04.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! முழு உலகத்தில் உங்களைப் போல கோடானு கோடி பாக்கியசாலி மாணவர்கள் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சுயம் ஞானக் கடலான தந்தை ஆசிரியராக ஆகி படிப்பிக்கிறார்.

 

கேள்வி:

எந்த ஒரு ஆர்வம் எப்பொழுதும் அமைந்து இருந்தால் மோகத்தின் கயிறுகள் அறுபட்டு விடும்?

 

பதில்:

சேவை செய்யும் ஆர்வம் அமைந்திருந்தால் மோகத்தின் கயிறுகள் அறுபட்டு விடும். இந்த கண்களால் என்னவெல்லாம் பார்க்கிறீர்களோ அவை அனைத்தும் அழியக் கூடியது ஆகும் என்பது சதா புத்தியில் இருக்கட்டும். இதை பார்த்தும் பார்க்கக் கூடாது. தீயதைக் கேட்காதீர்கள். தீயதைப் பார்க்காதீர்கள்... என்பது தந்தையின் ஸ்ரீமத் ஆகும்.

 

ஓம் சாந்தி.

சிவபகவான் இனிமையான சாலிகிராமங்களுக்கு அல்லது ஆன்மீகக் குழந்தைகளுக்காகக் கூறுகிறார். நாம் சத்யுக ஆதி சனாதன பவித்திர தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம் என்பதையோ குழந்தைகள் புரிந்துள்ளார்கள். எனவே இதை நினைவில் கொள்ள வேண்டும். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தையோ நிறைய பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தேவதா தர்மத்திற்குப் பதிலாக இந்து என்ற பெயர் வைத்து விட்டுள்ளார்கள். நாம் ஆதி சனாதனராக யாராக இருந்தோம்? என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு புனர் ஜென்மம் எடுத்து எடுத்து இது போல ஆகியுள்ளோம். இதை பகவான் அமர்ந்து புரிய வைக்கிறார். பகவான் ஒன்றும் தேகதாரி மனிதர் அல்ல. மற்ற அனைவருக்கும் அவரவருக்கென்று தேகம் உள்ளது. சிவபாபாவிற்கு விதேகி (தேகமற்றவர்) என்று கூறப்படுகிறது. அவருக்கு தனக்கென்று தேகம் இல்லை. மற்ற அனைவருக்கும் தனக்கென்று தேகம் உள்ளது. எனவே தன்னைக் கூட இது போல "விதேகி" (தேகமற்றவர்) என்று உணர்ந்திருப்பது எவ்வளவு இனிமையானதாகப்படுகிறது! நாம் என்னவாக இருந்தோம்! இப்பொழுது என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறோம்! இந்த நாடகம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது - இதுவும் நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இந்த தேவி தேவதா தர்மம் தான் தூய்மையான இல்லற ஆசிரமமாக இருந்தது. இப்பொழுது ஆசிரமம் இல்லை. இப்பொழுது நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்து என்ற பெயரோ இப்பொழுது வைத்துள்ளார்கள். ஆதி சனாதன இந்து தர்மமோ இல்லை. பாபா நிறைய முறை கூறியுள்ளார் - ஆதி சனாதன தர்மத்தினருக்குப் புரிய வையுங்கள். ஆதி சனாதன தேவி தேவதை தூய்மையான தர்மத்தினர் ஆவீர்களா? இல்லை இந்து தர்மத்தினர் ஆவீர்களா? என்பதை இதில் எழுதுங்கள் என்று அவர்களுக்குக் கூறுங்கள். பின் அவர்களுக்கு 84 பிறவிகள் பற்றி தெரிய வரும். இந்த ஞானமோ மிகவும் சுலபமானது. இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறியதால் மட்டுமே மனிதர்கள் குழம்பி விடுகிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. சதோ பிரதான நிலையிலிருந்து தமோ பிரதானமாக ஆவதற்கான பார்ட் கூட நாடகத்தில் உள்ளது. தேவதா தர்மத்தினர் தான் 84 பிறவிகள் எடுத்து எடுத்து