04-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் முத்துக்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய அன்னப் பறவைகளாக இருக்கின்றீர்கள், உங்களது சபை அன்னப்பறவைகளின் சபையாகும். நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்களாக இருக்கின்றீர்கள், ஏனெனில் சுயம் ஞான சூரியனாகிய தந்தை உங்களுக்கு நேரடியாக கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி:
தந்தை அனைத்துக் குழந்தைகளுக்கும் எந்த வெளிச்சத்தினை கொடுத்திருக்கின்றார்? அதன் மூலம் முயற்சி தீவிரமாகி விடும்?

பதில்:
குழந்தைகளே! இப்பொழுது நாடகத்தின் கடைசியாகும், நீங்கள் புது உலகிற்குச் செல்ல வேண்டும். எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்துவிடும் என்று இருந்து விடாதீர்கள். முதலில் முயற்சி செய்ய வேண்டும். தூய்மையாகி மற்றவர்களையும் தூய்மை யாக்க வேண்டும், இது மிகப் பெரிய சேவையாகும் என்ற வெளிச்சத்தை தந்தை கொடுத் திருக்கின்றார். இந்த வெளிச்சம் வந்ததும் குழந்தைகளாகிய உங்களது முயற்சி தீவிரமாகி விட்டது.

பாடல்:
நீ அன்புக் கடலாக இருக்கின்றாய் ...

ஓம் சாந்தி.
அன்புக்கடல், அமைதிக்கடல், ஆனந்தக் கடலான எல்லையற்ற தந்தை எதிரில் அமர்ந்து நமக்கு கல்வி கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகள் தெரிந்திருக் கின்றீர்கள். ஞான சூரியனாகிய தந்தை எதிரில் கற்றுக் கொடுப்பதால் எவ்வளவு அதிர்ஷ்டசாலி களாக இருக்கின்றீர்கள். கொக்குகளின் சபையாக இருந்த சபை இப்பொழுது அன்னங்களின் சபையாக மாறிவிட்டது. முத்துக்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டீர் கள். இந்த சகோதர, சகோதரிகள் அனைவரும் அன்னப்பறவைகள், இதனை அன்னப் பறவைகளின் சபை என்றும் கூறப்படுகின்றது. முந்தைய கல்பத்தைச் சார்ந்தவர்களே இந்த நேரத்தில், இந்த பிறப்பில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு அறிந்து கொள் கின்றனர். ஆன்மீக பரலௌகீக தாய், தந்தை மற்றும் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்கின்றனர். 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் நாம் தங்களுக் குள் இதே பெயர், உருவத்தில் சந்தித்திருந்தோம் என்ற நினைவு இருக்கின்றதா? இவ்வாறு நீங்கள் இப்பொழுது மட்டுமே கூற முடியும், பிறகு வேறு எந்த பிறப்பிலும் இவ்வாறு கூற முடியாது. பிரம்மா குமார், குமாரிகளாக ஆகக் கூடியவர்களே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வார்கள். பாபா, நீங்களும் அதே பாபா, உங்களது குழந்தைகளாகிய நாங்களும் அதே நாங்களே, சகோதர சகோதரிகளாகிய நாம் மீண்டும் நமது தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைகின்றோம். இப்பொழுது தந்தை மற்றும் குழந்தைகள் எதிரில் அமர்ந்திருக்கின்றோம். பிறகு இந்த பெயர், உருவம் போன்ற அனைத்தும் மாறிவிடும். நாம் அதே முந்தைய கல்பத்தின் லெட்சுமி நாராயணன் என்று சத்யுக லெட்சுமி நாராயணன் கூறமாட்டார்கள். அல்லது முந்தைய கல்பத்தில் அதே லெட்சுமி நாராயணன் இவர்கள் என்று பிரஜைகளும் கூற மாட்டார்கள். இதனை இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே தெரிந்திருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்கின்றீர்கள். முன்பு நீங்கள் எதையும் தெரிந்திருக்கவில்லை. நானே கல்பத்தின் சங்கம யுகத்தில் வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றேன். இவ்வாறு எல்லையற்ற தந்தை மட்டுமே கூற முடியும். புது உலகின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகின் விநாசமும் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இது இரண்டிற்கும் இடையேயான சங்கம யுகமாகும். இது கல்யாணகாரி யுகமாகும். சத்யுகத் தையோ அல்லது கலியுகத்தையோ கல்யாணகாரி என்று கூறுவதில்லை. உங்களுடைய இப்போதைய வாழ்க்கை விலை மதிப்பற்ற வாழ்க்கை என்று பாடப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கையில் சோழியிலிருந்து வைரமாக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான இறைவனின் உதவியாளர்களாக இருக்கின்றீர்கள். ஈஸ்வரிய விடுதலை (மீட்டெடுக்கும்) வீரர்களாக இருக்கின்றீர்கள். ஈஸ்வரன் வந்து உங்களை மாயை யிடமிருந்து விடுவிக்கின்றார். பொதுவாக முழு உலகை, குறிப்பாக நம்மை மாயையின் சங்கிலியிலிருந்து விடுவிக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்திருக் கின்றீர்கள். இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கின்றது. இப்பொழுது உயர்ந்தவர்கள் என்று யாரைக் கூறலாம்? யாருடைய நடிப்பு உயர்வானதாக இருக்கின்றதோ, அவர்களுக்குத் தான் பெயர் ஏற்படு கின்றது. ஆக உயர்ந்தவர் என்று பரம்பிதா பரமாத்மாவிற்கு மட்டுமே கொடுக்க முடியும். இப்பொழுது பூமியில் பாவ ஆத்மாக்களின் சுமைகள் அதிகமாக உள்ளன. கடுகைப் போன்று எத்தனை மனிதர்கள் உள்ளனர்! தந்தை வந்து சுமைகளை இறக்குகின்றார். அங்கு சில லட்சம் பேர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆக கால் சதவீதம் கூட ஆகவில்லை யல்லவா! இந்த நாடகத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பரமாத்மாவை சர்வ சக்திவான் என்றும் கூறுகின்றனர். இதுவும் நாடகத்தில் அவருடைய பாகமாகும். நானும் நாடகத்தில் கட்டுப்பட்டிருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். எப்பொழு தெல்லாம் அதர்மம்...... என்று எழுதப்பட்டிருக்கின்றது. இப்பொழுது அதே தர்ம நிந்தனை யானது பாரதத்தில் இருக்கின்றது. என்னையும் நிந்திக்கின்றனர், தேவதைகளையும் நிந்திக் கின்றனர். ஆகையால் தான் அதிக பாவாத்மாக்களாக ஆகிவிட்டனர். இவ்வாறும் அவர்கள் ஆகியே தீர வேண்டும். சதோ, ரஜோ, தமோவில் வந்தே ஆக வேண்டும். நீங்கள் இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டீர்கள். புத்தியில் சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கின்றது. தந்தை வந்து ஒளி கொடுத்திருக்கின்றார். இப்பொழுது இந்த நாடகத்தின் கடைசியாகும். இப்பொழுது நீங்கள் மீண்டும் புது உலகிற்காக முயற்சி செய்யுங்கள். எது கிடைக்குமோ அது கிடைக்கும் என்று இருந்து விடாதீர்கள். முதலில் முயற்சியாகும். முழு பலமும் தூய்மை யில் இருக்கின்றது. தூய்மைக்குத் தான் சமர்ப்பணம். தேவதைகள் தூய்மையாக