03.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! ஞானம் மற்றும் யோகத்துடன் கூடிய உங்களுடைய நடத்தை கூட மிகவும் நன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு பூதமும் உள்ளே இருக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பூதங்களை விரட்டக் கூடியவர்.

 

கேள்வி:

நல்ல குழந்தைகளுக்கு எந்த போதை நிலையாக இருக்கும்?

 

பதில்:

பாபாவிடமிருந்து இரட்டை கிரீடம், உலகத்திற்கே அதிபதியாகக் கூடிய சொத்து அடைந்துக் கொண்டிருக்கிறோம். இந்த போதை நல்ல குழந்தைகளுக்கு நிலையாக இருக்கும். ஆனால் காமம், கோபம் என்ற பூதம் உள்ளுக்குள் இருந்தால் இந்த போதை இருக்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகள் பாபாவிற்கு மதிப்புக் கொடுக்க முடியாது. ஆகவே முதலில் பூதங்களை விரட்ட வேண்டும். தன்னுடைய நிலையை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

 

பாட்டு:

யார் வந்தது என்னுடைய மனம் என்ற வாயிலில்...........

 

ஓம் சாந்தி.

இதன் பொருள் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் அதுவும் வரிசைக் கிரமத்தில் தான். ஏனென்றால் பரம்பிதா பரமாத்மாவிற்கு ஸ்தூலமான அல்லது சூட்சுமமான சித்திரம் இல்லை. தேவதைகள் சூட்சுமமானவர்கள் அவர்கள் மூவர் ஆவர். அவர்களையும் விட மிக சூட்சுமமானவர் பரமாத்மா ஆவார். இப்போது , பரம்பிதா பரமாத்மா என்று யார் கூறுகிறார்கள்? ஆத்மா. பரம பிதா பரமாவிற்கு பரம் ஆத்மா என்கிறார்கள். லௌகீக தந்தைக்கு ஆத்மா பரம பிதா என்று கூற முடியாது. பாரலௌகீக பரம பிதா பரமாத்மாவை நினைவு செய்யும் போது ஆத்ம அபிமானி நிலை என்று கூறப்படுகிறது. தேகத்துடன் தொடர்புடைய தந்தையின் நினைவு வருகிறது. அவர் ஆத்மாவுடன் தொடர்புடைய தந்தையாவர். இப்போது அவர் வந்திருக்கிறார். ஆத்மா புத்தியின் மூலமாக அறிந்துக் கொள்கிறது. ஆத்மாவில் புத்தி இருக்கிறது அல்லவா? எனவே பரமபிதா பரமாத்மா நிச்சயமாக பாரலௌகீக தந்தையாவார். அவருக்கு ஈஸ்வர் என்றும் பெயர். இப்போது பாபா இந்த வினாத் தாளை தயார் செய்திருக்கிறார். இதை வைத்து குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைப்பது எளிதாகும். விண்ணப்பங்கள் நிரப்பியது