எவ்வளவு சீ - சீ ஆகி விட்டுள்ளார்கள். முதலில் பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது! பாரதத்தினுடைய மகிமையைத்தான் செய்ய வேண்டும். இப்பொழுது மீண்டும் தமோ பிரதான நிலையிலிருந்து சதோ பிரதானமாக பழைய உலகத்திலிருந்து புதிய உலகமாக அவசியம் ஆக வேண்டி உள்ளது. இனி முன்னால் போகப்போக உங்களுடைய விஷயங்களை அவசியம் புரிந்து கொள்வார்கள். கோரமான இருளிலிருந்து விழித்தெழுங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று கூறுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நாள் முழுவதும் குஷி இருக்க வேண்டும். முழு உலகத்தில் முழு பாரதத்தில் உங்களைப் போன்ற கோடானு கோடி பாக்கியசாலி மாணவர்கள் வேறு யாரும் இல்லை. நாம் என்னவாக இருந்தோமோ அவ்வாறே ஆகப் போகிறோம் என்பதைப் புரிந்துள்ளீர்கள். "வடிக்கப்பட்ட" தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களே மீண்டும் வெளிப்படுவார்கள். இதில் நீங்கள் குழம்பாதீர்கள். கண்காட்சியில் சிறிதளவு கேட்டு விட்டு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பிரஜைகளாக ஆகிக் கொண்டே செல்கிறார்கள். ஏனெனில் அழியாத ஞானச் செல்வம் ஒரு பொழுதும் அழிந்து போவதில்லை. நாளுக்கு நாள் உங்களுடைய ஸ்தாபனம் வலுவடைந்து கொண்டே போகும். பிறகு ஏராளமானோர் உங்களிடம் வருவார்கள். மெது மெதுவாக தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. வெளி நாட்டிலிருந்து யாராவது ஒரு பெரிய பிரமுகர் வருகிறார் என்றால் அவரது முகத்தைப் பார்ப்பதற்கு எவ்வளவு ஏராளமான மனிதர்கள் செல்கிறார்கள்! இங்கோ அந்த விஷயம் கிடையாது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுமே அழியக் கூடியவை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவற்றைப் பார்க்க வேண்டாம். ("ஸீ நோ ஈவில்") - தீயதைப் பார்க்காதீர்கள். இந்த குப்பையோ சாம்பலாக போகிறது. மனிதர்கள் ஆகிய யாரையெல்லாம் பார்க்கிறோமோ அவர்கள் எல்லோருமே கலியுகத்தினர் என்று புரிந்துள்ளோம். நீங்கள் சங்கம யுக பிராமணர்கள் ஆவீர்கள். சங்கம யுகம் பற்றி யாருக்குமே தெரியாது. இது சங்கம யுகம் ஆகும். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் நினைவு செய்யுங்கள். தூய்மையாகவும் அவசியம் ஆக வேண்டும். இந்த காம விகாரம் முதல்-இடை-கடை துக்கம் அளிக்கக் கூடியது. இதை வெல்லுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். விஷத்திற்காகப் பாருங்கள் எவ்வளவு தொல்லைப் படுத்துகிறார்கள். காமம் மகா எதிரி ஆகும். அதை வெல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது இந்த நேரத்தில் உலகத்தில் எத்தனை ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்! நீங்கள் ஒவ்வொருவருக்காக எது வரை புரிய வைப்பீர்கள். ஒருவருக்குப் புரிய வைக்கிறீர்கள் என்றால் மற்றொருவர் இது மந்திர ஜாலம் என்கிறார். பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள். எனவே ஆதி சனாதன தர்மத்தினருக்குப் புரிய வையுங்கள் என்று தந்தை கூறுகிறார். "ஆதி சனாதன" என்பதே தேவதா தர்மம் ஆகும். இந்த இலட்சுமி நாராயணர் இந்த பதவியை எப்படி அடைந்தார்கள் என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதையாக எவ்வாறு ஆனார்கள். அவசியம் கடைசிப் பிறவியாக இருக்கக் கூடும். 