04.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு
அடியிலும் தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருங்கள். ஒரு
தந்தை கூறுவதை மட்டுமே கேளுங்கள். அப்பொழுது மாயையின் தாக்குதல்
ஏற்படாது.
கேள்வி:
உயர்ந்த பதவியை அடைவதற்கான
ஆதாரம் என்ன?
பதில்:
உயர்ந்த பதவியை அடைவதற்காக
தந்தையின் ஒவ்வொரு (டைரக்ஷன்) உத்தரவுப்படி நடந்து கொண்டே
இருங்கள். தந்தையின் டைரக்ஷன் கிடைத்தது. உடனே குழந்தைகள்
ஏற்றுக் கொள்வது. வேறு எதுவும் எண்ணத்தின் அளவில் கூட வரக்
கூடாது. (2) இந்த ஆன்மீக சேவையில் ஈடுபடுங்கள். உங்களுக்கு வேறு
யாருடைய நினைவும் வரக் கூடாது. நாம் இறந்தால் நம்மை பொறுத்தவரை
உலகமே இறந்து விட்டது போல. அப்பொழுது தான் உயர்ந்த பதவி
கிடைக்க முடியும்.
பாடல்:
உன்னை அடைந்து நாங்கள் .. .. .. ..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக்
குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். அது பக்தி மார்க்கத்தில்
பாடப்பட்டுள்ளதாகும். இச்சமயத்தில் தந்தை இதனுடைய ரகசியத்தைப்
புரிய வைக்கிறார். இப்பொழுது நாம் தந்தையிடமிருந்து
எல்லையில்லாத ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று
குழந்தைகளும் புரிந்துள்ளார்கள். அந்த நம்முடைய ராஜ்யத்தை வேறு
யாருமே பறிக்க முடியாது. பாரதத்தினுடைய ராஜ்யத்தை அநேகர்
கைப்பற்றி உள்ளார்கள் அல்லவா? முகம்மதியர்கள் கைப்பற்றினார்கள்.
ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். உண்மையில் முதலிலோ இராவணன்
தான் அசுர வழிப்படி கைப்பற்றியுள்ளான். தீயதைக் கேட்காதீர்கள்,
தீயதைப் பார்க்காதீர்கள் .. .. .. என்று குரங்குகளின் உருவங்களை
செய்கிறார்கள்.. .. .. இதில் கூட ஏதாவதொரு ரகசியம் இருக்கும்
அல்லவா? ஒரு புறம் இருப்பது தந்தையை அறியாமல் இருக்கக் கூடிய
இராவணனினுடைய அசுர சம்பிரதாயம், மறு பக்கம் குழந்தைகளாகிய
நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். நீங்கள்
கூட முதலில் அறியாமல் இருந்தீர்கள். இவர் கூட நிறைய பக்தி
செய்துள்ளார் என்று இவரைப் பற்றியும் கூறுகிறார். இது இவருடைய
அநேக பிறவிகளினுடைய கடைசி பிறவி ஆகும். இவரே முதலில் பாவனமாக (தூய்மையாக)
இருந்தார்.இப்பொழுது பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளார்.
இவரை நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது நீங்கள் வேறு
யாருடையதையும் கேட்காதீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களிடம்
உரையாடுகிறேன் என்று தந்தை கூறுகிறார். ஆம். எப்பொழுதாவது
யாராவது நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்
என்றால் கொஞ்சம் உரையாடிவிடுகிறேன். முதல் விஷயமோ தூய்மையாக ஆக
வேண்டும். அப்பொழுது தான் புத்தியில் தாரணை ஆகும். இங்கு
இருக்கும் நியமங்கள் மிகவும் கடுமையானவை ஆகும். இதற்கு முன்பு
7 நாள் பட்டியில் இருக்க வேண்டும் என்று கூறுவார். வேறு
யாருடைய நினைவும் வரக் கூடாது. கடிதம் ஆகியவை கூட எழுதக் கூடாது.