போன்று, கேள்விகளைக் கேட்கலாம். அவர் ஞானம் நிறைந்தவர் என்றால் நிச்சயம் ஆசிரியர் கூட அல்லவா? ஆத்மா தான் சரீரத்தை ஏற்கிறது. மேலும் சரீரத்தின் மூலமாகப் புரிய வைக்கிறது. எனவே குழந்தைகள் எளிதாக்கி புரிய வைப்பதற்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஞானம் சொல்லக் கூடிய குழந்தைகளின் நிலை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். சிலருக்குள் ஞானம் மிகவும் நன்றாக இருக்கலாம், யோகமும் நன்றாக இருக்கலாம், ஆனால் கூடவே நடத்தையும் நன்றாக இருக்க வேண்டும். யாருக்குள் காமம், கோபம், பேராசை, மோகம், அகங்காரம் என்ற பூதம் இல்லையோ அவர்களுக்குள் தெய்வீக நடத்தை இருக்கும். இது மிகப்பெரிய பூதம். குழந்தைகளுக்குள் எந்த பூதமும் இருக்கக் கூடாது. நாம் பூதத்தை விரட்டக் கூடியவர்கள். அலைந்துக் கொண்டிருக்கும் அசுத்த ஆத்மாக்களை பூதம் என்பார்கள். அந்த பூதத்தை விரட்டக்கூடிய உஸ்தாத் (திறமை உள்ளவர்கள்) கூட இருக்கிறார்கள். 5 விகாரங்கள் என்ற இந்த பூதத்தை பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் விரட்ட முடியாது. அனைவரின் பூதங்களையும் விரட்டக் கூடியவர் ஒருவரே. அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடியவரும் ஒருவரே. இராவணனிடமிருந்து விடுவிக்கக் கூடியவரும் ஒருவரே. இது மிகப் பெரிய பூதம் ஆகும். இவருக்குள் காமம் என்ற பூதம் இருக்கிறது, இவருக்குள் மோகம், அசுத்த அகங்காரம் என்ற பூதம் இருக்கிறது, என்று கூறப்படுகிறது. அனைவரையும் இந்த பூதங்களிடமிருந்து விடுவிக்கக் கூடியவர், லிபரேட்டர் பரம்பிதா பரமாத்மா ஒருவரே ஆவார். இச்சமயம் அனைவரையும் விட சக்திசாலி நிலையில் இருப்பவர்கள் கிறிஸ்துவர்கள் என உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய ஆங்கில மொழியின் எழுத்துக்களும் மிகவும் நன்றாக இருக்கிறது. யாரெல்லாம் ராஜாக்களாக இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். தேவதைகளின் மொழியை யாரும் அறியவில்லை. நமது குழந்தைகள் முன்பு அனைத்தையும் தெரிந்து கொண்டுவந்து கூறினார்கள். இரண்டு, நான்கு நாட்கள் தியானத்தில் இருந்தார்கள். இப்போது கூட யாராவது புத்திசாலி சந்தேசியாக இருந்தால் அவ்விடத்தின் மொழியைப் பார்த்துக் கூறலாம்.