84 பிறவிகள் முடித்து விட்டு பிறகு இவ்வாறு ஆனார்கள்? யாருக்கு சேவையில் ஆர்வம் உள்ளதோ அவர்களோ இதில் ஈடுபட்டு இருப்பார்கள். மற்ற அனைத்து பக்கங்களிலிருந்தும் மோகம் ஆகியவை அறுபட்டு விடுகிறது. நாம் இந்த கண்களால் எதையெல்லாம் பார்க்கிறோமோ அவற்றை மறக்க வேண்டும், பார்ப்பதே இல்லை என்பது போல. "ஸீ நோ ஈவில்".. தீயதைப் பார்க்காதீர்கள். மனிதர்களோ குரங்குகளின் படத்தை அமைத்து விடுகிறார்கள். ஒன்றுமே புரியாமல் உள்ளார்கள். பெண் குழந்தைகள் (சகோதரிகள்) எவ்வளவு உழைக்கின்றார்கள். பாபா அவர்களுக்குப் பாராட்டுக்கள் அளிக்கிறார். அவர்கள் நன்றாகப் புரிய வைத்து தகுதி உடையவர்களாக ஆக்குகிறார்கள். பாபா நமக்கு எவ்வளவு பரிசு கொடுப்பார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதல் நம்பரில் சூரிய வம்சத்தின் இராஜதானியின் பரிசு ஆகும். இரண்டாம் நம்பரில் சந்திர வம்சத்தின் பரிசு ஆகும். வரிசைக் கிரமமாகவோ இருக்கவே இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் கூட எவ்வளவு அமர்ந்து அமைக்கிறார்கள். இந்த சாஸ்திரங்கள் படிப்பதால், யக்ஞம், தவம் செய்வதால் என்னை யாரும் அடைய முடியாது என்பதை இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். நாளுக்கு நாள் எவ்வளவு பாவ ஆத்மா ஆகிக் கொண்டே போகிறார்கள்! புண்ணிய ஆத்மாவாக யாரும் ஆக முடியாது. தந்தை தான் வந்து புண்ணிய ஆத்மாவாக ஆக்குகிறார். ஒன்று எல்லைக்குட்பட்ட தான புண்ணியம், மற்றொன்று எல்லையில்லாதது. பக்தி மார்க்கத்தில் மறைமுகமாக இறைவன் பெயரில் தான புண்ணியம் செய்கிறார்கள். ஆனால் இறைவன் என்று யாருக்குக் கூறப்படுகிறது என்பது தெரியவே தெரியாது. இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா தான் எப்படி இருந்த நம்மை எப்படியாக ஆக்குகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பகவானோ ஒரே ஒருவர் ஆவார். அவரை பின் சர்வவியாபி என்று கூறி விட்டுள்ளார்கள். எனவே இது நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உங்களிடம் வருகிறார்கள் தான். சிறிதளவு கேட்டு விட்டு வெளியில் சென்றார்கள் என்றால் அவ்வளவு தான் முடிந்து போய் விட்டது. இங்கு கேட்டது இங்கேயே இருந்து விட்டது. எல்லாமே மறந்து விடுகிறது. ஞானம் மிகவும் நன்றாக உள்ளது. நாங்கள் மீண்டும் வருகிறோம் என்று உங்களிடம் கூறுவார்கள். ஆனால் மோகத்தின் கயிறுகள் அறுபட்டுப் போவதில்லை. மோகத்தை வென்ற இராஜாவின் கதை எவ்வளவு நன்றாக உள்ளது. இந்த லட்சுமி நாராயணர் மோகத்தை வென்ற முதல் தரமான (ஃபர்ஸ்ட் கிளாஸ்) ராஜா ஆவார். ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை. அதிசயமாக உள்ளது. இராவண ராஜ்யத்தில் படி இறங்கியபடியே ஒரேயடியாக கீழே விழுந்து விடுகிறார்கள். குழந்தைகளின் விளையாட்டு இருக்கிறது அல்லவா? மேலே சென்று பின் கீழே விழுவார்கள். உங்களுடைய விளையாட்டு கூட மிகவும் சுலபமானது. நல்ல முறையில் தாரணை செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். எந்த ஒரு சீ - சீ காரியமும் செய்யாதீர்கள்.