எங்கு வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் நாள் முழுவதும் பட்டியில்
இருக்க வேண்டும். இப்பொழுதோ நீங்கள் பட்டியில் இருந்து பிறகு
வெளியே செல்கிறீர்கள். ஒரு சிலரோ ஞானம் கேட்டு
ஆச்சரியப்பட்டார்கள் கேட்டார்கள், பிறருக்கும் கூறினார்கள்.
அந்தோ ! வந்தது மாயை ! பிறகு ஓடிப் போய் விட்டார்கள். இது
மிகவும் பெரிய குறிக்கோள் ஆகும். தந்தை கூறுவதை ஏற்றுக்
கொள்வதில்லை. நீங்களோ வானப்பிரஸ்தி ஆவீர்கள் என்று தந்தை
கூறுகிறார். நீங்கள் ஏன் வீணாக சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் இந்த ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விடுங்கள். உங்களுக்கு
வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. நீங்கள் இறந்து விட்டால்
உலகமே இறந்து விட்டது போல. அப்பொழுது தான் உயர்ந்த பதவி
கிடைக்க முடியும். உங்களுடைய புருஷார்த்தமே (முயற்சி)
நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கானதாகும். ஒவ்வொரு அடியிலும்
தந்தையின் டைரக்ஷ்ன் (உத்தரவு) படி நடக்க வேண்டி உள்ளது. ஆனால்
இதில் கூட தைரியம் வேண்டும். வெறும் வாயால் கூறக் கூடிய விஷயம்
கிடையாது. மோகத்தின் கயிறுகள் கூட குறைவானது அல்ல. நஷ்டோ மோகா
- மோகத்தை வென்றவராக ஆக வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபா வேறு
யாரும் அல்ல. நாங்களோ பாபாவிடம் அடைக்கலம் புகுகிறோம். நாங்கள்
ஒரு பொழுதும் விஷம் (விகாரம்) கொடுக்க மாட்டோம். நீங்கள் இறைவன்
பக்கம் வருகிறீர்கள் என்றால் மாயை கூட உங்களை விடாது. நிறைய
தொல்லைப்படுத்தும். எப்படி வைத்தியர்கள் கூறுகிறார்கள் - இந்த
மருந்தினால் முதலில் முழு வியாதி வெளியில் வந்து விடும்.
பயப்பட வேண்டாம். இதுவும் அதே போலத் தான். மாயை மிகவுமே
துன்புறுத்தும். வானப்பிரஸ்த நிலையில் கூட விகாரங்களின்
சங்கல்பங்கள் வரும். மோகம் உருவாகி விடும். இவை எல்லாமே ஆகும்
என்று பாபா முன் கூட்டியே கூறி விடுகிறார். எவ்வளவு காலம்
வாழ்வீர்களோ அதுவரை இந்த மாயையின் குத்து சண்டை நடந்து கொண்டு
தானிருக்கும். மாயை கூட பயில்வான் ஆகி உங்களை விடாது. இது
நாடகத்தில் பொருந்தி உள்ளது. விகல்பங்களை - தீய எண்ணங்களை
எடுத்து வராதே என்று நான் மாயைக்குக் கூறுவேனா என்ன? பாபா
கிருபை புரியுங்கள் என்று நிறைய பேர் எழுதுகிறார்கள். நான்
எவரொருவருவர் மீதும் கிருபை புரிவேனா என்ன? இங்கோ நீங்கள்
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நான் கிருபை புரிந்தேன் என்றால்
பிறகோ எல்லோரும் மகாராஜா ஆகி விடுவார்கள். நாடகத்தில் கூட இல்லை.
