குழப்பி விட்டனர். பழமையான இராஜயோகம் மற்றும் ஞானம்
என்று கீதையில் இருக்கிறது. அது மறைந்து விடுகிறது. ஆங்கில
வார்த்தை நன்றாக இருக்கிறது. பாபாவிற்கு ஆங்கிலம் தெரியாது
என்று நீங்கள் நினைக்கலாம். நான் எத்தனை மொழிகளில் அமர்ந்து
பேசுவேன் என்று பாபா கேட்கிறார்! முக்கியமானது ஹிந்தி யாகும்.
ஆக நான் ஹிந்தியில் தான் முரளி கூறுகிறேன். யாருடைய சரீரத்தை
தாரணை செய்திருக்கிறேனோ அவர் ஹிந்தி மட்டுமே அறிவார். ஆக இவரது
மொழி எதுவோ அதைத் தான் நானும் பேசுகிறேன். வேறு எந்த
மொழிகளிலும் கற்பிக்க மாட்டேன். நான் பிரென்ஞ்சில் கூறினால்
பிறகு இவர் எப்படி புரிந்து கொள்வார்? முக்கியமானது இவரது (பிரம்மாவின்)
விசயமாகும். இவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா! வேறு
ஒருவரின் சரீரத்தை எடுக்க மாட்டேன்.
என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று பாட்டிலும்
கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் தந்தை மற்றும் தந்தையின் வீடு
பற்றி யாருக்கும் தெரியவில்லை. கட்டுக்கதைகளை கூறிக்கொண்டிருக்
கின்றனர். பல மனிதர்களின் பல வழிகள் உள்ளன. ஆகையால் குழந்தைகள்
குழப்பத்தில் உள்ளனர். தந்தை எவ்வாறு அமர்ந்து புரிய வைக்கிறார்
பாருங்கள்! இந்த சரணம் (பாதம்) யாருடையது? (சிவபாபாவினுடையது)
அவர் நம்முடையவர் அல்லவா! நான் கடனாகக் கொடுத்திருக்கிறேன்.
சிவபாபா தற்காலிகமாக பயன்படுத்துகின்றார். உண்மையில் இந்த சரணம்
என்னுடையது அல்லவா! சிவனின் கோயிலில் சரணம் (பாதம்) வைப்பது
கிடையாது. கிருஷ்ணரின் சரணம் தான் வைக்கின்றனர். சிவன்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார், ஆக அவருக்கு சரணம் எங்கிருந்து
வரும்! ஆம் சிவபாபா கடனாக எடுத்திருக்கிறார்.. சரணம் பிரம்மா
வினுடையது ஆகும். கோயில்களில் நந்தி காண்பித்திருக்கின்றனர்.
நந்தியின் மீது எப்படி சவாரி செய்ய முடியும்? நந்தியில் சிவபாபா
எப்படி அமர முடியும்? சாலிகிராமாக இருக்கும் ஆத்மா மனித உடலில்
சவாரி செய்கிறது. தந்தை கூறுகின்றார் - நான் எந்த ஞானம்
உங்களுக்கு கூறுகிறேனோ அது மறைந்து விட்டது. மாவில் உப்பு
போன்று ஆகிவிட்டது. அதனை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நான்
வந்து தான் அதன் சாரத்தைப் புரிய வைக்கிறேன். நான் தான் ஸ்ரீமத்
கொடுத்து சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தை புரிய
வைத்திருந்தேன். அவர்கள் தேவதைகளிடம் சுவதரிசன சக்கரத்தைக்
காண்பித்து விட்டனர். அவர்களிடம் ஞானம் கிடையாது. இவையனைத்தும்
ஞான விசயமாகும். ஆத்மாவிற்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம்
கிடைக்கிறது. இதன் மூலம் மாயையின் கழுத்து துண்டிக்கப்படுகிறது.