 

நான் விதை ரூபமானவன், சத்தியமானவன், சைதன்யமானவன் மற்றும் ஆனந்த சொரூபம் (சத்-சித் ஆனந்த சொரூபம்) ஆனவன் ஆவேன், ஞானத்தின் கடல் ஆவேன். இப்பொழுது ஞானக்கடல் மேலேயே அமர்ந்திருப்பாரா என்ன? அவசியம் எப்பொழுதாவது வந்து ஞானம் கொடுத்திருக்கக் கூடும். ஞானம் என்றால் என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது. நான் உங்களுக்கு படிப்பிக்க வருகிறேன் என்றால் முறைப்படி படிக்க வேண்டும் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஒரு நாள் கூட படிப்பைத் தவற விடக் கூடாது. ஏதாவதொரு நல்ல (பாயிண்ட்) குறிப்பு அவசியம் கிடைக்கும். முரளி படிக்கவில்லை என்றால் அவசியம் பாயிண்ட்ஸ் மிஸ் ஆகி விடும் (தவற விட்டு விடுவீர்கள்) ஏராளமான குறிப்புக்கள் (பாயிண்ட்ஸ்) உள்ளன. பாரதவாசிகளாகிய நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது எவ்வளவு ஏராளமான தர்மங்கள் உள்ளன. மீண்டும் நிச்சயம் சரித்திரம் அப்படியே நடைபெற வேண்டி உள்ளது (ஹிஸ்ட்ரி மஸ்ட் ரிபீட்). இது ஏறி இறங்கும் படி ஆகும். எப்படி ஜின் என்ற பூதத்திற்கு கட்டளை கொடுக்கப்பட்டது. படி இறங்கு மற்றும் ஏறு என்று. நீங்கள் எல்லோரும் ஜின் (பூதம்) அல்லவா? 84-ன் படி ஏறுகிறீர்கள் மற்றும் இறங்குகிறீர்கள். எவ்வளவு ஏராளமான மனிதர்கள் உள்ளார்கள்! ஒவ்வொருவரும் எவ்வளவு பாகத்தை நடிக்க வேண்டி உள்ளது! குழந்தைகளுக்கு மிகவுமே ஆச்சரியம் ஏற்பட வேண்டும். உங்களுக்கு எல்லையில்லாத நாடகத்தின் முழு அறிமுகம் கிடைத்துள்ளது. முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி இப்பொழுது நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். எந்த ஒரு மனிதனும் அறிந்து கொள்ள முடியாது. சத்யுகத்தில் யாருடைய வாயிலிருந்தும் தீய வார்த்தைகள் வெளிப்படுவதில்லை. இங்கோ ஒருவரையொருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இது விகாரங்களின் கடல் பயங்கரமான நரகம். எல்லா மனிதர்களும் பயங்கரமான நரகத்தில் உள்ளார்கள். இங்கோ இராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். உங்களுக்கு கடைசியில் தான் வெற்றி ஆகும். அந்த நேரத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார் என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள். இது தான் முதல் நம்பர் முக்கியமான விஷயம் ஆகும். இது யாருக்குமே தெரியாது. நானோ இருப்பதே ஏழைப் பங்காளனாக என்று தந்தை கூறுகிறார். இதை பின்னால் தெரிந்து கொண்டு விடுவீர்கள். அப்பொழுது "டூலேட்" (மிகவும் தாமதமாக) ஆகி விடும். இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இனிமையான வீடு மற்றும் இனிமையான இராஜ்யம் புத்தியில் உள்ளது. இப்பொழுது சாந்தி தாமம் சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் என்ன பாகத்தை நடித்தீர்களோ அது புத்தியிலோ வருகிறது அல்லவா? பிராமணர்களாகிய உங்களைத் தவிர மற்ற எல்லோரும் இறந்து விட்டது போலவே தான். பிராமணர்கள் தான் நின்று (சுதாரித்து) கொண்டு விடுவார்கள். பிராமணர்கள் தான் தேவதையாக ஆகிறார்கள். இது ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்ற தர்மங்கள் எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பது கூட புத்தியில் உள்ளது. புரிய வைப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்பேர்ப்பட்ட தந்தையை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். தொழில் ஆகியவை தாராளமாக செய்யுங்கள். தூய்மையாக மட்டும் இருங்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் தூய்மை யாக இருந்தது. இப்பொழுது மீண்டும் தூய்மையாக ஆக வேண்டும். நடந்தாலும் சென்றாலும் தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சதோ பிரதானமாக ஆகி விடுவீர்கள். சதோ பிரதானமாக ஆகி விடும் பொழுது தான் பலம் வரும். நினைவு யாத்திரை இல்லை என்றால் நீங்கள் ஒரு பொழுதும் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைய முடியாது. சதோ பிரதான நிலை வரை வந்து விடும் பொழுது தான் பாவங்கள் அழியும். இது யோக அக்னி ஆகும். இந்த வார்த்தைகள் கீதையினுடையது ஆகும். யோகம் யோகம் என்ற கூறி தலையிலடித்துக் கொள்கிறார்கள். வெளி நாட்டிலிருந்து கூட யோகம் கற்பிப் பதற்காக வசப்படுத்தி கூட்டி வருகிறார்கள். இப்பொழுது உங்களுடைய விஷயத்தை யாராவது புரிந்து கொண்டால் தானே! பரமாத்மா "ஸுப்ரீம் ஸோல்" ஒரே ஒருவர் ஆவார். அவரே வந்து அனைவரையும் சுப்ரீம் உயர்ந்தவராக ஆக்குகிறார். ஒரு நாள் பத்திரிகையாளர்கள் கூட இது போன்ற விஷயங்களை பிரசுரிப்பார்கள். இவையோ சரியானவை ஆகும். ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவைத் தவிர இராஜயோகத்தை வேறு யாரும் கற்பிக்க முடியாது. இது போன்ற விஷயங்களை கொட்டை எழுத்துக்களில் அச்சடிக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சூரிய வம்ச இராஜதானியின் பரிசைப் பெற வேண்டும் என்றால், பாப்தாதாவின் பாராட்டுக்களைப் பெற வேண்டும். சேவை செய்து காண்பிக்க வேண்டும். மோகத்தின் கயிறுகளைத் துண்டித்து விட வேண்டும்.