எல்லா தர்மத்தினரும் வருகிறார்கள். யார் வெவ்வேறு தர்மத்தில்
மாறிப் போயிருப்பார்களோ அவர்கள் திரும்பி வருவார்கள். இந்த
நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மிகுந்த உழைப்பு
உள்ளது. புதியதாக வருபவர்களுக்கு தந்தையை நினைவு செய்யுங்கள்
என்று மட்டும் கூற வேண்டும். சிவபகவான் கூறுகிறார் - கிருஷ்ணர்
ஒன்றும் பகவான் கிடையாது. அவரோ 84 பிறவிகளில் வருகிறார். அநேக
வழிகள் மற்றும் அநேக விஷயங்கள் உள்ளன. இதை புத்தியில்
முழுமையாக தாரணை செய்ய வேண்டும். நாம் பதீதமாக (தூய்மையற்று)
இருந்தோம். இப்பொழுது நீங்கள் எப்படி தூய்மையாக ஆகலாம் என்று
தந்தை கூறுகிறார். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று
முந்தைய கல்பத்திலும் கூறி இருந்தார். தன்னை ஆத்மா என்று
உணர்ந்து தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுத்து உயிருடனே
இறந்து விடுங்கள். தந்தையாகிய என் ஒருவனை மட்டுமே நினைவு
செய்யுங்கள். நான் அனைவருக்கும் சத்கதி செய்ய வந்துள்ளேன்.
பாரதவாசிகள் தான் உயர்ந்தவர்களாக ஆகிறார்கள். பிறகு 84 பிறவிகள்
எடுத்து கீழே இறங்குகிறார்கள். கூறுங்கள் - பாரதவாசிகளாகிய
நீங்கள் தான் இந்த தேவி தேவதைகளுக்கு பூஜை செய்கிறீர்கள்.
இவர்கள் யார்? இவர்கள் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள்
அல்லவா? இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? 84 பிறவிகள் யார்
எடுக்கிறார்கள்? சத்யுகத்திலோ இவர்கள் தேவி தேவதைகளாக
இருந்தார்கள். இப்பொழுது மீண்டும் இந்த மகாபாரத போர் மூலமாக
அனைத்தும் அழியப் போகிறது. இப்பொழுது எல்லோருமே தூய்மையின்றி
தமோபிரதானமாக இருக்கிறார்கள். நான் கூட இவருடைய அநேக பிறவிகளின்
கடைசியில் தான் வந்து பிரவேசம் செய்கிறேன். இவர் முழுமையான
பக்தராக இருந்தார். நாராயணரை பூஜை செய்து கொண்டிருந்தார்.
இவருக்குள் நான் பிரவேசம் செய்து மீண்டும் இவரை நாராயணராக
ஆக்குகிறேன். இப்பொழுது நீங்கள் கூட புருஷார்த்தம் (முயற்சி)
செய்ய வேண்டும். இந்த தேவதா ராஜதானி ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. மாலை உருவாகிறது அல்லவா? மேலே இருப்பது
நிராகார மலர். பிறகு மேரு ஜோடி. சிவபாபாவிற்கு கீழே
முற்றிலுமாக இவர்கள் நின்றுள்ளார்கள். ஜகத்பிதா பிரம்மா மற்றும்
ஜகதம்பா சரஸ்வதி. இப்பொழுது நீங்கள் இந்த புருஷார்த்தத்தினால்
விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகிறீர்கள். பாரதம் எங்களுடையது என்று
பிரஜைகளும் கூட கூறுவார்கள் அல்லவா? நாம் உலகிற்கு அதிபதி ஆவோம்
என்று நீங்களும் புரிந்துள்ளீர்கள். நாம் ஆட்சி புரிவோம். வேறு
எந்த தர்மமும் இருக்கவே இருக்காது. இது எங்களுடைய ராஜ்யம் என்று
வேறு யாரும் கூறமாட்டார்கள். வேறு எந்த ராஜ்யமுமே அங்கு
இருக்காது. இங்கு நிறைய இருக்கும் பொழுது எனது உனது என்று
நடக்கிறது. அங்கு இந்த விஷயங்களே இருக்காது. எனவே குழந்தைகளே
மற்ற எல்லா விஷயங்களையும் விடுத்து என் ஒருவனை நினைவு
செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் அழியும் என்று தந்தை புரிய
வைக்கிறார். அப்படியின்றி யாராவது முன்னால் அமர்ந்து (நிஷ்டை)
யோகம் செய்விக்க வேண்டும். திருஷ்டி அளிக்க வேண்டும் என்பதல்ல.