இருப்பதால் அசுத்த மனிதர்கள் அவர்கள் முன் சென்று தலை வணங்குகின்றனர். சந்நியாசிகளிடமும் தலை வணங்குகின்றனர். இறந்த பின்பு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் உருவாக்குகின்றனர். ஏனெனில் தூய்மையாக ஆகியிருக்கின்றனர். சிலர் லௌகீக காரியங் களும் அதிகம் செய்கின்றனர். மருத்துவமனை திறக்கின்றனர் அல்லது கல்லூரி திறக்கின்றனர் எனில் அவர்களது பெயரும் பிரபலமாகி விடுகின்றது. யார் அனைவரையும் தூய்மையாக்கக் கூடியவரோ, யார் அவருக்கு உதவியாளர்களாக ஆகின்றார் களோ அவர்களே மிகவும் பிரபலமானவர். இப்பொழுது தூய்மையாக இருக்கக் கூடியவரிடம் நீங்கள் தொடர்பு கொள்வதனால் நீங்களும் தூய்மையாகின்றீர்கள். எந்த அளவிற்கு நீங்கள் யோகா செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் தூய்மையாகிக் கொண்டே செல்வீர்கள். பிறகு கடைசி நிலை நல்ல நிலையாகி விடும். தந்தையிடம் சென்று விடுவீர்கள். அவர்கள் யாத்திரையில் செல்லும் பொழுது தந்தையிடம் செல்ல வேண்டும் என்று நினைப்பதில்லை. இருப்பினும் தூய்மையாக இருக்கின்றனர். இங்கு தந்தை அனைவரையும் தூய்மையாக ஆக்குகின்றார். நாடகத்தைப் புரிந்து கொள்வதும் எவ்வளவு எளிதாக இருக்கின்றது! அதிக கருத்துக்களை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். இறக்கும் நேரத்தில் அனை வரும் பகவானின் நினைவை ஏற்படுத்துகின்றனர். நல்லது, பகவான் என்ன செய்வார்? பிறகு யாராவது சரீரத்தை விட்டு விட்டால் செர்க்கவாசியாகி விட்டார் என்று கூறுகின்றனர். அதாவது பரமாத்மாவின் நினைவில் சரீரத்தை விட்டால் வைகுண்டத்திற்குச் சென்று விடுவீர்கள். அவர்கள் தந்தையை அறிந்திருக்கவில்லை. நாம் தந்தையை நினைவு செய்வதன் மூலம் வைகுண்டத்திற்குச் சென்று விடுவோம் என்பதும் அவர்களது புத்தியில் இல்லை. பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே அவர்கள் கூறுகின்றனர். ஆங்கிலத்தில் காட்பாதர் என்று கூறுகின்றனர். இங்கு நீங்கள் பரம்பிதா பரமாத்மா என்று கூறுகின்றனர். அவர்கள் முதலில் காட் (இறைவன்) என்றும் பிறகு ஃபாதர் (தந்தை) என்றும் கூறுகின்றனர். நாம் முதலில் பரம்பிதா என்றும் பிறகு பரமாத்மா என்றும் கூறு கின்றோம். அவர் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார். ஒருவேளை அனைவரும் தந்தையாக இருக் கின்றார்கள் எனில் ஓ! இறைதந்தையே என்று கூற முடியாது. சிறிய விசயத்தையும் கூட புரிந்து கொள்ள முடிவதில்லை. தந்தை உங்களுக்கு எளிதாக்கி புரிய வைக்கின்றார். மனிதர்கள் துக்கப்படும் பொழுது தான் தந்தையை நினைவு செய்கின்றனர். மனிதர்கள் தேகாபிமானத்தில் இருக்கின்றனர், பிறகு தேகமற்றதான ஆத்மாவை நினைவு செய்கின்றது. பரமாத்மா சர்வ வியாபி எனில் பிறகு ஆத்மா ஏன் நினைவு செய்ய வேண்டும்? ஆத்மாவில் எதுவும் ஒட்டாது எனில் தேகமற்ற அதாவது ஆத்மா ஏன் நினைவு செய் கின்றது? பக்தி மார்க்கத்தில் ஆத்மாவே பரமாத்மாவை நினைவு செய்கின்றன. ஏனெனில் துக்கத்தில் இருக்கின்றன. எந்த அளவிற்கு சுகம் கிடைத்துள்ளதோ அந்த அளவிற்கு நினைவு செய்ய வேண்டியிருக்கின்றது.