 

2. ஞானக் கடலான விதேகி (தேகமற்ற) தந்தை சுயம் படிப்பிக்க வருகிறார். எனவே தினமும் படிக்க வேண்டும். ஒரு நாள் கூட படிப்பைத் தவற விடக் கூடாது. தந்தைக்குச் சமானமாக விதேகி (தேக உணர்விலிருந்து விடுபட்டு இருப்பவர்) ஆவதற்கான முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும்.

 

வரதானம்:

சிரேஷ்ட உள்ளுணர்வின் விரதத்தை தாரணை செய்து உண்மையான சிவராத்திரி கொண்டாடக்கூடிய உலகத்தை மாற்றம் செய்பவர் ஆகுக.

 

பக்தர்கள் ஸ்தூல பொருட்களின் விரதம் வைக்கிறார்கள்.. ஆனால் நீங்களோ தனது பலஹீனமான உள்ளுணர்வுகளை சதா காலத்திற்கு அழிக்கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் எந்தவிதமான நல்லது மற்றும் தீய விஷயம் முதலில் உள்ளுணர்வில் தான் வருகிறது பிறகு தான் வார்த்தை மற்றும் காரியத்தில் வருகிறது. உங்களுடைய நல்ல உள்ளுணர்வு மூலம் சிரேஷ்ட வார்த்தை மற்றும் காரியம் செய்கிறார்களோ அவர்கள் மூலம் தான் உலக மாற்றத்திற்கான மகான் காரியம் நிறைவேறுகிறது. இந்த சிரேஷ்ட உள்ளுணர்வின் விரதத்தை தாரணை செய்வது தான் சிவராத்திரி கொண்டாடுவதாகும்.

 

சுலோகன்:

யாருடைய மனதில் சதா குஷி என்ற சூரியன் உதயமாகிறதோ அவர்கள் தான் பாக்கியசாலிகள்

 

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்

 

1. கண் இல்லாதவர்களுக்கு அதாவது ஞானக் கண் இல்லாதவர்களுக்கு வழி சொல்லக்கூடியவர் பரமாத்மா கண் இல்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபு இப்பொழுது கண் இல்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் என்று எந்த மனிதர்களோ இந்தப் பாடலை பாடுகிறார்கள் என்றால், வழி காட்டக்கூடியவர் ஒரே ஒரு பரமாத்மா ஆகிவிட்டார் அல்லவா! அப்பொழுது தான் பரமாத்வை அழைக்கின்றனர். மேலும் பிரபுவே வழி காட்டுங்கள் என்று எந்த சமயம் கூறுகிறார்களோ, அப்பொழுது அவசியம் மனிதர்களுக்கு வழி காட்டுவதற்காக பரமாத்மா தானாகவே நிராக்கார ரூபத்திலிருந்து சாகார ரூபத்தில் அவசியம் வரவேண்டிருக்கும், அப்பொழுது தான் ஸ்தூலத்தில் வழி சொல்வார். வராமல் வழி சொல்ல முடியாது. இப்பொழுது மனிதர்கள் யாரெல்லாம் குழம்பி இருக்கிறார்களோ, குழம்பி இருக்கக்கூடிய அவர்களுக்கு வழித் தெரிய வேண்டும். எனவே பரமாத்மாவை அழைக்கின்றனர் - கண் இல்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபுவே. அவருக்குத் தான் படகோட்டி என்றும் சொல்லப்படுகிறது, அவர் அக்கரைக்கு அதாவது இந்த ஐந்து தத்துவங்களால் உருவாக்கப்பட்ட இந்த உலகத்திலிருந்து கடந்து அக்கரைக்கு அதாவது ஐந்து தத்துவங்களைக் கடந்து ஆறாவது தத்துவமான அகண்ட ஜோதி மகத்தத்துவத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே பரமாத்மாவும் எப்பொழுது அக்கரையிலிருந்து இக்கரைக்கு வரும் பொழுது தான் அழைத்துச் செல்வார். எனவே பரமாத்மாவும் கூட தனது இடத்திலிருந்து வரவேண்டியுள்ளது, அப்பொழுது தான் பரமாத்மாவை படகோட்டி என்கின்றனர். அவரே படகாகிய நம்மை (ஆத்மா என்ற படகை) அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். இப்பொழுது யாரெல்லாம் பரமாத்மாவிடம் தொடர்பு வைக்கின்றனரோ, அவர்களைத் தான் கூடவே அழைத்துச் செல்வார். மற்றப்படி யாரெல்லாம் மீதம் இருப்பார்களோ, அவர்கள் தர்மராஜாரிடம் தண்டனை அடைந்து பிறகு முக்திக்குச் செல்கின்றனர்.