தந்தையோ நடந்தாலும், போனாலும், வந்தாலும் தந்தையை நினைவு செய்ய
வேண்டும் என்று கூறுகிறார். நாள் முழுவதும் எவ்வளவு நினைவு
செய்தேன் என்று தங்களின் சார்ட் வையுங்கள். அதிகாலை எழுந்து
எவ்வளவு நேரம் தந்தையிடம் உரையாடினீர்கள்? இன்று பாபாவின்
நினைவில் அமர்ந்தேனா? இது போல தன்னிடமே உழைப்பு செய்ய வேண்டும்.
ஞானமோ புத்தியில் உள்ளது. பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க
வேண்டும். காமம் மகா எதிரி ஆகும் என்பது யாருடைய புத்தியிலும்
வருவதில்லை. 2-4 வருடங்கள் தூய்மையாக இருந்து பிறகு மாயையின்
பலத்த அடி ஏற்பட்டு விடும் பொழுது விழுந்து விடுகிறார்கள்.
பிறகு பாபா நாங்கள் கருப்பாக்கிக் கொண்டு விட்டோம் என்று
எழுதுகிறார்கள். அவ்வாறு தங்களை கருப்பாக்கிக் கொள்பவர்கள் 12
மாதங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை என்று பாபா எழுதி
விடுகிறார். நீங்கள் தந்தையிடம் உறுதி கொடுத்து பிறகும்
விகாரத்தில் விழுந்தீர்கள். என்னிடம் ஒரு பொழுதும் வராதீர்கள்.
மிகப் பெரிய குறிக்கோள் ஆகும். தந்தை வந்திருப்பதே
தூய்மையில்லாத நிலையிலிருந்து தூய்மைபடுத்த. நிறைய குழந்தைகள்
திருமணம் செய்து தூய்மையாக இருக்கிறார்கள். ஆம் ஏதாவதொரு பெண்
குழந்தை மீது அடி விழுகிறது பந்தனம் என்றால், அவரைக்
காப்பாற்றுவதற்காக கந்தர்வ விவாகம் செய்து தூய்மையாக
இருக்கிறார்கள். அதில் கூட ஒரு சிலரை மாயை மூக்கால் பிடித்து
விடுகிறது. தோற்று விடுகிறார்கள். பெண்கள் கூட மிகவும் தோல்வி
அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்டோர் சூர்ப்பனகை ஆவீர்கள்
என்று தந்தை கூறுகிறார். இவை எல்லா பெயர்களும் இந்த
சமயத்தினுடையதே ஆகும். இங்கோ பாபா எந்த ஒரு விகாரியை அமரக் கூட
விட மாட்டார். ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து ஆலோசனை பெற
வேண்டி இருக்கிறது. சமர்ப்பணம் ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு
இப்பொழுது டிரஸ்டி ஆகுங்கள் என்று தந்தை கூறுவார். ஆலோசனைப் படி
நடந்து கொண்டே இருங்கள். கணக்கைக் கூறினீர்கள் என்றால்,
அப்பொழுது தான் ஆலோசனை அளிப்பார். இது மிகவும் புரிந்து கொள்ள
வேண்டிய விஷயமாகும். நீங்கள் தாராளமாக போக் பிரசாதம் படையுங்கள்.
