04-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சிவபாபா கள்ளங்கபடமற்ற கருவூலம் என சொல்லப்படுகிறார் - ஏன்?

பதில்:

ஏனெனில் போலாநாத் (கள்ளங்கபடமற்ற) சிவன் வரும்போது விலை மாதர்கள், அகல்யைகள், கூனிகள் முதலானவர்களுக்கும் கூட நன்மை செய்து உலகின் எஜமானாக ஆக்கி விடுகிறார். அவர் வருவதும் கூட பாருங்கள், பதிதமான உலகில் மற்றும் பதிதமான (தூய்மையற்ற) சரீரத்தில் எனும்போது அவர் கள்ளம் கபடமற்றவர் அல்லவா. கள்ளங்கபடமற்ற தந்தையின் வழி – இனிமை யான குழந்தைகளே, இப்போது அமிர்தத்தைக் குடியுங்கள், விகாரங்கள் எனும் விஷத்தை விட்டு விடுங்கள்.

பாடல்:

தூர தேசத்தில் வசிப்பவர். . . .

ஓம் சாந்தி. ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் அதாவது ஆத்மாக்கள் சரீரத்தின் காதுகள் எனும் கர்மேந்திரியங்களின் மூலம் பாடலைக் கேட்டீர்கள். தூர தேசத்துப் பிரயாணி வருகிறார், நீங்களும் கூட பிரயாணிகள்தானே! மனித ஆத்மாக்கள் அனைவரும் பிரயாணிகள் ஆவர். ஆத்மாக் களின் வீடு என எதுவும் கிடையாது. ஆத்மா நிராகாரமாக உள்ளது. நிராகாரி உலகத்தில் வசிக்கக் கூடிய நிராகாரி ஆத்மாக்கள். அது நிராகாரி ஆத்மாக்களின் வீடு, தேசம் அல்லது உலகம் எனப்படு கிறது, இது ஜீவாத்மாக்களின் தேசம் எனப்படுகிறது. அது ஆத்மாக்களின் தேசம், பிறகு ஆத்மாக்கள் இங்கே வந்து சரீரத்தில் பிரவேசம் செய்யும்போது நிராகாரத் திலிருந்து சாகாரமாகி விடுகின்றன. ஆத்மாவுக்கு உருவம் எதுவும் கிடையாது என்பதல்ல. ரூபமும் உண்டு, பெயரும் உண்டு. இவ்வளவு சிறிய ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் எவ்வளவு நடிப்பை நடிக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நடிப்பதற்காக எவ்வளவு நடிப்பு பதிவாகியுள்ளது. ரிகார்டு (ஒ- நாடா அல்லது தட்டு) ஒருமுறை பதிவாகி விடுகிறது, பிறகு எத்தனை முறை போட்டாலும் அதேதான் மீண்டும் ஒலிபரப்பாகும். அதுபோல, ஆத்மாவும் கூட இந்த சரீரத்திற்குள் இருக்கும் ரிகார்டு போன்றது, அதில் 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகியுள்ளது. தந்தை நிராகாரியாக இருப்பது போல ஆத்மாவும் கூட நிராகாரியாகும், சாஸ்திரங்களில் அங்கங்கே அது பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டது என எழுதப்பட்டுள்ளது, ஆனால் பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவும் கிடையாது. ஆகாயம் துருவமாகும், பெயர் ஆகாயம் என உள்ளதல்லவா. பெயரற்ற பொருள் எதுவும் கிடையாது. பரமபிதா பரமாத்மா என மனிதர்கள் சொல்கின்றனர். இப்போது தூரதேசத்தில் அனைத்து ஆத்மாக்களும் வசிக்கின்றன. இது சாகார (மனிதர்கள் வாழும்) உலகமாகும், இதில் இரண்டு இராஜ்யங்கள் நடக்கின்றன - இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம். அரைக் கல்பம் ராம இராஜ்யம் மற்றும் அரைக் கல்பம் இராவண இராஜ்யம். தந்தை ஒருபோதும் குழந்தைகளுக்காக துக்கத்தின் இராஜ்யத்தை உருவாக்க மாட்டார். இறைவன்தான் துக்கமும் சுகமும் கொடுக்கிறார் என சொல்கின்றனர். நான் ஒருபோதும் குழந்தைகளுக்கு துக்கத்தைக் கொடுப்பதில்லை என தந்தை புரிய வைக்கிறார். என்னுடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் என்பதாகும். இது மனிதர்களின் தவறாகும். ஈஸ்வரன் ஒருபோதும் துக்கத்தைக் கொடுக்க மாட்டார். இந்த சமயத்தில் இருப்பதே துக்கதாமமாகும். அரைக் கல்ப காலம் இராவண இராஜ்யத்தில் துக்கமே துக்கம்தான் கிடைக்கிறது. சுகம் துளியும் இருப்பதில்லை. சுகதாமத்தில் பிறகு துக்கமே இருக்காது. தந்தை சொர்க்கத்தை படைக்கிறார். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இதனை புதிய உலகம் என யாரும் சொல்ல மாட்டார்கள். புதிய உலகத்தின் பெயரே சத்யுகமாகும். அதுவே பிறகு பழையதாகிறது. அப்போது அது கலியுகம் என சொல்லப்படுகிறது. புதிய பொருள் நன்றாகவும், பழைய பொருள் கெட்டுவிட்டதாகவும் தெரிகிறது எனும்போது பழைய பொருள் அழிக்கப்படுகிறது. மனிதர்கள் விஷத்தையே சுகம் என நினைக்கின்றனர். அமிர்தத்தை விடுத்து விஷத்தை ஏன் உண்ண வேண்டும்? என பாடவும் படுகிறது. உங்கள் வருகையால் அனைவருக்கும் நன்மை என சொல்கின்றனர். நீங்கள் வந்து எதைச் செய்கிறீர்களோ அதனால் நன்மைதான் நடக்கும். இல்லாவிட்டால் இராவண இராஜ்யத்தில் மனிதர் கள் கெட்ட காரியத்தைத்தான் செய்வார்கள். குரு நானக் வந்து 500 வருடங்கள் ஆகியுள்ளன, மீண்டும் எப்போது வருவார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய ஆத்மா ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகி விட்டது என அவர்கள் சொல்வார்கள். நீங்கள் சொல்வீர்கள் - இப்போதிலிருந்து 4500 வருடங்களுக்குப் பிறகு குரு நானக் வருவார். உங்களின் புத்தியில் முழு உலகத்தின் வரலாறு புவியியலின் சக்கரம் சுற்றியபடி இருக்கும். இந்த சமயத்தில் அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர், இது கடைசி காலம் எனப்படுகிறது. அனைத்து மனிதர்களும் இறந்துவிட்டது போல் உள்ளனர். அனைவரின் ஜோதியும் அணைந்து விட்டுள்ளது. தந்தை அனைவரையும் எழுப்புவதற்காக வந்துள்ளார். காமச்சிதையில் அமர்ந்து பஸ்மமாகியுள்ள குழந்தைகளின் மீது அமிர்த மழையை பொழிந்து எழுப்பி உடன் அழைத்துச் செல்வார். மாயையாகிய இராவணன் காமச் சிதையில் அமர்த்தி சுடுகாட்டுப் பிணங்களாக்கி விட்டான். அனைவரும் உறங்கி விட்டனர். இப்போது தந்தை அமிர்தத்தைக் கொடுக்கிறார். இப்போது ஞான அமிர்தம் என்பது எங்கே, அந்த நீர் (கங்கை) எங்கே. சீக்கியர்கள் திருவிழா நாட்களில் மிகவும் ஆரவாரத்துடன் குளத்தை சுத்தப்படுத்துகின்றனர், மண்ணை வெளியேற்றுகிறார்கள், ஆகையால் அதன் பெயரையே அமிர்தசரஸ் என வைத்துள்ளனர். அமிர்தத்தின் குளம். குரு நானக் கூட தந்தையை மகிமை செய்துள்ளார். ஏக் ஓம்கார், சத் நாம் . . . . அவர் எப்போதும் சத்தியத்தை உரைப்பவர் என அவர் சொல்லி யிருக்கிறார். சத்ய நாராயணன் கதை உள்ளது அல்லவா. மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எவ்வளவு கதைகளை கேட்டபடி வந்தனர். அமர கதை, மூன்றாம் கண்ணின் கதை. . . சங்கரன் பார்வதிக்கு கதை சொன்னார் என சொல்கின்றனர். அவரோ சூட்சும வதனத்தில் இருப்பவர், பிறகு அங்கே என்ன கதையை சொன்னார்? இந்த அனைத்து விசயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார் - உண்மையில் உங்களுக்கு அமரகதை சொல்லி அமர லோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். மரணலோகத்திலிருந்து அமரலோகத் திற்கு அழைத்துச் செல்கிறேன். மற்றபடி சூட்சும வதனத்தில் பார்வதி என்ன குற்றம் செய்தார், அவருக்கு அமர கதை சொல்வதற்கு? சாஸ்திரங்களில் பல கதைகளை எழுதி விட்டனர். சத்ய நாராயணரின் உண்மையான கதை இல்லை. நீங்கள் எத்தனை சத்ய நாராயணரின் கதையைக் கேட்டிருப்பீர்கள்! பிறகு யாராவது சத்ய நாராயணனாக ஆகின்றார்களா என்ன? இன்னமும் கூட கீழே இறங்கிக் கொண்டே இருக்கின்றனர். நாம் நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து லட்சுமியாக ஆகிறோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது அமரலோகத்திற்குச் செல்வதற்கான உண்மையான சத்ய நாராயணன் கதை, மூன்றாம் கண்ணின் கதை ஆகும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு மூன்றாம் கண் கிடைத்துள்ளது. தந்தை புரிய வைக்கிறார் - நீங்கள்தான் மணம் வீசும் மலர்களாக பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து நீங்கள்தான் பூஜாரிகளாகி யிருக்கிறீர்கள், ஆகையால் நீங்களே பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி என பாடப்பட்டுள்ளது. நான் எப்போதும் பூஜைக்குரியவராக இருக்கிறேன் என தந்தை சொல்கிறார். வந்து உங்களை பூஜாரி யிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன். இது தூய்மையற்ற உலகம். சத்யுகத்தில் பூஜைக் குரிய தூய்மையான மனிதர்கள் இருக்கின்றனர், இந்த சமயம் பூஜாரிகளான தூய்மையற்ற மனிதர்கள் இருக்கின்றனர். பதீத பாவன சீதா ராம் என சாது சன்னியாசிகள் பாடியபடி இருக்கின்றனர். இது வார்த்தை சரியானதுதான்அனைவரும் சீதைகளாக மணமகள்களாக உள்ளனர். ராமா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என சொல்கின்றனர். அனைத்து பக்தைகளும் அழைக்கின்றனர். ஓ ராமா ! என ஆத்மா கூப்பிடுகிறது. காந்தியடிகளும் கூட