இது படிப்பாகும், இலட்சியமும் தெளிவாக இருக்கின்றது. இதில் குருட்டு நம்பிக்கைக் கான விசயம் எதுவுமில்லை. நீங்கள் அனைத்து தர்மத்தைச் சார்ந்தவர்களைப் பற்றியும் தெரிந்திருக் கின்றீர்கள், இந்த நேரத்தில் அனைவரும் வருகை தந்துள்ளனர். இப்பொழுது மீண்டும் தேவி தேவதா தர்மத்தின் சரித்திரம் திரும்ப நடைபெற வேண்டும். இது புதிய விசயமல்ல. கல்ப கல்பமாக நாம் இராஜ்யத்தை அடைகின்றோம். அந்த எல்லைக்குட்பட்ட விளையாட்டு திரும்பவும் நடைபெறுவது போன்று இது எல்லையற்ற விளையாட்டாகும். அரைகல்பத் திற்கான நமது எதிரி யார்? இராவணன். நாம் சண்டையிட்டு இராஜ்யத்தை அடைவது கிடையாது. இம்சைக்கான யுத்தமும் செய்வதில்லை, வெற்றியடைவதற்காக ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவதும் கிடையாது. இது வெற்றி தோல்விக்கான விளை யாட்டாகும். ஆனால் தோல்வியும் சூட்சுமமானதெனில் வெற்றியும் சூட்சுமமானதாகும். மாயையிடம் தோற்றால் தோல்வி, மாயையை வென்றால் வெற்றி. மனிதர்கள் மாயை என்ற வார்த்தைக்குப் பதிலாக மனம் என்று வார்த்தையைப் போட்டு விட்டனர் எனில் தவறானதாக ஆகி விட்டதல்லவா! இந்த நாடகத்தில் விளையாட்டும் முன் கூட்டியே உருவாக்கபட்டுள்ளது. தந்தை சுயம் அமர்ந்து அறிமுகத்தைக் கொடுக்கின்றார். படைப்பவரை வேறு எந்த மனிதர் களும் அறிந்திருக்கவில்லையெனில் அறிமுகம் எவ்வாறு கொடுக்க முடியும்? படைப்பவர் ஒரே ஒரு தந்தை, மற்றபடி நாம் படைப்புகள். ஆக கண்டிப்பாக நமக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்க வேண்டும். பரமாத்மா சர்வவியாபி என்று மனிதர்கள் கூறிவிட்டால் அனைவரும் படைப்பாளராக ஆகிவிடுகின்றனர். படைப்பு களை நீக்கி விட்டனர். எவ்வளவு கல்புத்தியாக ஆகிவிட்டனர், துக்கமானவர்களாக ஆகி விட்டனர். நாம் வைஷ்ணவர்கள் என்று தனது மகிமைகளை மட்டுமே கூறுகின்றனர், அதாவது நாம் பாதி தேவதைகள். தேவதைகள் வைஷ்ணவர்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வெஜிடேரியன் என்பதன் முக்கிய பொருள் அகிம்சா பரமோதர்மமாகும். தேவதைகள் மிக உறுதியான வைஷ்ணவர்கள் என்று கூறப்படுகின்றனர். அவ்வாறு தன்னை பக்கா வைஷ்ணவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் லெட்சுமி நாராயணனின் இராஜ்யத்தில் வைஷ்ணவ சம்பிர தாயத்தில் தூய்மையாக இருந்தனர். இப்பொழுது அந்த வைஷ்ணவ சம்பிரதாய இராஜ்யம் எங்கு இருக்கின்றது? இப்பொழுது நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக்கின்றீர்கள், நீங்கள் பிரம்மா குமார், குமாரிகளாக இருக்கின்றீர்களெனில் கண்டிப்பாக பிரம்மாவும் இருப்பார். அதனால் தான் சிவவம்சி பிரஜா பிதா பிரம்மாவின் வம்சத்தினர்கள் என்று பெயர் வைக்கபட்டுள்ளது. சிவபாபா வந்திருந்தார், அவர் பிராமண சம்பிரதாயத்தை படைத்தார், பிறகு அந்த பிராமணர்கள் தேவதை களாக ஆகின்றனர் என்றும் பாடப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் சூத்ரனிலிருந்து பிராமணர் களாக ஆகியிருப்பதால் பிரம்மா குமார், குமாரிகள் என்று கூறிக் கொள்கின்றீர்கள். விராட ரூப சித்திரத்தின் மூலம் புரிய வைப்பதும் நல்லதாகும். விஷ்ணுவிற்காகத் தான் விராட ரூபம் காண்பிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மற்றும் அவரது இராஜ்யம் (குழந்தைகள்) தான் விராட சக்கரத்தில் வருகின்றனர். இவ்வாறு பாபாவின் சிந்தனைகள் நடைபெறுகின்றது. நீங்களும் ஞான சிந்தனை செய்தால் இரவில் தூக்கம் வராது. இதே சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். காலையில் எழுந்து