ஆனால் நான் உட் கொள்வதில்லை. நானோ வள்ளல் ஆவேன். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு - 15.06.1968
எது நடந்து முடிந்து விட்டதோ அதை
திரும்பிப் பார்க்கும் பொழுது (ரிவைஸ்) யாருக்கு பலவீனமான இதயம்
இருக்கிறதோ, அவர்களுடைய இதயத்தின் அந்த பலவீனத்தைக் கூட
திரும்பிப் பார்க்க நேரிடுகிறது. எனவே குழந்தைகளை நாடகம் என்ற
தண்டவாளத்தில் நிலைத்திருக்குமாறு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான நன்மை இருப்பதே நினைவில் தான். நினைவினால் தான்
ஆயுள் நீட்டிக்கும். நாடகத்தை குழந்தைகள் புரிந்து கொண்டார்கள்
என்றால் ஒரு பொழுதும் எந்த சிந்தனையும் இருக்காது. நாடகத்தில்
இப்பொழுது ஞானத்தை கற்றுக் கொள்ளும் மற்றும் கற்பிக்கும் பாகம்
நடந்து கொண்டிருக்கிறது. பிறகு பார்ட் முடிந்து போய் விடும்.
தந்தையினுடைய பாகமும் இருக்காது. நமது பாகமும் இருக்காது.
அவருடைய அளிக்கும் பாகமும் இருக்காது. நம்முடைய பெறுவதற்கான
பாகமும் இருக்காது. ஆக ஒன்றாகி விடுவார்கள் அல்லவா? நமது பாகம்
புதிய உலகத்தில் ஆகி விடும். பாபாவின் பாகம் சாந்தி தாமத்தில்
இருக்கும் பாகத்தினுடைய ரீல் நிரம்பி உள்ளது அல்லவா? நம்முடையது
பாக்கியத்தின் பாகம் பாபாவினுடையது சாந்திதாமத்தின் பாகம்.
கொடுப்பது மற்றும் பெறுவதற்கான பாகம் முடிவடைந்தது. நாடகமே
முடிவடைந்தது. பிறகு நாம் ஆட்சி புரிய வருவோம். அந்த பாகம்
மாறிவிடும். ஞானம் முடிந்து போய் விடும். அது போல (தேவதை) ஆகி
விடுவோம். பாகமே முடிந்து விட்டது என்றால் எந்த வித்தியாசமும்
கூட இருக்காது. குழந்தைகள் மற்றும் தந்தையினுடையது கூட பாகம்
இருக்காது. இவர் கூட ஞானத்தை முழுமையாக எடுத்து கொண்டு
விடுகிறார். அவரிடமும் எதுவும் இருப்பதில்லை. கொடுப்பவரிடமும்
இல்லை பெறுபவரிடமும் எந்த குறைவும் இல்லை. எனவே இருவரும்
ஒருவருக்கொருவர் சமமாக ஆகி விட்டார்கள். இதில் ஞானமனனம்
செய்வதற்கு புத்தி வேண்டும். முக்கியமான முயற்சியே நினைவு
யாத்திரையினுடையதாகும்!. தந்தை வந்து புரிய வைக்கிறார்.
சொல்லும் பொழுதோ சாதாரண விஷயம் ஆகி விடுகிறது. புத்தியிலோ
சூட்சுமமாக இருக்கிறது அல்லவா? சிவபாபாவின் ரூபம் என்ன என்பதை
உள்ளுக்குள் அறிந்துள்ளார்கள். புரிய வைப்பதில் சாதாரண ரூபம்
பெரியதாக ஆகி விடுகிறது. பக்தி மார்க்கத்தில் பெரிய லிங்கம்
அமைத்து விடுகிறார்கள். ஆத்மாவோ சிறியதாக உள்ளது அல்லவா? இது
இயற்கை ஆகும். எதுவரையும் முடிவை அடைய முயற்சி செய்வார்கள்.
பிறகு கடைசியில் கரை காண முடியாது என்று கூறி விடுகிறார்கள்.
முழு பாகமும் ஆத்மாவில் நிரம்பி உள்ளது என்று பாபா புரிய
வைத்துள்ளார். இது இயற்கை ஆகும். முடிவை அடைய முடியாது.
சிருஷ்டி சக்கரத்தின் முடிவையோ அடைகிறார்கள். படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல் இடை கடையை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். பாபா
ஞானம் நிறைந்தவர் ஆவார். பிறகு நாம் கூட (ஞானம்) நிறைந்தவர் ஆகி
விடுவோம். அடைவதற்காக எதுவுமே இருக்காது. தந்தை இவருக்குள்
பிரவேசித்து கற்பிக்கிறார். அவர் புள்ளியாக இருக்கிறார்.