கீதையை சொல்லி முடித்தவுடன் ஓ ! பதீத பாவன சீதா ராம் ! என சொல்லிக் கொண்டிருந்தார். கீதையை கிருஷ்ணர் ஒன்றும் சொல்லவில்லை என இப்போது நீங்கள் அறிவீர்கள். இறைவன் எங்கும் நிறைந்தவர் அல்ல, கீதையின் பகவான் சிவன், கிருஷ்ணர் அல்ல என (பிறரிடம்) கருத்தைக் கேளுங்கள் என்று பாபா சொல்கிறார். முதலில் கீதையின் பகவான் என சொல்லபடுபவர் யார் என கேளுங்கள். பகவான் என நிராகாரரைச் சொல்வோமா அன்றி சாகாரத்திலிருப்பவரையா? கிருஷ்ணரோ சாகாரத்தில் சரீரத்தோடு இருப்பவர். சிவன் நிராகார மானவர் (உடலற்றவர்). அவர் இந்த உடலை மட்டும் கடனாக எடுக்கிறார். மற்றபடி தாயின் கர்ப்பத்தில் பிறவி எடுப்பதில்லை. சிவனுக்கு சரீரம் கிடையாது. இங்கே இந்த மனித உலகத்தில் ஸ்தூல சரீரம் இருக்கிறது. தந்தை வந்து உண்மையான சத்ய நாராயணனின் கதையைச் சொல்கிறார். தந்தையின் மகிமை - பதித பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், அனைவரையும் விடுவிப்பவர், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர். நல்லது, சுகம் எங்கே இருக்கும்? இங்கே இருக்க முடியாது. அடுத்த பிறவியில் பழைய உலகம் முடிந்து, சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகி விடும்போது சுகம் கிடைக்கும். நல்லது, எதிலிருந்து விடுவிக்கிறார்? இராவணனின் துக்கத்திலிருந்து. இது துக்கதாம மல்லவா. நல்லது, பிறகு வழிகாட்டியாகவும் ஆகிறார். இந்த சரீரங்கள் இங்கேயே அழிந்து விடுகின்றன. மற்றபடி ஆத்மாக்களை அழைத்துச் செல்கிறார். முதலில் மணமகன், பின்னால் மணமகள் செல்வார்கள். அவர் அழிவற்ற அழகான மணமகன். அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து தூய்மையாக்கி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். திருமணம் முடிந்து வரும்போது முதலில் கணவர், பின்னர் மனைவி, பிறகு ஊர்வலம் நடக்கும். இப்போது உங்களின் மாலை கூட அதுபோல்தான். முதலில் சிவபாபா மலராக இருக்கிறார், அவரை நமஸ்காரம் செய்வார்கள். பிறகு ஜோடி மணிகள் - பிரம்மா, சரஸ்வதி. அதன் பின் நீங்கள், தந்தைக்கு நீங்கள் உதவியாளர்களாக ஆகிறீர்கள். மலராகிய சிவபாபாவின் நினைவின் மூலம்தான் நீங்கள் சூரிய வம்சத்தின் விஷ்ணுவின் மாலையாக ஆகிறீர்கள். பிரம்மா-சரஸ்வதியே லட்சுமி-நாராயணராக ஆகின்றனர். லட்சுமி-நாராயணரே பிரம்மா-சரஸ்வதி ஆகின்றனர். இவர்கள் முயற்சி செய்தார்கள், ஆகவே பூஜிக்கப்படு கின்றனர். மாலை என்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. அப்படியே புரிந்து கொள்ளாமல் மாலையை உருட்டியபடி இருக்கிறனர். 16108 மணிகளின் மாலையும் இருக்கிறது. பெரிய பெரிய கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும், பிறகு சிலர் எங்கிருந்தோ, இன்னும் சிலர் வேறெங்கிருந்தோ உருட்டத் தொடங்குவார்கள். பாபா பம்பாயில் லட்சுமி-நாராயணரின் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார், சென்று மாலையை உருட்டிக் கொண்டிருந்தார், ராமா ராமா என ஜபித்துக் கொண்டிருப்பார், ஏனென்றால் மலர் என்பவர் ஒரு தந்தைதான் அல்லவா. மலரைத்தான் ராமா ராமா என சொல்கின்றனர். பிறகு முழு மாலையின் மீது தலை வணங்குகின்றனர். கொஞ்சமும் ஞான மில்லை. கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட கையில் மாலையை உருட்டியபடி இருக்கின்றனர். யாருடைய மாலையை உருட்டுகிறீர்கள்? என கேளுங்கள், அவர்களுக்குத் தெரியாது. கிறிஸ்துவின் நினைவில் உருட்டுகிறோம் என சொல்வார்கள். கிறிஸ்துவின் ஆத்மா எங்குள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. கிறிஸ்துவின் ஆத்மா இப்போது தமோபிரதானமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் கூட தமோபிரதானமாக பிச்சைக்காரர்களாக இருந்தீர்கள். இப்போது பிச்சைக்காரரிலிருந்து இளவரசனாக ஆகிறீர்கள். பாரதம் இளவரசனாக இருந்தது. இப்போது பிச்சைக்காரனாக உள்ளது, மீண்டும் இளவரசனாக ஆகிறது. ஆக்குபவர் தந்தை ஆவார். நீங்கள் மனிதரிலிருந்து இளவரசனாக ஆகிறீர்கள். பிரின்ஸ் (இளவரசர்) கல்லூரி என ஒன்றும் இருந்தது. அங்கே இளவரசர்களும் இளவரசிகளும் சென்று படித்துக் கொண்டிருந்தனர்.