 

குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தின் கதையைச் சொல்லுங்கள். பாரதம் சதோபிரதானமாக இருந்தது. இப்போது தமோபிரதானமாக பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரியாக மாறியிருக்கிறது. பாரதத்தில் தேவதைகளின் சித்திரங்கள் நிறைய இருக்கிறது. குருட்டு நம்பிக்கையுடன் பூஜிக்கிறார்கள். வாழ்க்கை வரலாற்றை அறியவில்லை. நாம் அனைவரும் நடிகர்கள் என்றால் நாடகத்தின் டைரக்டரைத் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே தான் வினாக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போப்பிற்கு கூட இவ்வாறு எழுதலாம்-இந்த விநாசத்தின் பொருட்களை நிறுத்துங்கள் என உங்கள் சீடர்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு நீங்கள் கூறுவதை யாரும் ஏன் ஏற்கவில்லை? நீங்கள் அனைவருக்கும் குருவாக இருக்கிறீர்கள், உங்களுக்கு நிறைய மகிமை இருக்கிறது. இருப்பினும் இதை ஏன் ஏற்காமல் இருக்கிறார்கள். காரணம் உங்களுக்குத் தெரியாது. நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இவர்கள் யாரும் உங்களின் வழியில் இல்லை. இந்த ஈஸ்வரிய வழிப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆதாம் ஏவாள் மூலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இறைவன் ஞானம் நிறைந்தவர் ஆவார். அவர் குப்தமாக (மறைவாக) இருக்கிறார். நிச்சயமாக அவருடைய சேனை அவர் வழிப்படி நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இவ்வாறெல்லாம் புரிய வைக்க வேண்டும். ஆனால் குழந்தைகளுக்குள் இவ்வளவு விசாலமான புத்தி இல்லை. எனவே திருகை (ஸ்குரு) டைட் செய்ய வேண்டியிருக்கிறது. என்ஜின் குளிர்ச்சியாகி விட்டால் அதை துரிதப்படுத்துவதற்கு கரியைப் போடுகிறார்கள். அது போல இதுவும் ஞானத்தின் கரியாகும். பரம்பிதா பரமாத்மா அனைவரையும் விட பெரியவர். அனைவரும் அவரை வணங்குவதற்காக வருவார்கள். போப் தான் அனைவரையும் விட சக்திசாலி என நினைக்கிறார்கள். போப்பிற்கு எவ்வளவு மரியாதை கொடுகிறார்களோ அவ்வளவு வேறு யாருக்கும் கொடுப்பதில்லை. அப்பாவைப் பற்றியே தெரியவில்லை. அவர் குப்தமாக இருக்கிறார். அவரை குழந்தைகள் மட்டும் தான் அறிகிறார்கள். மேலும் பதவியும் கொடுக்கிறார். ஆனால் மாயை இப்படிப்பட்ட குழந்தைகளையும் தந்தைக்கு மரியாதை கொடுக்க விடுவதில்லை. பாபா விஷ்வத்திற்கு அதிபதியாக்குகிறார். இந்த போதை வெளியே சென்றதும் காணாமல் போகிறது. நாம் ஏன் பாபாவிடமிருந்து இரட்டை கிரீடத்தின் சொத்து அடையக் கூடாது இது நல்ல குழந்தைகளின் பெருமிதம் ஆகும். ஆனால் நிறைய குழந்தைகளுக்குள் காமம்,கோபம், பேராசை என்ற பூதங்கள் வந்து விடுகிறது. பாபா முரளியை நடத்துகிறார் என்றால் உள்ளுக்குள் காமத்தின் லேசான போதை இருக்கிறது என உள்ளே தோன்றுகிறது. ஒரு புறம் நன்கு உறுதி மிக்கதாக இருந்தால் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. சில இடங்களில் பெண்கள் சக்திசாலியாக இருக்கிறார்கள், சில இடங்களில் ஆண்கள். பாபாவிடம் அனைத்து விதமான செய்திகளும் வருகிறது. சிலர் உண்மையான மனதோடு எழுதுகிறார்கள். உள்ளும் புறமும் மிகவும் சுத்தாக இருக்க வேண்டும். சிலர் வெளியில் உண்மையாக, உள்ளே பொய்யாக இருக்கிறார்கள். பல பேருக்கு புயல் வருகிறது. பாபா எனக்கு காமத்தின் புயல் வந்தது, ஆனால் தப்பித்து விட்டேன் என எழுதுகிறார்கள்.ஒரு வேளை எழுதவில்லை என்றால் ஒன்று தண்டனை, இரண்டாவது அந்த பழக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடைசியில் விழுந்து விடுவார்கள். பாபாவின் குழந்தைகளுக்குள் நம்பிக்கை இருக்கிறது அல்லவா? சிறிதளவு கிரகச்சாரம் இருந்தாலும் அது இறக்கி விடுகிறது. சிலர் இன்று நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறார்கள், நாளை மயங்கிப் போகிறார்கள், அல்லது தொண்டை அடைத்து விடுகிறது. நிச்சயமாக ஏதாவது தவறு செய்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான கண்டத்திற்கு அதிபதி ஆவார்கள். பொய் பேசினால் நோய் அதிகமாகி உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

 