தொழில் போன்றவைகளில் ஈடுபட்டுவிடுவீர்கள். காலையில் இறைவனை ...... என்று கூறுகின்றனர். நீங்களும் யாருக்காவது அமர்ந்து புரிய வைத்தால் - ஆஹா! இவர்கள் என்னை மனிதனிலிருந்து தேவதை, பிச்சைக்காரனிலிருந்து இளவரசராக ஆக்க வந்திருக் கின்றார் என்று கூறுவர். முதலில் அலௌகீக சேவை செய்ய வேண்டும், பிறகே ஸ்தூல சேவையாகும். ஆர்வம் வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் மிக நல்ல முறையில் சேவை செய்ய முடியும். தாய்மார்களை யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள். காய்கறி விற்பவர், தானியக்காரர், வேலைக்காரர் போன்ற அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். யாரும் புகார் கூறும்படியாக இருந்து விடக்கூடாது. சேவையில் உள்ளத்தூய்மை வேண்டும். தந்தையிடத்தில் முழு தொடர்பு இருக்கும் பொழுது தான் தாரணை ஏற்படும். சாமான்களை நிறைத்துக் கொண்டு டெலிவரி கொடுப்பதற்காக படகில் செல்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் சுகம் என்பது இருக்காது, ஓடிக் கொண்டேயிருப் பார்கள். இந்த சித்திரங்களும் அதிகமாக உதவி செய்யும். சிவபாபா பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு தெளிவாக இருக்கின்றது! இது ருத்ர ஞான யக்ஞமாகும், கிருஷ்ண ஞான யக்ஞம் அல்ல. இந்த ரூத்ர ஞான யக்ஞத்தின் மூலம் விநாச நெருப்பு ஏற்படுகின்றது. கிருஷ்ணர் யக்ஞத்தைப் படைக்க முடியாது. அவர் 84 பிறப்புகள் எடுக்கும் பொழுது அவரது பெயர், உருவம் மாறிவிடும். மேலும் எந்த ரூபத்திலும் கிருஷ்ணர் இருக்க முடியாது. கிருஷ்ணரின் பாகமும் அதே ரூபத்தில் வரும் பொழுது தான் திரும்பவும் செய்ய முடியும்.

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உண்மையிலும் உண்மையான இறைவனின் உதவியாளர்களாக ஆகி அதாவது ஈஸ்வரிய விடுதலை மீட்புப்படையாகி அனைவரையும் மாயையிடமிருந்து விடுவிக்க வேண்டும். இந்த வாழ்க்கையில் சோழியிலிருந்து வைரம் போன்று ஆக வேண்டும் மற்றும் ஆக்க வேண்டும்.

2) எப்படி பாபா ஞான சிந்தனை (விசார் சாகர் மந்தன்) செய்கிறாரோ அப்படி ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். கல்யாணகாரியாகி அலௌகீக சேவையிலேயே முனைப்பாக இருக்க வேண்டும். சத்தியமான உள்ளத்துடன் சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
சின்னச்சின்ன கீழ்ப்படியாமைகளின் சுமையை முடித்து விட்டு சதா சக்திசாலியாக இருக்கக் கூடிய சிரேஷ்ட சரித்திரவான் (ஆளுமை மிக்க நற்பண்புள்ளவர்) ஆகுக.

எப்படி அமிர்தவேளை எழுவதற்கான கட்டளை உள்ளது. எழுந்து அமர்ந்து கொள் கின்றனர். ஆனால் விதிப்படி சித்தி அடைவதில்லை. இனிய அமைதியுடன் கூடவே தூக்கத்தின் அமைதியும் கலந்து விடுகிறது. 2. பாபாவின் கட்டளை - எந்த ஆத்மாவுக்கும் துக்கம் கொடுக்கா தீர்கள், துக்கம் அடையாதீர்கள். இதில் துக்கம் கொடுப்பதில்லை. ஆனால் துக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். 3. கோபப்படுவதில்லை. ஆனால் ஆவேசத்தில் (அதிகார தோரணை காட்டுவது) வந்து விடுகின்றனர். இது போல் சிறு-சிறு கீழ்ப்படி யாமைகள் மனதை பாரமாக்கி விடுகின்றன. இப்போது இவற்றை முடித்து விட்டு, கீழ்ப்படியும் நற்பண்பின் சித்திரத்தை உருவாக்குங்கள். அப்போது சக்திசாலி சரித்திரவான் ஆத்மா என்று சொல்வார்கள்.

சுலோகன்:
மரியாதையைக் கேட்பதற்கு பதிலாக அனைவருக்கும் மரியாதை கொடுப்பீர் களானால் அனைவரிடமிருந்தும் மரியாதை கிடைத்துக் கொண்டே இருக்கும்.