நீங்கள் இங்கே படித்து 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தில் இளவரசன் - இளவரசியாக ஆகிறீர்கள். இந்த ஸ்ரீகிருஷ்ணர் இளவரசர் அல்லவா. அவருடைய 84 பிறவிகளின் கதை எழுதப் பட்டுள்ளது. மனிதர் களுக்கு என்ன தெரியும்! இந்த விசயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரியும். பகவானுடைய மகா வாக்கியம் - அவர் அனைவரின் தந்தையாவார். நீங்கள் இறைதந்தையிடமிருந்து கேட்கிறீர்கள், அவர் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். அது உண்மையான கண்டம் என சொல்லப்படுகிறது. இது பொய்யான கண்டம். உண்மையான கண்டத்தை தந்தை ஸ்தாபனை செய்வார். பொய்யான கண்டத்தை இராவணன் ஸ்தாபனை செய்கிறான். இராவணனின் ரூபத்தை உருவாக்குகின்றனர், அதன் அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. கடைசியில் இராவணன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. அவனை சாகடிக்கின்றனர், பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து விடுகிறான். உண்மையில் பெண்களின் 5 விகாரங்கள், ஆண்களின் 5 விகாரங்கள் - இதற்கு இராவணன் என சொல்லப்படுகிறது. அவனை கொல்கின்றனர். இராவணனை கொன்று பிறகு தங்கத்தைத் கொள்ளை கொள்கின்றனர்.