குழந்தைகள் மிகவும் யுக்தியோடு பரம்பிதா பரமாத்மாவிற்கும் உங்களுக்கும் என்ன உறவு என்பது போன்ற வினாக்களை எழுத வேண்டும். தந்தை என்றால் சர்வ வியாபி என்பது கிடையாது. அவர் அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல், பதீத பாவனர் கீதையின் பகவான் என்றால் நிச்சயமாக வந்து ஞானம் கொடுத்திருப்பார். ஒரு வேளை இவ்வாறு நடந்திருந்தால் அவருடைய வாழ்க்கைக் கதையை அறிகிறீர்களா? அறியவில்லை என்றால் சொத்து கிடைக்காது. தந்தையிடமிருந்து நிச்சயமாக சொத்து கிடைக்கும். பிறகு இரண்டாவதாக பிரஜாபிதா பிரம்மா மற்றும் அவருடைய வாய் வழி வம்சம் பற்றித் தெரியுமா என கேள்வி கேளுங்கள். சரஸ்வதி என்ற பெயருடையவர் தான் ஞான ஞானேஸ்வரி. அவருக்கு கல்விக்கு அரசி என்று பெயர். இவர் ஜகதம்பா ஆவார். எனவே, நிச்சயமாக அவருக்கு குழந்தைகள் கூட இருப்பார்கள். தந்தையும் இருப்பார், ஞானம் கொடுப்பவர் அவர் தானே! இப்போது இந்த பிரஜாபிதா மற்றும் ஜகதம்பா யார்? அவருக்கு தன லஷ்மி என்றும் கூறுகிறார்கள். அப்படி என்றால் ஞான ஞானேஸ்வரி கிடையாது. இந்த பிரம்மா சரஸ்வதி தான் ராஜராஜேஸ்வரி ஆகிறார்கள். எனவே அவருடைய குழந்தைகள் கூட நிச்சயமாக சொர்க்கத்திற்கு அதிபதி ஆகிறார்கள். இப்போது இது சங்கமம் ஆகும். கும்பம். அந்த கும்ப மேளோவில் பாருங்கள் என்ன செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் அர்த்தம் மற்றும் இதற்கும் இரவு  பகல் வித்தியாசம் இருக்கிறது. அங்கு தண்ணீர் ஒடக் கூடிய நதியும் கடலும் சந்திக்கும் மேளா ஆகும். இது ஞானக் கடலில் இருந்து வெளி வந்த மனித கங்கைகளின் மேளாவாகும். தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மையாக மாறக் கூடியவர் யார் என்ற கேள்வி கூட கேட்கப்படுகிறது. தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா. எனவே தான் கேட்கிறார்கள். இந்த தாய் தந்தையின் ஞானத்தினால் இராஜ ராஜேஸ்வரி ஆகிறீர்கள். ஈஸ்வரன் சர்வ வியாபி என்பதால் வாய் இனிக்குமா என்ன? இப்போது உங்களுக்கு பக்தியின் பலன் ஞானம் கிடைக்கிறது. இப்போது பகவானே படிக்க வைக்கின்றார் என்றால் ஏமாற்றம் அடைவது நின்று விடுகிறது. குழந்தைகளே! அசரீரி ஆகுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்மாவிற்கு ஞானம் கிடைக்கிறது. இப்போது ஆத்மா நாம் திரும்ப பாபாவிடம் செல்ல வேண்டும் என கூறுகிறது. பிறகு பலனாக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். இந்த வினாக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. அனைவரின் பாக்கெட்டிலும் இருக்கட்டும். சேவை செய்யக் கூடிய குழந்தைகள் தான் இந்த விஷயங்களைப் பற்றி சிந்தனை செய்வார்கள். குழந்தைகளுக்காக பாபா எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளே! உங்களுடைய எதிர் காலத்தை உயர்ந்ததாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என பாபா கூறுகின்றார். இல்லையென்றால் கல்ப கல்பமாக பதவி குறைந்து போகும். இந்த பாபா மகா ராஜா மகாராணி ஆவது போல் குழந்தைகளும் ஆக வேண்டும். ஆனால் தங்களுக்குள் நிச்சயம் இருக்க வேண்டும். இராஜாக்களுக்குள் மிகவும் சக்தி இருக்கிறது. அங்கே சுகமே சுகம் தான் இருக்கிறது. ராஜா ஆகக் கூடியவர்கள் கூட ஈஸ்வரனின் பெயரில் தானம் புண்ணியம் செய்வதால் தான் ஆகிறார்கள். ராஜாவின் கட்டளைப்படி அனைத்து மக்களும் நடப்பார்கள். இச்சமயம் பாரத வாசிகளுக்கு ராஜா யாரும் இல்லை. பஞ்சாயத்து இராஜ்யம் நடக்கிறது. எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள்.