அவர்கள் சுவதரிசன சக்கரத்தை அசுரர்களுக்காக பயன்படுத்தியதாகக்
காண்பித்து விட்டனர். இந்த சுவதரிசன சக்கரத்தின் மூலம் நீங்கள்
மாயையின் மீது வெற்றி அடைகிறீர்கள். எங்கிருக்கும் விசயத்தை
எங்கு கொண்டு சென்று விட்டனர்! உங்களிலும் கூட மிகச் சிலரே
இந்த விசயங்களை தாரணை செய்து மற்றவர்களுக்குப் புரிய
வைக்கின்றனர். ஞானம் உயர்ந்தது ஆகும். இதற்கு நேரம்
தேவைப்படுகிறது. கடைசியில் உங்களிடம் ஞானம் மற்றும் யோகாவின்
சக்தி இருக்கும். இது நாடகத்தில் பதிவாகி இருக்கிறது. அவர்களது
புத்தியும் சுறுசுறுப்பாகி விடுகிறது. நீங்கள் வாயுமண்டலத்தைத்
தூய்மை யாக்குகிறீர்கள். இந்த ஞானம் எவ்வளவு குப்தமானதாக
இருக்கிறது! அஜாமில் போன்ற பாவி களையும் திருத்தம் செய்ததாக
எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பொருளையும் புரிந்து கொள்வது
கிடையாது. ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டதாக, கடலில் கலந்து
விட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். ஐந்து பாண்டவர்கள் மலையில்
மறைந்து விட்டனர். பிரளயம் ஏற்பட்டு விட்டது. அவர் இராஜயோகம்
கற்றதாக ஒருபுறம் காண்பிக்கின்றனர், பிறகு பிரளயம் காண்பித்து
விட்டனர், மேலும் கிருஷ்ணர் கால் விரலை சப்பிக் கொண்டு ஆல
இலையில் வந்ததாகவும் காண்பிக் கின்றனர். அதன் பொருளையும்
புரிந்து கொள்வது கிடையாது. அவர் கர்ப மாளிகையில் இருந்தார்.
குழந்தைகள் விரலை சப்புவர். எங்கிருக்கும் விசயத்தை எங்கு
கொண்டு வைத்து விட்டனர்! மனிதர்கள் என்ன கேட்டாலும் சத்தியம்
சத்தியம் என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர்.
சத்யுகத்தை யாரும் அறியவில்லை. எந்த பொருள் இல்லவே இல்லையோ
அது தான் பொய் என்று கூறப்படுகிறது. எவ்வாறு பரமாத்மாவின் பெயர்,
உருவம் கிடையாது என்று கூறுகின்றனர்! ஆனால் அவருக்கு பூஜை
செய்து கொண்டு இருக்கின்றனர். ஆக பரமாத்மா மிகச் சூட்சுமமானவர்.
அவர் போன்று சூட்சுமமானவர் வேறு யாரும் கிடையாது. பிந்துவாக
இருக்கின்றார். சூட்சுமமாக இருக்கின்ற காரணத்தினால் யாரும்
அறியவில்லை. ஆகாயமும் சூட்சுமமானது என்று கூறப்படுகிறது, ஆனால்
அதைப் பார்க்க முடிகிறது. 5 தத்துவம் ஆகும். 5 தத்துவங்களினால்
ஆன சரீரத்தில் வந்து பிரவேசிக்கின்றார். அவர் எவ்வளவு
சூட்சுமமானவராக இருக்கின்றார்! பிந்துவாக இருக்கின்றார்.
நட்சத்திரம் எவ்வளவு சிறியதாக இருக்கிறது! இங்கு பரமாத்ம
நட்சத்திரம் அருகில் வந்து அமர்கின்ற பொழுது தான் பேச முடியும்.
எவ்வளவு சூட்சுமமான விசயமாகும்! மந்த புத்தியுடையவர்கள்
சிறிதும் புரிந்து கொள்ள முடியாது. தந்தை எவ்வளவு நல்ல நல்ல
விசயங்களை புரிய வைக்கின்றார்! நாடகப்படி யார் கல்பத்திற்கு
முன்பு பாகம் நடித்திருக் கிறார்களோ அவர்கள் தான் நடிப்பார்கள்.
பாபா தினமும் வந்து புதுப்புது விசயங்களைக் கூறு கின்றார்
என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். ஆக புது ஞானம்
ஆகிவிடுகிறது அல்லவா! ஆக தினமும் படிக்க வேண்டும். தினமும்
யாராவது வரவில்லையெனில் நண்பனிடம் சென்று இன்று வகுப்பில் என்ன
நடந்தது? என்று கேட்பர். இங்கு படிப்பதையே சிலர் விட்டு
விடுகின்றனர். அழிவற்ற ஞான ரத்தினங்களின் ஆஸ்தி தேவையில்லை
என்று கூறிவிடுகின்றனர். அட, படிப்பை விட்டு விட்டீர்கள் எனில்
உங்களது நிலை என்ன ஆகும்? தந்தையிடம் என்ன ஆஸ்தி அடைவீர்கள்?