இது முட்கள் நிறைந்த காடு என நீங்கள் அறிவீர்கள். பம்பாயில் பபூல்நாத்தின் கோவிலும் உள்ளது. தந்தை வந்து முட்களை மலர்களாக்குகிறார். அனைவரும் ஒருவரை ஒருவர் முள்ளாகி துன்புறுத்து கின்றனர் அதாவது காமக் கோடரியை வீசுகின்றனர், ஆகையால் இது முட்கள் நிறைந்த காடு எனப்படுகிறது. சத்யுகம் அல்லாவின் தோட்டம் எனப்படுகிறது, அதே மலர்கள் முட்களாகின்றன, பிறகு முள்ளிலிருந்து மலராகின்றனர். இப்போது நீங்கள் 5 விகாரங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். இந்த இராவண இராஜ்யம் வினாசம் ஆகத்தான் வேண்டும். இறுதியில் பெரிய யுத்தம் கூட நடக்கும். உண்மையிலும் உண்மையான தசராவும் ஆக வேண்டியுள்ளது. இராவண இராஜ்யமே முடிந்து விடும் பிறகு நீங்கள் இலங்கையை கொள்ளை கொள்வீர்கள். உங்களுக்கு தங்கத்தாலான மாளிகைகள் கிடைத்து விடும். இப்போது நீங்கள் இராவணன் மீது வெற்றி அடைந்து சொர்க்கத்தின் எஜமான் ஆகிறீர்கள். பாபா முழு உலகின் இராஜ்ய பாக்கியத்தைக் கொடுக்கிறார், ஆகையால் இவர் கள்ளங்கபடமற்ற கருவூலம் (பொக்கிஷம்) சிவன் (சிவ போலா பண்டாரி) எனப்படுகிறார். விலை மாதர்கள், அகலிகைகள், கூனி போன்றவர்கள் என அனைவரையும் தந்தை உலகின் எஜமானன் ஆக்கி விடுகிறார். எவ்வளவு கள்ளம் கபடமற்றவர். வருவதும் கூட தூய்மையற்ற உலகில், தூய்மையற்ற சரீரத்தில் தான். மற்றபடி யார் சொர்க்கத்திற்குத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லையோ அவர்கள் விஷத்தைக் குடிப்பதை நிறுத்துவதில்லை. குழந்தைகளே, இந்த கடைசி பிறவியில் தூய்மை யடையுங்கள் என தந்தை சொல்கிறார். இந்த விகாரங்கள் உங்களை முதல், இடை, கடைசியும் துக்கம் மிக்கவர்களாக ஆக்கி விடும். நீங்கள் இந்த ஒரு பிறவி விஷம் குடிப்பதை நிறுத்த முடியாதா என்ன? நான் உங்களுக்கு அமிர்தம் கொடுத்து அமரர்களாக ஆக்குகிறேன், நீங்கள் தூய்மையடைவதில்லை. விஷமின்றி, சிகரெட், மது இல்லாமல் இருக்க முடியாதா? எல்லைக்கப்பாற்பட்ட தந்தையாகிய நான் சொல்கிறேன் - குழந்தைகளே இந்த ஒரு பிறவி தூய்மையடைந்தீர்கள் என்றால் உங்களை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவேன். பழைய உலகின் வினாசம், புதிய உலகின் ஸ்தாபனை செய்வது என்பது தந்தையின் காரியம்தான் ஆகும். முழு உலகையும் துக்கத்திலிருந்து விடுவித்து சுக தாமம்-சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்து விட்டார். இப்போது அனைத்து தர்மங்களும் வினாசமாகி விடும். ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மீண்டும் ஸ்தாபனை ஆகிறது. கிரந்தங்களிலும் கூட பரமபிதா பரமாத்மாவை அகால மூர்த்தி என்று சொல்கின்றனர். தந்தை மகா காலன், காலனுக்கெல்லாம் காலன். அந்தக் காலனோ ஒருவர் இருவரைத்தான் அழைத்துச் செல்வார். நானோ அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வேன், ஆகையால் மகா காலன் என சொல்கின்றனர். தந்தை வந்து குழந்தைகளை எவ்வளவு புத்திவானாக ஆக்குகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த கடைசி பிறவியில் விஷத்தைத் தியாகம் செய்து அமிர்தத்தைக் குடிக்க வேண்டும், பிறரையும் குடிக்க வைக்க வேண்டும். தூய்மையாக வேண்டும். முட்களை மலர்களாக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