ஆத்மாவினுடைய அல்லது பரமாத்மாவினுடைய சாட்சாத்காரம் (தெய்வீக
காட்சி) ஏற்படுவதால் மகிழ்ச்சி ஏற்படுமா என்ன? உழைப்பு செய்து
தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது விகர்மங்கள் அழியும்.
எனக்குள் ஞானம் முடிந்து போய் விடும் பொழுது உங்களுக்குள்ளும்
முடிந்து போய் விடும் என்று தந்தை கூறுகிறார். ஞானம் எடுத்து
உயர்ந்தவராக ஆகி விடுகிறீர்கள். எல்லாமே எடுத்துக் கொண்டு
விடுகிறீர்கள். பிறகும் தந்தையோ தந்தையாக தானே உள்ளார் அல்லவா?
ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களாகத் தான் இருப்பீர்கள்.
தந்தையாக ஒன்றும் ஆகி இருக்க மாட்டீர்கள். இதுவோ ஞானம் ஆகும்.
தந்தை தந்தையே ! குழந்தைகள் குழந்தைகளே ! இவை எல்லாமே ஞான
சிந்தனை செய்ய வேண்டிய ஆழமான விஷயங்கள் ஆகும். எல்லோருமே போக
வேண்டி இருக்கிறது என்பதையும் அறிந்துள்ளீர்கள். எல்லோருமே
போகத் தான் போகிறார்கள். மற்றபடி ஆத்மாக்கள் போய் இருப்பார்கள்.
முழு உலகமே முடியப் போகிறது. இதில் பயமற்றவராக இருக்க வேண்டி
உள்ளது. பயமற்றவராக இருப்பதற்கான புருஷார்த்தம் (முயற்சி)
செய்ய வேண்டும். சரீரம் ஆகியவற்றின் எந்த ஒரு உணர்வு கூட வரக்
கூடாது. அந்த நிலையில் செல்ல வேண்டும். தந்தை தனக்குச் சமமாக
ஆக்குகிறார். குழந்தைகளாகிய நீங்கள் கூட தனக்கு சமமாக பிறரை
ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தந்தையின் நினைவு மட்டுமே
இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
இப்பொழுது நேரம் இருக்கிறது. இந்த ஒத்திகையை தீவிரமானதாக ஆக்க
வேண்டி உள்ளது. பயிற்சி இல்லை என்றால் நின்று விடுவீர்கள்.
கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். மேலும் திடீரென்று மாரடைப்பு
ஏற்படும். தமோபிரதானமான உடலுக்கு மாரடைப்பு ஆவதற்கு தாமதம்
ஏற்படுமா என்ன? எந்த அளவிற்கு அசரீரி ஆகிக் கொண்டு செல்வீர்களோ,
தந்தையை நினைவு செய்து கொண்டு இருப்பீர்களோ அந்த அளவு
நெருக்கத்தில் வந்து கொண்டே இருப்பீர்கள். யோகம் உடையவர்களே
பயமற்றவர்களாக இருப்பார்கள். யோகத்தினால் சக்தி கிடைக்கிறது.
ஞானத்தினால் செல்வம் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு தேவை சக்தி.
எனவே சக்தியை பெறுவதற்காக தந்தையை நினைவு செய்துக் கொண்டே
இருங்கள். பாபா அவினாஷி (அழிவற்ற) சர்ஜன் ஆவார். அவர் ஒரு
பொழுதும் நோயாளி ஆக முடியாது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு
அவினாஷி வைத்தியம் (சிகிச்சை) செய்து கொண்டே இருங்கள் என்று
தந்தை கூறுகிறார். நான் எப்பேர்ப்பட்ட சஞ்சீவினி மூலிகை
அளிக்கிறேன் என்றால் ஒரு பொழுதும் யாருமே நோய்வாய்ப்பட முடியாது.