 

2. முட்கள் அதாவது துன்பமான உலகத்திலிருந்து மலர்களின் தோட்டத்திற்கு அதாவது சுகமான உலகத்திற்கு அழைத்துச் செல்பவர் பரமாத்மா ஆவார் முட்களின் உலகத்திலிருந்து மலர்களின் தோட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள். இப்பொழுது பரமாத்மாவை நோக்கித் தான் இந்த அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். எபொழுது மனிதர்கள் அதிக துன்பம் அடைகின்றனரோ, அப்பொழுது பரமாத்மாவை நினைவு செய்கின்றனர் - பரமாத்மாவே! இந்த முட்களின் உலகத்திலிருந்து மலர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பது இதிலிருந்து நிரூபணம் ஆகிறது. இப்போதைய உலகம் முட்களால் நிரம்பியுள்ளது என்று இப்பொழுது அனைத்து மனிதர்களுக்கும் தெரியும், இந்தக் காரணத்தினால் தான் மனிதர்கள் துன்பம் மற்றும் அசாந்தியை அடைந்து கொண்டிருக்கின்றனர். மேலும் மலர்களின் உலகத்தை நினைவு செய்கின்றனர். ஆகவே அவசியம் அப்படிப்பட்ட ஒரு உலகமும் இருக்கும், அந்த உலகின் சம்ஸ்காரம் ஆத்மாவிற்குள் நிரம்பியிருக்கின்றது. துன்பம் மற்றும் அசாந்தி போன்ற இவை அனைத்தும் கர்ம பந்தனத்தின் கணக்கு வழக்குகள் என்பதை நாம் இப்பொழுது தெரிந்திருக்கிறோம். அரசனிலிருந்து ஆண்டி வரை ஒவ்வொரு மனிதனும் இந்த கணக்கில் முழுமையாக சிக்கியிருக்கின்றனர், எனவே பரமாத்மா, தானே கூறுகிறார் - இப்போதைய உலகம் கயுகமாகும். எனவே இவை அனைத்தும் கர்ம பந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் முந்தைய உலகம் சத்யுகமாக இருந்தது. அதை மலர்களின் உலகம் என்று கூறுகிறோம். இப்பொழுது அது கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்ட ஜீவன் முக்தியான தேவி தேவதைகளின் இராஜ்யம் ஆகும், அது இப்பொழுது இல்லை. இப்பொழுது நாம் எதை ஜீவன்முக்தி என்று கூறுகிறோமோ, அதற்குப் பொருள் நாம் தேகத்திலிருந்து விடுப்பட்டிருந்தோம் என்பதல்ல. அவர்களுக்கு தேகத்தின் எந்த உணர்வும் இருந்ததில்லை, அதாவது தேகத்தில் இருந்தாலும் துன்பம் அடையாமல் இருந்தனர், அங்கு எவ்வித கர்மபந்தனத்தின் விவகாரம் இருக்கவில்லை. அவர்கள் சரீரத்தை எடுத்தாலும், சரீரத்தை விட்டாலும் வாழ்க்கையின் முதல், இடை, கடைசி வரை சுகத்தை அனுபவம் செய்தனர். ஆகவே ஜீவன் முக்தி என்பதன் பொருள் வாழ்ந்து கொண்டே கர்மத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட நிலை. இப்பொழுது முழு உலகமும் ஐந்து விகாரங்களால் முழுமையாக இறுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்! ஐந்து விகாரங்களின் முழுமையான உறைவிடமாக இவ்வுலகம் உள்ளது. ஆனால் மனிதர்களிடத்தில் இந்த ஐந்து பூதங்களை வெற்றி கொள்ளும் அளவிற்கு சக்தியில்லை. அப்பொழுது தான் பரமாத்மா தானாகவே வந்து ஐந்து பூதங்களிலிருந்து விடுவிக்கிறார். மேலும் எதிர்காலப் பலனான தேவி தேவதை பதவியையும் பிராப்தி செய்விக்கிறார்.

 

ஓம்சாந்தி