 

நிறைய குழந்தைகளுக்கு புயல் வருகிறது என பாபாவிற்கு தெரியும். ஆனால் செய்தியை குழந்தைகள் தெரிவிப்பதில்லை. இப்படி புயல் வந்தது, தாங்கள் ஆலோசனை வழங்குங்கள் என பாபாவிற்கு எழுத வேண்டும். பாபா சூழ்நிலையைப் பார்த்து ஆலோசனை வழங்குவார். எழுதுவதும் இல்லை, அவர்களுடன் இருப்பவர்களும் பாபா என்னுடன் இருப்பவர்களின் நிலை இப்படி இருக்கிறது என தெரிவிப்பதும் இல்லை. பாபாவிற்குத் தெரிவிக்க வேண்டும்.நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

இரவு வகுப்பு - 11.01.1969 :

எல்லையற்ற தந்தை வந்து புரிய வைக்கின்றார், தன்னுடையவர் ஆக்குகிறார். இராஜ்ய பதவி அடைவதற்காக கற்பிக்கின்றார், தூய்மையாகவும் மாற்றுகிறார். பாபா மிகவும் எளிதாக தன்னுடைய மற்றும் ஆஸ்தியின் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். தாங்களாகவே புரிந்துக் கொள்ள முடியாது. எல்லையற்ற தந்தையிடமிருந்து நிச்சயம் எல்லையற்ற சொத்து கிடைக்கும். இதைக் கூட நல்ல புத்திசாலி தான் புரிந்துக் கொள்வார்கள். அப்பா என்ன சொத்து கொடுக்கிறார். வீடு, படிப்பு மற்றும் சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை சொத்தாகக் கொடுக்கிறார். தூய்மையாக தெய்வீக சம்பிரதாயத்தினராக மாறுபவர்களே இராஜ்யத்தில் வருகிறார்கள். எவ்வளவு படிக்கிறார்களோ படிக்க வைக்கிறார்களோ அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவார்கள். இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள். அப்பாவிடமிருந்து சொத்து அடைகிறார்கள். தந்தை சொர்க்கத்திற்கு அதிபதியாக நரனிலிருந்து நாராயணனாக மாற்றுகின்றார். இவர் இராஜ்யத்திற்கு அதிபதி என்றால் எல்லையற்ற தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர். நாம் அவருடைய குழந்தைகள் என்றால் சொர்க்கத்தின் இராஜ்ய பதவி அடைவோம். ராஜா ராணியைப் போன்றே பிரஜைகள்...... எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு தான் உயர்ந்த பதவி பெறுவார்கள். இது இராஜ்யத்திற்கான முயற்சி ஆகும். சத்யுகத்தின் இராஜ்ய பதவி அனைவருக்கும் கிடைக்காது. எவ்வளவு யார் முயற்சி செய்வார்களோ அவ்வளவு தான் உயர்ந்த பதவி பெறுவார்கள். முயற்சிக்கு ஏற்ப பதவியின் ஆதாரம் இருக்கிறது. முயற்சிக்கு ஏற்ப வருங்காலம் அமைகிறது. எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என குழந்தைகளுக்குத் தெரியும். முயற்சியினால் தான் இராஜ்ய பதவி கிடைக்கிறது. தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையை நினைத்தால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக, சுத்த தங்கமாக மாறிவிடுவார்கள். இராஜ்யமும் கிடைக்கிறது. பாரதத்திற்கு எஜமானர் என்று இங்கு கூறுகிறார்கள் அல்லவா? அனைவரும் எஜமானர்கள் ஆவார்கள். பதவி என்ன அடைவார்கள். படிப்புக்கு பிறகு சொர்க்கத்தில் நம்முடைய பதவி என்ன இருக்கும். இப்போது நீங்கள் சங்கமத்தில் படிக்கிறீர்கள். சத்யுகத்தில் அரசாட்சி செய்வீர்கள். பாபா யோகமும் கற்பிக்கின்றார், படிக்கவும் வைக்கின்றார். நாம் இராஜயோகம் கற்கிறோம் என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பாபாவின் நினைவினால் தூய்மையாக மாறிவிடுவோம். பிறகு நம்முடைய மறு பிறவி இராவண இராஜ்யத்தில் இருக்காது. இராம இராஜ்யத்தில் இருக்கும். இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்-மன்மனாபவ, மத்யாஜீபவ. இப்போது