2. விஷ்ணுவின் கழுத்து மாலையின் மணியாவதற்காக தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். முழுமையிலும் முழுமையான உதவியாளராகி தந்தைக்குச் சமமாக துக்கத்தை நீக்குபவர் ஆக வேண்டும்.

வரதானம்:

நாடகம் என்ற கவசத்தை முன்னால் வைத்து குஷியின் டானிக்கை (ஊட்டசத்து) உண்ணக் கூடிய சதா சக்திசாலியானவர் ஆகுக.

குஷி என்ற உணவு தான் ஆத்மாவை சக்திசாலியாக மாற்றிவிடுகிறது. குஷியை போன்று டானிக் எதுமில்லை என்றும் கூட சொல்கிறார்கள். இதற்காக நாடகத்தின் கவசத்தை நல்ல முறையில் காரியத்தில் பயன்படுத்துங்கள். ஒருவேளை சதா நாடகத்தின் நினைவு இருந்தால் ஒருபொழுதும் சோர்ந்து விட மாட்டோம். குஷி காணாமல் போகாது. ஏனெனில் இந்த நாடகம் நன்மை செய்யக் கூடியதாக இருக்கிறது, ஆகையால் நன்மையற்ற காட்சியில் கூட நன்மை உள்ளடங்கியிருக்கிறது. அவ்வாறு புரிந்துக் கொண்டு சதா குஷியில் இருங்கள்.

சுலோகன்:

மற்றவர்களை பற்றி சிந்திப்பது மற்றும் மற்றவர்களை பார்ப்பது என்ற தூசியிலிருந்து விலகியிருக்கக் கூடியவர் தான் உண்மையான விலை மதிப்பிட முடியாத வைரம்.