அதிஷ்டம் இல்லை, அவ்வளவு தான். இங்கோ ஸ்தூல செல்வங்களுக்கான
விசயம் ஏதுமில்லை. ஞானப் பொக்கிஷம் தந்தையிட மிருந்து
கிடைக்கிறது. அந்த செல்வங்கள் அனைத்தும் விநாசம் ஆகப்போகிறது.
அதன் போதையில் யாரும் இருக்க முடியாது. தந்தையிட மிருந்து தான்
ஆஸ்தி அடைய வேண்டும். உங்களிடம் கோடிக்கணக்கான செல்வங்கள்
இருக்கலாம், ஆனால் அதுவும் மண்ணோடு மண்ணாகி விடும். அனைத்து
விசயங்களும் இந்த நேரத்திற்கானது ஆகும். சிலருடைய செல்வம்
மண்ணோடு மண்ணாகும், சிலருடையது நெருப்பில் அழிந்து
விடும்.யாருக்கு அதிஷ்டம் இருக்கிறது அவர்கள்
பயன்படுத்துவார்கள், அதிஷ்ட மற்றவர் களுடையது சாம்பலாகி விடும்
..... என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நேரத்திற்கான விசயம்
பின் நாட்களில் நடை பெற்று வருகிறது. இப்பொழுது விநாசம் ஆக
வேண்டும். விநாசத்திற்குப் பிறகு ஸ்தாபனை ஆகும். இப்பொழுது அவர்
ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார். அது நமது இராஜ்ஜியமாகும்.
நீங்கள் மற்றவர் களுக்காக செய்வது கிடையாது. என்ன செய்தாலும்
அது தனக்காகத் தான் செய்கிறீர்கள். யார் ஸ்ரீமத்படி
நடக்கின்றார்களோ அவர்கள் எஜமானர்களாக ஆவார்கள். நீங்கள் புது
உலகில் புது பாரதத்திற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். புது உலகம்
என்றால் சத்யுகத்தில் நீங்கள் எஜமானர்களாக இருந்தீர்கள்.
இப்பொழுது இது பழைய உலகமாகும். பிறகு புது உலகிற்காக நீங்கள்
முயற்சி செய்யப்படுகிறீர்கள். புரிந்து கொள்வதற்கு எவ்வளவு
நல்ல நல்ல விசயங்கள் இருக்கின்றன! ஆத்மா, பரமாத்மாவிற்கான ஞானம்,
செல்ஃப் ரியலைசேஷன் (தன்னை அறிதல்) தனது தந்தை யார்? பாபா
கூறுகிறார் - நான் வருவதே ஆத்மாக்களாகிய உங்களுக்கு கற்றுக்
கொடுப்பதற்காக.இப்பொழுது தந்தையை உணர்ந்திருக் கிறோம் தந்தையின்
மூலமாக. தந்தை புரிய வைக்கின்றார் - நீங்கள் எனது செல்லமான
குழந்தைகள். கல்பத்திற்குப் பிறகு ஆஸ்தியடைவதற்காக மீண்டும்
வந்து சந்தித்திருக்கிறீர்கள். ஆக முயற்சி செய்ய வேண்டும்
அல்லவா! இல்லையெனில் அதிகம் பட்சாதப்பட வேண்டி யிருக்கும்.
அதிக தண்டனை அடைய வேண்டியிருக்கும். யார் குழந்தையாக ஆன பின்பு
தவறான காரியங்கள் செய்கிறார்களோ அவர்களைப் பற்றி கேட்கவே
கேட்காதீர்கள். நாடகத்தில் பாபாவின் பாகம் எவ்வளவு இருக்கிறது
என்பதைப் பாருங்கள்! அனைத்தும் கொடுத்து விட்டார். பிறகு பாபா
கூறுகின்றார் - எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு திரும்பி
கொடுப்பார். முன்பு நீங்கள் மறைமுகமாக கொடுத்தீர்கள் எனில்
எதிர்காலத்தில் ஒரு பிறப்பிற்காக கொடுத்தேன். இப்பொழுது
நேரடியாக கொடுக்கிறீர்கள் எனில் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு
காப்பீடு செய்து விடுகிறேன். நேரடியாக, மறைமுகமாக இருப்பதில்
எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! அவர்கள் துவாபர,
கலியுகத்திற்காக ஈஸ்வரனிடம் காப்பீடு செய்கின்றனர். நீங்கள்
சத்யுகம் திரேதாவிற்காக காப்பீடு செய்கிறீர்கள். நேரடியாக
இருக்கின்ற காரணத்தினால் 21 பிறவிகளுக்குக் கிடைக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் வரிசைக்கிரகமான
முயற்சிக்குத் தகுந்தவாறு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.