கலியுகத்தின் முடிவு. சத்யுக சொர்க்கம் நிச்சயம் வரும். பாபா சங்கமயுகத்தில் தான் வந்து எல்லையற்ற பள்ளிக் கூடத்தை திறக்கின்றார். அங்கே எல்லையற்ற பதவி அடைவதற்காக எல்லையற்ற படிப்பு இருக்கிறது. இப்போது நாம் புதிய உலகத்திற்கு அதிபதி ஆகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். புது உலகத்திற்கு சொர்க்கம் என்று கூறப்படுகிறது. போதை ஏறுகிறது அல்லவா? பழைய உலகத்திற்குப் பிறகு புது உலகம் ஆகும். குழந்தைகளுக்கு நினைவு வருகிறது. சொர்க்கத்திற்கு அதிபதியாக்குவதற்காக நமக்கு பரம்பிதா பரமாத்மா கற்பிக்கின்றார் என அனைத்து குழந்தைகளின் மனதிலும் இருக்கிறது. நம்மை பகவான் கற்பிக்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்த சத்யுகத்தின் இராஜா இராணியாக மாற்றுகின்றார் என்பது நினைவிருக்கட்டும். இராஜயோகத்தின் மூலமாக இராஜ்யம் கிடைக்கிறது அதில் தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் இருக்கிறது. இந்த பாபாவிற்குள் இப்போது சிவபாபா எழுந்தருளியுள்ளார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர். ஆத்மா அனுபவத்தை அடைகிறது. அங்கே சென்று விட்டால் அங்கே அமரும் இருக்கை (ஆசனம்) உயர்ந்ததாக இருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் அவரவருக்கென இருக்கைகள் இருக்கும். ஒருவரின் இடத்தில் இன்னொருவர் அமர மாட்டார்கள். ஒருவரின் நடிப்பு இன்னொருவருடன் இணையாது. ஆத்மாவில் அனைத்தும் பதிவாகிறது என பாபா புரிய வைக்கிறார். நாடகத்தின் திட்டப்படி நம்முடைய முயற்சி நடந்துக் கொண்டிருக்கிறது. சிலர் இராஜாவாக சிலர் இராணியாக மாறுவார்கள். கடைசியில் முயற்சியின் ரிசல்ட் வெளிப்படும். பிறகு மாலை உருவாகும். உயர்ந்த மதிப்பெண் எடுப்பவர்கள் நிச்சயமாக தெரிய வரும். இறந்த பிறகு ஆத்மா கர்மத்திற்கு ஏற்ப இன்னொரு பிறவி எடுக்கும் என புரிந்துக் கொள்ளப்படுகிறது. நல்ல கர்மம் செய்பவர்களுக்கு யோக பலத்தினால் நல்ல பிறவி கிடைக்கும். முயற்சி செய்யவில்லை என்றால் குறைந்த பதவி பெறுவார்கள். இவ்வாறு சிந்தித்தால் மகிழ்ச்சி ஏற்படும். யார் எப்படிப்பட்ட மகாரதிகளோ அதற்கு ஏற்ப மகிமை இருக்கும். அனைவரின் முரளியும் ஒன்று போல இருக்காது. ஒவ்வொருவரின் முரளியும் கூட தனித்தனி. இது நிச்சயிக்கப்பட்ட விளையாட்டு அல்லவா? இப்போது குழந்தைகளுக்கு கர்மத்தின் மீது கவனம் இருக்கிறது. அப்பா அம்மா எவ்வாறு செய்வார்களோ அதை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். இப்போது நீங்கள் உயர்ந்த கர்மம் செய்கிறீர்கள். சேவையின் மூலம் தெரிகிறது. மகாரதிகளின் உழைப்பை மறைக்க முடியாது. யார் உயர்ந்த பதவி அடைய கடினமாக உழைக்கிறார்கள் என புரிந்துக் கொள்ள முடியும். அனைத்து குழந்தைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. உயர்ந்த பதவி பெறுவதற்கு மன்மனாபவ என்ற பாடம் சரியான அர்த்தத்துடன் கிடைத்திருக்கிறது. இந்த கீதையின் ஞானத்தை நாலெட்ஜ்ஃபுல் பாபாவே வந்து கொடுக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். எனவே நிச்சயம் சரியான ஞானத்தைத் தான் கொடுப்பார். பிறகு தாரணைக்கு ஏற்ப பதவி. எதை கேட்கிறீர்களோ அது நடை முறையில் வரும். கடினம் இல்லை. தந்தையை நினைத்தல் மற்றும் சக்கரத்தை அறிய வேண்டும். இது கடைசி பிறவியின் படிப்பு. இதில் யார் தேர்ச்சி அடைவார்களோ அவர்கள் புதிய உலகம் சத்யுகத்திற்குச் சென்று விடுவார்கள்.