பதீத பாவனரான தந்தையை நினைவு மட்டும் செய்து கொண்டே
இருந்தீர்கள் என்றால் பாவனமாக ஆகி விடுவீர்கள். தேவதைகள்
எப்பொழுதுமே நோயற்றவர்களாக பாவனமாக இருக்கிறார்கள் அல்லவா? நாம்
கல்ப கல்பமாக ஆஸ்தி பெறுகிறோம் என்ற நிச்சயம் குழந்தைகளுக்கு
ஏற்பட்டுள்ளது. இப்பொழுது வந்திருப்பது போலவே நினைவிற்கு
எட்டாத முறை வந்துள்ளார். பாபா என்ன கற்பிக்கிறாரோ, புரிய
வைக்கிறாரோ அதுவே இராஜயோகம் ஆகும். அந்த கீதை ஆகியவை எல்லாமே
பக்தி மார்க்கத்தினுடையதாகும். இந்த ஞான மார்க்கம் பற்றி தந்தை
தான் கூறுகிறார். தந்தை தான் வந்து தாழ்ந்த நிலையிலிருந்து மேலே
உயர்த்துகிறார். யார் உறுதியான நிச்சய புத்தி உடையவர்களோ
அவர்களே மாலையின் மணி ஆகிறார்கள். பக்தி செய்து செய்து நாம்
கீழே விழுந்து கொண்டே வந்துள்ளோம். இப்பொழுது தந்தை வந்து
உண்மையான சம்பாத்தியம் செய்விக்கிறார். பரலௌகீக தந்தை
செய்விக்கும் அளவிற்கு லௌகீக தந்தை அந்த அளவு சம்பாத்தியம்
செய்விப்பதில்லை. நல்லது குழந்தைகளுக்கு குட் நைட் மற்றும்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மாயை பயில்வான் ஆகி முன்னால் வரும். அதற்கு பயப்படக் கூடாது.
மாயையை வென்றவர் ஆக வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி
நடந்து நம் மீது நாமே கிருபை செய்ய வேண்டும்.
2. தந்தைக்கு தனது உண்மையிலும் உண்மையான கணக்கைக் கூற வேண்டும்.
டிரஸ்டி (நிமித்தம்) ஆகி இருக்க வேண்டும். போகும் போதும்,
சுற்றும் போதும் நினைவின் பயிற்சியை செய்ய வேண்டும்.
வரதானம் :
தனது சொரூபத்தின் மூலம்
பக்தர்களுக்கு ஒளியின் கீரிடத்தை சாட்சாத்காரம் செய்விக்கக்
கூடிய இஷ்ட தேவி (விரும்பும் தேவி) ஆகுக
எப்பொழுது நீங்கள் பாபாவின்
குழந்தைகளாக ஆனீர்களோ, தூய்மையாக இருப்பேன் என்று உறுதிமொழி
செய்தீர்களோ, அதற்கு கைமாறாக ஒளியின் கீரிடம் பலனாக
கிடைத்துவிட்டது. இந்த ஒளியின் கீரிடத்திற்கு முன்பாக
இரத்தினங்களால் பொதிக்கப்பட்ட கீரிடம் ஒன்றுமே (மதிப்பு) இல்லை.
எந்தளவு எண்ணத்தில், வார்த்தையில் மற்றும் காரியத்தில் தூய்மையை
தாரணை செய்கிறீர்களோ, அந்தளவு இந்த ஒளியின் கீரிடம் மிகவும்
தெளிவாகிக் கொண்டேயிருக்கும், மேலும் இஷ்ட தேவியின் ரூபத்தில்
பக்தர்களுக்கு முன்னால் வெளிப்பட்டுக் (காட்சி கொடுத்துக்)
கொண்டேயிருப்பீர்கள்.
சுலோகன்:
சதா பாப்தாதாவின் குடைநிழலுக்கு
கீழ் இருந்தீர்கள் என்றால், தடைகளை வென்றவர் ஆகிவிடுவீர்கள்.
ஓம்சாந்தி