 

நிச்சயத்தில் தான் வெற்றி என புகழ் பாடப்பட்டிருக்கிறது. நமக்கு பகவான் படிப்பிக்கின்றார் என அன்பான புத்தி உடைய குழந்தைகள் புரிந்துக் கொண்டனர். நம்முடைய ஆத்மா தாரணை செய்கிறது. குழந்தைகள் அறிகிறீர்கள். ஆத்மா இந்த சரீரம் மூலம் படிக்கிறது, வேலை செய்கிறது. இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் பாபாவை நினைக்கிறார்கள். பிறகு மாயா இராவணன் புத்தியோகத்தைத் துண்டித்து விடுகிறது. மாயாவிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எவ்வளவு முன்னேறிப் போகிறீர்களோ அவ்வளவு உங்களுடைய பிரபாவம் (திறமை) வெளிப்படும். மேலும் குஷியின் அளவும் அதிகமாகும். புதிய பிறவி எடுத்தால் மிகவும் வெளிப்படுத்திக் கொள்வார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் குட் நைட்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். உண்மையான மனதோடு பாபாவிற்கு தனது செய்தியைக் கொடுக்க வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது.

 

2. இப்போது திரும்பப் போக வேண்டும். எனவே அசரீரி ஆவதற்கு பயிற்சி செய்யுங்கள். சும்மாஇருங்கள்.

 

வரதானம் :

என்னுடையது என்பதை விட்டு விட்டு டிரஸ்டியாகி (பொறுப்புள்ளவராகி) சேவை செய்யக்கூடிய சதா திருப்தியான ஆத்மா ஆகுக.

 

லௌகீக குடும்பத்தில் இருந்து கொண்டே சேவை செய்யும் பொழுது எப்பொழுதும் நான் டிரஸ்டி, சேவாதாரி என்பது நினைவிருக்கட்டும். சேவை செய்யும் பொழுது சிறிது கூட என்னுடையது என்பது இருக்கக் கூடாது. அப்பொழுது தான் திருப்தியாக இருக்கலாம். என்னுடையது என்பது வரும் பொழுது தான் துன்பமடைகிறீர்கள். என்னுடைய குழந்தை இப்படி செய்கிறான்...... என யோசிக்கிறீர்கள். எனவே எங்கே என்னுடையது என்பது இருக்கிறதோ அங்கே துன்புறுகிறார்கள். மேலும் எங்கே உன்னுடையது உன்னுடையது என்பது வந்துவிடுகிறதோ அங்கே அதிலேயே நீந்த ஆரம்பித்து விடுகிறார்கள். உன்னுடையது உன்னுடையது என கூறுவது சுவமானத்தில் இருத்தல் ஆகும். என்னுடையது என்னுடையது என்று கூறுவது அபிமானத்தில் வருதல் ஆகும்.

 

சுலோகன் :

ஒவ்வொரு நொடியும் புத்தியில் பாபா மற்றும் ஸ்ரீமத் நினைவிருந்தால் மனதால் சமர்ப்பணமான ஆத்மா என்பார்கள்.

 

ஓம்சாந்தி